World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Behind the rhetoric at Wiesbaden election meeting

German Left Party seeking a deal with the SPD in Hesse

வீஸ்பாடன் தேர்தல் கூட்டத்தின் வார்த்தைஜாலங்களுக்கு பின்னால்

ஹெஸ்ஸவில் சமூக ஜனநாயகக் கட்சியுடன் உடன்பாட்டை எதிர்நோக்கும் ஜேர்மன் இடது கட்சி

By our correspondents
16 January 2008

Back to screen version

ஜனவரி 27 ஹெஸ்ஸ மாநிலத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பிராந்தியத்தின் தனது இரண்டு சொந்த வேட்பாளர்களுடன் பங்கேற்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள் ஹெல்முட் ஏர்ன்ஸ், 59, ஒரு இரசாயனத் துறை பணியாளர் மற்றும் ஹெஸ்ஸ சோசலிச சமத்துவக் கட்சியின் பிராந்தியத் தலைவர், மற்றும் அகிம் ஹெப்டிங், 53, ஒரு சமூகக் காப்பீட்டு பணியாளர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான முன்னாள் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஆகியோராவர்.

ஜனவரி 13 ஞாயிறன்று, ஹெஸ்ஸவில் வர இருக்கும் தேர்தலில் இடதுகட்சியின் முன்னணி வேட்பாளரான வில்லி வான் வோயன் தெளிவாகத் தெரிவித்தார், கட்சியின் முக்கிய இலக்கு மாநிலத்தில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக்கட்சிக்கு இடையிலான கூட்டணியில் பங்கேற்பது, அல்லது குறைந்தபட்சம் "சகிப்புத்தன்மை" கொண்டிருப்பது ஆகும் என்று. இதனை அவர் ஹெஸ்ஸ மாநில தலைநகரமான வீஸ்பாடனில் நடந்த இடது கட்சிக் கூட்டத்தில் தெரியப்படுத்தினார். கூட்டத்தில் இருந்த மற்றொரு முக்கியத் தலைவரான இடது கட்சித் தலைவரும், கட்சியின் தேசிய நாடாளுமன்ற பிரிவின் தலைவருமான கிரிகோர் கீஸி, ஒரு வார்த்தை ஜாலமிக்க உரையை ஆற்றினார்.

மாநிலத்தின் நடப்பு பிரதம மந்திரி ரோலண்ட் கொக் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்) மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படுவதை இடதுசாரிக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும் என்று வான் வோயன் கூறினார். கொக் இற்கு எதிராக பெரும்பான்மை ஸ்தாபிப்பதற்கான ஒரே வாய்ப்பு இடது கட்சி மாநில நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை உறுதிப்படுத்துவது தான். முன்னணி வேட்பாளர் விளக்கினார்: "பின்னர் சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக்கட்சியும் இந்தக் கூட்டணியை தொடர்ந்து சாத்தியமானதாகுவதற்கு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை ஏற்படும்". ஒரு வாரம் முன்பு தான், சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்கட்சி கூட்டணியை நோக்கிய இடதுகட்சியின் நிலைப்பாடு கட்சியின் உறுப்பினர்களால் தான் தீர்மானிக்கப்பட முடியும் என்று வான் வோயன் அறிவித்திருந்தார்.

வான் வோயனுக்குப் பின்னர் பேசும்போது கிரிகோர் கீஸி கூறினார், முதலாவதாக இடது கட்சி ஒரு இடது சாரி வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது, இரண்டாவதாக சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக்கட்சியும் இடதின் பக்கம் நெருக்கப்படலாம். "நமது செயல்திறன் சிறப்பு மற்றவர்களை மாற்றுவதன் மூலம் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது", என்று அவர் கூறினார். "நீங்கள் மற்றவர்களின் நரம்புக்குள் செல்லும் திறனைக் கற்க வேண்டும்". வழக்கமான வார்த்தைஜால தொனியில் ஏராளமான நெருக்கும் சமூக அவலங்களை பற்றி அவர் குறிப்பிட்டார். தனியார்மயமாக்கல் குறைகின்ற சம்பளங்கள் மற்றும் அதிகரிக்கின்ற விலைகளுக்கு இட்டுச் சென்றிருப்பதையும், கல்வி அமைப்பு முறைக்கான செலவுக்குறைப்பு சமூகப் பிளவில் கொண்டு முடிந்திருப்பதையும் மற்றும் பணக்காரர்களுக்கான வரிச் சலுகைகள் மில்லியன்கணக்கானோருக்கு வறுமைப் பரவலாக ஆகியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக்கட்சியும் நம்பகத்தன்மை இன்றி இருப்பதாக கீஸி குற்றம் சாட்டினார். சமூகநலவிரோத திட்டநிரல் 2010 மற்றும் தண்டனையான ஹார்ட்ஸ் IV சட்டங்களுக்கு இரண்டு கட்சியினருமே காரணம் என்று அவர் தெரிவித்தார். சமூக நீதி எனும் கருத்தை இப்போது கையிலெடுக்கும் இரண்டு கட்சிகளும், இவற்றின் கூட்டணி ஆட்சி இருந்ததான 1999 முதல் 2005 வரையிலான காலத்தில் தான் பணக்காரர்களுக்கும் பெரும்பணக்காரர்களுக்கும் பெருத்த வரி விலக்குகளை அறிமுகப்படுத்தின. இடதுகட்சியின் பங்கானது, இந்த கட்சிகளுக்கு அவற்றின் உண்மையான தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை நினைவூட்டுவதாக இருந்தது என அவர் வாதிட்டார்.

கீஸியின் உரையானது வார்த்தைஜாலமாக இருந்ததன் குறிப்பான காரணம் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக்கட்சியினரின் வலதுபக்கம் நோக்கி இட்டுச் சென்றதான அடிப்படையான சமூக மாற்றங்கள் மீதான கேள்வியை தீவிரமாகக் குறிப்பிட அவர் மறுத்தது தான். இவை எல்லாமே, கீஸியின் கருத்துப் படி, "நடப்பு காலத்தின் நவீன-தாராளவாத உணர்வுக்கு" அவர்கள் சரணடைந்ததே, இடது கட்சி ஒரு மாறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றும் என்றார்.

எதிர்பார்த்த வகையில், தனது சொந்த பிராந்திய அமைப்பு செய்த வேலை குறித்து கீஸி எதுவும் குறிப்பிடவில்லை, பேர்லினில் சமூக ஜனநாயகக் கட்சியுனான கூட்டணியில் நிர்வாகத்தின் ஒரு அங்கமாக சுமார் ஏழு வருடங்களாக இருந்து கொண்டு, தலைநகர் வாழ் மக்களின் சமூக உரிமைகள் மற்றும் வேலைகள் மீதான முன்கண்டிராத தாக்குதல்களை மேற்கொண்டது.

பேர்லினில் அமுல்படுத்தப்பட்ட கொள்கைகளின் மிகவும் சாதாரணமான ஒரு ஆய்வு கூட வீஸ்பாடனில் கீஸியின் உரையின் அடித்தளத்தை அசைக்கக் கூடியதாக உள்ளது. சமீப வருடங்களில் திடீர்வெள்ளம் போன்ற தனியார்மயமாக்கலுக்கு பேர்லின் விவாதப் பொருளாகி இருக்கிறது, நகரின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆரம்பப்பள்ளிகளுக்கு பெருமளவிலான வெட்டுக்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. போலிஸ் அதிகாரங்கள் தீவிரமாக்கப்பட்டுள்ளன, பத்தாயிரக்கணக்கான அரசு வேலைத்தலங்கள் குறைக்கப்பட்டு மற்றும் மாநகர சபையில் 35,000 மோசமான ஒரு-மணி-நேரத்திற்கு-ஒரு-யூரோ சம்பள வேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வலதுசாரி ரோலண்ட் கொக்கினை கூட பின்னணிக்கு தள்ளிவிட்டிருக்கும் ஒரு கணக்கெடுப்பாகும்.

அவரது பேச்சின் முடிவில், சோசலிச சமத்துவக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மாரியுஸ் ஹுஸர் ஒலிபெருக்கியை கையில் எடுத்து கீஸிக்கு சவால் விடுத்தார்: "நான் பேர்லினில் இருந்து வருகிறேன்", என்று ஆரம்பித்த அவர், "இடது கட்சியின் நம்பகத்தன்மை குறித்து சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். எனக்கு எப்படித் தோன்றுகிறது என்றால், அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின் இடது கட்சியின் பங்கு சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரை இடதின் பக்கமாய் நெருக்குவதாய் அல்ல, மாறாக இடது கட்சியே வலதின் பக்கமாய் நகர்வது போல் தான் உள்ளது.

"பேர்லினில், இடது கட்சி ஒரு சமூகச் சீரழிவிற்குக் காரணமாய் இருக்கிறது. கிரிகோர் கீஸி வார்த்தைகளில் குற்றம்சாட்டிய கொள்கைகளைத் தான் அப்படியே அது மேற்கொண்டு வந்திருக்கிறது. சுமார் 65,000 வீடுகள் அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் ஊக வணிக நிறுவனமான செர்பரஸுக்கு விற்கப்பட்டிருக்கிறது மற்றும் நகரின் குடிநீர் விநீயோகம் பகுதியாக தனியார்மயமாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பேர்லின் வாசிகள் நீரின் விலைகளில் 25 சதவீத உயர்வினைத் தான் கண்டுள்ளனர். நீங்கள் கூறுவதற்கும் அதிகாரத்தில் இருக்கும் உங்களது கட்சி செய்வதற்கும் இடையிலுள்ள இந்த மிகப் பெரும் பிளவினை நீங்கள் எவ்வாறு விளங்கச் செய்யப் போகிறீர்கள்?"

ஹெஸ்ஸவில் இடது கட்சியின் தேர்தல் வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இடதுசாரி வாக்கியங்களுக்கும் பேர்லினில் கட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள சமூக-விரோத நடவடிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் இரகசியமில்லை, மேலும் இந்த பிரச்சினைகளை கொண்டு எதிர்கொண்டபோது கீஸி எதிர்பார்க்கத்தக்க பதற்றத்துடனேயே பதிலளித்தர்.

வீஸ்பாடன் கூட்டத்தில் ஹுசர் பேசியபோது அரங்கத்தில் பதற்றம் எழுந்தது, இடது கட்சியின் உறுப்பினர்கள் ஏராளமான சந்தர்ப்பங்களில், அவரது கருத்துக்கூறல்களை முடித்துக் கொள்ள கேட்டுக் கொள்வதற்காகக் குறுக்கிட்டனர், தேர்தல் கூட்டத்தில் பேர்லின் சூழ்நிலை குறித்த கேள்விகளைக் கொண்டு எதிர்கொள்ளப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஒரு இடது கட்சி தொண்டர் எழுந்தார், கிரிகோர் கீஸிக்குப் பின்னர் பேச முடிவது ஒரு கவுரவம் என்று கருதுவதாகக் கூறினார், ஹுஸைரால் மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்களின் மீது அவர் கோபமுற்றதாகக் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் விமர்சனத்திற்கு ஒரு வாரம் முன்னதாக இடது கட்சியின் தலைவர் லோதார் பிஸ்கி பதிலளித்திருந்த அதே விதத்தில் கீஸி பதிலளித்தார், அதாவது பேர்லினில் செனட்டின் கொள்கைகளை ஆதரித்துப் பேசுனார். அவ்வாறு செய்யும்போது தான் ஆரம்ப உரையில் கூறியதையே திறம்பட ஆட்டம் காணச் செய்தார். பேர்லினில் இருந்த கடினமான நிதி சூழலை கருத்தில் கொண்டு செனட் அதற்குகந்த சாத்தியமான கொள்கைகளை மட்டுமே மேற்கொண்டதாக கீஸி வாதிட்டார். தேசிய மட்டத்தில் உதவியைப் பெறும் வாய்ப்புகளை மேம்படுத்த வெட்டுக்களை மேற்கொள்வது அவசியமாயிற்று என்றார். இத்தகையதொரு உதவி பெறும் நிதி உடன்பாடு அடுத்து வந்த நீதிமன்ற தீர்ப்பினால் நிராகரிக்கப்பட்டதை தவிர இடது கட்சியின் தவறால் விளைந்ததல்ல என்றார் கீஸி.

சோசலிச சமத்துவக் கட்சியின் மற்றொரு உறுப்பினர், மாரியான ஏர்ன்ஸ், கீஸிக்கு மேலும் ஒரு கேள்வியை விடுத்தார்: "தற்போது ஜேர்மனியின் இரயில் சாரதிகள் சரியாக நீங்கள் விமர்சனம் செய்த ஒரு வளர்ச்சிக்கு எதிராகத் தான் போரிட்டு வருகிறார்கள், அதாவது ஒட்டுமொத்த மக்கள் தொகையின் நலன்களை பலியிட்டு பணக்காரர்கள் தான் கூடுதல் பணக்காரர்களாகிறார்கள். இருந்தாலும், சமீபத்தில் ஒரு சில வாரங்களுக்கு முன்னதாக இரயில் சாரதிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான ஒரு சுயாதீனமான சம்பள ஒப்பந்தத்திற்கு உங்களது எதிர்ப்பினை நீங்கள் அறிவித்தீர்கள், பிரச்சினையில் போராட்டத்திற்கு ஒத்துழைக்காத ஒரு அமைப்பாக செயல்பட்டிருக்கின்ற இரயில் தொழிற்சங்கமான Transnet உடன் செயல்ரீதியாய் அணி சேர்ந்து கொண்டு, நீங்கள் ட்ரான்ஸ்னெட்டின் பக்கம் ஏன் சேர வேண்டும்?"

இதற்குப் பதில் கூறும்போது, போராடும் இரயில் சாரதிகள் மீது முன்னர் செய்த அதே தாக்குதல்களையே திரும்பவும் கூறினார் கீஸி. Transnet சொல்லும் செய்யும் ஒவ்வொன்றுடனும் தான் உடன்படவில்லை என்றாலும், ஆனால் இரயில் சாரதிகளின் "சுயாதீனமான ஒப்பந்த" கோரிக்கைக்கு எதிரான அவர்களின் விமர்சனத்திற்கு தான் முழுமையான ஆதரவளிப்பதாக கூறினார். அனைத்து சூழ்நிலைகளின் கீழும் ஒரு ஒரேமாதிரியான ஒப்பந்த அமைப்புமுறையை பராமரிப்பது அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கருத்துகள் மூலம், இரயில் சாரதிகளுக்கு அவர்களது சொந்த ஒப்பந்தத்தை தருவதை கடுமையாக எதிர்க்கும் ஜேர்மன் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடது கட்சிக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவை கீஸி மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இத்தகையதொரு வளர்ச்சி ஜேர்மன் முதலாளிகளுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கும் இடையில் தற்போது நிலவும் கூட்டுழைப்புவாத ஒத்துழைப்பை ஆட்டம் காணச் செய்யக் கூடும் என்று ஜேர்மன் தொழிற்சங்க இயக்கமான DGB அஞ்சுகிறது. ஹெஸ்ஸவில் இருக்கும் இடது கட்சியானது இத்தகைய அதிகாரத்துவ அடுக்குகளாலும் மற்றும் அதன் தலைமையேற்கும் உறுப்பினர்களாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது மற்றும் வேட்பாளர்கள் உள்ளூர் தொழிற்சங்க மையங்களுடன் நெருக்கமான உறவுகளை அனுபவிக்கின்றனர்.

இத்தகைய அடுக்குகள் தொழிலாள வர்க்கத்தின் எந்த தீவிரமாக்கலுக்கும் கடுமையாக எதிரானவையாக இருக்கின்றன மற்றும் இந்த தொழிலாள வர்க்கம் சமூக ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இடது கட்சியை ஆதரிக்கின்றன. போராட்டம் நடத்தும் இரயில் சாரதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் Transnet இன் தலைவர், நோர்பெர்ட் ஹான்ஸென், சென்ற இலையுதிர் காலத்தில் இடது கட்சியின் நிறுவனப் பேரவை மாநாட்டில் பங்குபெற்ற DGB குழுவின் ஒரு அங்கமாக இருந்தது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved