World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

ஜிஷ்மீஸீtஹ் ஹ்மீணீக்ஷீs sவீஸீநீமீ tலீமீ கிவீக்ஷீ மிஸீபீவீணீ தீஷீனீதீவீஸீரீsறிணீக்ஷீt 2

Why is the Canadian government resisting a public inquiry?

எயர் இந்தியா விமானம் தாக்கப்பட்டு 20 ஆண்டுகள் முடிவு

பகுதி 2 : ஒரு பொது விசாரணைக்கு கனேடிய அரசாங்கம் ஏன் எதிர்ப்புக் காட்டுகிறது?

By David Adelaide
30 July 2005

Back to screen version

இது ஒர் இரு பகுதி கட்டுரையின் இரண்டாம் பகுதியை கீழே காணலாம். முதல் பகுதி தமிழில் ஆகஸ்ட் 7 அன்று வெளியாயிற்று.

கனேடிய பாதுகாப்பு உளவுத் துறை சேவை (CSIS), நிறுவப்பட்ட முதல் ஆண்டில் 1985ம் ஆண்டு, எயர் இந்தியா விமானத்தின்மீதான தாக்குதல் நடைபெற்றது. RCMP என்னும் உளவுத்துறை-தேசிய பாதுகாப்பு பிரிவின் கிளையான RCMP பாதுகாப்பு சேவையின் பங்கில், முறையான குற்றம் சார் நடவடிக்கைகளினால் பொதுமக்களின் சீற்றத்தை எதிர்கொண்ட கனேடிய அரசாங்கம், பாதுகாப்புப் பணிக்கு பதிலாக ஒரு புதிய "குடியாளி" "civilian" உளவுத்துறை அமைப்பான CSIS ஐ நிறுவியது.

ரோயல் கனேடியன் மெளன்டெட் போலீசின் "சில செயற்பாடுகள்"

Commission of Inquiry Concerning Certain Activities of the Royal Canadian Mounted Police எனப்பட்ட கனேடிய மெளன்டெட் போலீசின் சில நடவடிக்கைகள் பற்றிய விசாரணைக் குழுவான மக்டோனால்ட் குழுவின் முக்கியமான பரிந்துரையின் பேரிலேயே CSIS நிறுவப்பட்டது. "சில நடவடிக்கைகள்" என்பது தபால் திருட்டு, பூட்டை உடைத்து நுழைதல், தீவைப்பு உட்பட சில சட்ட விரோத செயல்பாடுகள் உள்பட RCMPன் சட்ட மீறல்களின் பரந்த மாதிரியைக் குறிக்கிறது. இக்குற்ற நடவடிக்கையில் பெரும்பாலானவை சோசலிஸ்ட்டுகள், அமைதிக் குழுக்கள், மாணவர்கள் குழுக்கள், தொழிற்சங்கங்கள், கியூபெக் சுதந்திரவாதிகள் ஆகியோரை இலக்கு வைத்து RCMP-ன் பாதுகாப்பு சேவையால் மேற்கொள்ளப்பட்டது.

இக்குழுவிற்கான கிரியா ஊக்கியாக RCMP பாதுகாப்புப் பணிக்குழு உறுப்பினர் ரொபேர்ட் சாம்சன் செயல்பட்டிருந்தார். 1974 ஆகஸ்ட் மாதம், ஒரு பல்பொருள் அங்காடித் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்திற்கு எதிராக அரசாங்கத்தை தூண்டித் தலையிடும் வகையில், ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை சாம்சன் நடத்த முற்பட்டபோது தன்னுடைய கையில் ஒரு பகுதியை இழக்க நேரிட்டது. சாம்சன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட போது, முதலில் பல நம்பிக்கை தராத கூற்றுக்களைக் கூறி கும்பலுடன் தனக்கு இருந்த தொடர்பை மறைக்க முற்பட்டார். ஆனால் திடீரென்று இறுதியில் நீதிமன்றத்தின் நம்பிக்கையற்ற பார்வையை உணர்ந்து, தான் "அதையும்விட மோசமாக" RCMP க்குப் பல காரியங்களைச் செய்ததாகக் கூறிவிட்டார்.

இறுதியில், சாம்சனின் திடீர் அறிவிப்பு, சாம்சனே ஏற்றுக்கொண்ட Agence de Presse Libre du Quebec APLQ விற்கு ஏதிரான தாக்குதலில் இருந்து RCMP உடைய பல பிழைகளின் முழுத் தொடரும் மடைதிறந்தாற்போல் அம்பலப்படுவதற்கு காரணமாயிற்று. அக்டோபர் 6, 1972 இரவில் RCMP, ஒரு சிறிய இடதுசாரி குழுவான APLQ இன் அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த பல ஆவணங்களைத் திருடி, அலுவலகம் முழுவதையும் வலதுசாரிக் குண்டர்கள் தாக்கியது போல் காட்ட வேண்டும் என்பதற்காக சூறையாடியது.

இவ்வாறு APLQ வின்மீது எடுத்த நடவடிக்கை பற்றி சைமன் ஒப்புக் கொண்டது கியூபெக்கின் நீதித் துறை விசாரணை ஒன்று நடக்க உந்துதல் பெறுவதையும் "தேடுதல் ஆணை பெறத் தவறினர்" என்ற குற்றச்சாட்டு மூன்று போலீஸ் அதிகாரிகள்மீது போடுவதற்கும் தூண்டியது. இவர்கள் முறையே RCMP, கியூபெக் மாநிலப் போலீஸ் மற்றும் மொன்ட்ரீயால் நகர சமுதாய போலீஸ் துறைகளைச் சார்ந்திருந்தனர். இந்த மூன்று அதிகாரிகளும் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், பின்னர் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

இதையொட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எக்குற்றத்தையும் சுமக்காமல் பணிக்கு உடனடியாகத் திரும்ப முடியும் என்பது மட்டுமில்லாமல், தங்களுடைய குற்றங்களின் முழு விவரங்கள் பகிரங்கமாக அம்பலப்படலை தவிர்ப்பதிலும்கூட RCMP வெற்றியடைய முடிந்தது. இதன் பின்னர் லிபரல் சார்பு உடைய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பிரான்சிஸ் பாக்ஸ் APLQ நிகழ்வு "ஒரு தனித்த, அபூர்வமான" குற்றம்தான் என்று கூறிவிட்டார்.

உண்மையில் இது ஒரு தனிமையான நிகழ்வோ, அபூர்வமான நிகழ்வோ அல்ல. இக்காலக்கட்டத்தில் தலைமை வழக்கறிஞரின் அலுவலகம், முன்னாள் பாதுகாப்புப் பணிப் பிரிவு ஊழியர்கள், அதிருப்தி அடைந்திருந்த முன்னாள் ஊழியர்கள், ஸ்டாஃப் சர்ஜேன்ட் டோனால்ட் மக்கீளிரி மற்றும் முன்னாள் சர்ஜேன்ட் கில்லிஸ் பரூநெட் இருவரும் தொடர்ந்திருந்த, RCMP உடைய முறைதவறிய செயல்கள் பலவற்றை விசாரிக்கத் தொடங்கியிருந்தது. கருஞ்சிறுத்தைகள் மற்றும் Front du Liberation du Quebec (FLQ) என்ற குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட இருந்த பண்ணை வீடு ஒன்றை எரித்தது, மற்றும் வெடிமருந்துப் பொருட்களை திருடியது இவற்றில் மக்கிளீரி தொடர்பு கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் அரசாங்கத்திடம் கணக்கிலடங்கா சட்ட விரோதத் தபால் திருட்டுக்கள், ஆவணத் திருட்டுக்கள் மற்றும் "கனடாவில் குற்ற நடவடிக்கைகளை CIA நடத்தியதில் பங்கு பற்றி RCMP உதவியது" என்று பலவற்றையும் கூறினர்.

இக்காலக்கட்டத்தில், RCMP யே ஒரு பொது விசாரணை தேவை என்ற அழைப்பை விடுத்தது. ஒரு கூட்டாட்சி விசாரணைக் குழு "பாதுகாப்புப் பணியினரின் செயல்பாடுகளை, ஒவ்வொன்றாக சில நேரம் குற்றவியல் வழக்குகளில் பொதுமக்கள் பார்வையிடுவதைவிட சிறந்த முறையில்" பரிசீலனை செய்யும் என்று அது கூறியது. வேறுவிதமாகக் கூறினால், வாட்டர்கேட் விவகாரம், வியட்நாம், சிலி மற்ற இடங்களில் மேலை நாடுகளில் உளவுத் துறைப் பணிகளின் கறைபடிந்த தந்திரங்கள் பற்றி மக்களிடையே ஆதரவு இல்லாத வரவேற்பு இருந்த நேரத்தில் ஒரு பொது விசாரணை என்பது பாதுகாப்புப் பணியைப் பற்றிய மக்களுடைய நம்பிக்கையை மீட்க ஒரு வாய்ப்பை வழங்கும்.

RCMP மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டின்படி, ஒரு பொதுவிசாரணையில் இன்னும் குறிப்பிடத்தக்க நலனும் கூடுதலாக இருந்தது; அதாவது கியூபெக் அரசாங்கத்தின் கீபிள் குழு விசாரணையை தடுக்கும் சாக்குப் போக்கை இது அவர்களுக்கு கொடுக்கும். 1977ம் ஆண்டு பிரிவினைக்கு ஆதரவு கொடுத்திருந்த Parti Quebecois (PQ)-ன் மாநில அரசாங்கம் கியூபெக்கில் RCMP நடத்திய குற்றங்களை விசாரிப்பதற்கு நியமித்த குழுவே கீபிள் குழுவாகும். 1970 களின் தொடக்கத்திலேயே PQ மீது RCMP நடத்திய ஒற்று வேலைகள், மற்றும் பல RCMP உடைய சட்டவிரோத செயல்கள் அக்குழுவின் விசாரணைகளில் வெளிப்பட்டு விடும் என்று அஞ்சிய RCMP -ம் கனேடிய கூட்டாட்சி அரசாங்கமும் கீபிள் குழு செயல்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன. ஆயினும் கூட அக்குழு கணிசமான அளவில் RCMP எவ்வாறு PQ உடைய உறுப்பினர்கள் பட்டியலைத் திருடியது (Operation Ham என்ற பெயரில்), மொன்ட்ரீயால் போலீசார் எவ்வாறு FLQ உட்குழுவில் ஊடுருவிக் கட்டுப்பாட்டையும் கொண்டார்கள் போன்ற போலீசாரின் தவறுகள் உட்பட கணிசமான சான்றுகளையும் வெளிக்கொணர்வதில் வெற்றிபெற்றிருந்தது.

கூட்டாட்சியின் மக்டோனால்ட் குழு அதிகாரபூர்வமாக ஜூலை 6, 1977 அன்று அறிவிக்கப்பட்டது. இதன் மூன்று ஆணையர்களும் (Alberta தலைமை நீதிமன்ற நீதிபதி D.C.McDonald, மொன்ட்ரீயால் வழக்கறிஞர் கை கில்பர்ட் மற்றும் டோரன்டோ வழக்கறிஞர் டோலால்ட் ரிக்கர்ட் ஆகியோர்), லிபரல் கட்சியுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தனர். அவர்கள் தேசிய பாதுகாப்புத் துறை ஆய்வு அதிகாரிகள் இருவர், தேசிய துறைமுகக் குழு போலீஸ் மற்றும் ஓன்டாரியோ மாநிலப் போலீஸ் அதிகாரிகள் நால்வர் ஆகியோரால் உதவிசெய்யப்பட்டிருந்தனர்.

கோழிக் குஞ்சுகளை பாதுகாக்க நரியை நியமித்தது போன்ற சந்தேகம் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக, இந்தக் குழு பாராளுமன்றத்திற்கு முழுமையாக என்றில்லாமல் லிபரல் அரசாங்கத்திற்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும், அயல்நாட்டு உளவு முகவாண்மைகளின் (அதாவது CIA) மனவருத்தத்திற்கு ஆளாகவேண்டாம் என்றும் குறிப்பாகக் வலியுறுத்தப்பட்டது. RCMP இன் குற்ற நடவடிக்கைகள் பற்றி எந்த அளவிற்கு அரசாங்கம் அறிந்திருந்தது என்பதைப் பற்றிய குழுவின் இறுதி அறிக்கையின் கணிசமான பகுதிகள் பொதுமக்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

இந்த மக்டோனால்ட் குழு, மொத்தத்தில் RCMP ஐப்பற்றிய 292 குறிப்பிட்ட குற்றச் சாட்டுக்கள் மற்றும் சட்டவிரோதமாக கதவை உடைத்து நுழைதல், தபால்களை திறத்தல், முறையற்ற வகையில் இரகசிய அரசாங்க ஆவணங்களை பார்வையிடல், ஒப்புதல் இல்லாமல் மின்னணுப் பொருட்கள் மூலம் அல்லது மனிதர்கள் மூலம் கண்காணித்தல் மற்றும் "எதிராடல்", வேறுவிதமாகச்சொன்னால் கறைபடிந்த தந்திர நடவடிக்கைகளை கையாளுதல் உள்பட RCMP -ன் தவறுகளை விசாரித்தது. கனடாவின் உளவுத் துறை வாடிக்கையாக "சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத அல்லது இடமில்லாத" செயல்களில் ஈடுபட்டதாகவும், "பாதுகாப்புப் பணித்துறையில் சட்டத்தின் ஆட்சி என்பது முறிந்துவிட்ட" பொதுநிலை இருந்திருந்ததாகவும் இக்குழு முடிவுரையாகக் கூறியது.

முற்றிலும் நம்பிக்கையை இழந்துவிட்ட RCMP கலைக்கப்பட்டுவிட வேண்டும் என்றும் ஒரு புதிய "குடியாளி" உளவுத்துறை முகவாண்மை அதற்குப் பதிலாக அமைக்கப்படவேண்டும் என்றும் குழுவின் முதல் பரிந்துரை இருந்தது.

இப்பரிந்துரையை சுற்றி ஏதாவது ஜனநாயகப் பாசாங்கு இருப்பின் அது போலிநடிப்பாக இருந்தது. புதிய அமைப்பிற்கு தபால்களை திறந்துபார்க்கவும், கதவை உடைத்துக் கொண்டு செல்லவும் உரிமை உண்டு, மக்கள் கணக்குத் தொகையைத் தவிர மற்ற அரசாங்க தகவல்கள் அனைத்தையும் பார்வையிட அனுமதி உண்டு என்றும் அக்குழு வாதிட்டது. மேலும் கூட்டாட்சி, மாநிலச் சட்டங்கள் தக்க முறையில் திருத்தப்பட்டு இரகசிய முகவர்கள் சட்டபூர்வமாக போலி அடையாள ஆவணங்களை கொள்ளுவதற்கு வகை வேண்டும் என்றும் வலியுறுத்தியது. RCMP இன் குற்றம் விசாரணை பிரிவும் தன்னுடைய அதிகாரத்தில் இதேபோல் விரிவாக்கம் காணவேண்டும் என்பதைப் பெறவிருந்தது.

"ஜனநாயக" போர்வைக்குப் பின் இருந்த கனேடிய ஆளும் செல்வந்தத்தட்டின் உண்மையான கவலை, (குழுவின் மூலம் வெளிப்படுத்தியபடி), RCMP யின் பாதுகாப்பு பணித்துறை தேவையான அரசியல் நுண்ணறிவையும், "உணர்வையும்" கொண்டிருக்கவில்லை என்பதேயாகும். RCMP இல் இருந்த ஆதிக்கம் அதிகம் பெற்றிருந்த துணை இராணுவச் சக்திகள் லிபரல் கட்சியையும்விடக் கூடுதலான இடது சார்புடைய அமைப்பு எதுவும் ஆபத்தான நாசவேலைகளில் ஈடுபடக்கூடியது, இல்லாவிடின் சோவியத் ஒன்றியத்தின் கைக்கூலி என்ற கருத்தைத்தான் கிட்டத்தட்டக் கொண்டிருந்தது. 1978 ஐ ஒட்டி RCMP 800,000 மக்களை பற்றிய தகவல் கோப்புக்களை கொண்டிருந்தது; மேலும் சீர்திருத்தவாத புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர்களையும் கண்காணித்து வந்ததோடு தாராளவாதக் கட்சியின் தலைமை வழக்கறிஞர் வாரன் ஆல்மண்டின் நடவடிக்கைகளையும் கண்காணித்தது. மக்டோனால்ட் குழு இன்னும் கூடுதலான நவீனமயப்படுத்தப்பட்ட முகவாண்மை வேண்டும் என்றும், அரசியல் பணியின் நுட்பங்களில் பயின்ற பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் பட்டம் பெற்றவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும் கூறியது.

இதுகாறும் சட்டவிரோத செயலாக இருந்தவற்றை இயன்ற அளவு சட்ட பூர்வமாகச் செய்யப் புதிய அமைப்பிற்கு தாராளவாதிகள் பாராளுமன்ற முறைச் செயற்பாடுகளின் மூலம் எவ்வளவு உதவ முடியுமோ, அவ்வளவு உதவியதற்கு பின், 1984ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கனேடிய பாராளுமன்றம் C-9 என்ற சட்டத்தை இயற்றி, கனேடிய பாதுகாப்பு, உளவுப் பணித்துறை தோற்றுவிக்கப்பட்டது. Trudeau உடைய தாராண்மை அரசாங்கம் இயற்றிய கடைசிச் சட்டமாகும் இது.

இங்கு ஒன்றையும் காண்பதற்கில்லை, தயை செய்து நகருங்கள்

இது முடிந்து ஓர் ஆண்டிற்குள்ளேயே, தன்னுடைய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆபத்து விளைவித்த பயங்கரவாத தாக்குதலை சந்தித்த வகையில் கனடா அதிர்வுற்றது. இப்பொழுது நாம் நன்கு அறிந்த வகையில், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட CSIS, இந்நிகழ்வின் மையத்திலேயே இருந்தது.

புதிய உளவுத்துறை சதிகாரர்களை கண்காணிப்பிற்குள் வைத்திருந்தபோதிலும்கூட, அது நிகழ்வுகளை பற்றிக் கூறிய வகையில், ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதல் தயாராகிக் கொண்டிருக்கிறது என மதிப்பிடுவதற்கு தவறியது. இதையடுத்து CSIS, குண்டுவீசுபவர்களை CSIS கண்காணித்து வந்தது என்று மட்டும் இல்லாமல் வீசியவர்களின் முக்கியக் கூட்டாளி ஒருவர் CSIS க்குத் தகவலை கொடுப்பவர் என்பதையும் RCMP முடிவு செய்தது அல்லது முடிவுரைத்ததாகத் தோன்றியது.

CSIS இன் பங்கைப் பற்றி கனேடிய அரசாங்கம் எப்பொழுது கண்டறிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. CSIS தோற்றுவிக்கப்பட்டது, பாதுகாப்புப் பணிப் பிரிவின் கலைப்பு, உள்நாட்டு உளவு பற்றிய முழுப்பொறுப்பு அகற்றப்பட்டது ஆகியவை பற்றி RCMP யின் உயரதிகாரிகள் பெரும் சீற்றத்தைக் கொண்டிருந்தனர். பாதுகாப்புப்பணிப் பிரிவின் ஊழியர்கள் பலர் CSIS க்கு மாற்றப்பட்டிருந்தபோதிலும்கூட, RCMP, CSIS ஐ ஒரு இழிவிற்குட்பட்ட போட்டி நிறுவனம் என்றுதான் கருதியதால், CSIS இன் திறமையற்ற செயல், தவறுகள் பற்றி தங்கள் அரசியல் எஜமானர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில் ஆர்வம் காட்டினர்.

தொடர் நிகழ்வுகள் எப்படி இருந்தபோதிலும்கூட, ஆரம்பத்தில் இருந்தே அரசாங்க அதிகாரிகளும், தேசிய பாதுகாப்பின் உயரதிகாரிகளும் CSIS பங்கு பற்றி பொது விவாதம் ஏதும் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். RCMP இன் பாதுகாப்பு பணித்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகள், ஏராளமான கனேடியர்களை ஒற்று அறிதல் போன்றவை வெளிவந்து அதனால் பெரும் அதிர்ச்சிக்குட்பட்டிருந்ததால், கனேடிய அரசாங்கம், RCMP, தேசியப் பாதுகாப்பு அமைப்பு அனைத்தும் பல ஆண்டுகள் பாடுபட்டு மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு முயன்று வருகின்றன.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் எயர் இந்தியா விவகாரத்தில் CSIS கொண்டிருந்த பங்கை மூடி மறைத்தல் தொடர்வதற்கு காரணம் தேசிய பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள், அதிகாரங்கள் இவற்றை மக்கள் விசாரணையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதேயாகும்.

போல் மார்ட்டினுடைய தாராண்மை அரசாங்கம் பல முனைகளிலும் சூழ்ச்சியுடன் செயல்பட்டு எயர் இந்தியா பிரச்சினையை பொது விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்று முயல்கிறது; அது முடியாத பட்சத்தில் பின்னர் ஏதேனும் விசாரணை நேர்ந்தால் குழு கண்டறிய வேண்டியவற்றிற்கு தடைப்பட்டியல் கொடுத்து, தன்னுடைய இரகசிய பணித் துறைகளை இயன்ற அளவிற்கு காக்க வேண்டும் என்றும் முயல்கிறது.

* CSIS அமைப்பை "மேற்பார்வையிடும்" அதிகாரபூர்வ அமைப்பான பாதுகாப்பு உளவு மறுஆய்வுக் குழு (Security Intelligence Review Committee -SIRC) CSIS ஐ உத்தியோகரீதியாக குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததை, அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. 1992ம் ஆண்டு SIRC அறிக்கை CSIS எயர் இந்தியா விமானத் தாக்குதலில் சதிகாரராக இருந்த டல்வீந்தர் சிங் பர்மாரின் ஒலிநாடா உரையாடல்களை அழித்தது குழப்பத்தாலும், காலம் கடந்து விட்ட கொள்கைகளினாலும்தான் என்றும் தன்னுடைய முகவர்களின் தவறு அல்லது திறமையின்மையை மூடி மறைப்பதற்காக இல்லை என்றும் முடிவுரையாக கூறியுள்ளது.

மிகப் பரந்த அளவில் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்த முக்கிய நபர் பற்றிய இத்தகைய ஒட்டுமொத்த சாட்சியங்களின் அழிப்பு நடந்துள்ள போதிலும், சாட்சிய ஆவணங்களில் வியத்தகு முறையில் எந்த இழப்பும் இல்லை என்று இதே அறிக்கை கூறியிருக்கிறது! நிகழ்வுகளை பற்றிய இத்தகைய கனிவான விளக்கம் RCMP யால் மறுக்கப்பட்டிருக்கிறது. 1996ம் ஆண்டு RCMP அதிகாரி Gary Bass எழுதிய குறிப்பு ஒன்று CSIS இவ்வழக்கில் பல ஆவணங்களை அழித்துவிட்டதோடு, குற்றச் சாட்டுக்களை தொகுத்துக் கூறவேண்டிய பொறுப்பைக் கொண்டிருந்ததால் எயர் இந்தியா விசாரணையில் நிறைய பொறுப்பை பெற்றிருந்த RCMP இடம் தெரிவிக்காமலேயே இது நிகழ்த்தப்பட்டது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

* எயர் இந்தியா விவகாரத்தை பொறுத்தவரையில் ஆழ்ந்த ஆய்வு எதையும் தவிர்க்க வேண்டும் என்ற முயற்சியில் "பொதுத் தொடர்பு" முயற்சிகள் பலவற்றையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது. ஆண்டு நினைவு நாளில் மார்ட்டின் கலந்து கொள்ளுவது பற்றி மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட செயலுக்கு முன்பாக, பொதுப் பாதுகாப்பு, நெருக்கடித் தயாரிப்புக்கள் துறை மந்திரி Anne McLellan க்கும் எயர் இந்தியா விமானப் பயணத்தில் இறந்து போன 182 குடும்பத்தினருக்கும் இடையே மற்றொரு விளம்பரப்படுத்தப்பட்ட கூட்டம் நடைபெற்றிருந்தது.

ஒரு விபத்து நடந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை மேற்கொள்ளப்பட்டால் அதனால் எந்தப் பயனும் இருக்காது என்று McLellan வாதிட்டுள்ளார். 20 ஆண்டுகளாக குற்றவியல் விசாரணை நடைபெறுகிறது என்று காரணம் கூறி அரசாங்கம் புலன்விசாரணையை தவிர்த்து வந்துள்ளது, இப்பொழுது ஆய்வில் தோல்வியுற்றதால், அரசாங்கம் புதிய விசாரணைக்கு காலம் கடந்துவிட்டது என்று வாதிடுகிறது.

ஒரு புலன்விசாரணையை தவிர்க்கும் முறையில், மக்லெல்லன், ஒன்டோரியாவின் முன்னாள் NDP பிரதம மந்திரியான போப் ரேயை புலன்விசாரணைக்கான "சாத்தியம் பற்றி ஆயாயுமாறு" நியமித்துள்ளார். இழிபுகழ்பெற்ற Harris கன்சர்வேடிவ்களின் அரசாங்கத்திற்கு இடமளித்த வலதுசாரி NDP இன் மாநில அரசாங்கத்தின் தலைவராக இருந்து 1995ல் பதவியை விட்டு விலகியபின்னர், ரே பலமுறையும் கனேடிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசகர், ஆமாம் போடும் பிரமுகர் என்று அழைக்கப்பட்டுள்ளார்; மேலும் இவர் மேற்கூறிய பாதுகாப்பு உளவுத்துறை மறுஆய்வுக் குழுவிற்கும் 1998ல் இருந்து 2003 வரை உறுப்பினராகவும் இருந்தார்.

CSIS, RCMP மற்றும் Maher Arar

நாட்டின் நிறுவன அமைப்புக்களில் மக்களுடைய நம்பிக்கை தளர்ந்து போகும்போது, அதை மீட்கும் வகையில் சில செயல்களைப் புரியும் வழக்கம் ஒரு நீண்ட வரலாற்று நிகழ்வாக கனடாவிற்குள்ளும், சர்வதேச அளவிலும் உண்டு. ஆனால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் கனேடிய அரசாங்கம் மற்றும் ஒரு புலன்விசாரணை அதன் பாதுகாப்பு, உளவுப் பணித்துறைகளை பற்றி மேற்கொள்ளப்பட்டால் விளையக்கூடிய ஆபத்துக்களை நன்கு அறிந்துள்ளது; இது முற்றிலும் தலைகீழான விளைவுகளைக் கொடுக்கும் என்றும், CSIS, RCMP இன்னும் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு கொண்டுள்ள பல அமைப்புகளின் பெருகிய அதிகாரம் பற்றிய மக்களுடைய கவலையை அதிகரிக்கும் என்பதையும் அரசாங்கம் அறிந்துள்ளது.

Chretien-Martin இன் தாரளவாத அரசாங்கம், மற்ற முதலாளித்துவ ஜனநாயக அரசுகளைப் போலவே செப்டம்பர் 11,2001 நிகழ்வுகளை பயன்படுத்தி ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து அரசாங்கத்தின் அதிகாரங்களை வலிமைப் படுத்திக் கொண்டுள்ளதுடன், தன் தேசிய பாதுகாப்பு அமைப்பின் அதிகாரங்களையும் வலுப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் மக்களிடையே இதுபற்றி அரசாங்கத்திடம் வினா எழுப்பவேண்டும் என்ற உணர்வு குறைவாக இருந்தது. ஆனால் இந்த அதிகாரத்தை கனேடிய அரசாங்கம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டபொழுது, உதாரணமாக காலவரையின்றி ஒருவரை சிறையில் விசாரணைக்குட்படுத்தாமல் வைத்திருந்தல் - புஷ் அரசாங்கம் "பயங்கரவாதத்தின் மீதான போரை" ஜனநாயக உரிமைகள் மீதுதாக்குதல் தொடுப்பதற்கும் ஈராக்கை வென்று கைப்பற்ற படையெடுத்தலுக்கும் நியாயப்படுத்த எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பதை கனடாவில் உள்ள மக்கள் பார்க்கையில், பொதுமக்களின் கவலை அதிகரித்துள்ளது.

எயர் இந்தியா விமானம் மீதான தாக்குதல் விசாரணைக்குப் பின்னர் எரர் விசாரணை விரிந்தது தற்செயல் நிகழ்வுப் பொருத்தமாக உள்ளது. மொன்ட்ரீயாலில் தொலைத் தொடர்பு பொறியாளாராக இருந்த மகெர் எரர் நியூ யோர்க்கில் பயணித்துக் கொண்டிருக்கும்போது அமெரிக்க அதிகாரிகளால் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, சிரியாவிற்கு "அனுப்பி வைக்கப்பட்டார்". அங்கு அவர் ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்க அதிகாரிகள் தங்களுடைய கனேடிய அதிகாரிகள் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் செயற்பாடுகளை செய்து வந்துள்ளனர் என்பது வெளிப்படை. அவர் திரும்பிவந்த பின்னரும் கூட அவர் மீது அவதூறுகள் தொடர்ந்தன. சித்திரவதைக்குட்படுத்தி அவரிடம் பெறப்பட்ட "ஒப்புதல் வாக்குமூலம்" தூதரகப் பிரிவுகள் மூலமும் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்புக்களில் மூலமும் செய்தி ஊடகத்திற்கு சென்றடைந்தது.

அர்ரின் வேதனை நிறைந்த அனுபவம் பற்றிய பொது விசாரணை CSIS மற்றும் RCMP இரண்டையும் மிருதுவான முறையில் நடத்துவதைத்தான் வெளிப்படையான கருத்தாகக் கொண்டுள்ளது. சில சான்றுகள் அல்லது தகவல்கள் "தேசிய பாதுகாப்பு நலன்கள்" உடையவை என அரசாங்கம் அறிவிப்பதற்கு என்ற சிறப்பு அனுமதி ஒன்று செய்யப்பட்டிருக்கிறது மற்றும் அதன்மூலம் அவை பொதுப் பார்வையில் இருந்து அகற்றப்படலாம் என்பது மட்டுமல்லாமல், அரர் மற்றும் அவருடைய வழக்கறிஞர் பார்வையில் இருந்தும்கூட அகற்றப்படலாம்.

ஆனால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பினும், அல்லது அரசாங்கம் அந்த அளவுக்கு அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக என்றும் கூறலாம், புலன்விசாரணையானது அரருக்கு இழைக்கப்பட்டுள்ள தவறு பற்றி கனேடிய அரசாங்கம் எவ்வளவு ஆழ்ந்த தொடர்பை கொண்டுள்ளது, மற்றும் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போரில்" அதன் முழு இதயப்பூர்வமான ஒத்துழைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

CSIS நெருக்கமான கண்காணிப்பைச் சதிகாரர்கள்மீது கொண்டிருந்தபின்னரும்கூட எயர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடைபெற்றது, சதித்திட்டத்திற்கு பின்னால் இருந்த முக்கிய நபர் பற்றிய சான்று ஆவணங்களை CSIS வெகு விரைவில் அழித்தது, இதன் முகவர் ஒருவர்கூட சதித்திட்டத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பவை அனைத்தும் புதிய உளவு முகவாண்மை அமைக்கப்பட்டுள்ளது ஒரு தூய்மையான செயல், இது தன்னுடைய நயமான அரசியல் உணர்வுகளை கனேடியர்களை பாதுகாப்பதில் பயன்படுத்தும் என்ற கூற்றின் கீழிருக்கும் தரைவிரிப்பை அகற்றுகிறது.

கடந்த 20 ஆண்டுகள் தாராளவாத மற்றும் கன்சர்வேடிவ் கூட்டாட்சி அரசாங்கங்களின் அக்கறையானது எயர் இந்தியா விமானத் தாக்குதல் விசாரணையில் முக்கியமாக இருப்பது, தேசியப்பாதுகாப்பு அமைப்பின் உறுதித்தன்மையை உத்திரவாதம் செய்வதற்கு CSIS எப்படி அத்துடன் தொடர்பைக் கொண்டிருந்தது என்பதை மூடி மறைப்பதாகத்தான் உள்ளது.

உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்கள் போலவே கனேடிய அரசாங்கமும் செப்டம்பர் 11, 2001 நிகழ்வை போலிக் காரணம் காட்டி ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான புதிய தாக்குதல்களை நிகழ்த்துகிறது. உண்மையில் பெருகிவரும் சமூக சமத்துவமற்ற நிலையினால் விளையக்கூடிய ஆபத்துக்களை பற்றி ஆளும் செல்வந்த தட்டு அஞ்சுவதோடு, தன்னுடைய ஆட்சிக்கு வெளிவர இருக்கும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த, குறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இறுதிப்பகுப்பாய்வில், இதனால்தான் கனேடிய அரசாங்கம் எயர் இந்தியா மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் பற்றிய விசாரணைக்கு எதிர்ப்புக் காட்டி வருகிறது.

முற்றும்

பாக்ரியிடம் கேள்விகேட்டுப் பெற்ற தகவல் விசாரணைகள் உட்பட எயர் இந்தியா புலன் விசாரணையிலிருந்து கிடைக்கும் தேர்வுசெய்யப்பட்ட பத்திரங்கள் http://www.cbc.ca/news/background/airindia/files_investigation.html எனும் முகவரியில் கிடைக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved