World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq: US military extends its offensive into the northern city of Mosul

ஈராக்: அமெரிக்க இராணுவம் வடகத்திய நகரான மொசூலிலும் அதன் தாக்குதலை விரிவுபடுத்துகிறது

By James Cogan
30 January 2008

Back to screen version

ஜனவரி 1 முதல், அமெரிக்க மற்றும் ஈராக் அரசாங்க துருப்புகள் வடக்கு ஈராக்கில் உள்ள சுன்னி அரபு ஆதரவான எதிர்ப்பு குழுக்களுக்கு எதிராக பான்தோம் ஃபோனிக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஒரு பாரிய தாக்குதலை நடத்தி கொண்டிருக்கின்றன. தியாலாஹ் மாகாணத்திலும் மற்றும் பாக்தாத்தின் தெற்கில் உள்ள அரபு ஜாபர் மாவட்டத்திலும் ஏற்கனவே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டன. அவை யுத்தத்தின் முக்கிய வான்வெளி தாக்குதலுக்குரிய இடங்களாக குறிக்கப்பட்டுள்ளன என்பதுடன், தங்களை ஈராக்கின் அல்கொய்தா என்று அழைத்துக் கொள்ளும் சுன்னி அடிப்படைவாதிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது அனுதாபிகள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரும் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஒன்றுபட்ட குழுக்களின் அன்னிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சுன்னி ஆதரவான எதிர்ப்புகளை பயங்கரவாதம் என அமெரிக்க நிர்வாகம் முத்திரைக்குத்தி, தடை செய்திருக்கின்றன. சமீபத்திய தாக்குதலில் ஏற்கனவே 121 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 1,023 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உயர் கடற்படை தளபதி கிரிகோரி ஸ்மித் ஜனவரி 20ல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

டிக்ரீஸ் நதிக்கரையில் இருக்கும் ஒரு பழைமையான நகரமும், பாக்தாத்திற்கு அடுத்தபடியாக ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமுமான மொசூலுக்கு இந்த படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகள் தற்போது விரிவாக்கப்பட்டு இருக்கின்றன. நயன்வாஹ் மாகாணத்தின் தலைநகரான மொசூல், மேற்கில் சிரியாவையும், வடக்கில் மற்றும் கிழக்கில் சுயாட்சி குர்திஷ் பிராந்தியத்தையும், தெற்கில் சுன்னி அராபியர்களின் அதிகமாக உள்ள மாகாணங்களான அன்பர் மற்றும் சலாஹ் அட் டின் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. அது யுத்தத்திற்கு முன்னதாக 1.7 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருந்ததாகக் கணக்கிடப்பட்டிருந்தது. அதில் சுன்னி அரபியர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், பெருமளவில் குர்திஷ், துர்கோமென் மற்றும் அஸ்ரியன் கிறிஸ்துவ சமூகத்திரும் அங்கு வாழ்ந்தார்கள்.

2003ம் ஆண்டு தாக்குதில் இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு நயன்வாஹில் தொடர்ச்சியான எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. பாக்தாத் மற்றும் அன்பர் மாகாணத்தில் உள்ள பல சுன்னி அரபிய எதிர்ப்பு குழுக்கள் மற்றும் இனக்குழுக்கள் 2007ல் அமெரிக்க இராணுவத்துடன் ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டு, அமெரிக்கா மற்றும் ஈராக்கிய அரசாங்க படைகள் மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொண்டன. ஆனால் அது போன்று மொசூலில் நடக்கவில்லை. இந்த நகரத்தின் சுன்னி அராபியர்கள் அதிகமாக வாழும் பகுதிகள் கெரில்லாக்களின் வலுவானபிடியில் இருக்கின்றன.

புஷ் நிர்வாகத்தின் படை அதிகரிப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகரிக்கப்பட்டதாலும் அல்லது சில இடங்களில் சுன்னி ''குடிமக்கள் குழுக்கள்'', உருவாக்கப்பட்டு அவை ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கத் தொடங்கியதாலும் மொசூலின் பல போராளிகள் அப்பகுதிகளில் இருந்து விட்டோடியதாக அமெரிக்க இராணுவம் கருதியது.

சுமார் 5,000 அமெரிக்க துருப்புகளும் மற்றும் சுமார் 18,000 ஈராக்கிய அரசாங்க துருப்புகளும் மொசூலின் பாதுகாப்புக்கு நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்தாத்தில் அமெரிக்காவுடன் இணைந்து சண்டையிட்டு வரும் ஈராக்கின் மூன்றாம் பிரிவின் அதிகமாக உள்ள குர்திஷ் துருப்புகளில் சுமார் 2,000த்திற்கும் மேலானவர்கள் அந்த பகுதிகளில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஈராக்கிய பிரதம மந்திரி நெளரி அல்-மலிக்கி அறிவித்ததாவது: "எங்களின் துருப்புக்கள் இன்று மொசூலுக்கு நகர்கின்றன. நயன்வாஹ் இறுதியாக இருக்கும் என நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். இதுவொரு இறுதி யுத்தமாக இருக்கும்."

சிக்கலான நகர்ப்புற எதிர்ப்பு எழுச்சி போராட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த பகுதியின் மூன்றாவது யுத்த தாங்கி படையின் ஓர் அமெரிக்க தளபதியான லெப்டிணன்ட் கேர்னல் மிகையில் ஸிம்மறிங் இந்த வாரம் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: "மொசூலின் கிளர்ச்சி பற்றி கூற வேண்டுமானால், அங்கு பல்வேறு வேறுபட்ட காரணிகள் நிலவுகின்றன. இது கூட்டுப்படையின் நீண்ட கால நடவடிக்கையாக இருக்கும் என்பதுடன், பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த ஈராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு மிகவும் முக்கியமானதாகவும் அமையும். நீங்கள் ஒரு பெரிய உச்சகட்ட நிகழ்வை எதிர்பார்தீர்களானால், அதை நீங்கள் ஒருபோதும் காணமுடியாது. நான் இதை "மொசூலுக்கான பிரசாரம்" என்று குறிப்பிடுவேன்." என்று தெரிவித்தார்.

ஒரு வாரங்களுக்கு முன்னதாக இந்த நகரத்தின் தெற்கு நகரங்களில் அமெரிக்காவின் ஆரம்ப கால நடவடிக்கைகள் தொடங்கின. ஜனவரி 23ம் தேதி, மக்கள் வாழும் பகுதியின் ஓர் உபயோகமில்லாத கட்டிடத்தில், ஒரு கிளர்ச்சி படையால் மறைவாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், அரசாங்க துருப்புக்கள் நெருங்கியபோது வெடித்து சிதறின. சுமார் 10 மீட்டர் ஆழத்திற்கு படுகுழியை ஏற்படுத்திய, சுற்றியிருந்த வீடுகளைச் சூறையாடிய, அந்த மிகப் பெரிய குண்டுவெடிப்பு குறைந்தபட்சம் 60 பேரை பலி கொண்டதுடன், 280க்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியது. ஈராக்கிய ஆணையங்கள் உடனடியாக பயங்கரவாதிகளின் அட்டூழியம் என அதை முத்திரை குத்தியபோதும், ஆனால் அந்த செயலுக்கான மூலம் தெளிவாக தெரியவில்லை. உள்ளூர்வாசிகள் அரசாங்க பாதுகாப்பு படைகளை குற்றஞ்சாட்டுவதாக தெரிகிறது. நயன்வாஹ் மாகாண போலீஸ் தலைமை அதிகாரி சலாஹ் முகமத் அல்-ஜுபெளரி அடுத்த நாள் அவ்விடத்தை பார்வையிடச் சென்றபோது அவர் மீது ஒரு ஆத்திரமடைந்த கூட்டத்தால் கல் வீசப்பட்டது என்பதுடன், அவர் தமது வாகனத்தில் ஏறி தப்பிசெல்ல முயன்றபோது ஒரு தற்கொலை வெடிகுண்டாளரால் கொல்லப்பட்டார்.

திங்களன்று, ஐந்து அமெரிக்க துருப்புக்கள் ஒரு சாலையோர வெடிகுண்டால் கொல்லப்பட்டனர் மற்றும் அந்த பிரிவில் மீதமிருந்தோர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தென்கிழக்கு மொசூலில் இருக்கும் மசூதியைப் பாதுகாக்க முனைகையில் ஒரு பாரிய துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு இருந்தனர். அமெரிக்க விமான தாக்குதல்களாலும் மற்றும் மசூதி மீது அரசாங்க படைவீரர்களின் தரை தாக்குதல்களாலும் தாக்கப்படுவதற்கு முன்னதாகவே கெரில்லாக்கள் பின்வாங்கிச் சென்றனர். இந்த இழப்புக்கள் அமெரிக்க படையினரின் இறப்பு எண்ணிக்கையை ஜனவரியில் 36க்கு தள்ளியது மற்றும் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அமெரிக்க இறப்பின் மொத்த எண்ணிக்கை 3,940 ஆகும். இந்த மாதத்தில் டஜன் கணக்கில் அரசாங்க ஊழியர்களும் மற்றும் போலீஸூம் கொல்லப்பட்டுள்ளனர். திங்களன்று, பதுங்கி இருந்து தாக்கப்பட்டதில் ஒரு போலீஸ் ரோந்துப்படையில் இருவர் உயிரிழந்தனர்.

மறைமுகமான பொறிகளை அமைத்துக் கொண்டும், மறைவான துப்பாக்கி சூட்டு நிலைகளை ஏற்படுத்திக் கொண்டும் கிளர்ச்சியாளர்கள் தங்களை பல ஆண்டுகளாக வலுவாக்கிக் கொண்ட பகுதிகளில் அமெரிக்க மற்றும் அரசாங்க துருப்புகள், வரும் நாட்கள் மற்றும் வாரங்களில், நகர வேண்டி இருக்கிறது. குறிப்பாக ஈராக்கிய கெரில்லாக்கள் எதிர்ப்பை சந்திக்க கட்டாயப்படுத்தப்படும்போது அமெரிக்க காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். எவ்வாறிருப்பனும், தியாலா மாகாணத்தில், பரந்தளவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மற்றும் ஆயுதமேந்திய அமெரிக்க துருப்புகளுடனான நேரடி மோதல்களைத் தவிர்ப்பது முக்கிய கிளர்ச்சி உத்தியாக உள்ளது. அதில்லாமல், உள்ளூர் மக்களுடன் கலந்து, மற்றொரு நாளில் சண்டையிட மக்களின் ஆதரவில் வாழ்வதற்காக தேடி செல்வதாகவும் இது உள்ளது.

இதன் விளைவு மிகவும் செயல்குலைவும், நரம்புக்கு எரிச்சலூட்டும் மற்றும் என்றும் முற்றுப்பெறாத யுத்தமாகவும் அமெரிக்க துருப்புக்களுக்கு அமைகிறது. அமெரிக்க ஜெனரல் மார்க் ஹெர்ட்லிங்கின் கருத்துப்படி, இந்த மாதம் தியாலா மாகாணத்தில் மட்டும், அவரின் துருப்புக்கள் 386 சாலையோர வெடிகுண்டுகளையும், 28 கார் வெடிகுண்டுகளையும் மற்றும் 38 "வீட்டு" வெடிகுண்டுகளையும் எடுத்திருக்கிறது. இங்கு ஒரு கட்டிடத்தில் நுழைந்தபோது மறைமுக பொறியில் அகப்பட்டு உயிரிழந்த ஆறு பேர் உட்பட பதினைந்து துருப்புக்கள் கொல்லப்பட்டனர்.

நீர்பாசன கால்வாய்கள் மற்றும் பழத்தோட்டங்களுடன் கூடிய சிறு கிராமங்களைக் கொண்ட ஒரு பகுதியான, பாக்தாத்தின் தெற்கில் உள்ள அரபு ஜாபர் பிராந்தியத்தில் சாலையோர குண்டுகளை மற்றும் கண்ணிவெடிகளை அகற்றவும் மற்றும் முயற்சிக்கவும் அமெரிக்க விமானப்படை தொடர்ச்சியாக குண்டுவீச்சுக்களை நடத்தி இருக்கிறது. ஜனவரி 10 முதல் 16 வரையில் 99,000 இறாத்தல் நிறை வெடிகுண்டுகள் கொண்ட 99 இலக்குகள் தாக்கப்பட்டதற்கு அடுத்ததாக, ஜனவரி 20ல் 20,000 இறாத்தல் கொண்ட உயர்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கொண்ட முப்பது இலக்குகள் தாக்கப்பட்டன.

சந்தேகிக்கப்படும் எதிர்ப்பு போராளிகள் மீது தாறுமாறான தாக்குதலை இணைத்த பெரியளவிலான விமானத் தாக்குதல்களின் மீது அமெரிக்க உத்திகள் அதிகளவில் நம்பிக்கைக் கொண்டுள்ளன. உயர் தளபதி ஸ்மித்தால் இம்மாதம் அளிக்கப்பட்ட பெண்டகன் செய்தி அறிப்பின் புள்ளிவிபரப்படி, 2007ல் "ஈராக்கில் உள்ள அல்கொய்தா பயங்கரவாதிகள்" என்ற சந்தேகத்திற்குரிய 8,800 பேரை அமெரிக்க இராணுவம் கைது செய்தது மற்றும் 2,400 பேரை கொன்றுள்ளது. சுன்னி தேசியவாத போராளிகள் அல்லது ஆக்கிரமிப்புக்கு எதிரான ஷியைட் போராளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஆயிரம் பேர் மேற்கூறிய எண்ணிக்கையில் அடங்க மாட்டார்கள். ஈராக்கில் அமெரிக்காவால் நடத்தப்படும் முகாம்களில் சுமார் 35,000 கைதிகள் தங்க தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன், இதே எண்ணிக்கையிலானவர்கள் ஈராக்கிய அரசாங்க சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved