World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

The US adopts belligerent posture in Baghdad talks with Iran

ஈரானுடனான பாக்தாத் பேச்சுவார்த்தையில் போரிடும் தோரணையைக் காட்டும் அமெரிக்கா

By Peter Symonds
26 July 2007

Back to screen version

செவ்வாயன்று (24.07.2007) பாக்தாத்தில் நடந்த அமெரிக்க ஈரான்-இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தையில், ஈராக்கிற்கான அமெரிக்க தூதுவர் ரெயான் குரொக்கர், தெஹ்ரான் அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஈராக்கில் பயிற்சி அளித்து, அவர்களை உருவாக்கி வருவதாக நிரூபிக்கப்படாத பல கூற்றுக்கள் தொடர்பாக ஈரானின் மீது அழுத்தம் கொடுப்பதை தீவிரமாக்கி இருந்தார். நிறைய பயனற்ற ஆதாரங்களின் துணையுடன் வெளிவிவகாரத்துறை உபாயத்திற்கு எதிராக ஈரானை நோக்கி, கடந்த மே மாதம் பாக்தாக்தில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போதை விட தற்போது வெள்ளை மாளிகையில் குரொக்கரின் கருத்தற்ற பேச்சு மிக தீவிரமாக இருந்தது.

செய்தியாளர்களின் மத்தியில் பேசும்போது, குரொக்கர், அமெரிக்க படைகள் மீதான தாக்குதல்களை குறைக்காமல் தீவிரப்படுத்தி வருவதாக, ஈரானின் மீது குற்றஞ்சாட்டினார். "அதிகரித்து வரும் குடிப்படை சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஈரான் அளித்து வரும் ஒத்துழைப்பு, அதன் இயல்புதன்மையாக மாறி வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்." என்று தெரிவித்த அவர், முன்னேற்றம் "கொள்கைகள் அல்லது வாக்குறுதிகளின் அடிப்படையில் இல்லாமல் விளைவுகளின் அடிப்படையில் அளவிடப்பட வேண்டும்' என வாஷிங்டன் கோரியது" என்பதை வலியுறுத்தி இருக்கிறது. இதுவரை, முக்கிய விளைவுகள் எதுவும் ஊக்கம் தருவனவாக இல்லை." என்று கூறி வாஷிங்டன் செயல்பாடுகளை வலியுறுத்தி வருவதாக அழுத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

கடந்த மே மாதம், இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தின் பின்னர் நடந்த அமெரிக்க ஈரானிய அதிகாரிகளின் நேருக்கு நேரான பேச்சுவார்த்தைகளின் விளைவுகளைப் பற்றி கூறுவதை குரொக்கர் மிக எச்சரிக்கையாக தாண்டிவிட்டார். செவ்வாயன்று (24.07.2007), பேச்சுவார்த்தையின் போது இத்தூதர், தனது வழியில் அமெரிக்காவின் கோரிக்க்ைகளை மூர்க்கத்தனமாக வலியுறுத்தச் செய்தார். ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை மிக சுலபமானதாக இல்லை என்று வரையறுத்த அவர், "இது முழுமையான பொருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று நான் கூற முடியாது என்றாலும், அவர்களின் நடவடிக்கைகளில் எங்களின் பிரச்சனை எங்கு இருக்கிறது என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இதை அவர்களுக்கு தெரிவிக்கவும் நான் எந்த வகையிலும் தயங்கவில்லை." என்று தெரிவித்து இருக்கிறார்.

«பாஸ்டன் குளோப் செய்திப்படி, பல சூடான விவாதங்கள் இப்பேச்சுவார்த்தையில் நடந்தேறி இருக்கிறது. ஈராக்கின் பாதுகாப்பு பிரச்சனை குறித்த விவாகரத்தை ஈரான் அதிகாரிகள் எடுத்துக் கொள்ளாததை குறித்து குரல் எழுப்பிய குரொக்கர், அவர்கள் பிற விவகாரங்களை பற்றி பேச விரும்பினால், ஹமாஸ் மற்றும் ஹெஜ்புல்லாவிற்கான ஈரானின் ஆதரவு குறித்து பேச வேண்டும் என்று கூறியதுடன், ஈரானின் புரட்சிப் படைகள் ஈராக்கில் பாதுகாப்பாக இருக்காது. எங்களின் நடவடிக்கைகளை நாங்கள் பின்வாங்கிக் கொள்ளவில்லை என்று கடுமையாக தெரிவித்தார்.

ஈராக்கிற்கு உரிய ஈரானின் தூதுவர், ஹாசன் கஜ்மி-குமி, ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு தெஹ்ரான் உதவி வருவதாகக் கூறப்படுவதை மறுத்தார். ஈராக்கில் ஈரானியர்கள் தலையீடு இருப்பதாக கூறும் அமெரிக்க பாசாங்கு குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர், "வெளிநாட்டு அமைச்சக செய்தி தொடர்பாளர் நேற்று (25.07.2007) கூறுகையில் ஈரானுக்கு எதிராக ஆதாரமற்ற இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதன் மூலம், அமெரிக்காவின் வெற்று பிரசாரத்திற்கு உடன்பட்டு, அந்நாட்டிற்கு எதிராக உளவியல் ரீதியான செயல்பாடுகளை தொடர வேண்டும் என்ற அதன் முக்கிய நோக்கம் மட்டும் மிகத் தெளிவாக புரிகிறது என்று தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக, வாஷிங்டன் மற்றும் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகள் ஈராக் விவகாரத்தில் ஈரானின் குறுக்கீடுகளை தொடர்ந்து ஒரே சீராக குற்றஞ்சாட்டுவதை நேர்த்தியாக கையாண்டு வருகிறார்கள். ஈரானில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை பட்டியலிட்டுக் காட்டுவது மற்றும் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இருக்கும் கைதிகளை ஈரானுக்கு எதிராக அடித்து பேச வைப்பதைத் தவிர இந்த அனைத்து பிரச்சாரங்களும் வேறு எந்தவிதமான வலுவான ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை. இந்த மாதத்தின் (ஜூலை, 2007) ஆரம்பத்தில், அமெரிக்க இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் கெவின் பெர்க்னர், அமெரிக்க படைகளின் மீதான தாக்குதலில், குறிப்பாக ஐந்து அமெரிக்க படையினர்களை பலி கொண்ட கர்பாலா தாக்குதலில், நேரடியாக அமெரிக்க படைகளின் மீது தாக்குதலில் ஈடுபட்டதற்காக ஈரான் தலைமையின் மீது முதல் முறையாக குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.07.2007), மற்றொரு அமெரிக்க செய்தி தொடர்பாளர் அட்மிரல் மார்க் பாக்ஸ் மேலும் ஒரு குற்றச்சாட்டை பட்டியலிட்டு இருந்தார். அதாவது ஈராக்கிற்கு ஈரானிய ஆயுதங்களை ஈரான் கடத்துவதோடு மட்டுமில்லாமல், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையும் அது கடத்தி வருவதாக கூறி இருந்தார். "பிற பகுதிகளில் இருந்து வரும் ஆயுதங்களையும் நாங்கள் பார்க்கிறோம். இவை ஈரானில் இருந்து கொண்டு வரப்பட்டு இருக்கும் என்று கருதுகிறோம்'. என்று அவர் கூறினார். அமெரிக்காவின் பிரச்சாரம் ஒரு எளிமையான சாம்ராஜ்யத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதாவது: ஈரானின் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் ஈரானில் இருந்து தெஹ்ரானின் ஆட்சிக்குத் தெரிந்தே முழுமையாக வினியோகிக்கப்பட்டு இருக்கிறது என்று இந்த தர்க்கத்தின் அடிப்படையில் வாஷிங்டன் தற்போது ஈராக்கில் மத்தியஸ்தம் செய்வதில் பீஜிங் தலையிடுவதையும் குற்றஞ்சாட்டுகிறது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றங்கள் ஆதாரமற்றவை என்ற கருத்தை நிராகரித்து இருக்கும் குரொக்கர், "சட்டத்திற்கு முன்பு நாங்கள் நிரூபிக்க முயற்சிக்கும் அல்லது நாங்கள் விரும்பும் விடயம் இதுவல்ல." என்று கூறி இருக்கிறார். நடைமுறையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கூறப்படும் வெறுமையான வற்புறுத்தல்களின் அடிப்படையில் அமைந்திருக்கின்றனவே அல்லாமல் உண்மைகளின் அடிப்படையில் இல்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் பகிரங்க குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அப்பகுதி கூட்டமைப்பின் பொறுப்புகள் பற்றிய வாஷிங்டனின் மெளனத்துடன் முழுமையாக வேறுபட்டு இருக்கிறது. இதே விவாதங்கள் பெரும்பான்மையான ஈராக் தற்கொலை படையினரின் தாயகமான சவுதி அரேபியாவிற்கும் நேரடியாக வைக்கப்படுமானால் சவுதி உளவு படைகளுக்கு எதிராக ரியாத் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை புஷ் நிர்வாகம் வலியுறுத்தும் என்பதுடன், ஈராக்கில் சந்தேகத்திற்கு இடமின்று செயல்பட்டு வரும் சவுதி உளவுப்படையையும் கடுமையாக எச்சரிக்கும் நிலை உருவாகும்.

ஈரானின் தலையீடுகளை சமாதானப்படுத்தும் அறிகுறிகளைவிட ஈரான் மீது தாக்குதல் நடத்த விரும்புவதையே புஷ் நிர்வாகத்தின் கீழ் அல்லது அமெரிக்கா ஆளும் பகுதிகளின் கீழ் செயல்பட்டு வரும் குரொக்கரின் வாதங்கள் கடுமையாக பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவிற்கு எதிரான செயல்பாடுகள் என்ற கருத்தற்ற விவாதத்தைப் பொறுத்த வரை வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தவே தாங்கள் விரும்புவதாக தெஹ்ரான் மீண்டும் மீண்டும் தெரிவித்து இருக்கிறது. அமெரிக்காவின் கையகப்படுத்தலே பொதுவான குற்றச்சாட்டாக இருந்தாலும், ஈராக்கில் அமெரிக்க இராணுவத்திற்கு உதவியாக ஒரு துணை பாதுகாப்பு குழுவை உருவாக்கும்படி ஈரான் கூறி இருந்ததை அமெரிக்காவும் கடந்த கூட்டத்தின் போது ஏற்றுக்கொண்டிருந்தது. வெளியுறவு அமைச்சர் மனோச்செர் மொட்டாக்கி கூறி இருந்த, ஈராக் பற்றிய உயர்மட்ட பேச்சுவார்த்தையை நடத்த ஈரான் விரும்புகிறது என்ற கூற்றை நேற்று (25.07.2007), வெள்ளை மாளிகை மறுத்து இருக்கிறது.

ஈரான் அமெரிக்க படைகளை கொன்று குவித்து வருகிறது என்ற வெள்ளை மாளிகையின் விளம்பரத்தின் ஒரு பகுதியான அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் பல மாதங்களாக தெஹ்ரானுக்கு எதிராக நடந்து வருகிறது. அணுத் திட்டங்களை நிறுத்த மறுத்து வரும் ஈரான் மீது பொருளாதார மற்றும் பிற நடைமுறை தடைகளை விதிக்கும் மூன்றாம் தீர்மானத்தை ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் கொண்டு வர புஷ் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஈராக் விவகாரங்களில் தலையிடும் ஈரான் மீதான பகிரங்க குற்றச்சாட்டுக்கள் அளிப்பதில் மும்முரமாக இருக்கும் வெள்ளை மாளிகை, ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடுவது, எதிர்ப்பு குழுக்களை பின்வாங்கச் செய்வது, ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் வகையில் பிரிவினைவாதிகளை உருவாக்குவது என இவற்றில் எவ்வகையான மன உறுத்தல்களும் இல்லாமல் இருக்கிறது. அதே நேரத்தில், அமெரிக்க இராணுவம் பெருமளவிலான கடற்படையை பேர்சியன் வளைகுடாவில் தொடர்ந்து நிறுத்தி வைத்தும் இருக்கிறது.

வெள்ளை மாளிகைக்குள் ஈரான் பற்றிய விவாதங்கள் மிகவும் குறுகிய நோக்கில் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொன்டோலிசா ரைஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை, அமெரிக்காவின் கோரிக்கைகளை கொண்டு வர தெஹ்ரானின் மீது வலுக்கட்டாயமாக தண்டனைக்குரிய தீர்மானங்களையும், மூர்க்கத்தனமான உபாயங்களையும் கைக்கொள்ள விரும்புகின்றன. இருப்பினும், இவை இராணுவ நடவடிக்கைகளையும் விட்டுவிடுவதாக இல்லை. துணை அதிபர் டிக் செனி மற்றும் புஷ் அரசின் பல கழுகுப் பார்வை கொண்ட வழக்கறிஞர்கள் இந்த உபாய முறை செயல்படுத்தப்படுவதற்கு உரியதன்று என்று நிராகரித்தது, இராணுவ நடவடிக்கை எடுக்க, குறிப்பாக இஸ்ரேல் உடன் குழுவாக இணைந்து செயல்பட தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றனர். போஸ்டன் குளோப் செய்தியின்படி, சில மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈரானுடன் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதையே எதிர்த்துள்ளனர்.

இந்த கருத்து வேறுபாடுகள், அவர்களின் பொது விவாதங்களில் நன்றாகவே பிரதிபலிக்கிறது. போஸ்டன் குளோப்பிற்கு கிடைத்திருக்கும் மறு கருத்துக்களில் அமெரிக்க உயர்நிலை நிறுவன பயிலகத்தின் மைக்கேல் ரூபின், ஈரானுடன் மிக பயங்கரமான சமரசத்தை ஏற்படுத்திக்கொண்டு மாநிலத்துறை அதிகாரிகள் ஈராக்கில் முன்னேற விரும்புகின்றன என குறைகூறி இருக்கிறார். மேலும், "இதில் நாங்கள் முன்னேறி வருவதாகவும் நினைக்கிறோம். ஆனால் ஈரானியர்கள் எங்களை அவமானப்படுத்தி வாய்மூடி சிரித்து வருகிறார்கள். எனவே நாம் மூர்க்கத்தனத்தை காட்ட வேண்டி இருக்கிறது. இருப்பினும் ஈரான் எந்தவொரு ஒரு நம்பிக்கைக்குரிய மதிப்பீட்டையும் இதுவரை காட்டவில்லை." என்று தெரிவித்து இருக்கிறார்.

புஷ் அரசை எதிர்ப்பதில் இருந்து அப்பால், முன்னணி ஜனநாயகக் கட்சி வாதாடுபவர்கள், ஈரானின் மீது நம்பிக்கையற்ற தன்மையை நிரூபிப்பதில் வரிசையிட்டு நிற்கிறார்கள். ஆசியா டைம்ஸ் இணைய இதழில் "ஈரானை மாற்றுவதற்கான அமெரிக்க சட்ட உருவாக்குபவர்களின் அமைப்பு" என்ற தலைப்பிட்ட கட்டுரையில், ஹிலாரி கிளிண்டன் மற்றும் பேரக் ஓபாமா ஆகியோர் இஸ்ரேல் திட்டத்தின் பாரசீக ஆதரவு குழுவின் பத்திரிகை கூட்டத்திற்கு தங்கள் ஆதரவு தெரிவித்து ஒரு எழுத்துபூர்வமான அறிக்கை அளித்திருக்கிறார்கள்.

ஈரானுக்கு எதிராக பண்புநலமற்ற மதிப்பீடுகளை உருவாக்க சமீபத்தில் ஈரான் தீர்மானங்கள் மீதான சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கும் ஓபாமா, "தீவிரவாதத்திற்கு உதவும் தீவிர மதகுருமார் ஆட்சியை, ஈரானை, அனுபதிப்பதும் மற்றும் அணு ஆயுதங்களை வாங்குவது என்பது அண்டை நாடுகளுக்கு வெளிப்படையாக அச்சுறுத்தலாக அமைகிறது என்பதால், இந்த பயங்கரத்தை நாங்கள் அனுமதிப்பதும் முடியாது." என்று கூறுகிறது. ஈரானிய எதிர்ப்பு அமைப்பை செயல்படுத்தி வரும் ஹிலாரி கிளிண்டன், "ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதையோ அல்லது வாங்குவதையோ நாங்கள் எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. மேலும் தீவிரவாதத்திற்கு உதவும் அதன் போக்கிற்கும் நாம் பதில் சொல்லாமல் இருக்க முடியாது." என்று கடுமையாக தெரிவித்து இருக்கிறார்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்பதற்கும், ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வருகிறது என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. ஈரானுக்கு எதிராக மிகத் தீவிர நடவடிக்கைகளை எடுப்பது மீதான அமெரிக்க அரசியல் அமைப்பில் உள்ள ஒருமுக போக்கிற்குப் பின்னால் , ஈராக்கின் குற்றவியல் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை உந்தித் தள்ளும் அதே மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் கிடக்கின்றன. தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் வளமான பகுதிகளில் அமெரிக்கா அதன் ஐரோப்பா மற்றும் ஆசிய போட்டியாளர்கள் மீதாக தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியாக வேண்டும் என்று அமெரிக்கா ஆளும் வட்டங்களில் ஒரு விரிவான உடன்பாடு இருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved