World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German state uses piracy as pretext to amend the constitution

கடற் கொள்ளையை போலிக்காரணமாக பயன்படுத்தி ஜேர்மனிய அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்துகிறது

By Ludwig Weller
18 May 2009

Back to screen version

ஒரு மூன்று வார தாமதத்திற்கு பின்னர், ஜேர்மனிய மக்கள் இறுதியாக GSG 9 விஷேட போலீஸ் பிரிவு மற்றும் ஜேர்மனிய இராணுவம் சோமாலிய கடற்கரைக்கு அருகே முக்கியமாக பயன்படுத்தப்பட்டது பற்றிய முழு விவரங்களை அறிந்தனர். அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் வளர்த்து, இசைவு பெற்ற இத்திட்டம் விஷேட GSG9 துருப்புக்கள் ஏப்ரல் 4ம் தேதி சோமாலியக் கடற் கொள்ளையர்காளல் கடத்தப்பட்டிருந்த ஜேர்மனிய சரக்குக் கப்பலான "Hansa Stavanger" மீட்க முழுவீச்சு நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. இச்செயல் ஜேர்மனிய படைகளுக்கு தான் ஒரு ஹெலிகாப்டரை உதவிக்குத் தருவதாக கூறியிருந்த அமெரிக்க அரசாங்கம் அவ்வாறு முன்வராததால் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜேர்மனிய சரக்குக் கப்பலை திட்டமிட்டு மீண்டும் கைப்பற்றுதல் என்பது ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் மிக இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஜேர்மனிய அரசாங்கம் சோமாலிய கடற் கொள்ளைக்காரர்கள் "Hansa Stavanger" ஐயும் அதிலிருந்த ஐந்து ஜேர்மனிய கடற்படையினர் உள்ளடங்கலான கடல்பணியாளர்களையும் கடத்தப்பட்டவுடன் உடனேயே திட்டங்களை தீட்டியது.

பெரும் குருதி கொட்டியிருக்கக் கூடிய இந்த தீர நடவடிக்கை எடுப்பதற்கு முக்கிய திட்டமிட்டவர்கள் ஜேர்மனியின் உள்துறை மந்திரி வொல்வ்காங்க் ஷொய்பிள (CDU), வெளியுறவு மந்திரி பிரங் வால்ட்டர் ஸ்ரைன்மையர் (SPD) ஆகியோர் ஆவர். கிடைத்த உள்தகவல் அடிப்படையில் Der Spiegel ஏடு உள்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சரகங்களுக்கு இடையே செயல்முறை தயாரிப்பு பற்றிய கடுமையான பூசல்களை அதிக அளவில் வெளியிட்டுள்ளது.

இந்த மூன்று அமைச்சரகங்களும் ஒரு சிறிய அரசாங்க செயலர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் குழுவிற்கு செயல்திட்டத்தை நடத்த உரிமை கொடுத்தது. அவர்கள் ஒரு நெருக்கடிக் குழுவை ஏற்படுத்தி அது அன்றாடம் பேர்லினில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் கடத்தல் நடந்த மறுநாளில் இருந்து கூடியது.

ஸ்ரைன்மையர் இன் வெளியுறவு மந்திரி அலுவலகத்தில் அரசாங்கச் செயலராக உள்ள றைன்ஹார்ட் சில்பபேர்க் இந்த நெருக்கடிக் குழுவிற்கு தலைமை தாங்கினார். இவர் ஜேர்மனி கூடுதலான ஆக்கிரோஷ இராணுவப் பங்கை கொள்ள வேண்டும் என்று தீவிரமாக வாதிடுபவர் என்று கருதப்படுபவர்.

உள்துறை மந்திரி ஷொய்பிள தன்னுடைய செயலர் ஒகுஸ்ட் ஹென்னிங் ஐ நெருக்கடிக் குழுவில் சேர்ந்து கொள்ள அனுப்பி வைத்தார். 2005 வரை ஹான்னிங் ஜேர்மனிய உளவுத் துறையான BND க்கு தலைமை தாங்கியவர். பல ஆண்டுகள் அவர் ஷோபிள அடிப்படை ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதனூடாக அரசாங்க அமைப்புகளை நவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். 2007ல் ஜேர்மனியில் G8 உச்சிமாநாட்டின்போது, ஹான்னிங் போலீஸ் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு கொண்டிருந்தார்; இது குறைந்தது 1,000 எதிர்ப்பாளர்களை கைது செய்ததில் முடிவுற்றது.

KSK ஜேர்மனி சிறப்புப் படைகள் பிரிவை பயன்படுத்துவதில் சில சட்டபூர்வ தடைகள் இருந்ததால், நெருக்கடிக் குழு GSG9 பயங்கரவாத-எதிர்ப்பு பிரிவை செயலாக்க முயன்றனர். இப்பிரிவு கூட்டாட்சி போலீசின் சிறப்பு செயல் பிரிவும், ஷொய்பிளவின் உள்துறை அமைச்சரகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதுமாகும். KSK ஈடுபடுத்தப்படவேண்டும் என்றால் அது ஜேர்மனியப் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

முதலில் பாதுகாப்பு அமைச்சரகம் நவீன கடற்படை கப்பல்களான "Rheinland-Pfalz", "Mecklenburg-Vopommern" இனை இந்தியப் பெருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டவற்றை ஓடும் கொள்கையர்களை பிடிக்க அனுப்பி வைத்தது. நாட்டின் உள்விவகார செயலாளர் சில்பபேர்க் அப்பொழுது அப்பட்டமாக "ஐந்து கடற்கொள்ளையர் மட்டும் கப்பலில் இருக்கும்போது, நாம் தாக்கி விரைவில் விஷயத்தை முடித்துவிடலாம்." என்றார். ஆனால் கடற்கொள்ளையர் தப்பி ஓடி புது உதவிகளையும் பெற முடிந்தது.

Der Spiegel கருத்தின்படி, ஷொய்பிளவும் அவருடைய அரசாங்கச் செயலரும் இராணுவம் மிகவும் "தயக்கம் காட்டியது" என்று புகார் கூறினார்கள். அமெரிக்க உதவி நாடப்பட வேண்டும் என்று ஷொய்பிள கோரினார்; "அமெரிக்கர்களிடம்" அதிக நம்பிக்கை வேண்டாம் என்று கூறிய வெளியுறவு அலுவலகத்திற்கு எதிராக தன்னுடைய நிலையை உறுதிபடுத்தினார். ஜேர்மனிய செயலுக்கு தன் ஆதரவைத் தருவதாக பென்டகன் அறிவித்தது, CSG9 க்கு USS Boxer என்ற ஹெலிகாப்டர் தாங்கிக்கப்பலையயும் கொடுத்தது.

இந்த கமாண்டோ செயற்பாட்டின் தன்மையை Der Spiegel விளக்குகிறது: "பெரிய வெள்ளியன்று கூட்டாட்சி அரசாங்கம் இறுதியில் நடவடிக்கை எடுக்கலாம். இரண்டு Antonov An-124, மூன்று IlyushinII-76, ஒரு Transall மற்றும் ஒரு Airbus ஈஸ்டர் ஞாயிறன்று வெடிமருத்துகள், ஆறு Puma, Bell ஹெலிகாப்டர்களை மொம்பாசாவிற்கு அனுப்பி வைக்கும். தொழில்நுட்ப அமைப்பு தேவையான போக்குவரத்தைக் GSG 9 உடன் கவனிப்பதுடன், கமாண்டோ பிரிவை அது தொடர்ந்து தேவையான எஞ்சிய 200 க்கும் மேற்பட்ட துருப்புக்களை கொடுக்கும்". கூடுதல் ஆதரவிற்கு நான்கு ஜேர்மனிய போர்க் கப்பல்கள் 800 படையினர்களும் USS Boxer இன் இரு புறங்களிலும் செல்லும்.

இந்த செயற்பாடு நடைபெறுவதில் சில சந்தேகங்கள் இருந்தாலும் போட்ஸ்டாம் நகரில் இருக்கும் GSG9 மையம், 30 நன்கு ஆயுததாரிகளான கடற்கொள்ளையர்கள் எதிர்க்கும்போது வரக்கூடிய இரத்தம்சிந்தலை பற்றி எச்சரித்தது. அரசாங்க செயலர்கள் ஹான்னிங்கும் சில்பர்பேர்க்கும் செயலை முடிக்க உறுதி பூண்டு மே 1 இரவில் இதை செய்ய அவர்கள் திட்டம் இட்டனர்.

Der Spiegel தகவல் வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையர் இராணுவ நடவடிக்கையில் நெருக்கமாகப் பங்கு கொண்டார் என்பதைத் தெளிவாக்குகிறது. திட்டமிடும் முக்கிய நேரங்களில் அவர் ஆப்கானிஸ்தானத்திற்கு சென்றிருந்தார், ஆனால் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி தொடர்ந்து இரகசிய தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.

எவ்வாறிருந்தபோதிலும், படைகளை செயல்படுத்துவது ஏப்ரல் 29 அன்று ஒபாமா நிர்வாகம் தடை போட்டதால் நடக்கவில்லை. ஒபாமாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலிடம் தொலைபேசி மூலம் அமெரிக்க இராணுவம் இச்செயலை மிக ஆபத்தானது என்று கருதுவதாகவும் USS Boxer ஐத் தருவதற்கு இல்லை என்றும் கூறிவிட்டார்.

இன்னும் சக்தி வாய்ந்த ஜேர்மானிய இராணுவம் வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கையை சிலகாலமாக எழுப்பிவரும் Der Spiegel தோல்வியற்ற நடவடிக்கை பற்றிக் கூறியது: "இந்த மறுப்பு உள்துறை மந்திரி வொல்வ்காங் ஷொய்பிள(CDU) விற்கும் வெளியுறவு மந்திரி பிராங் வால்டர் ஸ்ரைன்மையருக்கும் (SPD) கடுமையான அடி ஆகும். அவர்கள் நெருக்கடி முடிந்தால் இராணுவரீதியாக முடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர், இதற்கு கூட்டாட்சி சான்ஸ்லருடைய உடன்பாட்டையும் பெற்றிருந்தனர்; அவருக்கும் இதை பற்றி முறையாக அவ்வப்பொழுது தெரிவிக்கப்பட்டது. ஷொயபிளவும் ஸ்ரைன்மையரும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் டாலர் தூதரக முறை பற்றி இகழ்வுற்றுள்ளனர்; கவனியுங்கள், ஜேர்மானியர்கள் கொள்கைக்காரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பணம் இனி கொடுக்க மாட்டார்கள், ஜேர்மனியர்கள் வேறுவிதமாகச் செயல்படுவர் ஒரு சர்வதேசரீதியாக பிரகாசிக்கும் வியப்பான செயலை முன்னோடியாக செயற்படத்த விரும்பினர். "

பின் ஏடு முடிவுரையாகக் கூறுகிறது: "பேர்லினில் பிரச்சினை எது தவறாகப் போயிற்று என்பதுதான். செயற்பாடு மூன்று வாரங்கள் நீடித்தது. சமீப காலத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து பிணை பணங்களையும் விட அதிகமாக பல மில்லியன்கள் கருவூலத்திற்கு செலவு வைத்தது. முதலில் இருந்தே தெரியவந்ததுபோல் GSG 9 விரைவில் வெளிநாட்டில் கூடுதலான துணை இருந்தால் ஒழிய. அதாவது விமானங்கள், கப்பல்கள் என்று இருந்தால் ஒழிய, செயல்பட முடியாது. ஜேர்மனிய இராணுவத்தின் கரங்களில் அனைத்தையும் குவிக்க வேணடும் என்பது வெளிப்படையாயிற்று."

இத்தகைய துல்லியமான போக்குத்தான் நீண்ட காலம் கிறிஸ்தவ ஜனநாய யூனியன் (CDU) மற்றும் அதன் சகோதர கட்சியான கிறிஸ்தவ சமூக யூனியன்(CSU) இரண்டும், சமூக ஜனநாயக கட்சியின்(SPD) சில பிரிவுகள் உட்பட, பின்பற்றி வந்தன. கடந்த வாரம்தான் ஷொய்பிள மீண்டும் அடிப்படைச் சட்டத்தில் மாறுதல் வேண்டும் என்று கோரி அதற்கு அதிபர் மேர்க்கெலுடைய ஆதவரைப் பெற்றார். ஷொயபிளவின் நோக்கம் அடிப்படையில் ஜேர்மனிய அரசியலமைப்பு உறுதியாகக் கூறியுள்ள இராணுவத்திற்கும் போலீஸிற்கும் இருக்கும் பிளவை அகற்றிவிட வேண்டும் என்பதாகும். உள்துறை மந்திரி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எந்த நேரத்திலும் ஜேர்மனிய படையினர் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

செய்தியாளர் Heribert Prantl இதே முடிவிற்குத்தான் Süddeutsche Zeitung பத்திரிகையில் ஒரு கட்டுரையில் வந்துள்ளார்: "ஷொயபிள கடற் கொள்ளையை தான் விரும்புவதை சாதிக்க ஒரு தூண்டில் போல் பயன்படுத்துகிறார்: அதாவது ஒரு பொது பாதுகாப்பு சக்திபோல் இராணுவத்தைப் பரந்த முறையில் உபயோகித்தல்."

உள்துறை மந்திரி ஷொய்பிள ஏற்கனவே ஒரு நெடுஞ்சாலையை தடுப்பிற்கு உட்படுத்த முயன்ற குர்திஸ் ஆர்ப்பாட்டத்தைக் காரணமாக வைத்து இராணுவத்தை அழைத்துள்ளார். சமீபத்தில் உலக கால்பந்தயப்போட்டி ஜேர்மனியில் நடைபெற்றபோது அவர் கால்பந்து மைதாங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு தேவை என்ற கூறிய முறையில் வெறித்தனத்தை தூண்ட முற்பட்டார். இப்பொழுது அவர் கடற்கொள்ளையை கூடுதலான போலிக்காரணமாகப் பயன்படுத்தி தன்னுடைய இலக்கை அடைய முற்படுகிறார்.

டிசம்பர் 19 ம் தேதி பாராளுமன்ற ஆணையான ஜேர்மனிய படையினர் தாக்க மட்டுமல்லாது விரோத கப்பல்களை மூழ்கடிக்கவும் முடியும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னரும் இந்நிலை வந்துள்ளது. இப்படி இராணுவத்தைப் பயன்படுத்துவது Operation Atalanta வுடன் இணைக்கப்பட்டது. அதை நவம்பர் 2008ல் ஐரோப்பிய ஒன்றியம் கடற்கொள்ளை-எதிர்ப்பு நடவடிக்கையாக ஏற்றிருந்தது.

சமூக ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மை இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள கூட்டாட்சி தேர்தல் முடியும் வரையிலேனும் இராணுவம் போலீஸ் செயல்களைப் புரிய அனுமதிக்கும் அடிப்படைச் சட்டத்தில் எவ்வித திருத்தத்தையும் நிராகரித்துள்ளது. அதன் பின் விஷயங்கள் மாறக்கூடும். சமூக ஜனநாயகக் கட்சியின் பாதுகாப்பு வல்லுனர் ரைனர் ஆர்னோல்ட் இரு விஷேட துருப்புக்களான GSG 9 மற்றும் KSK இணைக்கப்பட வேண்டும், குறைந்த பட்சம் "ஒன்றாக பயிற்சி பெறுதலும் செயல்படுதலும்" செய்ய ஏற்பாடுகள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றபிரிவின் தலைவர் பீற்றர் ஸ்ருக் "தன் சொந்த விஷயங்களைப் போல் பணையக் கைதிகள் பற்றிய நெருக்கடிகளை ஜேர்மனி நடத்த முடியாது என்பது வெளிப்படை. ...இதேபோன்ற விவகாரங்களுக்கு நம்மை ஆயுதரீதியான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா என்பது பற்றி நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்." எனக்கூறினார்:

ஷொய்பிளவின் அசைந்து கொடுக்காத பிரச்சாரமான உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இராணுவத்தை ஒரு "பொது பாதுகாப்பு சக்தியாக" பயன்படுத்துவது, பாராளுமன்றத் தடைகள் அற்று எப்பொழுதும் இருக்க வேண்டும் எனப்படுவது, நாட்டின் ஆளும் உயரடுக்கு தேவையானால் தங்கள் நலன்களைச் சுமத்த பலாத்காரத்தை பெருகிய முறையில் பயன்படுத்தும் நோக்கத்தைக் காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved