World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama's 100 days

ஒபாமாவின் 100 நாட்கள்

By Tom Eley
29 April 2009

Back to screen version

ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட்டின் புகழ் பெற்ற "நூறு நாட்களுக்கு" பின்னர், ஒரு புதிய அமெரிக்க நிர்வாகத்தின் 100வது நாள், செய்தி ஊடகங்களை ரூஸ்வெல்ட் நிர்வாகத்துடன் ஒப்பிடுவதற்கு ஒரு தருணமாக மாற்றிவிட்டது --வழக்கமாக வரலாறு மற்றும் உண்மையின் இழப்பில் ஆகும். இந்த ஆண்டு அத்தகைய ஒப்புமைகள் நிறைய வந்துள்ளன; ஒபாமாவின் முதல் மாதங்கள் பெரு மந்த நிலைக்கு பின் காணப்படாத அளவிற்கு உலகம் தழுவிய பொருளாதார நெருக்கடியினால் ஆதிக்கம் பெற்றன என்பது ஓரளவிற்கு காரணமாகும்; இரண்டாவதாக ஒபாமாவின் தாராளவாத ஆதரவாளர்கள் ஒபாமாவை ரூஸ்வெல்ட்டின் சீர்திருத்தவாத புதிய பேரத்தின் நவீன பதிப்பை தொடக்கியவர் என்ற புகழைக் கொடுக்க முற்பட்டுள்ளனர்.

ஆனால் ஒபாமாவின் முதல் 100 நாட்கள் அவருடைய நிர்வாகத்தின் வலதுசாரித் தன்மையை தெளிவாக்கி, அது பணியாற்றும் வர்க்க நலன்களையும் தெளிவுபடுத்தியுள்ளன.

ஒபாமா பதவி ஏற்றவுடன் உலக சோசலிச வலைத் தளம், "அமெரிக்க முதலாளித்துவத்தின் வெளி முரண்பாடுகளின் பெருக்கமும் உள்நாட்டின் சமூக பிளவுகள் தீவிரமாதலும்" ஒபாமா பற்றிய போலிக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான மக்களின் பிரமைகளை தாமதமாக என்பதைவிட விரைவிலேயே மாற்றிவிடும்" என்று குறிப்பிட்டிருந்தது. (See: "On the eve of Obama's inauguration").

கருத்துக் கணிப்புக்கள் நம்பப்படலாம் என்றால், இன்னும் பல தொழிலாளர்களும் இளைஞர்களும் வாஷிங்டனில் இருந்து வரும் கொள்கையை எதிர்த்தாலும் ஒபாமா தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அவர் கொடுத்திருந்த உறுதிமொழியான "மாற்றத்தை" கொண்டுவந்துவிடுவார் என்ற நம்பிக்கையை விடவில்லை எனத் தெரிகிறது. ஆயினும்கூட மாற்றங்களின் விதங்கள் எப்படி இருந்தாலும்--அவையும் எதிர்பார்த்நதைவிட குறைந்த வியப்புத் தன்மையைத்தான் காட்டியுள்ளன-- சாராம்சம் அப்படியேதான் உள்ளது என்ற பெருகிய உணர்வுதான் மிஞ்சியுள்ளது.

வெளியுறவுக் கொள்கையில், ஒபாமா புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளின் உந்துதலான இராணுவ மற்றும் ஆக்கிரமிப்புத் தன்மையைத் தொடர்கிறார்.

ஈராக் போர் தொடர்கிறது, துருப்பு எண்ணிக்கைகள் கிட்டத்தட்ட மாறுதல் எதையும் பெறவில்லை. இப்பொழுது பாதுகாப்பு நிலைமை சரியத் தொடங்கியவுடன், உயர்மட்ட அமெரிக்கத் தளபதிகள் ஒபாமாவின் திட்டமான குறைந்த பட்சப் படைகளை திரும்பப் பெறுதல் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் ஒபாமா ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கியுள்ளது மட்டுமல்லாமல், சர்வதேச சட்டத்தை மீறிய வகையில் அதை அண்டை நாடான பாக்கிஸ்தானுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். இவருடைய பட்ஜேட் திட்டங்களில் வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான இராணுவச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு அடங்கியுள்ளது.

புஷ் ஆண்டுகளில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக விரோத கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிறுவன அமைப்புக்களை குறைக்கும் வகையில் ஒபாமா எதுவும் செய்யவில்லை.

அவருடைய நிர்வாகம் நீதிமன்றங்களில் குறுக்கிட்டு, மக்களுக்கு எதிராக இயக்கப்பட்ட அரசாங்கத்தின் மிகப் பெரிய ஒற்று நடவடிக்கைகள் பற்றி, அரசாங்க இரகசியத் தகவல்கள் என்று பூட்டிவிட்டது --இதை இன்னும் சிறந்த வகையில் கூறவேண்டும் என்றால், அமெரிக்க குற்றங்களான "அசாதாரண கடத்தல்களினால்" பாதிக்கப்பட்டவர்களுடைய முயற்சியான அத்தகைய நடவடிக்கைகளில் பங்கு பெற்றவர்கள் பொறுப்பு கூறவேண்டும் என்பதை தடுத்துவிட்டது.

புஷ் நிர்வாகத்தில் இருந்தவர்கள் மற்றும் உளவுத்துறை, இராணுவம் ஆகியவற்றில் இருந்து காவலில் இருப்பவர்கள்மீது உத்தரவிட்டு சித்திரவதை நடத்தியவர்கள் மீதான குற்றவிசாரணை நடவடிக்கைகள், "முன்னேறுவோம்" என்ற பெயரில் ஒபாமா எந்த விசாரணையையும் தடுக்கத்தான் முற்பட்டுள்ளார்.

இறுதியில் குவண்டநாமோ குடாவில் இருக்கும் கைதிகள் முகாமை மூடுவதாக ஒபாமா உறுதியளித்துள்ளாலும், அது இன்னும் திறந்துதான் இருக்கிறது; அதில் உள்ளவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் உள்ள வேறு அமெரிக்க இராணுவச் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையைத்தான் எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையில் ஒபாமா நிர்வாகம் நீதிமன்ற வழக்குகளில் தலையிட்டு ஆப்கானிஸ்தானத்தில் உள்ள அமெரிக்க முகாம்களில் உள்ள கைதிகளின் ஆட்கொணர்தல் உரிமையை மறுத்து, ஜனாதிபதி தனிப்பட்ட நபர்களை விரோதப் போரிடுபவர் என்று அறிவித்து கால வரையற்று சிறையில் அடைக்கும் "உரிமையை" நிலைநிறுத்தியுள்ளது; அவர்களுக்கு நீதித்துறை முறையீடு கிடையாது.

ஒபாமா நிர்வாகத்தின் வர்க்கச் சார்பு பொருளாதார நெருக்கடி பற்றி அது கொடுத்த விடையிறுப்பின் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சமூக நிலைமையில் விரைவான அரிப்பைப் பார்த்தனர்; இது மலைபோல் பெருகிய பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள் மற்றும் வீடுகள் மதிப்பு, ஓய்வுதிய சேமிப்புக்கள் ஆகியவற்றில் பலரும் சரிவினால் விளைந்தது ஆகும். தொற்று நோய் போல் பரவிய வீடுகள் முன்கூட்டி விற்கப்படல் என்பது இன்னமும் குறையாமல் தொடர்கிறது. பட்டினியும் வீடற்ற நிலையும் எங்கும் நிலவுகிறது. பல தசாப்தங்கள் பொது நல செலவினக் குறைப்புக்களுக்கு பின்னர் அரசாங்கத் திட்டங்கள் பாதுகாப்பு வலையை விடப் பயனற்றவை என்றுதான் காட்டிவிட்டன.

இந்தப் பேரிடருக்கு ஒபாமாவின் விடையிறுப்பு பொது நிதியில் இருந்து நூறறுக்கணக்கான பில்லியன்களை எடுத்து அவற்றை நிதியத் துறைக்கு கொடுத்தல் என்று ஆகிவிட்டது. இவருடைய நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புக்களுடைய மையக் குவிப்பு அதன் செல்வம், அதிகாரம் ஆகியவற்றை காக்கும் உறுதிப்பாட்டை வோல் ஸ்ட்ரீட்டிற்கு அவர் மறு உத்தரவாதம் செய்ததுதான்.

இத்தகவல் நன்கு அறியப்பட்டுள்ளது. அமெரிக்கச் சந்தைகளில் பங்குகளின் மதிப்பு ஏற்றம் பெற மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது எல்லாவற்றையும்விட கொழுத்த முதலீட்டாளர்கள் ஒபாமாவிடம் தாங்கள் இட்ட பணியைச் செய்யத் தயாராக இருக்கும் ஒரு ஜனாதிபதியை காண்கின்றனர் என்ற நம்பிக்கையை காட்டியுள்ளது.

பதவிக்கு வருமுன்பே, ஒபாமா புஷ் நிர்வாகத்தின் நெருக்கடி பற்றிய அணுகுமுறையின் வடிவமைப்பை ஏற்றார். அக்டோபர் மாதம் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையில் Troubled Asset Relief Program (TARP) இயற்றப்படுவதற்கு ஒபாமா தன் செல்வாக்கைப் பயன்படுத்தினார். ஜனாதிபதியாக வரக்கூடியவர் என்ற முறையில் அவர் காங்கிரஸை இரண்டாம் $350 பில்லியன் தவணைத் தொகை TARP க்கு கொடுக்க வலியுறுத்தினார். ஜனாதிபதி என்னும் முறையில் அவர் நிதி மந்திரியாக டிமோதி கீத்னரைத் தேர்ந்தெடுத்தார். நியூ யோர்க்கின் பெடரல் ரிசேர்வ் வங்கியின் தலைவர் என்ற முறையில் கீத்னர், வோல் ஸ்ட்ரீட் உயரடுக்குடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். நிதிய நெருக்கடி தாக்கியவுடன் அவர் புஷ் நிர்வாகததின் பிணை எடுப்புத் திட்டத்தை இயற்றிச் செயல்படுத்துபவர் ஆனார். ஒபாமா அவரை நியமனம் செய்தது வெள்ளை மாளிகையில் தங்களுடைய நண்பர் இருக்கிறார் என்பதை உறுதியாக உறுதி செய்த செல் ஆகும்.

கடந்த மாதம் கீத்னர் Public-Private Investment Program பற்றிய விவரங்களை அறிவித்தார்; இது அரசாங்கத்தின் பிணை எடுப்பின் அடுத்த கட்டம் ஆகும்; இதையொட்டி அரசாங்கம் உதவித் தொகைகள் அளிப்பதுடன் நிறைய இலாபங்களையும் ஒதுக்கு நிதியங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு வங்கிகளிடம் இருந்து நச்சு சொத்துக்களை மிகைப்படுத்தப்பட்ட விலைக்கு வாங்குபவர்களுக்கு வழங்கும்.

ரொக்கப் பணம் உட்செலுத்தப்பட்டது, கடன்கள், கடன்கள்மீதான உத்தவாதம் இவற்றிற்காக பெடரல் பிணை எடுப்பு வோல் ஸ்ட்ரீட் மீது $10 டிரில்லியனையும் அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இது $787 பில்லியன் ஊக்கத் தொகைப் போதி என்று அறிவிக்கப்பட்டது ஒபாமா செயலை அற்பமாக்குகிறது; ஆனால் மில்லியன் கணக்கான மக்களுடைய கஷ்டங்களைப் போக்க இவை ஏதும் செய்யாது.

இவ்விதத்தில் வரிப்பணத்தை வங்கிகளுக்கு கொடுத்தது அவை கடன் கொடுத்தலை தடையற்றுச் செய்யவும் முடியவிலலை, கடன் கொடுத்தலை எளிதாக உறுதியளித்தபடியும் செய்ய முடியவில்லை. மாறாக வங்கிகள் அரசாங்கம் கொடுத்த ரொக்கத்தை அப்படியே மூட்டை கட்டி வைத்துள்ளன; தவிர அதில் பெரும் பகுதியை பொருளாதாரச் சரிவு ஏற்படக் காரணமாக இருந்த பொறுப்பற்ற மோசடித்தன கொள்கைகளை இயற்றிய அதே நிர்வாகிகளுக்கு போனஸாகவும் கொடுத்துள்ளன.

உயர் வணிகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதன் நிதி பிரிவில் உள்ளவர்களுக்கும் பல மில்லியன் டாலர்கள் போனஸை அமெரிக்க இன்டர்நேஷனல் க்ரூப் (AIG) என்னும் காப்பீட்டு நிறுவனம் கொடுக்கிறது என்பது வெளிவந்து பிணை எடுப்பு பெற்ற அந்நிறுவனம் பற்றிய மக்கள் சீற்றம் பெருகிய நிலையில், தன்னுடைய "சீற்றத்தையும்" வெளிப்படுத்தியபிறகு ஒபாமா TARP நிதியத்தை வாங்கிய நிறுவனங்கள் வழங்கும் போனஸ் மீது அதிக வரி செலுத்த முற்பட்ட காங்கிரஸின் செயல்களுக்கு எதிராகவும் வந்தார்.

ஆயினும் கூட ஒபாமா, கார்த் தொழிலாளர்களின் ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டு மகத்தான வேலைக் குறைப்புக்கள், ஊதிய குறைப்புக்கள், நலன்கள் குறைப்புக்கள் சுமத்தப்பட வேண்டும் என்று கோருவதில் எந்த மன உளைச்சலையும் கொள்ளவில்லை. கார்த் தொழிலில் ஒபாமா குறுக்கீடு செய்தது நிதிய தன்னலக்கழுவின் நலன்களுக்காக வர்க்க போரை தீவிரமாகத் தொடரும் அவருடைய உணர்வைத்தான் நிரூபித்துள்ளது.

புதிய நிர்வாகத்தின் 100 நாட்களுக்கு பின்னர்தான் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒபாமா அவருக்கு முன்பு பதவியில் இருந்தவருடைய தொழிலாள வர்க்க- எதிர்ப்பு, ஜனநாயக-எதிர்ப்பு மற்றும் இராணுவவாதக் கொள்கைகளில் இருந்து எந்த மாறுதலையும் பிரதிபலிக்கவில்லை என்ற உண்மையை நேருக்கு நேர் அறிகின்றனர். இவருடைய பதவிக்காலம் ஏற்கனவே அரசாங்கத்தில், இருக்கும் இரு கட்சி முறையின் வடிவமைப்பிற்குள் தேர்தல்கள் மூலம் உண்மையான கொள்கை மாற்றம் வருவது இயலாது என்பதை நிரூபித்துவிட்டது; அதேபோல் ஜனநாயகக் கட்சிக்கு முறையீடு செய்வதின் மூலம் மாற்றமும் வராது என்பதையும் நிரூபித்துவிட்டது.

தொழிலாள வர்க்க மக்களுடைய நலன்கள் காக்கப்படுதல் தொழிலாள வர்க்கத்தின் பணிதான். அது தன்னுடைய வலிமையை சமூக, அரசியல் போராட்டத்திற்காக திரட்டி, இரு கட்சிகளின் ஆளும் உயரடுக்கின் செல்வாக்கில் இருந்து சுதந்திரமாக செயல்பட வேண்டும், சமூகத்தின்மீது நிதியப் பிரபுத்துவத்தின் மரணப்பிடியை உடைத்து தன்னுடைய சோசலிச மாற்றீட்டை, திவாலாகிவிட்ட முதலாளித்துவ முறைக்கு பதிலாக முன்வைக்க வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved