World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: Sharon government creates ever widening social inequality

இஸ்ரேல்: ஷரோன் அரசாங்கம் சமூக சமத்துவமின்மையை பரந்த அளவில் விளைவிக்கின்றது

By Brian Smith
29 March 2004

Back to screen version

பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதிகளை அடிமைப்படுத்தி, அங்கு சட்டவிரோத குடியிருப்புக்களை உருவாக்கி பாலஸ்தீன மக்களுக்கு சொல்லொணா துன்பங்களை விளைவித்து வருகின்றது. இஸ்ரேலுக்கு உள்ளேயே பொருளாதார கடினங்களையும் சமூக முரண்பாடுகளையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிற இஸ்ரேலிய பொருளாதாரம், தற்போது பெருத்த பின்னடைந்த நிலையிலும், மிகப்பெருமளவிற்கு அமெரிக்காவின் உதவியை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி காலத்தில்கூட GDP தலாவருமானம் (per capita) சராசரி 5,612 டாலரிலிருந்து 16,926 டாலராக உயந்த நேரத்தில் இஸ்ரேல் வளர்ந்த நாடுகள் வரிசையில் சேர்ந்த நேரத்தில் கூட சமூகத்தில் மிகச்சிறிய குழுவினரே அந்த பயன்களை அடைந்தனர். அதே நேரத்தில் மிகப்பரவலான பெரும்பான்மை மக்கள் வாழ்க்கைத் தரம் குறைந்துகொண்டு வந்தது அல்லது தேக்க நிலையை அடைந்தது. மேலும் 2001-க்கும் 2002-க்கும் இடைப்பட்ட காலத்தில் GDP குறைந்த போது செல்வச்செழிப்புள்ள சமுதாய தரப்பினரின் தேசிய சொத்துப்பங்கு உயர்ந்தது.

கடந்த சில ஆண்டுகளில் இஸ்ரேல் பொருளாதாரம் பின்னடைவுக்கு சென்று கொண்டிருப்பதற்கான காரணம்; உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வருகிற சரிவு அத்துடன் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடைபெற்று வருகின்ற இன்டிபாடா எழுச்சி ஷரோன் பாலஸ்தீன மக்களுடன் சமரசப்பேச்சு வார்த்தை அடிப்படையில் எந்த தீர்வையும் உருவாக்குவதை ஒழித்துக்கட்டும் வகையில் மேற்கொண்டுள்ள ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளும் ஆகும்

உலகிலேயே 16-வது மிகப்பெரும் செல்வந்தர் நாடாக இஸ்ரேல் மதிப்பிடப்படுகிறது. பக்கத்து நாடுகளான எகிப்து, லெபனான், சிரியா, ஜோர்டான், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த GNP-யை விட இஸ்ரேலின் GNP அதிகமாகும். அப்படியிருந்தும் இஸ்ரேல் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்நாட்டில் வறுமைக்கோடு என்பது சராசரி வருவாயில் பாதிக்கு மேலாக மக்களில் பாதிப்பேர் ஊதியம் பெறுவதாகவும், மீதிபேர் இதற்குக் கீழாக ஊதியம் பெறுவதாகவும் விளக்கப்பட்டிருக்கிறது. பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் பலர் இப்படி வறுமையிலுள்ள

2003-ஆம் ஆண்டிற்கான அட்வா மையம் சமத்துவம் மற்றும் சமூக நீதிபற்றிய ஆண்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இஸ்ரேலிய சமுதாய நிலைப்பாடு கடும் கண்டனத்திற்குள்ளாகிறது. 2002-ல் குடும்பங்களின் வறுமை 33.9 சதவீதமும், குழந்தைகளிடம் வறுமை 39.7 சதவீதமும் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக நிலவிய நிலவரத்தைவிட குடும்பங்களின் வறுமை 15-சதவீதமும், குழந்தைகளின் வறுமை 83-சதவீதமும் அதிகரித்துள்ளது.

1990-க்கும் 2002-க்கும் இடைப்பட்ட காலத்தில் மேல் தட்டு மக்களது வருமானம் ஆண்டிற்கு 5.6-சதவீதம் வளர்ந்தது. இது NIS 502,000 (106,000 டாலர்) அல்லது மொத்த வருவாயில் 30-சதவீதமாகும். அடுத்த தட்டு மக்களது வருவாயில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. மீதமுள்ள 80 சதவீத மக்களது வருமானம் குறைந்துகொண்டே வந்தது. அடிமட்டத்திலுள்ள 10-சதவீதம் மக்கள் ஆண்டிற்கு NIS 37,300(8,000டாலர்) ஆண்டு வருமானமாகும். இது மொத்த வருமானத்தில் 2.2 சதவீதமாகும்.

2002-TM Tel Aviv பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 100 முன்னணி கம்பெனிகளின் மூத்த முகாமையாளர்களின் சராசரி ஊதியம் NIS 2.9- மில்லியன் ( 6,44,000- டாலர்) 1994-க்கும் 2002-க்கும் இடைப்பட் காலத்தில் சராசரி ஊதியத்தைவிட மூத்த முகாமையாளர்களின் ஊதியம் 13-முதல் 17 மடங்காக உயர்ந்தது. குறைந்த பட்ச ஊதிய அளவுப்படி 30-லிருந்து 36-மடங்கு உயர்ந்தது.

நடப்பு சராசரி ஊதியம் ஆண்டிற்கு NIS 83,616 p.a. (18,500-டாலர்) இது உண்மை நிலைப்பாடல்ல. மிகப்பெரிய அளவில் ஊதியம் பெறுவோரை இணைத்து கணக்கிடப்பட்டதாகும். பணியாற்றி வருகின்ற 72 சதவீத இஸ்ரேலிய ஊழியர்கள் 2001-ல் சராசரி அல்லது அற்கும் குறைந்த ஊதியத்தைத்தான் பெற்றனர். ஏறத்தாழ 30 சதவீம் பேர் குறைந்த பட்ச ஊதியத்திற்கும் குறைவான வருவாயையே பெற்றனர். குறைந்த பட்ச ஊதியம் என்பது ஏறத்தாழ சராசரி ஊதியத்தில் 45 சதவீதமாகும்.

இஸ்ரேல் சமுதாயம் இன, வர்க்க மற்றும் மத ஏற்றத்தாழ்வுகளால் மேலும் சிதைவுண்டு கிடக்கிறது. பொதுவாக அரபு குடிமக்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. 1990 க்கும் 2001-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களது நிலைப்பாடு தாழ்ந்து விட்டது. Mizrahi யூதர்கள்-ஆப்பிரிக்க அல்லது ஆசிய வம்சா வழியில் வந்தவர்கள். இவர்கள் வாழ்க்கைத்தரம் ஓரளவிற்கு உயர்ந்துள்ளது. ஐரோப்பிய அல்லது வடக்கு அமெரிக்க வம்சங்களிலிருந்து வந்த யூதர்கள் மிக உயர்ந்த ஊதியம் பெறுகின்றனர். அவர்களது ஊதியம் 10-சதவீதம் உயர்ந்துள்ளது. 2001-ல் இத்தரப்பைச்சார்ந்த யூதர்கள் ஆப்பிரிக்க, ஆசிய யூதர்களின் சராசரி வருவாயைவிட ஒன்றரை மடங்கு அதிகமாகவும், அரபு மக்களைவிட இரண்டு மடங்கு அதிகாமாகவும் ஊதியங்கள் பெற்றனர்.

புஷ் நிர்வாகத்தால் ஆட்டுவிக்கப்படும் இஸ்ரேல் நவீன-பழமைவாத கண்ணோட்ட ஷரோன் அரசாங்கத்தின் கொள்கை; அரசாங்க கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, மக்களுக்கு அரசாங்கம் தந்துவரும் சமூக நலத்திட்டங்களை வெட்டுவதுடன் செல்வத்தை பகிர்ந்தளிப்பதை ஏழைகளிடமிருந்து பணக்காரருக்கு என்பதாக திரும்பியுள்ளது.

2001-க்கும் 2003-க்கும் இடைப்பட்ட இரண்டாண்டுகளில் ஷரோன் நிர்வாகம் சமுதாய செல்வினங்களில் கடுமையா வெட்டுக்களை தொடர்சியாக செயல்படுத்தி வருகிறது:

* 2001-செப்டம்பர் பின்னர் டிசம்பரில் பட்ஜெட் வெட்டுக்கள்

* 2002-ஜூனில் "பொருளாதார பாதுகாப்பு கேடயத்திட்டம்"

* 2003 பட்ஜெட் வெட்டுக்கள்

* 2002-ஜூனில் "இஸ்ரேல் பொருளாதார மீட்புத் திட்டம் - கட்டம் I

* 2003-செப்டம்பரில் "இஸ்ரேல் பொருளாதார மீட்புத் திட்டம் - கட்டம் II

வெட்டுக்களைத் தொடர்ந்து இஸ்ரேலின் ஏழைமக்களுக்கு எதிரான பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது அதில் ஏழைகள் உற்பத்தித்திறனற்றவர்களாக அரசுக்கு சுமையாயிருப்பவர்கள் என்றும் "பணியாற்றுபவர்கள் மற்றும் ராணுவத்தில் சேவை செய்வோருக்கு பாரமாக" இருப்பவர்கள் எனவும் விளக்கினார்கள்.

இந்த தாக்குதல்கள் அடிக்கடி அரபு குடிமக்களையும் அதி-பழமைவாத யூதர்களையும் மற்றும் தனித்திருக்கும் தாய்மார்களையும் குறிவைத்து நடத்தப்பட்டன. இந்த தரப்பினர்தான். சமுதாயத்தின் பரம ஏழைகள். குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் தந்துவரும் உதவி மானியம் 2003-ல் 30-சதவீதம் குறைக்கப்பட்டது. குழந்தைகளுக்கான உதவித்தொகை 12 சதவீதம் குறைக்கப்பட்டது.

அரசாங்கம் கம்பெனிகள் மற்றும் வருமானவரி பல்வேறு வெட்டுக்களை கொண்டுவந்திருக்கிறது. இதனால் மிக உயர்ந்த வருமானம் பெறுவோருக்குத்தான் லாபமாகும். இஸ்ரேல் மத்திய வங்கி பொருளாதார நிபுணர்கள் செய்துள்ள மதிப்பீடுகளின்படி 2004-ல் 4.55-பில்லியன் NIS 2005-ல் 6.7-பில்லியன் NIS 2006-ல் எட்டு பில்லியன், NIS-2007-ல் ஏழு பில்லியன், NIS 2008-ல்(ஐந்தாண்டுகளில் 7.39- பில்லியன் டாலர்கள்) வரி இழப்பு ஏற்படுமென்று மதிப்பிடப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் ஏழைகளுக்கும் பணக்கரர்களுக்குமிடையே நிலவுகின்ற இடைவெளியை பெருக்குவதுடன் எதிர்கால அரசாங்கம் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த வெட்டுக்கள் ''அரசாங்கத்தின் பணத்தேவையை நிறைவேற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள்'' என்று வர்ணிக்கப்படுகின்றன. அவற்றால் ஏற்படுகின்ற சமுதாய தாக்கங்களைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் இதைச் செய்திருக்கிறார்கள். வேலைவாய்ப்பு ஊதியங்கள் சமூக பாதுகாப்பு, கல்வி, பொது சுகாதாரம் நலன்புரி, ஓய்வூதியம் ஆகியவிற்றில் செய்யப்பட்டுள்ள குறைப்பு மிகப்பெரிய சமுதாய நெருக்கடியை உருவாக்கி மேலும் வறுமையை வளர்க்கவே வகை செய்யும். மந்திரிசபை ஒய்வு பெறும் வயதை ஆண்களுக்குக 65-லிருந்து 67-ஆகவும், பெண்களுக்கு 60-லிருந்து 67-ஆகவும் உயர்த்தியுள்ளது.

வெட்டப்படாத சமூக பாதுகாப்பு உதவித்தொகை 2006- வரை முடக்கப்பட்டுவிட்டது. அப்போது அது சராசரி ஊதிய அளவில் கணக்கிடப்படாமல் நுகர்வோர் விலைவாசிப்பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும். கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக சராசரி ஊதியம் நுகர்வோர் விலைகுறியீட்டு எண்ணிற்கு மேலாக வழங்கப்பட்டு வருகிற நிலையில் 2006-ல் சமுதாய துருவமுனைப்புகள் மேலும் பெருகவே செய்யும்.

அண்மையில் பிரிட்டனின் கார்டீயன் பத்திரிகை ''டிராலியில் திருட்டு: என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை இஸ்ரேலில் நலன்புரி அரசு சேவைகள் சிதைக்கப்படுவதை சித்தரிக்கிறது. பசியோடு இருக்கும் இஸ்ரேலியர் கடைசி வழியாக இதைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். Beer Sheva பகுதியை சேர்ந்த தனித்து வாழும் பெண்கள் ஒரு குழுவாக திரண்டு 40-சதவீதம் ஊதிய படி குறைக்கப்பட்டுவிட்டதை சூப்பர் மார்கெட் மேலாளரிடம் முறையிடுகின்றனர்.'' நாங்கள் இப்போது துன்பத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறோம். எங்களிடம் பணமில்லை. எங்களை நம்பி குடும்பங்கள் இருக்கின்றன. நாங்கள் கொண்டு வந்திருக்கும் டிராலிகளில் உணவுப் பொட்டளங்களை ஏற்றிக்கொண்டு செல்கிறோம். நாங்கள் பணம் தர முடியாது. இப்படி நாங்கள் செய்யும் போது நாங்கள் கைது செய்யப்பட்டாலும் கவலைப்படமாட்டோம். எங்ளை நீங்கள் தடுக்காவிட்டால் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்'' என்று கூறிக்கொண்டே தள்ளுவண்டிகளில் உணவுப் பொருட்களை நிரப்பிக்கொண்டு சென்று விடுகிறார்கள்.

பல்பொருள் அங்காடிகளின் மேலாளர்கள் அவர்களது துயர்நிலையை கண்டு பெரும்பாலும் அனுதாபத்துடன் நடந்து கொள்கின்றனர். ஒரு மேலாளர் Yosh Biton அவர்களது கோரிக்கையை அனுதாபத்துடன் கேட்டார். இன்றையதினம் பல இஸ்ரேலியர் இதே போன்று கடுமையான வறுமையில் உள்ளதை புரிந்து கொள்வதாக குறிப்பிட்டார். ''எங்களது கதவிற்கருகில் சிறப்பு தள்ளு வண்டி ஒன்று நிற்கிறது. அதில் எங்களது வாடிக்கையாளர்கள் ஏழைகளுக்காக ஒரு டின் உணவை வைக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம். அந்த தள்ளுவண்டி நிறைந்ததும் அவற்றை ஏழைகளுக்கு வழங்குகிறோம். தற்போது பசியில் வாடுகின்ற மக்கள் மிகப்பெருமளவில் நடமாடுவதால் அவர்கள் பல்பொருள் அங்காடிக்கு வந்து டின்களை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். தள்ளுவண்டி நிறைவதற்கு விடுவதில்லை. பலர் கடையிலிருந்து அப்படியே டின்னை எடுத்து தாங்கள் கொண்டு வந்திருக்கும் ஓப்பனர் மூலம் திறந்து சாப்பிட்டுவிட்டு செல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நாங்கள் தடுப்பதில்லை'' என்று தெரிவித்தார்.

கார்டியன் தொண்டு நிறுவனமான Hozon Yeshaya நடவடிக்கைகளை மேற்கோள் காட்டியிருக்கிறது. அந்த நிறுவனம் வாரத்திற்கு 5,000- பேருக்கு உணவை வழங்குகிறது. அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். இப்படி உணவிற்காக வருபவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 65 சதவீதம் அதிகரித்திருப்பதாக அதன் நிறுவனர் ஆப்ரஹாம் இஸ்ரேல் விளக்கினார்.

''வயதானோர், நோய்நொடி உள்ளவர்கள் போன்ற பிறர் உதவியில்லாதவருக்கு முன்னர் உதவி வந்தோம். கடந்த ஆறுமாதங்களாக வேலையில் இருப்பவர்களும் அவர்களது சமூக உதவியை அரசாங்கம் விட்டுவிட்டதால் எங்களை நாடி வருகிறார்கள்''

அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி ஏறத்தாழ 80-சதவீத இஸ்ரேலியர் பலவீன பிரிவினர் மீது அரசாங்கம் கொடுமை செய்வதாக கருதுகின்றனர். 75-சதவீதம்பேர் இஸ்ரேல் பொருளாதார சீர்குலைவில் உள்ளதாக நம்புகின்றனர்.

பொருளாதார கீழ்நோக்கிய திருப்பத்தினை தொடர்ந்து வரி வருமானம் குறைந்ததை ஈடுகட்டுவதற்காக பட்ஜெட்டில் வெட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. "கஜானா காலியாகி விட்டது" என்ற பதாகையின் இதைச் செய்தார்கள். ஆனால் இதை பொய்யாக்குகின்ற வகையில் பணக்காரர்களுக்கான வரியைக் குறைத்திருக்கிறார்கள்.

மேலும் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். ''பாலஸ்தீனர்களுடன் மோதல் காரணமாகவே இஸ்ரேல் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டு வளர்ச்சி குறைந்து கொண்டு வருகிறது. மோதல் நீடித்துகொண்டுடிருக்குமானால் பொருளாதார குழப்பம் தொடரும். பாதுகாப்பு செலவினங்கள் பெருமளவில் அதிகரிக்கும்'' என்று அட்வா கூறியுள்ளது.

பாதுகாப்பு பட்ஜெட்டில் ரகசிய சேவைகள் உட்பட அண்மை ஆண்டுகளில் கணிசமான அளவிற்கு வளர்ந்திருக்கிறது. 2001-க்கும் 2002 க்கும் இடைப்பட்ட காலத்தில் NIS 44.8 பில்லியனிலிருந்து NIS 47.9- பில்லியனாக உயர்ந்துள்ளது. (9.95-பில்லியன்- 10.64-பில்லியன் டாலர்கள்)

2000-த்தில் லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேறியது. சென்ற ஆண்டு அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இனி இஸ்ரேலுக்கு கடுமையான அச்சுறுத்தல் இல்லையென்பதால் பட்ஜெட் ராணுவச் செலவினங்கள் கடுமையாக குறைக்கப்படுமென்று கருதப்பட்டது. ஆனால் ஷரோன் அரசாங்கம் மேற்குக் கரை மற்றும் காசா ஆக்கிரமிப்புகளுக்காக தனது பெரிய இஸ்ரேல் கொள்கையை நிறைவேற்றுவதற்காக கூடுதலாக மிகப்பெருமளவில் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரித்தது.

மேற்குக் கரையிலும் காசாவிலும் உள்ள சட்டவிரோத குடியேற்றங்களுக்கு அவற்றின் பாதுகாப்பிற்காக வேறுபட்ட விகிதத்தில் வளங்கள் ஒதுக்கீடு செய்வது தேவைப்படுகிறது. பல குடியேற்றக்காரர்கள் அரசாங்க ஊக்கத்தொகைகளின் காரணமாகவே தாங்கள் மேற்குக்கரைக்கும் காசாவிற்கும் நகர்ந்ததாக குறிப்பிட்டனர். அவர்கள் இழப்பீடு கொடுத்தால் தாங்கள் மகிழ்வுடன் இவ்விடத்தை விட்டு அகலுவதாகவும் தெரிவித்தனர்.

Adva ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெருமளவில் செலவினங்கள் பெருகியிருப்பதை சுட்டிக்காட்டுயுள்ளது. 2001-புள்ளி விவரங்ளைப் பார்த்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இஸ்ரேலுக்குள் வழங்கப்படும் தலாவருமானம் மத்திய அரசு உதவியைவிட இரண்டு மடங்கு கூடுதலாக வழங்கியுள்ளது. மேற்குக்கரை காசா பகுதிகளில் வீடுகளை கட்டுவதற்கான முதலீடுகள் இஸ்ரேலைவிட 5.3- மடங்கு அதிகமாக வழங்கப்பட்டன. 1991-க்கும் 2001-க்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்குக்கரை காசா பகுதிகளில் அரசாங்கம் வீடுகளை கட்டுவதற்காக செலவிட்ட கூடுதல் தொகை மொத்தம் NIS 5.8-பில்லியன் (1.3-பில்லியன் டாலர்)

இஸ்ரேலையும், பாலஸ்தீன ஆணையத்தையும் பிரிக்கின்ற அளவில் மேற்குக்கரைப் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்களை ஆழமாக உள்வாங்கி இழுத்துக்கொள்ளுகின்ற வகையில் அமைக்கப்பட்டு வரும் மிகுந்த கருத்து வேறுபாடுகளுக்கு இடமளித்துள்ள தடுப்புச்சுவருக்கு பில்லியன் கணக்கில் சமூகப்பணி நிதிகளையெல்லாம் திருப்பி விட்டிருக்கிறார்கள். சட்டவிரோத குடியிருப்புக்களுக்கான தொழிற்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலைக்காகவும் ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறார்கள்.

தொழிலாள வர்க்கத்தின் மீது பாரம்பரியமாக தொழிற்சங்கமயப்பட்ட தொழிற்திறமையுடைய (skilled) வசதியான தொழிலாளர்கள் உட்பட அவர்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்கள் தொடர்ந்து பல தொழிற் தகராறுகளை உருவாக்கியுள்ளது. Histadrut தொழிற்சங்க கூட்டமைப்பு சார்ந்த மிகப்பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள், பேராசிரியர்கள், மற்றும் துறைமுக ஊழியர்கள் தொடர்பான தொழிற் தகராறுகள் எழுந்துள்ளன.

Lod, Yehud மற்றும் Arabeh ஆகிய நகரசபைகளின் ஊழியர்களுக்கு ஏறத்தாழ ஒராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. உயர்நீதிமன்றம் தலையிட்டு ஏன் ஊதியம் வழங்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் தருமாறு அரசிற்கு கட்டளையிட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு சமூக விவகாரங்கள் அமைச்சக பட்ஜெட்டிலிருந்து நேரடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்று உள்ளாட்சி அமைப்புக்களில் காலியாகவுள்ள கஜானாக்கள் வழியாக சம்பளம் தரும் முறையை கைவிடவும் கோரியுள்ளனர். தங்களது ஊதியம் இதர வகைகளுக்கு திருப்பிவிடப்படுவதாக கூறுகின்றனர்.

அதிகாரப்பூர்வமாக வேலையில்லாத் திண்டாட்டம் 10.9 சதவீதம் என்று அறவிக்கப்பட்டிருந்தாலும் 16-சதவீதமாக இருக்குமென்று நம்பப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் யூதர்கள் இடையே அதிகாரப்பூர்வமான வேலையில்லாத் திண்டாட்டம் 6.7- சதவீதத்திலிருந்து 9.8-சதவீதமாக ஏறத்தாழ 50-சதவீதம் பெருகியுள்ளது. அரபு மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் இருமடங்கிற்கும் மேலாக 6.2- சதவீதத்திலிருந்து 13.4-சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவினங்களை குறைக்கவும், கம்பெனிகளின் லாபத்தை உயர்த்தவும் அரசாங்கம் தொழிற்சங்கங்களை கலைக்கவும், வேலை நிறுத்த உரிமையை கட்டுப்படுத்தவும் முயன்று வருகிறது. அரசாங்க தொழில்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களில் 20 சதவீதம் பேர் ரகசிய வாக்குப்பதிவின் மூலம் ஒப்புதல் தந்தால் தவிர அரசாங்க தொழில்களில் நடக்கும் வேலை நிறுத்தங்கள், சட்டவிரோதமென்று அறிவிக்கப்படவிருக்கிறது. உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் ஐம்பது ஊழியர்களுக்கு நிர்வாகத்தின் மீது குறையிருக்குமானால் அந்த தொழிற்சாலையை சார்ந்த ஒட்டுமொத்த அரசாங்க தொழிலாளர்களில் 10,000-பேர் ஒப்புதல் அளித்தால்தான் வேலை நிறுத்தம் செய்ய முடியும்.

ஷரோன் நிர்வாகம் குழப்பமான கூட்டணி அரசாகும். அதில் தீவிர வலதுசாரி கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் மிக ஏழ்மையிலுள்ள அதிதீவிர மரபுரீதியான யூதர்களும் அடங்கியுள்ளனர். இவர்கள் தற்போது அரசாங்கத்தின் பட்ஜெட் வெட்டுக்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்மையில் நம்பிக்கையில்லாத தீர்மானத்திலிருந்து ஷரோன் தப்பிவிட்டார். அதற்குக்காரணம் 37-நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இவர்களில் வலதுசாரி தேசிய தொழிற்சங்கத்தைச் சார்ந்த ஏழு யூதர்கள், புதிய குடியேற்றத்தை ஆதரிக்கும் தேசிய மதவாதக்கட்சி மற்றும் ஷரோனின் சொந்தக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அடங்குவர்.

சிவில் நிர்வாக மூலாம் பூசப்பட்டிருந்தாலும், இஸ்ரேலின் அரசியல் ஸ்தாபனங்கள் ஊழல் மலிந்த ஜனநாயக விரோத தட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ராணுவக் குழுவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கடந்த மூன்று பிரதமர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான புலன்விசாரணைகள் நடைபெற்றன. விரைவில் ஏரியல் ஷரோன் ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்திக்கவிருக்கிறார்.

இஸ்ரேல் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொத்தளமாக செயற்பட்டு வருகிறது. அமெரிக்க ராணுவ தொழில்நுட்பத்திற்கு சோதனைகளமாக பயன்படுத்தப்படுகிறது. நகர்பகுதி போர் தொழில் நுட்பங்களில் அங்க பயிற்சி தரப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதார, ராணுவ மற்றும் அரசியல் ஆதரவை நம்பியிருக்கிறது. ஆண்டிற்கு 4-பில்லியன் டாலர்களை அமெரிக்கா உதவியாக வழங்குகிறது. அதில் 2-பில்லியன் டாலர்கள் நேரடி ராணுவ உதவியாகும். பாதுகாப்பிற்கு இஸ்ரேல் செலவிடுவதற்கும் சுதந்திர உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு வெளியில் F-16 ரக போர் விமானங்கள் சுமார் 200 உள்ளநாடு இஸ்ரேல்தான். மேலும் 100 விமானங்களை தயாரிக்க "ஆடர்" கொடுக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்கா, கரீபியா, சப்-சஹாரா ஆப்பிரிக்கா நாடுகள் அனைத்திற்கும் தருகின்ற மொத்த அமெரிக்க ராணுவ உதவியைவிட அதிகமாக நேரடியாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. வெளிநாடுகளுக்கு அமெரிக்கா தருகின்ற உதவி மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இஸ்ரேல் பெறுகிறது. என்றாலும் உலக மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் இது 0.001- சதவீதம் தான் ஆகிறது.

1949-முதல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஏறத்தாழ 85-பில்லியன் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது. கடன் வட்டிக்கு அமெரிக்கா வரி செலுத்தும் மக்கள் இஸ்ரேலுக்காக மேலும் 50 பில்லியன் டாலர்களை தந்திருக்கின்றனர். 1992 முதல் அமெரிக்கா கடன் உறுதிமொழிகள் என்ற அடிப்படையில் ஆண்டிற்கு 2 பில்லியன் டாலர்களை வழங்கிவருகிறது. காலக்கெடுவிற்குள் கடனை திரும்ப செலுத்தாதுவிட்டதாால் ஏறத்தாழ எல்லா கடன்களையுமே மன்னித்துவிட்டார்கள். 1997-ம் மட்டுமே இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள மானியங்கள் கடன் உறுதிமொழிகள் ஆகியவை 5.5- பில்லியன் டாலர்களாகும். அல்லது ஒரு நாளைக்கு 15-மில்லியன் டாலர்களாகிறது.

இஸ்ரேல் இவ்வளவு உதவிகளைப் பெற்றபின்னரும் கூட இன்றும் திவாலாகும் நிலையினையே நெருங்கிக்கொண்டிருக்கிறது. அண்மையில் அமெரிக்கா 10 பில்லியன் டாலர்களுக்கு கடன் உத்தரவாதங்கள் தந்திராவிட்டால், இஸ்ரேல் திவாலாகியிருக்கும். சுருக்கமாக சொல்வதென்றால் இஸ்ரேல் தனது கலாச்சார அனுகூலங்கள் கல்விகற்ற தொழிலாளர்கள் மிகப்பெருமளவிற்கு உதவி ஆகியவவை இருந்த போதிலும் சமுதாய சமத்துவமின்மையால் பொருளாதார மற்றும் அரசியல் சீரழிவை சந்தித்துக் கொண்டிருப்பதுடன், ஊழல் மலிந்ததும் கைக்கூலித்தனமான குழுவினால் நடத்தப்படுகின்றது. இது வாஷிங்டனிலுள்ள எஐமான்களின் சார்பில் இயக்கப்படும் சர்வதேச குண்டர்படையினரால் கட்டுப்படுத்தப்படுகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved