World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Constitutional Court legitimises new elections

ஜேர்மனி: புதிய தேர்தல்களை அரசியலமைப்பு நீதிமன்றம் சட்டரீதியாக்குகின்றது

Statement of the Partei für Soziale Gleichheit
27 August 2005

Back to screen version

அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் அரசாங்கம் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த அழைப்பு விடுத்திருப்பது, ஜேர்மனியின் அரசியலமைப்பிற்கு உடன்பட்டதுதான் என்று வியாழனன்று கார்ல்ஸ்ரூகேயிலுள்ள அரசியலமைப்பு நீதிமன்றம் ஏழு நீதிபதிகளுக்கு ஒருவர் என்ற வாக்கெடுப்பில் தீர்ப்பளித்துள்ளது. செப்டம்பர் 18-ல் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்ற (Bundestag) தேர்தலுக்கு இனி தடை எதுவுமில்லை.

நீதிமன்றத்தின் முடிவு பாரதூரமான விளைவுகளைக் கொண்டது. அதிபர் மிகப்பெரும்பாலான மக்கள் எதிர்த்து நிற்கின்ற கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் என்று மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியை அது சட்டப்பூர்வமாக்குகிறது.

உரிய காலத்திற்கு முன்னரே நாடாளுமன்றத்தை கலைப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கருதப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களான வெர்னர் சூல்ஸ் (பசுமைக் கட்சி) மற்றும் ஜெலீனா ஹோப்மேன் (சமூக ஜனநாயகக்கட்சி - SPD) தாக்கல் செய்திருந்த புகாரை நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது. வாக்கெடுப்பில் தோல்வியடைய வேண்டும் என்ற திட்டமிட்ட நோக்கோடு ஜூலை 1 தேதி அதிபர் ஷ்ரோடர் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்த பின்னர், ஜூலை 29-ல் மத்திய ஜனாதிபதி ஹோஸ்ட் கோலர் நாடாளுமன்றத்தை கலைத்தார். தமது கொள்கைகளை ஸ்திரமாக்கவும் ஒரு நம்பத்தகுந்த அடிப்படையில் செயல்படுத்துவதற்கு பெரும்பான்மை தமக்கு இல்லையென்று ஷ்ரோடர் அந்தத் தீர்மானத்தை நியாயப்படுத்தினார்.

அதிபர் எப்போதுமே நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிடவில்லை என்று சுட்டிக்காட்டி சூல்ஸ்சும், ஹோப்மேனும் தங்களது புகார்களை நியாயப்படுத்தினர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முதல் நாள், ஏறத்தாழ 40 சட்டங்களை நிறைவேற்றுவதில் SPD - பசுமைக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. நம்பிக்கையின் பிரச்சனையை காரணமாகக்கொண்டு ''தவறானது'' என்று அவர்கள் வாதிட்டனர். மேலும், ஜேர்மனி அரசியலமைப்பு திட்டவட்டமான பதவி காலத்தை நிர்ணயித்திருக்கிறது மற்றும் தன்னைத்தானே கலைத்துக்கொள்வதற்கு நாடாளுமன்றத்திற்கு எந்த உரிமையும் இல்லை.

எதிர்காலத்தில் அதிபர் நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடியவரா அல்லது ஷ்ரோடர் மற்றும் கோஹல்லர் வாதங்களின் அடிப்படையில் நாடாளுமன்றம் அதிபருக்கு பதிலளிக்கக்கூடியதா என்ற சொல்லாட்சி வினாவை அவர்கள் எழுப்பினர்.

அரசியலமைப்பு நீதிமன்றம் அந்த புகாரை ''ஆதாரமற்றது'' என்று புறக்கணித்துவிட்டது, மற்றும் அதன் மூலம் நாடாளுமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான அதிகாரத்தை கணிசமான அளவிற்கு வலுப்படுத்தியிருக்கிறது. முந்திய தீர்ப்புகளோடு ஒப்பிடும்போது, நீதிமன்றம் தற்போது அதிபர் தனது உசித முயற்சிகளை மேற்கொள்வதற்கான வழியை விரிவுபடுத்தியிருக்கிறது. ``நாடாளுமன்றத்தை கலைப்பதில் நேரடியாக ஒரு நம்பிக்கை தீர்மானமான`` கருத்தை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் நீதிமன்றம், அதிபர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை முற்றிலுமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அரசியலமைப்பு நீதிமன்றம் ''அதிபரின் அரசியல் பங்களிப்பையும் வலுப்படுத்தியிருக்கிறது அது எதிர்கால அரசாங்க தலைவர்கள் தங்கள் அவநம்பிக்கை உணர்வுகளை குடியரசின் மிகவும் முக்கியமான அரசியல் அளவுகோலாக கொள்வதற்கு அனுமதிக்க அவர்கள் அழைப்புவிடுவார்கள்`` என்று Spiegel On Line தனது அந்தத் தீர்ப்பு பற்றிய ஆரம்ப ஆய்வில் எழுதியது. ``எதிர்கால அதிபர்கள் புதிய தேர்தல்கள் அரசியல்ரீதியாக வாய்ப்பு என்றோ அல்லது தவிர்க்க முடியாதது என்றோ கருதுவார்களானால்.... அவர்களை இந்த அரசியலமைப்பு நீதிமன்றத்தால் தடுக்க முடியாது.

Süddeutsche Zeitung பத்திரிகையின் உள்நாட்டு விவகாரங்களுக்கான ஆசிரியர் ஹெரிபர்ட் பிரான்டில் மிக தொடக்கத்திலிருந்தே, ஷ்ரோடரின் கலைப்பு முயற்சிகளை எதிர்த்து வந்தவர், அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் "நேற்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறக்கூடியது, ஏனெனில் ஒரு ஏதேச்சதிகார முறையில் ஆட்சி நடத்துவதற்கு அரசியலமைப்பு அங்கீகார முத்திரையை அது வழங்குகிறது`` என்று கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி கோஹெல்லரின் வாதங்களை பெரும்பாலும் பின்பற்றுவதாக தீர்ப்பு உள்ளது, ஒரு ஸ்திரமான பெரும்பான்மை இன்னும் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்ற நிர்வாக உசித அதிகாரம் அதிபருக்கு அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

``ஒரு முன்கணித்துக் கூறக்கூடிய தன்மையின் அத்தகைய மதிப்பீடுகள் மற்றும் தனிப்பட்ட முறையில் உயர்ந்த கண்ணோட்டங்களோடு பின்னிப்பிணைந்து மற்றும் நிலவரத்தை மதிப்பீடு செய்வதாகும்`` இப்படித்தான் அந்த நீதிமன்றத்தின் துணைத் தலைவர் வின்பிரெய்ட் ஹாஸ்மர் அந்த நீதிமன்றத்தின் முடிவை நியாயப்படுத்தினார். மேலும் ``நம்பிக்கையின் கண்ணுக்குத் தெரியாத விலகல் மற்றும் அரிமானத்தின் தன்மை எளிதாக தவிர்த்துவிட முடியாதது மற்றும் அதை நீதிமன்ற வழக்குகளால் நிர்ணயிக்க முடியாது.`` என்று குறிப்பிட்டார்.

இந்த வழியில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது முற்றிலும் அகநிலை அளவுகளோடு இணைக்கப்பட்டிருக்கிறது, தேர்தல்களினால் முடிவு செய்யப்படும் உண்மையான நாடாளுமன்ற பெரும்பான்மைகள் முற்றிலும் சுதந்திரமாக செயல்படுவதாகும்.

1983-ல், இதுபோன்ற ஒப்புநோக்குகின்ற ஒரு வழக்கில் நீதிமன்றம் நாடாளுமன்றத்தை ஹெல்முட் கோல் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்----CDU) அரசாங்கம் கலைத்ததை பற்றி தீர்ப்பளித்தபோது, அரசாங்கத்தின் கொள்கையை செயல்படுத்த முடியாத ''நெருக்கடி'' ஒன்று மட்டுமே ஒரு நம்பிக்கை கோருகின்ற தீர்மானம் கொண்டு வருவதற்கு போதுமான காரணம் ஆகாது என்று குறிப்பிட்டிருக்கிறது. தற்போது அந்தக் கட்டுப்பாட்டை வெளிப்படையாக கைவிட்டிருக்கிறது.

``அப்பொழுது அதிபர் நாடாளுமன்ற ஆதரவை இழந்துவிடும் ஒழுங்குமுறையை தவிர்ப்பதற்காக, அவரின் அரசியல் கருத்துரு மற்றும் மற்றொரு கொள்கையை பின்தொடர்வதற்காக ஒரு அத்தியாவசிய அம்சத்தை கைவிடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டு, ஒரு அரசாங்கம் செயல்படும் திறனை இழந்துவிட்டது`` என்று தீர்ப்பின் வாசகம் அமைந்திருக்கிறது.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்றம் அரசாங்கத்திற்கு கடமைப்பட்டது என்பதை கீழறுக்கின்ற வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அதிபரின் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் தற்போது அவர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். இந்த வழியில், நாடாளுமன்றத்தை ஒழுங்குபடுத்தி, அடங்காத உறுப்பினர்களை மிரட்டுவதற்கு அவருக்கு வலுவான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு எதிராக ஒரு சதி

ஜேர்மன் அரசியலமைப்பின் எந்த கருத்தியலையும் (அடிப்படை சட்டம்) சோசலிச சமத்துவக் கட்சி புறக்கணிக்கிறது. நாஜி ஆட்சியினர் இந்த குற்றங்களால் ஒட்டுமொத்தமாக இழிவுற்ற முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவும், மீட்கவும் இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் அது உருவாக்கப்பட்டது. அது முற்றிலும் ஜனநாயக விரோத உணர்வுகளால் ஊக்குவிக்கப்பட்டு அரசியல் நிகழ்ச்சி போக்கில் வாக்காளர்களது செல்வாக்கை குறைப்பதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டது. அது செயல்படத் தொடங்கிய 1949 அல்லது 1990 காலத்தில்----கிழக்கு ஜேர்மனியுடன் மறு ஐக்கியம் தொடரப்பட்டது------அந்த அரசியல் சட்டம் பொதுமக்களது வாக்குப்பதிவின் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மக்கள் பிரதிநிதி அல்லது மறைமுக ஜனநாயகக் கொள்கை அடிப்படையில் இந்த அரசியலமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது, இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இறையாண்மை கொண்டவர்கள் வாக்காளர்களின் நேரடி தலையீடு இல்லாமல் அரசியல் முடிவுகளை எடுக்க முடியும். அதில் தேசிய அமைப்புக்களை ஸ்திரப்படுத்துவதற்கும், வாக்காளர்கள் நேரடியாக செல்வாக்கைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கும் பல்வேறு விதிகள் உள்ளன.

சிறிய கட்சிகள் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக (பதிவான வாக்குகளில்) 5 சதவீத வாக்குகளை பெற்றாக வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அடிக்கடி அரசாங்கங்கள் மாறி புதிய தேர்தல்களை நடத்துவதை தவிர்ப்பதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பிற்கு வகை செய்யப்பட்டது, அதன்படி வாரிசு தேந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில்தான் அதிபரை கவிழ்க்க முடியும் என்ற விதி அடிப்படை சட்டத்தில் சேர்க்கப்பட்டது மற்றும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள உரிமைக்கு கண்டிப்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிபரோ அல்லது அவரது பெரும்பான்மையோ மிகக் குறுகலான கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

இது முதலாளித்துவ முறையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை, எனவே அந்த விதிகளை தற்காத்து நிற்பது நமது பணியல்ல, ஆனால், தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள தகராறு அடிப்படையான வர்க்க பிரச்சனைகளை எழுப்புகிறது இதற்கு நாமோ அல்லது ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமோ புறக்கணித்துவிட முடியாது. இந்தத் தீர்ப்பின் முழு விளைபயன்களை புரிந்துகொள்வதற்கு, அந்த தீர்ப்பு எழுந்த அரசியல் சூழ்நிலையை ஆராய்ந்தாக வேண்டும்.

நாடாளுமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னரே கலைப்பதற்கு ஷ்ரோடர் முடிவு செய்தது அவரது பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளுக்கு பொதுமக்களிடையே பெருகி வந்த எதிர்ப்பின் விளைவுதான் அவற்றின் விளைவாக 5 மில்லியன் மக்கள் வேலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர் மற்றும் வறுமை வேகமாக வளர்ந்தது. ``2010 செயற்திட்டம்'' மற்றும் ஹார்ட்ஸ் IV-க்கான எதிர்ப்பு பெரும் எடுப்பில் கண்டனப் பேரணிகளாக உருவாகின மற்றும் வாக்குகள் பாரியளவிற்கு வீழ்ச்சியடைந்தும் SPD உறுப்பினர்கள் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து விட்டன. ஜூலை 1-ல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்த போது ஷ்ரோடரே விவரமாக வர்ணித்திருந்ததைப் போல் இந்த எதிர்ப்பு SPD நாடாளுமன்ற பிரிவிற்கும் பரவும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டது.

``செயற்திட்டம் 2010'' மேற்கொள்ளப்பட்ட பின்னர் SPD எல்லா மாநிலத் தேர்தல்களிலும் மற்றும் ஐரோப்பிய தேர்தலிலும் வாக்குகளை இழந்தது----பல தேர்தல்களில் அது மாநில அரசாங்கங்களை இழந்தது`` என்று அவர் குறிப்பிட்டார். ``இந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக தந்த உயர்ந்த விலை அது. நாங்கள் இந்த உயர்ந்த விலையை தர வேண்டி வந்தது என்ற உண்மை-----மிகவும் அண்மைகாலத்தில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் வெளியாயிற்று-----அதன் மூலம் எனது கட்சிக்குள்ளேயும், எனது நாடாளுமன்ற பிரிவிற்குள்ளேயும் SPD மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நிலை குறித்து கடுமையான விவாதங்களை கிளறிவிட்டது. எங்களது கூட்டணி பங்குதாரருக்கும் இதேபோன்ற நிலை பொருந்துவதாக அமைந்திருக்கிறது.`` சில SPD உறுப்பினர்கள், SPD முன்னாள் தலைவர் ஓஸ்கர் லாபொன்டைன் கீழ் செயல்படும் ''ஒரு பின்தங்கிய-பார்வை கொண்ட மக்களைக் கவரும் வாய்வீச்சு கொண்ட இடதுசாரி கட்சியில்'' சேர்ந்து விடுவதாக அச்சுறுத்தினர் என்று ஷ்ரோடர் மேலும் கூறினார்.

இதன் மூலம் ஷ்ரோடர் தெளிவுபடுத்தியிருப்பது என்னவென்றால், தனது சொந்த வாக்காளர்கள் மற்றும் உறுப்பினர்களது அழுத்தங்களுக்கு இடம் கொடுப்பதிலும் பார்க்க பழைமைவாத எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி (FDP) கூட்டணி கையில் ஆட்சியை தான் ஒப்படைப்பேன் என்பதாகும். அதன் மூலம் அவர் SPD கட்சி வகுத்தளித்த பாரம்பரிய வழியைப் பின்பற்றுகிறார், அது SPD திரும்பத்திரும்ப அடிமட்டத்து அழுத்தங்களை எதிர்த்து நிற்க முடியாமல் அல்லது அடக்க முடியாமல் வலதுசாரிகளிடம் ஆட்சிப் பொறுப்பை மாற்றம் செய்வதாகும்.

வைமார் குடியரசின் கடைசி சமூக ஜனநாயக அதிபர் ஹெர்மன் முல்லரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாதையை, 1930-ல் கத்தோலிக் மையம் Heinrich Brüning-யிடம் அதிகாரத்தை அவர் கீழ்படுத்தினார், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக Brüning அறிமுகப்படுத்திய அவசர நிலை நடவடிக்கைகளை ஆதரித்தார். 1972-ல், SPD அதிபர் வில்லி பிராண்ட் போராட்டம் நடத்தாமல் Rainer Barzel-விடம் CDU சரணடைய தயாராக இருந்தார், அப்போது அவர் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியது தொடர்பான ஒரு மோசடியில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், அவர் ஹெல்முட் சிமித்தின் தலைமையிலான SPD-ன் வலதுசாரி அணியிடம் ஆட்சியை ஒப்படைத்தார். இறுதியாக, 1999-ல், ஓஸ்கர் லாபொன்டைன் அரசாங்கப் பதவியை உதறித்தள்ளிவிட்டு கட்சி தலைமையை எந்தவிதமான போராட்டம் இன்றி எதிர்த்துப் போராடாமல் பெருவர்த்தகங்களின் அழுத்தங்கள் காரணமாக ஓஸ்கர் லாபொன்டைன் ஷ்ரோடரிடம் கட்சித் தலைமையை ஒப்படைத்தார்.

மிகப்பெருமளவிற்கு மக்களது எதிர்ப்பிற்கு இலக்காகிவிட்ட செயற்திட்டம் 2010-தை சட்டபூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்டுதான், அடுத்த மாதம் முன்கூட்டியே தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பை நியாயப்படுத்துவதற்கு ஷ்ரோடர் காரணம் கூறும்போது ``இந்த செயல்திட்டம் நீடிக்கப்பட்டு மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றால்--- அதற்கு----ஒரு தேர்தல் தவிர்க்க முடியாதது என்பதற்கு ஒரு சட்டரீதியானவை கிடைத்தாக வேண்டும் `` என்று குறிப்பிட்டார்.

புதிய தேர்தல்களுக்கான நெருக்கடியை தோற்றுவித்த ஷ்ரோடர் வாக்காளர்களை நோக்கி ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்: ``செயல்திட்டம் 2010-தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அதன் விளைவாக வருகின்ற அனைத்தையும் ஏற்க வேண்டும் அல்லது உங்களுக்கு வலதுசாரி யூனியன் கட்சிகளின் தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் கிடைக்கும். அக்கட்சிகளின் தலைமையிலான அரசாங்கம் இதைவிட கடுமையான பாணியில் இந்த 'சீர்திருத்தங்களை' முன்னெடுத்துச் செல்லும்.``

இந்தத் தேர்தலில், பொதுமக்களில் மிகப்பரவலான பெரும்பான்மை பிரிவினர் தற்போது நடைமுறையிலுள்ள சமூக அரசியல் வளர்ச்சிகளுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்கு சிறிதுகூட வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தை கலைத்ததன் மூலம் வாக்காளர்கள் தற்போது முடிவு செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஜனாதிபதி கோலர் நியாயப்படுத்தியிருந்தாலும் உண்மையிலேயே, ஷ்ரோடரின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் வாக்களிக்கின்ற உரிமைகளையே இழந்து நிற்கிறார்கள்.

அரசியலமைப்பு நீதிமனறத்தின் இந்த தீர்ப்பின் மூலம், பொதுமக்களுக்கு எதிரான இந்த சதிச் செயலின் பின்னணியில் எல்லா தேசிய அமைப்புக்களும் திரண்டிருக்கின்றன: அவை நிர்வாகம், நாடாளுமன்றம், ஜனாதிபதி, மற்றும் இந்த நாட்டின் உச்சநீதிமன்றம். எல்லா பெரிய அரசியல் கட்சிகளும், அவற்றிற்கு மேலாக SPD-யும், நீதிமன்றத்தின் முடிவை உற்சாகமாக வரவேற்றுள்ளன. SPD யின் உள்விவகார பேச்சாளர் Dieter Wiefelspuetz இன்றைய தினத்திற்கு அப்பாலும் இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவமும் சிறப்பும் நீடித்துக் கொண்டிருக்கும் என்று கூறினார்.

உண்மைதான்! முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதற்கான சட்டம் மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றம் நிர்வாகத் தரப்பின் அதிகாரங்களை விரிவுபடுத்தியிருப்பது ஆகியவற்றின் பொருள் என்னவென்றால் ஆளும் செல்வந்தத்தட்டினர் தற்போது உழைக்கும் மக்களுக்கிடையே நிலவிவருகின்ற கடுமையான எதிர்ப்பையும் மீறி ஜனநாயக உரிமைகள் மீதும் சமூக உரிமைகள் மீதும் அடுத்த சுற்றுத் தாக்குதல்களை நடத்துவதற்கு இப்போது ஒரு ஆயத்த நிலையில் இருக்கின்றன. இந்தத் தேர்தலில் கிடைக்கின்ற பெரும்பான்மையின் தன்மையை விட்டுவிட்டு பார்ப்போமானால்----யூனியன் கட்சிகளின் ஒரு கூட்டணி மற்றும் FDP, யூனியன் கட்சிகள் மற்றும் SDP-ன் ஒரு மகத்தான கூட்டணி அல்லது (அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு) SPD-பசுமைக் கட்சி கூட்டணி நீடித்தாலும் இந்தத் தாக்குதல்கள் தீவிரமாகும்.

செயல்திட்டம் 2010-தில் எந்த வகையிலும் குறைப்பு எதையும் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று SPD மற்றும் பசுமைக் கட்சிக்காரர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தி விட்டனர். ஜேர்மனியில் தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வருமான அடிப்படையிலான சந்தா செலுத்தும் முறையாக மாற்றிவிடவும், ஒரே சீரான வரிவிதிப்பு விகிதங்களை கொண்டு வரவும், யூனியன் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலன்புரிக் கொள்கை கைவிடப்படும்---- அதனால் ஜேர்மனி வரலாற்றிலேயே மிகபெரும் அளவிற்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து பணக்காரர்களுக்கு வருமானம் மற்றும் செல்வவுடைமை மறுபங்கீடு செய்யப்படும். இந்த புதிய விதிகளின்படி, ஒரு தொழிற்பயிற்சி பெறாத ஒரு தொழிலாளி தனது சுகாதார காப்பீட்டிற்கு ஒரு கம்பெனி நிர்வாகி செலுத்துகிற அளவிற்கு காப்பீட்டு சந்தாவையும் வரிவிகிதத்தையும் செலுத்தியாக வேண்டும். இதுதவிர, விடுமுறை விருப்ப ஊதியத்திற்கு வரிவிதிப்பு, பயண உதவித்தொகை இரத்துசெய்வதில், பணிமுறை மாற்று (shifts) மற்றும் ஞாயிறு பணிகளுக்காக காப்பீடு கட்டணத்தின் வரிவிதிப்பால் நிதியை பணக்காரர்களுக்கு பாதியாக வரியை குறைக்கின்றது. ஆக, இரவு பணிமுறை மாற்றில் பணியாற்றுகின்ற ஒரு செவிலியர் கோடீஸ்வரரின் வரிவெட்டுக்களுக்காக பணம் செலுத்துகின்ற நிலை ஏற்படுகிறது.

எந்தவிதமான ஜனநாயக அதிகார கட்டுப்பாடுகளும் சமன்படுத்தும் நிலைகளும் இல்லாத ஒரு எதேச்சதிகார ஆட்சியினால்தான் அத்தகைய நடவடிக்கைகளை அமுல்படுத்த முடியும். தற்போது அரசியலமைப்பு நீதிமன்றத்தால் உறுதிபடுத்தப்பட்டுள்ள SPD-ன் முயற்சியின் காரணமாக அத்தகையதொரு சாத்தியக்கூறுள்ள ஆட்சி உருவாவது திட்டவட்டமான வாய்ப்புள்ளதாக ஆகிவிட்டது.

சட்ட நெறிமுறைகளுக்கு சிடுமூஞ்சித்தனமான அணுகுமுறை

அரசின் அரசியலமைப்பு கட்டமைப்பில் ஜனநாயகத்திற்கு எதிரான வழிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஆளும் செல்வந்தத்தட்டுக்களை சேர்ந்த அனைத்து தரப்பினரும் முடிவு செய்துவிட்டார்கள் என்பதை காட்டுகின்ற வகையில் பல தசாப்தங்களாக மீற முடியாதது என்று கருதப்பட்டு வந்த சட்ட நெறிமுறைகளை மிக எளிதாக அரசியலமைப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த வகையில் அதன் உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய ஆபத்தாகும். இதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்த சட்ட நடைமுறைகள் சிதைக்கப்படும்போது எதேச்சதிகார ஆட்சி வடிவங்கள் தங்களது சொந்த இயல்பான முறைகளால் முன்னேறுகின்ற நிலை ஏற்படும்.

ஒரு சட்ட நிபுணரான ஹெர்பர்ட் பிரான்டிலே Süddeutsche Zeitung-கில் இந்த அரசியலமைப்பு நீதிமன்றத்தால் கையாளப்பட்ட ஒழுங்கு முறையற்ற வாதத்தை சரியாக சுட்டிக் காட்டியுள்ளார். ``விளைவுகளுக்கு முதலில் வந்துவிட்டு பின்னர் காரணங்களை அதன்பிறகு தேடுவதாகத்தான் இந்தத் தீர்ப்புகள் தோன்றுகின்றன. அந்த விவகாரத்தை ஆராய்வதாக கருதிக் கொண்டு நீதிமன்றம் செயல்பட்டிருக்கிறது. உண்மையிலேயே, நீதிமன்றம் எதையும் ஆராயவில்லை`` என்று அவர் எழுதுகிறார்.

தனது சொந்த சட்டநெறி முறைகளை ஆளும் செல்வந்தத்தட்டினர் மிக அலட்சியமாகவும், சிடுமூஞ்சிப் போக்குடன் நடந்துகொள்வது ஒரு சர்வதேச இயல்நிகழ்ச்சியாகும். வழக்கமாக குறுகியகால அரசியல் முடிவுகளின் நலன்களைக் கொண்டு, பெருவர்த்தகங்கள் கட்டளைக்கேற்ப, நீண்ட நெடுங்காலமாக முதலாளித்துவ சமுதாயத்தின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த அடிப்படை சட்ட நெறிமுறைகள் துச்சமாக தூக்கி எறியப்படுகின்றன.

அமெரிக்காவில் புஷ் அரசாங்கம் பதவிக்கு வந்ததை இந்த வெளிச்சத்தில்தான் புரிந்துகொள்ள முடியும்.

1998-1999-ல் ஒரு சொற்ப செக்ஸ் முறைகேட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை (பில் கிளிண்டன்) பதவியிலிருந்து நீக்கும் நோக்கத்திற்காக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதுடன், ஒரு வலதுசாரி சதி முன்னெடுக்கப்பட்டது. இச்சதி செயலுக்கு ஆரம்பகட்ட உந்துசக்தியாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது ஒரு சிவில் விவகாரத்தில் கிளிண்டன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்தது, (அது பாலா ஜோன்ஸ் பாலியல் துஷ்பிரயோகம் பற்றியதான) சிவில் வழக்கு அந்த விவகாரம் நடைபெற்றதாக கூறப்பட்ட நேரத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் அதிகாரபூர்வமான கடமைக்கும், அந்த விவகாரத்திற்கும் சம்மந்தமில்லை.

ஓராண்டிற்கு பின்னர், புளோரிடா மாகாணத்தில் பதிவான வாக்குகளை திரும்ப எண்ணக்கூடாது என்று தீர்ப்பளித்ததன் மூலம் ஜனாதிபதி தேர்தலையே புஷ் கொள்ளையடிப்பதற்கு அதே நீதிமன்றம் உதவியது.

2003-ல், வலதுசாரி குடியரசுக் கட்சிக்காரர்கள் கலிஃபோர்னியாவின் ஜனநாயகக் கட்சி கவர்னர் கிரே டேவிசை திரும்ப அழைப்பதற்கான தேர்தலை நடத்தும் இயக்கத்திற்கு தலைமை வகித்து முன்னின்று பணியாற்றியதுடன் அவருக்கு பதிலாக குடியரசுக் கட்சிக்காரர் ஆன அர்னோல்ட் ஷ்வார்ஸ்நெக்கர் நியமிக்கப்படுவதற்கு வகை செய்கிறது.

இந்த வழக்குகள் அனைத்திலுமே, ஒரு சிறிய வலதுசாரி அணியைச் சேர்ந்த சிறுபான்மையினர் உச்ச நீதிமன்றத்தின் உதவியாலும் ஜனநாயகக் கட்சி சரணடைந்ததாலும் தங்களது கொள்கைகளை திணிக்க முடிகிறது. இதன் விளைவுதான் சரி என்று கருதுகின்ற நேரத்தில்- இடத்தில் போரை நடத்தவும், ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் எந்த இதர நவீன தொழில்துறை நாட்டிற்கும் ஈடு இணையற்ற முறையில் சமூக ஏற்றதாழ்வுகளை தீவிரமாக வளர்க்க முடிகிறது.

அத்தகையதொரு வளர்ச்சி ஜேர்மனியில் நடக்காது என்று நினைப்பது முற்றிலும் பொறுப்பற்றதொரு சிந்தனையாகும்.

அதிபர் பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவர் எதிர்க்கட்சியை சார்ந்த ஏஞ்சலா மெர்கல் அவர் பிரான்டன்பேர்க் பாதிரியின் மகள், அவருக்கு ஆதரவாக திரண்டுவரும் சக்திகள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அமெரிக்க சூழ்நிலைகளை ஜேர்மனியில் செயல் படுத்துவதை அக்கறை கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அண்மையில் மெர்கல் அறிவித்த ''திறமையான குழுவில்'' நிதித்துறை நிபுணர் பவுல் கிரிகோவ் இடம்பெற்றிருப்பது.

சென்ற ஆண்டு இராஜினாமா செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்ட CDU-வின் நிதித்துறை நிபுணர் பிரடரிக் மெர்சைவிட ஜேர்மனியின் வரிவிதிப்பு முறையில் கிரிகோவ் மிகக்கூடுதலான தீவிர திட்டங்களை முன்மொழிவு செய்திருக்கிறார். புஷ் மீது மெர்கல் கொண்டிருக்கும் சொந்த அனுதாபம் வெளியுறவு பிரச்சனைகளில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல, ஆனால் உள்நாட்டு மற்றும் சமூகக் கொள்கை போன்ற துறைகளிலும் புஷ்ஷூடன் உடன்பாடு கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டது மற்றும் SPD பசுமைக்கட்சிக்காரர்கள் தங்களது சொந்த முறையில் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது, இவற்றின் மூலம் வலதுசாரி சக்திகளுக்கு வழியமைத்துத் தந்துவிட்டன, என்றாலும் அத்தகைய சக்திகள் தங்களது அரசியல் கருத்துக்களின் காரணமாக பொதுமக்களிடையே கணிசமான ஆதரவை பெற முடியயில்லை.

601 மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு துணிச்சல் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் இருவரும் ஜேர்மனியின் நாடாளுமன்ற வரலாற்றிலேயே தனித்தன்மையுள்ள முறையில் தங்களது சொந்த நண்பர்களால் தொந்தரவிற்கும் மகத்தான அழுத்தங்களுக்கும் ஆட்பட்டனர்.

அந்த வழக்கின்போது எட்டு அரசியல் சட்ட நீதிபதியில் ஒரே ஒருவர்தான் ஹான்ஸ் ஜோச்சிம் ஜென்ட்ஸ்க் மனுதாரர்களை ஆதரித்து தனது எதிர்ப்புக் குறிப்பை தந்திருக்கிறார். நாடாளுமன்றத்தின் செல்வாக்கை அந்தத் தீர்ப்பு பலவீனப்படுத்தி விட்டதாக தெரிவித்திருக்கிறார். தனது கட்சிக்குள் நிலவுகின்ற எதிர்ப்பை சமாளிப்பதற்காக தனது கொள்கைகளை நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்கு அவசியம் என்று கருதுகின்ற நேரத்தில் ஒரு ''தவறான'' பிரச்சனை அடிப்படையில் புதிய தேர்தலை அதிபர் தூண்டிவிடுவதற்கு அந்தத் தீர்ப்பு அனுமதியளித்திருப்பதாக எதிர்ப்பு குறிப்பை தந்த நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனநாயக அமைப்புக்கள் அதிக ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன என்ற கவலையின் உந்துதல் அவர்களது மனுவின் தன்மையாக அமைந்திருக்கிறதே தவிர சூல்சும் ஹோப்மேனும் ஜனநாயக உரிமைகள் மீது கவலைப்பட்டு அந்த மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

அவர்களது மனுக்கள் வர்ணித்திருப்பது முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பது மக்கள் பிரதிநிதி ஆட்சியிலிருந்து மாறி ''நேரடியாக'' மக்களே பொதுவாக்கெடுப்பு அல்லது நேரடி ஜனநாயகத்திற்கு திரும்ப செல்வதை நியாயப்படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறது. அதிபர் ''தனது பொறுப்பிலிருந்து தப்பி ஓடிவிட்டார்'' என்று சூல்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். Frankfurter Allgemeine Sonntagszeitung பத்திரிகையில் ஜூலை 29-ல் எழுதியுள்ள அவர், ``அரசாங்கத்தின் போக்கை அதாவது பொது மக்களது கருத்துக் கணிப்பு ஜனநாயக அடிப்படையில் வாக்கெடுப்பிற்கு விடுவது நமது அரசியலமைப்பையே புறக்கணிப்பதாக அமையும்`` என்று எழுதியுள்ளார்.

தங்களது மனுவில் அடிக்கடி ஜேர்மனியின் அடிப்படை சட்டம் உருவாக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டிருக்கின்றனர் மற்றும் 1949-ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு வாசகம் வைமர் அரசியல் சட்ட வாசகத்திலிருந்து விலகிச் சென்று ஒரு ''அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், நீடித்த போக்கிற்கும் வகை செய்து'' தந்திருப்பதாக அவர்களது மனு குறிப்பிட்டிருக்கிறது. வைமர் குடியரசின் போது எந்த ஒரு அரசாங்க கூட்டணியும் முழு பதவி காலமும் நீடித்ததில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ரைக்கின் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்திருக்கிறார் மற்றும் ரைக்கின் அதிபர் அடிக்கடி கவிழ்க்கப்பட்டிருக்கிறார். அதிபருக்கு வாரிசு யார் என்பதில் உடன்பாடு ஏற்பட முடியாததால் அல்லது நாடாளுமன்றக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களால் பலமுறை அதிபர் கவிழ்க்கப்பட்டிருக்கிறார்.

எதிர்கால நெருக்கடிகளின்போது அரசாங்க அமைப்புக்களை சிதைவுபடுத்துகிற அளவிற்கு ஒரு ஆபத்தான முன்மாதிரி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் உருவாக்கப்பட்டிருப்பதாக சுல்சும், ஹாப்மேனும் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். இதே கருத்தில் பிரான்டில் Suddeutsche Zeitung முந்திய பதிப்பில் வாதிட்டிருக்கிறார், புதிய தேர்தல்களை தவிர்த்துவிட்டு அரசாங்க அமைப்புக்களை நீண்டகால அடிப்படையில் பலவீனப்படுத்துவதற்கு பதிலாக உடனடியாக அரசியல் நெருக்கடியை ஏற்று நாடாளுமன்றமும் ஜனாதிபதியும், அதிபரும் அவமரியாதையைக்கூட தாங்கிக்கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்.

அரசியலமைப்பு நீதிபதிகளுமே கூட ஆரம்பத்தில் இந்தக் கருத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்--- நீதிமன்ற தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்னர் தனிப்பட்ட முறையில் அந்த நீதிமன்றத்தின் துணைத் தலைவர் ஹெஸ்ஷம்மர் தனிப்பட்ட முறையில் வெளியிட்டுள்ள கருத்தை இதில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். பொது மக்களது கண்ணோட்டத்தில் அந்த நீதிமன்றம் ``ஒரு பாறைக்கும், வாழ்வதற்கு தகுதியில்லாத ஒரு கடினமான இடத்திற்கும்`` இடையில் எதை தேந்தெடுப்பது என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். அடிப்படை சட்டத்தை வளைக்க வேண்டும் அல்லது ஏற்கனவே தயாராகி நடைபெற்றுக்கொண்டுள்ள தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை நிறுத்தி ஒரு அரசாங்க நெருக்கடியை தூண்டிவிடுவது.

இந்த வார்த்தைகளின் பொருளை ஒரே ஒரு முறையில்தான் விமர்சிக்க முடியும், நீதிமன்றம் தான் நடத்திய ஆலோசனைகளில் பாரம்பரிய அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுகின்ற அமைப்புக்களை தற்காத்து நிற்பது அவ்வளவு முக்கியமான வளர்ச்சி ஏற்படுகின்ற காலங்களில் எதிர்கால சமூக மோதல்களுக்கு தயாராகின்ற வகையில் நிர்வாக அமைப்பை வலுப்படுத்துவதுதான் அதைவிட முக்கியமான கருத்து என்று முடிவு செய்திருக்கிறது.

அரசியலமைப்பு நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வைமர் குடியரசு காலத்து நிலவரங்களுக்கு ஜேர்மனி மீண்டும் சென்று விடக்கூடாது என்பதற்காக ஜேர்மனியின் அடிப்படைச் சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்த சர்கியூட் பிரேக்கரை அது கடுமையான சோதனைக்கு உள்ளான முதல் சந்தர்ப்பதிலேயே தூக்கி எறிந்துவிட்டது.

வைமர் குடியரசின் கடைசி ஆண்டுகளில் நடைபெற்ற எதேச்சதிகார ஆட்சி வடிவங்களையும், சமூக நிலைப்பாடுகளையும் திரும்ப சந்திப்பதற்கு உழைக்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். தங்களது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை ஒரு சுதந்திர புரட்சிகரத்தன்மை கொண்ட சமூக சக்தியாக செயல்பட்டால்தான் தற்காத்து நிற்க முடியும். இதை செய்வதற்கு ஒரு புதிய சர்வதேச சோசலிசக் கட்சி தேவைப்படுகிறது. இந்த நோக்கத்தை தெளிவாக முன்னெடுத்துச் செல்வதற்குத்தான் இந்தத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved