World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The Scotsman newspaper misrepresents SEP campaign

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றி The Scotsman செய்தித்தாள் தவறாக உரைக்கிறது

By Julie Hyland
20 April 2007

Back to screen version

ஏப்ரல் 18ம் தேதி, மே3 ஸ்கொட்லான்ட் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் "சிறிய கட்சிகள்" நிற்பது பற்றி The Scotsman நாளேடு தேர்தல் தகவல் பற்றி விளக்கி எழுதியுள்ளது.

அரசியல் நிருபர் Louise Gray யினால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை 23 கட்சிகளை பற்றிக் குறிப்பிட்டு அவற்றின் கொள்கைகள், பெயர்கள் அடையாளங்கள் பற்றிய சிறு விவரிப்பையும் கொடுத்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி தவறாக ஸ்கொட்டிஷ் சமத்துவக் கட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி தன்னுடைய வலைத் தளமான www.socialequslity.org.uk என்று தொடர்புடன் அடையாளத்தையும் குறிப்பிட்டிருந்துகூட இவ்வாறு கட்டுரையில் வந்துள்ளது. தன் கட்டுரையை எழுதுவதற்கு முன் வலைத் தளத்தை கிரே பார்த்திருப்பார் என்று நினைக்கிறோம்.

நிலைமையை இன்னும் மோசமாக்குவதுபோல், சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கை பற்றிய அடிப்படை தகவல்கூட ஒரு சொற்றொடரில் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. "ஸ்கொட்லான்ட் மேற்குப்பகுதியில் உண்மையான சோசலிச ஸ்கொட்லான்ட் அமைப்பதற்கு கட்சியின் ஐந்து வேட்பாளர்கள் அழைப்பு விடுகின்றனர்" என்றும் கட்டுரை கூறுகிறது.

பயன்படுத்தப்பட்ட மேற்கோள்கள் அது சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டன என்ற உட்குறிப்பை தருகிறது; உண்மை அதுவல்ல. மிக மேம்போக்காக சோசலிச சமத்துவ கட்சியின் கொள்கைகள் பற்றி கிரே கவனம் செலுத்தியிருந்தாலும் கூட, அதன் பெயர், முக்கிய கருத்து இரண்டையும் தவறாகக் கூறுவது என்பது செய்திதிரட்டலில் திறமையற்ற தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

"உண்மையான சோசலிசம்" பற்றி இவ்வம்மையாரின் குறிப்பு சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்திலிருந்து தான் எடுக்கப்பட்டிருக்க சாத்தியமுண்டு. அதன் இரண்டாம் பந்தியில், தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக "புதிய, உண்மையான சோசலிச இயக்கத்திற்கு" இது அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கு அடுத்த பத்தி விளக்குகிறது: "பிரிட்டனில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் சர்வதேச அளவிலுள்ள அவர்களுடைய சகோதர, சகோதரிகளுடன் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புத் தருவதற்காக இணைக்க நாங்கள் முற்பட்டுள்ளோம்; தொழிற்கட்சியின் ஆதரவுடன் அமெரிக்க ஆக்கிரமிப்பு ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் நடக்கும் சட்டவிரோதப் போர்களை ஈரானுக்குள்ளும் பரப்ப அச்சுறுத்துகிறது."

கிரே அம்மையார் இன்னும் சற்று படிக்க நேரம் எடுத்துக் கொண்டிருந்தால் Scottish National Party மற்றும் அதன் இடது பிற்தொகுப்புக்களான Solidarity, Scottish Socialist Party போன்றவை பிரச்சாரம் செய்யும் பிரிவினை நோக்கங்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பு விளக்கப்பட்டிருப்பதை பல பத்திகளிலும் பார்த்திருக்க முடியும்.

"பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக" என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் அறிக்கை கூறுவதாவது: "ஸ்கொட்டிஷ் அல்லது வேல்ஷ் தேசியவாதத்தை புதிய தொழிலாளர் கட்சி அமைப்பதற்கு அடிப்படை என்று சித்தரிப்பவர்கள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்; ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி (SNP), Plaid Cymru ஆகியவற்றின் இம்முயற்சிகளை "ஆங்கில" ஆட்சிதான் இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணம் என்பதற்கு ஆதரவு கொடுப்பவர்களையும் எதிர்க்கிறோம்."

"இத்தகைய கூற்றுக்கள் ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்டமன்றம் ஆகியவற்றை வெஸ்ட்மின்ஸ்டரைவிட ஏதோ ஒரு வகையில் கூடுதான ஜனநாயகத் தன்மை உடையதாக பெருமைப்படுத்துவதுடன், இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள மன்றங்களில் இருக்கும் அடிப்படை சமூக நலன்கள் எவ்வாறு கொள்கையை நிர்ணயிக்கின்றன என்பதையும் மறைக்க முற்படுகின்றன."

"தேசியப் பிரிவினை என்பது சோசலிசத்துடன் தொடர்பு கொண்டது அல்ல. உள்ளூர் முதலாளித்துவம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் தமது சொந்த உறவுகளை உருவாக்கிக்கொள்ள விரும்பும் மத்தியதர வர்க்கத்தில் ஒரு பிரிவினரின் நலன்களைத்தான் அது பிரதிபலிக்கிறது."

அதனுடைய போட்டி ஏடுகளைப் போலவே The Scotsman உம் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை அசட்டை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மே 3ம் தேதிக்கு பின்னர் அநேகமாக ஒரே தடவை குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வகையில், அவநம்பிக்கை நிறைந்த தலைப்பான, "நல்ல, தீய, சற்றே வேடிக்கையான" ("The good, the bad and the faintly ridiculous") என்ற தலைப்பில் ஒற்றை வரி அறிக்கையை அது வெளியிட்டுள்ளது.

மொத்தத்தில் அது கொடுத்துள்ள தகவலில் காணப்படும் இழிவுணர்வு மற்றும் விரோதப்போக்கு, சோசலிச சமத்துவக் கட்சி அப்பத்திரிகைக்கு அதன் அரசியல் பிழை பற்றி எடுத்தக் கூறியபோது காட்டிய விடையிறுப்பிலும் நன்கு புலப்பட்டது. அரசியல் பிரிவு மற்றும் ஆசிரியர்குழு அலுவலகம் இரண்டும் வாடிக்கையான பத்திகளில் முறையான திருத்தம் செய்தவாதக உறுதியளித்தன; அதையொட்டி பக்கம் 30ல் "ஆசிரியர்களுக்குக் கடிதம்" பகுதியில் கடைசியில் இத்திருத்தத்தை புதைத்தது.

ஒரு சிறிய அச்செழுத்தில் வெளியிடப்பட்ட இத்திருத்தம் கூறுகிறது: "(ஏப்ரல் 18) தேர்தல் செயற்பட்டியலில் Socialist Equality Party என்பது தவறாக Scottish Equality Party என்று குறிப்பிடப்பட்டது. குறிப்பிட்டது போல் "உண்மையான சோசலிச ஸ்கொட்லாந்திற்காக" அல்ல "ஸ்காட்லாந்தில் உண்மையான சோசலிசம்" என்பதற்காகப் போட்டியிடுவதாகவும், எங்களுடைய தவறுகளுக்கு மன்னிப்புக் கோருகிறோம்'' என தெரிவித்துள்ளது.

கட்சியின் கொள்கை பற்றி விவரித்த திருத்தம் பொருளற்றது என்பது தெளிவு. ஸ்கொட்லாந்து மேற்குப்பகுதியின் வட்டாரப் பட்டியலுக்கு தலைமை வகிக்கும் சோசலிச சமத்துவக் கட்சி தேசியச் செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன், The Scotsman இன் சோனியா மார்ஷலிடத்தில் பேசுகையில் பிந்தைவர் கூறும் திருத்தம் செய்தித்தாள் வாசிப்பவர்களிடையே சோசலிச சமத்துவக் கட்சிக்கும் ஸ்கொட்டிஷ் தேசியத்தை ஊக்குவிக்கும் ஏனைய சோசலிச கட்சிகள் என கூறிக்கொள்வற்றிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி தெளிவாக்காது என்று கூறினார்.

இந்த நிலையைத் திருத்தும் வகையில் மார்ஸ்டன் The Scotsman க்கு வெளியிடுவதற்கு ஒரு கடிதம் அன்றே அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார். "அனுப்பிவையுங்கள், செய்தித்தாள் அதைக் கவனிக்கும் என்று மார்ஷல் கூறினார்; ஆனால் அது வெளியிடப்படுமா என்பது பற்றி உறுதிகூற முடியாது என்றார்.

ஒரு மணி நேரத்திற்குள் மார்ஸ்டன் உறுதியளித்த கடிதத்தை அனுப்பி வைத்தார். அதில் "சோசலிச சமத்துவக் கட்சி என்பது நான்காம் அகிலத்தின் பிரித்தானிய பிரிவு, அனைத்து தேசிய, இன, தொழிலாளர்களை அது சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக ஐக்கியப்படுத்த முயல்கிறது என குறிப்பிட்டிருந்தார். The Scotsman கூறும் கருத்தோ சோசலிச சமத்துவக் கட்சி ஸ்கொட்டிஷ் பிரிவினைக்கு ஆதரவு தருகிறது என்பது போல் உள்ளது; இது Tommy Sheridan உடைய Solidarity, மற்றும் Scottish Socialist Party ஆகியவற்றை நினைவுகூர்வதாகத்தான் உள்ளது. அவர்களுடைய வாதத்தில் ஸ்கொட்லாந்தில் முதலாளித்துவ அரசாங்கம் ஒன்றை எடின்பரோவில் இருந்து ஆட்சி செய்யும் வகையில் நிறுவப்படுதல் என்ற பொருளைத்தரும்.

"எங்களை பொறுத்தவரையில் அத்தகைய இடது தேசிய கருத்துக்களுடன் நாங்கள் இயைந்திருக்கவில்லை" என்று மார்ஸ்டன் தொடர்ந்தார். "மேலும், தொழிலாள வர்க்கத்தின் பார்வையில் தேசிவாதத்தை நியாயப்படுத்துவதின் அரசியல் ஆபத்துக்களை பற்றி நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்; பிரிவினைவாதங்களின் பேரழிவு விளைவுகளை பற்றியும் எச்சரித்திருக்கிறோம்; இது பால்கன்களில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் பொருந்தும்."

"சோசலிசம் என்பது உலகை பகுதிகளாக பிரித்தல் மற்றும் மக்களை அதன் ஒன்றுக்கு ஒன்று எதிரான நாடுகளுள் அடக்கி வைத்தல் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து, இலாபத்திற்காக அல்லாது தேவைக்காக திட்டமிட்ட உற்பத்தியை செயல்படுத்துதலாகும். இது பெருவணிகச் சார்பு உடைய ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி அல்லது ஸ்கொட்லாந்தை, அயர்லாந்திற்கு போட்டியாக ‘tartan tiger' ஆக மாற்ற பேரவா கொண்டிருக்கும் அதன் கொள்கைகளாலோ அவற்றிற்கு ஆதரவு கொடுப்பவர்களாலோ சாதிக்க முடியாது."

இந்தக் கடிதம் வெளியிடப்படவில்லை.

எந்த அளவிற்கு செய்தி ஊடகம் தேசிவாதத்திற்கு ஒரு இடதுசாரி எதிர்ப்பை ஓரம் கட்ட முற்படுகிறது என்பதை எடுத்துக் காட்டியிருப்பதற்கு The Scotsman இன் பிரதிபலிப்பு தக்க சான்றாகும்.

முதலில் சோசலிச சமத்துவக் கட்சி அசட்டை செய்யப்படுகிறது; பின்னர், இனி அவ்வாறு முடியாது எனத் தெரிந்தவுடன், அதன் பெயரும் கொள்கைகளும் தவறாகப் பிரதிபலித்துக் காட்டப்படுகிறது. Scottish Equality Party என்ற பெயரில் எந்த அமைப்பும் இல்லை; கிரேயோ சோசலிச சமத்துவக் கட்சியை அத்தகைய பெயருடன் போட்டுக் குழப்பியுள்ளார். பெயரையும், மேற்கோளையும் அவரே தயாரித்துள்ளார்.

இத்தகய பிழை பெரிய அரசியல் கட்சிகள் பற்றி நடந்திருக்குமேயானால், The Scotsman உடைய மன்னிப்புக் கோரல் மிகவும் பணிந்து இருந்திருக்கும். தாக்குதலுக்குட்பட்ட அமைப்பில் இருந்து வந்த கடிதத்தை வெளியிட மறுப்பது என்ற பேச்சிற்கே இடம் இருந்திருக்காது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved