World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French and German Continental workers protest against plant closures

பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய கொன்டினென்டல் தொழிலாளர்கள் ஆலைகள் மூடல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

By our reporting team
25 April 2009

Back to screen version

ஏப்ரல் 23ம் தேதி கொன்டினென்டல் டயர் நிறுவனத்தில் பணியாற்றும் ஜேர்மனிய, பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஆலைகள் மூடல் மற்றும் ஏராளமான பணிநீக்கங்களை எதிர்த்து ஒரு கூட்டு எதிர்ப்பை ஜேர்மனிய நகரமான ஹனோவரில் நடத்தினர். நிறுவனத்தின் திட்டமான அதன் இரு ஆலைகளை, ஜேர்மனியில் ஹனோவர்-ஸ்டோக்கென் மற்றும் வட பிரான்ஸில் Clairoix ஆலை இரண்டும் மூடப்படும் என்ற முடிவை அடுத்து கிட்டத்தட்ட 3,000 தொழிலாளர்களுடைய வேலைகள் நீக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பும் ஹனோவரில் நடைபெற்றது அண்டை நாடுகளில் இருக்கும் இரு தொழிலாளர்கள் தொகுப்புக்களால் நடத்தப்பட்ட முதல் கூட்டு நடவடிக்கை ஆகும். ஜேர்மனிய கொன்டினென்டல் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரெஞ்சு சக தொழிலாளர்களை வரவேற்றனர்; அவர்கள் வியாழன் அதிகாலை பிரான்ஸில் இருந்து ஒரு சிறப்பு இரயில் மூலம் ஹனோவருக்கு வந்தனர்.

பிரெஞ்சு தொழிலாளர்கள் Continental மற்றும் Schaeffler குடும்ப நிறுவனத்தின் பங்குதாரர்கள் பொதுக்கூட்டத்தின் முன் எதிர்ப்பு நடத்த ஜேர்மனிக்கு வந்திருந்தனர். இது வியாழனன்று ஹனோவர் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்றது. குறைந்தது 1,900 வேலைகளையாவது அகற்றுதல் --1,120 Clairoix ஹனோவர்- ஸ்டாக்கென்னில் 780-- என்று கம்பெனி விரும்பிய முடிவை அக்கூட்டம் உறுதி செய்தது. கொன்டினென்டலின் தலைமை நிர்வாகி கார்ல் தோமஸ் நியூமான் கூடியிருந்த பங்குதாரர்களிடம் தற்போதைய ஏப்ரல் மாதத்தில் அதன் ஜேர்மன் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் குறைந்த நேரமே வேலை செய்தனர் என்று குறிப்பிட்டார்.

ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே, கொன்டினென்டல் உலகெங்கிலும் இருக்கும் அதன் தொழிலாளர் தொகுப்பான 133,000 ல் இருந்து 7,000 வேலைகளை அகற்றியுள்ளது; இதைத்தவிர இன்னும் வேலை தகர்ப்புக்கள், ஆலை மூடல்கள் ஆகியவை பரிசீலனையில் உள்ளன. மிக சீக்கிரத்தில் ஜேர்மனியில் "குறைந்த நேரம் மட்டும் வேலை என்ற அடிப்படையில் நிறுவனத்தை நடத்துவது இயலாது" என்று கூறிய விதத்தில், இன்னும் ஏராளமானவர்களை வெளியே அனுப்பும் அச்சுறுத்தலை நியூமான் வெளிப்படையாக கூட்டத்தில் கொடுத்தார்.

பல ஆலைகளில் ஏராளமானவர்களை வெளியே அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துகையில், கொன்டினென்டலின் நிர்வாகமும் அதன் பங்குதாரர்களும் தொழிற்சங்க தலைவர்களின் நெருக்கமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம். நிறுவனத் தொழிலாளர்களின் அழுத்தத்தின் பேரில் தொழிற்சங்கத் தலைவர்கள் வியாழனன்று நடந்த கூட்டத்தில் முற்போக்கு உரைகள் சிலவற்றை நிகழ்த்தினாலும் உறுதியாக எதையும் கூறவில்லை. காங்கிரஸ் மையத்தின் முன் எதிர்ப்புக் காட்டிய தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே உத்தரவாதம் அமைப்புப் பிரிவுத் தலைவரான Werner Bischoff (IF-BCE) கோரிய ஆலைகளின் வருங்காலம் பற்றி முடிவெடுப்பது தொழிற்சங்க பிரதிநிதிகளையும் கொண்டிருக்கும் நிறுவனத்தின் மேற்பார்வைக் குழுவாக இருக்க வேண்டுமே அன்றி நிர்வாகம் மட்டும் அல்ல என்பதுதான்.

Conti மேற்பார்வைக்குழுவின் துணைத்தலைவரான Bischoff சில வாரங்களுக்கு முன்பு நிர்வாகத்துடன் இணைந்து "அதிகாரத்துவமற்ற, பொறுப்புள்ள வகையில்" தான் செயல்பட்டதாக பெருமையுடன் கூறிக்கொண்டார். "ஒப்பந்த கொள்கைக்கு பொறுப்பு என்னும் விதத்தில், சிறப்பு விதிகள் பிரிவுகளை நான் முழுமையாகப் பட்டியல் இட முடியும், அதாவது, ஒப்பந்தச் சலுகைகள் அனைத்திலும் என் கையெழுத்து இருக்கும்" என்று அவர் கூறினார்.

உண்மையில் ஜேர்மனியில் கொன்டி கண்காணிப்புக் குழுவில் Bischoff உடன் பத்துக்கும் குறையாத தொழிலாளர்களும் உள்ளனர். Lower Saxony, Saxonia-Anhalt TM IG Metall பிரிவில் உள்ள Hartmut Meine, பிராங்க்போர்ட்டில் உள்ள IG Metall ல் தொழிற்சங்க செயலாளராக இருக்கும் Jörg Köhlinger, Automotive GmbH Regensburg ல் கூட்டுப் பணிக்குழுத் தலைவராக இருக்கும் Hans Fischl, Teves Frankfurt ல் கூட்டுப் பணிக்குழுத் தலைவராக இருக்கும் Michael Iglhaut, Conti Tench Korbach ன் Shop Stewards Committe தலைவர் Jörg Schönfelder, இன்னும் சிலர். இந்த தொழிலாளர் தொகுப்பு பிரதிநிதிகள் அனைவருமே தங்கள் பணிக்காக நல்ல ஊதியம் பெறுகின்றனர், ஆனால் எவரும் நிர்வாகத்தின் மூடல் திட்டத்திற்கு எதிராகத் தீவிர போராட்டம் நடத்தியதில்லை.

பிரெஞ்சுத் தொழிற்சங்கத் தலைவர்களும் இதேபோன்ற வர்க்க ஒத்துழைப்பு என்ற கொள்கையை பின்பற்றி பிரெஞ்சு அரசாங்கத்துடன் வாடிக்கையாக பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்

"தொழிலாளர்கள் சமீபத்தில் ஏராளமான சலுகைகளை கொடுத்து விட்டனர்... எங்களை ஏமாற்றும் வேலைதான் நடக்கிறது என்று நினைக்கிறேன்" என்று Hanover-Stocken ல் உள்ள தொழிலாளரி ஒருவர் WSWS நிருபர் குழுவிடம் கூறினார்.

வியாழனன்று எதிர்ப்பில் பங்கு பெற்ற பலரைப் போலவே, இந்தத் தொழிலாளியும் பிரான்சில் இருந்து பல சக ஊழியர்கள் வந்திருப்பது "முற்றிலும் நல்ல தகவல்" என்றார். "வேலைகளுக்கு போராடும் அவர்கள் உறுதியை நான் வியக்கிறேன். ஒவ்வொரு தொழிலாளியும் தன் ஆலையை மட்டும் காக்கவில்லை என்பதை உணர வேண்டும். ஐரோப்பா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது." என்றார் அவர்.

எதிர்ப்பில் பங்கு பெற்ற பலரும் WSWS ன் ஜேர்மனிய, பிரெஞ்சுப் பதிப்புக்கள் பற்றிய தங்கள் ஆர்வத்தை வெளியிட்டனர்; இவை WSWS குழு உறுப்பினர்களால் வினியோகிக்கப்பட்டன.

ஜேர்மனிய கொன்டினென்டல் தொழிலாளர்கள் ஹனோவரின் முக்கிய இரயில் நிலையத்தில் வியாழனன்று காலை தங்கள் பிரெஞ்சு சக ஊழியர்கள் Clairoix ல் இருந்து சிறப்பு இரயிலில் வந்து இறங்கும்போது வரவேற்றனர்.

கூடியிருந்த ஜேர்மனியத் தொழிலாளர்கள் இரு மொழிகளிலும் "Cher collegues de Clairoix, bienvenunue a Hanovre [Clairoix ல் இருந்து வரும் பிரிய சக ஊழியர்களே, ஹனோவருக்கு நல்வரவு] என்று எழுதப்பட்ட அட்டைகளை சுமந்தனர். அதே போல், "உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுக!" என்ற அட்டையும் இருந்தது. பிரெஞ்சுத் தொழிலாளர்கள் இறுதியில் வந்தவுடன், ஜேர்மனியத் தொழிலாளர்கள், "Tous ensemble, Continental-solidairite" என்று கோஷமிட்டனர்.

இரவு முழுவதும் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் பயணித்திருந்தும் அவர்கள் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்; WSWS குழுவிடம் பேசுவதிலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Clairoix ல் இருந்து Jonathan, Ludovic என இரு இளம் தொழிலாளிகள் வந்திருந்தனர். "நான் Clairoix ல் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். ஆனால் என்னுடைய தந்தையோ அங்கு 25 ஆண்டுகளாக இருக்கிறார்" என்று ஜோநாதன் எங்களிடம் கூறினார். "இதுதான் நான் முதல் தடவையாக சர்வதேச ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுவது. எல்லாமே இப்பொழுது மாறி வருகிறது. மக்கள் விழிப்புணர்வு பெற்றுக் கொண்டிருக்கின்றனர். பிரான்ஸில் அநேகமாக அனைவருமே வீதிகளுக்கு வந்துவிட்டனர்.

"Compiègne இல் நாங்கள் 60,000 மக்கள் வாழும் ஒரு சிறு நகரத்தில் 12,000 பேரைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடாத்தினோம். இத்தகைய கூட்டம் சிறப்பானது; அதில் ஆலையில் இருப்பவர்கள், அவர்களுடைய சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று அனைவரும் இருந்தனர். அனைத்தும் அமைதியாக நடைபெற்றன. இரண்டு நாட்கள் முன்பு அவ்வாறு இல்லை; தொழிலாளர்கள் சீற்றத்துடன் விடையிறுப்பு கொடுக்கின்றனர், ஏனெனில் நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று உணர்கிறோம்."

இந்த இரு இளம் தொழிலாளிகளும் செவ்வாய் நடைபெற்ற நிகழ்ச்சிகளை குறிப்பிட்டிருந்தனர்; அப்பொழுது தொழிலாளர்கள் Tribunal de Sarreguemines, Clairoix ல் நடத்திய பணிநீக்கங்களுக்கு ஆதரவாக தீர்ப்புக் கொடுத்திருந்தது. முன்னதாக நிக்கோலோ சார்க்கோசி பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர்கள் சார்பில் தலையிடும் என்ற சிறு நம்பிக்கையை கொடுத்திருந்தார்; ஆனால் நீதிமன்ற தீர்ப்பு ஆலை மூடலை உறுதிபடுத்திவிட்டது; 1,200 தொழிலாளர்கள் பணிநீக்கத்தையும் உறுதிப்படுத்திவிட்டது. பல தொழிலாளர்களும் இதைக் கோபத்துடன் எதிர்கொண்டு Compiègne Prefecture பகுதி முழுவதும் சேதப்படுத்தி, ஆலையின் வரவேற்பு கட்டிடத்தையும் நாசப்படுத்தினர்.

இரு பழைய தொழிலாளிகளான ரெனேயும் பிரான்ஸிஸும் இந்த எதிர்கொள்ளலின் பின்னணியை விளக்கினர். "எங்கள் ஆலை மூடப்பட்டுவிட்டது என்பதை செய்தித்தாட்கள் மூலம்தான் நாங்கள் அறிந்தோம். நேற்றில் இருந்து நாங்கள் வேலை இல்லாமல் இருக்கிறோம். நீதிமன்றத்தில் ஒரு முறையீட்டை செய்துள்ளோம்; ஆனால் செவ்வாயன்று நீதிமன்றம் எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது. சீற்றம் பரந்த அளவில் உள்ளது, அரசாங்கம் எங்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது. "

தங்கள் ஆலையில் உள்ள பூசல் பற்றிய முந்தைய வரலாற்றையும் அவர்கள் விளக்கினர். பிரான்ஸின் உத்தியோகபூர்வ 35 மணி நேர வார வேலை என்பது, தொழிலாளர் தொகுப்பின் எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, சில மாதங்களுக்கு முன்பு 40 மணி நேரம் என்று மாற்றப்பட்டுவிட்டது. தொழிற்சங்கங்கள் இதற்கு பதிலாக 2012 வரை வேலை உத்தரவாதம் கிடைக்கும் என்று உத்தரவாதமளிக்கும் உறதிமொழிமீது வலியுறுத்தல் செய்தன.

இப்பொழுது தொழிலாளர்கள் இந்த உத்தரவாதம் பயனற்றது என்பதை மிருகத்தனமான முறையில் உணர்த்தப்பட்டுள்ளனர். "முதலாளிகள்தான் எல்லாவற்றையும் அழிக்கின்றனர்!" என்று ரெனே கூறினார். "ஒருவரும் இதை விரும்பவில்லை, இப்படிச் செல்லும் முறையில் மோதல் என்பது தவிர்க்க முடியாதது ஆகும்."

எரிக் மற்றும் ஜோன் மரி இருவரும் Clairoix ஆலையில் நேற்று வரை வேலை பார்த்தனர்; எரிக் எட்டு ஆண்டுகளாக, அவருடைய நண்பர் 27 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளனர். "நாங்கள் முற்றிலும் ஏமாற்றப்பட்டுவிட்டோம்" என்று ஜோன் மரி குறிப்பிட்டார் "வேலை உறுதி நிச்சயம் என்று கூறப்பட்டோம், ஆனால் அத்தகைய உறுதி எங்கள் கண்களில் மண்ணைத்தான் தூவிவிட்டது. பங்குதாரர்கள்தான் நிறுவனங்களில் என்ன நடக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றனர்" என்றார். எரிக் சேர்த்துக் கொண்டது; "பங்குதாரர்கள் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்ளுவதில்தான் ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்கு எங்கள் உடன்பாடு இல்லை என்பது தெளிவு."

என்.வொல்ப்காங்க் மற்றும் எல்.ஸ்டீபென், ஹனோவெர்-ஸ்டாக்கென்னில் பணி புரிபவர்கள்

"ஒரு முழு ஆலையும் தகர்க்கப்படுகிறது" என்று வொல்ப்காங் அறிவித்தார்; "தொழிலாளர்கள்தான் இதற்கு விலை கொடுக்கின்றனர். உயர்மட்டத்தில் இருப்பவர்கள் கவலைப்படவில்லை; அவர்கள் தங்கள் பணத்தை சேமிப்பில் வைத்துள்ளனர். முதலாளிகள் அவர்கள் சுமைகளை எங்கள்மீது ஏற்றியுள்ளனர்; எங்களுக்கு கொடுக்கப்படும் ஊதியங்கள் அவர்களுக்கு செலவு எனத் தோன்றுகிறது. ஆனால் எங்களிடம் பணம் இல்லை என்றால், அவர்கள் பொருட்களை எவர் வாங்கப் போகிறார்கள்?'

ஸ்டீபன் தன்னுடைய பிரெஞ்சு சக ஊழியர்களைக் காண்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்: "இதுவரை இதுபோல் ஒன்று நடந்ததில்லை; பிரான்ஸில் இருந்து சக ஊழியர்களும் நாங்களும் ஒன்றாக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரிக்கிறோம்." ஸ்டீபன் ஒரு இயந்திரக் கட்டமைப்பாளராக தொழில் புரிகிறார் ஆனால், கொன்டி தொழிலாளர்கள் பற்றிய சமூகத் திட்டங்கள் எங்களையும் பாதிக்கும். ஒருவேளை நாங்கள் எங்கள் வேலைகளை டிரக் டயர் உற்பத்தி ஆலைகளில் இருக்கும் மூத்த ஊழியர்களுக்காக இழக்க நேரிடும். ஏற்கனவே நாங்கள் குறைந்த நேரம் உழைத்து வீட்டில் அரை மணி அதிகமாக இருக்கிறோம். ஒரு சமூகத் திட்டம்--கேட்பதற்கு நன்றாக உள்ளது, ஆனால் அது ஒரு பெரிய அடி ஆகும். ஆலையில் உணர்வு பெரிதும் குறைந்துள்ளது, டிரக் ஆலை இலாபத்தில் உள்ளது என்பதால் அதிக சீற்றமும் உள்ளது."

போரெலியும் அவருடைய இத்தாலிய சக ஊழியர்களும் ஹனோவர் டிரைவ் Vahrenwalderstrabe மற்றும் டிராக்ஷன் ஆலை ஊழியர்களும் ஏற்கனவே பல வாரங்களாக குறைந்த நேரம்தான் பணிபுரிகின்றனர். "இதுவரை தொழிலாளர்கள் தங்கள் நலன்களை ஆலைக்கு ஆலை என்ற விதத்தில்தான் காத்துள்ளனர்; ஆனால் அப்படியே தொடர முடியாது." என்று போரெலி கூறினார் "கொன்டினென்டல் எங்களை ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்துகிறது; இப்பொழுது நாங்கள் எங்கள் வலிமையை ஒன்றாக இருந்து காட்ட வேண்டும்."

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved