World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: the myth of Labour's economic success

பிரிட்டன்: தொழிற்கட்சி பொருளாதார வெற்றி என்ற கட்டுக்கதை

By Chris Talbot
4 May 2005

Back to screen version

பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் தேர்தல் பிரச்சாரம், பிரதம மந்திரி டோனி பிளேயரும், சான்செலர் கோர்டன் பிரெளனும் கூட்டாக இணைந்து உரையாற்றும் தன்மையால் ஆதிக்கம் கொண்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வெறுப்பு உணர்வு, மற்றும் தொழிற் கட்சியிலேயே மிகக் கடுமையான முறையில் பிளேயர் சார்பு, பிரெளன் சார்பு என்று உயர்ந்த செல்வாக்குத் தட்டுக்கள் முகாம்களாக பிரிந்து நிற்கும் நிலையில், தொழிற் கட்சியின் தேர்தல் மூலோபாய வல்லுநர்கள், தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரெளனுக்கு ஒரு மைய இடம் கொடுக்கப்படாவிட்டால், தோல்விகூட ஏற்படுவிடும் ஆபத்து இருக்கிறது என்று பிரதம மந்திரிக்கு கூறியுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துக் கணிப்புக்கள் பலமுறையும் பிரெளனை தொழிற்கட்சி தலைவராக பெரும்பான்மையானவர்கள் விரும்புவதாக காட்டியுள்ளன. கடந்த வாரம் Times/Yougov இணைந்து நடாத்திய கருத்துக் கணக்கின்படி, 47 சதவீதத்தினர் பொருளாதாரத்தை நல்ல முறையில் நடத்துவதற்கு தொழிற்கட்சியை நம்புவதாகவும், 29 சதவீதத்தினர்தான் கன்சர்வேட்டிவிற்கு இவ்வகையில் ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, 57 சதவீதத்தினர் பிளேயர் உண்மையைக் கூறுவார் என நம்புவதற்கு இல்லை என்றும் அது பற்றி 28 சதவீதத்தினர்தான் பிரெளனை நம்புவதற்கு இல்லை என்றும் கூறியுள்ளனர். பிரெளனின் நிதிமந்திரிப் பொறுப்பில், தொழிற் கட்சியின் பொருளாதார வெற்றி மீது பிளேயர் நம்பி இருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும், பொதுவாக "கடந்த 100 ஆண்டுகளில் மிகச் சிறந்த, வெற்றிகரமான, நிதி மந்திரியாக இவர்தான் இருந்திருக்கக் கூடும்" என்ற எண்ணமும் காணப்படுகிறது.

தொழிற் கட்சியுடைய பொருளாதார வெற்றி என்ற கூற்று ஒருபுறமும், டோரிக்கள் சுகாதார, கல்வி செலவீனங்களை இன்னும் குறைக்கக் கூடும் என்ற முன்கருத்தும், லேபருக்கு ஆதரவாக தேர்தல் முடியும் என்ற பொதுக் கருத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில், டோரிக்கள் செலவை குறைப்பது பற்றி கருத்துக்கூட தெரிவிக்கவில்லை; அவை மக்களிடையே பெரும் எதிர்ப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்பது அவர்கள் அறிந்ததே; கட்சித் துணைத்தலைவர் ஹோவர்ட் பிளைட், கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், செலவினங்கள் குறைக்கப்படுதல் "செயற்பட்டியலில் இடம் பெறும்" என்று கூறியதற்காக, அவரை கன்சர்வேட்டிவ் தலைவர் மைக்கேல் ஹோவர்ட் பதவி நீக்கம் செய்யுமாறு நேர்ந்தது. டோரிக்கள் பொதுச் செலவினங்கள் பற்றித் திட்டமிட்டுள்ளவை, தொழிற்கட்சியில் இருந்து அதிக வேறுபாடு கொண்டவை அல்ல; தேர்தல் பிரச்சாரத்தை பொருளாதார கொள்கை பற்றிக் குறிப்பிடாமலேயே அவர்கள் நடத்தி வருகின்றனர்; குடியேறுபவர்கள், புகலிடம் நாடுவோர் பற்றி தொழிற் கட்சியையும் விடக் கூடுதலான முறையில்தான் நாட்டுணர்வு அச்சங்களை டோரிக்கள் எழுப்பியுள்ளனர். The Institute for Fiscal Studies) நிதி ஆய்வுக் கூடம், தொழிற்கட்சி மற்றும் டோரி இவற்றின் நிதித் திட்டங்களில் தேசிய உற்பத்தி முறையில் 2008 அளவில் 0.3 சதவீத வேறுபாடு கூடக் கிடையாது என்று கணித்துள்ளனர்.

பொருளாதாரத் துறையில் வெற்றி என்று தொழிற்கட்சி வெளியிடும் கருத்துக்களில் ஏதேனும் உண்மை உள்ளதா?

தொழிற்கட்சி அரசாங்கம் தன்னுடைய எட்டு ஆண்டு காலத்தில் சாதித்துள்ள வளர்ச்சி மட்டங்கள், மிக அசாதாரணமான சூழ்நிலையின் விளைவுகளாகும். 1997ம் ஆண்டு பதவிக்கு வந்த தொழிற்கட்சி அரசாங்கம் Bank of England ஐ சுதந்திரமான அமைப்பாக ஆக்கி, அதற்கு இங்கிலாந்து இன் நிதிக் கொள்கை பற்றிய கட்டுப்பாட்டைக் கொடுத்தல் என்ற முடிவு, நிதிச் சந்தைகளுக்கு பெரும் உவகையை கொடுத்தது. அதனுடைய முதல் பதவிக்காலத்தில், பிரெளன் பொதுச் செலவினங்கள் பெரும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வகையில் "நிதான செலவாளர்" என்ற புகழைப் படிப்படியாக அடைந்தார். ஆனால் முக்கியமாக பிரிட்டன்தான் மேற்கு ஐரோப்பாவிலேயே முதலீடு செய்பவர்களுக்கு பெரும் கவர்ச்சியை கொடுத்திருந்தது; ஏனெனில் வேலை உரிமைகள், ஊதிய விகிதங்கள் இவற்றின் மீதான பெரும் தாக்குதல்கள், குறைப்புக்கள் என்று தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்டிருந்த நிலையில், பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தொழிற்கட்சியை நம்ப முடியும். அந்நிலை 18 ஆண்டுகால டோரி ஆட்சியிலேயே தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் காட்டிக் கொடுப்புக்களால் நிறைவு செய்யப்பட்டிருந்தது. Economist தேர்தல் பற்றிய தகவலில் குறிப்பிட்டுள்ளதுபோல், "காலம் செல்லச் செல்ல, இந்தக் கசப்பான மருந்து இன்னும் கூடுதலான, வளைந்து கொடுக்கக் கூடிய தொழிலாளர் சந்தையைக் கொடுத்துவிட்டது." டோரிக்கள் காலத்தில் பொதுநல நன்மைகளின் தரங்கள் வெட்டப்படு மற்றும் தொழிலாளர்கள் குறைவூதிய வேலைகளை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு வேலையின்மை என்பது இதுகாறும் இல்லாத குறைந்த அளவான 4.7 சதவீதத்தில் உள்ளது.

பொருளாதார வளர்ச்சிப் பிரிவில், தொழிற்கட்சி ஆட்சியின் கீழ் பெருத்த மாற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. Economist விளக்கியுள்ளபடி, 1996ல் இருந்து 2003 வரை ஆண்டு ஒன்றுக்கு தலைவீத வருவாய் வளர்ச்சி 2.4 சதவீதம் என்பது, 1982ல் இருந்து 1996 வரை இருந்த சராசரியை விட வேறுபாட்டை காட்டவில்லை. ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இவற்றிற்கு எதிராக இங்கிலாந்திற்கு இது போட்டியில் சாதகத்தை கொடுத்தது; அவ்விரு நாடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு மனிதருக்கு 1.3 சதவிகிதம், 1.2 சதவிகிதம் என்று 1990ல் இருந்து 2003க்குள் உயர்ந்தது.

தொழிற்கட்சியின் இரண்டாம் பதவிக்காலம் வந்த நிலையில், பூகோளப் பொருளாதாரத்தில் அது முன்னரே வாரிசுரிமையாக பெற்றிருந்த நலன்கள் குறைமதிப்பிற்கு ஏற்கனவே உட்பட்டுவிட்டன; பிரெளன், பிரிட்டனை பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளாமல் இருப்பதற்காக நுகர்வோர் செலவினங்களை ஊக்குவித்தார்; இதனால் மிகப் பெரிய கடன்சுமை வளர்ச்சி அடைந்தது; பொதுச் செலவும் கூடிற்று. வீட்டு விலைகளில் ஏற்பட்ட கடும் உயர்வு, இது கிட்டத்தட்ட 50 சதவீதம் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று சர்வதேச நாணயநிதிய அமைப்பு கூறியுள்ளது, Economist உடைய கருத்தின்படி, "ஒய்வூதியங்கள் பற்றிய கவலை, பங்குச் சந்தை சரிவு பற்றிய கவலை ஆகியவை சேமிப்பை உயர்த்திய நிலையில் நுகர்வோர் செலவு செய்வதற்கு நல்ல ஆதரவைக் கொடுத்திருந்தது. இதன் விளைவாக நுகர்வோர்தான், கடந்த எட்டு ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) முக்கிய தூணாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது."

இதன் விளைவாக நுகர்வோர் கடன் மிகப் பெரிய மட்டத்திற்கு உயர்ந்து விட்டது; இங்கிலாந்தின் மொத்த தனி நபர்களின் கடன் இப்பொழுது கிட்டத்தட்ட 1 டிரில்லியன் பவுண்டுகளை எட்ட உள்ளது.

கடுமையாக அரசாங்கச் செலவினங்களை குறைத்தல் என்பது முதலாம் பதவிகாலத்தைவிட இரண்டாம் பதவிகாலத்தில் சற்று தளர்த்தப்பட்டது. முதல் காலத்தில் மிக அதிக எஞ்சிய தொகை, நிதிச்சந்தைகளில் தொழிற்கட்சியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக, திரட்டி வைக்கப்பட்டிருந்தது. 2004-2005ல் பொது நிதியத்தில் பற்றாக்குறை 34 பில்லியன் பவுண்டுகள் என்று அதிகரித்தது; இது GDP யில் 2.9 சதவிகிதம் ஆகும்; முக்கிய முதலாளித்துவ நாடுகளில் அமெரிக்கா ஒன்றில்தான் இதைவிடக் கூடுதலான பற்றாக்குறை உள்ளது. இந்தக் கடனில் பாதி, ஈராக்கியப் போரை நடத்துவதற்காக எழுப்பப்பட்டது; ஆனால், முதல் பதவிக்காலத்தில் சிக்கன செலவின முறையைக் கொண்டதற்கு தொழிலாளர்கள் பெரும் எதிர்ப்பைக் காட்டியதால், சுகாதார செலவினங்கள் போன்றவற்றிற்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.

பொருளாதாரத்தின் உற்பத்தித்துறை பிரிட்டிஷ் உற்பத்தித்தொழிற்துறையில் 1997ல் ஆட்சிக்கு லேபர் வந்த பின்னர் 1மில்லியன் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்த சரிவு நிலையை கண்டது. இதைச் சரி சமன் செய்யும் வகையில் திறமை அதிகமற்ற, குறைவூதியப் பணித் துறையில் வேலைகள் பெருகியுள்ளன. உற்பத்தித் திறனும் முன்னேறவில்லை. Economist உடைய கருத்தின்படி, "2003ம் ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு உற்பத்தித்திறன் பிரான்சில் 25 சதவீதம் கூடுதலாகவும், அமெரிக்காவில் 16 சதவீதம் அதிகமாகவும், ஜேர்மனியில் இருப்பது 8 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. பிரிட்டனில் தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதற்கு காரணம் தொழிலாளி மீது முதலீடு செய்யப்படும் மூலதனம் குறைவாகும்; வணிகங்கள் நவீனமுறையை கொள்ளவில்லை; மேலும் தொழிலாளர்கள் குறைந்த தேர்ச்சியைத்தான் கொண்டுள்ளனர்."

பிரெளன் தன்னுடைய புத்திசாலித்தனமான நிர்வாகத்தால் பிரிட்டனுடைய பொருளாதாரத்திற்கு ஒரு ஆரோக்கியத்தைக் கொடுத்துள்ளார் என்பது தொழிற்கட்சி உருவாக்கிய கட்டுக்கதையாகும். நுகர்வோர் கடனால் உந்தப்படும் பொருளாதாரத்தின் உண்மை நிலையானது மேலும் வீட்டு விலைகளில் ஒரு சரிவை எதிர்நோக்கியுள்ளது; அது நுகர்வோர் செலவினங்களை பெரிதும் குறைத்து, வறுமையையும், வேலையின்மையையும் அதற்கேற்றாற்போல் வளர்ச்சி அடைய செய்துவிடும்.

தான் கவனத்துடன் வளர்த்தெடுத்த திறமையான நிர்வாகம் என்ற போர்வையில் பிரிட்டனின் பொருளாதாரம் வலிமையற்றிருப்பதை மட்டும் மூடி மறைக்க பிரெளன் முயன்றிருக்கவில்லை. சர்வதேச நிதி மற்றும் நிதிக் குழுவின் தலைவர் என்ற முறையில் உலகப் பொருளாதாரம் எத்தகைய ஆபத்தான நிலையில் உள்ளது என்பதும், அதை ஒட்டி பிரிட்டனின் வருங்கால வளர்ச்சி விகிதம் எப்படி ஒட்டியுள்ளது என்பதையும் அவர் நன்கு அறிவார். (See "World markets expecting further falls".)

ஆயினும் கூட, தன்னுடைய அடுத்த பதவிக்காலத்தில் பொருளாதாரக் கொள்கைகள் 2005ல் 3 முதல் 3.5 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் காட்டும் என்று பிரெளன் கணித்துள்ளார்; வருங்காலத்தில் இன்னும் இது அதிகமாகக் கூடும் என்றும் கூறியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுளில் சரிவுற்றிருக்கும், வரிமூலம் கிடைக்கும் வருவாய்கள் திடீரென்று மீண்டும் உயரத்தொடங்கி அரசாங்கத்தின் பற்றாக்குறையை தீர்த்துவிடும் என்று அவர் நம்புகிறார். Financial Times இன் கருத்தின்படி, இங்கிலாந்தின் கருவூலத்துறை பொருளாதார நிபுணர்கள் 41 பேரில் 2 பேர்தான் தன்னுடைய கணிப்புக்களின்படி பிரெளன் செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

பொதுச் செலவை குறைக்கும்படி சர்வதேச நாணய நிதியம் பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளபோது, பிரெளன் நிதியத்தின் நிர்வாக இயக்குனரான Rodrigo de Rato விற்கு தாக்குதல் அறிக்கை கொடுத்தார். வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அறிவித்ததாவது: "சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கு தக்க மரியாதையுடன் இதைக் கூறுவேன், அவர்கள் பிரிட்டனுடைய வளர்ச்சி பற்றி தவறாகப் போன கருத்துக்களை முன்னர் கூறினர். கணிக்கப்பட்டதைவிட கூடுதலான வளர்ச்சி பிரிட்டனால் அடையப்பட்டது என்பதுதான் எங்கள் சாதிப்பு; சர்வதேச நாணய நிதியம் கொடுத்துள்ள புள்ளி விவரங்கள் தவறானவை. எனவேதான் இந்தப் பரிந்துரைகளை நாங்கள் ஏற்பதற்கில்லை."

அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்களை தன்னுடைய பொருளாதார இயக்கத்தின் மூலம் ஐயத்திற்கு இடமின்றி பிரெளன் சீற்றத்திற்குட்படுத்தியுள்ளார். தொழிற்கட்சி, டோரி இரண்டு கட்சிகளுமே ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைகளைத்தான் கொண்டிருகிறது என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறைகூறியுள்ளது. பிரிட்டனில் மூலதனம் குறைந்துள்ளது பற்றி அது சுட்டிக்காட்டி அது தெரிவிப்பதாவது: "மாற்றுப்பாதை உண்மையில் செலவைக் குறைப்பது என்பதாகும்; அதுவும் தன்னுடைய செலவழிக்கும் போக்கை எந்த அளவிற்கு பிளேயரின் அரசாங்கம் வெளிக்காட்டியுள்ளது என்பதைப் பார்க்கும் போது, இது முக்கியமாகும்."

தொழிற்கட்சியின் கூடுதலான பொதுச் செலவினம் பற்றி தன்னுடைய விருப்பமின்மையை காட்டும் வகையில் செய்தி ஊடகப் பிரமுகரான ரூபர்ட் மர்டோக் பெரும் தயக்கத்துடன் மீண்டும் தொழிற்கட்சிக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். Sun நாளேடு, "இன்னும் ஒரு வாய்ப்பு" என்ற தலைப்பில் பிளேயரையும், பிரெளனையும், "ஈராக்கில் உறுதியாக நிற்பதற்காகப்" பெரிதும் புகழ்ந்து, "வேறு மாற்று எதுவும் தெரியாத நிலையில்" இவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அரசாங்க நிதியங்களை பொறுத்தவரையில், அது, "அரசாங்கம் சீர்திருத்தங்களை செயல்படுத்தாமல், பணத்தை இந்தப் பசியினால், தடுமாறிக்கொண்டிருக்கும் மிருகத்திற்கு ஊட்டம் கொடுப்பதற்குப் பயன்படுத்தினால், நம்முடைய கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணம் பிரிட்டனின் அழிவிற்குத்தான் வழிவகை செய்யும்" என்றும் எச்சரித்தது.

பிபிசி வானொலியின் "இன்று" நிகழ்ச்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், மர்டோக்கின் ஆலோசகரான, ஹட்சன் கல்விக்கூடத்தில் பொருளாதாரக் கொள்கை இயக்குனராக இருக்கும் Dr. Irwin Stetlzer, தொழிற்கட்சியின் பொதுச் செலவினங்கள் இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறனில் 40 சதவிகிதம் உள்ளது என்று குறை கூறியுள்ளார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுடனைய குறைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்தைத் தெரிவித்த அவர் மேலும் கூறினார்; பற்றாக்குறை மட்டுமே முக்கியம் அல்ல, பிளேயரும், பிரெளனும் "புதிய கன்சர்வேடிவ்" கொள்கையை முழுமனத்துடன் ஏற்கத் தயங்குவதுதான் முக்கியமான பொருள் என்று வாதிட்டார். டோரிக்கள் "அமெரிக்காவில் புதிய கன்சர்வேடிவ்கள், உங்கள் கொள்களை பின்பற்றி தொடர்கின்றனர்; நீங்களோ கணக்கு வழக்குகள் எழுதுவதில் பேரார்வம் செலுத்துகிறீர்கள்; ஆனால் எங்கு பார்த்தாலும் கரும் ஓட்டைகளும் பற்றாக்குறைகளும் டோரிக்காலத்தில் இருந்ததை விடக் கூடுதலாக இப்பொழுது இருப்பது போல் தோன்றுகிறது; இதனால்தான் தொழிற்கட்சி கொள்கைகளினால் ஏற்பட்டுள்ள உயர் செலவினங்களுக்கு மாற்றுத் தேடுதல் ஒரு முடமாக்கும் செயலாக உள்ளது" என்று கூறினார்.

மர்டோக்கிற்கும் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கும் இடைத்தரகர் போல் Steltzer நடந்து கொள்ளுகிறார். தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவர்கள் தங்களுடைய போர்வெறி கொள்கை, அமெரிக்காவின் இளைய பங்காளி என்று செயல்படுவதற்காக, தொடர்ந்த ஆதரவை பெற முடியாது என்று மிகத் திறமையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் உள்நாட்டு விவகாரங்களிலும் திறமையைக் காட்ட வேண்டும் என்றும் பொதுநல அரசில் எஞ்சியுள்ள நலன்களை அகற்ற வேண்டும் என்றும், பெருநிறுவனங்களின் மீதான வரிகளை இன்னும் குறைக்கவேண்டும் என்றும், தொழிலாள வர்க்கம் இவற்றிற்கு கொடுக்கும் எதிர்ப்பை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சியின் தேர்தல் அறிக்கை மருந்து கொடுப்பது போன்ற அறிவிப்புக்களை கல்வி, சுகாதாரம், சமூகப் பணிகள் இவற்றிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தொழிற் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த நிலைப்பாடுதான் தொழிற் கட்சியின் மூன்றாம் பதவிக்காலத்தின் கூறுபாடுகளாக விளங்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved