World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israeli election exposes social and political crisis

சமூக, அரசியல் நெருக்கடிகளை இஸ்ரேலியத் தேர்தல் அம்பலப்படுத்துகிறது

By Chris Marsden
12 February 2009

Back to screen version

இஸ்ரேலின் பொதுத் தேர்தல், ஆளும் கடிமாக் கட்சி எதிர்பாராமால் இன்னும் கூடுதலான வலதுசாரி லிகுட்டை தோற்கடித்தவுடன் அரசியல் பேர சுற்றுக்களைத் தொடக்கியுள்ளது.

வெளியுறவு மந்திரி Tzipi Livni தலைமையில் இருக்கும் கடிமா தேர்தலில் முதலிடத்தைப் பெற்றது; இஸ்ரேலிய பாராளுமன்றமான Knesset ல் பென்ஜமின் நேதன்யாகு தலைமையிலான லிகுட் பெற்ற 27 உடன் ஒப்பிடும்போது 28 இடங்களைப் பெற்றது. இரண்டுமே கூட்டணி ஆட்சியை அமைக்க விரும்புகின்றன; அதற்கு 120 இடங்கள் உள்ள பாராளுமன்றத்தில் 60 இடங்களுக்கு மேல் பெரும்பான்மை என்பது வேண்டும். ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ், லிவ்னி அல்லது நேதன்யாகு இருவரில் கூட்டணி அமைக்கும் திறனை அதிகமாகக் கொண்டுள்ளவர் என்பதை நிர்ணயிக்குப் பொறுப்பைக் கொண்டுள்ளார்.

இறுதி முடிவு உறுதியாகக் கணிக்கப்பட முடியாதது ஆகும்; வாக்குகளில் 99.7 சதவிகிதம் எண்ணி முடித்தபின் வலது சாரி அல்லது தேசிய கட்சிகள் முகாம் 63-64 இடங்களைப் பெறக்கூடும் என்றும் மைய-இடது என அழைக்கப்படுவது 56-57 இடங்களைப் பெறக்கூடும் என்றும் தெரிகிறது. இன்னும் 150,000 முறையான வெளியில் இருந்து போடப்படும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன; இதில் முக்கியமாக இராணுவவீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரக அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் இறுதிப் பட்டியல் பெப்ருவரி 18 அன்று வெளியிடப்படும்; ஆனால் வீரர்கள் பொதுவாக வலதுசாரிக் கட்சிகளுக்குத்தான் வாக்களிப்பர்.

இத்தேர்தல் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் பல ஊழல்களை எதிர்கொண்டதை அடுத்து இராஜிநாமா செய்ததை ஒட்டி வந்துள்ளது; அவருக்குப் பின் கடிமாவில் தலைவரான லிவ்னி ஒரு கூட்டணி அமைக்க முடியாத நிலையில் இவ்வாறு தேர்தல் நடந்துள்ளது.

எந்தக் கூட்டணியிலும் ஆட்சிப் பொறுப்பு எவருக்கு என்று நிர்ணயிக்கப்போவது மீகத் தீவிர வலதான அவிக்டர் லிபர்மன் தலைமையில் உள்ள Israel Beiteinu ஆகும், இதை இரு கட்சிகளும் சுற்றி வளைக்க முயல்கின்றன. இஸ்ரேல் பெய்டெய்ன்னு, கடிமா மற்றும் லிகுட்டினால் அமைக்கப்படும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் எப்படிப் பார்த்தாலும் முக்கிய நபராக இருப்பார்.

மற்றும் ஒரு உறுதியான அரசியல் நிகழ்வு வரவிருக்கும் ஆளும் கூட்டணி ஒரு இராணுவவாத செயற்பட்டியலை பொருளாதாரச் சிக்கனத்துடன் இணைத்து நடத்தும் என்பதாகும்.

தேர்தல் முடிவு இஸ்ரேலை பீடித்துள்ள ஆழ்ந்த அரசியல் சமூக நெருக்கடி ஆகியவற்றின் வெளிப்பாடு ஆகும். உத்தியோகபூர்வ அரசியலில் கணிசமான வலதிற்கு மாற்றம் நடந்திருப்பதற்கு இது சான்றாக உள்ளது; இது பெரும்பாலும் தெளிவாக இஸ்ரேலின் சிக்கல் வாய்ந்த வாக்களிப்பு முறையில் உள்ள சதவிகித அடிப்படையில் காணப்படுகிறது.

வாக்குகளில் லிகுட்டின் பங்கு 2006ல் 8.9 சதவிகிதம் என்பதில் இருந்து இத்தேர்தலில் 21 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. யிஸ்ரேல் பெய்டினு (வலதுசாரிக் கட்சி) பதிவு செய்த மற்றொரு பெரிய வெற்றி, 8.9ல் இருந்து 12 சதவிகித அதிக வாக்குகளை ஒட்டி லிகுட் அதன் தீவீர வலது போட்டிக் கட்சிக்கு வாக்குகளை இழந்திருக்காவிட்டால் தெளிவான வெற்றி பெற்ற கட்சி என்று போயிருக்கும்.

வலது சாரி மற்றும் தீவிர வலது சாரிக் கட்சிகளின் வளர்ச்சி இன்னும் பொதுவான முறையில் அரசியல் வண்ணப்பட்டையில் மற்றும் ஒரு பொது மாற்றத்தின் தீவிர வெளிப்பாடு ஆகும். 1 சதவிகித வாக்கு ஆதரவு உயர்ந்துள்ள நிலையில், கடிமா எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது; ஏனெனில் இது தொழிற் கட்சி மற்றும் மெரெட்ஸ் கட்சிகளில் இருந்து வாக்காளர்களை ஈர்த்தது; அவை லிகுட் மற்றும் யிஸ்ரேல் பெய்டினு அடங்கிய வலது முகாம் தடுக்கப்படும் வகையில் லிவினால் வாக்குகள் கோரப்பெற்றன.

தொழிற் கட்சி சரிவைச் சந்தித்து யிஸ்ரேல் பெய்டினுவால் தள்ளப்பட்டுவிட்டது. அதன் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 19 சதவிகிதத்தில் இருந்து 13 முதல் 15க்கு இடையே என விழுந்துள்ளது. வாக்குகளில் தொழிற்கட்சியின் பங்கு 15ல் இருந்து 10 சதவிகிதத்திற்கு குறைந்துவிட்டது; தொழிற்கட்சிக்கு இடது என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் கட்சியான மெரெட்ஸ், முன்பு பெற்றதை விட 1 சதவிகித வாக்கைத்தான் இழந்து, நெசட்டில் மூன்று இடங்களை மட்டும் கொண்டுள்ளது.

செய்தி ஊடகம் பொதுவாக இதை "இடதின் சரிவு" என்று கூறுகிறது --அதாவது பாலஸ்தீனியர்களுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பத் தயாராக இருப்பவர்கள் என; ஆனால் அத்தகைய அடைமொழி ஒரு பொருளற்ற செயல் ஆகும். முக்கியத்துவத்தை லிபர்மன் அடைந்ததும் நேதன்யாகு, லிகுட்டிற்கான ஆதரவு வளர்ச்சி இவற்றிற்கான தளம் இஸ்ரேலின் 2006ம் ஆண்டு லெபனான் மீதான முதல் தாக்குதல்கள் மற்றும் சமீபத்தில் காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றில் இருந்தது.

காசா மீதான தாக்குல் லிவ்னியால் தூண்டிவிடப்பட்டது; தொழிற் கட்சித் தலைவர் எகுட் பரக் அவருடைய பாதுகாப்பு மந்திரியாக பணியாற்றினார். லெபனான் போருக்கு ஆதரவைக் கொடுத்தது போலவே மெரட்ஸும் ஆதரவை இதற்குக் கொடுத்தது. வெளியேறிச் செல்லும் அரசாங்கத்தை நேதன்யாகு பாராட்டினார்; காசாமீது தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதை பற்றித்தான் குறைகூறினார்; "இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் IDF வீரர்கள் பணியை முடிக்க முடியாமல் அது செய்துவிட்டது" என்றார்.

லிபர்மன்னின் முக்கிய பிரச்சார கோஷமான "விசுவாசம் இல்லையேல், குடியுரிமை இல்லை" என்பது அரபு இஸ்ரேலியர்களிடம் கோரப்பட்டது ஆகும்; மக்கட்தொகையில் அவர்கள் 20 சதவிகிதம் உள்ளனர்; நாட்டிற்காக விசுவாச உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது வாக்களிக்கும் உரிமை இழக்கப்பட நேரிடும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கான முன்னோடி காசா பிரச்சாரத்தின்போது ஏற்பட்டது; அப்பொழுது இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு இஸ்ரேலிய அரபு கட்சிகளை கடிமா, லேபர் இரு கட்சிகள் உதவியுடனும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த முடியமல் தடைசெய்தது. இது பின்னர் தலைமை நீதி மன்றத்திற்கு முறையீடு செய்த பின்னர் அகற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கை "நெறியனதுதான்" என்று நேதன்யாகு விளக்கினார்; அதே நேரத்தில் லிவ்னி இப்பிரச்சினையை மறைமுகமாக அணுகி இஸ்ரேலியக் குடிமக்கள், அரேபியர்கள் உட்பட அனைவரும் இராணுவ அல்லது தேசியப் பணிக்கு கட்டாயமாக உட்பட வேண்டும் என்று கூறினார்.

தேர்தல் பிரச்சாரம் முழுவதும் யிஸ்ரேல் பெய்டினுவுடன் கூட்டணி இருக்காது என்று கூற பரக் மறுத்துவிட்டார்.

தேர்தலுக்குப் பின்னர் Jerusalem Post "யிஸ்ரேல் பெய்டினு லிகுட்டை விட இயற்கையான பங்காளி, லிபர்மன்னுடைய கட்சி உண்மையில் வலது சாரி முகாமில் இல்லை" என்று கடிமா அதிகாரி ஒருவர் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. மேற்கோளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "இரு நாடுகள் தீர்வு என்னும் பிரச்சினையில் அவர்கள் சரியாக இல்லை. அவர்கள் தீர்விற்கு ஆதரவு கொடுக்கின்றனர், ஆனால் நிலப்பகுதி மாற்றிக் கொள்ளுவதை விரும்புகின்றனர்... லிபர்மன் ஒரு நடைமுறைவாதி; அவர் உறுதியாகக் கூட்டணியில் இருக்கலாம்."

லிபர்மன்னின் "நிலப் பரிமாற்றம்" என்பது இனப் படுகொலைக் கொள்கை ஆகும் --இஸ்ரேலின் எல்லைகளை மாற்றி மேற்கு கரையில் இருக்கும் சட்டவிரோத குடியிருப்புக்களையும் இணைத்துக் கொள்ளுதல்; அதே நேரத்தில் இஸ்ரேலிய பகுதிகளை அதிக அரபு மக்கள் தொகை இருக்கும் குறைக்கப்பட்ட பாலஸ்தீன நாட்டிற்குள் தள்ளிவிடுதல் என்பதே அது.

இஸ்ரேலை நிறுவிய தொழிற்கட்சியின் சரிவு, பெரும் வரலாற்று, அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. சியோனிசத்தின் தேசியத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே தாராள அல்லது சமூக ஜனநாயக் கொள்கைகள் மற்றும் பாலஸ்தீனப் போரில் சமாதான தீர்வைக் காண்பது என்பது தொடரமுடியாத செயல் என்பதற்கு இது ஒரு நிரூபணம் ஆகும். போருக்கு ஆதரவு மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கு தளம் என்றவிதத்தில் தொழிற்கட்சி உறுதியாகக் காணப்படுகிறது; இதையொட்டி Ha'aretz கட்டுரையாளரான Doron Rosenblum திகைப்புடன் எழுதினார்: "ஒன்று தெளிவாகிறது. டேவிட் முகாம் பேச்சுக்கள் முறிந்தபின், தொழிற் கட்சி, எகுட் பரக்கின் ஊக்கத்தையடுத்து, மிகத் திறைமை வாய்ந்த, ஊக்கம் நிறைந்த கட்சியாக மாறி வலதுசாரி செயல்திட்டத்திற்கு அனைத்து நடைமுறை விவகாரங்களிலும் ஆதரவு கொடுத்து வருகிறது; குடியேற்ற விரிவாக்கத்தில் இருந்து சமாதான பேச்சுவார்த்தைகள் நிராகரித்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தல் அனைத்தும் இதில் அடங்கும்."

இத்தேர்தல் Pensioners Party போன்ற எதிர்க்கட்சிகள் கிட்டத்தட்ட சரிந்துவிட்டதையும் கண்டுள்ளது; 2006ல் அதற்கு 7 இடங்கள் இருந்தன; பசுமை இயக்கம்-மெய்மட் நிலையும் அப்படித்தான். இரண்டும் மொத்த வாக்குகளில் 1 சதவிகிதத்தைத்தான் பெற்றன; ஒரு நெசட் இடம் பெறுவதற்கு முதல் கட்டமான 2 சதவிகிதத்தை பெற இயலவில்லை.

எதிர்பார்த்த அளவிற்கு லிபர்மன் வரமுடியவில்லை; 20 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இஸ்ரேலிய சமூகத்தைப் பீடித்துள்ள அரசியல் நெருக்கடியின் முக்கிய ஆதாயம் பெறுபவராக அவர் உள்ளார்; சமுதாயத்தின் நிலைமையோ சமூக அரசியல் அழுத்தங்கள் முற்போக்கான திசையில் செல்ல முடியாமல் உள்ள தன்மையைக் கொண்டுள்ளது.

யிஸ்ரேல் பெய்டினுவின் ஆதரவுத் தளம் 1.25 மில்லியன் ரஷ்ய யூதர்களிடம் உள்ளது. மிக அதிகம் படித்த, மதசார்பற்று இருக்கும் இவர்கள் குறைந்த வேலை வாய்ப்புக்கள், வறுமை, பிரிவினை ஆகிவற்றைத்தான் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதையொட்டி வரும் உணர்வுகளை லிபர்மன் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளார்; பொதுப்பணித் திட்டம் வேலையின்மையை அகற்றத் தேவை எனக் குரல் கொடுத்துள்ளதுடன், தன்னை "தொழிலாள வர்க்க ஆடவர், பெண்டிர் என்று நாட்டைப் பற்றிக் கவலைப்படுபவர்களுக்காக வாதிடுபவர்" என்றும் "எந்த நலனும் திரும்பப் பெறாமல் நாட்டிற்கு தியாகம் செய்யுமாறு இவர்கள் கோரப்படுகின்றனர்" என்றும் அவர் கூறினார்.

ஆனால் இப்படி அவர் இஸ்ரேலின் சமூகத் தீமைகளுக்கு அரேபியர்களை பலிகடா ஆக்குவது பரந்த ஆளவில் ஆதரவைப் பெறத் தொடங்கிவிட்டது; மிகவும் உளைச்சலைக் கொடுக்கக்கூடிய வகையில் இதில் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கும் இளைஞர்கள் உள்ளனர்; அவர்களும் வறுமை மற்றும் வறிய வேலையின்மை நிலையைத்தான் எதிர்கொள்ள உள்ளனர்.

இஸ்ரேலுக்குள் இத்தகைய வலதசாரி கணிப்புக்களை எதிர்ப்பவர்கள், கடிமா, தொழிற்கட்சி அல்லது மெரெட்ஸ் ஆகியவை லிகுட் மற்றும் யிஸ்ரேல் பெய்டினுக்கு மாற்று என்பதை நிராகரிப்பவர்கள் அரசியல் அளவில் வாக்களிப்பு இழந்துள்ளனர்.

2006 ல் மிகக் குறைவான வாக்குப் பதிவில் இருந்து தற்பொழுதைய வாக்குப் பதிவு செய்தவர் எண்ணிக்கை 2 சதவிகிதம் உயர்ந்ததை செய்தி ஊடகம் பெரிதும் பேசியுள்ளது; ஆனால் இதன் பொருள் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் --முக்கியமாக இளைஞர்கள், மதசார்பற்ற யூதர்கள், அரபு இஸ்ரேலியர்கள் ஆகியோர் வாக்களிக்கவில்லை என்பதுதான். இந்தப் பரந்த அரசியல் விரோதப் போக்கு எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அதற்கு நெறித்தன்மை பற்றிய ஒரு நெருக்கடியைக் கொடுக்கும்.

ஜெரோல்ட் கெசல் மற்றும் பீரே க்லோசெண்ட்லர் ஆகியோர் Inter Press Service ல் எழுதியிருப்பது: "சில அரசியல் பகுப்பாய்வாளர்கள் இந்த முறை செயல்படாத தன்மைக்கு அருகில் வந்துவிட்டதோ என்பது பற்றிப் பெரும் கவலை கொண்டுள்ளனர். மொத்த மக்கள் வாக்குகளில் 25 சதவிகிதத்திற்கும் குறைவாக பெற்ற ஒரு பிரதம மந்திரியின் தலைமையில் இஸ்ரேல் இயங்கக்கூடும் என்பது நடைமுறையாகலாம்."

Ma'arive TM Ben Kasput எழுதியது: "இந்த அரசாங்கத்திற்கு இடர்பாடுதான்; இஸ்ரேலுக்கும் இடர்பாடுதான். நேதன்யாகு அல்லது அவருடைய தகுதிகளினால் அல்ல; இருக்கும் முறையினால்; இருக்கும் தேக்க நிலையினால்; மேலே செல்ல முடியாத பாதைத்தடுப்பினால்."

Yediot Aharonot TM ahum Barnea குறிப்பிடுவது: "அரேபியப் பிரிவில் 54 சதவிகிதம்தான் நேற்று வாக்களித்தது.... வாக்களிப்பில் பங்கு பெறுதலில் சரிவு என்பது நாட்டில் இஸ்ரேலிய அரேபியர்களின் பிணைப்பு குறைவதைக் காட்டுகிறது; இந்தப் போக்கு ஆபத்தானது."

இத்தேர்தல் "பாதுகாப்புப் பிரச்சினை" என்று வாடிக்கையாகக் குறிக்கப்படும் தன்மையினால் பிரத்தியேக ஆதிக்கம் கொண்டிருந்தது. உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கும் இஸ்ரேல் மீது எப்படி இருக்கும் என்று அதிகம் விவாதிக்கப்படவில்லை. ஆயினும்கூட இஸ்ரேலிய சமூகத்தில் இன்று பெரும் வெடிப்புத் தன்மை உடைய உறுதிகுலைக்கும் காரணி சமூகத்தின் ஏற்பட்டுள்ள பெரும் பிளவின் பரப்பு ஆகும்.

Business Week செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இஸ்ரேலில் இருக்கும் வருமான இடைவளி "எந்த மேலை நாட்டிலும் இல்லாத அளவிற்குப் பரந்துள்ளதாகும்" என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்த மக்கட் தொகையில் இஸ்ரேலிய மில்லியனர்கள் உலகச் சராசரியைவிட இருமடங்கு உள்ளனர். இதற்கு மாறாக இஸ்ரேலியர்கள் 1.6 மில்லியன் பேரில் 7 மில்லியன் மக்கள் வறுமையில் உள்ளனர்; இதில் 800,000 குழந்தைகளும் அடங்கும் --அதாவது மூன்றில் ஒரு பங்கு. இஸ்ரேலிய அரபுக் குடும்பங்களில் 42 சதவிகிதம் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்; தொழிலாளர் மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் வறுமையில் உள்ளனர்.

இது இன்னும் மோசமாகத்தான் போகும். கடந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேலின் பொருளாதார வளர்ச்சி ஒரு ஸ்தம்பித்த நிலையை அடைந்தது; இவ்வாண்டு நாடு மந்த நிலையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பெரிதும் நம்பியிருக்கும் ஏற்றுமதிகள் 20 சதவிகிதத்திற்கும் மேலாகச் சரிந்துள்ளன; தொழில்துறை உற்பத்தி 6 சதவிகிதம் குறைந்துள்ளது. இஸ்ரேலின் தொழில்துறை ஏற்றுமதியில் 40 சதவிகிதத்திற்கும் மேலானவற்றில் இடம் கொண்டுள்ள உயர் தொழில்நுட்ப தொழில்களில் ஆயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. வேலையின்மை 2009 இறுதிக்குள் 5.9 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு பெரிய கட்சிகளும் வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் பில்லியன் கணக்கில் பணத்தை கொடுப்பதற்குத் தயாராக உள்ளன; நேதன்யாகு உயர்மட்ட சம்பாத்தியம் உடையவர்களின் வரிகளைக் குறைக்க விரும்பி, உயர்மட்ட பெருநிறுவன வரிவிதிப்பையும் 27 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் எனக் குறைக்க விரும்புகிறார். எந்தக் கூட்டணி இறுதியில் அமைக்கப்பட்டாலும், அது பொருளாதார, சமூக நடவடிக்கைகளை சுமத்தும், அது நூறாயிரக்கணக்கான மக்களை வறுமையில் ஆழ்த்தும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved