World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Gleichheit editorial: "A socialist strategy against militarism and war"

சமத்துவம் ஆசிரிய தலையங்கம்: "இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மூலோபாயம்"

11 September 2007

Back to screen version

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (றிணீக்ஷீtமீவீ யீஜக்ஷீ ஷிஷீக்ஷ்வீணீறீமீ நிறீமீவீநீலீலீமீவீtறிஷிநி) யால் இருமாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் சமத்துவம் என்னும் சஞ்சிகையின் சமீபத்திய பதிப்பில் வந்துள்ள ஆசிரிய தலையங்கத்தை கீழே காணலாம்.

ஒரு பரந்த அரசியல் கூட்டணி, செப்டம்பர் 15ம் தேதி போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பேர்லினில் நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜேர்மன் இராணுவம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு பின்னரும் ஆப்கானிஸ்தானில் தொடர்வதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்க இருப்பதை அடுத்து, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனிய படைகள் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் கேட்டுக் கொள்ளுவதுடன், ஜேர்மனிய இராணுவப் பணி நீடித்து தொடர்வதற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை கேட்டுக்கொள்கிறது.

இக்காரணம் முற்றிலும் நியாயமானதாகும். ஆயினும், முந்தைய சமாதான ஆர்ப்பாட்டங்கள் பலவற்றைப் போலவே இந்த ஆர்ப்பாட்டமும் பயனற்றது என நிரூபிக்கப்பட்டு விடும். Attac, இடது கட்சி, மாவோயிச MLPD, சமாதான முயற்சிக் குழுக்கள் ஆகிய ஆர்ப்பாட்ட அமைப்புக்களின் முன்னோக்குகள் இராணுவவாதத்தை எதிர்ப்பதற்கு போதுமானவை அல்ல; உண்மையில் இவை ஓர் உண்மையான போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியமைப்பதற்கு ஒரு தடையைத்தான் பிரதிபலிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தின் முறையீடு, அரசாங்கம் அமைக்கும் கட்சிகளின்பால் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுடன் நின்றுவிடுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனிய படைகள் திரும்பப் பெறப்படுதல் என்பது "அமெரிக்கப் படைகளையும் திரும்ப பெறவேண்டும் என்று புஷ் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும்" என்று முறையீடு கூறுகிறது. ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய அரசாங்கம் தலையிட்டுள்ளதை கொள்கை ரீதியாக இது நிராகரிக்கவில்லை; மாறாக இராணுவ வழிவகைகளுக்கு பதிலாக ராஜதந்திர வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. "இராணுவ வலிமை அரசியலை அடுத்து பொருளாதார நலன்களும், ஆயுதம் களைதல், சிவில் கட்டுப்பாடு நிர்வாகம், ராஜதந்திர பேச்சு வார்த்தைகள் ஆகியவற்றிற்கு கட்டாயம் வழிவிட வேண்டும்."

போரின் மூலத்தை விளக்குவதற்கான முயற்சி எந்தக் கட்டத்திலும் மேற்கொள்ளப்படவில்லை; அதேபோல் ஜேர்மனி தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களையும் ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவை போலவே, தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய குறிப்பும் இல்லை. உலகம் முழுவதும் பரந்த மக்கள் எதிர்ப்பு இருந்த போதிலும் கூட இராணுவவாதம் அதிகரித்தவகையில் பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மை பற்றியும் எந்தக் குறிப்பும் கூறப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் போர் இப்பொழுது ஆறு ஆண்டுகளை நெருக்கிக் கொண்டிருக்கிறது; ஈராக் போர் ஐந்தாம் ஆண்டில் உள்ளது; இரண்டிற்கும் ஒரு முடிவு வருவதாகத் தெரியவில்லை. வாஷிங்டன் தற்பொழுது ஈரான் மீதான தாக்குதலுக்கான தயாரிப்புக்கள் பற்றி திட்டங்களை விவாதித்து வருகிறது; ரஷ்யா புதிய அணுசக்தி ஏவுகணைகளை பெருக்கி வருகிறது; சீனா தன்னுடைய கடற்படையை கட்டமைத்து வருகிறது; ஜப்பான் மீண்டும் ஆயுதமேந்த முற்பட்டுள்ளது; இந்தியா தன்னுடைய அணுசக்தித் திட்டத்தை உத்தியோகபூர்வ அமெரிக்க ஒப்புதலுடன் முன்னேற்றுவித்து வருகிறது. புதிய இராணுவ ஆயுதங்கள் மேற்கொள்ளப்படலும், சுயாதீன இராணுவத் திறன்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உயர்ந்த முன்னுரிமையைப் பெற்றுவிட்டன. 1990ம் ஆண்டு நாடு மறு ஐக்கியம் கொள்ளும் வரை முற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளையே கொண்டிருந்த ஜேர்மனி, இப்பொழுது உலக அளவில் தீவிர இராணுவ நடவடிக்கைகளை கொண்டுள்ள பெரும் சக்திகள் குழுவில் சேர்ந்துவிட்டது.

இத்தகைய உலகம் முழுவதுமான இராணுவவாதப் பெருக்கத்திற்கான காரணம் என்ன? எந்த இலக்குகளும் நலன்களும் தொடரப்படுகின்றன? அனைத்து ஸ்தாபனமய கட்சிகளும் --பெயரளவில் இடதோ, வலதோ-- விதிவிலக்கு இல்லாமல் இராணுவவாதம் பெருகிய முறையில் வருவதற்கு ஏன் ஆதரவைக் கொடுக்கின்றன?

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அமெரிக்க காங்கிரஸ் ஈராக் போர் தொடரப்படுவதற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட இசைவு கொடுத்துள்ளது. ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி (SPD) யின் பீட்டர் ஸ்ட்ருக் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் (CDU) அதிபர் அங்கேலா மேர்க்கெல் இருவரும் ஹிந்துகுஷ் பகுதியில் ஜேர்மனிய நலன்களை காப்பதற்கு உறுதிபூண்டுள்ளனர். செப்டம்பர் 5ம் தேதி ஆளும் பெரும் கூட்டணி (SPD-CDU மற்றும் CSU) ஒருமனதாக வரவிருக்கும் ஆண்டுகளிலும் ஜேர்மனிய பணி தொடரலாம் என முடிவு எடுத்துள்ளன. பசுமைக் கட்சியும் வெளிப்படையாக ISAF கட்டளையின் வடிவமைப்பிற்கு உட்பட்டு ஜேர்மனிய படைகள் பயன்படுத்தப்படலாம் என்று ஒப்புக் கொண்டுள்ளது. பல பேட்டிகளிலும், ஆப்கானிஸ்தானில் தற்போது ஐ.நா.வின் சிறப்பு தூதராக இருக்கும், பசுமைக் கட்சி உறுப்பினரான Tom Konigs, பல முறையும் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய துருப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன் காரணங்களை பற்றி ஆராயாமல், போருக்கு எதிரான போராட்டம் ஒன்றை தீவிரமாக நடத்த முடியாது. இன்றைய சமூக யதார்த்தத்தின் பின்னணியில், சமாதானத்திற்கான பரந்த முறையீடுகள், நோயை சிறிது நேரம் மறக்க அடிக்கும் மருந்தைப் போல்தான் செயல்படுகின்றன. முன்னாள் பசுமை சமாதானவாதி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், கட்சிகளின் தலைமைகள் என்ற சொந்தக் கூறுபாடுகளின் அடிப்படையில் மட்டும் இராணுவவாத முகாமிற்குள் சென்றுள்ளது பற்றி விளக்குவது இயலாததாகும். இதையும் தவிர பல அடிப்படை சமூக சக்திகள் செயல்பட்டுள்ளன.

முதலாளித்துவ சமூகம் இரு அடிப்படை முரண்பாடுகளால் பீடிக்கப்பட்டுள்ளது. அது அடித்தளமாக கொண்டுள்ள தேசிய அரசு என்பது, உலகந்தழுவிய உற்பத்தி முறையின் ஒருங்கிணைப்புடன் இயைந்திருக்கும் தன்மையை பெற்றிருக்கவில்லை; உற்பத்தி வழிவகை ஒரு சிறிய, சலுகை பெற்ற உயரடுக்கின் சொந்த உடைமையாக இருப்பது உற்பத்தி வகைகளின் சமூகத் தன்மையுடன் இயைந்து இருக்கவில்லை; அதற்கு நூறாயிரக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களுடைய கூட்டுழைப்பு அவசியமாகும்.

இந்த முரண்பாடுகள், சக்தி, மூலப்பொருட்கள், சந்தைகள், செல்வாக்கு மண்டலங்கள் மற்றும் சமூக நலன்கள், ஜனநாயக உரிமைகள் என்று தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகியவற்றை கொள்ளுவதற்காக கடுமையான போராட்டத்தின் மூலம் வெளிப்படுகின்றன. இந்த இரு காரணிகளும் நெருக்கமான தொடர்பு உடையவை ஆகும். ஆளும் வர்க்கங்கள் தங்கள் சலுகைகளையும் இலாபங்களையும் உலகளாவிய இருப்புக்களில் பெரும் பகுதியை பெறுதல் மற்றும் அதிகரித்த வகையில் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுதல் ஆகியவற்றின் மூலம்தான் தக்க வைத்துக் கொள்ள முடியும். இராணுவவாதம் இந்த இரு இலக்குகளையும் திருப்திப்படுத்துகிறது: ஏகாதிபத்திய வெற்றி மற்றும் உள்முரண்பாடுகளை அடக்குதல் ஆகியவைதான் இப்பொழுது வெளியுறவுக் கொள்கை இலக்குகளை தொடர்வதற்கு இன்றியமையாதவை எனக் கருதப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான போர்கள் ஏகாதிபத்தியத்தின் போர்களாகும். மிகப் பரந்த சக்தி இருப்புக்களை கொண்டு முக்கியமான புவி-அரசியல் மூலோபாய நிலைப்பாட்டை கொண்டிருக்கும் பகுதியின்மீது இராணுவக் கட்டுப்பாடு பெறுவதை அவை நோக்கமாக கொண்டுள்ளன. இத்துறையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மிக ஆக்கிரோஷமான பங்கை கொண்டுள்ளது. ஒருகாலத்தில் ஒப்புமையில் நிதிய, பொருளாதார வலிமை கொண்ட உலக பலமான அரசியல் சக்தி, இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலத்துடன் நோக்குகையில், தற்பொழுது கணிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்கா தன்னுடைய பொருளாதாரச் சரிவினை ஈடுசெய்யும் வகையில் இராணுவ மேலாதிக்கத்தை செலுத்த முற்படுகிறது.

ஆனால் இந்த விரிவாக்க நலன்களை தொடர்வதில் அமெரிக்கா மட்டும் இல்லை. வளங்களுக்கான போட்டி -அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள், ஜப்பான், ரஷ்யா என --அனைத்து ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயும் முரண்பாடுகளை தீவிரமாக்கியுள்ளது. சீனா, இந்தியா, பிரேசில் உட்பட,- வளர்ச்சி பெற்று வரும் நாடுகள் என அழைக்கப்படுபவற்றின் ஆளும் வர்க்கங்களும் தங்கள் செல்வாக்கை உலக அரங்கில் பெருக்கிக் கொள்ள முயல்கின்றன.

எனவே, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போர்கள் இத்தகைய போர்களில் முதலாவதாகவும் இருக்காது கடைசியாகவும் இருக்காது. ஈராக் மீதான முதலாவது படையெடுப்பு மற்றும் சோமாலிய, சேர்பியாவிற்கு எதிரான போர்கள் என்று பிற போர்களும் இதற்கு முன்னர் ஏற்பட்டன. உலகம், அதன் வளங்களை மறு பங்கீடு செய்துகொள்ளுதல், ஆகியவற்றிற்கான புதிய போர்கள் இனித் தொடரும். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு ஒரு திறமையான மூலோபாயம் இல்லாத நிலையில், புதிய பூசல்கள் ஒரு புதிய உலகப் போராக வெடிக்கும் என்ற ஆபத்து உள்ளது; இப்படித்தான் ஏற்கனவே 1914 மற்றும் 1939ல் நிகழ்ந்தன.

ஜேர்மனியின் ஏற்றுமதி சார்புடைய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் விற்பனைச் சந்தைகள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சக்தி ஆகியவற்றை நம்பியுள்ளது. மத்திய கிழக்கின் கட்டுப்பாடு என வரும்போது ஜேர்மனிய ஆளும் வர்க்கம் ஒதுங்கி நிற்க முடியாது என்பதுதான் இதன் பொருளாகும். இதுதான் ஆப்கானிஸ்தான், லெபனான் மற்றும் ஆபிரிக்க கொம்பு ஆகிய பகுதிகளில் ஜேர்மனிய படைகள் இருப்பதற்கு உண்மையான காரணம் ஆகும். ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய நலன்களும் ஒன்றும் புதியவை அல்ல. அப்பகுதியில் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் ஜேர்மனிய ஏகாதிபத்தியம் ஏற்கனவே கணிசமான செல்வாக்கை பெற்றிருந்தது.

முதலாளித்துவ சொத்து உடமை வடிவங்களை ஏற்று, பாதுகாக்கும் எந்தக் கட்சியும் இந்த அபிவிருத்தியை எதிர்க்க முடியாது. இதுதான் பசுமைக் கட்சிகளின் போக்கின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இடது கட்சியும் ஐயத்திற்கு இடமின்றி அத்தகைய போக்கைத்தான் கொள்ளும். ஓஸ்கார் லாபொன்டைன் மற்றும் கிரிகோர் கிசி என்னும் இடது கட்சித் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனிய படைகள் திரும்பப் பெறவேண்டும் என்று கூறியிருப்பது எதிர்கால பேச்சு வார்த்தைகளில் அவர்கள் கொண்டுவர இருக்கும் கருத்துக்களுக்கு பேரம் பேசக்கூடிய பயன்பாடுதான்; SPD உடன் கூட்டரசாங்கத்தை அமைக்கமுடியும் என்ற வாய்ப்பு ஏற்பட்டவுடன் இந்தப் போக்கு உதறித் தள்ளப்பட்டுவிடும்.

இடது கட்சியில் ஏற்கனவே நீல மற்றும் பச்சை ஹெல்மெட்டுக்களின் ஒப்புமையிலான சிறப்புக்கள் பற்றி விவாதம் தொடங்கிவிட்டது -- "நல்ல" ஜேர்மனிய இராணுவ நடவடிக்கைகள் ஐ.நா.வின் நீல ஹெல்மெட்டின் கீழ் ஆதரிக்கப்பட வேண்டுமா அல்லது அமெரிக்காவின் தலைமையில் கட்டளைகள் இடப்படும் "மோசமான" நடவடிக்கைகள் வேண்டுமா என்பதுதான் அது. முதல் பாதை முதலில் பசுமை வாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் இருந்து ஜேர்மனிய இராணுவவாதத்திற்கு கட்சி தன்னுடைய நேரடி ஆதரவைக் கொடுப்பது ஒரு குறுகிய கட்டம்தான்.

இராணுவ வாதத்தை எதிர்க்கின்ற மற்றும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உலகப் போரை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான்; இதுதான் உலகின் மக்கட் தொகையில் பரந்த பெரும்பான்மையில் உள்ளது. இதன் சமூக நலன்கள் சமரசத்திற்கு இடமின்றி ஏகாதிபத்தியம் பிரதிபலிக்கும் சமூக நலன்களுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டுள்ளது; இது ஒன்றுதான் உண்மையான சர்வதேச வர்க்கம் ஆகும். இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் பிரிக்க முடியாமல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கொண்டுவந்து முதலாளித்துவத்தை வெல்ல முயல வேண்டும் என்பதோடு ஒரு சமத்துவ, ஜனநாயக உலக சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய இயக்கத்திற்கு தேவையான சூழ்நிலை இப்பொழுது நிலவுகிறது. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வியத்தகு வடிவமைப்புக்களில் உள்ளது; சமூக சமத்துவமின்மைக்கு எதிர்ப்பு பெருகிக் கொண்டு வருகிறது; சீர்திருத்தவாத கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மதிப்பிழந்து போயுள்ளன; அவை தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ முறையுடன் சமரசம் செய்து வைக்க இயலாத நிலையில் உள்ளன. ஆனால் ஒரு மாற்றீட்டு இயக்கம் தன்னியல்பாக எழுச்சி பெற்றுத் தோன்றிவிடாது. இதற்கு ஒரு சர்வதேச சோசலிச கட்சியை கட்டியமைத்தல், மற்றும் இடது கட்சி உட்பட, அனைத்து ஸ்தாபனமய கட்சிகளின் பால் திருப்ப முற்படும் அனைத்துப் போக்குகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக உடைத்துகொள்ளச் செய்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved