|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: Stunned silence following the war in Georgia
ஜேர்மனி : ஜோர்ஜியா யுத்தம் குறித்து ஜேர்மனியின் ஆழமான மெளனம்
By Ulrich Rippert and Peter Schwarz
25 August 2008
Use this version to print
|
Send this link by
email |
Email the
author
ஐரோப்பாவில் புவி-அரசியல் நிலைமை கடந்த இரு வாரங்களில் அடிப்படை மாற்றத்தை
கண்டுள்ளது. பிரிந்து சென்ற தெற்கு ஓசேஷியா மாகாணத்தின் மீது ஜோர்ஜியா நடத்திய தாக்குதல் அணுவாயுதங்கள்
கொண்ட இரு பெரிய சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே ஆச்சரியப்படத்தக்க வகையில்
மோதலைத் தீவிப்படுத்தியுள்ளது. அதே நேத்தில் போலந்தில் நிறுவப்பட்ட அமெரிக்க ஏவுகணைகள், பனிப்போர்
காலத்திற்கு பின்னர் முன்னொருபோதும் இல்லாத வகையில் மறு ஆயுதமேந்துதலுக்கு உந்துதல் அளித்துள்ளது. இது
விவரிக்க முடியாத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
60 மில்லியன் மக்களை பலி கொண்ட இரண்டாம் உலக யுத்தம் முடிந்து 63 ஆண்டுகளுக்கு
பின்னர், இரு பெரிய வல்லரசுக்களுக்கு இடையிலான போராட்டத்தில் ஐரோப்பா மீண்டும் மையமாகியுள்ளது. ஜேர்மனியின்
அரசாங்கம், அரசியல் கட்சிகள், பெரும்பாலான செய்தி ஊடகங்கள் இதை எதிர்கொண்டுள்ள விதம், எதுவும் மாறவில்லை
என்று நடிப்பது போல் உள்ளது. இவற்றின் நிகழ்வின் தன்மையை குறைக்கும் வகையில் நடந்து கொள்வது, இந்நிகழ்வுகளின்
முக்கியத்துவத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் உள்ளது.
அமெரிக்க அரசாங்கம் நேட்டோ தீர்மானத்தின் அடிப்படையில்
Pershing II
ஏவுகணைகளை ஜேர்மனியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தியபோது, பசுமை கட்சி மற்றும் சமூக ஜனநாயக
கட்சியின் சில பிரிவுகள் எதிர்ப்பை காட்ட வேண்டுமென அழைப்பு விடுத்தன. நூறாயிரக்கணக்கான மக்கள் அந்த அழைப்பை
ஏற்று ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றில் பங்கு பெற்றனர். அமெரிக்க இராணுவ தளங்களை முற்றுகையிட்டதும்
அதில் அடங்கியிருந்தது.
போலந்துடன் அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் இன்னும் கூடுதலான ஆபத்தை அளிக்க
கூடியதாகும். Suddeutsche Zeitung
ல் விருந்தினர் தலையங்கம் என்பதை எழுதிய சமூக ஜனநாயகக்
கட்சியின் (SPD)
மூத்த தலைவரும் வில்லி பிராண்ட்டின் Ostpolitik (கிழக்கு
முகாம் நாடுகளின்பால் திரும்புதல்) கை செயல்படுத்த முற்பட்டவருமான 86 வயது
Egon Bahyr
ஒரு புதிய ஆயுத போட்டி ஏற்படக்கூடும் என்றும், "இது போலந்து, ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் நின்றுவிடாது"
என்றும் எச்சரித்தார். "18 ஆண்டுகளாக உறுதி குலையாமல் இருக்கும் நம் தன்மை ஒற்றுமையால் ஏற்பட்டது;
மோதல் வராமல் தவிர்க்கக் கூடிய எந்த முயற்சியும் நியாயப்படுத்தப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.
ஆனால் ஜேர்மனிய அரசியல் கட்சிகளின் தலையங்களில் மெளனம் தான் நிலை
கொண்டுள்ளது. வார்சோவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னரும் கூட, பசுமை கட்சியின்
கூட்டாட்சி அலுவலகம் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. ஜோர்ஜிய யுத்தத்திலும், பசுமை கட்சியின் இரு
தலைவர்களான Claudia Roth, Reinhard
Butikover இருவரும் பத்து வரிகள் கொண்ட அறிக்கை ஒன்றை
அனைத்து தரப்பினரையும் ஒரேமாதிரியாக கண்டித்துள்ளனர்.
"எந்த தரப்பினராலும் பொறுத்து கொள்ள முடியாத வன்முறையை உடனடியாக
முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுகிறோம். ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறும், அமைதியான
முறையில் தீர்வு காண முற்பட வேண்டும் என்றும் கோருகிறோம்... தெற்கு ஓசேஷியாவை கட்டாயமாக வெற்றி
கொள்ள முற்பட்ட ஜோர்ஜியாவின் நிலைப்பாடு பிரிவினைவாத தெற்கு ஓசேஷியாவிற்கு ஆதரவு தருவுதற்கு சென்ற
ரஷ்ய துருப்புக்களின் படையெடுப்பும் ஏற்கத்தக்கதல்ல."
ஆனால் இரு நிகழ்வுகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை வெளிப்படையானது தான்.
மேலும் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறையை போலந்தில் நிறுத்துவது பற்றிய பேச்சுவார்த்தைகள் ஒன்றரை
ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. தற்பொழுது போலந்து பிரதம மந்திரி டோலால்ட் டஸ்க் நவம்பர்
2007ல் பதவி ஏற்ற பின்னர், ஒப்பந்தம் அண்மையில் வருவதற்கில்லை என தோன்றியது. அவருக்கு முன்பு
பதவியிலிருந்த ஜரஸ்லா காஜின்ஸிக்கு மாறாக டஸ்க் ஜேர்மனி மற்றும் பிரான்ஸுடன் நல்லுறவுகளை வளர்த்து
கொள்ள முற்பட்டார். இந்நாடுகள் ரஷ்யாவுடன் அழுத்தங்கள் கூடாது என்பற்காக ஏவுகணை எதிர்ப்பு முறை
திட்டத்தை எதிர்த்தன. அதே காரணத்திற்காக ஜேர்மனியும் பிரான்ஸும் ஏப்ரல் மாதம் புகாரஸ்ட்டில் நடைபெற்ற
நேட்டோ உச்சிமாநாட்டில் ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் நேட்டோவில் நுழைய வேண்டும் என்ற அமெரிக்க
கோரிக்கையை எதிர்த்தன.
ஜோர்ஜியாவில் நடைபெற்ற யுத்தத்திற்கு பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வுகள்
நடந்தேறின. ரஷ்ய எதிர்ப்பு பிரச்சார அலையின் அடிப்படையில் போலந்து ஏவுகணை திட்டத்திற்கு ஒப்பு கொண்டது
மட்டுமில்லாமல், அமெரிக்காவுடன் இரு நாட்டு ஒப்பந்தம் ஒன்றை கொள்ளவும் ஒப்பு கொண்டுள்ளது. இந்நாடு
இப்பொழுது Patriot
ஏவுகணைகளையும் அதன் இராணுவத்திற்காக கூடுதலான நிதியத்தையும் பெறும். ஜோர்ஜியா மற்றும் உக்ரைன்
நேட்டோவில் விரைவாக சேர்வதற்கு ஜோர்ஜிய பூசலுக்கு பின்னர் அழுத்தமும் கணிசமாக பெருகியுள்ளது.
ஆனால் ஒரு ஜேர்மனிய அரசியல்வாதியோ அல்லது நாளேடோ, இப்பிரச்சினைகளை
பற்றி பேச முன்வரவில்லை. மாறாக பெரும்பாலனவர்கள் அமெரிக்க பிரச்சார வழியை ஏற்க அக்கறை காட்டி
ரஷ்யா முக்கியமான ஆக்கிரமிப்பாளர் என்று குற்றம் சாட்டுகின்றனர் அல்லது முழு விவகாரத்தையும் ஒரு நல்ல
நடுநிலையாளர் இல்லாததால் ஏற்பட்ட வருந்தத்தக்க தவறான புரிதல் என்று கூறுகின்றனர்.
ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காகவும் உள்ளனர். அவர்களுள் முன்னாள் அதிபர் ஹெகார்ட்
ஷ்ரோடர் (SPD)
உள்ளார்; Der Spiegel
இதழுக்கு இவர் ஒரு வாரம் முன்னர் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் யுத்த வெடிப்பில் அமெரிக்காவின் பங்கை
தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார். "டிபிலிசியில் உள்ள அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ஜோர்ஜியா மீது
தாக்குதல் நடத்துமாறு ஊக்குவித்தனர் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?" என்று கேட்கப்பட்டதற்கு அவர் கூறியதாவது:
"அந்த அளவிற்கு செல்லமாட்டேன். ஆனால் ஜோர்ஜியாவில் அமெரிக்க ஆலோசகர்கள் உள்ளனர் என்பதை அனைவரும்
அறிவார்கள்--குறிப்பிடத்தக்க வகையில் அது அறிவுடைய செயல் என்று நான் ஒருபொழுதும் நினைத்ததில்லை. இந்த
வல்லுனர்கள் தகவல் ஏதும் கிடைக்காமல் இருந்தார்கள் என்று நினைப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒன்று, முற்றிலும்
தங்கள் நிலை குறித்து அறியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது அவர்கள் முட்டாள்களாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதுவும் நம்புவதற்கில்லை."
ஷ்ரோடரின் அறிக்கைகள் உடனடியாக ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங் வால்டர்
ஸ்ரைன்மையரிடம் (SPD)
இருந்து பதிலை தருவித்தன. அவர் நீண்ட நாள் தன் கட்சிக்காரரிடம் இருந்து
இயன்ற அளவு தன்னை ஒதுக்கி வைத்து கொள்ள முற்பட்டார்.
அமெரிக்க ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு முறையை போலந்தில் நிறுத்துவதற்கான
தயக்கத்துடன் வந்துள்ள எதிர்கொள்ளல் ஓராண்டு முன்பு இதே பிரச்சினையில் நடந்த கடுமையான விவாதத்தின்
பின்னணியில் குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம், வாராந்திர ஏடான
Die Zeit
"ஏவுகணை பாதுகாப்பு--உடனடி எதிர்ப்பு தேவை" என்ற
தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரையில்
SPD தலைவர் கர்ட் பெக் எழுதிய அறிக்கை குறித்து விவரித்தது.
அதில் ஏவுகணை திட்டத்திற்கு அவர் தெளிவான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட இதே நேரத்தில்
Suddeutsce Zeitung
ஒரு விருந்தினர் பத்தியை ஜேர்மன் வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையர் எழுதியதை "அமெரிக்க ஏவுகணை
திட்டம்--ஸ்ரைன்மையர் அமெரிக்காவை புதிய ஆயுத போட்டி வேண்டாம் என எச்சரிக்கிறார்" என்ற தலைப்பில் வெளியிட்டது.
அதன் வர்ணனையில், அமெரிக்காவிற்கு செல்லுமுன் வெளியிடப்பட்ட கட்டுரையில், வெளியுறவு மந்திரி நேரடியாகவே
அத்தகைய ஏவுணை திட்டம் நிறுவப்படுதலை எதிர்த்திருந்தார். அது ஐரோப்பாவை பிளவுபடுத்தும் என்று கூறியிருந்தார்.
"பனிப்போர்க்கால சிந்தனைக்கு மீண்டும் செல்லுதல் தவறானதாகும்." என்று அப்பொழுது ஸ்ரைன்மையர்
கடிந்துரைத்திருந்தார்.
இப்பொழுது ஏவுகணைத்திட்டம் உடன்பாடு ஆகியுள்ள நிலையில், அமெரிக்க நிர்வாகம்
மிக விரைவாக ஐரோப்பிய அச்சங்களுக்கு எதிராக தன்னுடைய வழிவகையை சுமத்தியிருக்கையில், பேர்லினால்
ஒன்றும் கூறுவதற்கில்லை; ஏன்? இந்த கோழைத்தனத்திற்கு ஆதாரம் என்ன? வாஷிங்டனின் தீவிர ஆத்திரமூட்டும்தன்மை
உடைய திட்டத்தை எதிர்க்க மறுப்பதின் காரணம் என்ன?
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான், நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்த 75
ஆண்டுகளின் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஐரோப்பா மீண்டும் அத்தகைய திமிர்த்தனமான, விரிவாக்க
அரசாங்கத்தை எதிர்கொண்டால் "அத்தகைய ஆபத்து முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்" என்று ஒவ்வொரு
பேச்சாளரும் தெரிவித்தார்கள்.
அப்படியானால் இப்பொழுது பேர்லினில் ஏன் எவரும் இருக்கும் நிகழ்வை அதன்
பெயரிட்டு கூற தயாராக இல்லை. ரஷ்யாவிற்கு எதிரான இலக்கை தெளிவாக கொண்டிருக்கும் ஆயுத முறை
நிறுத்தலை நிராகரிக்கவில்லை. ஐரோப்பா மற்றொரு உலக யுத்தத்தின் அரங்காக இருக்க தயாராக இல்லை
என்று ஏன் தெளிவாக்கவில்லை?
இந்த மெளனத்தை புரிந்து கொள்ள இன்னும் நெருக்கமாக சமீபத்திய நிகழ்வுகளை
காணுதல் அவசியமாகும்.
ஜேர்மனி 20 ஆண்டுகளுக்கு பின்னர் மறுஐக்கியம் அடைந்தபின், நாட்டின் வெளியுறவு
கொள்கை அமெரிக்க மேலாதிக்கத்தை அகற்றிவிட்டு தன்னுடைய சொந்த ஏகாதிபத்திய நலன்களை உறுதி செய்யும்
வகையில் நோக்கத்தை கொண்டுள்ளது--அல்லது உத்தியோகபூர்வ சொல்லாட்சியில் "ஓர் ஐரோப்பிய மைய சக்தி"
என்ற வகையில் நிலைப்பாடு கொள்ளுவதற்கு.
பனிப்போர் கால தசாப்தங்களில் வாஷிங்டனின் மேலாதிக்கத்தை ஜேர்மன் தவிர்க்க
முடியாதது என்று தன்னுடைய சர்வதேச பொருளாதார செல்வாக்கை அமெரிக்காவின் நிழலில் கட்டமைத்தது.
ஆனால் மறுஐக்கியத்திற்கு பின்னர், கூட்டாட்சி அரசாங்கம் ஹெல்முட் கோல் தலைமையில் (Christian
Democrtic Union CDU) முன்முயற்சியை பற்றி எடுத்து
கொண்டு ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை ஐரோப்பிய ஒன்றியமாக மாற்றுவதை முடித்தது.
ஜனவரி 1993ல் தொடங்கப்பட்ட ஐரோப்பிய உள்நாட்டு சந்தைகள், பொது
நாணயம் மற்றும் பல பகுதிகளில் பொதுக்கொள்கைகள் தேவை என்ற நிலையை ஏற்படுத்தியது. இதில் வெளியுறவு
கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கையும் அடங்கின. ஐரோப்பாவின் முன்னணி பொருளாதார சக்தி என்ற
முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விவகாரங்களில் முக்கிய இடத்தில் தான் இருக்க முடியும் என்று ஜேர்மனி
கருதியது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை பயன்படுத்தி ஜேர்மனி தன்னுடைய பொருளாதார,
அரசியல் செல்வாக்கை கிழக்கு முகாமில் முன்னாள் சோவியத் குடியரசுகளில் வளர்க்க முற்பட்டது. கிழக்கு முகாம்
நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இணைக்கப்பட்டன; பொருளாதார உறவுகள் காகசஸ் பகுதியில் ஐரோப்பிய
ஒன்றியத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் வளர்ச்சியுற்றன.
ஜேர்மனி தன்னுடைய விசை மற்றும் பூகோள-மூலோபாய நலன்களை தொடர்ந்து,
இப்பகுதியின் முன்னாள் பெரும்சக்தி என்ற அரசியல் மரபுகளை புதுப்பிக்க முற்பட்டது. அஜர்பைஜனில் முதல்
துளையிடும் செயற்பாடுகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் சீமென்ஸ் மற்றும் பிற ஜேர்மனிய நிறுவனங்களால் நிறுவப்பட்டிருந்தன;
ஹிட்லரின் படைகளும் காஸ்பிய பகுதியில் இருக்கும் எண்ணெய் இருப்புக்களை கைப்பற்ற முயன்றன.
பல பகுதிகளிலும் ஜேர்மனிய நலன்கள் அமெரிக்க நலனுடன் மோதி நின்றன: கிழக்கு
ஐரோப்பாவில், பால்கன்களின், காகசஸ் பகுதியில், மத்திய ஆசியாவில் மற்றும் மத்திய கிழக்கில் என. இப்பகுதிகள்
அனைத்திலும் ஜேர்மனி அமெரிக்காவில் நட்பு நாடாகவும் சில சமயம் போட்டி நாடாகவும் வெளிப்பட்டது.
ஆனால் ரஷ்யாவை சுற்றி வளைத்து தனிமைப்படுத்த நினைக்கும் அமெரிக்கா
போலில்லாமல், ஜேர்மனி மாஸ்கோவுடன் நல்ல உறவுகளை தக்க வைக்க முயன்றுள்ளது. ரஷ்யாவுடன் பரந்த
பொருளாதார உறவுகளை கொண்டுள்ளது; மிக பெரிய அளவிற்கு ரஷ்ய எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றின்
இறக்குமதிகளையும் நம்பியுள்ளது.
மேலும் ரஷ்யா அமெரிக்கா என்று அணுவாயுத சக்திகளுக்கு இடையே மோதல் என்பது
தவிர்க்க முடியாமல் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை அமெரிக்காவிடம் இராணுவ முறையில் நம்ப வேண்டாம் என
தள்ளக்கூடும். பிரிட்டனும் பிரான்ஸும்தான் தங்கள் --ஒப்புமையில் சிறிது என்றாலும்-- அணுவாயுத கிடங்குகளை
கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகளாகும். ரஷ்யாவுடன் எந்த மோதல் என்றாலும் அது ஐரோப்பிய ஒன்றியத்தையும்
பிளக்கும் ஆபத்தை அளிக்கும்; ஏனெனில் பல முன்னாள் கிழக்கு முகாம் நாடுகள் ஆழ்ந்த ரஷ்ய எதிர்ப்பு உணர்வுகளை
கொண்டவையாகும்.
எனவே ஜேர்மனிய அரசாங்கம் மாஸ்கோ மற்றும் வாஷிங்டனுடன் நல்ல உறவுகளை
கவனத்துடன் தக்க வைத்து கொள்ள முற்படுகிறது. ரஷ்யாவை அமெரிக்கா சுற்றி வளைத்திருப்பது பாரிய முறையில்
எதிர்ப்பை பேர்லினில் அளித்துள்ளது. ஜேர்மானிய அரசாங்கம் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறை ஒன்றை
போலந்து, செக் குடியரசுகளில் நிறுத்துவதை தடுக்க முற்பட்டது; அதேபோல் ஜோர்ஜியா மற்றும் உக்ரைன்
ஆகியவை நேட்டோ உறுப்பு அந்தஸ்து பெறுவவதையும் தாமதப்படுத்த முற்பட்டது.
இப்பொழுது ஒரு சில நாட்களுக்குள், அமெரிக்கா ஜோர்ஜியா, போலந்து மற்றும்
உக்ரைன் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த ஜேர்மனிய வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சத்தை
சிதைத்துவிட்டது. Egon Bahr
"ஐரோப்பாவிற்கு இதுவொரு பின்னடைவு" என்று கூறுகிறார்.
"50 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட
இந்த நோக்கம், ஒரே குரலில் பேசுவது என்பது, காலவரையில்லாமல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது" என்று
Bahr, Suddeutsche Zeitungல்
எழுதியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டால், ஜேர்மனிய ஆளும்
வர்க்கம் எதனுடன் இணையும் என்பது உறுதியாக இல்லை. மாஸ்கோவுடன் உடைவு என்றால் பொருளாதார அரசியல்
பேரழிவுகள் ஏற்படும். அதேபோல் வாஷிங்டன் உடன் வெளிப்படையாக மோதல் என்றாலும் அவ்வாறே ஏற்படும்.
எனவே மோதலின் விளைவுகளை குறைக்கும் வகையில் இரு நாடுகளும் சமரசமாக இருக்க வேண்டும் என்று
முறையிடுகிறது.
இந்த விதத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி
Spigel
ஆசிரியர் Hans
Jurgen
Schlamp
ஜேர்மனிய வானொலியில் கூறிய கருத்து முக்கியமாகும். அது "ஆபத்தான நேரங்கள். குறிப்பாக ஐரோப்பாவிற்கு.
பிறரால் மீண்டும் தூண்டிவிடப்பட்டு வரும் இதில், புவி-அரசியல் மோதல் மையத்திற்கு வந்துள்ளது. அவர்களால் இதை
பொறுத்து கொள்ளலாம். அவர்கள் எங்கோ இருக்கிறார்கள்; தத்தம் மண்டலங்களில். ஐரோப்பா நடுவில்
இருக்கிறது; இரண்டிற்கும் அண்டை நாடுதான், இரண்டும் தேவைதான் அரசியல், பொருளாதார வகைகளில். உலகம்
முழுவதிலும் இருந்து விசை தேவைகளுக்கு முற்றிலும் நம்பியிருக்க வேண்டியது என்பதற்காக அல்ல. எனவே ஐரோப்பா
யுத்த வளர்ச்சி போக்கை தவிர்க்க வேண்டும், முறிந்துள்ள இடங்களில் பிணைப்புக்களை பழையபடி உறுதி செய்ய
வேண்டும்... கொத்திருக்கும் அமிஸ் மற்றும் ரஷ்யர்களை அமைதிப்படுத்தவது என்பது ஐரோப்பியர்களின் ஆர்வத்தில்
தான் உள்ளது என்பது என் கருத்து."
ஜேர்மன் அதிபர் அலுவலகம் மற்றும் கட்சி தலைமையகத்தில் சமீப நாட்களில் ஏற்பட்டிருக்கும்
வியப்பும், தெளிவாக காணக்கூடிய அதிர்ச்சியும் நீடிக்க போவதில்லை. அட்லாண்டிக் கடந்த அழுத்தங்கள் ஒருபுறம்
இருந்தாலும், முக்கிய அரசியல் விதிகளின் தொடக்க எதிர்கொள்ளல், மிக சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய நாட்டுடன்
இணைந்து கொள்ளுதல் என்பதாகும். இதன் இராணுவ மறுகட்டமைப்பு தீவிரபடுத்தப்படவேண்டும், தன் சொந்த ஏகாதிபத்திய
நலன்களுக்காக குறுக்கீடு செய்வதற்கேனும் ஜேர்மனியில் கோரிக்கை எழுப்பப்படுவதற்கு நீண்ட நாள் ஆகாது.
கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் பெரிய சக்திகளுக்கு இடையே இருக்கும் மோதல்கள்
அமைதியான முறையில் தீர்க்கப்பட முடியாதவை என்று முற்றிலும் தெளிவாக்கியுள்ளன. தன்னுடைய சொந்த பிரச்சாரமான
"ஏகாதிபத்திய அரசியல்" கடக்கப்பட வேண்டும், ஒரு "சமாதான அமைப்பு உலக உறவுகளுக்கு தேவை"
என்றெல்லாம் கூறப்பட்ட ஜேர்மனிய கொள்கை இப்பொழுது திடீரென உண்மைக்கு எதிராக வந்துள்ளது. கடந்த
நூற்றாண்டில் தீர்க்கப்படாத அனைத்து பிரச்சினைகளும், இரு உலக யுத்தங்களுக்கு வழிவகுத்த அனைத்தும் இப்பொழுது
மீண்டும் வெளிப்பட்டுள்ளன. இவை பாரிய முறையில் ஜேர்மனிய கொள்கைகளை நிர்ணயிக்கின்றன. |