World Socialist Web Site www.wsws.org


Why did France resort to violence off the coast of Somalia?

சோமாலியா கடற்கரைக்கு அப்பால் பிரான்ஸ் ஏன் வன்முறையில் ஈடுபட்டது?

By Olivier Laurent
1 May 2009

Back to screen version

ஏப்ரல் 10ம் தேதி சோமாலிய கடற்கரையை ஒட்டி ஐந்து பிரெஞ்சுப் பிணைக் கைதிகளை Tanit படகில் வைத்திருந்தவர்களை மீட்க வன்முறையை பயன்படுத்தியதானது நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கம், பிரெஞ்சு பிணைக் கைதிகள் மற்றும் சோமாலிய கொள்ளையர்களின் உயிருக்கும், பிரெஞ்சு மற்றும் சோமாலிய மக்கள் கருத்திற்கும் கொண்டுள்ள இகழ்ச்சியைத்தான் நிரூபிக்கிறது.

இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி பிரெஞ்சு அராசங்கம் அதன் கொள்கையை ஒபாமா நிர்வாகத்துடன் இணைந்த விதத்தில் கொண்டு வந்துள்ளது; அதுவும் அமெரிக்க கப்பல் Maersk Alabama வையும் அதன் தலைமை மாலுமி ரிச்சார்ட் பிலிப்ஸையும் சோமாலிய கடற் கொள்ளையர்களை கைப்பற்றியதை மீட்க பெரும் வன்முறையைத்தான் பயன்படுத்தியது. ஏப்ரல் 7ம் தேதி அமெரிக்க கடற்படை ஸ்னைப்பர்கள் பிலிப்ஸை சிறை பிடித்திருந்த மூன்று கொள்ளையர்களை கொன்றனர்.

ஒரு 12.5 மீட்டர் நீளமுள்ள படகான டானிட் ஐ சோமாலிய கொள்ளையர்கள் ஏப்ரல் 4ம் தேதி ஏடென் வளைகுடாவில் பிடித்தனர். இந்தப் படகு ஆறு நாட்களுக்கு பின்னர் பிரெஞ்சு கமாண்டோக்களின் தாக்குதலுக்கு பின்னர் மீட்கப்பட்டது; இத்தாக்குதலில் இரு சோமாலிய கொள்ளையனும் டானிட் இன் தலைமை மாலுமியுமான பிளோரென்ட் லெமகோனும் பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் இறந்து போயினர்.

23ல் இருந்து 27 வயது வரை இருந்த மூன்று கடற்கொள்ளையர்கள், பிரெஞ்சு நடவடிக்கையின் போது கைப்பற்றபட்டவர்கள், கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது பிரெஞ்சு சிறைகளில் 2008ம் ஆண்டு சோமாலிய கடற்கரை அருகே Ponant, Carre d'As என்னும் வேறு இரு படகுகளில் இருந்த பிணைக்கைதிகளை பிடித்ததற்காக இருக்கும் 12 மற்ற கடற்கொள்ளையருடன் இவர்களும் சேர்கின்றனர்.

ஏப்ரல் 17ம் தேதி Rennes ல் இருக்கும் அரசாங்க வக்கீல் Hervé Pavy லெமகோன் பிரேதப் பரிசோதனை அவரைக் கொன்ற தோட்டா எங்கிருந்து வந்தது என உறுதியாகக் கூற முடியாத நிலையில் உள்ளதாக அறிவித்தார். ஆனால் இதற்கான விடை "படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும்", "மீட்கப்பட்டுள்ள கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை ஆய்வு செய்த பின்னரும்தான்" கிடைக்கும் என்று Hervé கூறினார்.

படகு மீண்டும் கைப்பற்றப்பட்ட பின்னர், "லெமாகோன் இறப்பு பிரெஞ்சுப் படைகளின் மூலமும் ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தை ஒதுக்க முடியாது" என்று பாதுகாப்பு மந்திரி Hervé Morin கூறினார். பிரெஞ்சு இராணுவம் நடத்திய செயல் "மிகவும் உகந்த தீர்வுதான்" என்று அவர் வலியுறுத்தினார். கொள்ளையர்களுக்கு தக்க கப்ப பணம் அளிப்பதாக பாரிஸ் கூறியது என்ற Morin, அது எவ்வளவு என்று குறிப்பிடவில்லை.

இந்த உண்மைகள் டானிட்டில் மூன்று இறப்புக்களுக்கு பிரான்ஸ் பொறுப்பு என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. லெமகோனைக் கொன்ற தோட்டா எங்கிருந்து வந்தாலும், தாக்குதலை தொடக்கும் முயற்சியும் அதையொட்டி அவருடைய உயிரை ஆபத்திற்கு உட்படுத்தியது முற்றிலும் பிரெஞ்சு அதிகாரிகளிடம்தான் உள்ளது. கொள்ளயைர்கள் தங்கள் அச்சுறுத்தலான பிணைக்கைதிகளை கொலை செய்ய உள்ளனர் என்று எந்தக் குறிப்பும் காட்டவில்லை. உண்மையில் அவர்களுடைய நலனுக்கு எதிராக அது இருந்திருக்கும்; ஏனெனில் பணம் இல்லாமல் தப்புவற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடையாது.

பிரெஞ்சு அதிகாரிகள் சோமாலியர்களின் உயிர்களை பற்றிக் கொண்டுள்ள இகழ்வுணர்வு வெளிப்படை; இது ஆபிரிக்க கொம்புப் பகுதியில் இருக்கும் சாதாரண மக்களிடையே பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மீதுள்ள வெறுப்பை அதிகரிக்கும்; அங்கு பிரான்ஸ் ஒரு குடியேற்ற சக்தியாக செயல்பட்டது, இன்னமும் தொடர்ந்து செயல்படுகிறது.

சோமாலியாவிற்கு வடமேற்கில் இருக்கும் Djibouti பிரான்ஸின் கடைசி ஆபிரிக்க குடியேற்றம் ஆகும்; பல ஆண்டுகள் சூயஸ் மற்றும் இந்தோ-சீனாவில் இருக்கும் பிரெஞ்சு குடியேற்றங்களுக்கிடையே இருக்கும் கடல் பாதைகளைக் கண்காணிக்கும் திறனில் முக்கியமாக இருந்தது. Djibouti 1977ல் தான் சுதந்திரம் பெற்றது; ஆனால் பிரான்ஸ் அங்கு இன்னமும் மிகப் பெரிய வெளிநாட்டு தளங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது; அதில் 2,900 துருப்புக்களும் ஒரு விமானத் தளமும் உள்ளது. 2002ல் இருந்து பிரான்ஸ் அமெரிக்கப் போட்டியையும் இங்கு எதிர்கொள்கின்றது; அது 1,800 இராணுவ வீரர்களையும் அங்கு கொண்டுள்ளது; அதைத்தவிர அரேபிய மொழியில் ஒலிபரப்பும் வானொலி நிலையத்தையும் கொண்டுள்ளது. ஜூன் 2008ல் பிரான்ஸ் அங்கு இருக்கும் துருப்புக்களுக்கு கூடுதலான விமானமும் கடற்படை உபகரணங்களும் கொடுத்தது.

இதுவரை பல ஆண்டுகளாக தீவிரமாக செயல்படும் சோமாலியக் கொள்ளைக்காரர்கள் எவரையும் கொல்லவில்லை; ஆனால் இந்த நிலை சமீபத்தில் பிரெஞ்சு, அமெரிக்க மற்றும் டச்சுப் பிரிவுகளின் "வலுவான செயல்களுக்கு" பிறகு மாறக்கூடும். பிரான்ஸின் தாக்குதல் ஆபிரிக்க கொம்புப் பகுதியில் வருங்கால பிணைக்கைதிகளின் உயிர்களை பெரும் ஆபத்திற்குத்தான் உட்படுத்தும்.

Lloyd's List எனப்படும் கடல்பிரிவு காப்பீட்டு வணிக ஏட்டில் வந்துள்ள பேட்டி ஒன்று இத்தகைய குருதி கொட்டும் உத்திகள் பற்றி கடல்பயண சமூகம் கொண்டுள்ள அவநம்பிக்கை, எதிர்ப்பு ஆகியவற்றைச் சுருக்கிக் கூறுகிறது. ஏடன் வளைகுடாப் பகுதியில் Lloyd's Register-Fairplay தகவல் நிலையத்தில் ஒரு வல்லுனராக இருக்கும் Jim Murphy முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள்--ஒதுக்குப் பகுதிகள், இராணுவ தொடர் கப்பல்கள், பாதுகாப்பு மற்றும் ஆயுதம் கொண்ட குழுவினர் என--சோமாலியாவில் அரசியல் உறுதிப்பாடு இல்லாத நிலையில் தோற்றுத்தான் போகும் என்று வாதிட்டுள்ளார்.

முன்னோடியில்லாத வகையில் போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படுவது, கடற் கொள்ளை இன்னும் இது போன்ற நடவடிக்கைகள் 2007, 2008க்கு இடையே 200 சதவிகிதம் அதிகரித்துள்ளன என்று International Maritime Bureau தெரிவிக்கிறது.

செய்தி ஊடகங்களில் பலவும் கொள்ளையர்கள் செயற்படும் சோமாலிய துறைமுகங்கள், Haradheere, Eyl போன்றவற்றை "கொள்ளையர் நிலவறை" என்று குறிப்பிடுகின்றன--இது வெளிநாட்டு இராணுவக் குறுக்கீட்டிற்கான வாய்ப்பை அளிக்கிறது. உண்மையில் இந்த துறைமுகங்கள் மொத்தத்தில் 32,000 குடிமக்களைத்தான் கொண்டிருக்கின்றன. இதில் மிக மிகச் சிறிய விகிதம்தான் கொள்ளையில் ஈடுபடுகிறது. பிரச்சினையைத் தீர்க்க இராணுவ வலிமை என்பது மற்றொரு குருதிப் பாதையைத்தான் ஏற்படுத்தும்.

சோமாலிய கடற்கரையில் வசிப்பவர்களுக்கு பெரும் சக்திகளின் கொள்கை பேரழிவு விளைவுகளைத்தான் கொடுத்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் டன் கணக்கில் நச்சு வீண்பொருட்களை இங்கு இறக்கியுள்ளன; ஐரோப்பிய, ஆசிய நாடுகள் மீன் வளங்களைச் சுரண்டுகின்றன; அதே நேரத்தில் எல்லாம் சுற்றுச் சூழலைக் காப்பதாக அவர்களுடைய நாட்டு நீர்ப்பகுதியில் மீன்பிடிக்கும் கால அவகாசத்தைக் குறைக்கின்றன.

இன்னும் பொதுவாக, சோமாலியாவின் சமூகப் பேரழிவு பெரும் சக்திகளின் மாறும் புவிசார் அரசியலில் இருந்தும் விளைகிறது; அதேபோல் இப்பகுதியில் ஸ்ராலினிச கொள்கையின் அவநம்பிக்கையினாலும் தோன்றுகிறது. 1977-78 ல் ஒகடென் பகுதியில் சோமாலியா நடத்திய போருக்குப் பின் இங்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது; அது இனவழியில் சோமாலியப் பகுதி ஆகும் ஆனால் எத்தியோப்பியாவுடன் இணைந்துள்ளது. பூசலின் போது சோவியத் ஒன்றியம் முதலில் சோமாலியாவிற்கு ஆதரவு கொடுத்தது, பின் கட்சி மாறி எத்தியோப்பியாவிற்கு ஆதரவு கொடுத்தது. இது சோமாலியாவிற்கு தோல்வியை கொண்டுவந்து, 1980ல் முகம்மது சியத் பாரேயின் சோமாலிய இராணுவ அரசாங்கம் நேட்டோவை நாட வைத்தது; இதையொட்டி IMF ன் பொருளாதாரக் குறுக்கீடும் வந்தது.

1980 களில் ஏற்பட்ட தொடர்ச்சியான பஞ்சங்கள், சோமாலியின் நோக்கங்களை பாரே ஒகடனில் கைவிட்டது, அவர் IMF தீர்மானித்த சிக்கனக் கொள்கைகளை ஏற்றது ஆகியவை அவருடைய ஆட்சிக்கு உள் ஆதரவை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இதன் பின்னர் பாரே அவருடைய அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டுப் போர் ஒன்றை எதிர்கொண்டார்; அது பல தேசிய, இனவழிக் குழுக்களால் வழிநடத்தப்பட்டது. கோர்ப்பசேவ் ஆபிரிக்காவில் சோவியத் நிதி உதவியை நிறுத்திய பிறகு அமெரிக்கவும் அதன் நிதிய ஆதரவை பாரிக்கு நிறுத்தியது; அப்பொழுதுதான் பாரேயின் ஆட்சி கவிழ்ந்தது.

1992-93ல் பிரெஞ்சு வெளிநாட்டுப் பிரிவு (French Foreign Legion) சோமாலியா மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு ஒத்துழைத்தது; நாட்டிற்கு உணவு அளிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இது நடத்தப்பட்டது என்று கூறப்பட்டது; அப்பொழுது நாட்டில் பஞ்சம் இருந்தது. அந்த நடவடிக்கை சோமாலிய மக்களின் எதிர்ப்பை வெளிநாட்டுப் படைகள் எதிர்கொண்டதால் முடிவிற்கு வந்தது; குறிப்பாக மோகாதிசுவில் அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்ட பூசலிற்கு பின்னர்.

தற்போதைய பிரெஞ்சு வெளியுறவு மந்திரியான பேர்னார் குஷ்னெர் அந்த நேரத்தில் "மனிதாபிமான உரிமை என்ற முறையில் குறுக்கீடு செய்தல்" என்பதற்கு ஆதரவு கொடுத்த வகையில் புகழ் பெற்றார். உலகம் முழுவதும் குஷ்னெர் புகைப்படங்கள் பல அரிசி சாக்கு மூட்டைகளை இறக்கி வைத்ததை வெளியிடப்பட்டது. "இரு மாதங்களுக்கு" சோமாலியா முழுவதும் உணவு அளிக்கத் தான் ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார். ஆனால் மோகாதிசு மக்களுக்கு மூன்று நாட்களுக்கு போதுமான உணவுதான் உண்மையில் வந்தது என்று பின்னர் தெரியவந்தது.

மனிதாபிமான குறுக்கீடு என்பது 1992ல் அறிவிக்கப்பட்ட நடவடிக்கை; இது இப்பகுதியில் ஏகாதிபத்திய செயல்கள் புதுப்பிக்கப்படுவதை நியாயப்படுத்ததான் உதவின; துருக்கிய பேரரசின் எஞ்சிய பகுதிகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பங்கு போட்டுக் கொண்டது, விருப்பத்தை சுமத்தியது என்று 19ம் நூற்றாண்டு கடைசியிலும் 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் ஐரோப்பா பலவிதங்களில் நியாயப்படுத்தியதைப் போல்தான் இதுவும் இருந்தது.

சோமாலிய மக்கள் நீண்ட காலமாக பாதுகாப்பு இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்; முடிவில்லாத ஏகாதிபத்திய தந்திர, திரித்தல் செயல்கள் உள்ளூர் மக்களுக்கும் இனக்குழுத் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருப்பதின் பாதிப்பைக் கொண்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமிய சக்திகளின் வலிமை அதிகரித்துள்ளது; இது 2006ல் இதன்மீது எதியோப்பிய படையெடுப்பைத் தூண்டியது. அதற்கு அமெரிக்கா ஊக்கம் கொடுத்தது, அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் கடற்படைகளும் உதவின. சர்வதேச ஊடகம், இத்தாக்குதல் "சமாதானம் கொண்டுவரும்" நடவடிக்கை என்று கூறியது.

எத்தியோப்பிய துருப்புக்கள் கடந்த ஆண்டு சோமாலியாவில் இருந்து திரும்பப் பெறப்பட்டது, சோமாலிய மக்களுக்கு அமைதியைக் கொண்டு வருவதற்கு முற்றிலும் மாறாக நாட்டில் எவ்வாறு ஏகாதிபத்திய செல்வாக்கு செலுத்தப்படும் என்று பழைய வினாவைத்தான் மீண்டும் எழுப்பியுள்ளது.

சக்திவாய்ந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் செயற்பாட்டில் உள்ளன ஏடென் வளைகுடா சர்வதேச வணிகத்திற்கு முக்கியமானது; ஐரோப்பாவிற்கும் பேர்சிய வளைகுடாவிற்கும் இடையே நடக்கும் எண்ணெய் வியாபாரத்தில் பெரும்பகுதிக்கு இதுதான் கடல்வழிப் பாதையாகும்; அதே போல் ஆசிய, ஐரோப்பிய வர்த்தக பொருட்களுக்கு இதுதான் பாதை. 2008ம் ஆண்டு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அதிகாரத்தின்கீழ் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வெள்ளை அறிக்கை (The Defvence White Paper) இப்பகுதியை பிரான்ஸிற்கு ஒரு சிறப்பான மூலோபாயப் பகுதி என்று அடையாளம் கண்டுள்ளது.

ஒவ்வொரு வல்லரசும் சோமாலியாவில் இவ்விதத்தில் பிணைக்கைதி நிகழ்ச்சியை பயன்படுத்தி தன்னுடைய இராணுவ, அரசியல் வலிமையை காட்டுகிறது ஒவ்வொரு சக்தியும் சாதாரண மக்களுடைய விதி பற்றி, சோமாலியராயினும் ஐரோப்பியராயினும், பொருட்படுத்தாத்தன்மையை நிரூபணம் செய்கிறது; ஏகாதிபத்திய நாடுகளுகளிடையே நடக்கும் போட்டியின் தன்னுடைய மிகஉயர் நிலைமையை பெருக்கிக்காட்டும் நம்பிக்கையில் இது நடைபெறுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved