World Socialist Web Site www.wsws.org


: செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

ஷிtஷீநீளீs, ஜீக்ஷீஷீயீவீts uஜீயிஷீதீs, வீஸீநீஷீனீமீ பீஷீஷ்ஸீ

Whose recovery?

பங்குகள், இலாபங்கள் ஏற்றம்--வேலைகள், வருமானம் இறக்கம்

எவருக்கு மீட்பு?

Patrick Martin
6 August 2009

Back to screen version

ஒரு பொருளாதார மீட்பு வந்துவிட்டது என்று ஒபாமா நிர்வாகமும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகமும் கட்டியம் கூறுகையில், அமெரிக்க தொழிலாளர்கள் மோசமாகியுள்ள வேலைச் சந்தை, வீழ்ச்சிடையும் உண்மை வருமானங்கள் மற்றும் வறுமையின் விரிவாக்கம் என 1930களுக்கு பின்னர் காணப்படாத சமூக இழப்புக்கள் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளனர்.

நியூ யோர்க் பங்குச் சந்தை ஜனவரி 2ம் தேதிக்கு பின்னர் முதல் தடைவையாக Dow-Jones Industrial Average ல் 9,000 தரத்தை தாண்டியது. வங்கிகளுக்கும் பிற நிதிய நிறுவனங்களுக்கும் இலாபங்கள் உயர்கின்றன, வோல் ஸ்ட்ரீட் ஒரு புதிய சுற்று 7, 8 ஏன் 9 இலக்க மேலதிக கொடுப்பனவுகளை கூடக் கொடுக்க தொடங்கிவிட்டது; எரிபொருள் பங்குகளில் வர்த்தகம் செய்யும் ஒரு தனி வர்த்தகருக்கும் பரிசாக சிட்டிக்குரூப் 100 மில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது.

செல்வம் கொழிக்கும் உயரடுக்கு குறிப்பாக செப்டம்பர் 15, 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவிற்கும் மார்ச் 6, 2009 இல் Dow பங்குசந்தை குறியீடு மிகக்குறைந்த 6,547 எண்ணிக்கையை காட்டியபோது பெரும் பீதியைக் கொண்டது. அமெரிக்க அரசாங்கம் நிதிய இருப்புக்களை பெருமளவில் வோல் ஸ்ட்ரீட்டின் ஆதரவிற்கு 23.7 டிரில்லியன் டலார் அளவிற்கு திரட்டியபோது, இது குறைந்தது தற்காலிகமாகவேனும் நிதியச் சந்தைகளில் நம்பிக்கையை மீண்டும் கொண்டுவந்து பங்கு விலைகளை 40 சதவிகிதம் உயர்த்தியது. ஆனால் தொழிலாள வர்க்க மக்களுக்கு பிணை எடுப்பு ஏதும் இல்லை.

வேலையின்மை 27 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. தொழிற்துறை ஜூலை மாதத்திற்கு வெள்ளியன்று புதிய உயர்ந்த எண்ணிக்கையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகபூர்வமாக அந்த எண்ணிக்கை 10 சதவிகிதத்தினர் வேலையின்மையில் உள்ளனர் என்று கூறக்கூடும். ஆலோசனை நிறுவனமான Challenger, Gray & Christmas பெரிய அமெரிக்க நிறுவனங்கள் ஜூனை விட ஜூலையில் இன்னும் 31 சதவிகிதம் அதிக பணிநீக்கங்களை அறிவித்ததாக கூறுகிறது. ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்ட 97,373 வேலைகள் இந்த ஆண்டு மொத்தமான 994,048 இனை கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 72 சதவிகிதம் அதிகமாகக் கொண்டுவந்துள்ளது.

ஊதிய பட்டியல்களை தயாரித்து கொடுக்கும் ADP நிறுவனம் புதனன்று தனியார் நிறுவனங்கள் மொத்தத்தில் ஜூலை மாதம் 371,000 வேலைகளை தகர்த்ததாகவும், இது "குறிப்பான முன்னேற்றம்", ஏனெனில் கடந்த அக்டோபரில் இருந்து இது குறைவான எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது. ஆனால், "மொத்த பொருளாதார நடவடிக்கை உறுதியாகிவருகிறது என்ற சமீபத்திய குறிப்புக்கள் இருந்தாலும், சரிவு அதிகமான விகிதம் இல்லை என்றாலும் மொத்த பொருளாதார செயற்பாட்டிற்கு பின்னே வரும் வேலைவழங்குதல் இன்னும் பல மாதங்களுக்கு குறைந்துதான் இருக்கும்," என எச்சரித்துள்ளது.

முழு வேலைநீக்கங்களை தவிர, தொழில்வழங்குனர்கள் ஊதியக் குறைப்புக்களையும் (பெருநிறுவனங்கள் 20 சதவிகிதம் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது) மற்றும் குறைந்த பணி நேரங்களையும், கட்டாய விடுப்புக்களையும் (மற்றும் ஒரு 16 சதவிகிதம் என்று அதே ஆய்வு கூறுகிறது) செயல்படுத்தியுள்ளனர். இவற்றின் மொத்த பாதிப்பு தொழிலாள வர்க்கத்தின் மீது பேரழிவு தரக்கூடியதாக உள்ளது. செவ்வாயன்று தொழிற்துறை ஜூன் மாதம் தனிப்பட்ட வருமானம் 1.3 சதவிகிதம் குறைந்து, நான்கு ஆண்டுகளில் இது மிகப் பெரிய சரிவு என்று கூறியுள்ளது.

இதையும் விட மோசமான நடவடிக்கை தொழிற்துறையின் Employment Cost Index எனப்படுவதாகும். இதில் சுகாதார நலன்களும் 401(k) கட்டணங்கள் மற்றும் ஊதியங்களும் அடங்கும். இது தனியார், அரசதுறை அனைத்து தொழிலாளர்களுக்கும் 1.8 சதவிகிதம் உயர்வு என்று 2009 இரண்டாம் காண்டில் என்று காட்டுகிறது. முந்தைய ஆண்டு நுகர்வோர் விலைகள் ஏற்றத்தைவிட மிகக் குறைவாக இருந்ததுடன் இது ஒப்பிடத்தக்கது.

தனியார் துறைத் தொழிலாளர்களுக்கு உயர்வு 1.5 சதவிகிதம்தான். இது 1980ல் அரசாங்கம் இப்புள்ளிவிவரங்களை சேகரிக்க தொடங்கியதில் இருந்து மிகக் குறைவான ஆண்டு உயர்வாகும். தனியார் பிரிவுத் தொழிலாளர்களுக்கு நலன்கள் குறிப்பாக பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. ஆண்டு விகிதத்தில் இது 1 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் உயர்ந்துள்ளது. இதன் பொருள் தொழிலாளர்கள் மிக அதிகமாக உயர்ந்திருக்கும் சுகாதார பாதுகாப்பு செலவீனங்களின் முழுச்சுமையையும் ஏற்கின்றனர் என்பதாகும். அது 2008ல் 10.6 சதவிகிதம் உயர்ந்தது.

செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் வருமானங்கள் மற்றும் நுகர்வோர் செலவினங்களில் நீண்ட கால வெகுஜன வேலையின்மையின் விளைவுகளை சுட்டிக் காட்டியுள்ளது. 1980களின் ஆரம்ப ஆண்டுகளில் ஏற்பட்ட மந்த நிலையின்போது தங்கள் வேலைகளை இழந்த தொழிலாளர்களின் நீண்டகால வருமானங்கள் (அதுதான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தற்போதையது வரும் வரை ஆழ்ந்த சரிவாக இருந்தது) வேலைநீக்கத்திற்கு முந்தைய அளவிற்கு மீளவேயில்லை என்று கண்டறிந்துள்ளது.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசரியர் Till von Wachter நடத்திய ஆய்வு ஒன்று, "10, 15 ஆண்டுகளுக்கு பின்னர் பெரும்பாலனவர்கள் சராசரியாக அவர்களுடைய பழைய ஊதியத் தரங்களுக்கு மீளவில்லை என்று கூறியது. அவர்களுடைய வருமானங்கள் பொதுவாக பணிநீக்கத்திற்கு முன்பு இருந்ததைவிட 15 முதல் 20 சதவிகிதம் குறைவாகவே இருந்தன என்ற முடிவிற்கும் அவர் வந்தார்.

இப்படி வேலைகள், வருமானங்களில் சரிவு, நுகர்வோர் பொருட்கள் செலவின்மீது பேரழிவு தரக்கூடிய பாதிப்புடன் உண்மையான உற்பத்தியில் கணிசமான ஏற்றம் என்பதற்கான நிலையை குறைத்துவிடும். நிதியச் சந்தைகளின் ஒட்டுண்ணித்தன, சமூக அளவில் பிற்போக்கான செயற்பாடுகளுக்கு எதிரிடையான வகையில் இது இருக்கும். அமெரிக்க பொருளாதாரத்தின் மிகப் பெரிய பிரிவான சேவைத்துறை (Service sector), ஜூன் மாதம் சரிந்தது என்று Institute for Supply Management உடைய புதன்கிழமை வெளிவந்த அறிக்கை கூறுகிறது.

ISM குறியீடு, சுருங்கும், பெரிதாகும் பொருளாதாரத்திற்கு இடையே 50 புள்ளிகள் எல்லையை கொண்டது. 47ல் இருந்து 46.4 க்கு ஜூன் மாதம் குறைந்தது. இது 50க்கு குறைவாக இருக்கும் தொடர்ச்சியான பத்தாவது மாதம் ஆகும். உற்பத்தி செயற்பாடுகள் 0.4 சதவிகிதம் அதிகமாயின. ஆனால் அதில் பெரும்பாலானது எண்ணெய் சுத்திகரிப்பு பொருட்களின் அதிக விலையினால் ஏற்பட்ட விளைவு ஆகும்.

வீடுகள் சந்தையை பொறுத்தவரையில், பெரிதும் அதிகமாக இருந்த நிதிய ஊகம் சரிவை ஊக்குவித்த நிலை இருந்த துறையில், வீடுகள் விலை சரிவு சற்று குறைந்த தன்மையை காட்டியது. புதிய வீடுகளின் விற்பனை அதைச் சரி செய்துவிட்டது. ஆனால் நீண்ட கால கண்ணோட்டம் என்பது பேரழிவு என்றுதான் இப்போது காணப்படமுடியும். Deutsche Bank உடைய ஆய்வு ஒன்று புதனன்று வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் சந்தையில் தங்கள் வீட்டின் மதிப்பை விட கடன் உடையவர்களின் சதவிகிதம் இந்த ஆண்டு மார்ச்சில் இருந்த 26 சதவிகிதத்தில் இருந்து 2011 ல் 48 சதவிகிதமாக உயரும் என்று கூறுகிறது. வேறுவிதமாக கூறினால் அமெரிக்க வீட்டு சொந்தக்காரர்களில் பாதிப் பேருக்கு மேல் "நீரில் மூழ்கியுள்ளனர்."

ஒபாமாவும் அவர் குழுவினரும் மீட்சி பற்றி பெருமிதத்துடன் பேசுகையில், அவர்கள் பெரும்பாலான அமெரிக்க மக்கள் பற்றிப் பேசவில்லை. அவர்கள் பேசுவது அவர்களின் உண்மை எஜமானர்களாக உள்ள வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் இலாப வகைக்கான மீட்பு பற்றியதாகும்.

அமெரிக்க வரலாற்றில் முந்தைய நிர்வாகங்கள் எதையும் காட்டிலும், ஒபாமா நிர்வாகம் வெளிப்படையாக வர்க்க அடித்தளத்தை கொண்டுள்ள பொருளாதார கொள்கையை கடைப்படிக்கிறது. டிரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகள் மற்றும் பிற நிதிய நிறுவனங்களுக்கு அள்ளிக் கொட்டிய பின்னர், நிர்வாகம் இப்பொழுது சமூகப் பாதுகாப்பு, Medicare, Medicaid என்று வரும்போது சிக்கனத்தின் சிறப்புக்கள் பற்றியும் "நிதியக்கட்டுப்பாட்டின்" நலன்கள் பற்றியும் அறிவிக்கிறது. இவற்றைத்தான் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் ஓய்வு பெற்றவர்களும் நம்பியிருக்கின்றனர்.

நிதிய உயரடுக்கு சூறையாடிய பரந்த நிதிகளுக்கும் பெயரளவிற்கு தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்கப்படும் பணத்திற்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடு ஒபாமா இந்தியானாவில் எல்கர்ட் என்னும் இடத்திற்கு பயணித்தபோது நன்கு புலனாயிற்று. இந்த பொருளாதார சரிவினால் சேதமுற்றுள்ள நகரத்தில், வேலையின்மை 16.8 சதவிகிதம் உள்ளது. அவர் 25 மாநிலங்களில் படர்ந்திருக்கும் அமைப்புக்களான GM க்கும் பிற நிறுவனங்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் மூலம் வருங்கால மின்சார காருக்கான பாகங்களை தயாரிக்க 2.4 பில்லியன் டாலர் கொடுத்தார். இது கருவூலத்தாலும் மத்திய அரசின் மத்திய வங்கியாலும் வோல் ஸ்ட்ரீட் தன்னலக்குழுவின் இலாபங்களையும் மேலதிக கொடுப்பனவுகளையும் பெறுவதற்காக உறுதி கொடுக்கப்பட்ட பணத்தில் சரியாக ஆயிரத்தில் ஒரு பகுதியாகும்.

அரசாங்கக் கொள்கையின் ஒவ்வொரு கூறுபாடும், வங்கிப் பிணை எடுப்பில் இருந்து சுகாதாரப் பாதுகாப்பு முறை மறுகட்டமைப்பு என்பது வரை, இதே வர்க்க நோக்கத்திற்குத்தான் உதவுகிறது. அதாவது ஆளும் உயரடுக்கின் செல்வம் மற்றும் இலாபங்களை அமெரிக்க மக்களின் பெரும்பாலான மக்களின் இழப்பில் உயர்த்துவதே. பெருவணிகத்தின் செய்தித்தொடர்பாளர்களால் பாரட்டப்படும் "மீட்பு" உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களில் நிரந்தரச் சரிவு ஆகும். அதேபோல் ஒரு சமூகப் பாதுகாப்பு வலையில் எஞ்சி நிற்பதும் அழிக்கப்படுவதின் அடையாளம் ஆகும். இதுதான் ஒபாமா நிர்வாத்தின் முழு உணர்வுடன்கூடிய, வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டிருக்கும் நோக்கம் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved