World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Scientific triumph on Mars as Spirit lands and explores surface

Spirit ஆய்வு கலம் செவ்வாயில் இறங்கி மேற்பகுதியை ஆராயத் தொடங்கியதில் அறிவியலுக்கு வெற்றி

By Walter Gilberti
19 January 2004

Back to screen version

ஜனவரி 15, வியாழக் கிழமையன்று, செவ்வாய் தரைப்பகுதியில், செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட Spirit என்னும் சிறு விண்கலம் மிதந்து நின்றது; நாசா விஞ்ஞானிகள் இந்த ஆறு சக்கரமுடைய வாகனத்தை இறங்கு கலத்திலிருந்து வெற்றிகரமாகப் பிரித்து, அதனுடைய முன்னேற்றத்தைத் தடை செய்து கொண்டிருந்த காற்றிறக்கப்பட்ட காற்றுப்பைகளை அகற்றியபின் இது நிகழ்ந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மிக நம்பிக்கையளிக்கும் முறையில் தொடங்கிய இப்பணி இப்பொழுது, செவ்வாயின் பரந்த நிலப்பரப்பை ஆராயும் முயற்சியைத் தொடரலாம்.

ஜனவரி 6, செவ்வாயன்று, கலிபோர்னியாவிலுள்ள பசடேனாவில் அமைந்துள்ளJet Propulsion Laboratory என்னும் நிறுவனம், இந்த வாகனத்திலுள்ள பரந்த குவிதலையுடைய புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட, செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பின் முதல் வண்ணப் புகைப் படத்தை வெளியிட்டது. இந்தப் புகைப்படம் வியத்தகுமுறையில் தெளிவுடையதாக இருப்பதுடன், துருவண்ண, கற்கள் செதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதியை வெளிர்சிகப்பு வானத்தின் கீழ் காட்டுகிறது. தொலைவில், காணப்படும் வடிவங்கள் தூரத்தில் இருக்கும் மலைகள் போல் காணப்படுகின்றன.

NASA விஞ்ஞானிகளின் கருத்தின்படி, 12 மில்லியன் திரை ஒளிப்புள்ளிகளுடைய(pixels) இந்தப் புகைப்படம் வேறு கிரகம் ஒன்றின் நிலப்பரப்பைத் தெளிவாகக் காட்டியருப்பதுபோல் இதுகாறும் அமைந்ததில்லை என்று கூறியுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்துசேர்ந்திருந்த முதல் படங்கள் கறுப்பு-வெளுப்பு புகைப்படங்களாக இருந்தன; பல பரிணாமங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப் பட்டிருந்த இப்படங்களை, முப்பரிமாணக் கண்ணாடி அணிந்து, 1950 களில் விஞ்ஞான-கட்டுக்கதைத் திரைப்படங்களைப் பார்த்ததுபோல், செவ்வாய் நிலப்பகுதியைப் பற்றிய தெளிவான பார்வை கிடைக்கும். பார்த்தால் பழைமையானதாக இருக்கும் இம்முறை, நிலப்பகுதியில் இருக்கும் தன்மைகளைப் பற்றிய விவரங்களை, சுற்றும் வாகனம் நன்கு ஆய்ந்து அனுப்பும் என்று NASA விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த மகத்தான சாதனையின் பெருஞ்சிறப்பை உண்மையிலேயே புலப்படுத்துவது வண்ணப் புகைப்படம்தான். செவ்வாய் நிலப்பரப்பு நன்கு அறிமுகமாகியுள்ள பகுதிபோல் தோற்றமளிக்கிறது. புகைப்படத்தைக் காணும்போது, இறங்கும் வாகனத்திலிருந்து குதித்து ஓடி தொலைவிலுள்ள நிலப்பகுதிகளை ஆராயவேண்டும் என்ற எண்ணம் ஊற்றெடுக்கிறது. நம்முடைய பூமி போலவே, செவ்வாய் ஒரு தரைப்பகுதி உடைய கிரகமாகும்; "சிகப்புக் கிரகத்திற்கு(Red Planet)" அப்பாலுள்ள வியத்தகு வாயுப் பொருளின் மகத்தான தொகுப்பிலிருந்தும், அஸ்டிராய்ட் பெல்ட்டிலிருந்தும்(Asteroid Belt - செவ்வாய் மற்றும் யுப்பிட்ரர் கிரகங்களுக்கிடையில் உள்ள சூரியனை சுற்றி வரும் பொருட்களை கொண்ட பகுதி) இது விலகியே நிற்கிறது. காற்று இல்லாமல், கதிரவனுக்கு அருகேயிருப்பதால் வறுபடும் புதனைப் போல் இல்லாமல், பூமியின் சகோதரி போன்ற வெள்ளி எவ்வாறு பச்சை வாயுக்களால் சூழப்பட்டு, எரிமலைப் பாதிப்புடையதாகவும் இருக்கிறதோ, அவ்வாறு செவ்வாய் இல்லை. இதனுடைய சூழ்நிலைத்தன்மை மனிதர்கள் உதவியில்லாமல் வாழமுடியாது எனக்கூறும் அளவிற்கு மிகவும் மெல்லியதாக இருக்கிறது; மனிதன் வருங்காலத்தில் அங்கு சென்று குடியேறுவதற்கு முடியாதபடி மிகவும் குளிர்ந்த தன்மையையும் கொண்டது ஆகும்.

கடந்த சனிக்கிழமை இரவு செவ்வாயின் தரைப்பகுதியில் Spirit உடைய இறங்கு கருவிகள் மெதுவாகத் தரையிறங்கின எனக்கூறுவதற்குப் பதிலாக, ஆறு மாதப் பயணத்திற்குப் பின் குதித்துத் தவழ்ந்தது என்று கூறலாம். ஸ்பிரிட்டை, செவ்வாய் நிலப்பகுதிக்கு இட்டுச் சென்ற தொழில்நுட்பம், எளிமையிலும், நுட்பத்திலும் தேர்ந்திருந்தது. விண்வெளியில் பயணிக்கும்போது இறங்குகலம் மூடப்பட்டு இருந்தது; ஒரு பந்தயக்கார், பெரிய டிரெய்லர் வண்டிக்குள் வைத்து எடுத்தச் செல்லப்படுவது போல், இக்கலம் பாதுகாப்பான "விண்கலத்திற்குள்" எடுத்துச் செல்லப்பட்டதாக NASA விஞ்ஞானிகள் ஒப்புமை கூறியுள்ளனர். செவ்வாயைச் சுற்றும் பாதைக்குள் வந்தபிறகு, அது நிலத்தை நோக்கிச்செல்லுமாறு விடுவிக்கப்பட்டது; அதனுடைய வேகம் ஓரு பாரச்சூட்டினாலும், தரையைத் தொடுவதற்கு முன் இரு பின்னியங்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாலும், குறைக்கப்பட்டது. இதற்கிடையில் காற்றுப்பைகள் இறங்கு கலத்தைச்சூழ்ந்து அரவணைத்து மெத்தைத் திண்டுகள் போலச் செயல்பட்டு இறக்கத்தின் பாதிப்பைக் குறைக்கத் தயாராயிருந்தன.

இறக்கம் பற்றிய, கணினி ஆய்விலிருந்து பின்னர் கிடைத்த தகவல்படி, திடீரென்று காற்றுவீச்சு ஒன்று இறங்குகலத்தை பக்கவாட்டில் தாக்கி, பெரிய பள்ளப்பகுதியருகே தள்ளப்பார்த்தது; ஆனால் இதில் இருந்த கணினி இந்தக் காற்றின் அழுத்தத்தைக் கண்டுபிடித்ததுடன். திருப்பும் ஏவுகணைகளைச் செலுத்தி, செல்லும் திசையின் போக்கு மாறுவதைத் தடுத்துவிட்டது. இதனால், இறங்கு கலம், கிரகத்தின் நிலப்பகுதியை, காற்றிலும் தரையிலுமாக 28 முறை தொட்டுத் துள்ளிக்குதித்த பின்னர் கிட்டத்தட்ட முதலில் தொட்ட இடத்திலிருந்து 1000 அடி தள்ளிப் பயணித்து நின்றது. இறங்கு கலத்தின் கனத்தை சமனாகவைக்காத நிலையில், கீழ்ப்பகுதியை, மேற்பகுதியை விட கனமாக வைத்திருந்ததால், இதை வடிவமைத்தவர்கள் கீழ்ப்பகுதி கீழேயும், மேற்பகுதி மேலேயும் இருக்குமாறே இறங்கவைத்தததால், பின்னர் கடினமான முறையில் மாறாக இருந்தால் சரிசெய்யவேண்டிய வேலை தவிர்க்கப்பட்டது.

செவ்வாயின் தரைப்பகுதியில் நிலையான பின்னர், காற்றுப்பைகளிலிருந்து காற்று அகற்றப்பட்டு, இதழ்போன்ற வாயில்களும் திறந்து வெளியே செல்லும் வழி திறந்து, வாகனம் கலத்திலிருந்த நகர்ந்து தன் பணிகளில் ஈடுபடமுடியும். இந்தச்சுற்று வாகனத்தின் முக்கிய பணி, செவ்வாயின் தரைப்பகுதியைப் பகுத்தாய்ந்து முன்னர் அங்கு திரவ வடிவத்தில் நீர் இருந்ததா என்பதை ஆராயவேண்டும்; அதன் வரலாற்றில் கிரகம் உயிரை வளர்த்து, நிலைபெறுத்துவதற்காவது அங்கு தண்ணீர் இருந்ததா என்பதைக் கண்டறியவேண்டும்.

கிரகத்தைப் பற்றிய சமீபத்திய ஆய்வுகள், செவ்வாயின் துருவங்களில் மட்டும் காணப்படாமல் தண்ணீர் மத்தியரேகைகளை ஒட்டியும் இருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன. National Geographic உடைய தற்பொழுதைய இதழில் வந்துள்ள கட்டுரை, மைய அட்சரேகைகளுக்கு அருகில் நீரிருப்பது, செவ்வாயின் அச்சு கூடுதலாகச் சாய்ந்து, கிட்டத்தட்ட 20டிகிரி இருப்பதால் விளைந்த மாறுதல்களின் தன்மையை ஒட்டியது என்று குறிக்கிறது. கடந்த 5 மில்லியன் ஆண்டுகளில், கிரகங்களின் வரலாற்றில் இது குறைந்த காலகட்டம்தான, கிட்டத்தட்ட 50 தடவைகள் இதுபோன்ற செங்குத்து மாறுதல்கள் தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சூரியனைச்சுற்றி இது வரும் பாதையும், சற்றே விலகி இருக்கும் தன்மை கொண்டுள்ளதாலும், மற்ற கிரகங்களின் ஈர்ப்புத்தன்மையினாலும் செவ்வாய் இத்தகைய செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கக் கூடும். பூமியில் இத்தகைய நிகழ்வு ஒரே ஒரு டிக்ரி மாறுதல் ஏற்பட்டபோழுதே, பனிக்கட்டிகள் காலம் ஏற்பட்டதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

செவ்வாயின் மேற்பகுதியை நன்கு ஆராயும் பொழுது, செவ்வாயின் நில அமைப்புமுறையை இடைவிடாமல் மாற்றிக்கொண்டிருக்கும் இயற்கைச் சக்திகள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருகின்றன என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரியவரும். செவ்வாய் கிரகத்தைப்பற்றி ஆய்பவர்களிடையே தற்பொழுதைய விவாதம், தண்ணீர் திட வடிவிலோ, திரவவடிவிலோ செவ்வாயின் நிலப்பரப்பை உருவாக்கிக் கொண்டிருக்கறதா என்பது மட்டம் அல்லாமல், இந்தத் தண்ணீர் பழைய வடிவமைப்பிலுள்ள உயிரினத்தை ஆதரிக்க முடியுமா என்பதும் ஆகும்.

எந்த இடத்தில் கலம் இறங்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட காரணம், இப்பொழுது கலம் இறங்கி இருக்கும் இடம் ஒரு காலத்தில் ஏரியாக இருந்து இப்பொழுது பொட்டல்தரையாக இருப்பது ஆகும். ஏரிப்படுகையில் பொதுவாக hematitie எனப்படும் இரும்புப் படிமக் கூட்டுப் பொருள் தண்ணீரின் சமீபத்தில் தோன்றுவதுண்டு. Spirit தான் சேகரிக்கும் தகவல்களை பூமிக்கு x- அலை வானொலி அலைகளைப் பயன்படுத்தி, Deep Space Network எனப்படும் ஆழ் அண்டவெளி இணையம் நிறுவப்பட்டுள்ள, 120 டிகிரிகள் ஒவ்வொன்றையும் பிரிக்கும் தொடர்பு வசதிகளையுடைய மூன்று இடங்களுக்கு அனுப்பிவைக்கும். இந்த DSN வசதி, கலிபோர்னியாவில் Mojave பாலைவனத்தில் இருக்கும் Goldstone என்ற மையம், ஸ்பெயினில் மாட்ரிட், மற்றும் ஆஸ்திரேலியாவில் கான்பெர்ரா என உலகம் தன்னுடைய அச்சில் சுழலும்போது, இடைவிடாமல் செவ்வாய் கலத்தை கவனிக்கும் மையங்களால் கவனிக்கப்படும்.

Spirit .கடந்த கோடையில், மிக அசாதாராணமுறையில் செவ்வாயும் பூமியும் அருகில் வரும் நேரம் பார்த்து (35 மில்லியன் மைல்கள் தூரம்), ஏவப்பட்ட மனிதனில்லாத கலங்கள் மூன்றில் ஒன்றாகும். ஐரோப்பியக் கூட்டு முயற்சியில் செவ்வாய் ஆய்விற்காக அனுப்பப் பட்ட வாகனமான Beagle 2, 1830களில் அப்படிப் பெயர்கொண்டிருந்த கப்பல் ஒன்று டார்வினை மிகப் புகழ்பெற்ற கடல் பயணத்தில் அழைத்துச் சென்றிருந்தது, கிறிஸ்த்மஸ் தினத்தன்று அதன் மத்தியரேகையருகே செவ்வாயில் தரையிறங்கியது; ஆனால் இது இன்னமும் பூமியோடு தொடர்பு கொள்ளவில்லை. Beagle ஐ, அந்த கிரகத்தைச் சுற்றிவரும் அதன் தாய்க்கப்பலான Mars Express மூலம் எங்கு இருக்கிறது என்று அறிய விஞ்ஞானிகள் முயன்று கொண்டு இருக்கின்றனர்; ஆயினும் கூட அது ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்திருக்கக் கூடும். ஐரோப்பிய செவ்வாய் ஆய்வுக்கலம் மடிந்திருக்கக் கூடும் என்பது பெரிதும் வருத்தத்திற்கு உரியது; ஏனென்றால் அதன் முதல் பணி, கிரகத்தில் உயிர் இருக்கிறதா என்பதைக் கண்டு அறிவதாக இருந்தது; Spirit அப் பணியியை இட்டு நிரப்பும் பணியை அது மேற்கொண்டிருக்கும். ஓரு மூன்றாவது ஆய்வுக் கலமான ஸ்மிரிட்டுடைய இரட்டை, Opportunity என்னும் கலம் ஜனவரி 24ம் தேதி செவ்வாயில் இறங்குவதாக இருக்கிறது.

ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அண்டவெளி ஆய்வில் போட்டித் தன்மை இருப்பதைச் செய்தி ஊடகங்கள் பெரிதுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், NASA பிரதிநிதிகளுக்கும் அவர்களுடைய ஐரோப்பிய சக துறை ஊழியர்களுக்கும் இடையே உள்ள உறவு நட்பு நிறைந்ததாகவும், ஒத்துழைப்பு நிறைந்ததாகவும்தான் இருக்கிறது. NASA உடைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் Beagle தொடர்பு கொள்ளாதது பற்றி வருத்தம்தான் கொண்டதாகத் தெரிவித்தார்; ஏனெனில் மதிப்புடைய அறிவியல் தகவல்கள் கிடைக்காமல் போய்விட்டன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved