World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The International Socialist Organization and the 2006 election

சர்வதேச சோசலிச அமைப்பும் 2006 தேர்தலும்

By Bill Van Auken, Socialist Equality Party candidate for US Senate from New York
23 June 2006

Back to screen version

இந்த வார இறுதியில் "சோசலிசம் 2006 --இடதை கட்டியமைக்கவும், வலதை எதிர்த்துப் போராடவும்" என்ற முழக்கத்தின் அடிப்படையில் சர்வதேச சோசலிச அமைப்பு ஒரு மாநாட்டை நடத்தவுள்ளது.

ஆனால் இம்மாநாடு நடத்தப் பெறுவதற்கான முன்னோக்கை ஆராய்ந்தால், பசுமைக் கட்சி போன்ற வடிவமைப்பில் பூர்ஷ்வா அரசியலின் "இடது" பிரிவு ஒன்றை வளர்ப்பதைத்தான் இது நோக்கமாக கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது; இது இரு பெரிய கட்சிகளும் கொண்டுள்ள வலதுசாரி அரசியலுக்கு எதிராக உள்ள மக்கள் இயக்கத்தை திசை திருப்புவதற்குத்தான் பயன்படும் மற்றும் அதனை ஒரு அரசியல் முட்டுச்சந்துக்குள் இட்டுச்செல்லும்.

ISO மாநாடு இன்னும் ஐந்து மாதங்களுக்குள் வரவிருக்கும் 2006 இடைத்தேர்தல்களில் தொழிலாள வர்க்கத்திற்கு சுயாதீனமான கொள்கை எதையும் முன்வைக்கவில்லை. இந்த அமைப்பின் செய்தித் தாளான Socialist Worker, ISO பங்குகொள்ளும் ஜனநாயகக் கட்சி தொடர்பாக நடத்தப்படும் எதிர்ப்பு இயக்கங்களின் திசைவழி தொடர்பாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தாலும், ISO இதுவரை ஜனநாயகக் கட்சியினருக்கு நேரடி அரசியல் சவாலை விடுக்கவில்லை.

Socialist Worker இன் ஜூன் 16ம் தேதி பதிப்பில் கட்டுரையாளர் ஜோஷுவா பிராங்க், செனட்டர் ஹில்லாரி கிளின்டனை பற்றி எழுதிய கட்டுரை ஒன்று வந்துள்ளது, அதில் நியூ யோர்க்கில் இருந்து அமெரிக்க செனட்டிற்கு, ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக நிபந்தனையின்றி வெளியேறவேண்டும் என்ற கோரிக்கை உட்பட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நான் அவரை எதிர்த்து நிற்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் இரு-கட்சி முறை இவற்றில் இருந்து முறித்துக் கொள்ளப் போராடவும், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாய் அரசியல் அணிதிரட்டலுக்காகவும் எங்கள் கட்சி இத்தேர்தலில் தலையிடுகிறது. போர் மற்றும் ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவை முதலாளித்துவ பொருளாதார மற்றும் அரசியல் முறையில் விளைவு என்றும், இத செல்வத்திற்கும் வறுமைக்கும் இடையே எப்பொழும் பெருகிவரும் இடைவெளியால் பண்பிட்டுக்காட்டப்படுகிறது என அது வலியுறுத்தியுள்ளது.

SEP இன் பிரச்சாரம் எமது கட்சியின் இலக்கு முதலாளித்துவ முறையை சீர்திருத்தல் என்பதில் இல்லை என்றும், மாறாக அதற்கு மாற்றீடாக நிதி உயரடுக்குகளின் இலாப நோக்குகளுக்கு பதிலாக மக்கட்தொகையினரில் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சோசலிச முறையால் பதிலீடு செய்யப்பட வேண்டும் என்பதை தெளிவு படுத்தியுள்ளது.

இந்த அடிப்படை சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கை, ISO தலைமை நிராகரிக்கிறது என்பது தெளிவு. பல வகையான அடையாளங்கள் மற்றும் எதிர்ப்பு அரசியல் பற்றி ஏராளமான பட்டறைகள் மூன்று நாள் மாநாட்டில் நடக்கவிருக்கையில், ஒரே ஒரு தொடரில்தான் தேர்தல்கள் பற்றி நேரடியாக விவாதிப்பதற்கு "சிகப்பு, கறுப்பு, நீலம், பசுமை: ஜனநாயக வாதிகளுக்கு தேர்தல் சவால்கள்" என்ற தலைப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தலைப்பும் பொருந்தா தன்மை உடையதாகும்; பெயரிடப்பட்டுள்ள பேச்சாளர்கள் அனைவரும் பசுமைக் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது வேட்பாளர்கள் ஆவர்; இதில் 2004 தேர்தல்களில் ரால்ப் நாடருடன் உடன் நின்றிருந்த பீட்டர் காமெஜோவும், நியூ யோர்க் செனட் தேர்தலில் ISO ஆதரவு கொடுக்கும் பசுமைக் கட்சியின் வேட்பாளரான ஹெளவி ஹாக்கின்சும் அடங்குவர்.

இதுதான் ISO இன் அரசியல் சார்பின் உண்மையான இதயத்தானமாகும். பசுமைக் கட்சிக்கு ஒரு "இடது", ஏன் "சோசலிச" என்ற மறைப்பைக் கூட அளிக்கும் வகையில் இதன் செயல்பாடுகள் உள்ளன; பசுமைக் கட்சியின் திட்டம் தன்னை ஒரு முதலாளித்துவ கட்சி என்றுதான் வரையறுத்துக் கொள்ளுகிறது.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கொள்கையான போர் மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு நேரிய முறையில் ஒரு மாற்றீடு வேண்டும் என்று விரும்புபவர்கள் பசுமைக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பர் என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை. ஆனால் அந்த அமைப்பின் வர்க்க இயல்பு பற்றி விளக்குவது சோசலிஸ்டுகளுக்கு இன்னும் முக்கியமானதாகும்; தொழிலாள வர்க்கத்தை தளமாக கொண்டு சமூகத்தை சோசலிச வகையில் மறுஒழுங்கமைக்க போராட வேண்டிய அடிப்படையில், வேறுபட்ட தன்மை கொண்ட ஒரு புதிய கட்சியை கட்டியமைக்க வேண்டிய கட்டாயத்தையும் எடுத்துரைக்க வேண்டிய தேவை உள்ளது.

பீட்டர் காமெஜோவின் அரசியல் பாதை

பீட்டர் காமெஜோ முக்கிய பேச்சாளராக மாநாட்டில் உள்ளார் என்ற உண்மையில் பிழைக்கு இடமில்லாத அரசியல் முக்கியத்துவம் உள்ளது. 2004ம் ஆண்டு நாடரின் துணை ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையிலும், 2003ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த கவர்னரை திருப்பியழைத்தல் தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளர் என்ற முறையிலும், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரை செல்வாக்கிற்கு உட்படுத்த விழையும் திறனை கொள்ளவேண்டும் என்ற மூன்றாம் முதலாளித்துவ கட்சி என்று பசுமைக் கட்சியை வளர்க்கும் உந்துதலுடன் காமெஜோ அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் குடியரசு வலதுடன் சேர்ந்து கொண்டு திருப்பி அழைத்தல் வாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுத்து ஜனநாயகக் கட்சி கவர்னர் கிரே டேவிஸ் பதவி நீக்கப்படுவதற்கு முயன்று, பின்னர் ISO இன் ஆதரவுடன் கவர்னருக்காக பிரச்சாரம் செய்தார்; அந்த அரங்கில் "நிதிப் பொறுப்பு" பற்றி வலியுறுத்தப்பட்டது; உண்மையில் ஈராக்கில் போர் அல்லது புஷ் நிர்வாகத்தின் எந்தக் கொள்கைகளையும் அலட்சியப்படுத்தின; மேலும் சோசலிச நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க, எத்தகைய தீவிர நடவடிக்கைகளையும் மறுத்துவிட்டது. அவர் தன்னுடைய பிரச்சாரத்தின்போது ஜனாநாயகக் கட்சியுடன் ஒத்து நடக்கும் வகையில் இருந்தார்; குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெக்கரைத் தோற்கடிப்பதற்கு பசுமைக் கட்சியினர் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு வாக்கு அளிப்பதை தன்னால் "புரிந்து கொள்ள முடியும்" என்றும் அறிவித்தார்.

2004ம் ஆண்டில் நாடர்-காமெஜோ இணைப்பு தன்னை ஜனநாயகக் கட்சியினருக்கு அரசியல் வரம் போல் வளர்த்துக் கொண்டு, "சுதந்திரமான" வாக்காளர்கள் புஷ்ஷை எப்படி தோற்கடிக்கலாம், தங்களுடைய பிரச்சாரம் எப்படி ஜனநாயகக் கட்சி தன் தளத்தை ஆற்றல் மிகுந்ததாக செய்யும் என்று ஜோன் கெர்ரிக்கு ஆலோசனை கூறினர். அவர்களுடைய பிரச்சார வழிவகை ஜனநாயக கட்சியில் இருந்து பிரிந்த சுதந்திரமான அரசியல் இயக்கத்தை கட்டியமைப்பது என்று இல்லாமல் ஜனநாயகக் கட்சியை இடதிற்கு நகர்த்த வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது.

நாடரும் காமெஜோவும் உழைப்பு பிரிவினை முறை ஒன்றைக் கையாண்டனர்; இக்கூட்டின் "இடது முகத்தை" காமெஜோ ISO போன்ற அமைப்புடன் செயலாற்றிய வகையில் கொடுத்து, நாடர்- கெர்ரி பிரச்சாரத்துடன் மட்டும் இல்லாமல் சீர்திருத்தக் கட்சியும், தீவிர வலது பாட்ரிக் புஷனன் மற்றும் குடியரசுக் கட்சிக்குள் இருக்கும் சிலகூறுபாடுகள் ஆகியவற்றுடன் இழிவான சூழ்ச்சிக்கையாளல்களை கையாண்டார். லத்தின் அமெரிக்கர்கள், நலன்களை பிரதிபலிப்பதாக காமெஜோ கூறிய நிலையில், நாடெர் குடியரசுக் கட்சியின் வலதில் இருக்கும் இன வெறியாளர்களுக்கு முறையிட்டு, ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு கூடாது என்ற தன்னுடைய எதிர்ப்பையும் கூறி, புலம்பெயர்ந்தோர் மீதான தடைகளுக்கு ஆதரவு கொடுத்து, அவர்கள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றனர் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பசுமைக் கட்சிக்கான ஆதரவு சோசலிசத்திற்கு ஒரு நிழற்பாதையை வழங்கும் என்ற முன்னோக்கை ஏற்க விரும்பும் எவருக்கும், காமெஜோவின் சொந்த அரசியல் பரிணாமம் எச்சரிக்கையாக பயன்படும். சோசலிச தொழிலாளர் கட்சியானது காஸ்ட்ரோயிசம், மத்தியதர வர்க்க எதிர்ப்பு மற்றும் பல வகையிலான அடையாள அரசியலை தழுவுவதற்காக, சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) ட்ரொட்ஸ்கிசம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இருந்து முறித்துக்கொண்ட நேரத்தில், காமெஜோ சோசலிச தொழிலாளர் கட்சியில் ஒரு மாணவ தீவிரப் போக்குடையவராக சேர்ந்தார்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக காமெஜோ SWP யில் இருந்ததுடன் 1976ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராவும் போட்டியிட்டார். 1980களின் தொடக்கத்தில் SWP உடன் முறித்துக் கொண்டபின் --தன்னுடைய முறிவிற்கு அரசியல் காரணமோ, வேறுபாடுகளோ அவரால் கூறப்படவில்லை-- அவர் மீண்டும் இடது-தாராளவாத அரசியல்வாதி மற்றும் நிதிய முயல்பவராக வெளிப்பட்டு அமெரிக்காவின் அரசியல் நடைமுறைக்குள் பசுமைக் கட்சியை கெளரவமான கட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

இத்தகைய முயற்சிகள் வெற்றி பெற்றி பெறக்கூடும் என்றால், அதற்கான தெளிவான முன்மாதிரி ஏற்கனவே ஜேர்மனியில் உள்ளது. ISO இன் ஆதரவாளர்கள் பசுமைக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் தீவிரமான வகையில் முயல வேண்டும் என்பதற்கு அது சான்றாக இருக்கும்.

அங்கு மற்றொரு முன்னாள் மாணவர் தீவிரப்போக்கினராக இருந்து பின்னர் பூர்ஷ்வா அரசியல் வாதியாக மாறிய ஜோஷ்கா பிஷர் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைக் கட்சியினரின் கூட்டணி அரசாங்கத்தில் வெளியுறவு மந்திரி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார். அரசாங்கத்தில் இருந்தபின், பசுமைக் கட்சி தன்னுடைய திட்டங்களை மிக வரைவில் கைவிட்டு, போர், சுற்றுச் சூழல், சமூகக் கொள்ளை ஆகியவற்றிலும் தான் கொண்டிருந்த முந்தைய நிலைப்பாட்டை கைவிட்டு, ஜேர்மனியின் நிதிய உயரடுக்கு கோரும் இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கை கொள்கைகளை செயல்படுத்தியது.

அதிகாரத்தில் முக்கியமாக இருக்கும் பசுமைக் கட்சியின் தலைவர் என்ற முறையில் பிஷர் சேர்பியாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு ஆதரவையும், ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் நேரடி பங்கையும், ஈராக்கியப் போர் உட்பட "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகந்தழுவிய போரில்" வாஷிங்டனுடன் ஜேர்மனியின் நெருக்கமான ஒத்துழைப்பையும் கொடுத்தார்.

கடந்த ஜேர்மன் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து எதிர்க்கட்சியான பின்னர், பசுமைக் கட்சியினர் கடந்த ஆண்டுகளின் சமாதான கோஷங்களை ஒன்றும் மீட்டுவிடவில்லை. இதற்கு மாறாக, ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆர்வத்துடன் ஆதரவு கொடுப்பவர்களாக விளங்கி, வலதில் இருந்து கிறிஸ்தவ ஜனநாயகத் தலைமையின் கீழ் உள்ள அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர். சமீப வாரங்களில் ஜேர்மன் படைகள் கொங்கோவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை வலிமையுடன் வாதிடுகின்றனர்; இது மூன்றாம் ரைகின் வீழ்ச்சிக்கு பின்னர் மிகப் பரந்த முறையில் ஜேர்மன் வெளியுறவில் இராணுவச் செயற்பாடாக வளரக் கூடும். மாநில அளவில் அவர்கள் வலது சாரி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணியில் நுழைந்துள்ளனர்.

இதுதான் அமெரிக்க பசுமைக் கட்சியின் சகோதர அமைப்பாகும். உலக ஏகாதிபத்திய மையமான அமெரிக்காவில் இருக்கும் சக்திவாய்ந்த அரசியல் அழுத்தங்களில் பசுமைக் கட்சி ஓரளவு அரசியல் வெற்றியை இங்கு கண்டால், அதன் அரசியல் போக்கு இன்னும் கூடுதலான வலது தன்மையைத்தான் கொண்டிருக்கும் என்று நாம் நம்பலாம்.

சோசலிசத்திற்காக தேர்தலில் நிற்கிறோம் எனக் கூறிக் கொள்ளுபவர்கள் பூர்ஷ்வா அரசியலுக்கு "இடது" சாயம் பூசுவதன்மூலம் அத்தகைய வளர்ச்சியை துரிதப்படுத்துபவர்கள், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு மகத்தான காட்டிக் கொடுப்பைத்தான் தயாரித்து வருகின்றனர்.

தன்னுடைய பங்கிற்கு சோசலிச சமத்துவக் கட்சி, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம், போருக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக எழுச்சியுறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது. 2006 இடைத் தேர்தல்களில் குறுக்கீடு செய்வதை பயன்படுத்தி எமது கட்சி இந்த இயக்கத்திற்கு தயார் செய்யும், ஜனநாயகக் கட்சியுடன் மட்டுமில்லாமல், பசுமைக் கட்சி போல் முதலாளித்துவ முறையை காக்க விரும்பும் அனைத்து கட்சிகளுடனும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று பாடுபடும். அத்தகைய போராட்டம்தான் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய வெகுஜனக் கட்சி வெளிப்படுவதற்கு வழிவகுக்கும்; அதுதான் அரசியல் அதிகாரத்திற்காக போராடும் திறமுடையதாக இருக்கும், மற்றும் சோசலிச முறையில் சமூகத்தை மாற்றுவதின் மூலம் இராணுவவாதம் மற்றும் சமூகச் சமத்துவின்மைக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved