World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

G8 powers sanction Israeli aggression in Lebanon

G8 அரசுகள் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அனுமதி கொடுக்கின்றன

Statement of the Editorial Board
18 July 2006

Back to screen version

லெபனான்மீது கொடூரமான இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் திங்கள் அன்று ஆறாம் நாளை அடைந்தபோது வாஷிங்டனால் நன்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ள ஒரு அமெரிக்க வாடிக்கை நாட்டால் ஒரு சிறிய நாடு தவிடுபொடியாக்கப்படுவதை எண்மர் குழு உச்சி மாநாடு, அதன் பெரும் ஏகாதிபத்திய ஆட்சிகளின் தலைவர்கள் சக்திமிக்க வகையில் ஒப்புதல் கொடுக்க கூட்டத்தை ஒத்திவைத்தது. அமெரிக்கா அளித்துள்ள குண்டுகளும் ஏவுகணைகளும், அமெரிக்கா கொடுத்துள்ள போர்விமானங்களில் இருந்து சுடப்பட்டு லெபனானின் நகரங்களிலும் சிற்றூர்களிலும் மழை எனப் பொழிந்த நிலையில், புஷ் நிர்வாகம் பெயரளவிற்கேனும் போர்நிறுத்தம் வேண்டும் என விடுக்கப்பட்ட அழைப்புக்களை தடுப்பதில் முக்கிய பங்கை ஆற்றியது.

இஸ்ரேலிய சாதாரண மக்கள் ஹெஸ்பொல்லா ராக்கட்டுக்களினாலும், லெபனிய சாதாரண மக்கள் இஸ்ரேலிய குண்டுகளாலும் தாக்கப்படும் நிலையில் சமமான கஷ்டத்தை இந்த நெருக்கடி உண்டாக்கியுள்ளது என்று அமெரிக்கச் செய்தி ஊடகம் காட்ட முற்பட்டுள்ள நிலையில், உண்மை இதற்கு மிகவும் வேறுபட்டதாக உள்ளது. 200 லெபனியர்களுக்கு மேலாக இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்; அவர்கள் நாட்டின் மீது பில்லியன் டாலர்கள் மதிப்புடைய இழப்புக்கள் சுமத்தப்பட்டுள்ளன; இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது 24 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்; அவர்களில் பாதிப்பேர் ஹெஸ்பொல்லா போராளிகளுடன் நிகழ்ந்த கைகலப்புகளில் கொலையுண்ட படையினர் ஆவர்.

ஹெஸ்பொல்லா ராக்கெட்டுக்கள் ஒப்பீட்டளவில் நயமற்ற, துல்லியமில்லா தன்மையையும், லெபனானுடைய நவீன வாழ்வின் முழு உள்கட்டுமானங்களையும் --சாலைகள், பொதுக் கட்டிடங்கள், விசை உற்பத்தி நிலையங்கள், துறைமுக வசதிகள் ஆகியவற்றை-- அழிக்கும் 500 பவுண்டு எடைகொண்ட லேசர் வழிப்படுத்தல் மூலம் வரும் குண்டுகளைவிட குறைந்த ஆற்றலுடையவை ஆகும். இஸ்ரேலிய அதிகாரிகள் லெபனானை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு பின் தள்ளிவிடுவதாக, ---அதாவது அந்நாட்டை கிட்டத்தட்ட அழித்து விட்ட உள்நாட்டுப்போரின் ஆழத்திற்கு தள்ளிவிடுவதாக பகிரங்கமாக உறுதி பூண்டுள்ளனர்.

ஞாயிறன்று G8 உச்சி மாநாட்டில் ஏற்கப்பட்ட தீர்மானமோ தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடிக்கான பொறுப்பு அனைத்தையும் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா மீது சுமத்தியுள்ளது; மேலும் மூன்று இஸ்ரேலிய இராணுவம் கடத்தப்பட்டமை, காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் செலுத்தியமை மற்றும் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் செலுத்தியமை ஆகியவற்றிற்கும் இவ்வமைப்புக்களே பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஆத்திரமூட்டல் பற்றிய கூற்று குப்பைகூளமாகும். பல ஆண்டுகளாக லெபனான் மீதான பெரும் தலையீட்டிற்கு இஸ்ரேல் தயாரித்து, நீண்டகாலமாக ஒத்திகை பார்த்து வந்திருந்தது; அவற்றை நிறைவேற்ற ஹெஸ்பொல்லா தாக்குதலை போலிக் காரணமாக பயன்படுத்தியது.

இதில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு இலக்குகள் உள்ளன; ஒன்று இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கிற்கு உகந்தது; மற்றது அதன் அமெரிக்க புரவலர்களுடன் இணைந்தது ஆகும்.

எப்பொழுதும் போலவே, இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கு தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு அவை முற்றிலும் தற்காப்பு நடவடிக்கை என்றும் அதன் பாதுகாப்பிற்கு வரும் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுவதற்கும் என்றே கூறிவருகிறது. ஆனால் "பாதுகாப்பு" என்பதற்கு இஸ்ரேல் கொடுக்கும் விளக்கம் மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் அனைத்தும் இதன் காலடியில் விழ வேண்டும், பாலஸ்தீனிய பொருளாதார இராணுவ வளர்ச்சி சியோனிச பிராந்திய பேரவாக்கள் மீது எந்தவழியிலும் தடைகளை சுமத்தக்கூடும் என்பதால் பாலஸ்தீனியர்களை அடிமைப்படுத்தியது பற்றிக் கூறக்கூடாது என்பதாகும். .

லெபனானை, இஸ்ரேலிய கொள்கையை செயலாக்க துடிக்கும் கருவியாக நடைமுறையில் மாற்றும் வழியில் ஹெஸ்பொல்லா குறுக்கே நிற்பதால், அது இந்த அழிவிற்கு இலக்காக கொள்ளப்பட்டுள்ளது. எனவேதான் லெபனான் இஸ்ரேல் எல்லைப் பகுதி முழுவதும் ஐ.நா. அமைதி காத்திடும் இராணுவப் படைகள் கொண்டுவர வேண்டும் என்று கூறியதை பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் நிராகரித்துவிட்டார்.

Knesset (இஸ்ரேலிய பாராளுமன்றம்) ல் நிகழ்த்திய உரை ஒன்றில் ஓல்மெர்ட் விளக்கியுள்ளபடி, அவருடைய இலக்கு ஹெஸ்பொல்லாவை எல்லையில் இருந்து துரத்திவிட வேண்டும் என்பதாகும்; இப்பணி இஸ்ரேலிய படைகள் மூலம்தான் சாதிக்கப்பட முடியும்; பெயரளவிற்கு கிறிஸ்துவ ஆதிக்கம் நிறைந்துள்ள லெபனானின் இராணுவத்தின் உதவியும் இருக்கலாம்; அப்படை, அமெரிக்க ஆதரவு பெற்ற ஆட்சி பெய்ரூட்டில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது செயல்முறைக்கு வந்திருந்தது. இது இஸ்ரேலிய ஆதரவு பெற்ற தெற்கு லெபனான் இராணுவம், பாசிச பலாஞ்சிஸ்ட் போராளிகளின் எஞ்சிய பகுதி இஸ்ரேலின் போலீஸ் படையாக எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வந்த பொழுது 2000 ஆண்டு நிகழ்ந்த நிலைமைகளையே மீண்டும் தோற்றுவிக்கும்.

இன்னும் கூடுதலான மூலோபாய தரத்தில், ஹெஸ்பொல்லாவின் தோல்வி என்பது முழு மத்திய கிழக்கையும் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான அமெரிக்க இஸ்ரேலிய செயல்திட்டத்தின் முக்கிய பகுதியாகும். புஷ் நிர்வாகம் வெளிப்படையாக ஈரானுடன் போரிடத் தயாரிப்பு செய்து வருகிறது; ஐ.நா. பாதுகாப்புக் குழுவிடம் ஈராக்கில் சதாம் ஹுசைனுடைய ஆட்சிக்கு எதிராக "பேரழிவு ஆயுதங்கள்" கூற்று பற்றிய போலிக் கருத்துக்களை தொடர்ந்தது போலவே, இப்பொழுதும் அது தொடர்கிறது.

ஈராக்கில் தான் கண்ட வெற்றியை ஒருங்கிணைப்பதற்கும், பாக்தாத்தில் உறுதியான தன்னுடைய கைப்பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதற்கும், ஈரான்தான் முக்கிய தடையாக உள்ளது என்று வாஷிங்டன் கருதுகிறது. ஈரானில் இருப்பதாக கூறப்படும் அணுசக்தி வசதிகள் மீதான விமான தாக்குதல்கள் என்றாலும், நேரடியான தரைப்படை தாக்குதல் என்றாலும், ஈரானுக்கு எதிரான எந்த இராணுவ நடவடிக்கையையும் முன்னெடுப்பதில், அப்பகுதியில் எங்கணும் ஈரானுக்கு உள்ள சிறு ஆதரவையும் அகற்றுவது இன்றியமையாதது ஆகும். எனவேதான் ஈரானுடன் நீண்ட காலமாக உறவுகளை கொண்டுள்ள ஹெஸ்பொல்லாவிற்கு எதிரான தாக்குதல், சிரியாவின்மீதும் இராணுவ நடவடிக்கை நீட்டிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலை கொண்டுள்ளது; சிரியா 1980 களின் ஈரான் ஈராக் போர்க் காலத்தில் இருந்தே ஈரானுடன் இராணுவமுறையில் உடன்பாட்டை கொண்டுள்ளது.

லெபனானில் இருந்து சிரியப் படைகளை அகற்றுவதற்காக படையெடுப்பின் பின்னணியில் இப் போருக்கான தயாரிப்புகளும் இருந்தன; அதில் முன்னாள் பிரதம மந்திரி ரபிக் ஹரிரி படுகொலையுண்டார் அது யாரால் என்று அடையாளம் காணப்படவில்லை; இது வசதியான போலிக் காரணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புஷ் நிர்வாகம், பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்குடன் சேர்ந்து கொண்டு, சிரியப் படைகள் திரும்பப் பெற நிர்பந்தித்ததன் மூலம் லெபனிய இறையாண்மையை மீட்பதற்கான புனிதப்போரில் தங்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தியது.

அந்தப் பிரசாரத்தில் காணப்பட்ட அவநம்பிக்கைத் தன்மை, இன்றும் புஷ், சிராக் ஆகியோர் கொண்டுள்ள நிலைப்பாட்டில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் உச்சி மாநாட்டில் வெளிவந்துள்ளது; இருவருமே பல தசாப்தங்களான சிரிய ஆக்கிரமிப்பில் விளைந்ததை காட்டிலும் கூடுதலான பேரழிவை ஏற்படுத்திவிட்ட இஸ்ரேலிய தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று லெபனான் அரசாங்கம் கோரியுள்ளதை நிராகரித்தனர்.

1930களில் இருந்த தன்மையை போலத்தான் G8 உச்சிமாநாடு இருந்தது; அப்பொழுது வல்லரசுகள் தங்களுடைய நலன்களை சிறிய, வலுவற்ற நாடுகளின் இழப்பில் பெருக்குவதற்கு முற்பட்டன; ஜப்பான் மஞ்சூரியாவை கைப்பற்றியபோதும், எத்தியோப்பியா மீது முசோலினி படையெடுத்தபோதும், ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவாக்கியா ஆகியவற்றை ஹிட்லர் கைப்பற்றியபோதும் மற்றவை பேசாமல் இருந்தன.

கிட்டத்தட்ட அதே சூழ்நிலைதான், இப்பொழுதும் உள்ளது; இன்றைய முக்கிய ஏகாதிபத்திய குற்றவாளியான ஜோர்ஜ் டபுள்யூ புஷ், நயமற்ற முறையில் மிரட்டல் மொழியை பயன்படுத்தி, தன்னுடைய முக்கிய கூட்டாளியான டொனி பிளேயரிடம், சிரியா ஹெஸ்பொல்லாமீது அழுத்தம் கொடுக்க தயங்குவதை பற்றிக் குறைகூறியபோது பயன்படுத்திய சொல்லும் அவ்வகையை சார்ந்ததுதான். பாக்தாத்தில் உள்ள ஈராக்கிய அடிவருடி ஆட்சியை அவரது சொந்த அரசாங்கம் இயக்குவது போல் சிரியாவும் ஹெஸ்பொல்லாவை கட்டுப்படுத்துகிறது என்று புஷ் நினைக்கிறார். இஸ்ரேலிய அரசாங்கம் போர்க்குற்றத்தை கொண்டுள்ளது - முழு இறையாண்மை பெற்ற ஒரு நாடு எனக் கூறப்படும் மக்கள் மீது கூட்டுத் தண்டனையை அது விதித்துள்ளது என்ற உண்மை மிக வசதியுடன் அலட்சியம் செய்யப்பட்டுவிட்டது.

ஈராக்கிய போருக்கு முன் இருந்த நிலைநில், புஷ் நிர்வாகம் சர்வதேச ஆக்கிரமிப்பு பற்றி முன்னோடியில்லாத வகையில் நடவடிக்கை மீதாக, தீவிர கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட பின்னர் இருந்து சிரியாவிற்கும் ஈரானுக்கும் எதிராக வாஷிங்டனுடன் சேர்ந்து கொண்டால் தங்களுடைய நலன்களுக்கும் உகந்தது என முடிவு செய்து ஐரோப்பிய உயர்தட்டு அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையை ஏற்பதென்று வந்தது.

பாலஸ்தீனியர்களுடனான இஸ்ரேலின் கொள்கை பற்றிய விவரங்களுடன் சொற்புரட்டுச் செய்து பிரச்சினையை தவிர்க்கும் அதேவேளை, ஐரோப்பிய சக்திகள் எதுவுமே லெபனான்மீது மிகப் பெரிய அளவு குண்டு வீச்சு நடப்பது சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுவது, அது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரவில்லை. அதேபோல், ஐ.நா.பாதுகாப்புக் குழுவும் ஒரு முழு உரிமை பெற்ற நாடு, அதுவும் ஐ.நா. உறுப்பு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு போர் நிகழ்வது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

லெபனானில் பணி பார்க்கும் அல்லது விடுமுறையை கழிக்கும் G8 நாடுகளின் குடிமக்கள் கூட இஸ்ரேலிய குண்டுகள் அல்லது ஏவுகணைகள் தாக்குதலில் கொல்லப்படலாம் அல்லது உயிரிழக்க நேரிடும் என்ற நிலவரம் கூட பெரு வல்லரசுகளிடையே நடவடிக்கை எடுக்கும் உணர்வை தூண்டவில்லை. கிட்டத்தட்ட 25,000 அமெரிக்கக் குடிமக்களும், ஆயிரக்கணக்கான பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், இன்னும் பல நாடுகளில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் விமான, கடல் தடுப்பு இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தும், சிரியாவிற்குள் செல்லும் சாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடத்துவதாலும், எங்கும் செல்ல முடியாமல் திகைத்து நிற்கிறார்கள்
இவர்களில் பலர் லெபனான் மக்களின் வம்சாவளியினர், புலம் பெயர்ந்தவர்கள்; தங்களுடைய குடும்பங்களை பார்க்க வந்தவர்கள்; இவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்தோ ஹெஸ்பொல்லா துப்பாக்கி வீரர்களிடம் இருந்தோ அல்லாமல், அமெரிக்காவினால் அளிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டு, அமெரிக்க நிதியத்தில் இயங்கும், புஷ் நிர்வாகத்தின் இணக்கத்துடன் செயல்படும் போர் இயந்திரத்திலிருந்து ஆபத்தை எதிர்கொள்ளுகின்றனர்.

திங்கள் அன்று இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் ஹெஸ்பொல்லா தளங்கள் என்று கூறப்பட்ட இலக்குகளுக்கும் அப்பால் நடத்தப்பட்டன. பெய்ரூட்டில் நகர்ப்பகுதியும், துறைமுகப் பகுதிகளும் மீண்டும் தாக்கப்பட்டதை தவிர, இஸ்ரேலிய போர் விமானங்கள் வடக்கு லெபனானில் உள்ள அப்தே மீன்பிடிக்கும் துறைமுகத்தையும் தாக்கின; மேலும் வடக்கில் உள்ள திரிப்போலி நகரத்தையும் தாக்கின; அங்கு ஏராளமான சுன்னி பெரும்பான்மை பகுதிகள் உள்ளன; அவர்களுக்கும் ஷியைட்டு ஹெஸ்பொல்லாவிற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது; இதே நிலைதான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பால்பெக் நகரத்திற்கும் ஏற்பட்டது.

திங்களன்று குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் என்று லெபனான் அதிகாரிகள் கூறினார்கள்; இதையொட்டி, இறப்பு எண்ணிக்கை குறைந்தது 209 ஆக உயர்ந்தது. சமீபத்திய இறப்புக்களில் பெய்ரூட்டிற்கு தெற்கே கடலோர நகரமான Rmeileh வில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நடந்தபொழுது அங்கு மினிபஸ்ஸில் சென்றிருந்த 12 சாதாரணக் குடிமக்களுடைய சாவும் அடங்கும். வடக்கு இஸ்ரேலில் இருந்த நகரங்களில் விழுந்த ஹெஸ்பொல்லா ராக்கெட்டுக்களால் ஆறு இஸ்ரேலிய குடிமக்கள் காயமுற்றபோதும் ஒருவரும் கொல்லப்படவில்லை.

பிரதமரின் நியமனம் லெபனானின் சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று புஷ் நிர்வாகத்தால் பாராட்டுரை பெற்ற அதே பிரதம மந்திரி Fouad Sinora, லெபனான் மக்களுக்கு ஆற்றிய உரை ஒன்றில் இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்தார்; "மற்றவர்களை பயங்கரவாதிகள் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது; அதே நேரத்தில் அப்பயங்கரவாதத்தின் கடினமான வடிவமைப்பு செயல்களைத்தான் அதுவும் செய்து கொண்டிருக்கிறது."

இஸ்ரேலிய தரைப்படைகள் லெபனானின் எல்லையில் குவிக்கப்பட்டு ஒரு இஸ்ரேலிய படைப்பிரிவால் சுருக்கமான மோதல் மேற்கொள்ளப்பட்டது. திங்கள் கிழமையன்று இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பல ஆயிரம் ஆயத்தஇருப்புப் படைகளை மேற்குக்கரைக்கு செல்லுமாறு அழைப்பு விடுத்தது; இதையொட்டி இப்பொழுது பாலஸ்தீனிய பகுதிகளில் இருந்து லெபனிய எல்லைப் பகுதிக்கு முறையான படைப்பிரிவுகள் எளிதில் மாற்றப்படலாம்.

வார இறுதியில் குறைந்தது ஒரு செய்தி ஊடக அறிக்கையாவது கொடுத்துள்ள தகவலின்படி இஸ்ரேல் சிரிய ஜனாதிபதி பஷர் அசாத்திற்கு இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று 72 மணி நேர முன்னறிவுப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது; இதில் ஹெஸ்போல்லாவின் ராக்கெட் தாக்குதல்களை தலையிட்டு அவர் நிறுத்தாவிட்டால், சிரியாவினுள் இருக்கும் முக்கிய தளங்கள் குண்டுவீச்சிற்கு இரையாக்கப்படும் என்று கூறப்பட்டது. லண்டனை தளமாகக் கொண்டுள்ள அரபு மொழி செய்தித் தாளான அல்-ஹயட் இத்தகவலை கொடுத்துள்ளது; பென்டகன் ஆதாரங்களை சுட்டிக்காட்டி இது இஸ்ரேலிய செய்தி ஏடு ஹாரெட்ஸில் மேற்கோளிடப்பட்டது; ஈராக்கில் இப்பொழுது ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளுடன், அவர்களில் ஆயிரம்பேர் சிரியாவுடனான எல்லை மாகாணப் பகுதியான அன்பரில் நிறுத்தப்பட்டிருக்க, இவற்றுடன் இத்தகைய தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பெறும்.

நேரடியாகவே அமெரிக்க இராணுவத் தலையீடு லெபனானில் ஏற்படாலாம் என்ற வாய்ப்பும் உள்ளது. USS Iwo Jima என்னும் போர்க்கப்பல் மற்றும் அத்துடன் வரும் கப்பல்களில், கிட்டத்தட்ட 2,200 சிறப்புக் கடற்படைவீரர்கள் உள்ளனர். இவர்கள் அக்கபா வளைகுடாவில் இருந்து பயணித்து வருகின்றனர்; அங்கு அவர்கள் ஜோர்டானிய துருப்புக்களுடன் கூட்டாக இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சூயஸ் கால்வாய் வழியாக எகிப்து நாட்டின் அனுமதியுடன் கடப்பர்; பின்னர் செவ்வாய்க்கிழமை காலை லெபனான் கடற்கரையை ஒட்டி வந்துவிடுவர். 24வது மரைன் படையெடுப்பு பிரிவில் இருந்து ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே பெய்ரூட்டீல் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சிறு அளவு வீரர்களை இறக்கியுள்ளது; அதேபோல் சைப்ரசிலும் நிகழ்ந்துள்ளது.

G8 செயலற்றுள்ள நிலை, வல்லரசுகள் இயற்றியுள்ள தீர்மானத்தில் காணப்படும் அவநம்பிக்கைத் தன்மை இரண்டும் இஸ்ரேலிய ஆட்சியின் ஆக்கிரோஷத்திற்கு எரியூட்டலைத்தான் கொடுக்கும்; அது இன்னும் கூடுதலான வகையில் லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், மத்திய கிழக்கு முழுவதும் பெரும் அழிவிற்குத்தான் வழிவகுக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved