World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Letters on "Ronald Reagan (1911-2004): An Obituary"

"ரோனால்ட் றேகன் (1911-2004): ஓர் இரங்கல் குறிப்பு" பற்றிய கடிதங்கள்

11 June 2004

Back to screen version

டேவிட் நோர்த் எழுதிய "ரோனால்ட் றேகன் (1911-2004): ஓர் இரங்கல் குறிப்பு" பற்றிய கடிதங்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்கிறோம்.

ஆசிரியர் அவர்களுக்கு:

ரோனால்ட் றேகன் மரணம் பற்றி: இந்தப் பரிதாபத்திற்குரிய மனிதர் வரலாற்று மறதிக்குள் சென்றது பற்றி, நான் படித்த டஜன் கணக்கான ஏனைய கட்டுரைகளைவிட டேவிட் நோர்த்துடைய இரங்கல் குறிப்பு பரந்த அளவில் தேவைக்கும் மேலாக அனைத்தையும் கூறியுள்ளது.

பல ஆண்டுகளாக சமூகப் பணியாளராக இருப்பது, என்னை தத்துவவாதிகள் அழைக்கும் "இறுகிப்போன உறுதியாளர்" என ஆக்கிவிட்டது; தனி நபர்கள் நாம் செய்வதை ஆரம்பிப்பவர்கள் என்ற வகையில் உண்மையிலேயே குற்றம் சாட்டப்படக் கூடாது என்று கருதுகிறதேன்; எவ்வாறு அதே மனித நடவடிக்கைக்காக பெரும் புகழும் நமக்குக் கொடுக்கப்படக் கூடாதோ அதேபோல்தான் இதுவும். என்னைப் பொறுத்தவரை, வேறு வகையில் சொன்னால், றேகன் என்பவர் நோய்க்கு ஒரு காரணம் என்பதைவிட நோயின் ஒரு அறிகுறி என்று கூறலாம்.

ஆனால் தத்துவவாதிகள் மற்றும் சமுதாயக் கோட்பாடு வரைபவர்கள் காரணங்களைப் பற்றி என்ன கூறினாலும், மக்கள் தாங்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ, அதைத்தான் செய்வார்கள் என்பதை மறுப்பதற்கில்லை; ரோனால்ட் றேகன் நேரடியாகவும், முழு விருப்பத்துடனும் ஜனாதிபதியாகக் கொண்டு வந்த கொடூரமான மாறுதல்களை மிக அழகிய முறையில் டேவிட் நோர்த் தொகுத்துக் கூறியிருக்கிறார்.

நான் பல ஆண்டுகள் சமூகப் பணியாளராக இருந்தது, என்னை நியூயோர்க் நகரப் பகுதியில் வேலைபார்க்கும் தொழிலாள வர்க்கப் பகுதியினர் பல்லாயிரக்கணக்கில் வீடிழந்து நின்ற நிலையை இக்காலக் கட்டத்தில் நேரடி சாட்சியாகப் பார்க்க வைத்தது. சமுதாய பாதுகாப்பு இயலாதோருக்கான நலன்கள் பல அவர்களால் பெறப்பட்டிருந்தவை, றேகன் கூட்டாட்சியில் நிலம் வாங்கல் விற்றல் வரியை ஒட்டி இழக்க நேரிட்டது; அவருடைய சட்டங்கள் ஊக முறையிலான "கடைதலில்" அப்பகுதியில் இருந்த பலகுடும்பங்கள் வாடகை மற்றும் நில சந்தைகள் ஊக்குவிக்கப்பட்டு, வரிகள் செலுத்தி வந்த வீடுகளிலேயே வாடகைக்கு இருக்கும் நிலை ஏற்பட்டது; இரக்கமற்ற முறையில் வாடகைக் கட்டுப்பாட்டு விதிகள் நில விற்பனையாளர் நலன்களுக்கேற்ப, உள்ளூர் அரசியல் வாதிகள் எல்லாவற்றையும் வாங்கியதுபோல் பயன்படுத்தப்பட்டன. சமூகப் பாதுகாப்பு பெயர்களில் இருந்து அகற்றப்பட்டதாலும், ஏழைகள் பெற்று வந்த நன்மைகள் பால் றேகனிச தாக்குதல்களின் விளைவாலும், தொழிலாளர்கள் வீடிழக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

ரொபேர்ட் ரிங்கருடைய Winning Through Intimidation போன்ற நூல்கள், வலதுசாரி தீயசக்திகளின் National Review கூற்றுக்கள், செல்வமும் வசதியும் படைத்தவர்களின் எதிர்ப்புக் கூச்சல் ஆகியவற்றில் றேகன் பதவிக்கு வருவதற்கு நீண்டநாள் முன்பே றேகனிசம் புழக்கத்தில் இருந்தது. அவருடைய கவர்ச்சி ஒரு வினோதமன "தீய மலரின்" அரும்புதலுக்கு உதவியது; இது அமெரிக்க நாகரிகத்தில் ஒர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது; அதனுடைய முக்கிய கூறுபாடுகள் சலிப்பு இல்லாமல், தன்னைப்பற்றி அக்கறையுடன் புகழ்ந்து கொள்ளுதல், பேராசை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிறரை அழித்தல் ஆகியவை ஆகும்.

றேகனுடைய சகாப்தம், இது முதலாளித்துவத்தின் தவறான ஆட்சிமுறையில் இன்னொரு அத்தியாயத்திற்கும் மேலானது ஆகும்; இது இப்பொழுதும் நம்மிடம் இருக்கிறது; நாட்டின் பொறுப்பற்ற குற்றம் சார்ந்த தலைமை, இதன் இராணுவவாதம், கொள்ளை முறையையும், நிறுவனங்களின் பேராசையையும் பண்பாட்டளவில் போற்றிப் புகழும் தன்மையில் இதைக் காணலாம். மிக அருமையாக டேவிட் நோர்த் கூறியுள்ளபடி, அது அமெரிக்க நாட்டிற்கு இன்னும் முழுமையாக தீமையைத் தரவிருக்கிறது.

அமெரிக்காவில் வரவிருக்கும் ஆண்டுகள் நெருக்கடிகள் நிறைந்ததாக இருந்து, ஒரு போலீஸ் அரசாங்கத்தை நோக்கிச் செல்லுவதாக இருக்கும்; இதற்கான ஒத்திகைதான் ஈராக்கில் அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பு ஆகும். அதைப்பற்றி எனக்குச் சிறிதும் ஐயமில்லை.

வருங்காலத்திற்கு தீர்க்கதரிசனத்துடன் ஒரு முன்னுரைபோல் எழுதப்பட்டுள்ள இந்த இரங்கல் குறிப்பை தயாரித்ததற்கு டேவிட் நோர்த்திற்கு நன்றி செலுத்தவேண்டும்.

LM

Jersey City, New Jersey

9 June 2004

* * * * * *

றேகன் பற்றிய இரங்கல் குறிப்பு, நாம் பார்த்ததிலேயே மிக மோசமான அமெரிக்க தலைவர்களுள் ஒருவரின் அரசியல் பாதிப்பைச் சுருக்கமாகக் கூறியுள்ளது. எது காக்கப்படமுடியாதோ, அதைக் காப்பதற்கு றேகன் உறுதிபூண்டிருந்தார்; காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்களை தாக்கியும், அவரது ஆதரவாளர்களின் மிகத்தீவிர உள்ளுணர்வுக்கு அழைப்பு விடுத்தும் அவர் இதைச் செய்தார். ஆனால், அவருடைய குற்றங்கள், தவறான செயல்கள் பற்றிய எந்த விவாதத்திலும், இழிவுடைய Laffer curve பற்றி ஒரு குறிப்பு கொடுக்கப்பட வேண்டும். ஒரு அபத்தமான பொருளாதாரவாதியான Laffer வருமானவரியைக் குறைத்தால், தொழில்முயல்வோரின் இயக்கத்திறன் பெரிதும் ஊக்கம் அடைந்து நாட்டின் கருவூலம் நிரம்பிவழியும் என்று வாதிட்டிருந்தார். இது றேகன் பிரதிநிதித்துவம் செய்த ஒருசிலவர் ஆட்சியின் நோக்கத்திற்கு மிகவும் பொருந்தியது; இதன் விளைவு முன்கணித்தவாறு மிகப்பெரிய பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டங்களாகும். முடிந்த முடிபாக கொள்வதையும் முட்டாள்தனத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தக் கொள்கை, நீங்கள் சரியாகக் குறிப்பிட்டது போல், சாதாரண அமெரிக்க மக்களுக்கு பயங்கரமான சமுதாய விளைவுகளை ஏற்படுத்தியது. றேகனுடைய அரசியலில் சுருக்கமாய் காணக்கிடைக்கிறது, அதேபோல் நீங்களும் குறிப்பிட்டவாறே, அவருடைய கொலைகாரத்தனமான வெளிநாட்டுக் கொள்கைகளிலும் கிடக்கின்றது.

JL.

9 June 2004

* * * * * *

அன்புள்ள WSWS,

றேகன் பற்றிய உங்கள் இரங்கல் குறிப்பு எனக்குப் பிடித்திருந்தது. நான் பார்த்த பலவற்றையும்விட இதுதான் உண்மைக்கு மிக அருகில் இருந்ததாகும். இங்கு புளோரிடாவில் வலதுசாரி செய்தித் தாள்கள் கூட அவருடைய இரண்டாம் பதவிக்கால கடைசியில் றேகனைத் தாக்கி எழுதிவந்தமை எனக்கு நினைவில் உள்ளது. இப்பொழுது பாசிச ஊடகங்கள் கூறுவதைப் பார்த்தால் அப்படி அவர்கள் எழுதுவதற்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது.

ஆனால் இந்த மனிதர் (அல்லது அவருடைய தொடர்பாளர்கள்) செய்த சில கொடூரமான முக்கியத்துவம் வாய்ந்தவற்றை நீங்கள் கூறாமல் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். சேமிப்புக்கள் மற்றும் கடன் ஊழல் ஒன்றை அவர் பல விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறிச் செய்திருந்தார். மேலும் உரிமைகள் சட்டத்தை தகர்ப்பதற்கு பைத்தியக்காரத்தனமாக "போதைப் பொருட்கள்மீதான போர்" என்ற பெயரைப் பயன்படுத்தினார். அத்துடன் சிறையில் அடைப்பு செலவுகளும் அதிகரிக்கப்பட்டன. இதைத் தவிர வேண்டுமென்றே இறக்குமதி செய்யப்பட்டிருந்த crack cocaine போதைப் பொருள் CIA யினால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், "கான்ட்ரா" போர்களுக்கும் போதைப்பொருள்கள் மீதான போர் என்ற பெயரில் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குமான செலவைச் சரிக்கட்டவும் பயன்பட்டன. இறுதியாக செய்தி ஊடகங்களை இணைக்கும் முயற்சி, 24 மணி நேரமும் பிரச்சாரம் நடத்தும் கருவிகளாக CNN போன்றவை றேகன் காலங்களில்தான் இடம்பெற்றன. கடைசி நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கருதுகிறேன்; ஏனெனில் பின்னர் சுதந்திரமான செய்தி ஊடகம் இல்லை. அனைத்து தகவல்களுமே பிரச்சாரம்தான் என்றால் எவ்வாறு ஒருவர் ஜனநாயகத்தைக் கொண்டிருக்க முடியும்?

இவற்றின் விளைவுகளுடன் இப்பொழுது வாழ்கிறோம்; ஒரு போலீஸ் அரசாங்கம், மக்களுக்குக் கொடுக்கப்படும் "உதவி" சிறை வடிவத்தில் மற்றும் அதிகமாய் சிறைகளில் தான் உள்ளது. அடிமைத்தனம் மீண்டும் வந்துவிட்டது; செல்வம் கொழிக்கும் வெள்ளைக் கழுத்துப்பட்டை அணிந்த கொள்ளையர்கள், கொலைகாரர்கள், திருடர்கள் ஆகியோருக்கு வெகுமதிகள் அல்லது மன்னிப்பு, ஏழைகள் சிறு தவறுகளுக்கு நீண்ட காலம் சிறை வாசம்; கார்ப்பொரேட் அடிமைத்தனம் ஆதரிக்கப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் கடினமான சரிவில் உள்ளது; உலக வெப்பப் படர்வு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. சுகாதார காப்பீட்டுத் தொகை பற்றி மறந்துவிடுங்கள், டாக்டர்களையும் இனி நம்புவதற்கில்லை. உங்களுக்கு அருகில் இருப்பவர்களையோ நண்பர்களையோ நம்ப முடியாது; ஏனேனில் நம்பமுடியாத அளவு பிரச்சாரம் நல்லமுறையில் நட்பாக இருப்பவர்களை கிட்டத்தட்ட கிறுக்கர்ககளாக, ஆபத்து விளைவிக்கக் கூடிய மனச் சிதறல் நிறைந்தவர்களாக, எது சரி, எது பிழை, எது பொதுநலம் எனக்கூடத் தெரிந்துகொள்ளாதவர்களாக மாற்றிவிட்டது.

இவை உண்மையிலேயே கெட்ட காலம்தான், ஊழலும் நேர்மையற்ற தன்மையும் முழுச்சமூகத்திலும் படர்ந்துவிட்டது; "நம்முடைய" அரசாங்கம் முற்றிலும் தவறாக செயலாற்றுகிறது; இந்தப் பெரிய மாற்றம் றேகனுடைய நிர்வாத்தில்தான் தொடங்கியது.

நல்ல பணியைத் தொடருங்கள்; தலையங்கங்கள் என வரும்போது என்னைப் பொறுத்தவரையில் உங்களுடையதுதான் சிறந்தவை என சொல்லமுடியும்..

உண்மையுடன்

RR

9 June 2004

* * * * * *

உங்களுடைய பொறாமையும் அதேபோல முட்டாள்தனமும் வேடிக்கையானவை. தென்புறம் செல்லும் ஆண் கழுதையில் வடமுனையை செய்து இருமுனைகளிலும் உங்கள் பொறாமையினாலும் அடி மடத்தனத்தினாலும் சிரிக்கவைக்கிறீர்கள்.

GS

9 June 2004

* * * * * *

தன்னுடைய புதினங்கள் ஒன்றில் பிலிப் ரோத் கம்யூனிஸ்டுக்குப் பதிலீடாக பயங்கரவாதி என எழுதியுள்ளார். இன்னும் சற்று இக்கருத்தையே விரிவாக்கினால், தீமையின் அச்சு என்பது தீமையின் பேரரசு எனப்போய் றேகன் என்னும் பெரிய அண்ணனாக இப்பொழுது உருமாறி ஜோர்ஜ் புஷ் என்ற பெயரில் அழிவிலிருந்து காப்பாற்றுவார். நம்முடைய மனத்திற்குள் தோன்றுவது ஜோர்ஜ் ஆர்வெல் நாவலைத் தழுவி 1984ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றிலிருந்து வந்த ஒரு காட்சியாகும். பரிந்துரைப்பவர் தன்னுடைய சக மனிதனுடன், அதாவது - நாம் ஐரோப்பாவுடன் போரிடுகிறோம் யூரேசியாவுடன் அல்ல என்று, மறுநாள் யூரேசியாவுடன் போரிடுகிறோம், ஐரோப்பாவை நாம் வெறுக்கவில்லை என்ற முடிவற்ற போலித்தனமான பிரச்சாரத்தை ஒன்றைக் காணும்படி கட்டாயத்திற்குள்ளாகிறான்- இவை அனைத்துமே பெரியண்னா பின்னணியில் கோரஸாக பாடப்படுகிறது, பார்வையாளர்களாகிய நாம் எது முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுகிறோம்; இதன் விளைவாக திரைப்படத்தின் விஷயம் என்ன வெனில் வெறுப்பு மற்றும்/அல்லது அன்பு எவ்வாறு முடுக்கிவிடப்பட முடியும், அணிதிரட்டப்பட முடியும், விருப்பப்படி செலுத்தப்பட முடியும் என்பது ஆகும். இதைப் பொறுத்தவரையில் பெரிய அண்ணனால்.

என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எப்படி ரோனால்ட் றேகன் ஜனாதிபதியானவுடன் பெரும் அதிர்ச்சி அடைந்தோம் என்று நினைவு கூறுகிறேன்; ஒரு மூன்றாந்தர திரைப்பட நடிகர், எவ்விதமான வெளிநாட்டுக் கொள்கை அனுபவமும் கிடையாது. ஆனால் இந்த வார செய்தி ஊடக மின்னல்தாக்குதலில், இதைப்போன்ற வேறு எந்த மின்தாக்குதலும் பார்த்ததில்லை; ஒரு சொல் கூட விமர்சிக்கும் வகையில் நான் கேட்கவில்லை, செய்தி ஊடகத்தைப் பொறுத்தவரையில் அனைத்துமே பெருங்கற்பனை பரிமாணமாக வளர்ந்து, ஜனாதிபதி கென்னடி அல்லது இளவரசி டயானா போன்றோர் கூட உருவில் சிறுத்துவிட்டனர். உண்மையில் அமெரிக்கச் செய்தி ஊடகம் இவ்வாறு திரட்டப்பட்டது பெரும் காட்சிதான்.

KL

New York City

9 June 2004

* * * * * *

தைரியம்தான்! உங்களுடைய சரியான, படிப்பினை கொடுக்கும் வகையில் அமைந்திருந்த 40 வது ஜனாதிபதி பற்றிய இரங்கல் குறிப்பிற்கு நன்றி. இக்கட்டுரையை ஏனையோருக்கும் அனுப்பிவைக்கிறேன்.

W

9 June 2004

* * * * * *

எந்த அளவு அறியாமையில் தீவிர இடது இருக்கிறது என்பதற்கு உங்கள் கட்டுரை ஒரு சான்று ஆகும். இதற்கு நிரூபணமாக வேறு எந்த றேகனைத் தாக்குபவரிடமிருந்தும் கிடைக்காத சிறிய தகவல். கீழுள்ள புள்ளிவிவரங்கள் Bureau of Labour Statistics, the CNN/Fn மற்றும் CATO Insitute லிருந்து எடுக்கப்பட்டவை.

ஜனவரி 1981 லிருந்து ஜனவரி 1989 வரை வேலையின்மை விகிதம் 7.2% லிருந்து 5.3 ஆகப் போயிற்று (26% குறைந்தது); Dow Jones தொழில்துறை சராசரி 947 லிருந்து 2168 (229% உயர்ந்தது); உண்மையான பொருளாதார வளர்ச்சி சராசரியாக றேகன் காலத்தில் 3.2% ஆகியது, போர்ட் -- கார்ட்டர் ஆண்டுகளின் 2.8% ஓடு ஒப்பிட்டுப்பார்க்கையிலும், 2.1%என புஷ்-கிளின்டன் ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையிலும் இருந்தது. உண்மை சராசரிக் குடும்ப வருமானம் $4,000 ஆக வளர்ந்தது (11% உயர்ந்தது).

இதைத் தவிர, சோவியத் யூனியன் வெடித்துச் சிதறியது கூறப்படவேண்டிய தேவையில்லை; முஅம்மர் கடாஃபிக்கு நரம்புத் தளர்ச்சி கொடுத்தோம் (பிரான்ஸ் நம்மை அவர்கள் விண்பகுதியில் அனுமதிக்காதபோது.)

JF

9 June 2004

* * * * * *

றேகன் மரணம் பற்றி உங்களுடைய கட்டுரைக்கு நன்றி. மிக அதிர்ச்சியூட்டும், தகுதியற்ற பாராட்டுக்கள் நிக்சனுக்கு அவரின் மரணத்தை ஒட்டிக் கிடைத்ததைப் பார்த்தபின்னர், இதேபோல்தான் றேகனுக்கும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்; ஆனால் உங்களைப் போல் இது இன்னும் அதிரவைக்கும் தன்மையடைந்திருந்ததைப் பார்த்தேன். நான் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கிறேன்; 50,000 மாணவர்களுடைய பல்கலைக் கழகம், அனைத்துத் துறைகளும் இன்று அவரைக் கெளரவிக்கப்படும் வகையில் மூடப்படும் என்றும் இந்தவாரம் துக்கம் கடைப் பிடிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளோம். நான் பொதுவாக அரசியல் அற்ற, பாப்-பண்பாடு உடைய சக ஊழியர் தற்செயலாக றேகன் கென்னடியை விட செல்வாக்கு உடையவர் என்று கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். நம்மில் பலர் தனிமைப் படுத்தப்பட்டும், தொடர்பற்றும் இருக்கும் உணர்வு இவற்றின் மூலம் பெருகுகிறது.

றேகனைப் பொறுத்தவரையில் ஏற்கனவே 90களில் பெரும் கற்பனையுரைகள் அமெரிக்காவில் வந்துவிட்டன. அந்தப் பத்து ஆண்டுத் தொகுப்பில், பலதரப்பட்ட தாராளக் கொள்கையுடைய, அரசியல் தீவிரமுடையவர்கள், தங்கள் இருபதுகளில் இருந்தவர்கள் நான் றேகனைப் பற்றி விமர்சிக்கும் போதெல்லாம், ஆச்சரியத்துடன் "அவர் வரலாற்றிலேயே பெரும் புகழ் பெற்றிருந்த ஜனாதிபதி!" "அவர் நாட்டைக் காப்பாற்றினார்!" "அவர் கம்யூனிசத்தை அழித்தார்" என்றெல்லாம் கூறுவர். இத்தகைய கருத்துக்கள், தங்களை "தாராளவாதிகள்" எனக் கூறியவர்களிடம் இருந்தும் அரசியலில் தீவிரமாக இருந்தவர்களிடமிருந்தும் வந்தது. அவர்களுக்கு பள்ளியில் அப்பொழுதுதான் றேகன் குணநலன்களின் தொகுப்பு ஒன்று கற்பிக்கப்பட்டிருந்தது; கல்விக்காக குறைக்கப்பட்ட செலவினங்களும், றேகன் கையாண்ட புத்தி ஜீவித்தன எதிர்ப்பு முறைகளும் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கற்றதை ஆராய்வதற்குக் கூட வழிசெய்யாமல் போய்விட்டது.

றேகனுடைய ஆதரவாளர்களின் பிரச்சார சதியில் ஒன்று தீவிர அழிவுப்போக்கு கொண்டிருந்த கொள்கைகளை "பழமைவாத", அதாவது புத்திசாலித்தனமும் எச்சரிக்கையும் காலத்தின் மதிப்பிற்குட்பட்டவை என குறித்தன. இங்கு அமெரிக்காவில் குடியரசுக்கட்சிக் கொள்கை என்ற பதம் இளைஞர்களை தொடர்ந்து முட்டாளாக்குகின்றன. றேகனின் அழிவும் குரூரமும் நிறைந்த கொள்கைகள் எச்சரிக்கையுணர்வையும் கால மதிப்பையும் கொண்டிருக்கவில்லை. அவருடைய புகழைப் பொறுத்தவரையில், 1980ம் ஆண்டு அவர் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது, அவர் புகழ் பரப்பியவர்கள் "வரலாற்றில் மிகப்புகழ்வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளர்" என்று கூறிவந்தனர். அப்பொழுதும்கூட எனக்கு அது எவ்வாறு உண்மை என்ற கேள்விதான் இருந்தது. பல அமெரிக்கர்கள் அதை, சரியோ தவறோ, உண்மை என்று நம்பினர். அவர் செய்தது எதுவும் சமுதாயத்திற்கோ சிறிதும் பயன்படவில்லை என்று உங்களுக்குத் தெரியும்; சொல்லப்போனால் அவை எதிர்மாறாகத்தான் இருந்ததது. பிறருக்கு அவர் வேண்டும் என்றே கொடுத்த வலிக்கும் மரணத்திற்கும் அவர் இன்னும் கூடுதலாக வலியைக் கொண்டிருக்கவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். அதிலும் சில நீண்ட கால மாற்றங்கள் அவர் கொண்டு வந்தவை, சமுதாயத்தில் வன்முறைப் பெருக்கம், அறிவு வேட்கைக்கு எதிர்ப்பு, சமுதாயநலத் திட்டங்கள் தகர்ப்பு, பலருக்கு வீடிழப்பு, வன்முறை இல்லாத குற்றங்களுக்கு நீண்டகால தண்டனை, இன உணர்வில் வேண்டுமென்றே சிறையிடல், வெட்கம் கெட்ட தனமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது, ஆர்மெகெடானை முறையாகக் கையாண்டது, கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் அதிகாரத்திற்கு வந்தது, இவை அனைத்தும் அவர் ஆட்சியை விட்டு நீங்கிய பின்னரும் தொடரவேண்டும் என்று செயல்படுத்தப்பட்டன.

DG

Austin, Texas

9 June 2004

* * * * * *

திரு நோர்த் எழுதிய ரோனால்ட் றேகன் பற்றிய இரங்கல் குறிப்பில் ஒரு கருத்து பற்றி எனக்கு உடன்பாடு இல்லை. ஹூவருக்குப் பிறகு மிக வெறுக்கப்பட்ட ஜனாதிபதி, புஷ்தான்! அதற்குப் பிறகு றேகன், அதற்கும் பிறகு பழைய புஷ்.

நார்த் அவர்களே, பெரும்பணியைத் தொடருங்கள்.

PM

Jersey Mills, Pennsylvania

9 June 2004

* * * * * *

வாவ்! எவரேனும் ஒருவர் எப்படி பல விஷயங்களும் நடந்தன என்று கூறக் கேட்க எவ்வளவு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

MR

9 June 2004

* * * * * *

அன்பு நண்பர்களே,

றேகன் காலங்களை வரிசையாக திரும்ப நினைவுபடுத்திக் கூறல் நல்ல முயற்சி. தொழிற்சங்க உடைப்பு தாட்சர் காலத்தில் பிரிட்டனில் திரும்பவும் சட்டமாக இயற்றப்பட்டது. சுரங்கத் தொழிலாளர்களை எடுத்துக் கொள்கையில் "டாங்கிகள்" பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பிய McGregor-ஐ அவர் கொண்டு வந்தார். ஏனென்றால் TUC ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் என்பதன் காரணமாக பிரிட்டனில் அரசியல் ரீதியாக அது முடியாது என்று அந்த நேரத்தில் தாட்சர் மறுத்து விட்டார்.

மனநிலை சரியற்ற ஹிங்க்லி மேற்கொண்ட படுகொலை முயற்சியும் அங்கு இருந்தது. அமெரிக்காவில் ஒவ்வொரு பள்ளியிலும் அப்பொழுது இந்தச் செய்தி மிகவும் மிருதுவான முறையில் சிறுவர்களுக்குக் கூறப்பட்டது. "எவரோ ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியைப் படுகொலை செய்ய முயற்சித்தார்." கிட்டத்தட்ட எல்லா இளைஞர்களும் பெரும் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனர். ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தது போல் நின்றனர் -- உண்மையில் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்களா எனத் தெரியாது.

போற்றத்தக்க கட்டுரைகள்

MF

New Zealand

9 June 2004

* * * * * *

இது ஒரு நல்ல விஷயம், மிகப் பெரிய விஷயமாகக்கூட இருக்கலாம்! இதைத் தவிர நான் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை; எதற்காக மனிதர்கள் சிலரை உயர்ந்த இடத்தில் நிறுத்திவைக்கிறார்கள், பின்னர் அந்த நபரைப் பற்றிய உண்மையை புறக்கணிக்கிறார்கள்/மறந்துவிடுகிறார்கள் அந்த உயர்பீடத்தோடு?

LB

9 June 2004

* * * * * *

தைரியம்தான்! ரோனால்ட் றேகன், FBI தகவல் கொடுப்பவர் T 10 பற்றிய உண்மையை எடுத்துரைத்த சிறப்பான கட்டுரைக்கு நன்றி. உங்கள் வலைத் தளம் அதிர்கிறது!

LB

* * * * * *

டேவிட்,

RWR உடைய நிதிக் குற்றங்கள் நடுத்தர, கீழ் - நடுத்தர வர்க்கத்திற்கு எதிராக நடந்ததை பட்டியல் இட்டது தவிர, நீங்கள் "வரிக்குறைப்பு" என்ற பெயரில் இவருடைய கிரெடிட் கார்டுகள், கார் கடன்கள், நீண்ட காலக் கடன்களை இவற்றிற்கான வரிக் கழிவுகளை மற்றும் வட்டிகளை முடிவுக்குக் கொண்டுவந்தது பற்றியும் சேர்த்திருக்கலாம், நில அடமானத் துறையினரின் செல்வாக்கால் அடமானக் கழிப்புக்கள்தான் எஞ்சி இருந்தன.

அப்பொழுதும் என்னை வெறுப்பிற்கு உட்படுத்தினார் -- அவருடைய 16 ஆண்டுகளும் நான் அவருடைய கொடுமையான கலிபோர்னிய பதவிக்காலத்தில் இருந்து கஷ்டப்பட்டு இருக்கிறேன். இப்பொழுதும் கஷ்டப்படுகிறேன். அவர் உண்மையிலிருந்து பிறழ்ந்தவர், குறுகிய உள்ளம் கொண்டவர், முட்டாள்தனமானவர், தன்னைப் பற்றி மிக உயர்வான கருத்தைக் கொண்டவர். அவரை நான் வெறுக்கிறேன்.

SE

Santa Rosa, California

10 June 2004.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved