World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Seven Days in May, 2009

மே 2009ல் ஏழு நாட்கள்

Patrick Martin
13 May 2009

Back to screen version

அமெரிக்க அரசு இயந்திரத்திற்குள் ஒரு பெருகிய நெருக்கடி உள்ளது என்பதை கடந்த வாரம் நடந்த பல தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகளுக்கு முழு விளக்கத்தை தருவது இன்னும் இயலாது; ஆனால் உத்தியோகபூர்வ வாஷிங்டனில் அரசியல் பதட்டம் அசாதாரணமாக உள்ளது என்பதற்கு சான்றாக அவை உள்ளன.

மே 8ம் தேதி வெள்ளியன்று, வெள்ளை மாளிகை இராணுவ அலுவலகத்தின் தலைவர், முன்னாள் இராணுவ செயலர் லூயி கால்டெரா (Louis Caldera), இதுவரை விளக்கப்படாத முடிவான வெள்ளை மாளிகையின் பொறுப்பில் இருக்கும் போயிங் 747 ஜேட் விமானங்கள் இரண்டில் ஒன்று மன்ஹாட்டன் பகுதி மீது நான்கு விமானப்படையின் போர் விமான ஜெட்டுக்களுடன் பறந்தது பற்றி எழுந்த பரபரப்புக் கூச்சலை அடுத்து, தன்னுடைய பதவி இராஜிநாமாவை சமர்ப்பித்தார்.

இந்த நிகழ்விற்கு உத்தியோகபூர்வ விளக்கம் --கூட்டாட்சி கீழ்ப்பிரிவு அதிகாரிகள், விமானப்படை முதல் விமானம் அமெரிக்க முக்கிய இடங்களான சுதந்திரதேவி சிலை போன்றவற்றின் மீது பறந்து செல்லும் புகைப்படங்களை எடுக்க விரும்பியது-- நம்புவதற்கில்லை என்ற விதத்தில் கொடுக்கப்பட்டது. அதே போல் கால்டேரா வரை கட்டுப்பாட்டுச் சங்கிலியில் எவரும் அத்தகைய பறத்தல் எவ்வித விளைவுகளைக் கொடுக்கும் என்று நினைக்கவில்லை என்பதும் ஏற்க முடியாதது ஆகும்; இது நியூ யோர்க் நகர மக்களின் மீது 9/11 பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிய நினைவை போல்தான் உள்ளது.

மே 11, திங்களன்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளபதி ஜெனரல் டேவிட் மக்கீமனுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பென்டகன் அறிவித்தது. [See: "Pentagon changes Afghanistan commander as military's crisis deepens"]. இராணுவ அதிகாரப் படிநிலையில் ஆப்கானிஸ்தான் போர் விரிவாக்க உத்திகள் வழிவகைகள் பற்றி எத்தகைய பூசல்கள் இருந்தாலும் மக்கீமனை உதறித் தள்ளியிருப்பது ஐயத்திற்கு இடமின்றி பென்டகனுக்குள் காழ்ப்பை அதிகரிக்கும்.

ஒபாமா நிர்வாகத்தை முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி கடந்த ஞாயிறன்று CBS News, "்Face the Nation" லும் செவ்வாயன்று Fox News லும் கண்டித்ததும் இதேபோல் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவரும் புஷ்ஷும் பதவியை விட்டு நான்கு மாதங்களுக்கு பின்னர், செனி அமெரிக்க அரசியல் வாழ்வின் வாடிக்கையான நெறியான நிர்வாகப் பிரிவின் வெளியேறும் உயர் அதிகாரிகள் அவர்களுக்குப் பின் பதவியில் இருப்பவர்களுக்கு காட்டும் மரியாதை முறையைக் கைவிட்டுள்ளார். மாறாக பதவிக்கு வந்துள்ள ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் பற்றி, குறிப்பாக "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதில் புஷ் நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பிற ஜனநாயக-விரோத வழிவகைகள் தொடர்பானதில், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் பற்றி தொடர்ந்து உரத்த குரலில் தாக்கி வருகிறார்.

ஞாயிறன்று செனி, ஒபாமா பதவிப் பிரமாணத்தை மீறி, அமெரிக்காவை காட்டிக் கொடுக்கிறார் என்று கூறும் அளவிற்கு நெருக்கமான வகையில், வெள்ளை மாளிகை அறிவிப்பான குவாண்டனாமோ குடா தடுப்புக்காவல் மையம் மூடப்படுவது பற்றியும், ஒபாமா, சித்திரவதைக்கு சட்டபூர்வ நியாயம் கொடுத்த நீதித்துறை 2002, 2005 குறிப்புக்கள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு பற்றியும் கண்டித்தார்.

இந்த முடிவுகளை பற்றி மேற்கோளிட்டு செனி கூறினார்: "சிக்கல் வாய்ந்த பல விஷயங்கள், எனக்கு உளைச்சல் தருகின்றன, இக்கொள்கைகள் உயிர்களை காப்பாற்ற பொறுப்பு கொண்டிருந்தவை என்ற மட்டத்திற்கு, இப்பொழுது நிர்வாகம் அவற்றை இரத்து செய்தல், முடிவிற்கு கொண்டுவருதல் என்று முயலும்போது --அதைப்பற்றி வாதிடுதல் நியாயம் என நான் நினைக்கிறேன், நான் வாதிடுகிறேன்-- கடந்த எட்டு ஆண்டுகளாக நாம் கொண்டிருந்த பாதுகாப்பு முறைகளை இனி வருங்காலத்தில் கொண்டிருக்க மாட்டோம்.'

இரு வினாக்கள் இங்கு எழுப்பப்பட வேண்டும். செனி என்ன அறிந்துள்ளார்? மற்றும் அவர் எவருக்காக வாதிடுகிறார்?

9/11 பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி பேசுவது புஷ் மற்றும் செனி "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் இயற்றிய கொள்கைகளை நியாயப்படுத்தும் அனைத்து நோக்கத்தையும் கொண்டுவிட்டது: அதாவது ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் போர்கள், உலகெங்கிலும் இரகசிய சிறைகள், சித்திரவதைக் கூடங்கள் தோற்றுவித்தல், குவாண்டநாமோ குடாவில் அமெரிக்க கடும் சிறை முகாம் அமைத்தது மற்றும் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளை உள்நாட்டு ஒற்று வேலைக்காக முறையாக மீறியது ஆகியவை அக்கொள்கைகளின் அடிப்படையில் நிகழ்ந்தன.

9/11 தாக்குதல்கள் பற்றி தீவிர விசாரணை இருந்ததில்லை; குறிப்பாக அமெரிக்க உளவுத் துறை பிரிவுகளைப் பற்றி; அவை அல் கொய்தா அமைப்பில் ஊடுருவல் செய்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டவர்களில் பலரைக் கண்காணித்திருந்தன. ஒரு புதிய 9/11 தாக்குதல் பற்றி பேசுகையில், ஏதேனும் புதிய "பயங்கரவாத" தூண்டுதல் அமெரிக்க அரசாங்கத்தின் சில பிரிவுகளால் ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கு தெரிந்து அல்லது தெரியாமல் இயற்றப்படுமோ என்ற எதிர்பார்ப்பில், அல்லது உண்மையாக முன்கூட்டியே தெரிந்த அளவில் செனி உரைக்கக்கூடும்.

எவருக்காக இப்படி செனி பேசுகிறார் என்றால், அது திறனாயாமல் செய்தி ஊடகம் தெரிவிப்பது போல் குடியரசுக் கட்சியின் பழமைவாத "தளத்திற்கு" என்று அல்ல. இந்த மனிதர் இராணுவ உளவுத்துறை கருவிக்கு மிகவும் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டிருந்தார், முதல் புஷ் நிர்வாகத்தின் போது பாதுகாப்பு மந்திரியாகவும், இரண்டாம் புஷ் காலத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போரில்" நடைமுறை பாதுகாப்புத் தலைவராகவும் இருந்தவர்.

9/11 க்குப் பின் அரசாங்க செயல்களின் தொடர்ச்சியை செனிதான் மேற்பார்வையிட்டார்; வாடிக்கையாக கூறப்படும் "வெளியிடப்படாத, பாதுகாப்பான இடங்களில்" இரகசிய அரசாங்கத்தை நிறுவினார்; பல நேரமும் அங்குதான் இருந்தார். இவருடைய அதிகாரிகள்தான் இகழ்வுற்ற "சித்திரவதைக் குறிப்புக்கள்" தயாரித்தனர்; அதைத்தான் ஒபாமா கடந்த மாதம் ஒரு நீதிமன்ற உத்தரவின்பேரில் வெளியிட்டார்; மேலும் செனி, சிந்தரவதை உத்திகள் விவாதிக்கப்பட்டு உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் இசைவு கொடுக்கப்பட்ட "முக்கிய" கூட்டங்களை வழிநடத்தினார்.

செனி ஒபாமா நிர்வாகத்தின்மீது நடத்தும் தாக்குதல்கள் அமெரிக்க மக்கள் மற்றும் அவர்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு இகழ்வை காட்டும் அமெரிக்க நிதிய உயரடுக்கின் இயல்பான தன்மையை தெளிவாக நிரூபிக்கின்றன. ஞாயிறன்று CBS ல் தோன்றியபோது ஒரு கட்டத்தில் அவர் பேட்டியாளர் Bob Schieffer இடம், "9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் எட்டு ஆண்டுகளாக நாட்டை பாதுகாப்பில் வைத்திருப்பதற்கு நாங்கள் கொண்டு வந்த கொள்கைகளில் இருந்து ஒபாமா நிர்வாகம் நகர்ந்து செல்ல விரும்புகிறது என்பதைத்தான் நாங்கள் பார்க்கிறோம். உதாராணமாக கைதிகள் விசாரணை அல்லது பயங்கரவாத கண்காணிப்புத் திட்டம் ஆகியவற்றைக் கூறலாம். அவர்கள் இக்கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தனர்; இப்பொழுது பதவிக்கு வந்த பின்னர், நான் அடிப்படையில் வேறுபாடு கொண்டுள்ள நடவடிக்கைகளை எடுக்க கடுமையாக முற்படுகின்றனர்."

ஒபாமா உண்மையில் கொண்டுவந்துள்ள கொள்கை மாற்றத்தை செனி அதிகம் மிகைப்படுத்துகிறார். அமெரிக்க மக்கள் தங்கள் எதிர்ப்பை புஷ்-செனி நிர்வாகத்தின் ஜனநாயக எதிர்ப்புக் கொள்கைகளுக்கு குறைந்த தன்மையில் 2008 ஜனாதிபதித் தேர்தலில் காட்டியதை பற்றிக் கூட அவர் மிக கசப்பான முறையில்தான் விவரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மக்கள் தேசியப் பாதுகாப்புக் கொள்கை பற்றி ஏதேனும் செல்வாக்கு பெறுவது பற்றி முன்னாள் துணை ஜனாதிபதி கொண்டுள்ள வெளிப்படையான விரோதப் போக்கு முழு இராணுவ-உளவுத்துறை கருவியிலும் இருக்கும் அணுகுமுறையின் அடையாளம்தான்; இது அமெரிக்க தேர்தல்களை வெளிநாட்டில் நடக்கும் தேர்தல்களாக அது காணும்விதத்தில்தான் பார்க்கிறது: அதாவது அரசியல் நிகழ்வுகள் திரிக்கப்பட வேண்டும், ஒதுக்கப்பட வேண்டும் அல்லது அடக்கப்பட வேண்டும்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களைப் பொறுத்து அது செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

ஒரு வலது சாரி வெளியீடான National Review, ஒருவேளை பிழையாக, செனி பிரச்சாரத்தின் தீய உட்குறிப்புக்கள் பற்றி கவனத்தை ஈர்க்கிறது; ஒரு கட்டுரையில், "இந்த முழு அளிப்பும் ஒரு தீவிர மே மாதத்தில் ஏழு நாட்கள் பற்றிய கருத்தைக் கொடுக்கின்றன."

மே மாதத்தில் ஏழு நாட்கள் என்பது 1962ம் ஆண்டில் அதிக விற்பனையான புதினம் ஆகும்; இது அமெரிக்காவில் இராணுவ ஆட்சி மாற்றத்தை முக்கிய கருத்தாகக் கொண்டிருந்தது. அதன் ஆசிரியர்கள் பென்டகனுக்கும் ஜனாதிபதி ஜோன் எப். கென்னடியின் நிர்வாகத்திற்கும் இடையே இருந்த பூசல் பற்றி நன்கு அறிந்திருந்தனர்; ஜனாதிபதியோ புத்தகம் வெளிவந்த ஓராண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

உலக பொருளாதார சரிவுச் சூழலில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு தோல்வியுற்ற போர்களின் பின்னணியில், அமெரிக்க அரசாஙக்கத்திற்குள் ஆழ்ந்த பூசல் இருக்கும் தறுவாயில், அமெரிக்க இராணுவ, உளவுத்துறை கருவியில் இருந்து ஜனநாயக எதிர்ப்பு வன்முறைகள் தூண்டப்படும் வகையில் புதிய அரசியல் வெடிப்புக்களும் ஏற்படலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved