World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Conservative MP forces by-election to challenge Labour's anti-terror legislation

தொழிற்கட்சியின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சவால் விடும் வகையில் கன்சர்வேட்டிவ் எம்.பி. இடைத் தேர்தலுக்கு தூண்டுகிறார்

By Julie Hyland
17 June 2008

Back to screen version

வியாழனன்று கன்சர்வேட்டிவ் கட்சியின் நிழல் உள்நாட்டு மந்திரி டேவிட் டேவிஸ், எதிர்பாராமல் இராஜிநாமா செய்துள்ளது பிரிட்டிஷ் அரசியல் அமைப்பு முறையை ஒரு கொந்தளிப்பிற்குள் தள்ளியிருக்கிறது.

பாராளுமன்றத்திற்கு முன் திடீரென கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் தன்னுடைய செயல் தன்னுடைய தொகுதியில் மறு தேர்தலை நடத்தும் கட்டாயத்தை நோக்கமாகக் கொண்டது என்றார்; இது 42 நாட்களுக்கு குடிமக்களை எந்தக் குற்றச் சாட்டும் இல்லாமல் காவலில் வைக்கலாம் எனக்கூறும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை ஆகும் என்றும் கூறினார். இதற்கு முந்தைய மாலையில் அரசாங்கம் 9 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த சட்ட விரிவை இயற்ற முடிந்தது; அந்த 9 வாக்குகளை போட்டவர்கள் Democratic Unionist Party ஐ சேர்ந்தவர்கள் ஆவர்; இந்த ஆதரவிற்கு கைமாறாக வட அயர்லாந்திற்கு நிதி வகையில் உதவிகள் கொடுக்கப்பட இருப்பதாக அவர்கள் கூறினர்.

செய்தி ஊடகத்திற்கு கொடுத்த அறிக்கையில், "உண்மையில் நிரபராதியான குடிமக்களை ஆறு வாரங்களுக்கு எந்தக் குற்றச் சாட்டும் இல்லாமல் காவலில் வைப்பதற்கு அரசாங்கம் அனுமதிப்பதன் மூலம் அரசு" மாக்ன கார்ட்டா மற்றும் ஆட்கொணர்வு மனுவில் இருக்கும் சுதந்திர உரிமையை அகற்றியுள்ளதாக டேவிஸ் பாராளுமன்றத்தை தாக்கியுள்ளார்.

பாராளுமன்ற சட்டத்தை பயன்படுத்தி பிரபுக்கள் சபையிலும் எதிர்ப்புக்களை மீறி சட்டத்தை அரசாங்கம் இயற்றிவிடும் என்று கணித்த அவர் 42 நாட்கள் குற்றச் சாட்டு இல்லாமல் காவலில் வைக்கப்படலாம் என்பதற்கு பயன்படும் வாதங்கள் "56 நாட்கள், 70 நாட்கள் பின்னர் 90 நாட்களுக்கும் பயன்படுத்தக்கூடும்" என்று எச்சரித்தார்.

தொழிற்கட்சியின் அடையாள அட்டைகள், அறிமுகத் திட்டங்கள் மற்றும் ஒரு தேசிய DNS தகவல் தளம் அமைத்தல் பற்றிய திட்டங்களை மேற்கோள் காட்டி, இந்த விரிவாக்கம் "அடிப்படை பிரிட்டிஷ் சுதந்திரத்தின்மீது நடத்தப்படும் தீய, திருட்டுத்தனமான, இடைவிடாமல் அரிப்பு" என்று தொடர்ந்து கூறினார் அவர்.

செய்தி ஊடகத்தில் பலமுறையும் கூறப்பட்டுள்ள தொழிற்கட்சியின் கூற்றான 42 நாட்கள் காவல் மற்றும் பிற கூடுதலான அரசாங்க அதிகாரங்களுக்கு மக்களின் பெரும் ஆதரவு இருப்பு என்பதற்கு சவால் விடும் வகையில் தானே இடைத் தேர்தலில் நிற்க இருப்பதாகவும் டேவிஸ் கூறினார்.

இவருடைய கருத்துக்கள் அதிர்ச்சியுற்ற வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் செய்தி ஊடகத்தால் எள்ளி நகையாடப்பட்டன. கன்சர்வேட்டிவ் தலைவர் டேவிட் காமிரோன் டேவிஸை "ஒரு தைரியசாலி" என்று விவரித்தாலும், நிகழ்வுகளின் மாற்றம் பற்றிய டோரி தலைமையில் ஏற்பட்டுள்ள அதிருப்தி இவருக்கு பதிலாக நிழல் உள்மந்திரியாக டொமினிக் க்ரீவ் செயல்படுவார் என்ற அறிவிப்பின் மூலம் தெளிவாக்கப்பட்டது. டேவிசின் இராஜிநாமா செய்யும் முடிவு ஒரு "தனிப்பட்ட" முடிவு என்று காமிரோன் கூறினார்; இவர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் முந்தைய பதவி கொடுக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறினார்.

தொழிற்கட்சி அரசியல்வாதிகளும் செய்தி ஊடகமும் இந்த அளவு நயமாக இல்லை. நாள் முழுவதும் டேவிஸ் மொத்தமாக "மூடர்", ஒரு "பைத்தியக்காரர்", "நடுவாழ்வு நெருக்கடியை சந்தித்து அவதி உறுபவர்" தன்னுடைய "டம்பத்தனம்", "வீண்தற்பெருமை ஆகியவற்றால் வருங்கால டோரி அரசாங்கத்தில் நல் எதிர்கால தலைமைத் திறன், ஊக்கமான வாழ்க்கைப் போக்கு அனைத்தையும் தியாகம் செய்து விட்டவர்" என்றெல்லாம் கூறின.

அறிவிப்பை கொடுக்கு முன், டேவிஸ் தாராண்மை ஜனநாயகவாத தலைவர் நிக் கிளெக்கிடம் இருந்து அவருடைய கட்சி துணைத் தேர்தலில் போட்டியிடாது என்ற உறுதியான உட்டன்பாட்டை பெற்றார். தாராண்மை ஜனநாயகவாதிகள் டேவிஸை பொதுத் தேர்தல்களில் 5,000 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தால் தோற்கடித்திருக்கலாம் என்ற அளவிற்கு வந்தனர்; தொழிற்கட்சியோ மட்டமான மூன்றாம் நிலையில் இருந்தது. செய்தி ஊடக வர்ணனையாளர்கள் இது டேவிஸ் தேவையில்லாத ஊக்க அரசியலில் ஈடுபடுவதை நிரூபித்துள்ளது என்று -- ஏற்கனவே முன்கூட்டியே பெரும்பான்மை வாக்குகளை சேகரித்துள்ள நிலையில் ஒரு துணைத் தேர்தலை கட்டாயப்படுத்தி கொண்டுவருவது--கூறியுள்ளனர்.

இந்த வாதம் வெகு எளிதல் தேர்தலில் போட்டியிட தொழிற்கட்சியின் விருப்பமற்ற தன்மையை நெறிப்படுத்தவும் பயன்பட்டது. முன்னாள் தொழிற்கட்சி உள்நாட்டு மந்திரியான டேவிட் பிளங்கட், டேவிஸின் இராஜிநாமாவை "சிறுபிள்ளைத்தனமானது, பொறுப்பற்ற தன்மை உடைய" விளம்பரம் நாடும் செயல் என்று தாக்கியுள்ளார்.

"தொழிற்கட்சி அல்லது தாராண்மை ஜனநாயகவாதிகள் அவருக்கு தன்முனைப்பு திருப்தியான போட்டியை கொடுக்கக்கூடாது; அதுவும் பொதுமக்கள் பணத்தில் நடக்கும் தேர்தலில்; அரசியல் கட்சிகளும் அவருக்கு திருப்தி கொடுக்கக்கூடாது; ஏற்கனவே நிழல் உள்மந்திரி என்னும் முறையில் வெகு வலுவாக அவர் வெளிப்படுத்திய அதே கருத்தை மீண்டும் வலியுறுத்த ஏராளமான பணம் செலவிடப்படக்கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.

இன்னமும் கூடுதலான ஒரு திரித்தலில், வியாழன் மாலை ரூபர்ட் மர்டோக்கின் Sun நாளேடு தொழிற்கட்சி தன் வேட்பாளரை நிறுத்தவில்லை என்றால் டேவிஸுக்கு சவால் விடப்போவதாக விருப்பம் தெரிவித்துள்ளது. முன்னாள் சன் ஆசிரியர் கெல்வின் மக்கென்சி, மர்டோக்கிடம் தன் வேட்புத் தன்மை பற்றி விவாதித்துள்ளதாக கூறினார்; தற்போதைய ஆசிரியர் ரேபக் வேட் இன் 40வது பிறந்தநாள் விழா அன்று மாலை நடந்தபோது தான் சந்தித்ததாக மக்கென்சி கூறியுள்ளார்.

தொழிற்கட்சி நிற்கவில்லை என்றால் தான் "90 சதவீதம்" உறுதியாக நிற்கப்போவதாகவும், "டேவிட் டேவிஸிடம் சன் மிகுந்த விரோதப் போக்குடையது; இதற்குக் காரணம் அவருடைய 28 நாட்கள் நிலைப்பாடு; சன் எப்பொழுதுமே 42 நாட்கள், ஏன் 420 நாட்கள் நிலைப்பாட்டைத்தான் வெளிப்படையாகக் கொண்டிருக்கிறது."

தொழிற்கட்சியுடன் மர்டோக் திட்டம் போட்டுள்ளதாக கூற்றுக்கள்

பிரிட்டனின் மிக முக்கியமான வலதுசாரி செய்தித்தாள், டேவிஸுக்கு இவ்வளவு விரோதமாக இருப்பது என்பது இன்னும் கூடுதலான வியப்பைத் தருகிறது; ஏனெனில் டோரி எம்.பி. அரசியலில் ஆன்மீக நண்பர் என்று மிகவும் போற்றத்தக்க வகையில்தான் பொதுவாகக் கருதப்படுவார். கட்சியில் தாட்சருடைய பிரிவுடன் தொடர்புடையவர் என்ற கருதப்பட்ட டேவிஸ், 2005 போட்டியில் எழுச்சி பெற்ற நட்சத்திரம் காமிரோன் இவரைத் தோற்கடிக்கும் வரையில் கட்சித் தலைவராக வருவார் என்றுதான் கருதப்பட்டார்.

இவருடைய இராஜிநாமா, கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் இருக்கும் உள் வேறுபாடுகளை பிரதிபலிப்பவை என்று இல்லமால் இன்னும் பரந்த வகையில் மரபார்ந்த வகையில் பிரிட்டிஷ் அமைப்புமுறையின் வலதுசாரிக்குள் இருக்கும் வேறுபாடுகளை காட்டுகிறது -- தொழிற்கட்சியாலும் செய்தி ஊடகத்திலுள்ள அதன் முந்தைய அதன் தாராண்மை எல்லையாலும் வலதுபுறம் நோக்கிய தள்ளாட்டம் இருப்பதை எடுத்துக் கொண்டால், இத்தகைய சிறப்புப்பெயர் இன்னும் கூடுதலான சிக்கலைக் கொடுக்கிறது.

பயங்கரவாத சட்டம் மற்றும் அரசு கண்காணிப்பு பற்றிய டேவிஸின் "தாராளவாத நிலைப்பாடு" தடையற்ற சந்தை பற்றி அவர் ஆர்வமாக ஒப்புதல் கொடுத்துள்ளதுடன் பொருந்தியுள்ளது; அதில் பொதுநலச் செலவினங்களுக்கு சிறிதும் இடமில்லை. "ஒரு சிறிய அரசின்" பிரதிநிதியாக டோரிக்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்; பல உறுப்பினர்கள் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படுவதற்கு அறைகூவல் கொடுக்க தயக்கம் காட்டிய நிலையில், 42 நாட்கள் விரிவாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கட்சி கிட்டத்தட்ட ஒருமனதாக எடுத்த முடிவு பற்றி இவருக்கு பாராட்டுத்தான் கிடைத்தது.

தன்னுடைய இராஜிநாமா, பொதுத் தேர்தல் நெருக்கிய அளவில் காமிரோன் விரிவாக்கம் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலான அதிகாரங்களை கொடுக்க அழுத்தம் பெருகிய முறையில் கொடுக்கப்பட்டுவிடுவார் என்பதாகும். தன்னுடைய செயல்கள் நீண்ட காலப் பார்வையில் காமிரோனுக்கு அரசியல் சவால் என்பதை மறுத்த அவர், இடைத்தேர்தல் --பரந்த முறையில் தான் வெற்றிபெற்றுவிட முடியும் என்றும் கூறுகிறார்-- டோரி தசைகளை வலுப்படுத்த உதவும் என்றும் கூறுகிறார்.

டேவிஸுடைய இராஜிநாமாவிற்கு சன்னின் தொடை நடுங்கித்தன விடையிறுப்பு அவர் குறிப்பிடும் "அழுத்தங்கள்" பற்றிய குறிப்பைக் காட்டுகிறது. சிவில் உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சன் ஆர்வத்துடன் ஆதரவைத்தான் கொடுத்து வந்துள்ளது. ஜனநாயக உரிமைகளுக்கு அது காட்டும் பெரும் இகழ்வு மெக்கன்சி மூலம் தெளிவாக்கப்படுகிறது --டேவிஸ் உண்மையில் பரிவு உணர்வு உடையவர் என்று ஒப்புமையில் ஒரு தாராளவாதி செய்யக்கூடிய செயல் ஆகும் இது.

சிறப்புப் பள்ளியில் படித்து தன்னைத்தானே "மக்களுடைய பிரதிநிதி" என்று கூறிக்கொள்ளும் இவர் தான் அரசின் பெருகிய அதிகாரங்களை அசட்டை செய்வதாக தம்பட்டம்டித்துக் கொள்ளுகிறார். "தங்கள் இதயத்தில் நல்ல சிந்தனை உள்ளவர்கள்" எதற்கும் பயப்படத் தேவையில்லை என்று BBC யிடம் மக்கென்சி கூறினார். ஒரு அறிவிப்பு என்னும் முறையில் அது அபத்தமானது; ஆனால் சன்னை பொறுத்தவரையில் 42 நாட்கள் விரிவாக்கம் தேசியப் பாதுகாப்பைவிட குறைந்த தன்மை உடையது; அதுவும் சிந்தனைப் போக்கு, அரசியல் கண்காணிப்பு, தணிக்கை முறை, அடக்குமுறை இவற்றையும் கருத்திற் கொள்ளும்போது.

இன்னும் அடிப்படையான முறையில் தொழிற்கட்சி இல்லாத நிலையில் சன் தேர்தலில் போட்டியிட விரும்புவது எந்த அளவிற்கு அரசாங்கமும் அதன் கொள்கைகளும், பிரிட்டனின் பெருவணித்தின் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவரான மர்டோக்கின் கோரிக்கைகள் நலன்கள் இவற்றிடம் இருந்து பிரிக்க முடியாத தன்மையில் உள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தோல்வி என்பது தவிர்க்க முடியாமல் பிரெளனின் தலைமையை முடித்துவிட்டிருக்கும் என்ற நிலையில், ஐயத்திற்கு இடமின்றி 42 நாட்கள் விரிவாக்கம் பாராளுமன்ற வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட அரசாங்கத்தின் முடிவில் மர்டோக் முக்கிய பங்கேற்றிருந்தார் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றம் விவாதிக்கப்பட்ட போது இழிந்த வகையில் உரத்துப் பேசும் மெக்கென்சியும் கோர்டன் பிரெளன் மற்றும் டோனி பிளேயர் இருவரும் பிறந்த நாள் விழாவில் இருந்தனர் என்று வெளிப்படுத்தியது, மர்டோக் மற்றும் தொழிற்கட்சி தலைமையும் கிட்டத்தட்ட ஒருமனதாக டேவிஸ்-எதிர்ப்பு மூலோபாயத்தை ஒன்றாகத் தீட்டினர் என்ற கருத்துக்கு இட்டுச்செல்லுகிறது.

அலைகள் மாறுகின்றன

அவ்வார இறுதிக்குள் டேவிஸை இழிவுபடுத்தி குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் பயனற்றுப் போயின என்பது வெளிப்படையாயிற்று. ஏளனம் தோல்வி இதற்குத்தான் பொருத்தம் என்று ஒதுக்கப்பட்ட விந்தை மனிதர் என்று நிரூபணம் ஆவதற்குப் பதிலாக அரசாங்கமும் செய்தி ஊடகமும் மக்கள் கருத்தில் இருந்து விலகி, விரோதப் போக்கு கொண்ட நிலையில் இருப்பதுதான் நன்கு புலனாயிற்று.

அரசியல் வர்ணனையாளர்கள் மின்னஞ்சல்களும், வலைத்தளங்களில் வெளிவந்துள்ள கருத்துக்களும், டேவிஸுக்கு பெரும் ஆதரவைக் கொடுத்ததை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அவர்களில் பலரும் தொழிற்கட்சி மற்றும் தாராண்மை ஜனநாயகக் கட்சிகளின் (லிபரல் டெமக்ராட் கட்சிகளின்) ஆதரவாளர்கள்; சிவில் உரிமைகள் பாதுகாப்பை ஒரு டோரி நடத்துமாறு செய்துவிட்டதற்கும் தங்கள் கட்சியின் பிரதிநிதிகள் அத்தகைய நிலைப்பாட்டை கொள்ளாததற்கு தங்களின் வெறுப்பைக் காட்டினர்.

திங்கள் காலைக்குள், கன்சர்வேட்டிவ் ஆதரவு கூடுதலாய் பெருகும் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகையில், தொழிற்கட்சி இன்னும் தான் துணைத் தேர்தலில் நிற்க இருப்பதாக கூறவில்லை. சன் ஏட்டில் இருந்தும் மெளனம்தான் உள்ளது.

டேவிஸின் ஆரம்ப முன்முயற்சிகள் எப்படி இருந்தபோதிலும், அவருடைய இராஜிநாமா உத்தியோகபூர்வ கட்சிகள் அனைத்திலும் ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆழ்ந்து இகழ்வை கொண்டிருக்கும் தொழிற்கட்சி பகிரங்கமாக தன்னுடைய போலீஸ் அரசாங்க நடவடிக்கைகளை பாதுகாக்க இயலாது; மேலும் இந்த உண்மை பற்றியும் அது நன்கு அறிந்துள்ளது. தேர்தலில் இது நிற்க மறுப்பது அது ஓரங்கட்டுவிட்டப்பட்டதற்கு கூடுதலான அடையாளம் ஆகும். தன்னுடைய கொள்கையைக் காப்பதற்கு சன்னை இது நம்பினால், அது அராசங்கம் மர்டோக்கின் நிழல் அரசியல் கூறாக இருக்கிறது என்பதைத்தான் உறுதிபடுத்தும்.

தானே ஏற்படுத்திய நெருக்கடி ஒன்றை சன் சந்திப்பதாக தோன்றுகிறது; அதுவும் மர்டோக் தன்னுடைய பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதாக மக்கென்சி பகிரங்கமாக கூறியதை அடுத்து. மர்டோக் ஒரு அமெரிக்கக் குடிமகன் ஆகையால், பிரிட்டிஷ் தேர்தல் சட்டத்தின்படி அவர் கொடுக்கும் நிதியம் சட்ட விரோதம் ஆகிவிடும். டேவிஸ், சர்ரே உள்ளூர் தேர்தலில் பங்கேற்று ஏற்கனவே வெற்றிபெறாதிருந்த "தெருவில் இருக்கும் மனிதரின்" உண்மையான குரல் என்று அவர் கூறுவது நகைப்பிற்கு இடம் ஆகிவிடும்.

டேவிஸ் நடவடிக்கைக்கு செல்வாக்கு இருப்பது போல் தோன்றினாலும், டோரிக்கள் சிவில் உரிமைகள் பற்றிய போராட்டத்தை வரவேற்க தயாராக இல்லை. தொழிற்கட்சிக்கு எதிராக கருத்து வெற்றி பெறுவதில் களிப்பு அடைந்தாலும், முழு பயங்கரவாத சட்டமும் கேள்விக்கு உட்படுத்தப்படுவது அவர்களுக்கு குறிப்பாக ஏற்புடைத்ததாக இல்லை; அதுவும் வெஸ்ட்மின்ஸ்டரின் உயரிடத்தை தவிர வெளியிடத்தில் இருந்து மக்கள் வாக்களித்தல் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. டேவிஸுக்கு எதிரான சில மிகக் கடுமையான அறிக்கைகள் அவருடைய சக டோரி எம்.பி.க்களிடம் இருந்து வந்துள்ளன; கட்சியின் தலைமையில் பலர் தொழிற்கட்சியை போலவே மர்டோக்கிடம் பூசலைக் கொள்ள தயக்கத்தைத்தான் காட்டுகின்றனர்.

தாராண்மை ஜனநாயகவாதிகளை பொறுத்தவரையில் அவர்கள் சிவில் உரிமைகளை தொடர்ச்சியாக காப்பவர்கள் என்ற தங்களின் அறிவிக்கப்பட்ட நிலைமையை ஒரு வலதுசாரி நபருக்கு பயனுள்ளவகையில் விட்டுக் கொடுத்துள்ளனர்; இவர்களுடைய ஆதரவாளர்களோ அவரை ஒரு கருத்தியல் ரீதியான விரோதி எனத்தான் கருதுகின்றனர்.

அரசியல் கருத்து உணர்வுக்குவியல் டேவிஸுக்கு ஆதரவாக பல அறிக்கைகள் மூலம் அரசியல் பரிமாணம் முழுவதில் இருந்து வந்து தீவிரமாகியுள்ளன. சில நாட்களுக்கு பின்னர் இரு தொழிற்கட்சி எம்.பிக்கள், 42 நாள் விரிவாக்கத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் --பொப் மார்ஷல் ஆண்ட்ரூஸ் மற்றும் இயன் கிப்சன்--தாங்களும் டேவிஸுக்காக பிரச்சாரம் செய்வதாக அறிவித்துள்ளனர் தொழிற்கட்சி விதிகளின்படி மற்றொரு கட்சிக்கு பிரச்சாரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது; எனவே இப்பொழுது இந்த இருவரையும் கட்டுப்படுத்தி அவர்களை தியாகிகளாக்குவது என்ற முடிவை பிரெளன் எடுக்க வேண்டியிருக்கிறது.

ஓய்வு பெற்ற கேர்னல் டிம் கோலின்ஸ் --ஈராக் படையடுப்பிக்கு ரோயல் ஐரிஷ் ரெஜிமென்ட்டின் முதல் பட்டாலியன் தயார் செய்திருக்கையில் அதற்கு இவர் கொடுத்த உரை செய்தி ஊடகம் முழுவதும் "பிரிட்டனின் ஜனநாயகத்தை பரப்பும் பணி என்று புகழப்பட்டது-- தானும் டேவிஸுடன் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

இத்தகைய ஆதரவுதான் டேவிஸுடைய பிரச்சாரம் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தோற்றுவித்துள்ளது என்ற ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது; Observer கட்டுரையாளர் ஒருவர் இதை ஒரு "ஒபாமா போன்ற" கணம் இங்கும் உள்ளது என்று விவரித்துள்ளார்.

டேவிஸ் பிரச்சாரத்தின் உடனடி விளைவு எப்படி இருந்தாலும், இந்த இராஜிநாமா மற்றும் அதற்குக் கிடைத்துள்ள எதிர்கொள்ளல் ஆகியவை ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவிடையே உத்தியோகபூர்வமாக ஒப்புக் கொள்ளப்படுவதை விட மிகக் கூடுதலான முறையில், பொதுமக்கள் இருக்கும் அரசியல் அமைப்பு பற்றி விரோதப் போக்கை கொண்டுள்ளனர் என்ற உணர்வு படிமமாகியுள்ளது தெரியவருகிறது.

பொருளாதார பின்னடைவு, பெருகும் வேலையின்மை, மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கான இன்னும் கூடுதலான நிதிய பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றை எதிர்கொள்கையில், பழைய அரசியல் கட்சிகள் முற்றிலும் இதனை கவனிப்பதற்கு திராணியற்றவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பரந்த பகுதியினர் மத்தியில் கிளர்ச்சி உணர்வு தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவிடையே வளர்வதை கட்டுப்படுத்தவோ முற்றிலும் எதிர்கொள்ளவோ இயலா நிலையில் உள்ளன. டேவிஸ் மற்றும் அவருடைய அரசியல் ஆதரவாளர்கள் இந்த அதிருப்தியை திசை திருப்பி அது ஒரு சுயாதீன சோசலிச திசைவழியை பெறுவதினின்று தடுக்ககிறர்கள் என்பதை அவர்கள் கவனிப்பார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved