World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

British forces involved in Abu Ghraib torture prison

அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதையில் சம்மந்தப்பட்ட பிரிட்டிஷ் படைகள்

By Peter Reydt
29 September 2004

Back to screen version

பாக்தாத்திலுள்ள அபு கிரைப் சிறைச்சாலையில் ஈராக் கைதிகள் சித்தரவதை மற்றும் முறைகேடுகளுக்கு உட்படுத்தப்பட்ட நேரத்தில் பிரிட்டிஷ் இராணுவமும் அந்த சிறைச்சாலையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்ததாக இந்த மாதத் துவக்கத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

வால்ஷ் தேசியவாதியும் Plaid Cymru MP ஆன ஆடம் பிரைஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஆடம் இங்கிராம் பதிலளித்த போது, ஈராக் கைதிகளை புலன் விசாரணை செய்வதற்கு பொறுப்பேற்ற அமெரிக்க பிரிவிற்குள் இரண்டு புலனாய்வு அதிகாரிகளான கேர்னல் கிறிஸ் ரெரிங்டோன் மற்றும் கேர்னல் கேம்பல் ஜேம்ஸ் ஆகியோர் ''இணைக்கப்பட்டிருந்ததாக'' ஒப்புக்கொண்டார். 2003 நவம்பரில் அபு கிரைப் சிறைச்சாலை புலனாய்வு அமைப்பில் கேர்னல் ரெரிங்டோன் சேர்ந்து கொணடதாக கூறப்படுகிறது. அப்போதுதான் அந்தச் சிறைசாலையில் மிகக்கடுமையான முறைகேடுகள் நடைபெற்றன.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது பிரைஸ் ''பிரிட்டனின் பொறுப்பு தொடர்பாகவும், அபு கிரைப் சிறைச்சாலையில் சம்மந்தப்பட்டிருந்தது குறித்தும் அமைச்சர்கள் நமக்கு தவறான எண்ணம் ஏற்படுத்துகிற வகையில் தகவல் தந்திருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார். அமைச்சர்கள் ''மிகவும் கலவரம் தருகின்ற ஒரு விவகாரத்தில் முடிந்தவரை சிறந்த மூலாம் பூசிய அழகாக சித்தரிப்பது'' ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.

சென்ற மாதம் Tabuga விசாணையின்போது முதலில் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த புதிய தகவலில் ஈடுபட்டிருந்தனர். அபு கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள் தொடர்பான புகைப்படங்கள் செய்திப் பத்திரிகையில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புஷ் நிர்வாகம் அமெரிக்கப் படைகள் கடுமையான முறைகேடுகளிலும் திட்டமிட்ட சித்திரவதைகளிலும் ஈடுபட்டார்கள் என்பதை மறைக்க முடியாத சூழ்நிலையில் இந்த விசாரணைக்கு அமெரிக்கா அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இரசாயன விளக்குகளை உடைத்து அதிலிருந்து கந்தக திரவத்தை சிறைக்கைதிகள் மீது ஊற்றியது. ஒரு கைதியின் உடலில் ''இரசாயன விளக்கையும், ஒரு துடப்பத்தையும் செருகியது உட்பட செக்ஸ் அடிப்படையில் இழிவுபடுத்தியது மற்றும் கைதிகளைப் பயமுறுத்த இராணுவ நாய்களை ஏவிவிட்டது உட்பட பல்வேறு சித்திரவதைகள் குறித்து விசாரணை நடைபெற்றது.

இந்த முறைகேடுகளில் சம்மந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளில் ஒருவரான லெப்டினட் கேர்னல் ஸ்டீவ் ஜோர்டன் அப்போது அபு கிரைப் சிறைச்சாலையில் கூட்டுப்புலனாய்வு மற்றும் பயன்தரும் செய்தியினை அறியும் கேள்விகேட்கும் மையத்தில் இருக்குநராக பணியாற்றி வந்தார். அவர் கேர்னல் ரெரிங்டோன் அந்த சிறைச்சாலை புலனாய்வுக் குழுவில் இரண்டாம் நிலை அதிகாரி என்று வர்ணித்தார். அங்கு நடந்த முறைகேடுகள் பற்றி அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

கேர்னல் ஜோர்டனிடம் அவரது ''மேற்பார்வை சங்கலி'' பற்றி கேட்கப்பட்டபோது அவர் ''துவக்கத்தில் கேர்னல் ஸ்டீவ் போல்ட், பின்பு ஜெனரல் பாஸ்ட், இறுதியாக அது ஒரு புதிய துணை அதிகாரி ஒரு பிரிட்டிஷ் கேர்னல் கிறிஸ் ரெரிங்டோனிற்கு வந்தது'' என்று கூறினார்.

இந்த ஆண்டு பெப்ரவரியில் அவரது மேற்பார்வை அதிகாரிகள் பற்றி கேட்கப்பட்டபோது கேர்னல் ஜோர்தான் எழுத்து மூலம் தந்த பதிலில் நேரடியாகத்தான், பிரிட்டிஷ் கேர்னல் கேம்பல் ஜேம்ஸ் -ன் கீழ் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்டார். அப்போது அவர் இரண்டாம் நிலை தளபதியாக இருந்தாலும் நேரடியாக ஜெனரல் பாஸ்ட் இடம் பணியாற்றியதாகவும், கேர்னல் ஜேம்ஸிற்கு அது பற்றி தெரிவித்ததாகவும், ஏனெனில் பிரிட்டிஷ் அதிகாரிகளும் அவர்களுக்கு போட்டியாக அமெரிக்க அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவித்தார்.

இந்த சாட்சியம் அபு கிரைப் சிறைச்சாலையில் ஈராக் கைதிகள் விசாரணை செய்யப்பட்டதற்கு பொறுப்பான பிரிவில் பிரிட்டிஷ் புலனாய்வு மூத்த அதிகாரிகள் இரண்டாம் நிலை தலைமைப் பொறுப்பில் இருந்ததையும், அந்த சிறைச்சாலைக்குள் நடந்தவை பற்றி அந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையும் உறுதிப்படுத்துகிறது. என்றாலும், இந்த விவகாரங்கள் வெளியில் வந்த பின்னரும் ஆயுதப்படைகளின் அமைச்சர் ஆடம் இங்கிராம் மற்றும் பாதுகாப்பு செயலர் Geoff Hoon- ம் அபு கிரைப்பில் அமெரிக்க ஊழியர்களை மேற்பார்வையிடுவதில் நேரடியாக பொறுப்பேதும் இல்லை என்று குறிப்பிட்டனர். ஆனால், இந்த சித்திரவதைகள் அம்பலத்திற்கு வந்த பின்னர் மட்டுமே பிரிட்டிஷ் அதிகாரிகள் அங்கு சம்மந்தப்பட்டனர் என்றும் கூறினர்.

சென்ற வாரம் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கேர்னல் ரெரிங்டோன் ''அமெரிக்க புலனாய்வு அமைப்பில் இடம்பெற்றிருந்தார்'' என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் ''அவர் எப்போதுமே அபு கிரைப் அல்லது அதில் எந்த அம்சத்திலும் தளபதியாக பணியாற்றவில்லை என்றும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்த முறைகேடுகள்பற்றி எந்தவிதமான திட்டவட்டமான குற்றச்சாட்டுக்கள் எதுவும் தெரியாது'' என்றும் கூறினார்.

அந்த மோசமான சிறைச்சாலையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக எதுவும் தெரியாது என்று பொய் சொல்லிய பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் இரண்டாவது தடவையாக பிடிபட்டிருக்கிறது.

அமெரிக்கக் சிறைக் காவலர்கள் கைதிகளை பாலியல் ரீதியாக, உடல்ரீதியாக முறைகேடாக நடத்தியது தொடர்பான இழிபுகழ்பெற்ற புகைப்படங்கள் வெளிவந்த பின்னர் ஏப்ரல் மாதக் கடைசியில் தங்களுக்கு தகவல் தரப்பட்டதாக அரசாங்கம் கூறியது. ஆனால் Hoon, அதற்குப்பின்னர் பாக்தாத்திலுள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவின் அறிக்கையின் உடாக அந்த முறைகேடுகள்பற்றி தெரிந்து கொண்டதாக பின்னர் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அதற்குப் பின்னரும் Hoon, அந்தத் தகவல் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என்று வாதிட்டு வந்தார். ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ அது ஒரு தவறு என்று ஒப்புக்கொண்டார். செஞ்சிலுவைச் சங்க அறிக்கை ''அபுகிரைப் சிறைச்சாலையில் படுமோசமான அருவருக்கத்தக்க மனித உரிமைகள் மீறல் நடைபெற்றிருப்பதாக சான்று காட்டி'' அம்பலப்படுத்தியுள்ளது. அதற்கு எந்த மன்னிப்பும் தரமுடியாது'' என்று ஜாக் ஸ்ட்ரோ, MP களிடம் தெரிவித்தார்.

இப்பொது கேர்னல் ரெரிங்டோன் உட்பட, அமெரிக்க தளபதிகள் அதிகாரப்பூர்வமாக ஜனவரி கடைசியிலேயே அந்தச் சிறைச்சாலையில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி குறைந்தபட்சம் ஒரு விசாரணை நடைபெற்று வருகின்றன என்பதை தெரிவித்ததாகக் அவர் ஒப்புக்கொண்டார்.

ஈராக் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒவ்வொரு அம்சத்திலும் பிரிட்டிஷ் அரசாங்கம் கையும் களவுமாக பிடிப்பட்ட கிரிமினல்கள் எந்த பொறுப்பையும் தட்டிக்கழிப்பதற்கு பொய்சொல்ல முயலுவதைப் போன்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved