World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

The beheadings of Paul Johnson and Kim Sun-il

போல் ஜோன்சன், கிம் சுன்-இல் இன் தலைகள் வெட்டிக் கொலை

By Barry Grey
23 June 2004

Back to screen version

இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் ஐந்து நாட்கள் இடைவெளியில் இரு பிணைக்கைதிகளின் தலைகளை கொய்து கொலைசெய்திருக்கும் அவர்களது மோசமான நடவடிக்கைகள் அல் கொய்தாவோடு, தங்களை தொடர்புபடுத்திக் கொண்டுள்ள இந்தக் குழுக்களின் அனைத்து ஆழமான, பிற்போக்குத்தனத்தை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. கொடூரமான, மனிதநேயமற்ற இந்த அமைப்புக்களின் நடவடிக்கைகளின் நடைமுறைகள் விடுதலைக்கு முன்கூட்டிக் குரல் கொடுப்பவையல்ல, மாறாக ஆத்திரமூட்டுபவையாகும்.

ஜூன் 18-ல் சவுதி அரேபியாவில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் இளைய போல் M. ஜோன்சன் (Paul M. Johnson Jr) மற்றும் ஜூன் 22-ல் தென்கொரியா மொழிபெயர்ப்பாளர் கிம் சுன் இல் (Kim Sun-il) ஈராக்கிலும் கொல்லப்பட்டிருப்பதில் பொதுவாக உள்ளது: இந்தக் கொலைகள் பாதிக்கப்பட்டவர்களது, குடும்பத்தை சேர்ந்தவர்கள் கருணைகாட்ட விடுத்த வேண்டுகோளை பொருட்படுத்தாமல் நடந்து கொண்டது மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் தென் கொரியாவிலும் தங்களது அரசாங்கங்களின் இராணுவவாத கொள்கையை எதிர்த்து வருகின்ற மற்றும் மத்திய கிழக்கு மக்கள் மீது வாஷிங்டனில் உள்ள போர் வெறிக்கும்பலால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்ற மில்லியன் கணக்கான மக்களது உணர்வுகளையும் பொருட்படுத்தாமல் நடைபெற்றிருக்கிறது.

அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரரான Lockheed Martin கீழ் ஜோன்சன் பணியாற்றியும், சவுதி முடியாட்சியின் Apache ஹெலிகாப்டர் அமைப்பில் பணியாற்றியும் வந்தார், மற்றும் கிம் சுன் இல் அமெரிக்க இராணுவத்திற்கு பொருட்களை வழங்கும் தென்கொரியா நிறுவனத்திற்காக பணியாற்றி வந்தார், இது இவர்களது கொலையை நியாயப்படுத்துவதாக ஆகாது. மிகக்கொடூரமான முறையில் இந்தக் கொலைகள் நடைபெற்றிருப்பது சகித்துக்கொள்ள முடியாதது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலுமே கொலையாளிகள் அமெரிக்க மற்றும் தென்கொரிய மக்கள் அனைவருக்கும் எதிரான ஒட்டுமொத்த பழிவாங்கும் நடவடிக்கை என்று அறிவித்தனர், சாதாரண உழைக்கும் மக்களுக்கும், அவர்களை ஒடுக்கிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஆளும் செல்வந்த தட்டுக்களுக்குமிடையில் இவர்கள் எந்தவகையிலும் வேறுபாட்டைப் பார்க்கவில்லை.

Abu Musab al-Zarqawi யால் தலைமை தாங்கப்படுவதாக கூறப்படுகின்ற Jama'at al-Tawhid மற்றும் ஜிஹாத் குழு, அதே நாளில் 33 வயதான தென் கொரியரை பல்லூஜாவில் கொலை செய்தபோது பாதிக்கப்பட்டவரின் நாட்டவர்கள் தென்கொரியா முழுவதிலும் தங்களது அரசாங்கத்தின் கொள்கைகளை கண்டிக்கின்ற வகையில், ஈராக்கிலிருந்து அனைத்து தென் கொரிய துருப்புக்களையும் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டுமென்று கோரி கண்டனப் பேரணிகளை நடத்தினர்.

கொடூரமாக, கண்மூடித்தனமான முறையில் ஒரு இளைஞரை கொலைசெய்திருப்பது ஈராக் போருக்கும், மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இதர குற்றங்களுக்கும் எதிராக அணி வகுத்து நிற்கின்ற பரந்த வெகுஜனங்களுக்கிடையே வெறுப்பையும், குழப்பத்தையும் உருவாக்கும் என்பதை கொலை செய்தவர்களே அறியாமல் இருக்க முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் ஒரு சர்வதேச பிரச்சனையாகும், மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களை பகைத்துகொள்ளும் நடவடிக்கைகள் ஏகாதிபத்தியவாதிகளின் கரங்களைத்தான் வலுப்படுத்தும்.

புஷ் நிர்வாகம் அமெரிக்க சித்தரவதைகள் அம்பலத்திற்கு வந்ததாலும் போருக்கு ஆதரவு திரட்ட அது பயன்படுத்திய எல்லாப் பொய்களும் அம்பலத்திற்கு வந்திருப்பதாலும், அமெரிக்கா மற்றும் ஈராக் மக்கள் பெருமளவில் மடிந்துகொண்டிருப்பதாலும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளாமல் இருந்திருக்க முடியாது. கிம் சுன்-இல் கொலை நடந்த அதே நாளில் வாஷிங்டன் போஸ்ட் புதிய கருத்துகணிப்பொன்றை நடத்தியதில் பெரும்பாலான அமெரிக்கர்கள் போரை எதிர்ப்பதையும், புஷ்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், தெளிவுபடுத்தியுள்ளன. ஒரு நாளைக்கு முன்னர் தென்கொரிய இளைஞர் உயிருக்கு மன்றாடுவது தேசிய தொலைக்காட்சியில் வந்தது, மறுநாள் அவர் தலையை வெட்டி கொலைசெய்யப்பட்டதானது, புஷ் நிர்வாகத்திற்கு இப்போது அதிகம் தேவைப்படும் ஒரு வாய்ப்பை, ''மனித நாகரீகத்தை'' பாதுகாப்பவர் என்ற பாவனை காட்டுவதிற்கான வாய்ப்பை இந்த அமைப்பு வழங்கிவிட்டது.

கிம் சுன் இல் இன் கொலையாளிகள் புஷ் நிர்வாகத்திற்கு நேரடியாக வழங்கியிருக்கிற அரசியல் சேவை அந்த செயல் நடைபெற்ற நேரம் மற்றும் இடத்தைக் கொண்டு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அது பல்லூஜாவில் இடம் பெற்றிருக்கிறது, அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு மையமான எதிர்ப்பு மையம் அந்த நகரம், அண்மை நாட்களில் அமெரிக்கா, சிவிலியன் இலக்குகள் மீது குண்டுவீசி தாக்கியதால் 25 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களை வாஷிங்டன் Zarqawi- ன் ஆதரவாளர்கள் பயன்படுத்துகிற ''பாதுகாப்பு இல்லங்களை'' குறிவைத்து ''துல்லியமாக தாக்குதல்'' நடத்தப்பட்டது என்று நியாயப்படுத்தியது.

Zarqawi- அமைப்பின் பெயரால் செவ்வாயன்று நடத்தப்பட்ட அட்டூழியம் புஷ் நிர்வாகத்திற்கு இரண்டு வகையான பயனை தந்திருக்கிறது. உலக பொதுமக்களது கண்ணில் ஈராக் எதிர்ப்பை இழிவுபடுத்த அது உதவுகிறது, மற்றும் பல்லூஜாவில் அமெரிக்க இராணுவம் நடத்திவரும் அட்டூழியங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு உதவியிருக்கிறது.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பின் ஒரு உண்மையான இயக்கம் உருவாகின்ற சூழ்நிலையில் Zarqawi- குழுவின் இந்த நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன. இந்த இயக்கத்தை எதிரொலிப்பவையாக அந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கவில்லை. அந்த இயக்கத்தை வலுப்படுத்தலை மற்றும் விரிவுபடுத்தலை வெட்டிமுறிக்கின்ற ஆத்திரமூட்டலாக அந்த நடவடிக்கை அமைந்திருக்கின்றது.

எடுத்துக்காட்டாக, சென்ற பெப்ரவரியில், பெரும்பாலான ஷியா பிரிவைச் சார்ந்த மக்கள் சுன்னி முஸ்லிம் பகுதியில் ஆயுதந்தாங்கி எதிர்க்கிளர்ச்சியில் சேர்ந்து கொள்ளவிருக்கிறார்கள் என்ற தருணத்தில் ஒரு கடிதத்தை Zarqawi- எழுதியதாக, அமெரிக்க அந்தத் தகவலை வெளியிட்டது. அது ஷியைட்டுகளுக்கு எதிராக சுன்னிகளிடம் உள்நாட்டுப் போரை தூண்டிவிடுகின்ற அழைப்பாக இருந்தது. அந்த நேரத்தில் புஷ் நிர்வாகம் அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஈராக்கில் இரத்தக்களரி வகுப்பு வாதப்போர் நடப்பதை அமெரிக்க ஆக்கிரமிப்புத்தான் தடுத்து கொண்டிருப்பதாக வாதிட்டது.

அதற்குப் பல வாரங்களுக்கு பின்னர், மார்ச் 2-ல், கர்பலாவிலும் பாக்தாத்திலும் உள்ள ஷியா மசூதிகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில் பலர் தொழுகையின்போது கொல்லப்பட்டனர். அப்போது உடனடியாக வாஷிங்டன் அந்தக் கொடூரச்செயல்களுக்கு ''Zarqawi வலைப்பின்னல் மீது பழிபோட்டது.

அதற்குப் பின்னர் மே மத்தியில், அபு கிரைப் சிறைச்சாலை சித்தரவதைகளில் புஷ், ரம்ஸ்பீல்ட், செனி மற்றும் அதன் சக தலைவர்களின் தலைகள் உருண்ட நேரத்தில், Zarqawi- க்கு விசுவாசிகள் என்று கூறிக்கொண்ட முக மூடியணிந்த பயங்கரவாதிகள், Nick Berg தலையை வெட்டிக்கொன்றனர், அந்தச்செயல் அமெரிக்க அரசாங்கம் எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அதிகமாக அதற்குத் தேவைப்பட்ட ஒரு சாக்குப்போக்கை தந்தது. அந்தக்கொலை மிகவும் சந்தேகத்திற்குரிய இன்றைக்கும் விவரிக்கப்படாத சூழ்நிலைகளில் நடந்தது, Zarqawi- ன் தொண்டர்கள் என்று கூறிக்கொண்டவர்களுக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்குமிடையில் ஏதோ ஒரு கட்டத்தில் ஒத்துழைப்பு நிலவியதை அந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. Berg வடக்கு ஈராக்கில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார், ஏப்ரல் 6-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின் பாக்தாத்திற்கு பயணம் செய்தார், அங்கு அவர் தலைமறைவாகிவிட்டார், அவர் அமெரிக்க அதிகாரிகளால் விடுதலை செய்யப்பட்டு 72-மணி நேரத்திற்கு பின்னர் கொலையாளிகளிடம் சிக்கியிருக்கிறார்.

Zarqawi- குழுவைப் போல், போல் ஜோன்சனை கொன்றவர்கள் நடவடிக்கைகளும், அமைந்திருக்கின்றன, அவர்கள் அரபு தீபகற்பத்தில் தங்களை அல்கொய்தா என்று கூறிக்கொள்கிறார்கள், அந்த அமைப்பின் கண்ணோட்டங்களையும், நோக்கங்களையும் குறியிட்டுக் காட்டுகின்றார்கள். Lockheed ஊழியர் தலையை வெட்டி அவரது இரத்தம் ஒழுகும் தலையையே ஜிஹாத் வலைத் தளத்தில் காட்டியமை, சவுதி ஆட்சி வேலைவாய்ப்பு அளித்துள்ள அமெரிக்க ஊழியர்களை பயமுறுத்தவும், அதே போன்று எண்ணெய் கம்பெனிகளில் பணியாற்றுபவர்களை அச்சுறுத்தி அவர்களை நாட்டைவிட்டு விரட்டுவதற்கும்தான். சவுதி ஆட்சியில் மேலாதிக்கம் செலுத்திவரும் சக்திகளை சீர்குலைப்பதுதான் இதன் நோக்கம். ஆனால் இந்த முயற்சியில் அடிப்படையில் என்ன முன்நோக்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது?
அது, உண்மையிலேயே சமூகப் புரட்சியிலிருந்து தொலைதூரத்தில் உள்ளது. மாறாக தேசியவாத முன்னோக்கின் ஒரு வகைதான் அது. அந்த முன்னோக்கு ஒரு ஆளும் செல்வந்த தட்டிற்குப் பதிலாக அந்த இடத்தில் மற்றொன்றை கொண்டுவருவதுதான்.

சவுதி அரேபியாவில் அல்கொய்தா தொடர்புடைய குழுக்களின் அடிப்படை முதலாளித்துவ முன்னோக்குடையதாகும் என்று Stratfor எனும் அமெரிக்க இராணுவ மற்றும் புலனாய்வுத் துறை அமைப்புக்களோடு தொடர்புடைய சிந்தனைக்குழாமினால் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வில் அதனை நடத்தியவர்கள் விவரித்திருக்கின்றனர். ''அல் கொய்தாவின் மூலோபாய குறிக்கோள்கள்'' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில், இந்த குழுக்களின் நோக்கம் ''வர்த்தக செல்வந்தத் தட்டிலும் மூத்த இராணுவ அதிகாரிகள் மத்தியிலும், மலைவாழ் இன ஷேக்குகளின் தலைவர்கள் மத்தியிலும், அதேபோல சவுதி அரேபிய ஆளும் குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலும், அல்கொய்தா உலக கண்ணோட்டத்தையும், நீண்டகால குறிக்கோளையும் ஏற்றுக்கொள்பவர்களை இடம்பெறச் செய்வதுதான்'' என்று விளக்கியுள்ளது.

அந்தக்கட்டுரை மேலும் கூறியிருப்பது என்னவென்றால், ''அல்கொய்தா அமெரிக்க படையெடுப்பை கிளறிவிட விரும்பவில்லை. அல்லது முழுப்புரட்சி போன்ற இதர கடுமையான அரசியல் நடவடிக்கையையும் அல்லது ரியாதின் அரசியல் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டை சிதைத்துவிடக்கூடாதென்றும் விரும்புகிறது. ஆளுகின்ற அரச குடும்பத்தில் தனக்கு ஒரு ஒத்துழைப்பு பிரிவு அல்லது ஆதரவு அடித்தளம் அமையுமானால் அப்போது அந்த 'ஆட்சியே' பெயரளவிற்காவது ரியாதின் அரசியல் போக்கு மாறும்போதுகூட நீடித்திருக்கும்''.

இதில் சம்மந்தப்பட்டிருப்பது வெறும் மத மற்றும் அரசியல் நோக்கங்கள் மட்டுமல்ல ஆனால் திட்டவட்டமான பொருளாதார நோக்கங்களும் உள்ளன. Stratfor குறிப்பிட்டிருப்பதைப் போல் ''மேற்கு நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றுவதன் மூலம் ஆயிரக்கணக்கான பதவிகள், எண்ணெய் எரிபொருள் துறையிலும் பாதுகாப்பு தொழிற்துறைகளில் காலியாகும், அந்தப் பதவிகளில் சவுதி குடிமக்களை அல்லது அல்கொய்தாவின் உலக கண்ணோட்டத்தில் அனுதாபம் கொண்ட இதர முஸ்லீம்களை நியமிக்க முடியுமென்று அல் கொய்தா நம்புகிறது.''

அந்தக் கட்டுரை அண்மையில் ஒலிநாடாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு உரையையும் மேற்கோள் காட்டியிருக்கிறது, அந்த உரையை ஆற்றியவர் ஒசமா பின் லேடன் என்று நம்பப்படுகிறது, நடப்பு அரபு அரசாங்கங்களுக்கு பதிலாக புதிய அரசியல் தலைமையை உருவாக்க அந்தத் தலைமை--- ''நேர்மையான... கண்ணியமிக்கவர்களும், சிறப்புமிக்கவர்களும், வர்த்தகர்களும்'' அடங்கியதாக இருக்க வேண்டுமென்று அந்த உரை கேட்டுக்கொள்கிறது.

போல் ஜோன்சன் மற்றும் கிம் சுன்- இல் இருவரது தலைகளையும் வெட்டிக் கொலை செய்தவர்களது செயல்கள் ஏகாதிபத்தியத்தின் வலையில் அவர்கள் வீழ்ந்துவிட்டார்கள் என்பதையும், அவர்கள் தங்களது செயல்மூலம் போருக்கெதிரான சர்வதேச இயக்கம் உருவாவதையும், அரசியல் நனவுபூர்வமாக அந்த இயக்கம் முன்னேறிச் செல்வதையும் ஈராக் மற்றும் சவுதி மக்கள் விடுதலையையும் வெட்டி முறிக்கின்றது. அவர்களது இந்த நடவடிக்கை தற்செயலாக நடந்துவிட்டதல்ல அல்லது இந்தக்குழுக்களுக்கே தனித்தன்மை கொண்ட செயலுமல்ல. நீண்ட வரலாற்று அனுபவம் எடுத்துக்காட்டுவது என்னவென்றால், இதுபோன்ற பயங்கரவாத ஆத்திரமூட்டல்கள், படுகொலை மற்றும் முன்னெச்சரிக்கை கொலைகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு மக்களுக்கு எதிராக மிகப்பெருமளவில் பலாத்காரத்தை தூண்டிவிடுவதற்கான அரசியல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது.

மேலும் இதுபோன்ற அமைப்புக்கள் இயல்பாகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் பெருமளவிலான ஊடுருவல்களுக்கும், செல்வாக்கிற்கும், இலக்காகும் தன்மை கொண்டவை. இதுபோன்ற குழுக்களின் தலைவர்களில், எங்கே பிற்போக்கு அரசியல் விடைபெறுகிறது, எங்கே நேரடி ஆத்திரமூட்டல் தொடங்குகிறது என்பதை முடிவு செய்ய இயலாது.

இறுதியாகப்பார்க்கும் போது, அல்கொய்தா மற்றும் அதுபோன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்லவில்லை, மாறாக அரபு மற்றும் முஸ்லீம் உலகில் ஆளும் முதலாளித்துவ செல்வந்த தட்டுகளுக்கிடையே அதிருப்தி கொண்ட கன்னைகளின் (factions) முயற்சிகளையும், எதிர்பார்ப்புக்களையுமே முன்னிறுத்தி செயல்பட்டு வருகின்றன. எனவேதான் அதுபோன்ற அமைப்புக்கள் ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான புரட்சிகர வெகுஜன இயக்கம் உருவாவதற்கு இயல்பாகவே விரோதமாக செயல்பட்டு வருகின்றன.

இதை நாம் சொல்லிவிட்டு, இது போன்ற கொடுமைகளுக்கு புஷ் நிர்வாகத்தின் பதில் நடவடிக்கை என்ன என்பதை அலச வேண்டியது அவசியமாகும். இரண்டு கொலைகளை அமெரிக்க ஜனாதிபதி தன் கையில் எடுத்துக்கொண்டு இதைச் செய்தவர்கள், ''காட்டுமிராண்டிகள்'' என்றும் அவர்களது செயல்களான ஈராக் மீது படையெடுத்தது, அதைபிடித்துக் கொண்டது உட்பட ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்பதை நியாயப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இங்கே அவரது ஒரு முதுமொழியை சொல்வது ஏற்புடையது: ''ஒருவரை புரிந்து கொள்வதற்கு ஒருவருக்கு நாளாகும்.'' புஷ் தனது உயர்ந்த புனித தன்மை வாய்ந்த அறிக்கைகளை முழக்கமிட்டு, கொண்டிருக்கும் நேரத்திலேயே, ''அமெரிக்க Gulag'' வார்த்தைகளில் சொல்வதென்றால் ஈராக் ஆப்கானிஸ்தான், குவாண்டநாமோ மற்றும் பிற இடங்களிலிருந்து அமெரிக்க சித்ரவதைகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தது, அல் கோரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் உலகம் முழுவதிலும் பரவியுள்ள இரகசிய சிறைமுகாம்களிலிருந்து செய்திகள் "அமெரிக்க குலாக்" சிறிது சிறிதாக வந்து கொண்டிருந்தன. ''நாகரீக உலகிற்கு'' தன்னைதானே காவலன் என்று நியமித்துக்கொண்ட புஷ், அமெரிக்கா ஈராக்கை அடிமைப்படுத்தியிருப்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருப்பதைக் கூட கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்.

இப்படி மனித மதிப்புகளுக்காக உறுதிசெய்து தருகின்றவர் என்று கூறப்படுகிற ஒரு தலைவர் இருக்கும்போது எப்படி ஒசாமா பின்லேடன் போன்ற தலைவர்களின் போதனைகளுக்கு, இவ்வளவு உரிமைகள் பறிக்கப்பட்ட இளைஞர்களின் ஆதரவும் மத்திய கிழக்கு மக்களின் மிகப்பெரிய ஆத்திரமும், ஒடுக்கப்பட்ட மக்களிடையே எப்படி எழுந்தது? திருவாளர். புஷ் பதில் சொல்லவில்லை.

புஷ்ஷும் அமெரிக்க ஊடகங்களும் மவுனம் சாதிக்கின்ற மற்றொரு ஏற்புடைய பிரச்சனையும் உண்டு. Paul Johnson, Kim sun -il, Nick Berg, Daniel Pearl மற்றும் பிறரைக் கொன்றவர்கள் பயன்படுத்திய காட்டுமிராண்டி வழிமுறைகள் அல் கொய்தாவின் கண்டுபிடிப்புக்கள் அல்ல. வாஷிங்டனின் தசாப்தங்களாக மத்திய கிழக்கு நண்பனான சவுதி மன்னர் ஆட்சி, குற்றவாளிகளை, அரசியல் எதிரிகளை தலையை வெட்டுகின்ற நடைமுறைகள் பல தலைமுறைகளாகக் கடைபிடித்து வருகிறது. சவுதி மன்னர் குடும்பம் தலைகளையும், கரங்களையும், விரல்களையும் வெட்டுவதன் மூலம் அந்த நேரத்தில் அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளுக்கு மித மிஞ்சிய இலாபம் தருகின்ற ஒப்பந்தங்கள் கிடைத்த நேரத்தில் அமெரிக்க அரசியல்வாதிகளும், எண்ணெய் நிறுவன அதிபர்களும், கூக்குரல் எழுப்பாமல் எங்கே சென்றார்கள்?

டெக்ஸாஸ் கவர்னராக அவர் பணியாற்றிய காலத்தில் புஷ் நூற்றுக்கு மேற்பட்டோரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட பங்களிப்பாகும்.

அமெரிக்க சமுதாயத்திலேயே மிகுந்த பிற்போக்கான சூறையாடும் பிரிவுகள் தார்மீக நெறியை தாங்கிப்பிடிப்பவர்கள் போல் வேடமிட்டு, பதவியில் அமர்த்தப்பட்ட இந்த கொடுஞ் செயலில் மகிழ்வோரின் (sadist) காட்சியை விடவும், மிகவும் பிற்போக்கான, தவறான நடவடிக்கை எதையும் கற்பனைகூட செய்துபார்ப்பது சிரமம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved