World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Western Sahara: Resignation of UN envoy James Baker puts referendum in doubt

மேற்கு சகாரா: ஐ.நா. தூதர் ஜேம்ஸ் பேக்கருடைய ராஜிநாமா வாக்கெடுப்பைச் சந்தேகத்திற்குட்படுத்துகிறது

By Brian Smith
28 June 2004

Back to screen version

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலரின், மேற்கு சகாராவிற்குச் சிறப்பு தூதரான ஜேம்ஸ் பேக்கரின் ராஜிநாமா, பூசலுக்குட்பட்ட ஆபிரிக்க பகுதியின் வருங்காலம் பற்றிய வாக்கெடுப்பை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

ஈராக்கிய படையெடுப்பிற்குப்பின், அமெரிக்கா, ஐ.நாவை சர்வதேச பூசல்களில் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தும் வகையை அதிகரித்த முறையில் தவிர்த்து வருகிறது. மாறாக, புஷ் நிர்வாகம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை பெருக்குவதற்கு, இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களை விரும்பி, நேரடி இராணுவ நடவடிக்கையை பயன்படுத்தி வருகிறது.

ரோனால்ட் றேகன், மூத்த ஜோர்ஜ் புஷ் இருவருடைய நிர்வாகங்களிலுமே உறுப்பினராக இருந்த பேக்கர், பெருகிவந்துள்ள இயலாத்தன்மையை தன்னுடைய இராஜிநாமாவிற்கு காரணமாக கூறியுள்ளார். 1997ம் ஆண்டிலிருந்து இப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள மொரோக்கோ, அல்ஜிரியாவின் ஆதரவு பெற்றுள்ள Polisario Front இரண்டுக்கும் இடையே ஒப்பந்தம் காண்பதற்கு முயன்று வருகிறார். மொராக்கோ, அல்ஜீரியா இரண்டுமே அமெரிக்காவின் சார்பு நாடுகள்தாம்; இரண்டுமே தமக்கு உதவும் அமெரிக்காவை திருப்திப்படுத்தத்தான் முயலுகின்றன; ஆனால் அமெரிக்காவினால் இப்பூசலை ஐ.நா. மூலம் தீர்த்து வைக்க முடியவில்லை.

திக்ஷீமீஸீtமீ றிஷீஜீuறீணீக்ஷீ ஜீணீக்ஷீணீ றீணீ லிவீதீமீக்ஷீணீநீவீரஸீ பீமீ ஷிணீரீuவீணீ மீறீ-பிணீனீக்ஷீணீ ஹ் பீமீ ஸிவீஷீ பீமீ ளிக்ஷீஷீ எனப்படும் பொலிசாரியோ முன்னணி, சகார்வி அரேபிய ஜனநாயகக் குடியரசின் (SADR) இராணுவப் பிரிவு ஆகும். இது 1973ல் ஸ்பானிய காலனித்துவ ஆட்சியை எதிர்த்துப் போரிட நிறுவப்பட்டது. 1976ம் ஆண்டு மக்கட்தொகை அதிகமில்லாத இப்பகுதியின்மீது தான் கொண்டிருந்த கட்டுப்பாட்டை ஸ்பெயின் விலக்கிக் கொண்டுவிட்டது; அதன்பின்னர் இது அண்டை நாடுகளான மொரோக்கோ, மற்றும் மொரிட்டீனியாவால் இணைக்கப்பட்டது; அவற்றின் ஆட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் இன வழியில் உறவு கொண்டவர் ஆவர். அமெரிக்க ஆதரவைக் கொண்டிருந்த மொரோக்கோவிற்கும், போலிசாரியோவிற்கும் சண்டை தொடங்கி, 16 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது; மொரிட்டீனியா தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த மூன்றில் ஒரு பகுதி மேற்கு சகாராவில் இருந்து 1979ல் வெளியேறி விட்டது.

1991ம் ஆண்டு, மேற்கு சகாராவிற்கு ஐ.நா. குழு ஒன்று -MINURSO என்ற பெயரில்- பூசல்களைத் தீர்க்க அமைக்கப்பட்டது. ஒரு குறுகியகாலப் பணிக்குழுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இக்குழுவின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, சமீபத்திய நீட்டிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.நா. தலைமைச் செயலர் கோபி அன்னனால் இன்னும் ஆறு மாத பதவிக்காலத்தை பெற்றது.

அடுத்த பெப்ரவரியில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்றால் மேற்கு சகாராவில் இருந்து ஐ.நா. அமைதிப் படைகள் திரும்பப் பெற்றுவிடப்படும் என்று அன்னன் அச்சுறுத்தியுள்ளார். MINURSO வை 1991லிருந்து செயல்படவைப்பதற்காக செலவிடப்பட்டுள்ள நிதி இதுவரை $600 மில்லியன் டாலர்களுக்கும் மேல் சென்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

MINURSO மூலம் ஐ.நா. இப்பகுதியின் வருங்காலம் பற்றி ஒரு வாக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்திருந்தார்; அதில் இப்பகுதி மொராக்கோவின் ஒரு பகுதியாக, தன்னாட்சி பெற்று விளங்குமா அல்லது அதற்குச் சுதந்திரம் கொடுக்கப்படுமா எனத்தீர்மானிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 1973ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டினால் முன்வைக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பு திட்டம் நீண்ட நாட்கள் பூசலுக்கு உட்பட்டு, எவருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்பதில் சிக்கல் நிறைந்ததாக இப்பொழுதும் இருந்து வருகிறது.

SADR மற்றும் Polisario இரண்டின் தலைவர்களுமே ஐ.நா. வாக்கெடுப்பு முறையை தங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள உதவும் நடவடிக்கையாக 1991ல் ஏற்றுக்கொண்டன; இது பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், மற்றும் பல தேசிய சுதந்திர இயக்கங்கள் ஆயுதமேந்திய போராட்டத்தை கைவிட்டு, சமாதான முறையில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இணங்குவதை ஒத்ததாக இருந்தது.

வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிக்க தகுதி இருக்கிறது என உறுதிப்படுத்தும் நடைமுறையை மேற்பார்வையிடல் (அதாவது சகார்வி பூர்விகம் உண்டு என உரிமை கொண்டாடுவோர்) ஐ.நா. செய்வதாக இருந்தது; மாறாக மொரோக்கோ ஒன்றன்பின் ஒன்றாக தாமதப்படுத்தும் உத்தியில் இதுவும் சேர்ந்துகொண்டு சகார்வி மக்கள் அச்சுறுத்தப்பட்டதையும் அசட்டை செய்தது. மொரோக்கோவின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் எண்ணமே ஐ.நா.விற்கு உண்மையாக இருந்தது இல்லை. அன்னனே, ஐ.நா.வின் மத்தியஸ்தத்தை "பூஜ்ய முடிவு விளையாட்டு", அதாவது, எவருக்கும் வெற்றி இல்லாத ஒன்று என வர்ணித்து இருந்தார். மொரோக்கோவிற்கும் பொலிசாரியோவிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் தேக்கத்தையொட்டி இப்போர் நடைமுறையில் ஆபிரிக்காவின் மிக நீண்ட போராக மாறிவிட்டது.

ஜூன் 2001ல், பேக்கர் ஒரு வடிவமைப்பு உடன்பாட்டை மூன்றாம் வழி என்ற பெயரில் முன்வைத்தார்; இதன்படி மொரோக்கோ மேற்கு சகாராமீது தன்னுடைய கட்டுப்பாட்டை சிறிது தளர்த்திவிடவேண்டும் எனவும் இதற்கு ஈடாக பொலிசாரியோ சுதந்திரக் கோரிக்கையை கைவிட்டு அதிகாரப் பகிர்வில் சில அதிகாரங்களை ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நான்கு ஆண்டு காலம் இடைக்கால மாறுதல் காலமாக இருக்கும் என்றும், அதற்குப்பின் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதில் ஓராண்டிற்கு மேல் குடியிருக்கும் மொரோக்கர்கள் மற்றும் அக்டோபர் 2000 அன்று ஐ.நா தாயகம் திருப்பி அனுப்பப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்படும் சார்விக்கள் வாக்குரிமை பெறுவர் என்றும் விதிக்கப்பட்டது.

அனைத்து தரப்பினரும் இந்த உடன்பாட்டை நிராகரித்ததும், 2003ல் சில மாறுதல்களுடன் புதிய திட்டம் ஏற்கப்பட்டது; அதன்படி மேற்கு சகாரா ஒரு பகுதி தன்னாட்சியைக் கொள்ளும் என்றும், ஐந்து ஆண்டுகளுக்கு அந்நிலை இருக்கும் என்றும், அதன்பின்னர் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கொள்ளப்பட்டன. 1999ல் இருந்து தொடர்ச்சியாக அங்கு வசித்துவரும் மொரோக்கியர்கள் மட்டுமே வாக்குப் போடும் உரிமை பெறுவர் என்றும் வரையறை செய்யப்பட்டது. ஏனெனில் மொரோக்கோ இப்பகுதி முழுவதும் ஒரு வாக்கெடுப்பிற்கு முன் ஏராளமான மொரோக்கோஆதரவாளர்களைக் கொண்டு நிரப்பி விடும் என்ற கவலையை பொலிசாரியோ கொண்டிருந்தது.

இப்புதிய திட்டத்தை ஜூலை 2003ல் பொலிசாரியோ ஏற்றது; ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு, தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இதற்கு 2003 ஆகஸ்டில் ஒப்புதல் கொடுத்தது. ஜனவரி மாதம் இத்திட்டத்திற்கு மொராக்கோ இசைவு தரும் என்ற நிலை இருந்தபோது, சமீபத்தில் அது இப்பகுதிக்கு இறுதியில் இறைமை என்ற கருத்தை நிராகரித்து, கூடுதலான தன்னாட்சி அரசாங்கத்தைத்தான் கொடுக்கமுடியும் என்று கூறிவிட்டது. மொராக்கோவின் இப்பிடிவாத, விட்டுக்கொடுக்காத தன்மைதான் பேக்கரை பெரும் ஏமாற்றத்தில் தள்ளி இராஜிநாமா செய்ய வைத்துள்ளது.

பேக்கருடைய முக்கிய அக்கறை மீண்டும் போர் மூளாமல் தடுத்து நிறுத்துவதாகும்; ஏனெனில் மொராக்கோவின் உறுதிப்பாடும், மத்திய கிழக்கில் அது அசைவின்றி அமெரிக்காவிற்கு ஆதரவும் கொடுத்து வருகிறது. அமெரிக்கா, அரேபிய உலகில் மொராக்கோவை தன்னுடைய உறுதியளிக்கும் தூணாக கருதுகிறது; அதிலும் குறிப்பாக அமெரிக்க இராணுவவாதத்துக்கு இப்பகுதியில் பெருகி வரும் விரோதப்போக்கை எதிர்கொள்கையில் அவ்வாறு ஆதரவை பேண விரும்புகிறது. அமெரிக்க கடற்படைக்கு துறைமுக வசதிகளை மொராக்கோ அளித்துவருகிறது; அமெரிக்க விமானப்படைக்கும் தரையில் இறங்க, எரிபொருள் நிரப்பிக் கொள்ள வசதிகளையும் அது அளித்துவருகிறது. எகிப்தை தவிர மற்ற அரேபிய, ஆபிரிக்க நாடுகளைவிட இது கூடுதலான அமெரிக்க உதவியைப் பெற்று வருகிறது.

பிரிட்டனை விட பெரிய நிலப்பகுதியாயினும், மேற்கு சகாரா பெரும்பாலும் பாலைவனப் பகுதியாக இருப்பதோடு இதன் மொத்த மக்கட்தொகையான 245,000 மக்கள் ஒரு சில சிறுநகரங்களில் குழுமியுள்ளனர். இது ஆயிரக்கணக்கான மொரோக்கோ துருப்புக்களின் கட்டுப்பாட்டின்கீழும், ஒரு 1,500 மைல் பாதுகாப்புச் சுவரான மணல், நிலக்கண்ணி வெடிப் பகுதிகளாலும் காக்கப்படுகிறது. 165,000 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள சகாராவிக்கள், இங்கு மண்-செங்கல், கித்தான் கூரை இவற்றால் ஆகிய நான்கு முகாம்களில், கடந்த 25 ஆண்டுகளாகவே தெற்கு அல்ஜீரிய எல்லையை ஒட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதி தாதுப் பொருட்களில் வளம் நிறைந்தது; குறிப்பாக பொஸ்பேட்டுக்கள் (Phosphates) இங்கு அதிகமாக உள்ளன; மேலும் கணிசமான மீன்பிடிக்கும் உரிமைகள் நிறைந்தும், எண்ணெய் இருப்புக்களின் திறனும் இருக்கக் கூடும். ஒரு சுதந்திரமான மேற்கு சகாரா பொருளாதார முறையில் தனித்துச் செயல்படமுடியும் என்ற கருத்தை பேக்கர் கூறியிருந்தார்; ஆனால் இது ஒரு கற்பனைதான்; இப்பகுதியில் அமெரிக்க ஆதிக்கத்தை நிறுவுவதற்கு இது ஓர் மூடிமறைப்பு போன்றதுதான்.

பொலிசரியோவின் பிடி இறுக்கப்பட்டுள்ளது; சோவியத் ஆதரவு இல்லாத நிலையில் இனி இராணுவ ஆதரவு கொடுக்க இயலாது என்று அல்ஜீரியா, லிபியா, மற்ற நாடுகளும் கூறிவிட்ட நிலையில் போர் மீண்டும் மூளும் என்பது நடைமுறையாகாது. மொரோக்கோவிற்கும் கேர்னல் கடாபிக்கும் இடையே 1980 களின் நடுப்பகுதியில் கையெழுத்தான ஓர் ஒப்பந்தத்தை அடுத்து லிபியா, பொலிசாரியோவிற்குத் தான் கொடுத்துவந்த ஆதரவை நீக்கிக் கொண்டு விட்டது.

வரலாற்றளவில் பொலிசாரியோவிற்கு அல்ஜீரியாதான் முக்கிய ஆதரவு கொடுத்து வந்த நாடாகும்; ஏனெனில் மொரோக்கோவுடனான அதன் எல்லைப் பூசல்களில் இதுவும் ஒரு பகுதியே ஆகும். மிகப்பெரிய எண்ணெய் வளம் உட்பட பல வளங்களையும் சுரண்டவும் உள்நாட்டை நோக்கிய முதலீட்டிற்கு தேவையான ஸ்திரத்தன்மையை மீட்கவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனான உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டுவருவதற்கும் மேற்கு நாடுகளில் இருந்துவரும் அழுத்தத்தின் கீழ் அது இருக்கிறது. மொரோக்கோவுடன் தன்னுடைய வேறுபாடுகளைக் களைந்துவிடவேண்டும் என்ற அழுத்தத்திற்கும் அல்ஜீரியா ஆளாகியுள்ளது. ஆனால் அல்ஜீரியாவோ சுதந்திரமான மேற்கு சகாரா இருந்தால் தான் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தனக்கு நேரடியாக அட்லாண்டிக்கிற்கு வழி கிடைக்கும் எனவும் நம்புகிறது.

இப்பகுதியில் அமெரிக்க இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதும், பொலிசாரியோவினால் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு திரும்புவதை தவிர்த்துள்ளது. மொரோக்கோ, மற்றும் அல்ஜீரியாவிற்கு நேர் தெற்கில் உள்ள சாகேல் பகுதியில் அமெரிக்க சிறப்புப் படைகள் இருப்பது, மொரிட்டீனியா, ஷாட், மாலி, நைஜர் இவற்றிற்கு இராணுவப் பயிற்சி என காரணத்தைக் கூறிக்கொண்டாலும், போர் மூளும் வாய்ப்பை குறைத்துள்ளது. அமெரிக்க இராணுவம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சகாராவிற்கு அப்பால் பயங்கரவாத-எதிர் முயற்சிகளை (Trans-Sahara Counter Terrorism Initiative), (அகன்ற சாகேல் முயற்சியின் ஒரு பகுதியாக) 125 மில்லியன் டாலர்களை செலவிடத் திட்டமிட்டுள்ளது; அது அல்கொய்தா இப்பகுதியில் காலூன்றுவதைத் தவிர்ப்பதை நோக்கமாக உடையது ஆகும்.

டூனிசியா, அல்ஜீரியா, மொரோக்கோ ஆகியவை மாக்ரேப் பகுதியில் இராணுவ ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளதும் அதிகமாகி இருக்கிறது. மாக்ரேப் மத்தியதரைக்கடல் எல்லைகளில் உள்ளதால், முக்கியமான புவி-அரசியலில் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது; ஏனெனில் இது எண்ணெய் மற்றும் படைகளை மத்திய கிழக்கிற்கு கொண்டு செல்வதற்கும் வருவதற்கும் போக்குவரத்திற்கு முக்கிய நீர்வழியாக உள்ளது.

அண்மையில் அமெரிக்கா வெளிப்படையாகவே ஆபிரிக்காவில் இராணுவத் தளங்கள் பற்றிய திட்டத்தை விவாதித்து வருகிறது; அதிலும் குறிப்பாக கினி வளைகுடாப்பகுதியில் சா டோம் மற்றும் பிரின்சைப் என்ற இடத்திற்கு அருகில் ஒரு சிறிய எண்ணெய் வளம் நிரம்பிய நாட்டில், மேற்கு ஆபிரிக்க கடற்கரைப்பகுதிக்கருகில் ஒரு கடற்படை தளம் நிறுவப்படாலாம் என்று தெரிகிறது. ஈராக் போரை தொடர்ந்து அமெரிக்கா, மத்திய கிழக்கு எண்ணெய்க்கு மாற்றுக்களையும் தேடிவருகிறது; மேற்கு ஆபிரிக்காவில் ஆழ்கடல் எண்ணெய் படுகைகளின் திறன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் மொரோக்கோ அமெரிக்க நிறுவனமான கெர்-மக்கீ, மற்றும் பிரெஞ்சு நிறுவனமான Total-Fina-Elf ற்கும் மேற்கு சகாராப்பகுதியில் எண்ணெய் வள ஆய்வு நடத்த உரிமங்களை வழங்கியுள்ளது. ஐ.நா.வோ மொரோக்காவிற்கு அத்தகைய உரிமம் வழங்கும் உரிமையே கிடையாது என அறிவித்துள்ளது. இதற்கிடையில் பொலிசாரியோ ஆஸ்திரேலிய நிறுவனமான Fusion Oil உடன் அதன் கிழக்கு கடற்கரையில் எண்ணெய் ஆய்விற்கு ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. மிகச்சமீபத்தில், ஒரு இங்கிலாந்து நிறுவனமான Wessex ஆய்வு உடன்படிக்கை ஒன்றில் மொரோக்கோ எண்ணெய் நிறுவனமான ONAREP உடன் கையெழுத்திட்டுள்ளது; இந்த உடன்படிக்கையை பொலிசாரியோவும் SADR உம் எதிர்த்துள்ளன.

இப்பகுதியில் ஸ்பெயினுக்கும் சில நடப்பு எண்ணெய் உற்பத்தி நலன்கள் உள்ளன; இருப்புக்கள் மேலை சகாராவில் இருக்கக்கூடும் என்றும் அதன் பங்கு கிட்டத்தட்ட 2.3 பில்லியன் டாலர்கள் ஆக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. Maghreb-Europe எரிவாயு குழாய் வழித்தடம் அல்ஜீரியாவில் உள்ள Hass R'mel எண்ணெய் வயலுடன் ஸ்பெயினில் உள்ள கார்டோபாவை மொராக்கோ மூலம் இணைக்கிறது. ஸ்பெயின் அதிகரித்த அளவில் ஒரு சுதந்திரமான மேற்கு சகாரா நாட்டை விரும்புகிறது; ஆனால் பிரான்சோ வரலாற்றுப் பின்னணியில் மொரோக்காவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவைக் கொடுக்கிறது.

மேலை நாடுகளின் இந்த எண்ணெய் திறனைப் பயன்படுத்துதல், எரிவாயு இருப்பைப் பயன்படுத்தி தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லுதல் இவற்றிற்கு இன்றியமையாத முன்தேவை இவற்றை உடைமையாக கொண்டுள்ள நாடுகளிலும் எண்ணெய் குழாய்கள் செல்லும் நாடுகளிலும் அரசியல் உறுதிப்பாடு நம்பிக்கையுடன் இருப்பதாகும்.

இந்தப் பிராந்தியத்தில் அவற்றின் வர்த்தக நலன்களின் காரணமாக அமெரிக்க அரசாங்கத்தை போலவே, ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் மேற்கு சகாரா பூசல்களுக்கு ஓர் உடன்பாடு காண விரும்புகின்றன. தங்கள் வர்த்தக நலன்கள் அப்பொழுதுதான் இப்பகுதியில் காக்கப்படமுடியும் என அவை கருதுகின்றன. இந்தப் பிரச்சினை மாக்ரேப் ஒன்றிய வணிக முகாம் பகுதியில், மொரோக்கோ, மெரரிட்டீனியா, அல்ஜீரியா, டுனீசியா மற்றும் லிபியாவின் எழுச்சிக்கு ஒரு தடையாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் வர்த்தக யுதத்தத்தில் மாட்டிக் கொண்டுள்ளன; இவை தனித்தனியே வட ஆபிரிக்க நாடுகளின் தயவை நாடியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் (ஐ.ஓ) மத்தியதரைக்கடல் வடிகால் பகுதி முயற்சியை (Mediterranean Basin Initiative) ஆதரிக்கிறது; இது மத்தியதரைக் கடல் நாடுகள் அனைத்தையும் ஐ.ஓ. வுடன் ஒரு வர்த்தக கூட்டில் இணைத்து விலைக்குறைப்பு உடைய இறக்குமதிகளுக்கும், குறைவூதிய தொழிலாளருக்கும் வழிவகை செய்யும். இதற்கு ஐ.ஒ.வின் துணை உறுப்பு நாடாகவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; மொராக்கோ, அல்ஜீரியா இரண்டிற்குமே அழைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் அமெரிக்கா தன்னுடைய மத்திய கிழக்கு கூட்டு முயற்சியில் வட ஆபிரிக்காவை இணைத்து ஐ.ஓவிற்கு எதிராக, ஐ.ஓ.வின் கொல்லைப்புறப் பகுதியிலேயே போட்டியாளனாக முயல்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved