World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

US secretary of state meets angry Iraq war protests in England

இங்கிலாந்தில் ஈராக் போர் ஆவேச கண்டனங்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

By Julie Hyland and Barry Mason
3 April 2006

Back to screen version

எந்த மதிப்பீட்டுகளின்படியும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைசின் இங்கிலாந்து பயணம் ஒரு பொதுஉறவுகளின் படுதோல்வியாகும். அவர் எங்கு சென்றாலும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை சந்திக்க வேண்டிவந்ததால், ரைஸ் தலைமறைவாகவும், கொல்லைப்புறவழியாகவும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு மற்றும் சிறிய தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு முன் பேசவேண்டியதாயிற்று.

மார்ச் 31 வெள்ளியன்று ஆரம்பித்த அவரது 48 மணிநேர வடக்கு இங்கிலாந்து பயணம், சென்ற ஆண்டு ரைசின் சொந்த நகரான அலபமாவிலுள்ள பேர்மிங்ஹாமிற்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோவின் விஜயத்திற்கு பதிலாகவும், வெளிப்படையான பகிரங்க அரசியல் செயல்திட்டமில்லாமலும் மேற்கொள்ளப்பட்டதாகும்.

என்றாலும், அதன் முடிவில், இருவரும் பாக்தாத்திற்கு மேற்கொண்ட ஒரு வியப்பளிக்கும் பயணம் ''தேசிய ஐக்கியத்திற்கான'' ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதில் நாட்டின் மேலாதிக்க ஷியா கூட்டணிசோடு இதர மதவாத அடிப்படையிலான கட்சிகளை ஒன்றுசேர்ப்பதற்கான அச்சுறுத்தும் முயற்சியாகும்.

அதேபோன்று, திரை மறைவில் ஈரான் மீது இராணுவத்தாக்குதல்கள் உட்பட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கான வாஷிங்டன் மற்றும் இலண்டனின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் ரைசும் ஸ்ரோவும் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.

ரைஸ் இங்கிலாந்தை அடைவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்க செனட் குழு ஒன்றின் முன்னர் தோன்றியபோது "ஒரு அரசிலிருந்து நாம் எதிர்கொண்டுள்ள ஒரு தனிப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்" என்று ஈரானை அச்சுறுத்தினார். பின்னணியில் பல வாரங்கள், வாஷிங்டன் மிரட்டல் காட்சிகளை நடத்திய பின்னர், அடுத்த நாள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஒருமனதாக ஒரு அறிக்கையை நிறைவேற்றியது. அது ஈரான் தனது யுரேனிய செறிவூட்டல் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோருகின்றது. இது தெஹ்ரான் மீது நடவடிக்கைக்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதற்காக அறிக்கைத் தொடரின் முதல் நடவடிக்கையாகும்.

மார்ச்சில், லண்டனின் டைம்ஸ் ஒரு முன்னணி பிரிட்டன் இராஜதந்திரி ஜோன் சாவர்ஸ் எழுதிய ஒரு கசியவிடப்பட்ட இரகசிய குறிப்பை வெளியிட்டிருந்தது. அது, பிரான்சு, ஜேர்மனி மற்றும் அமெரிக்காவுன் தனது சக தூதர்களுக்கு அனுப்பப்பட்டது. அது, "ஈரான் தனது கருத்து வேறுபாடுகள் நிறைந்த அணுத்திட்டத்தை கைவிட மறுக்குமானால், படைபலத்தை பயன்படுத்த நிர்பந்திக்கப்படும் மற்றும் தண்டிக்கும் தடைகளை விதிக்க வகை செய்யும் ஒரு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தை" பெறுவதற்கு ஒரு ஐக்கியப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள வலியுறுத்தியது.

பிரிட்டன் செல்லும் வழியில் ரைஸ் பாரிசிலும் மற்றும் பேர்லினிலும் தங்கினார். அங்கு அவர் அத்தகைய, ஒரு கூட்டு தாக்குதலை நடத்துவதை விவாதித்தார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஏப்ரல் 2 ஞாயிறன்று, சன்டே டெலிகிராப் செய்தியின்படி திங்களன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் (MoD) ஒரு ''உயர்-மட்டக்கூட்டம்" நடைபெற்றிருக்க வேண்டும். டவுனிங் ஸ்டீரிட் மற்றும் வெளியுறவுத்துறையின் அதிகாரிகளுடன் மூத்த இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டு ''ஈரான்மீது ஒரு தாக்குதல்களின் விளைபயன்களை ஆராய்ந்திருக்க" கூடும்.

பாதுகாப்பு அமைச்சகம் அத்தகையதொரு விவாதத்தை மறுத்தது. ஆனால் அந்த செய்தி பத்திரிகை "ஐக்கிய நாடுகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள தெஹ்ரான் தலைவர்கள் தவறிவிடுவார்களானால் ஒரு அணுகுண்டை தயாரிப்பதற்கு ஈரானிடம் உள்ள வலிமையை சிதைப்பதற்கான திட்டமான ''அமெரிக்கா தலைமையிலான ஒரு தாக்குதலை'' நடத்துவது தவிர்க்க முடியாதது" என குறிப்பிட்டது.

அத்தகைய சூழ்நிலையில்தான் ரைசும் ஸ்ட்ரோவும் தங்களது வடஇங்கிலாந்து பயணத்தை தொடக்கினார். அவர்கள் பயணம் செய்ததில் முதல் நிறுத்தம் 256 பில்லியன் டாலர்களில் அமெரிக்கா-பிரிட்டன் கூட்டுதிட்டமான தாக்கும் போர்விமானத்தை கட்டும் BAE தொழிற்கூடமாகும்.

வடமேற்கில், ரைஸ் சுற்றிப்பார்க்க இருந்த இடங்களுக்கான விஜயம் பெரும் சச்சரவிற்குரியதாகும். ஸ்ட்ரோவின் அரசியல் தொகுதியான, 1,00,000 மக்களை கொண்ட பிளாக்பேர்ன் இப்போது வறுமை வயப்பட்டுள்ள பழைய நெசவுஆலைகள் நகரமாகும். இவர்களில் இருபது சதவீதம் பேர் முஸ்லீம்கள். இவர்களில் பலர் 1950களில் பருத்தி ஆலைகளில் பணியாற்றுவதற்காக பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்திற்கு வந்தவர். இருவருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக மூன்று டசின் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளோடு சேர்த்து 4,000 போலீசார் அணிதிரட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கடைசி நிமிடத்தில், ஒரு மசூதித்தலைவர்கள் தங்களது அழைப்பை வாபஸ் பெற்றுக்கொண்ட பின்னர் அந்த மசூதி விஜயத்திற்கான திட்டம் இரத்துச்செய்யப்பட்டது மற்றும் அந்த நகரத்திலுள்ள பிளக்கேட் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்கு ரைஸ் அழைக்கப்பட்டிருந்தார் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் நடத்தப்படும் போர்எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தவிர்ப்பதற்கு பின் கதவுகளின் வழியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வந்தார். அவரது பயணத்தை கண்டனம் செய்வதற்காக டசின் கணக்கான மாணவர்கள் வகுப்பறைகளை புறக்கணித்தனர். நுழைவு வாயிலில் ''ஹெய் ஹெய் கொண்டிலிசா ஹெய் இன்றைக்கு நீங்கள் எத்தனை குழந்தைகளை கொன்றீர்கள்?" என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

பிரிட்டனின் ஐந்தாவது பெரிய நகரமான லிவர்பூலிலும் ரைசிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவில்லை. லிவர்பூல் நாடக கலை அரங்கத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் பங்குபெற்றபோது 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட ஒரு குழு திடீரென்று அமைதியாக எழுந்து நின்று போர் மற்றும் சித்திரவதைக்கு ஆர்ப்பாட்டம் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமையன்று மாலை நகரத்தின் கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னணியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்தப் பேரணியில், போர் நிறுத்த கூட்டணி அமைப்பின் உறுப்பினர்களும் மற்றும் குவான்டனாமோ பேயில் சிறை வைக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரஜைகளான உமர் டெகாயிஸ் இன் சகோதரர் அபுக்கர் டெகாயிஸ் உரையாற்றிய பின்னர் அந்தக் ஆர்ப்பாட்டத்தில் அணிவகுத்தவர்கள் ஆரஞ்சு நிற உடைகளை அணிந்த ஆறு பிரேதம் தூக்குபவர்கள் தூக்கிச் சென்ற சவப்பெட்டிக்கு பின்னால் கலைமன்ற மண்டபத்திற்கு சென்றனர்.

அங்கு, அந்த இசை நிகழ்ச்சிக்கு ரைசும் ஸ்ட்ரோவும் கலந்துகொண்டபோது, ஆர்ப்பாட்டக்காரர்களால் முழக்கங்களையும் வெறுப்பு முழக்கங்களையும் நீண்ட நேரம் எதிர்கொண்டனர். அவர்களைச்சுற்றி குதிரைப்படை போலீசார் சுற்றி வளைத்து நின்றனர். அந்த மண்டபத்திற்குள் ரைசும் ஸ்ட்ரோவும் பகிரங்கமாக இழிவுபடுத்தப்பட்டனர். ஜோன் லெனனின், ''இமேஜின்'' என்ற பாடலை பாட தேர்ந்தெடுத்திருந்த ஜெனிபர் ஜோன், ஈராக் போருக்கு கண்டனத்தை தெரிவிப்பதற்காக, "அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்" என்ற பாடலைப் பாடி கலந்துகொண்டவர்களின் கைதட்டல் வரவேற்பை பெற்றார்.

அதன் பின்னர், ஜோன் விளக்கம் தரும்போது, "முற்றிலும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இந்த நிகழ்வில் பாடுவதைத்தவிர இந்த உலகில் வேறு எங்கும் இந்தப் பாடலைப் பாடுவதற்கு எனக்கு வழியில்லை. இதில் ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பது தார்மீக நெறிக்கு முரணானது என்று கருதினேன்."

"சைமன் கிளீனுடன் [கலைமன்ற நிர்வாக இயக்குனர்] கலந்துரையாடிய பின்னர் நான் ''இமேஜின்'' என்ற பாடலை பாடியாக வேண்டும் என்று எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது."

"வரலாற்றில் மிக சக்திவாய்ந்த கறுப்பின பெண்ணின் முன்னர் நிற்க கிடைத்த வாய்ப்பும், அவருடைய அரசியலை நான் பகிர்ந்து கொள்ளவில்லையென்றாலும் 'இமேஜின்' என்ற பாடலைப் பாடுவதை நான் மறுத்திருக்க முடியாது."

அடுத்த நாள் பிளாக்பர்ன் கால்பந்து மைதானத்திற்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததும் திட்டமிடப்பட்ட கால்பந்து போட்டி தள்ளிவைக்கப்பட்டதால் அது படுதோல்வியில் முடிந்தது. அதனால், காலி மைதானத்தை சுற்றி அவர் நடந்து செல்ல வேண்டியதாயிற்று.

அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு காட்டப்பட்ட விரோதப்போக்கினால் தலையங்கத்தை எழுதுவதற்கு டெய்லி மெயில் உந்தப்பட்டது: "ஈராக் பற்றியும், பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் நடத்தை பற்றியும், உங்களது உணர்வுகள் எதுவாக இருந்தாலும் வாஷிங்டனின் மூன்றாவது செல்வாக்குமிக்க அரசியல்வாதியான அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்த கரையில் விஜயம் செய்திருக்கின்ற நேரத்தில் இவ்வளவு மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டிருப்பது பிரிட்டனின் இராஜதந்திரத்திற்கு ஒரு துக்க நாளாகும்."

நிச்சயமாக ஈராக் போர் "ஒரு துயரம் மிக்க தவறுதான்'' என்ற அந்தச் செய்திப்பத்திரிகை தொடர்ந்து, ''ஆனால் அத்தகைய கண்டனங்கள் மற்றும் திட்டமிட்ட அவமரியாதைகள்" நமது மிகப் பெரும் நட்பு நாட்டின் ஒரு பிரதிநிதிக்கு எதிராக நடத்தப்பட்டது "ஒரு ஆபத்தான பிளவை," அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கிறது'' என குறிப்பிட்டது.

உலக சோசலிச வலைத் தளம் பேரணிகளில் கலந்துகொண்டவர்கள் பலரை பேட்டி கண்டது லிவர்பூலில், அருகாமையிலுள்ள விர்ரால் பகுதியிலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களுடன் கண்டனப் பேரணியில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த ஒரு ஆசிய பெண்ணான பாவிந்தா பேட்டியளித்தார். "ஈராக் போருக்கு எதிராக, நேரடியாக, கண்டன பேரணியில் கலந்துகொள்வதற்கு இதுதான் முதல் வாய்ப்பாகும். நாடு முழுவதிலும் ஏராளமான பேரணிகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இதுதான் நாங்கள் ஒரு குடும்பமாக கலந்துகொள்வதற்கு உண்மையிலேயே கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக, கருதுகிறேன். நான் கொண்டலிசா ரைசிற்கு இங்கு வரவேற்பு இல்லை என்பதை தெளிவாக அறிவித்துவிட விரும்பினேன்.

"ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் பெயரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது உண்மையிலேயே வெறுப்பூட்டும் அம்சம் என்று கருதுகிறேன். மற்றவர்களது, இதர மக்களது விவகாரங்களில் தலையிடுவதைவிட தனது சொந்த காரியத்தை பார்த்துக்கொள்வதற்கு இதுதான் அமெரிக்காவிற்கு தக்க தருணமாகும். துருப்புக்களை விலக்கிக் கொண்டாக வேண்டும். அந்த நாட்டு மக்கள் தங்களைத்தாங்களே அரசாண்டு கொள்வதற்கு வழிவிட வேண்டும் இதுதான் எளிதான செயல்...."

சனிக்கிழமை காலை, முஸ்லீம் சமுதாய தலைவர்களுடன் பேசுவதற்காக பிளாக்பேர்னுக்கு ரைஸ் திரும்ப வந்தார். ஏராளமான போலீசார் கட்டடத்தை சுற்றி நிறுத்தப்பட்டனர். தடுப்புகளினால் ஆர்ப்பாட்டக்காரர்களிலிருந்து கூட்டம் நடைபெறும் நகர அறையை மூடிவிட்டனர். இதர போலீசாரும் நிறுத்திவைக்கப்பட்டனர் மற்றும் அருகாமையிலுள்ள கட்டிடங்களின் உச்சியில் போலீசார் காவல் புரிந்தனர்.

ஒரு 48 வயது தொழிற்சாலை தொழிலாளர் அலியிடம் WSWS பேட்டிக்கண்டது. "உலகம் முழுவதிலும், முஸ்லீம்கள் பாரபட்சம் காட்டப்பட்டு வருவதை'' கண்டிப்பதற்காக நான் வந்திருக்கிறேன். ஒரு மனிதரும் அவரது நாடும் உலகம் முழுவதும் ஆண்டு கொண்டிருக்கிறது. மற்றும் அவர் (புஷ்) தான் விரும்புவதை செய்ய முடியும் என்று நினைக்கிறார்.

"எடுத்துக்காட்டாக சோமாலியாவில் போன்று உலகில் பல மக்கள் பட்டினிக்கிடக்கின்றனர். ஆனால் அங்கு எவரும் செல்வதில்லை, ஏனெனில் அங்கு எண்ணெய் வளம் இல்லை. ஈரானும் ஈராக்கும் உலகிலேயே மூன்றில் ஒரு பகுதி எண்ணெய் வளத்தை தங்கள் வசம் வைத்திருக்கின்றன. இந்த நாடுகள் மீது படையெடுப்பதற்காக, புஷ் நிர்வாகம் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறது. அது எண்ணெய் பற்றியதே தவிர விடுதலைக்கானதல்ல.

"இதற்கு முன்னர் எப்போதும் இருந்திராத அளவிற்கு ஈராக் படுமோசமான நிலையில் உள்ளது. அவர்கள் 25,000 குடிமக்களை கொன்றிருக்கிறார்கள்; உண்மையான எண்ணிக்கை அநேகமாக ஐந்து மடங்குகளாக இருக்கும். அமெரிக்கர்கள் சதாம் ஹுசேனை ஆதரித்து வந்தனர். ஆனால் அவர் ஒரு ''ஆமாம்'' என சொல்லும் மனிதர்களாக இல்லாததால் அவர்கள் அவருக்கு எதிராக திரும்பிவிட்டனர்."

அவருடன் வந்திருந்த இளைஞரான இக்பால், "குவாண்டநாமோ வளைகுடாவிலும் ஈராக்கிலும், பேசமுடியாத மக்களுக்காக நாங்கள் இங்கே, வந்திருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved