World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Historians in the Service of the "Big Lie": An Examination of Professor Robert Service's Biography of Trotsky

"பெரும் பொய்யைக் கூறும்" பணியில் வரலாற்றாளர்கள்: பேராசிரியர் ரொபேர்ட் சேர்வீஸின் ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூல் பற்றி ஒரு ஆய்வு

By David North
15 December 2009

Back to screen version

லண்டனில் Friends Meeting House ல் டிசம்பர் 13ம் தேதி டேவிட் நோர்த் ஆற்றிய உரையை கீழே வெளியிட்டுள்ளோம். நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் ஆவார். சேர்வீஸின் தவறுகளை, ஆரம்பத்தில் ''வரலாற்றை திரிபுபடுத்தலுக்கான சேவையில். ட்ரொட்ஸ்கி ஒரு வாழ்க்கை வரலாறு. ரொபேர்ட் சேர்விஸின் மீள்பார்வை ("In the Service of Historical Falsification. A Review of Robert Service's Trotsky: A Biography") என்னும் ஆய்வுக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டதை இந்த உரை விரிவாக்குகிறது.

அக்டோபர் 22 அன்று லண்டனின் Holland Park ல் தன்னுடைய லியோன் ட்ரொட்ஸ்கி பற்றிய புது வாழ்க்கை நூலை பொது மக்களுக்கு வெளியிடுகையில் பேராசிரியர் ரொபேர்ட் சேர்வீஸ், "இன்னும் பழைய நபர் ட்ரொட்ஸ்கியின் உயிர் உள்ளது--பனிக்கோடாரியால் கொத்தி அவரைக் கொல்லும் முயற்சியில் வெற்றிபெறவில்லை என்றால், நான் அதைச் செய்துவிடுவேன் என நம்புகிறேன்." என்று கூறியதாக Evening Standard தெரிவித்துள்ளது.

இந்த வரலாற்றாசிரியர், இவ்வாறான முறையில் வெளிப்படையான திருப்தியுடன் தன்னுடைய நூலை இவ்வாறு விளக்குபவர் உண்மையில் எவ்விதமான மனிதர் என ஒருவர் வியப்படைவது நியாயமே. ஒரு ஆர்வமுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுபவருடைய உண்மை நோக்கம் படுகொலைக்கு ஒப்பான விதத்தில் இலக்கியத்தை படைப்பதா? இந்த அறிக்கையை எப்படி விளக்கம் கொடுத்தாலும், அது திரு.சேர்வீஸுக்கு எதிராகத்தான் இருக்கும். லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார், அதுவும் குறிப்பிடத்தக்க விதத்தில் கொடூரமான வகையில், கோரமான விதத்தில். ஒரு பனிக்கோடாலியின் முனை கொலையாளியால் ட்ரொட்ஸ்கியின் மூளைப்பகுதியில் செலுத்தப்பட்டது. இது நடந்த போது அவருடைய மனைவி நத்தாலியா உடன் இருந்தார். 38 ஆண்டுகளாக தன்னுடன் இருந்தவருடைய பதட்டமான கூச்சலைக் கேட்டு அவர் அறைக்கு ஓடிச் சென்றபோது, அவருடைய நெற்றியிலும் கண்களிலும் இரத்த வெள்ளம் வடிந்து வந்ததைக் கண்ணுற்றார். "அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் பார்" என்று நத்தாலியாவிடம் ட்ரொட்ஸ்கி குமுறினார்.

மெக்சிகோவில் லியோன் ட்ரொட்ஸ்கி

ட்ரொட்ஸ்கியின் மரணம் அநேகமாகப் தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு என்றுதான் பலராலும் உணரப்பட்டது. மெக்சிகோ நகரத்தில் அவருடைய இறுதி ஊர்வலம் தலைநகரத்தில் தெருக்கள் வழியே சென்றபோது 300,000 மக்கள் மரியாதை செலுத்தினர். அமெரிக்க நாவலாசிரியர் ஜேம்ஸ் ரி.ஃபஹாரல் எழுதிய தனிப்பட்ட கடிதம் ஒன்று ட்ரொட்ஸ்கி படுகொலை பற்றிய பேரதிர்ச்சி பற்றிய உணர்வைக் காட்டுகிறது. "இக்குற்றம் சொற்களால் வர்ணிக்க இயலாதது. இதை விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை. அதிர்ச்சி, பெரும் பாதிப்பு, வெறுப்பு, இயலாமையின் பெரும் சீற்றம் அனைத்தையும் நான் உணர்ந்தேன். வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிலேயே அவர் மிக உயர்ந்தவர், அவர்கள் அவரைக் கொன்றார்கள், அமெரிக்க அரசாங்கம் அவருடைய சாம்பல்களைக் கண்டுகூட அச்சப்படுகிறது. இறைவனே!" (1)

ஒரு தீவிர வாழ்க்கை வரலாறு எழுதுபவர் "பனிக்கோடாலியைப் பற்றி" நகைச்சுவையாகப் பேசக்கூடாது. அது மிக இழிவான, பிற்போக்குத்தன அரசியல் சின்னம் ஆகும். ஒருக்கால் தன்னுடைய வாழ்க்கை வரலாறு ட்ரொட்ஸ்கியை "படுகொலை செய்தது" என்று கூறும்போது இந்த குறிப்பிட்ட நபரைப்பற்றிய அனைத்து ஆர்வத்தையும் மற்றும் விவாதங்களையும் முடித்து விடும் என்ற பொருளில்தான் கூறப்பட்டது என்று திரு. சேர்வீஸ் கூறலாம். ஆனால் அது ஒரு நெறியான நோக்கமா? ஒரு உண்மையான அறிவாளி தன்னுடைய படைப்பை நெரித்துவிடாமல், வரலாற்று வளர்ச்சிக்கு பங்களிப்பு கொடுக்கும் என்றுதான் நம்புவார். ஆனால் திரு.சேர்வீஸின் நோக்கம் அது அல்ல. Evening Standardக்கு அவர் கூறியது போல், ஸ்ராலின் கொலை மூலம் சாதிக்க முடியாததைத் தான் தன்னுடைய நூல் மூலம் சாதிக்கப்போவதாக அவர் நம்புகிறார்--அதாவது குறிப்பிடத்தக்க வரலாற்று நபர் என்னும் ட்ரொட்ஸ்கியை "கொன்றுவிடப் போவதாக". இந்த நோக்கத்தை மனதில் கொண்டிருந்தால், இந்த வாழ்க்கை வரலாற்றை எழுத எத்தகைய அணுகுமுறையை அவர் கொண்டிருந்தார் என்பதை கற்பனைதான் செய்து பார்க்க முடியும்.

புத்தக வெளியீட்டு விழாவில் சேர்வீஸின் கருத்து அவர் உள்ள பிற்போக்குத்தன வட்டாரத்தில் அதிகம் பரந்துள்ள மனப்பாங்கைத்தான் பிரதிபலிக்கிறது. வலதுசாரி பிரிட்டிஷ் வரலாற்றாளரும், மார்க்கரெட் தாட்சரையும் ஒகுஸ்டோ பினோசேயையும் பாராட்டுவருமான நோர்மன் ஸ்ரோன் இந்த வாழ்க்கை நூலை மதிப்புரை செய்துள்ள கட்டுரைக்கு ''பனிக்கோடாலியின் வருகை ("The Ice Pick Cometh") என்ற தலைப்பைத்தான் கொடுத்துள்ளார். மற்றொரு பாராட்டும் மதிப்புரைக் கட்டுரை, லண்டன் சண்டே டைம்ஸில் ரோபர்ட் ஹாரிசால் எழுதப்பட்டது. சேர்வீஸ் "திறமையாக மீண்டும் ட்ரொட்ஸ்கியைப் படுகொலை செய்துவிட்டார்" என்று புகழ்கிறது.

தனிப்பட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் உளைச்சலுக்கு உட்பட்டவர்கள்தான் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவர். இவர்கள் ட்ரொட்ஸ்கியின் மறைவிற்கு எழுபது ஆண்டுகளுக்கு பின்னரும்கூட பெரும் புரட்சியாளரின் ஆவியுருவைக் கண்டு இன்னமும் பீதியில் உள்ளனர். அவரைப் பற்றிய சிந்தனையே இவர்களிடம் கொலையுணர்வைத்தான் தூண்டுகிறது. ஆனால் ஸ்ராலினினின் சர்வாதிகார போலீஸ் அரசாங்கத்தின் சக்தி கூட சாதிக்க முடியாததை திரு.சேர்வீஸின் நூல் சாதிக்கக்கூடும் என்று இவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்களா? சேர்வீஸும் அவரைப் பாராட்டுபவர்களும் அத்தகைய கருத்தைக் கொண்டுள்ளனர் என்பது கூட அவர்கள் எவ்வளவு குறைவாக ட்ரொட்ஸ்கி மற்றும் அவர் வாழ்நாள் முழுவதும் தான் அர்ப்பணித்திருந்த சிந்தனைகளைப் பற்றி அறிந்துள்ளனர் என்பதைத்தான் அம்பலப்படுத்துகிறது.

அக்டோபர் புரட்சியின் இணைத் தலைவரும், ஸ்ராலினிசத்தின் எதிரியும், நான்காம் அகிலத்தின் நிறுவனருமான லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் இரகசியப் போலீஸான GPU வின் முகவர் ஒருவரால் ஆகஸ்ட் 1940ல் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய வாழ்வின் கடைசி 11 ஆண்டுகள் நாடுகடந்தப்பட்ட நிலையில் கடந்தன. "நுழைவு அனுமதி இல்லாத உலகில்" என்று அவரால் குறிப்பிடப்பட்ட பகுதியில் ட்ரொட்ஸ்கி துருக்கி, அங்கிருந்து பிரான்ஸ், நோர்வே பின்னர் 1937ல் மெக்சிகோவில் வசித்தார். சோவியத் ஒன்றியத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதில் இருந்து மெக்சிகோ வரும் வரையிலான ஆண்டுகள் மிகக்கடுமையான சர்வதேச அரசியல் பிற்போக்குத்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தது, பிரான்சிலும் ஸ்பெயினிலும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்கள் ஸ்ராலினிசத்தாலும் "மக்கள் முன்னணி" என்ற பதாகையில் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களாலும் நெரிக்கப்பட்டது, மாஸ்கோ விசாரணைகள் போலித்தனமாக நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்த பாரிய பயங்கரத்தில் கிட்டத்தட்ட மார்க்சிச அரசியல் மற்றும் சோசலிச கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் அனைவரும் சோவியத் ஒன்றியத்தில் உடலியல் ரீதியாக அழிக்கப்பட்டது அனைத்தும் நிகழ்ந்தன.

காமனேவும், சினோவியேவும்

கிரிகோரி சினோவியேவ், லெவ் காமனேவ் உட்பட புகழ்பெற்ற வரலாற்று போல்ஷிவிக் தலைவர்கள் அடங்கியிருந்த 16 பேர் மீதான முதல் மாஸ்கோ விசாரணை ஆகஸ்ட் 1936ல் நடந்தது. 16 பேர் மீதும் சதிகள் தீட்டியதாகவும் பல பயங்கரவாதச் செயல்கள் பற்றியும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் தவிர வேறு எந்த சான்றும் அளிக்கப்படவில்லை. நீதிமன்றம் அனைவருக்கும் மரண தண்டனையை வழங்கியது. விசாரணை முடிந்த ஒரு சில மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல் முறையீடு மறுக்கப்பட்டு ஆகஸ்ட் 25, 1936ல் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். நீதிமன்றத்தில் இல்லை என்றாலும் முக்கிய குற்றவாளி லியோன் ட்ரொட்ஸ்கி, அவருடைய மகன் லியோன் செடோவ் ஆகியோரும் பட்டியலில் இருந்தனர். நோர்வேயில் இருந்து ட்ரொட்ஸ்கி இந்த விசாரணையை "உலகின் கருத்திற்கு எதிராக இரகசியப் போலீஸார் நடத்தியுள்ள மிகப்பெரிய, இழிந்த பெரும்குற்றம் சார்ந்த சதித்திட்டங்களில் ஒன்று" என்று கண்டித்தார்.[2]

சோவியத் ஆட்சியின் அழுத்தத்தின்பேரில் நோர்வேயில் இருந்த சமூக ஜனநாயக அரசாங்கம் ஸ்ராலின் போல்ஷிவிக் தலைவர்களை கொலைகார முறையில் போலிவிசாரணைகளில் சிக்கவைப்பதை பகிரங்கமாக அம்பலப்படுத்துவதை தடுக்கும் விதத்தில் ட்ரொட்ஸ்கியை சிறையில் வைத்தது. கிட்டத்தட்ட நான்கு மாத காலத்திற்கு அவர் எங்கு வைக்கப்பட்டார் என்பதை எவருக்கும் கூறப்படவில்லை. வெளியுலகோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருந்தார். ஸ்ராலினிச ஆட்சி அவரைப்பற்றிய தன் பொய்கள் நிறைந்த கண்டனங்களை பரப்பியது. டிசம்பர் 19, 1936 வரை நோர்வேஜியக் கட்டுப்பாடு முடியவில்லை; அதன்பின் ட்ரொட்ஸ்கி மெக்சிகோவிற்கு சென்ற ஒரு சரக்குகள் கப்பலில் ஏற்றப்பட்டார்; மெக்சிகோவின் அரசாங்கம் அவருக்குப் புகலிடம் கொடுத்தது.

அவர் புறப்படுவதற்கு முன்பு ட்ரொட்ஸ்கி எழுதிய கடைசிக் கடிதம் அவருடைய மூத்த மகனான லெவ் செடோவிற்கு ஆகும். அதில் லெவ்விடம் அவரும் அவருடைய இளைய சகோதரர் செர்ஜியும் தன் வாரிசுகள் என்றும் அவருடைய எழுத்துக்களில் இருந்து கிடைக்கும் பணம் அனைத்தும் அவர்களுக்கு உரியது என்றும் அவரிடம் வேறு எந்த சொந்துக்களும் இல்லை என்றும் ட்ரொட்ஸ்கி தகவல் கொடுத்தார். லெவ் செடோவிற்கு உருக்கமான வேண்டுகோளுடன் கடிதம் முடிக்கப்பட்டிருந்தது; "நீ எப்பொழுதாவது செர்ஜேயைப் பார்த்தால், நாங்கள் அவனை ஒரு போதும் மறந்ததில்லை என்றும் ஒரு பொழுதும் மறக்கமாட்டோம் என்றும் சொல்" என்று ட்ரொட்ஸ்கி எழுதியிருந்தார்.[3] ஆனால் செடோவ் தன்னுடைய இளைய சகோரதரரை ஒரு பொழுதும் பார்க்கவோ, பேசவோ இல்லை. ஸ்ராலினுடைய உத்தரவின்பேரில் செர்ஜி அக்டோபர் 29, 1937ல் தூக்கிலிடப்பட்டார். லெவ்வும் தன்னுடைய தாய் தந்தையருடன் ஒருபொழுதும் இணையப் போவது இல்லை. சோவியத் இரகசியப் போலீஸ் முகவர்கள் நடத்திய படுகொலை முயற்சியில் அவர் பெப்ருவரி 16, 1938ல் கொலையுண்டார்.

ட்ரொட்ஸ்கியும் நத்தாலியா செடோவாவும் ஜனவரி 9, 1937ல் மெக்சிகோவிற்கு வந்து சேர்ந்தனர். மெக்சிகோ நகரத்தின் புறநகர் கொயாகான் நகரில் Diego Rivera வுடைய புகழ் பெற்ற Blue House இல்லத்தில் அவர்கள் விருந்தாளிகளாக வாழ்ந்தனர். ஸ்ராலினுடைய போலிவழக்குகளை அம்பலப்படுத்தும் போராட்டங்களில் ட்ரொட்ஸ்கி உடனடியாக ஈடுபட்டார். பழைய போல்ஷிவிக்குகள் மீது இரண்டாம் குற்ற விசாரணை தொடங்க இருந்தது. இம்முறை 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதில் யூரி பியாராகோவ், கார்ல் ராடேக் ஆகியோரும் அடங்கியிருந்தனர். ஜனவரி 20, 1937ல் படமாகப் பதிவு செய்யப்பட்ட உரையில் (இன்று வலைத் தளத்தில் எளிதாக காணக்கூடியது) ட்ரொட்ஸ்கி பின்வருமாறு அறிவித்தார்.

எனக்கு எதிராக ஸ்ராலின் நடத்தும் விசாரணை ஆளும் கும்பலின் நலன்களுக்காக கடும் விசாரணை வழிவகைகளின் மூலம் வற்புறுதல்களினால் பெறப்பட்ட போலியான ஒப்புதல் வாக்குமூலங்கள் மூலம் கட்டமைந்துள்ளது. சினோவியேவ்-காமனவ், பியாராகோவ்-ராடேக் மீதான மாஸ்கோ விசாரணைகளை காட்டிலும் கூடுதலான கொடூரமும் கெடுநோக்கும் நிறைந்த குற்றங்கள் வரலாற்றில் இல்லை. இந்த விசாரணைகள் கம்யூனிசத்தில் இருந்தோ, சோசலிசத்தில் இருந்தோ வரவில்லை, ஸ்ராலினிசத்தில் இருந்துதான் வந்துள்ளன; அதாவது மக்கள் மீது நடத்தப்படும் அதிகாரத்துவத்தின் பொறுப்பற்ற சர்வாதிகாரத்தில் விளைந்தவை.

என்னுடைய முக்கிய பணி இப்பொழுது என்ன? உண்மையை வெளிப்படுத்துதல்தான். உண்மையான குற்றவாளிகள் குற்றம்சாட்டுபவர்கள் என்பதன் பின் மறைந்துள்ளனர் என்பதைக்காட்டி நிரூபிப்பதுதான் [4]

சோவியத் ஆட்சி தொடுத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்ப்புக் கூற ஒரு சர்வதேச விசாரணைக் குழு நிறுவப்பட வேண்டும் என்று ட்ரொட்ஸ்கி ஒரு அழைப்பு விடுத்தார். "என்னுடைய கோப்புக்கள் அனைத்தும், ஆயிரக்கணக்கான சொந்த, பகிரங்கக் கடிதங்கள் என்று என்னுடைய சிந்தனை, செயலை அன்றாடம் பிரதிபலிப்பவை, இடைவெளி இன்றி அக்குழுவிற்கு வழங்கப்படும். என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை!' என்று உறுதியளித்தார். தனிப்பட்ட முறையிலோ, அரசியலிலோ தன்னுடைய கெளரவத்தில் எந்தக் களங்கமும் இல்லை என்றும் ட்ரொட்ஸ்கி அறிவித்தார்.

மெக்சிகோவில் கொயாகானில், ட்ரொட்ஸ்கி தன்னுடைய வக்கீல் ஆல்பேர்ட் கோல்ட்மன்னிடம் டுவே ஆணைக்குழு (Dewey Commission) விசாரணைகளின்போது கலந்தாலோசிக்கின்றார். அவருடைய மனைவி நத்தாலியா அவருக்கு இடது புறத்தில் உள்ளார்.

மூன்று மாதங்களுக்குள், ஏப்ரல் 10, 1937ல் விசாரணைக் குழு கொயாகானில் புகழ்பெற்ற அமெரிக்கத் தத்துவஞானியான ஜோன் டுவேயின் தலைமையில் கூட்டப்பட்டது. ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் அவருடைய ஏராளமான தாராளவாத நண்பர்களான லில்லியன் ஹெல்மான், மால்கோம் கெளலி, கோர்லிஸ் லாமோன்ட் என்ற புகழ் பெற்றவர்கள் உட்பட-- குழு அமைக்கப்படுவதற்கு எதிராக அழுத்தம் கொடுத்தனர். அந்த முயற்சி தோற்றதும், குழுவின் விசாரணையை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்கு ட்ரொட்ஸ்கி குழுவின் முன் சாட்சியம் அளித்தார், ஸ்ராலினிச ஆட்சி சுமத்திய குற்றசாட்டுக்கள் தொடர்புடைய நூற்றுக்கணக்கான வினாக்களுக்கு பதிலளித்தார். ஒவ்வொரு மணித்தியாலமும் சாட்சியம் அளித்த அவரைக் கண்ணுற்ற எவரும் அந்த அனுபவத்தை மறந்துவிட முடியாது. விசாரணையைப் பார்த்திருந்த ஜேம்ஸ் டி.ஃபாரெல் தன்னுடைய பிந்தைய எழுத்துக்களில் ட்ரொட்ஸ்கியிடம் இருந்த மகத்தான அறநெறித்தன்மை பற்றி நினைவு கூர்ந்தார்.

அவருடைய இறுதிப் பேருரை, ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டு, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, குழு உறுப்பினர்களை பெரும் உணர்வில் ஆழ்த்தியது. ட்ரொட்ஸ்கியின் உரை முடிந்தபின், "நான் எது கூறினாலும் அது உச்சக்கட்டத்திற்கு எதிராக இருக்கும்" என்று டுவே குறிப்பிட்டார். [5] டிசம்பர் 1937 டுவே குழு அதன் முடிவுகளை அறிவித்தது. ட்ரொட்ஸ்கி "குற்றவாளி அல்ல" என்று அறிவிக்கப்பட்டார்; மாஸ்கோவில் நடத்தப்பட்ட விசாரணை "போலியாக தயாரிக்கப்பட்டது" என்று அறிவிக்கப்பட்டது.

லியோன் செடோவ்

டுவே குழுவின் தீர்ப்பு ட்ரொட்ஸ்கிக்கு அறநெறிரீதியாக பெரும் வெற்றியைப் பிரதிபலித்தது. ஆனால் அரசியல் பிற்போக்குத்தனத்தின் சக்தி வாய்ந்த இயக்கம் களைத்துவிடவில்லை. சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே போலீசார் நாள் ஒன்றிற்கு 1,000 பேருக்கும் மேலாக கொலை செய்து வந்தனர். ஸ்பெயினில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினின் இரகசியப் போலீஸின் கொலைகார வெறி உணர்வுகள் நிறைந்த எதிர்ப்புரட்சி அரசியல் பிராங்கோவின் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்தன. ஸ்ராலினிஸ்ட்டுக்களின் காட்டிக் கொடுப்பால் உறைந்து போன ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் பாசிசம் பரவியதையோ, போரினை நோக்கிய இயக்கத்தையோ தடுக்க முடியவில்லை. தன்னுடைய ஆற்றல்களை நான்காம் அகிலத்தை நிறுவுவதில் ட்ரொட்ஸ்கி குவிப்புக் காட்டினார். "உலக அரசியல் நிலைமையே முழுமையாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு வரலாற்று தலைமை நெருக்கடியால் எடுத்துக்காட்டப்படுகின்றது" என்று 1938 தொடக்கத்தில் அவர் எழுதினார். [6]

ட்ரொட்ஸ்கியின் முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அவருக்கு நெருக்கமான சக சிந்தனையாளர்கள், ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறையைப் பெருக்கினர். ஜூல் 1937ல் ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலர்களில் ஒருவரான எர்வின் வொல்ப் ஸ்பெயினில் கொலை செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் GPU இலிருந்து விலகி ஸ்ராலினைக் கண்டித்து, நான்காம் அகிலத்திற்கு தன்னுடைய விசுவாசத்தைத் தெரிவித்த இக்னாஸ் ரைஸ் பகிரங்கமாக சுவிட்சர்லாந்தில் படுகொலை செய்யப்பட்டார். பெப்ருவரி 1938ல் GPU செடோவைக் கொன்றது. ஜூல் 1938ல் நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்வ் கிளெமென்ட் பாரிசில் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த ஸ்ராலினுடைய அச்சுறுத்தல் ஆட்சி ஒருபுறம் இருந்தாலும், நான்காம் அகிலம் அதன் முதல் நிறுவன மாநாட்டை செப்டம்பர் 1938ல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட உரையில், ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் நோக்கம் "உழைப்பவர்கள், சுரண்டப்படுவபவர்கள் ஆகியோரின் முழு பொருளாதாய, அறநெறி சுதந்திரத்தை சோசலிசப் புரட்சி மூலம் அடைவதுதான்" என்று அறிவித்தார். சோவியத் அதிகாரத்துவத்தின் அச்சுறுத்தல் தன்மையை எள்ளி நகையாடினார். "தங்கள் மழுங்கிய, இழிந்த உணர்வில், நம்மை அச்சுறுத்திவிட முடியும் என்று தூக்கிலிடுபவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் தவறு செய்கின்றனர்! தாக்குதல்களால் நாம் வலிமை அடைகிறோம். ஸ்ராலினின் மிருகத்தனமான அரசியல், பெரும் ஐயுறவுமிக்க அரசியல்தான்." [7]

நான்காம் அகிலம் நிறுவப்பட்டதற்கு பின்னர், ட்ரொட்ஸ்கியின் வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவருடைய அறிவார்ந்த படைப்பாற்றல் மற்றும் அரசியல் தொலைநோக்கு சிறிதும் குறைந்துவிடவில்லை. ஒரு இரண்டாம் உலகப் போர் தவிர்க்க முடியாமல் வந்துவிடும் என்பதை மட்டும் அவர் அறிந்திராமல், ஸ்ராலின் ஹிட்லருடன் ஒரு கூட்டு சேர முற்படுவதின் மூலம் தன்னுடைய சர்வதேசக் கொள்கையின்பேழிவு விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயல்வார் என்றும் ட்ரொட்ஸ்கி கணித்திருந்தார். 1939 ஆகஸ்டில் ஸ்ராலின் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்தபோது ட்ரொட்ஸ்கியின் ஆய்வுகள் நிரூபணமாகின. ஆனால் ட்ரொட்ஸ்கி மேலும், ஸ்ராலினின் காட்டிக்கொடுப்பானது யுத்தத்தின் கோரத்தில் இருந்து சோவியத் யூனியனை தவிர்த்துவைக்காது எனவும் எச்சரித்திருந்தார். சிறிதுகாலத்தினுள்ளேயே சோவியத் சோசலிச குடியரசு மீது ஹிட்லர் தனது இராணுவ பலத்தை திருப்பிவிட்டிருந்தான்.

தன்னுடைய வாழ்க்கையின் இறுதி மாதங்களில், போர் ஏற்கனவே மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சீற்றத்துடன் நடந்து கொண்டிருந்தபோது, ட்ரொட்ஸ்கி சோசலிசத்தின் வரலாற்று முன்னோக்கை பரந்த அவநம்பிக்கைத்தன்மை, நிராகரிப்பிற்கு எதிராகப் பாதுகாத்தார். சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தோரை உடனடியான புரட்சி பற்றிய முற்கணிப்புக்கள் மூலம் திருப்திப்படுத்த அவர் முயலவில்லை.

ஒரு முற்கணிப்பை வழங்குவதற்கு மாறாக, ட்ரொட்ஸ்கி ஒரு வினாவை எழுப்பினார்: "நீண்ட காலப்போக்கில் புறநிலை வரலாற்றுத் தேவை தொழிலாள வர்க்கத்தின் முன்னணி படையில் முழு நனவுடன் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்ளுமா--அதாவது இந்தப் போரின் போக்கின்போதும், இது எதிர்கொள்ள இருக்கும் ஆழ்ந்த அதிர்ச்சிகளுக்கு இடையே, தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தலைமைதாங்கி செல்லக்கூடிய உண்மையான புரட்சிகரத் தலைமை உருவாகுமா?'

தொழிலாள வர்க்கம் அனுபவித்துள்ள பல தோல்விகள் அதன் புரட்சி தகமைகள் பற்றி பரந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன என்பதை அவர் உணர்ந்திருந்தார். இத்தோல்விகளுக்கு காரணத்தை அரசியல் தலைவர்களிடம் இருந்து அகற்றி தொழிலாள வர்க்கத்திடமே சுமத்திய பலர் இருந்தனர். கடந்தகால தோல்விகள் தொழிலாள வர்க்கம் அரச அதிகாரத்தை எடுத்து, நிலைநிறுத்திக் கொள்ள இயலாது என்று "நிரூபித்து விட்டதாக" நம்பியவர்களுக்கு மனித குலத்தின் வரலாற்று நிலைமை நம்பிக்கையற்றதாகத்தான் தோன்றும். ஆனால் அந்த நம்பிக்கையின்மை, மனத்தளர்ச்சி என்ற முன்னோக்கிற்கு எதிராக, ட்ரொட்ஸ்கி மற்றொன்றை முன்வைத்தார்: "தன்னுடைய மனத்தில் இயல்பான, ஆழ்ந்த தன்மை உடைய, இடைத்தொடர்பு ஏற்படுத்தமுடியாத மக்களின் உந்துதலான தங்களை குருதி கொட்டும் முதலாளித்துவப் பெரும் குழப்பத்தில் இருந்தும், பழைமைவாத, நாட்டுப்பற்று மற்றும் முற்றிலும் முதலாளித்துவ தன்மையுடைய காலம் கடந்துவிட்ட தொழிற்சங்க தலைமையில் இருந்து தளைகளை அகற்றி விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று தெளிவு கொண்டவர்களிடையே இது முற்றிலும் மாறுபட்டதாகத்தான் விளங்கும்"[8]தான் போருக்குப் பின் உயிரோடிருப்பேன் என்று ட்ரொட்ஸ்கி எதிர்பார்க்கவில்லை. சோவியத் ஒன்றியம் நாஜி ஜேர்மனியின் வெளிப்படையான மோதலினுள் இழுக்கப்படுமுன் தன்னைக் கொல்வதற்கு அனைத்து முயற்சிகளையும் ஸ்ராலின் மேற்கொள்வார் என்று ட்ரொட்ஸ்கி கருதினார். மே 24, 1940 அதிகாலையில் சுவருக்கு வெள்ளை அடிக்கும் டேவிட் அல்வாறோ சிக்குய்ரோஸ் (David Alfaro Siqueiros) தலைமையில் ஒரு படுகொலை செய்யும் குழு ட்ரொட்ஸ்கியும் நத்தாலியாவும் வாழ்ந்து வந்த இல்லத்திற்குள் ஊடுருவியது. வளாகத்திற்குள் வேலை பார்த்து வந்த ஸ்ராலினிச முகவர் ஷெல்ட்டன் ஹார்ட்ட (Sheldon Harte) இல்லத்தின் வெளிக்கதவுகளைப் பூட்டாமல் வைத்திருந்தார். ஸ்ராலினின் தாக்கும் படையினர் ட்ரொட்ஸ்கி, நத்தலியாவின் படுக்கை அறையுள் புகுந்து இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் குண்டுகளைப் பொழிந்தனர். கிட்டத்தட்ட அதிசயிக்கும் வகையில் இருவரும் இத்தாக்குதலில் இருந்து தப்பினர். ஆனால் மே மாதத் தாக்குதல் ஒன்றும் கடைசித் தாக்குதல் அல்ல என்பதை ட்ரொட்ஸ்கி அறிந்திருந்தார். தான் எதிர்கொண்டிருந்த ஆபத்தை மற்றவர்களைவிட அவர் நன்கு உணர்ந்திருந்தார். "எமது பிற்போக்குத்தன சகாப்தத்தில், ஆற்றின் போக்கிற்கு எதிராக ஒரு புரட்சியாளர் நீந்த வேண்டியுள்ளது. என்னுடைய முழுத் திறமையையும் இதில் காட்டி வருகிறேன். உலகப் பிற்போக்குத்தனத்தின் அழுத்தம் என்னுடைய தனிப்பட்ட விதி, மற்றும் எனக்கு நெருக்கமானவர்களின் விதியுடன் மீதும் எவ்வித தயக்கமின்றியும் வெளிப்படுத்துகிறது. இதில் என்னுடைய தனிப்பட்ட சாதுர்யம் ஏதும் இல்லை: வரலாற்றுச் சூழல்களின் இடைச் செயல்களின் விளைவுதான் இது" என்று அவர் கூறினார். [9]

1940 ஆகஸ்ட் 20ல், ஒரு GPU முகவரால் ட்ரொட்ஸ்கி தாக்கப்பட்டு, பட்ட காயங்களின் விளைவாக மறுநாள் இறந்து போனார். அவருக்கு அப்பொழுது 60 வயது.

படுகொலை நடந்த சில மாதங்களுக்கு பின்னர் மக்ஸ் ஈஸ்ட்மன் ட்ரொட்ஸ்கியைப் பற்றி ஒரு இறுதிப் புகழாரம் எழுதினார். விந்தையான முறையில் பெரும் முதலாளித்துவ கெளரவம் நிறைந்த ஏடான Foreign Affairs ல் அது பிரசுரமாயிற்று. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈஸ்ட்மன் ட்ரொட்ஸ்கியை அறிந்திருந்தார். ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியிருந்ததுடன் அவருடைய மிக முக்கியமான படைப்புக்கள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். அதில் ரஷ்ய புரட்சியின் வரலாறும் அடங்கும். ஈஸ்ட்மன் ஒன்றும் ட்ரொட்ஸ்கியைப் பற்றி விமர்சனமற்ற மதிப்பு கொண்டவர் அல்ல. அவர்களுடைய உறவு தீவிர வேறுபாடுகளைக் கொண்ட காலங்களையும் கண்டிருந்தது. ட்ரொட்ஸ்கியின் வாழ்வில் கடைசி ஆண்டுகளில் ஈஸ்ட்மன் தன்னுடைய தீவிரத்தமை வாய்ந்த கருத்துக்களையும் நிராகரித்து, மார்க்சிசத்தை உறுதியாக நிராகரித்து இன்னும் தீவிரமாக வலதிற்கு மாறியிருந்தார். பெப்ருவரி 1940ல் கடைசித் தடவையாக மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியும் ஈஸ்ட்மனும் சந்தித்தபோது, தோழர்களாக என்று இல்லாமல் சற்றே விரோதப்போக்கு கொண்டிருந்த இரு பழைய நண்பர்களாகத்தான் அச்சந்திப்பு இருந்தது. இக்கட்டத்தில் தன்னுடைய நிலைப்பாட்டிற்கு மற்றவரை மாற்றும் முயற்சியில் இருவரில் ஒருவருக்கும் ஈடுபாடு இல்லை.

ட்ரொட்ஸ்கியுடன் அரசியலில் இனி தொடர்பற்றவர் என்ற உண்மை ஈஸ்ட்மனின் இறுதிப் பாராட்டிற்கு அசாதாரணமான சான்றுகளுடைய மதிப்பைக் கொடுக்கிறது. "லியோன் ட்ரொட்ஸ்கியின் குணநலனும், விதியும்" என்ற தலைப்பில் அவர் எழுதிய இரங்கல் குறிப்பு கீழ்க்கண்ட விதத்தில் தொடங்குகிறது:

இந்தக் கடந்த 15 ஆண்டுகளில் பதவி இறக்கல், நிராகரிப்பு, நாடுகடத்தப்படல், முறையாக அவதூறாகக் கூறப்படுவதை எதிர்த்தல், அவரை அறிந்தவர்களும் காட்டிக் கொடுத்தது, அறியாதவர்கள் பல முறையும் அவருடைய உயிரைப் பறிக்கும் முயற்சிகள், இறுதியில் படுகொலைக்கு உட்படுவோம் என்ற உறுதியான நிலை ஆகிய தலைவிதியின் தாக்குதல்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி மாட்சிமையுடன் நின்றார். அவருடைய சக செயலர்கள், அவருடைய உதவியாளர்கள், உறவினர்கள் மற்றும் அவருடைய குழந்தைகளே ஒரு இழிந்த, பிறர் துன்பத்தின் இன்பம் காணும் விரோதியால் கொல்லப்பட்டனர். விவரிக்க முடியாத பெரும் தனிச் சோகங்களை அவர் அனுபவித்தார், ஆனால் அவருடைய மகத்தான கட்டுப்பாட்டில் இருந்து சிறிதும் தளரவில்லை. தன்னுடைய புத்திசாலித்தனம், தர்க்கம் அல்லது இலக்கிய நடையை இத்தாக்குதல்கள் ஒரு கணமேனும் பாதிக்க அவர் அனுமதிக்கவில்லை, அவற்றின்மீது கொண்ட பிடியை விடவும் இல்லை. வேறு எந்த படைப்பாளியையும் மருத்துவமனைக்கும் பின்னர் கல்லறைக்கும் நரம்புத் தளர்ச்சிக்காக அனுப்பியிருக்கக்கூடிய துயரங்களில், ட்ரொட்ஸ்கி உறுதியுடன் தன்னுடைய கலையை வளர்த்து, முன்னேற்றமும் கண்டார். லெனினைப் பற்றிய அவருடைய முற்றுப்பெறாத வாழ்க்கை நூல், நான் பாதி மொழிபெயர்த்தது, அவருடைய மாபெரும் படைப்பாக இருந்திருக்கும். நம்முடைய குலம் அத்தகைய புத்துணர்ச்சி பெறத் தேவைப்பட்ட நேரத்தில் அவர் மனிதனைப் பற்றிய ஒரு தோற்றத்தைக் கொடுத்தார்.

வரலாற்றில் அவருடைய மிகப் பெரிய இடத்தைப் பற்றி எந்த ஐயமும் இல்லை. ஸ்பார்ட்டாக்காஸ், க்ராச்சி, ரோபேஸ்பியர், மாரட் ஆகியோரின் பெயர்களுடன் இவருடைய பெயரும் ஒரு தலையாய புரட்சியாளர், எழுச்சி பெற்ற மக்களின் பெரும் தைரியம் வாய்ந்த தலைவர் என்று அவருடைய பெயர் நிலைத்திருக்கும். [10]

இச்சொற்கள் ட்ரொட்ஸ்கியின் வாழ்விற்கு நீடித்த முக்கியத்துவ உணர்வை அளிக்கின்றன. மனித சுதந்திரத்திற்கான பெரும் போராளிகளில் ஒருவராக 2,000 ஆண்டுகளுக்கும் அவர் நினைவிற் கொள்ளப்படுவார் என்பதைத்தான் தன் வாசகர்களுக்கு ஈஸ்ட்மன் கூறுகிறார்.

ஆனால், ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 70 ஆண்டுகளுக்கு பின்னர் நாம் ஒரு அரசியல் பிற்போக்குத்தனமும், புத்திஜீவிதமான முறையில் நேர்மையற்ற பிரச்சாரமும் "வரலாற்றில் அவருடைய மாபெரும் இடத்தை" பறிக்கும் வகையிலான பிரச்சாரத்திற்கு நடுவே உள்ளோம். ரோபர்ட் சேர்வீஸின் ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூல் இந்த வரலாற்றுச் சிதைவு, தவறாக்குதல் என்னும் பிரச்சாரத்தில் ஒரு மைல் கல் ஆகும். அவர்களின் நோக்கம் தற்கால வரலாற்றில் உள்ள இந்த முக்கிய மனிதரின் நடவடிக்கைகளையும், சிந்தனைகளையும் இழிவுபடுத்துவது ஆகும்.

சேர்விஸ், ட்ரொட்ஸ்கி பற்றி எழுதியுள்ள நூலை ஆய்வு செய்வதற்கு முன்பு, சோவியத் ஒன்றியத்திற்குள்ளும் வெளியேயும் ட்ரொட்ஸ்கி பற்றி வரலாற்றாளர்கள் கூறியது பற்றி ஒரு சில ஆரம்பக் கருத்துக்களை கூறவேண்டும். சோவியத் ஒன்றியத்திற்குள், ஸ்ராலினின் சர்வாதிகார காலத்தில், ட்ரொட்ஸ்கி முற்றிலும் விரும்பத்தகாதவாராக்கப்பட்டார். 1920 களின் தொடக்கத்தில் இருந்து ட்ரொட்ஸ்கிக்கு எதிராக எழுந்த சோவியத் அதிகாரத்தின் அரசியல் போராட்டப் பிரச்சாரம் முதலிலும் முக்கியமானதுமாக வரலாற்றைத் திரிபுபடுத்துவதில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற்கட்சியின் வரலாறு பற்றி, அதன் போல்ஷிவிக், மென்ஷிவிக் பிரிவுகளுக்கு இடையே நீடித்திருந்த போராட்ட வரலாறு பற்றி, அந்தப் பொதுவான சூடு பிடித்த போராட்டத்தில் இருந்த போக்குகள், தனிநபர்கள் பங்கு பற்றி, மற்றும் இறுதியாக அக்டோபர் புரட்சி பற்றியும் இருந்தது. அக்டோபர் புரட்சியிலும் அதைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரிலும் ட்ரொட்ஸ்கி கொண்டிருந்த பங்கு மகத்தானதாக இருந்ததால், 1923ல் அவரை இழிவுபடுத்தும் பிரச்சாரம் தொடக்கப்பட்ட போது அதற்கு முறையாக வரலாற்றைத் திரிபுபடுத்தி கூறுதல் தேவையாயிற்று.

1923-24 ல் தொடங்கிய இப்பொய்களின் பிரச்சாரம், ட்ரொட்ஸ்கி "விவசாயிகளை குறைத்துமதிப்பிட்டார்" என்ற குற்றச்சாட்டைக் கொண்டிருந்தது. 1917க்கு முன் நடைமுறை கருத்து வேறுபாடுகள் மற்றும் சோவியத் அரசாங்கத்தில் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி எழுந்த பூசல்களின் விளைவைப் பிரதிபலித்த இந்த அபத்தமான குற்றச்சாட்டு பொதுவாக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு அரங்கு அமைத்தது. அக்கோட்பாடுதான் அரசாங்க அதிகாரத்தை போல்ஷிவிக் வெற்றி பெறுவதற்கும் அதன் உலகான உலக சோசலிசப் புரட்சியை அடைவதற்கும் மூலோபாய அஸ்திவாரமாக இருந்தது. ட்ரொட்ஸ்கிக்கு எதிரான போராட்டம் என்பது அக்டோபர் புரட்சியின் சர்வதேச வேலைத்திட்டத்தை ஒரு தேசிய வடிவமைப்பிற்குள் தன்னுடைய சமூக சலுகைகளை காப்பாற்ற வேண்டிய நிலையில் பெரும் அழுத்தத்தை கொண்டிருந்த அதிகாரத்துவம் நிராகரித்ததைத்தான் பிரதிபலித்தது. இவ்விதத்தில், ட்ரொட்ஸ்கியிடம் இருந்ததாகக் கூறப்பட்ட மரபு பிறழ்ந்த கருத்துக்களை (ட்ரொட்ஸ்கிக்கும் லெனினுக்கும் இடையே 1917க்கு முன்பு இருந்த கருத்து வேறுபாடுகள் பற்றிய தவறான விளக்கங்களை ஆதாரமாகக் கொண்டது) மற்றும் "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற வேலைத்திட்டம் பிரகடனப்படுத்தப்படுவதற்கும் இடையே இருந்த இணைந்த உறவின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கியைப் பற்றி பழிவாங்கும் வகையிலான கண்டனங்கள் எழுந்தன. 1923ல் தொடங்கிய இப்பொய்கள் பெரும் சோகத்தைத் தந்த விளைவுகளைக் கொடுத்தன. 1937ல் ட்ரொட்ஸ்கி எழுதியபடி, மாஸ்கோ வழக்குகளுக்கான நீதித்துறை போலித்தயாரிப்புக்கள் அவற்றின் மூலங்களை இந்த "சிறிய" வரலாற்றுச் சிதைவுகள் எனப்பட்டதில் இருந்து பெற்றன.

1956ல் ஸ்ராலினின் குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும், ட்ரொட்ஸ்கியின் வரலாறு, அரசியல்ரீதியாக மறுசீரமைக்கப்படுவதை சோவியத் அதிகாரத்துவம் மிகத்தீவிரமாக எதிர்த்தது. உத்தியோகபூர்வமாக அவர் கெஸ்டோபோவுடன் (Gestapo) கூட்டாக இருந்தார் என்று கூறவில்லை என்றாலும், சோவியத் ஆட்சியும் அதன் கூட்டுக்களும் 1920களின் கடைசியில் "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிராக ஸ்ராலின் நடத்திய போராட்டத்தை பாதுகாத்து ஆதரித்தன. ரஷ்ய சோசலிசத்தின் வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் பங்கு, அக்டோபர் புரட்சியின் தலைமையில் அவர் பங்கு, செம்படையை தோற்றுவித்தது, உள்நாட்டுப் போரில் அது பெற்ற வெற்றியில் அவர் பங்கு, எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தின் பங்கு ஆகியவை அனைத்தும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் வரை திட்டமிட்டபடி திரிவுபடுத்தப்பட்டன. மரணத்திற்குப் பின்னான ட்ரொட்ஸ்கியின் நிலை மீட்கப்பட வேண்டும் என்று 1988ல் கோர்ப்பஷேவ் உத்தரவிட்டதாக திரு.சேர்வீஸ் கூறுகிறார் [p.2] இது பேராசிரியர் சேர்வீஸின் கணக்கிலடங்கா தவறுகளில் ஒன்றாகும். சோவியத் அரசாங்கத்தால் ஒருபொழுதும் உத்தியோகபூர்வமாக ட்ரொட்ஸ்கி மறுசீரைமைக்கப்படவில்லை.

ஐசக் டொய்ச்சர்

சோவியத்திற்கு வெளியே, ட்ரொட்ஸ்கியைப் பற்றிக் கூறியவை முற்றிலும் வேறுபட்டு இருந்தன. ஆயுததாரியாக்கப்பட்டு, நிராயுதபாணியாக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்ட தூதர் (The Prophet Armed, Unarmed, Outcast) என்று ஐசக் டொய்ச்சரால் எழுதப்பட்ட மூன்று பெரும் நூல்களின் பங்கு, ட்ரொட்ஸ்கியைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டி இருந்தது நன்கு அறியப்பட்டதாகும். ஆனால் ட்ரொட்ஸ்கியின் அசாதாரண வாழ்வைப் பற்றி டொய்ச்சர் எடுத்துரைத்தது பொதுவாக மார்க்சிசத்தின் மீது விரோதம் கொண்டிருந்த பரந்த அறிஞர் கூட்டத்தினிடையே 20ம் நூற்றாண்டின் வரலாற்றில் அவருடைய பெரும் பங்கு தவிர்க்க முடியாதது என்ற உண்மையை ஏற்ற விதத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவ்விதத்தில் ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகள் பற்றி பொதுவாக விரோதப்போக்குகொண்ட ரிச்சார்ட் பைப்ஸ் போன்ற வரலாற்றாளரைக்கூட டொய்ச்சரின் "பெரும் சிறப்பு உடைய" இரண்டாம் நூலைப் பற்றிய மதிப்பாய்வில் பின்வருமாறு ஒப்புக்கொள்ள வைத்தது: "தனிப்பட்ட தைரியமும் நேர்மையான அறிவார்ந்த தன்மையையும் ஐயத்திற்கு இடமின்றி ட்ரொட்ஸ்கி கொண்டிருந்தார்; இது லெனினுக்குப் பின்னர் அதிக அளவில் கோழைத்தனமும், ஏமாற்றுத்தனமும் நிறைந்த பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் பெற்றிருந்த குணத்திற்கு முற்றிலும் மாறான தன்மை ஆகும்."

சோவியத் வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் பங்கு பற்றி பெருகிய பாராட்டு டொய்ச்சரின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலினால் மட்டும் வந்தது என்று கூறவியலாது. 1950, 1960, 1970 களில் மற்ற முக்கிய வரலாற்றாளர்களின் படைப்புக்களும் ரஷ்யப் புரட்சியின் வரலாறு மற்றும் அதில் ட்ரொட்ஸ்கியின் பங்கு பற்றி ஆழ்ந்த அறிதலைக் கணிசமாகப் பெறுவதற்கு உதவின. குறிப்பிடத் தக்க வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது E.H.Carr, Leopold Haimson, Moshe Lewin, Alexander Rabinowitch, Richard Day, Pierre Broue, Robert V. Daniels, Marcel Liebman, Baruch Knei-Paz போன்ற அறிஞர்களின் படைப்புக்கள் ஆகும்.

சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஆண்டுகளிலும் அதன் கலைப்பிற்குப் பின்னரும் ட்ரொட்ஸ்கியைப் பற்றிக் கூறுவதில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. முதலில் சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே, ஸ்ராலினிச ஆட்சியின் நெருக்கடி அதிகமான நேரத்தில், பழைய வரலாற்றுத் திரிபுபடுத்தல் அதன் நம்பகத் தன்மையை இழந்துவிடும் என்பது தவிர்க்க முடியாததாயிற்று. ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் புகழிற்கு நலன் சேர்க்கும் விதத்தில் இந்த வழிவகை இருக்கும் என கருதக்கூடும். 1956க்குப் பின் கருத்து வேறுபாடு உடைய பிரிவினர் அவரைப் பற்றி தகவல்களை அறிய பெரும் ஆர்வத்துடன் இருந்தன என்பது உறுதி. ஆனால் 1970களில் இருந்து, சோவியத் அறிவுஜீவிகளின் இயக்கம் வலதுபுறம்தான் இருந்தது. ஸ்ராலிசத்திற்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பு பற்றி அதிக கவனம் செலுத்தாத Solzheinstyn உடைய Gulag Archipelago கருத்து வேறுபாடு கொண்ட இயக்கத்தின் முக்கிய நூலாயிற்று. இந்த இயக்கத்தின் எதிர்ப்பு ஸ்ராலினிசம் மார்க்சிசத்தை தவறாக்கியது என்பதால் அதை நிராகரிக்கவில்லை. மாறாக மார்க்சிசம் மற்றும் அதன் முழு புரட்சிகர வேலைத்திட்டத்தையும் நிராகரித்தது. இவ்விதத்தில் "கருத்துவேறுபட்ட" 1970, 1980 கள் எழுத்துக்களிடையேகூட ட்ரொட்ஸ்கியைப் பற்றிக் கூறப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் விரோதமாகத்தான் இருந்தன.

ஸ்ராலினிசத்தின் மீது அவர் கொண்டிருந்த எதிர்ப்பின் மீது வலியுறுத்தல் காட்டப்படவில்லை; மாறாக, ட்ரொட்ஸ்கியின் கொள்கைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின் ஸ்ராலின் செயல்படுத்திய கொள்கைகள் போன்றவற்றில் இருந்ததாகக் கூறப்பட்ட தொடர்ச்சி பற்றித்தான் எதிர்ப்பு காட்டப்பட்டது. இந்தப் போக்குத்தான் கோர்பச்ஷேவின் சகாப்தத்தில் குறிப்பிடத்தக்க வகையில் மேலோங்கி நின்றது. அப்பொழுதுதான் ட்ரொட்ஸ்கியின் பங்கு பற்றிய தொடர்பு உடைய உண்மையான வரலாற்று ஆவணங்கள், அவருடைய சில நூல்கள் ஆகியவை கிடைக்ககூடியதாக இருந்தது. ஸ்ராலின், ஸ்ராலினிசத்திற்கு எதிராக ஒரு மாற்றீடு இருந்தது என்று இந்த ஆவணங்களும், நூல்களும் மக்களிடையே சாதகமான உணர்வை ஏற்படுத்தக் கூடும் என்ற நிலைப்பாட்டை எதிர்க்கும் வகையில், ட்ரொட்ஸ்கிக்கு புதிய எதிர்ப்பு அவருடைய தனித்தன்மை, ஆளுமை பற்றிய சாதகமற்ற கருத்துக்களை முன்வைத்த விதத்தில் வெளிப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஆண்டுகளிலும் அது கலைந்தபின் உடனடியாகவும், பெருகிய முறையில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான எதிர்ப்பு இன்னொரு வெளிப்படையான பொதுவடிவமான ட்ரொட்ஸ்கியின் யூதப் பின்னணி பற்றி அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட, வெளிப்படையான யூத எதிர்ப்பு வடிவத்தில் இருந்தது.

ஸ்ராலினிச ஆட்சியின் சரிவைத் தொடர்ந்து வந்த அரசியல் வெற்றி என்னும் பிற்போக்குத்தன சூழல் முன்னாள் சோவியத்திற்கு வெளியே ட்ரொட்ஸ்கியைப் பற்றிக் கூறப்பட்டதன் தீவிரத்தை இழந்துவிடவில்லை. ஸ்ராலினிசத்திற்கு ஒரு வரலாற்று மாற்றீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்ற ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுத் தோற்றத்தை குறைமதிப்பிட, ஏன் அழிக்கவும் கூட, ஒரு பிரச்சாரம் தொடக்கப்பட்டது. 1990 களின் ஆரம்ப ஆண்டுகளில் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் ட்ரொட்ஸ்கி பற்றிய ஆய்வு இதழ் (Journal of Trotsky Studies) என்பதை வெளியிடுவதற்கு உதவிசெய்ய முன்வந்தது. விரைவில் தெளிவானதைப் போல் இந்த ஏட்டின் நோக்கம் ட்ரொட்ஸ்கியை இழிவுபடுத்துவதற்கு அவருடைய வரலாற்றுப் புகழ் பொருத்தமற்றது, ஏனெனில் இவை அனைத்தும் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் பற்றிய கட்டுக்கதைகளை அடிப்படையாக கொண்டவற்றை அதிகம் விமர்சனத்திற்குட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டதால் விளைந்தது என்று குறிப்பிட்டது. அவருடைய படைப்புக்கள் சுய தேவைக்கான நோக்கத்தை கொண்டிருந்தன, ஏன் தவறனாவை கூட என்று கூறப்பட்டது. இத்தாக்குதலின் முக்கிய இலக்கு ட்ரொட்ஸ்கியின் சுயசரிதையான எனது வாழ்க்கை (My Life) ஆகும். இந்நூலோ பல தசாப்தங்களாக இருபதாம் நூற்றாண்டின் இலக்கியத்தில் ஓர் அரிய படைப்பு என்ற சாதனையைப் பெற்றிருந்தது.

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைப் போக்கின் ஒவ்வொரு கூறுபாடும் அவருடைய சுயசரிதையில் கொடுக்கப்பட்டதுடன், மற்ற வரலாற்றாளர்களின் நூல்களில் இருந்தவை சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. ட்ரொட்ஸ்கி அக்டோபர் எழுச்சிக்கு தலைமை தாங்கினார்? இல்லை, போல்ஷிவிக் அதிகரத்தைக் கைப்பற்றிய முக்கிய இரவில் அவர் அதிக சிறப்பு இல்லாத செயல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். செம்படையின் வெற்றிக்கு ட்ரொட்ஸ்கி வழிநடத்தினார்? இல்லை, அவர் ஒரு ஆடம்பரத்தைக் காட்டிக் கொள்ளுபவர், இராணுவ உடையில் மிடுக்குடன் அலைவதைக் காட்டிக் கொள்ளப் பிரியப்பட்டவர். ட்ரொட்ஸ்கி அதிகாரத்துவத்தை எதிர்த்தார்? இல்லை, அவர் இயல்பாக பிளவு ஏற்படுத்துபவர், தொந்திரவு செய்பவர், வாதிப்பதைப் பெரிதும் விரும்பியவர் என மற்றைய ஆசிரியர்களால் கூறப்பட்டன.

இத்தகைய விதத்தில் வரலாற்றை வேறுவிதமாக எழுதுவதில் முக்கிய வல்லுனராக இயன் தாட்சர் இருந்தார்; இவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ட்ரொட்ஸ்கி பற்றிய ஆய்வு இதழ் (Journal of Trotsky Studies) ன் இணை ஆசிரியராக இருந்தார். அதன் பின் லெஸ்டர் பல்கலைக்கழகத்திற்கும், பின் மேற்கு லண்டனில் ப்ரூனல் பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். தாட்சருடைய வாழ்க்கைப் போக்கே கிட்டத்தட்ட ட்ரொட்ஸ்கிச எதிர்ப்புத் தவறுகளை இயற்றும் பயிலகத்தை தோற்றுவிப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இத்துறையில் அவருடைய முயற்சிகளின் உச்சக்கட்டம் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை நூலை அவர் எழுதியது ஆகும். இது 2003ல் Routledge ஆல் வெளியிடப்பட்டது. இன்று தாட்சரின் நூலைப் பற்றி நான் நேரத்தை செலவிழக்கத் தேவையில்லை. ஏற்கனவே இந்த சிதைவுகள், பொய்களின் தொகுப்பு பற்றி ஒரு பரந்த பகுப்பாய்வை நான் எழுதியுள்ளேன். இன்றைய விவாதத்திற்கு அவர் பொருத்தம் எதில் என்றால், ரோபர்ட் சேர்வீஸ் எழுதியுள்ள வாழ்க்கை நூலுக்கு அவர் முன்னோடி, முக்கிய ஊக்கம் கொடுத்தவர் என்பதில்தான். தன்னுடைய முன்னுரையில் திரு.சேர்வீஸ் அவருக்கு சிறப்பு புகழைச் சூட்டுகிறார்: "தன்னுடைய வாழ்வு முழுவதும் ட்ரொட்ஸ்கியைப் பற்றி எழுதுவதில் இயன் செலவிட்டார். என்னுடைய கையழுத்துப் பிரதியை சரிபார்த்து, ஆலோசனைகளைக் கூறியதில், அவருடைய தாராள உணர்வை நான் பாராட்டுகிறேன் என்று அவர் எழுதியுள்ளார். [p.xx] உண்மையில் இயன் தாட்சரின் "உணர்வு" சேர்வீஸின் வாழ்க்கை நூல் முழுவதும் நிறைந்துள்ளது. தன்னுடைய படைப்பு "ட்ரொட்ஸ்கியின் திசைதிரும்பும், தன்னை உயர்த்திக் கொள்ளும்" சுயசரிதையை அம்பலப்படுத்துகிறது என்று கூறும் சேர்வீஸ் உடைய அடிப்படை அணுகுமுறை முற்றிலும் தாட்சரிடம் இருந்துதான் கடன் வாங்கப்பட்டுள்ளது.

தன்னுடைய நூலை அறிமுகப்படுத்தும் போது, "ட்ரொட்ஸ்கிசவாதி அல்லாத ஒருவர் ரஷ்யாவிற்கு வெளியே இருந்து ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட முதல் முழுநீள நூல்" என்று சேர்வீஸ் விவரிக்கிறார். [p.xxi]

"முழுநீள " என்பதின் பொருள் என்ன? அது நீண்டு உள்ளது என்ற பொருளா? பொதுவாக "முழு நீள வாழ்க்கை நூல்" என்பது புத்தகத்தின் அளவை மட்டும் குறிப்பது இல்லை, மாறாக அதனுடைய பரப்பு, ஆழ்ந்த தன்மை இவற்றைக் குறிப்பது ஆகும். எந்த முக்கியமான வாழ்க்கை நூலும் தன்பொருள் பற்றி அவர் வாழ்ந்த காலத்தின் பின்னணியில் ஆராயும். நபரின் செயல்களை மட்டும் கூறாமல், அவருடைய எண்ணங்களின் தோற்றங்கள், வளர்ச்சி பற்றியும் ஆராயும். எழுதப்பட்டுள்ளவரின் உணர்வு, அறிவார்ந்த தன்மை ஆகியவற்றை உருவாக்கிய புறநிலை, தன்னிலை செல்வாக்குகளை அறிய முற்பட்டு அவற்றை விளக்கவும் செய்யும். சேர்வீஸின் வாழ்க்கை நூல் இவற்றில் எதையும் செய்யவில்லை-- ஆசிரியர் தன் பொருள் பற்றி இயல்பான விரோதத்தைக் கொண்டிருந்தார் என்பதினால் மட்டும் இல்லை (உண்மையில் அதுவும் ஒரு தீவிரக் குறைபாடுதான்). உண்மை என்னவென்றால் திரு.சேர்வீஸ் ட்ரொட்ஸ்கியின் வாழ்வு, சிந்தனைகள் பற்றி போதுமான அளவிற்கு அறிந்திருக்கவில்லை. மிகக் குறைவான நேரமும், அறிவார்ந்த முயற்சியும்தான் இப்புத்தகம் தயாரிப்பதற்கு செலவிடப்பட்டுள்ளது. ஆதலால், இது ஒரு அபத்தமான நூலாக உள்ளது.

தேவையான அறிவு, ஊகம், ஒருவேளை சற்று மடத்தனம்கூட, பெரிய வரலாற்று மனிதரைப்பற்றி "முழு நீள" வாழ்க்கை நூலை எழுத முயற்சி செய்யும் உண்மையான அறிவாளிகூட தன்மீது மகத்தான பொறுப்புக்களைச் சுமத்திக் கொள்ளுகிறார். இயன்ற அளவிற்கு தன்னுடைய மனத்தில் தான் எடுத்துக் கொண்டுள்ள பொருளைப் பற்றிய வாழ்வை முழுமையாக தோற்றுவித்துக் கொள்ள வேண்டும். அத்தகைய திட்டத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு, வாழ்க்கை நூலை எழுதுபவருக்குப் பெரும் பணியைக் கொடுக்கக்கூடியது, பல ஆண்டுகள் படிப்பது, ஆய்வு செய்தல், எழுதுதல் என்று தேவைப்படும். அறிவார்ந்த மற்றும் உணர்வுபூர்வ முறையில் நூல் எழுதுபவருக்கு பளு கொடுக்கும், ஆசிரியருக்கும் அவருடன் வாழ்பவர்களுக்கும் வேலை செய்பவர்களுக்கும். எனவேதான் பல வரலாற்றாளர்களும் தங்களுடைய நூல்களின் முன்னுரைகளில் தங்கள் மனைவி, கணவர், குழந்தைகள், நண்பர்கள், சக ஊழியர்கள் என்று அறிவார்ந்த, அறநெறித்தன்மை மற்றும் உணர்வு பூர்வ ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றியுணர்வைத் தெரிவிக்கின்றனர்.

G.V. Plekhanov உடைய வாழ்க்கை நூலை பேராசிரியர் சாமுவேல் பாரன் எழுதிய வழிவகையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 1963ல் இந்த நூல் வெளியிடப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் பாரன் ஒரு கட்டுரையில் தான் கடந்து வந்த பளுவைப் பற்றி விவரித்துள்ளார். இத்திட்டம் 1948ல் தன்னுடைய முதுமானி ஆராய்ச்சிப் பட்டத்திற்கான பொருளாக பிளெக்கானோவின் ஒரு விடயத்தை அவர் எடுத்துக் கொண்டார். அதை முடிக்கவே நான்கு ஆண்டுகள் ஆயின. ஆனால் அந்த ஆராய்ச்சிக் கட்டுரை குறுகிய கவனத்தை கொண்டுள்ளதால் பதிப்பிப்பதற்கு தகுதியுள்ளதாக்கவும், மேற்கொள்ளவிருந்த பணியின் முழு தாக்கங்களையும் தீர்த்துக்கொள்ள நான் ஒரு முழ நீள வாழ்க்கை நூலை எழுதத் தீர்மானித்தேன் என்றார். ஆதாரங்கள் ஏராளமாக இருந்து, எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பும் பெரும் சிக்கல் வாய்ந்ததாலும், எனக்கு இருந்த கால அவகாசமும் குறைந்து இருந்ததால், என்னுடைய திட்டத்தை முடிப்பதற்கு 11 ஆண்டுகள் ஆயின. அந்த ஆண்டுகளில் பெரும் பயிற்றுவிக்கும் சுமை, வீடு குடும்பத்தை காக்க வேண்டும் என்று இருந்தாலும், என்னுடைய மனதை விட்டு பிளெக்கானோவ் அகலவில்லை. கற்பிக்கும் ஆண்டின் பல மாலைகள், வார இறுதிகள், விடுமுறைகள் ஆகியவற்றை ஆராய்ச்சியிலும், எழுதுவதிலும் கழித்தேன். ...என்னுடைய உறங்கும், விழித்திருக்கும் மணிகள் பலநேரமும் என்னுடைய விடயம் பற்றிய சிந்தனை, வெளிப்பாடுகளில் கழிந்தன. எனக்கு நானே வகுத்துக் கொண்ட பணி முடிவே இல்லாதது போல் தோன்றியது; சில நேரம் நான் அதை முடிப்பதற்குள் என்னை அது முடித்துவிடுமோ என்று வியப்புற்றேன். இருந்தபோதிலும்கூட, அதை முடிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சிந்திக்கவில்லை; ஏனெனில் கூடுதலாகவே அதில் முதலீடு செய்திருந்தேன்; எனவே உறுதியாக என்னுடைய முடிவற்ற, அரும் உழைப்பை தொடர்ந்தேன். [12]

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து எழுதுவதற்கு பேராசிரியர் சேர்வீஸுக்கு எந்தனை காலம் பிடித்தது? அவருடைய முந்தைய பெரிய நூல், சொதப்பலும், குழப்பமும் நிறைந்த தோழர்கள்: உலக கம்யூனிசத்தின் வரலாறு (Comrades: A History of World Communism) என்பது 2007ல் வெளிவந்தது. அதற்கு முன் 2004ம் ஆண்டில் சேர்வீஸ் ஸ்ராலின் பற்றிய வாழ்க்கை நூலை வெளியிட்டார். இதில் எந்த நூலின் தரத்தைப் பற்றியும் நான் விவாதிக்கத் தயராக இல்லை. ஒன்று மட்டும் கூறுவேன், இரண்டுமே மகா மட்டமான நூல்கள் என்பதுதான் அது. ஆனால் அந்தப் பிரச்சினையை தற்போதைக்கு விட்டுவிடுவோம். நமக்கு இங்கு தேவையானது சேர்வீஸ் தன்னுடைய ட்ரொட்ஸ்கியை பற்றிய "முழுநீள" வாழ்க்கை நூலை உலகக் கம்யூனிச வரலாறு வெளியிட்ட இரு ஆண்டுகளுக்குள் வெளியிட்டார் என்பதுதான். அந்தக் கட்டத்தில், முந்தைய நூலின் பொருளுரையில் இருந்து தீர்மானத்தால், ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை பற்றி சேர்வீஸ் அறிந்தது மிகக் குறைவு ஆகும். ட்ரொட்ஸ்கியை பற்றிய குறிப்புக்கள் அதிகம் இல்லை, பல அப்பட்டமான உண்மை பற்றிய தவறுகளும் இருந்தன. ட்ரொட்ஸ்கியின் வாழ்வை முதலில் பறிக்கும் டேவிட் அல்பாரோ சிக்குய்ரோஸ் முயற்சியின் திகதியையே அவர் தவறாகக் கூறியுள்ளார். அது மே 1940ல் நடைபெற்றது. ஆனால் சேர்வீஸ் அது ஜூனில் நடைபெற்றது என்று கூறியுள்ளார். இன்னும் வியத்தகு முறையில் ட்ரொட்ஸ்கி இறந்த தினத்தைக் கூட தவறாகத்தான் கூறியுள்ளார்.

உள்நாட்டுப் போரின் போது ட்ரொட்ஸ்கி செம்படை இராணுவத் துருப்புக்களை வழிநடத்துகிறார்

ஆனால் தோழர்கள் என்ற புத்தகம் வெளிவந்து இரண்டே ஆண்டுகளுக்குள் சேர்வீஸின் ட்ரொட்ஸ்கி பற்றிய நூல் புத்தகக் கடைகளுக்கு வந்துவிட்டது. ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை பற்றி எழுதுவது என்றால் என்ன என்பது பற்றிச் சற்று சிந்தியுங்கள். அவருடைய அரசியல் வாழ்க்கை 43 ஆண்டுகள் படர்ந்திருந்தது. 1905 புரட்சியில், பெட்ரோகிராட் சோவியத்தின் தலைவர் என்ற முறையில் அவர் பெரும் பங்கு கொண்டிருந்தார். 1917ல் ரஷ்யாவிற்குத் திரும்பிவந்தபின், போல்ஷிவிக் கட்சியில் சேர்ந்த பின், ட்ரொட்ஸ்கி மீண்டும் பெட்ரோகிராட் சோவியத்தின் தலைவரானார். இராணுவப் புரட்சிக் குழுவின் தலைவராகவும் ஆனார். ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் அது 1917 அக்டோபர் எழுச்சியை ஒழுங்கமைத்து வழிநடாத்தி தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தது. 1918ல் இராணுவ விவகாரங்களுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றார். அந்த நிலைப்பாட்டில் செம்படையின் அமைப்புமுறை கட்டுப்பாட்டில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். 1919ல் இருந்து 1922 வரை லெனினுடன் அவர் கம்யூனிச அகிலத்தில் மிகமுக்கிய அரசியல் நபராக இருந்தார். 1923 இன் இறுதியில் ஆரம்பித்து இடது எதிர்ப்பு அமைக்கப்பட்டதில் இருந்து, அவர் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் மைய நபராக இருந்தார். 1929ல் சோவியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டபின், சர்வதேச இடது எதிர்ப்பு உருவாக ஊக்கம் கொடுத்தார். பின்னர் 1933 இருந்து 1938 வரை நான்காம் அகிலத்தின் கோட்பாடு மற்றும் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தினார்.

தன்னுடைய அரசியல் மற்றும் நடைமுறைச் செயல்களின் மகத்தான பரந்தளவை தவிர, ட்ரொட்ஸ்கி 20ம் நூற்றாண்டின் மிக அதிகம் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவராகவும் இருந்தார். அவருடைய வெளியிடப்பட்ட படைப்புக்களின் முழுத் தொகுப்பு கிட்டத்தட்ட 100 புத்தகங்களுக்கு மேல் செல்லும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்றுகூட கடிதங்கள், நாட்குறிப்புக்கள் என்று அவருடைய எழுத்துக்களின் கணிசமான பகுதி இன்னும் வெளியிடப்படவில்லை அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. இங்கு குறிப்பிட வந்தது, ஒரு தீவிர, முழுநீள ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு எழுதுவது என்பது ஒரு நேர்மையான அறிவாளிக்கு பல ஆண்டுகள் கடுமையான உழைப்பினால்தான் முடியும்.

மேலும் வாழ்க்கை நூலை எழுதுபவர் அவருடைய நூலுக்கு உரியவர் வாழ்ந்த காலத்தின் வரலாறு, சமூகச் சூழ்நிலகள் பற்றி ஆழ்ந்து அறிந்திருக்க வேண்டும் என்பதோடு எழுதுபவரின் கண்ணோட்டத்தை உருவாக்கிய அரசியல், கோட்பாட்டு அடிக்கருத்துக்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். தான் எழுதியுள்ள வாழ்க்கைச் சரிதம் ஒரு ட்ரொட்ஸ்கிச வாதியால் எழுதப்படவில்லை என்பதை ஒரு முக்கிய கருத்தாக பேராசிரியர் சேர்வீஸ் கூறுவதுடன், அரசியல் ரீதியாக ட்ரொட்ஸ்கிசத்துடன் நெருக்கமாகப் பிணைந்திருந்த மறைந்த Pierre Broué பற்றி இகழும் விதத்தில் "உருவ வழிபாட்டுக்காரர்" ("idolater.") என்றும் குறிப்பிடுகிறார். அரசியல் கடமைப்பாடுகள் ஒருபுறம் இருக்க Broué ஒரு தலை சிறந்த வரலாற்றாளராகவும் இருந்தார். அவர் ஏன் தனிப்பட்ட முறையில் சோசலிச அரசியலுடன் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதற்கும் நல்ல காரணம் உள்ளது. எப்படி Deutscher (ட்ரொட்ஸ்கிசவாதி அல்ல) ட்ரொட்ஸ்கி சுயசரிதை பற்றி எழுதுவதில் குறிப்பிடத்தக்க நலன் பெற்றிருந்தாரோ அவ்விதத்திலேயே. Broué, Deutscher இருவருமே தங்கள் படைப்புக்களைத் தொடங்கு முன்னரே மார்க்சிச, சோசலிச கலாச்சாரம் பற்றி உண்மையாக நன்கு அறிந்திருந்தனர். அது பல தசாப்தங்கள் அரசியல் ஈடுபாட்டினால் பெற்றுக்கொண்டதாகும்.

ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் எந்தத் தகுதியும் சேர்வீஸுக்கு கிடையாது. அத்தகைய வாழ்க்கை நூலை எழுதுவதற்கு மார்க்சிச இயக்கத்தில் சொந்தத் தொடர்பு இல்லை என்பது ஒரு முழுத் தடையில்லை என்பது ஏற்கப்பட வேண்டும். உண்மையில் அது அரசியலில் ஈடுபாடு உடைய வரலாற்றாளர் அடைவதற்கு கடினமான ஒருவித அறிவார்ந்த "விலகி நின்று காணும்" பார்வையைக் கூட அளிக்கும். ஆனால் பேராசிரியர் சேர்வீஸ் விலகி நிற்கவும் இல்லை அரசியலில் தொடர்பற்றும் இல்லை. மறைந்த Broué ஐ ஒரு "உருவ வழிபாட்டாளர்" என்று அவர் விளக்க முற்பட்டிருக்கையில், இன்னும் பெரும் நியாயத்துடன் சேர்வீஸை ஒரு "வெறுப்பவர்" என்று விவரிக்க முடியும். வெறுப்பு, குறிப்பாக தன்னிலை மற்றும் பழிவாங்கும் தன்மையுடையது, சேர்வீஸுக்கு வெளிப்படையாக உந்துதல் கொடுப்பது, உண்மையான அறிவார்ந்த தன்மையுடன் இயைந்து இருக்காது. மேலும் ஒரு வரலாற்றாளர், வாழ்க்கை நூலை எழுதுபவர் என்பதற்கு திரு.சேர்வீஸை தகுதியற்றதாக்கும் மற்றொரு குறையும் உண்டு. அது அறிவார்ந்த நேர்மையும், ஆர்வமும் அவரிடம் சிறிதும் இல்லாதது என்பதேயாகும்.

நான் ஏற்கனவே பேராசிரியர் சேர்வீஸ் எழுதியுள்ள வாழ்க்கை நூல் பற்றி ஒரு நீண்ட திறனய்வை எழுதியுள்ளேன்; அது நவம்பர் மாதம் American Association for the Advancemenjt of Slavic Studies (AAASS) ன் ஆண்டு மாநாட்டில் பரந்த அளவில் சுற்றறிக்கைக்கு விடப்பட்டது. ரஷ்ய வரலாற்றுத் துறையில் பல ஆயிரக்கணக்கனவர்கள் அதற்கு வந்திருந்தனர். கணிசமான வரலாற்றாளர்கள் என்னுடைய விமர்சனத்தை பெற்றுப் படித்திருந்தனர். பின்னர் நடந்த விவாதங்களில் அவர்களில் சகல வரலாற்று ஆசிரியர்கள் நான் காட்டிய கடின ஒலிக்குறிப்பு பற்றி குறிப்பிட்டளவு மறுப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால் எவரும் நான் கூறிய உண்மைகளில் ஒன்றைக்கூட சவால் விடவும் இல்லை, அவற்றிற்கு மாறுபட்ட விதத்திலும் கூறவில்லை.

இந்த வெளியிடப்பட்ட திறனாய்வு, ''வரலாற்று திரிபுபடுத்தலுக்கான சேவை'' ("In the Service of Hisotircal Falsification") 10,000 சொற்களுக்கும் மேலாகக் கொண்டுள்ளது. சேர்வீஸின் நூலைப் பற்றி இன்னும் என்ன கூற இருக்கிறது? என ஒருவர் கேட்கலாம். உண்மை என்ற என்றால், என்னுடைய ஆரம்ப விமர்சனம் பேராசிரியர் சேர்வீஸின் தவறுகள், சிதைவுகள், அரைகுறை உண்மைகள் மற்றும் அப்பட்டமான பொய்களை மேலெழுந்தவாரியாகத்தான் சுட்டிக்காட்டியுள்ளது.

நான் ஏற்கனவே கூறிவிட்ட கருத்துக்களை இன்று மீண்டும் எழுப்ப விரும்பவில்லை. ஆனால் பேராசிரியர் சேர்வீஸின் சிதைவுகள் பற்றி நான் கூறியவற்றை மீண்டும் எடுத்துரைப்பேன். அவருடைய ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூலில் ட்ரொட்ஸ்கியின் யூதப் பின்னணி மையப் பங்கைக் கொண்டிருப்பது பற்றி கூறவுள்ளேன். என்னுடைய முந்தைய ஆய்வில் நான் கூறியது போல்: "இந்த விஷயம் பற்றி சேர்வீஸ் தீவிரமாக இருப்பது, அப்பட்டமாகக் கூற வேண்டும் என்றால் அவர் இதைப்பற்றி முக்கியத்துவத்தை கொடுப்பது விரும்பத்தகாத, சந்தேகத்திற்குரியதாக தோன்றுகிறது. ட்ரொட்ஸ்கி ஒரு யூதர் என்பதுதான் சேர்வீஸின் வாழ்க்கை நூலில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. சேர்வீஸின் மனத்தில் இருந்து இது சற்றும் தொலைவில் இல்லை. தன்னுடைய கவனத்தில் இருந்து இவ்விடயம் தவறிப்போய்விடுமோ என்ற கவலையில் தன்னுடைய வாசகர்களுக்கு இந்த உண்மை பற்றி அவர் இடைவிடாமல் நினைவுறுத்திக் கொண்டிருக்கிறார்."[13] நான் குறிப்பிட்டுள்ளபடி ட்ரொட்ஸ்கியைப் பற்றிய அவருடைய விவரிப்புக்கள் இனவழி பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுவது தாராளமாக உள்ளது. (உதாரணமாக; "தன்னுடைய புத்திசாலித்தனம் பற்றி ட்ரொட்ஸ்கி செருக்கு கொண்டிருந்தார், தன்னுடைய கருத்துக்களைத் தயக்கமின்றி வெளியிட்டார். அவரை எவரும் மிரட்ட முடியாது. பெரும்பாலான மற்ற யூதர்களை விட இந்தக் கூறுபாடுகளை ட்ரொட்ஸ்கி அதிகம் கொண்டிருந்தார்.... " "...பொதுவாழ்வில் சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை தெளிவாக அனுபவித்த யூதர் இவர் மட்டும் அல்ல...", "இவருடைய மூக்கு மிக நீளமானதாகவே, வளைந்தோ இல்லை." இப்படிப் பல.)

ட்ரொட்ஸ்கி ஒரு சிறுவனாக

சேர்வீஸுக்கு பிடித்த உத்திகளில் ஒன்று வெளிப்படையான யூத-எதிர்ப்பு அணுகுமுறைகளை மேற்கோளின்றி கொடுப்பதாகும்: உதராணம், "போல்ஷிவிக் கட்சியின்மீது யூதர்கள் உண்மையில் மேலாதிக்கம் கொண்டதாகப் பரந்த முறையில் கூறப்படுகிறது." யாரால் கூறப்படுகிறது? செயல்பாட்டுவினையில் வேண்டுமென்றே ஆதாரத்தை அடையாளம் காட்டுவதற்குப் பயன்படும் மேற்கோளில்லாமல் யூத-எதிர்ப்பை அறிமுகப்படுத்துவதற்கு சேர்வீசை அதற்கான பொறுப்பேற்க வைக்காது செய்துவிடுகிறது. இது ஒன்றும் கபடமற்ற தவறு அல்ல. ஒரு அறிவார்ந்த நூலை இயற்றுவது பற்றி தெளிவான விதிகள் உள்ளன. பல தசாப்தங்கள் வரலாற்றாளராக வேலைபார்த்த சேர்வீஸ் இந்த விதிகளை வேண்டுமேன்றே பல முறையும் மீறுகிறார்.

முன்பு நான் குறிப்பிட்டபடி, ட்ரொட்ஸ்கியின் யூதப் பின்னணியை வலியுறுத்தும் சேர்வீஸின் முயற்சிகளை மற்றொரு உதாரணத்தின் மூலம் வலியுறுத்திக் காட்ட விரும்புகிறேன். அவர் தொடர்ந்து இளைஞரை "லெய்பா ப்ரான்ஸ்ரைன்" (Leiba Bronstein) என்று குறிப்பிடுவதுதான். "23 வயது வரை, தன்னுடைய புகழ்பெற்ற புனைப் பெயரை வைத்துக் கொள்ளும் வரை, ட்ரொட்ஸ்கி லெய்பா ப்ரான்ஸ்ரைன் என்றுதான் அறியப்பட்டிருந்தார்" [p.11]. எனவே சேர்வீஸ் எழுதியுள்ள வாழ்க்கை நூலில் முதல் 40 பக்கங்கள் அவர் இளைஞரை "லெய்பா" என்றுதான் அழைக்கிறார். இறுதியாக 41ம் பக்கத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையை சேர்வீஸ் அறிவிக்கிறார். ஏற்கனவே 18 வயதாகியிருந்து அதிகரித்தளவில் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த "லெய்பா" மாநில நகரமான நிகோலேவில் இல்யா சொகொலொவ்ஸ்கி, அலெஸ்சான்ரா சொகொலொவ்ஸ்காயா, கிரிகோரி சிவ் (Ilya Sokolovski, Alexandra Sokolvskaya, Grigory Ziv) என்ற புது நண்பர்களோடு சேர்கிறார். இவர்கள் யூதர்கள் என்று சேர்வீஸ் எழுதுவதுடன், "அவர்கள் Yiddish மொழி பேசவோ, எழுதவோ, படிக்கவோ இல்லை. மேலும் அவர்கள் ரஷ்ய முதல் பெயர்களைக் கொண்டிருந்தனர், அதன் ரஷ்ய சுருக்கங்களினால் அழைக்கப்படுவதைத்தான் விரும்பினர்; இல்யா இல்யூஷா எனவும், அலக்சாந்த்ரா சாஷா எனவும், ஷூரா ஷுருச்கா எனவும் கிரிகோரி க்ரிஷா எனவும் என்ற விதத்தில். அவர்களைப் போல் இருக்க விரும்பிய லெய்பா தான் லெவா [Lyova] என அழைக்கப்பட விரும்பும் முடிவை எடுத்தார். இலக்கணப்படி இதற்கு Yiddish பெயரான லெய்பாவுடன் தொடர்பு இல்லை; ஆனால் அது ஒரு பொதுவான முதல் பெயர், அதைப் போல் ஒலிக்கவும் உதவியது."

இந்த லெய்பா லெவாவாக மாற்றம் அடைந்த கதை சேர்வீஸின் வாதத்தில் இருக்கும் மத்தியக் கருத்தைத்தான் வலியுறுத்துகிறது: அதாவது ட்ரொட்ஸ்கி தன்னுடைய யூதப் பின்னணி பற்றி வெட்கம் அடைந்திருந்ததாகவும், தன்னுடைய சுயசரிதையில் அதைக் குறைத்துக் கூற முற்பட்டார் என்றும் ("தீவிர துல்லியமற்ற தன்மைகளில்" இதுவும் ஒரு உதாரணம்). எனவே சேர்வீஸ் இளவயது "லெய்பா ப்ரான்ஸ்லைன்" ("துணிவான யூதரான" டேவிட் ப்ரான்ஸ்ரைன் உடைய மகன்) எப்படி லயோவா ப்ரான்ஸ்ரைன் ஆகவும் சற்று பின்னர் லெவ் ட்ரொட்ஸ்கியாக மாற்றம் பெற்றார் என்ற உண்மைக் கதையைத் தான் கண்டுபிடித்தாக வாசகர்கள் நம்பவேண்டும் என்று நினைக்கிறார்.

டேவிட் ப்ரான்ஸ்ரைன்

நல்ல கதைதான், ஆனால் இதில் உண்மை ஏதும் உள்ளதா? தன்னுடைய சுயசரிதையில் ட்ரொட்ஸ்கி தன்னுடைய மிகச்சிறு பிராயத்தில் இருந்து லயோவா என்று அழைக்கப்பட்டதாகத்தான் நினைவு கூர்ந்துள்ளார். "எனது வாழ்க்கையில்" அவருடைய மொழிபெயர்ப்பாளர் மக்ஸ் ஈஸ்ட்மான் ஒரு அடிக்குறிப்பில் எழுதுவது: "ட்ரொட்ஸ்கியின் முழு, சரியான பெயர் லெவ் டேவிடோவிச் ப்ரான்ஸ்ரைன்; அவருடைய தந்தையார் பெயர் டேவிட் லியோன்டிவிச் ப்ரான்ஸ்ரைன். 'லயோவா' என்பது லெவ் போன்ற அதே போன்ற சுருக்கப் பெயர்களில் ஒன்று, இதன் பொருள் "சிங்கம்" (Lion) என்பது ஆகும். ஆங்கில, பிரெஞ்சு சொல்லாட்சிகளில் ட்ரொட்ஸ்கி லியோன் என்று அறியப்பட்டார், ஜேர்மனியில் லெயோ என்று அழைக்கப்பட்டார்." [14]

இளஞ்சிறுவர் லயோவா அல்லது தொடர்புடைய சிறு பெயர்கள் "லயோவோச்கா" போன்றவற்றைத் தவிர வேறுவிதமாக அழைக்கப்பட்டார் என்பதற்கு சேர்வீஸ் எந்த ஆவணச் சான்றுகளையும் கொடுக்கவில்லை. ப்ரான்ஸ்ரைன் குடும்பம் யூடிஷ் பேசவில்லை--அவர்கள் வீட்டில் பேசிய மொழி ரஷ்ய, உக்ரைனிய கலப்பு மொழி; எனவே அவர் லெய்பா என்று அழைக்கப்படுவதற்கான வெளிப்படைக் காரணம் ஏதும் இல்லை.

&ஸீதீsஜீ;ட்ரொட்ஸ்கி(வலது), இல்யா சொகொலொவ்ஸ்கி, டாக்டர் சிவ்,

ட்ரொட்ஸ்கியின் முதல் மனைவியாக பின்னால் ஆன அலெக்சாந்த்ரா சொகொலொவ்ஸ்காயா

எனவே "லெய்பா" லெவா என்ற பெயரை தன்னுடைய நண்பர்கள் போல் ரஷ்ய ஒலி காட்டும் விதத்தில் முதல் பெயரை ஏற்றல் என்ற சேர்வீஸின் கதை பற்றி என்ன கூறுவது? இந்தக் கதைக்கு சேர்வீஸ் இரு விஷயங்கள் பற்றி அடிக்குறிப்பு ஒன்று கொடுக்கிறார். 1) ட்ரொட்ஸ்கியின் ஆரம்ப கால புரட்சிகர இயக்கத்தின் நண்பராக இருந்த கிரிகோரி சிவ் எழுதிய விரோதப் போக்கு நிறைந்த நினைவுக்குறிப்பு; 2) நவம்பர் 1898ல் தன்னுடைய காதலி அலெக்சாந்த்ரா சொகொலொவ்ஸ்காயாவிற்கு ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதம்.

இந்த ஆவணங்கள் சேர்வீஸின் கதைக்கு உண்மை ஆதாரத்தை அளிக்கின்றன என்று ஒரு வாசகர் நியாயமாக நினைக்கலாம். ஆனால் பெரும்பாலான வாசகர்களுக்கு மூல ஆவணங்களைப் பார்க்க நேரமோ வழிவகையோ இருக்காது. இந்த ஆவணங்களில் எதுவுமே ஆங்கிலத்தில் இல்லை. சிவ்வின் நூல், 1921ல் வெளியிடப்பட்டது, ரஷ்ய மூலப் பதிப்பில் ஒரு சில நூலகங்களில் உள்ளது. சொகொஸ்லொவ்ஸ்காயாவிற்கு எழுதப்பட்ட கடிதம் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டது. அது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஹூவர் பயிலகத்தின் ஆவணக்காப்பகங்களில் நுண்பட பிரதியாக உள்ளது.

ஆனால் இந்த ஆவணங்களை ஆராய்ந்தல், சேர்வீஸின் கதைக்கு ஆதாரம் கொடுக்கும் எந்தத் தகவலும் அவற்றில் இல்லை என்ற வியப்பற்ற கண்டுபிடிப்புத்தான் கிடைக்கிறது. சிவ்வின் நினைவுக் குறிப்பின் இளம் ட்ரொட்ஸ்கியுடன் ஆரம்ப தொடர்புகளைப் பற்றிக் கூறப்படும் முதல் அத்தியாயம் "லேவா" என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கி தன்னுடைய முதல் பெயரை "லெய்பா" வில் இருந்து "லேவா அல்லது லெவ்விற்கு மாற்றியது பற்றி ஏதும் கூறவில்லை. அவர் சந்தித்த இளைஞரின் பெயர் லேவா. "லெய்பா" என்ற பெயர் ஒரு தடவைகூட நினைவுக்குறிப்பில் தோன்றவில்லை. தன்னுடைய முன்னாள் தோழரின் கடைசிப் பெயர் மாற்றமான ப்ரான்ஸ்ரைனில் இருந்து ட்ரொட்ஸ்கி என்பதை சிவ் அதிகமாக விவரிக்கையில்----(இது இளம் புரட்சியாளர் நாடுகடத்தலில் இருந்து தப்பித்து ஒரு முன்னாள் சிறையதிகாரியின் பெயரை எடுத்துக் கொண்டபோது நடந்தது)--சிவ் லெய்பா என்ற பெயரை மறந்துவிட்டார் என்று நம்புவது கடினம். அதைப் பற்றி சிவ் எழுதவில்லை, ஏனெனில் லேவா அத்தகைய பெயரில் அழைக்கப்பட்டதாக அவர் கேள்விப்பட்டதில்லை.

நவம்பர் 1898ல் ட்ரொட்ஸ்கிக்கு அலெக்சாந்த்ரா சொகொலொவ்ஸ்காயா எழுதிய, சேர்வீஸ் மேற்கோளிட்ட இரண்டாம் ஆவணம் பற்றி என்ன கூறுவது? இது ஆழ்ந்த, அந்தரங்கமான கடிதம், ஒரு இளைஞருக்கு அவர் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து வந்தது. இது ஒரு முக்கிய ஆவணம், பல முறை இது பற்றி சேர்வீஸ் குறிப்பிடுகிறார். இந்த மிக அந்தரங்கக் கடிதத்தில் இளம் ட்ரொட்ஸ்கிதான் எப்படி லேவா என்ற பெயரை ஏற்றேன் என்று தன்னுடைய காதலிக்கு விளக்குகிறாரா? இதற்கு விடை: இல்லை! அத்தகைய பெயர் மாற்றத்தைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இக்கடிதம் "லேவா" என்ற கையெழுத்தைக் கொண்டுள்ளது. அந்தப் பெயரில்தான் இவர் இளமைக்காலம் முழுவதும் அறியப்பட்டிருந்தார்.

எனவே "லெய்பா", "லாவா"வாக மாற்றப்பட்டது என்ற தன் கதைக்கு தக்க ஆவணச் சான்றைக் கொடுக்கும் வரை, அவர் வெறுமே, நேர்மையற்ற முறையில் முழுக்கதையையும் இட்டுக் கட்டினார் என்று எடுத்துக் கொள்ள உரிமை நமக்கு உண்டு.

ட்ரொட்ஸ்கியின் மூலப் பெயர் பிரச்சினை வரலாற்று, அரசியல் அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. 1902ல் இருந்து அவர் பயன்படுத்தாத பெயரான ப்ரான்ஸ்ரைன் என்பதை ட்ரொட்ஸ்கியை குறிப்பிடுவது, ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1920 களின் நடுப்பகுதியில் இருந்து இடது எதிர்ப்பிற்கு எதிராக தன் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியதில் இருந்துதான் பெருகிய முறையில் அதிகமாயிற்று. ட்ரொட்ஸ்கியை ப்ரான்ஸ்ரைன் என்றும் (சினோவியேவை ராடோமிஸில்ஸ்கி, காமனேவை ரோசன்பெல்ட்) என்று குறிப்பது ஸ்ராலினிஸ்ட்டுக்களின் நடைமுறையாயிற்று. மாஸ்கோ விசாரணைகளின்போது, யூத எதிர்ப்பு உள்ளடக்கம் நடவடிக்கைகளில் இருப்பது பற்றி ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டினார்; பல யூதர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருந்தனர். விந்தையான முறையில் அமெரிக்காவில் இருந்த யூதப் பின்னணி கொண்ட அரசியலில் முக்கியத்துவம் கொண்டிருந்த Rabbi Stephen Wise உட்பட பல முதலாளித்துவ தாராளவாதிகள் விசாரணையில் இக்கூறுபாடு பற்றி கவனத்தை ஈர்ப்பதற்காக ட்ரொட்ஸ்கியை கண்டித்தனர். கிரெம்ளினில் இருந்து யூத எதிர்ப்பு துர்நாற்றம் வெளிப்பட்டது பற்றி கெளரவமான மெளனம் சாதிக்க நினைத்த அவர்கள் விருப்பம் மக்கள் முன்னணி சகாப்தத்தில் ஸ்ராலினிசத்தின் பால் தாராளவாதிகள் விட்டுக் கொடுக்கும் தன்மை கொண்டிருந்ததை பிரதிபலித்தது.

பல தசாப்தங்களுக்கு பின்னர், 1980 களின் கிளாஸ்நோஸ்ட் காலத்திலும், சோவியத் கலைப்பிற்குப் பின் தொடர்ந்தும், ட்ரொட்ஸ்கியின் யூதப் பின்னணிகள் ரஷ்யாவில் இருந்த யூத எதிர்ப்பின் பல பிரிவுகளிடையே அழுத்தம் நிறைந்த தன்மையைக் கொண்டன. பிரபல வரலாற்றாளர் Walter Lacquer சுட்டிக்காட்டியுள்ளபடி, "....ரஷ்ய வலது மற்றும் புதிய ஸ்ராலினிஸ்ட்டுக்களின் சில பிரிவுகளிடையே ட்ரொட்ஸ்கியின் மீதிருந்த உண்மையான வெறுப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது தவறாகிவிடும். அனைத்துத் தீமைகளின் உருவகமாக அவர் கருதப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட், ஒரு யூதர் என்று இருவிதத்தில் பாதிப்பிற்கு உட்பட்டார் அவருடைய "மூலப் பெயர்" லெய்பா ப்ரான்ஸ்ரைன் என்பது அவருடைய விரோதிகளால் பெரும் விருப்பத்துடன் வலியுறுத்தப்பட்டது. அந்த வழக்கம் ஒருகாலத்தில் நாஜிக்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. லெனினை உல்யநோவ் என்றோ, கோர்க்கியை பெஷ்கோவ் என்றோ கிரோவை கோஸ்ட்ரிகோவ் என்றோ எவரும் கனவில் கூட குறிக்கமாட்டார்கள்." [15] ஒரு அடிக்குறிப்பில் Lacquer ட்ரொட்ஸ்கியின் சிறுவயதுப் பெயர் லயோவா என்று எழுதுகிறார்.

வாழ்க்கை நூலை வெளியிடும் தொடர்பாக பல கூட்டங்களிலும் பேராசிரியர் சேர்வீஸ் ட்ரொட்ஸ்கியின் யூதப் பின்னணி பற்றி எழுதியுள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டார். தன்னுடைய அணுகுமுறை ஒரு பணியின் தன்மை அணுகுமுறையில் இருந்து விளக்குவதற்குப் பதிலாக, சேர்வீஸ் ஆக்கிரோஷமாக, வழக்குத் தொடரும் அச்சுறுத்தலைக் காட்டுவதைப் போல், "என்னை நீங்கள் யூத எதிர்ப்பாளர் என்று கூறுகிறீர்களா?" என்று விடையிறுத்தார். சேர்வீசிற்கும் அவருடைய நெருக்கமான நண்பர்களுக்கும்தான் அவருடைய யூதர்களைப் பற்றிய உள்மனதுக் கருத்துக்கள் என்ன என்பது தெரியும். ஆனால் அது பிரச்சினை அல்ல. எந்தக் காரணம் கொண்டும் ஒரு தனிநபர் யூத-எதிர்ப்பு கருத்தை தூண்டிவிட்டு, பயன்படுத்துகிறார் என்றால் அது யூத எதிர்ப்பை வழக்கத்தில் கொண்டுள்ளார் என்றுதான் ஆகும். தன்னுடைய நண்பர்களில் பலர் யூதர்கள் என்று சேர்வீஸ் கூறுவது தேவையற்ற விஷயம் ஆகும். ஆஸ்திரியாவில் யூத எதிர்ப்பு கிறிஸ்தவ சோசலிசஸ்ட் கட்சியை நிறுவியவரும், வியன்னா நகரசபை தலைவருமாக இருந்த கார்ல் லூகர் நிறைய யூத நண்பர்களைக் கொண்டிருந்தார் என்பது நன்கு அறியப்பட்ட வரலாற்று உண்மை ஆகும். லூகரைப் பொறுத்தவரையில் யூதஎதிர்ப்பு என்பது தன்னுடைய அரசியல் பிற்போக்குத்தன பதாகையின்கீழ் கசப்புற்ற வியன்னா குட்டி முதலாளித்துவத்தினரை திரட்டும் அரசியல் முயற்சிதான். அவருடைய யூத எதிர்ப்பு பிரச்சாரத்தை யூதர்களுடன் களிப்புடன் விருந்துண்பதன் மூலம் எப்படி சமரசப்படுத்துகிறார் என்று கேட்கப்பட்டதற்கு அவர் சிடுமூஞ்சித்தனமான முறையில் கூறினார்: "வியன்னாவில் யார் யூதர் என்பதை நான்தான் முடிவு செய்கிறேன்." பேராசிரியர் சேர்வீஸ் இத்தகைய அறநெறி வகை இரட்டைக் கணக்கு முறையைக் கையாண்டார்.

இந்த விஷயம் பற்றி இறுதியான மற்றொரு கருத்து. 2004ல் ஸ்ராலின் பற்றிய வாழ்க்கை நூலில் பேராசிரியர் சேர்வீஸ் ஸ்ராலினுக்கு எதிரான யூத எதிர்ப்பு குற்றச்சாட்டை நீக்குவதை முக்கியமாகக் கொண்டார். ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற்கட்சியின் ஆரம்ப கால மாநாடு ஒன்றின் முடிவில் ஸ்ராலின் கூறிய கருத்தை அவர் மேற்கோளிடுகிறார். போல்ஷிவிக்குகளில் இருப்பதைவிட மென்ஷிவிக்குகளிடையே கூடுதலான சதவிகித யூதர்கள் இருப்பதைக் கண்ட ஸ்ராலின், "போல்ஷிவிக்குகளாகிய நாம் கட்சிக்குள் சிறிய இனவழி அகற்றுதலை மேற்கோண்டால் தவறு ஒன்றும் இல்லை". ஸ்ராலினின் கருத்துக்கள் "பின்னர் அவருக்கு எதிராக அவர் யூத எதிர்ப்பு உடையவர் என்பதற்கு பயன்படுத்தப்பட்டன" என்று சேர்வீஸ் பெரும் நிரபராதித் தன்மை போல் அது பற்றி அவ்வாறு கூறினார். "அவை நயமற்ற, நல்ல உணர்வற்ற கருத்துக்கள். ஆனால் எல்லா யூதர்கள் மீதும் வெறுப்பை அவை காட்டவில்லை. ...பல ஆண்டுகளுக்குப் பின் அவர் கணக்கிலடங்கா யூதர்களின் நண்பர், சக ஊழியர் மற்றும் தலைவர் என்று இருந்தார்." [p..77, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது]. ஸ்ராலின் யூதர்கள் மீது கொண்டிருந்த அணுகுமுறை பற்றி எத்தகைய அசாதாரண தாராள மனப்பான்மை கூடிய விளக்கம்! எல்லா யூதர்களையும் அவர் வெறுக்கவில்லை என்பதாலும், சில யூதர்களை தன் நண்பர்களாகக் கொண்டதாலும், ஸ்ராலின் ஒரு யூத எதிர்ப்பாளர் அல்ல! இதே நேரத்தில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற்கட்சியின் மாநாட்டில் ஸ்ராலின் கருத்துக்களை சேர்விஸ் மேற்கோளிட்டுள்ளதில் நீக்கப்பட்ட பகுதி பற்றியும் குறிப்பிடப்பட வேண்டும்: "மென்ஷிவிக்குகள் போன்ற தோழர்களை கடவுள் எனக்கு அனுப்பி வைத்தது பற்றி லெனின் சீற்றம் அடைந்தார். உண்மையில் எத்தகையவர்கள் இவர்கள்? மார்ட்டோவ், டான், ஆக்சில்ரோட் --சுன்னத் செய்யப்பட்ட யூதர்கள்... யூத மக்கள் கோழைத்தனமானவர்கள், போரிடத் தகுதியற்றவர்கள் என்று ஜோர்ஜிய தொழிலாளர்களுக்கு உண்மையில் தெரியாதா?' [16]

அவருடைய ஆசான் இயன் தாட்சர் விட்ட இடத்தில் இருந்து தொடரும் சேர்வீஸின் வாழ்க்கை நூலின் மத்திய நோக்கம் ட்ரொட்ஸ்கியை அரசியல் வாதி என்ற முறையில் மட்டும் இல்லாமல் தனிநபர் என்ற விதத்திலும் இழிவுபடுத்தவதுதான். குறிப்பிட்டளவிற்கு, ட்ரொட்ஸ்கியின் ஆளுமை பற்றிய சேர்வீஸின் கவனம் ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகளைக் கையாளுவதற்கு போதுமான அறிவார்ந்த திறமையை தான் கொண்டிருக்கவில்லை என்பதை நன்றாக உணர்ந்ததால் வழிநடத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் ட்ரொட்ஸ்கியை தாக்குவது, அவருடைய நடவடிக்கைகளையும் நோக்கங்களையும் தவறாக காட்டுவதற்கு எளிதாகும்.

ட்ரொட்ஸ்கியை பற்றி சேர்வீஸின் சித்திரம் பல வலதுசாரி திறனாய்வாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. உதாரணமாக, லண்டன் டைம்ஸில் ரோபர்ட் ஹாரிஸ் பின்வருமாறு எழுதியுள்ளார்: "மிகவும் வெறுக்கத்தக்க மத்தியதர மாணவ தீவிரவாதி ஒருவர் நினைவுகூற வேண்டும் என்றால் --காழ்ப்புணர்வு, அவமதிக்கும், திமிர்த்தனம் நிறைந்த, சுயநல, ஆணவமான, பொருட்படுத்தாத்தன்மை நிறைந்த, அனுபவமற்ற, வேறு எதையும் பார்க்காத, பிறருடன் பேசுவதே அவருக்குப் பெரிய மரியாதை செய்தல் ஆகிய குணங்களைக் கொண்டவரை என்றால்-- அந்த உருவத்தை அப்படியே நிலைநிறுத்தி, ஒரு மூக்குகண்ணாடியை பொருத்தி அந்த உருவத்தை கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கு கொண்டு சென்றால், அதுதான் ட்ரொட்ஸ்கி."

பெரும் கொதிப்பில் உள்ள திரு.ஹாரிஸ் பயன்படுத்திய அடைமொழிகள் பலவும் அவருக்கே பொருந்தும் விளக்கமாக இருக்கும் என்பதை எளிதில் என்னால் கற்பனை செய்ய முடியும்.

முதலாளித்துவ செய்தி ஊடகம் முழுவதும் எதிரொலிப்பதும் மற்றும் பேராசிரியரின் "சான்றுகள் நிறைந்த", "உயர்நிலையில் இருந்து எழுதப்பட்ட" நூலை கடமையுணர்வுடன் மேற்கோளிடவுள்ள, எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் போலி வரலாற்று நூல்களிலும் எதிரொலிக்கவுள்ள ட்ரொட்ஸ்கியை இவ்வளவு கொடூரமாக சேர்வீஸ் சித்தரிப்பதின் உண்மை நோக்கம் முற்றிலும் புதிதாக வரலாற்று நபரை உருவாக்குவதாகும். உண்மையான ட்ரொட்ஸ்கியை பற்றிய அனைத்துக் குணநலன்களும், அவரைப்பற்றி விளக்கப்பட்டது, தோழர்களும் நண்பர்களும் நினைவு கூர்ந்தவை, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய சொற்களிலும் செயல்களிலும் வெளிப்பட்டு நிற்பவை மறைக்கப்படும், அழிக்கப்படும், அவற்றிற்குப் பதிலாக உண்மையான மனிதருக்கு எந்தத் தொடர்புமற்ற புதிய அரக்கத்தன, கோர சித்திரத்தால் உருப்பெறும். பெரும் புரட்சியாளரின் வரலாற்று நிலைப்பாடு, அரசியல் மேதை, இராணுவத் தலைவர், எழுத்தின் தலைசிறந்த படைப்பாளியின் தோற்றம் இழிவும் இகழ்வையும் காட்டும் விதத்தில் எழுதப்படும். சேர்வீஸின் பணியை ஒட்டி ட்ரொட்ஸ்கி இருபதாம் நூற்றாண்டின் அரசியல் அரக்கர்களில் ஒருவராக்கப்படுவார்! இந்தப் புத்தகத்தை ட்ரொட்ஸ்கி இரண்டாம் முறையாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று சேர்வீஸும் அவருடைய நண்பர்களும் கூறும்போது மனத்தில் அவர்கள் கொள்வது இந்த கருத்துத்தான்!

ஆனால் இந்தத் தயாரிப்பு பெரிதும் உண்மையை தவறாக்குவதால், ஆசிரியர் கணக்கிலங்கா முரண்பாடுகளில் தன்னை இழந்துள்ளார். விந்தையான முறையில் இப்புத்தகம் ரஷ்யப் புரட்யில் ட்ரொட்ஸ்கியின் பங்கு பற்றி ஒரு நேர்மையான, புறநிலை சுருக்கத்துடன் தொடங்குகிறது. ஆரம்பத்தியில் சேர்வீஸ் எழுதுவது;

அரசியல் வானில் ட்ரொட்ஸ்கி ஒரு ஒளிவீசும் வால்நட்சத்திரம் போல் சென்றார். ரஷ்யப் புரட்சியில் மிகச் சிறந்த பேச்சாளராக அவர் இருந்தார். அக்டோபர் மாதம் இடைக்கால அரசாங்கத்தை அகற்றிய இராணுவ-புரட்சிக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார். மற்ற அனைவரையும் விட அதிகமாக செம்படையை நிறுவுவதில் அவர் முன்னின்றார். கட்சியின் அரசியல் குழுவில் அவர் இருந்ததுடன், அதன் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயத்தின் ஆழ்ந்த உந்துதலை கொடுத்தார். கம்யூனிச அகிலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். உலகம் முழுவதும் அக்டோபர் புரட்சியில் லெனினுடன் அவர் கொண்டிருந்த பங்கைத்தான் சுட்டிக்காட்டியது. [p.1]

ஆனால் ஒரு பக்கத்திற்கும் சற்று அதிகம் முடிவதற்குள்ளாகவே, தன்னுடைய தொடக்கப் பத்தியை நிராகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, "தன்னுடைய சொந்த முக்கியத்துவத்தை ட்ரொட்ஸ்கி மிகைப்படுத்தினார். 1917க்கு முன்னால் இருந்த அவருடய கருத்துக்கள் ஒன்றும் அவர் பிறரை நம்ப வைக்கும் அளவிற்கு சிறப்புத் தொடக்கத்தையோ பரந்த தன்மையையோ கொண்டிருக்கவில்லை. அதிகாரத்திற்கு போல்ஷிவிக்குகளை முன்னேற்றுவிப்பில் அவருடைய பங்கு முக்கியம்தான், ஆனால் அவர் உறுதியாகக் கூறிய அளவிற்கு இல்லை." என குறிப்பிடுகின்றார்.

இந்த இரு மதிப்பீடுகளும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்கவில்லை. வாழ்க்கை நூலின் முதல் பத்தியில் சேர்வீஸ் கூறியது அனைத்தையும் ட்ரொட்ஸ்கி செய்திருந்தால், பின் எப்படி "ட்ரொட்ஸ்கி தன்னுடைய சொந்த முக்கியத்துவத்தை மிகைப்படுத்தியிருக்க முடியும்?"

முதல் பத்திக்குப் பின், சேர்வீஸ், வெளிப்படையான அபத்தங்கள், முரண்பாடுகள் இவை குவிதலைப் பொருட்படுத்தாமல் ஏராளமான அவமதிப்புக்களைச் சுமத்துகிறார். சில நேரங்களில் ஒரு சொற்றொடரில் ஒரு கருத்தைக் கூறி, அதே பத்தியில் அதற்கு முரணாகக் கூறும் விதத்திலும் எழுதியுள்ளார்! "தன்னுடைய தகப்பனார் செலவில் வாழ்வதைப் பற்றி லெய்பா ஒன்றும் உளைச்சல் கொண்டிருக்கவில்லை; அதே நேரத்தில் அவருடைய நம்பிக்கைகளையும் மதிப்பீடுகளையும் இகழ்ந்தார்." என்று சேர்வீஸ் எழுதுகிறார். இதைத் தொடர்ந்த இரு சொற்றொடர்களில் அவர் எழுதுவது: "மேலும் தகப்பனாரைப் போலவே பிடிவாதமாக இருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று பிறர் கூறுவதை விரும்பவில்லை, தந்தையின் சொற்களுக்கு அடிபணிவதைவிட, வசதியான இல்லத்தை விட்டு நீங்கி Shvigovski வீட்டில் வசிக்கத் தொடங்கினார்." [p.41] இவ்விதத்தில், "தன்னுடைய தகப்பனார் செலவில் வாழ்வதைப் பற்றி லெய்பா ஒன்றும் உளைச்சல் கொண்டிருக்கவில்லை" என்று முதல் சொற்றொடரில் சேர்வீஸ் அறிவித்ததற்கு மாறாக மூன்றாம் சொற்றொடரில் இளைஞர் தன்னுடைய உயர் சிந்தனைகளை தொடர வீட்டின் வசதிகளை துறந்தார் என்று வாசகருக்கு அறிவிக்கிறார்!

தன்னுடைய சுயசரிதையை பலமுறையும் சரிபார்க்க ட்ரொட்ஸ்கி தனது வரைவுகளை திருத்தினார், ஏனெனில் அவருக்கு சங்கடம் என்று வரக்கூடியவற்றை அகற்றுவதற்காக இதைச் செய்தார் என்று பலமுறையும் சேர்வீஸ் எழுதியுள்ளார். உண்மையில் இத்தகைய செயலுக்கு அவர் ஒரு உதாரணத்தைக்கூட கொடுக்கவில்லை. நிலைமை முற்றிலும் மாறானதுதான். சுயசரிதையின் முந்தைய வரைவில் ட்ரொட்ஸ்கி ஒரு குரூரமான, பிறரைத் துன்புறுத்துவதில் களிப்பு காணும் ஒரு சிறை அதிகாரியை மீறி நிற்கும் ஒரு காட்சியில் தன்னை அசாதாரணமான, உடல்ரீதியான தைரியமான மனிதனாக காட்டுவதை பற்றி சேர்வீஸ் நினைவு கூர்ந்துள்ளார். சிறை அதிகாரியிடம் நேரடியாகவே அவருடைய இழிசொற்கள் நிறைந்த பேச்சைப் பொறுத்தக் கொள்ள முடியாது என்று ட்ரொட்ஸ்கி கூறினார். இதையொட்டி சிறை காப்பாளர்தான் பின்வாங்கினார். வெளியிடப்பட்ட எனது வாழ்க்கை (My Life) நூலில், இந்த சம்பவம் (இதற்குப் பல சாட்சிகள் இருந்தனர்) சேர்க்கப்படவில்லை.

சேர்வீஸ் கூறுவது: "அவருடைய வாழ்வின் பல தைரிய நிகழ்ச்சிகளைப் போலவே, இந்தத் தகவலை ட்ரொட்ஸ்கி தன் நினைவுக்குறிப்புக்களில் வெளியிடவில்லை. அவரைப் போற்றும் எழுத்தாளர்கள் அவரிடம் இருந்து இதை வலியுறுத்திப் பெற வேண்டியதாயிற்று. பொதுவில் பெயர் எடுத்துக்கொள்ள அவர் விரும்பினாலும், தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள்ளுவதை அவர் விரும்பவில்லை: மற்றவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். அதிகமாகக்குரல் கொடுத்து, தன்னைப் பற்றியே அவர் பேசிக் கொண்டிருந்தார். உண்மையில் எவ்வளவு டம்பம் நிறைந்து, தன்னை மத்தியப்படுத்தி காட்டியவராக அவர் இருந்தார் என்பதை அறிய மக்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை." [p.56, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது.]

சற்றே பொருந்தாத வித்தை முறையில், சேர்வீஸ் அடக்கத்திற்காகவும், தன்னைப்பற்றி பெருமையாக ட்ரொட்ஸ்கி பேசிக் கொள்ள விரும்பாததற்கும் கூட அவமதிப்பு கொடுக்க சேர்வீஸ் முற்படுகிறார்!

ட்ரொட்ஸ்கியை ஒரு அயோக்கியனாக, தன்னுடைய மனைவியையும் இரு குழந்தைகளையும் கொடுமையாகக் கைவிட்டுவிட்ட விசுவாசமற்ற கணவர் என்று காட்டும் முயற்சிக்கு சேர்வீஸ் நிறைய பக்கங்களை ஒதுக்குகிறார். "ஒரு கணவர் என்ற முறையில் ட்ரொட்ஸ்கி தன்னுடைய முதல் மனைவியை இழிவாக நடத்தினார். அவருடைய அரசியல் நலன்கள் குறுக்கிட்டபோது, அவர் குழந்தைகளின் தேவைகளைப் பொறுத்த வரையில், அவற்றை புறக்கணித்தார். சோவியத் பொதுவாழ்வில் ஈடுபடாமல் இருந்தவர்களுக்குக் கூட இது பேரழிவு விளைவுகளைக் கொடுத்தது; நாடு கடத்தலில் அவரைத் தொடர்ந்திருந்த அவருடைய மகன் லெவும், தன்னுடைய தந்தையாருடன் ஒத்துழைத்ததற்கு தன் உயிரையும் இழக்க நேரிட்டது." [p.4]

சேர்வீஸ் இந்நிகழ்வைப் பற்றிக் கூறியிருப்பதின் அடிப்படையில், சார் ரஷ்யாவின் அடக்குமுறை நிலை அல்லது பின்னர் ஸ்ராலினின் அடக்குமுறைகள் ட்ரொட்ஸ்கியின் குடும்பம் அல்லது அவருக்கு பிரியமானவர்களின் சோக விதி பற்றி எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று நினைக்கக்கூடும். உண்மையில் 1933ல் ட்ரொட்ஸ்கியின் மகள் ஜினாவின் இறப்பிற்கு சோவியத் ஆட்சிதான் பொறுப்பு என்று அவர் கூறியதை சேர்வீஸ் குறை கூறுகிறார்.

ஆனால் அவருடைய குழந்தைகள் மற்றும் முதல் மனைவியின் இறப்புக்கள் பற்றிய சூழநிலை சேர்வீஸைப் பொறுத்தவரையில் அதிக அக்கறை இல்லை. அவருக்குத் தேவையானது ட்ரொட்ஸ்கியை ஒரு பொறுப்பற்ற, இரக்கமற்ற விதத்தில் மனைவியை விட்டு வெளியே நீங்கியவராக, சிந்தனையின்றி, தன்னலத்தின் காரணமாக தன்னுடைய முதல் மனைவி அலெக்சாந்த்ரா சொகொலொவ்ஸ்காயாவை கைவிட்டார் என்று சித்திரிப்பதுதான்.

ட்ரொட்ஸ்கிக்கும் அலெக்சாந்த்ரா சொகொலொவ்ஸ்காயாவிற்கும் இடையே இருந்த உறவை உண்மையான நயமற்ற தாக்குதல் வகையில் சேர்வீஸ் கூறுகிறார். பல முறையும் இளம் லயோவா மற்றும் அலெக்சாந்த்ரா இருவரையும் தன்னுடைய தரத்திற்கு கீழே இழுக்கப் பார்க்கிறார்.

இவ்விதத்தில் நவம்பர் 1898 கடிதத்தை சேர்வீஸ் பயன்படுத்திய விதம் (இதைப் பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன்) குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது. இந்தக் கடிதம் 19 வயதான லயோவாவினால் அலெக்சாந்ராவிற்கு இருவரும் ஒடிசா சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது. இருவரும் நேரடியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத நேரம் அது. லயோவா இக்கடிதத்தை எழுதியபோது நோய்வாய்ப்பட்டு, மனத்தளர்ச்சியில் இருந்தார். அவர்கள் கைதுசெய்யப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. சிறையில் தனிப்பகுதியில் பல மாதங்கள் ட்ரொட்ஸ்கி அடைக்கப்பட்டிருந்தார்.

ட்ரொட்ஸ்கி தற்கொலை பற்றி சிந்தித்து, நிராகரித்ததை ஒப்புக் கொள்ளும் வரிகள் உள்ள இக்கடிதத்தில் இருந்து ஒரு சுருக்கமான பகுதியை மேற்கோளிட்டு சேர்வீஸ் கூறுவது:

இந்த உணர்வுகளில் தன்னைக் காட்டிக் கொள்ளும் தன்மையும், பக்குவமடையாத நிலையும்தான் உள்ளன. அவர் சுயநலம் மிகுந்த இளைஞர். ஆழ்மனதின் உந்துதலில் அவர் தன்னை அலெக்சாந்த்ரா இன்னும் நேசிக்க வேண்டும் என்று விரும்பினார்: தன் காதலி தன்னைப் புரிந்து கொண்டு, கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்; இதை தன் வலிமையின்மையைக் காட்டி சாதிக்க முயன்றார். உண்மையில் அவருக்கு ஒன்றும் தற்கொலை நினைப்பு இல்லை: அவர் எழுதியது அலெக்சாந்த்ரா தன்னைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தை உடையது. அவரிடம் தான் திமிர்த்தனமாகவும் உணர்வுகள் அற்றும் இருந்ததை அறிந்தார். அப்படியானால் ஒரு கல் போன்று உறுதியாக இருப்பதை ஒப்புக் கொள்ளுவதைக்காட்டிலும் தான் "கண்ணீர் விடுவதாக" இதைப்பற்றி கூறுவது நல்லதுதான் என்று நினைத்தார். [p.52]

நல்ல நோக்கத்திற்ககூட இப்படி மேலெழுந்தவாரியாக உளவியில்ரீதியாகக் கூறுவது, சந்தேகத்திற்கு உரிய மதிப்பைத்தான் அதிகமாக கொண்டிருக்கும். ஆனால் ஆய்வுக்குட்பட்ட விடயம் தவறு என்று போகும்போது இது தீமை நிறைந்த அபத்தத் தன்மையைக் கொள்கிறது. ட்ரொட்ஸ்கி கள்ளத்தனமாக அலெக்சாந்த்ராவை நம்பவைக்கும் விதத்தில் நேர்மையற்ற முறையில் தான் தன்னுடைய "உறுதியான வெளித்தோற்றம்" பற்றி கண்ணீர் விடுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று சேர்வீஸ் கூறுகிறார்.

இந்த "விளக்கத்தில்" உள்ள பிரச்சினை சேர்வீஸ் லயோவாவின் கடிதத்தை தவறாக எடுத்துக் கொண்டதுதான். இந்தத் தவறை அம்பலப்படுத்துவதற்கு முழு பத்தியும் முழுமையாகவும் சரியாகவும் மேற்கோளிடப்பட வேண்டும். இளம் புரட்சியாளர் எழுதினார்:

சாஷா [அலெக்சாந்த்ரா] மிகவும் நல்லவள், அவளை முத்தமிடவும், கட்டி அணைக்கவும் நான் விரும்புகிறேன்.... அவை இப்பொழுது இயலாது: மாறாக தனிமை, தூங்க முடியாத நிலை, மரணத்தைப் பற்றி இகழ்வான எண்ணங்கள் ஆகியவைதான் உள்ளன... இவற்றில் இருந்து மீளும் நேரம் வரும். "மக்கள் பாடல்களை பாடுவர். அவர்கள் கண்ணீருடன் எங்களை நினைத்துக் கொள்ளுவர். எங்கள் கல்லறைக்கு வருவர்" நம்முடைய கல்லறைக்கு, சாஷா. நம்முடைய க-ல்-ல-றை-க்-கு. --ஓ இன்றைய சமூக ஒழுங்கைப் பற்றி எவ்வளவு பீதியுடன் அவர்கள் பேசுவர்....என்னுடைய கதவுகளுக்குப் பின் இப்பொழுது, இக்கணத்திலேயே நான் பல சங்கிலிகளின் ஓசையைக் கேட்கிறேன்; அவை மக்கள் மீது பிணைக்கப்பட்டுள்ளன. சாஷா, எந்த அளவிற்கு நாம் இவற்றில் பழகிவிட்டோம்; இருந்தபோதிலும் எவ்வளவு கொடூரமானது இது. மக்கள், சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது...அப்படியும் இவை அனைத்தும் சட்டப்படி நடக்கின்றன. 'உலகவலி '('Weltschmertz') பற்றிய என்னுடைய கோபத்தினால் நீ வியப்பு அடைகிறாயா? ஒரு அசாதாரண நுட்ப உணர்வு என்னிடத்தில் தோன்றியுள்ளது. P உடைய குடியுரிமை கவிதைகளை பற்றிப் படிக்கும்போது என்னால் "கண்ணீர் விட முடிகிறது". Ya/in Mir B' அல்லது மற்ற கட்டுக் கதைகளைப் படிக்கும் போதும்.... என்னுடைய நரம்புகள் மிகவும் தளர்ச்சியுற்றுள்ளன என்பதுதான் விஷயம். சைபீரிய மலைப்பகுதி இந்த நயமான குடியுரிமைமிக்க உணர்வைக் கொடுக்கிறது. மாறாக, நாம் அங்கு எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்போம். ஒலிம்பிய தேவதைகளைப் போல். எப்பொழுதும், எப்பொழுதும், நாம் இணைபிரியாமல் ஒன்றாக இருப்போம்-- எவ்வளவு முறை நான் இதைக் கூறியுள்ளேன். இருந்தும்கூட, நான் அதை மீண்டும் மீண்டும் கூற விரும்புகிறேன்...நீயும் நானும் எவ்வளவோ ஒன்றாகக் கழித்து விட்டோம், பல கஷ்டங்களைப் பட்டு விட்டோம், உண்மைதான், நாம் சந்தோசத்துடன் இருப்பதற்கும் தகுதி உடையவர்கள்.

அதன் இயல்பிலேயே இக்கடிதம் அசாதாரணமானது, ஆழ்ந்து உருக்கும் ஆவணம் ஆகும். இதை எழுதியவர் வருங்கால அக்டோபர் புரட்சியில் தலைவர் என்பது இதற்கு மகத்தான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. இந்த கடிதத்தை "பகட்டுத்தனம்", "பக்குவமற்றது" என்பவற்றின் வெளிப்பாடு என்று கூறுவது சேர்வீஸின் இழிந்த தன்மை, உணர்வற்ற நிலையைத்தான் காட்டுகின்றது. ஆனால் ஒரு தொழில்முறை நிலைப்பாட்டில், சேர்வீஸ் அக்கடிதம் பற்றி எழுதியிருப்பது நேர்மையற்றது, தவறாக வழிகாட்டுவது ஆகும்.

முதலில் "கண்ணீர் விடுதல்" பற்றி ட்ரொட்ஸ்கி ஒப்புக் கொண்டதை இவர் மேற்கோளாக எடுத்துக்காட்டுவதை குறிப்பிடவேண்டும்; தன்னுடைய "உறுதியான வெளித்தோற்றத்தை" மறைக்கும் முயற்சிகள் பற்றி அழுவது பற்றி குறிப்பிடவில்லை. மாறாக பியோர் யகுபோவிச் (Pyotr Yakubovich) இன் கவிதையை இவர் எதிர்கொண்ட விதத்தைத்தான் நேரடியாகக் குறிக்கிறது. ஒரு தீவிர வரலாற்றாளராக சேர்வீஸ் இருந்திருந்தால், இந்த விஷயம் பற்றி கவனமாகச் சிந்தித்தபின், தன்னுடைய வாசகர்களுக்கு அக்குறிப்பின் முக்கியத்துவம் பற்றி விளக்கியிருப்பார். யாகுபோவிச் (1860-1911) ஒரு முக்கியமான கவிஞரும் புரட்சியாளரும் ஆவார், ஜனரஞ்சகவாத மக்கள் விருப்பம் (People's Will) என்ற அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். வீரத்தையும், சாரிசத்திற்கு எதிரான புரட்சிகர பயங்கரவாதத்தின் அழிந்துவிடும் போராட்டத்தின் பெரும் சோகத்தையும் தூண்டிய அவருடைய கவிதைகள் 1890 களின் இளைஞர்களிடையே பெரும் அறநெறித் தாக்கத்தை ஏற்படுத்தின. யாகுபோவிச் தன்னுடைய கவிதையில் பயன்படுத்திய தோற்றங்கள், குறிப்பாக மரணம், தியாகம் பற்றியவை அலெக்சாந்த்ராவிற்கு ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதத்தில் மீதூர்ந்து உள்ளன. அவ்வம்மையார் அந்தக் குறிப்புக்களை நன்கு உணர்ந்திருக்கக்கூடும். ஒரு நேர்மையான வரலாற்றாளர் இந்த சிக்கல் வாய்ந்த கடிதத்தில் (ஒரு சிறு பிரிவைத்தான் நான் அதில் இருந்து மேற்கோளிட்டுள்ளேன்) தன்னுடைய பொருள், வாழ்ந்த காலம் பற்றி நல்ல உணர்வுகளை வளர்த்திருக்க முடியும். ஆனால் சேர்வீஸுக்கு இது பற்றி அக்கறை இல்லை.

ஒரு மதிப்புக்கொடுக்காத தன்மை மற்றும் சோம்பேறித்தனத்தில் துர்நாற்றம்தான் முழுப் புத்தகத்திலும் படர்ந்துள்ளது. ட்ரொட்ஸ்கியின் அறிவார்ந்த, கலையழகு நிறைந்த படைப்புத்திறனின் ஆதாரங்கள் பற்றி ஆசிரியர் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ட்ரொட்ஸ்கியின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள், அவர் முதலில் சைபீரியாற்கு அனுப்பப்பட்ட போது எழுதியது பற்றியவை வெற்றுத்தனமாகவும் மேம்போக்காவும் உள்ளது; அதன் ஒரே நோக்கம் தன்னுடைய வாழ்க்கை நூல் "முழு நீளம்" என்று அவர் விளம்பரப்படுத்திக் கொள்ள தேவையான பக்கங்களை நிரப்புவது என்றுதான் உள்ளது. சேர்வீஸின் அறிவார்ந்த, ஊடுருவிய கருத்தைத் தோற்றுவிக்கும் திறமை, ட்ரொட்ஸ்கி "பிரெஞ்சு புதினங்களைப் பெரிதும் விரும்பினார், இப்சனைப் (Ibsen) பெரிதும் பாராட்டினார், நீட்ஷேயினால் (Nietzsche) ஈர்க்கப்பட்டார். இவர்கள் அனைவரையும் தற்கால உலக கலாச்சாரத்தின் உதாரணங்களாக அவர் கருதினார்" [p.207, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது] என்ற கருத்தின் மூலம் உதாரணமாக நிற்கிறது. உண்மையில் அவர் அவ்வாறு இருந்தாரா? எவர் கற்பனை செய்திருப்பார்? ஆனால் இங்கு ஏதோ உள்ளது, அது சரியாகத் தெரியவில்லை. நீட்ஷே பற்றிய குறிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது. ட்ரொட்ஸ்கியை நீட்ஷேயின் எந்த கூறுபாடு ஈர்த்தது என்று வாசகர் வியக்கக்கூடும்.

விமர்சனரீதியாக வாசகர் பிரச்சினையை ஆராயும் நிலையில் இருந்தால் நீட்ஷே 1900 இல் இறந்தபின் ட்ரொட்ஸ்கி எழுதிய ஒரு கட்டுரையை, ''மேலாளரின் மெய்யியல் பற்றிய ஏதோ ஒன்று'' ("Something about the Philosophy of the 'Overman' ") என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இந்தக் கட்டுரையை பரிசீலித்தபின், வாசகர் நீட்ஷே பற்றி இளம் ட்ரொட்ஸ்கி எதிர்கொண்டவிதம் பற்றி எளிதில் அறிந்து கொள்ளுவார். ''மேலாளரில்'' (overman) நீட்ஷே கூறும் தத்துவம் ஒரு புதிய இன்னும் சக்தி வாய்ந்த சமூக மாதிரியை நியாயப்படுத்துதல் என்பதே அது:

நிதிய வகையில் முயற்சியில் ஈடுபடுபவர்கள், பங்குச்சந்தையின் ''மேலாளர்கள்'' ("overmen"), அரசியல் மற்றும் செய்தித் தாள்களில் மனச்சாட்சியின்றி அச்சுறுத்துபவர்கள், முழு ஒட்டுண்ணித்தன தொழிலாள வர்க்கம் தன்னை முதலாளித்துவக் கருவியுடன் இறுக்கமாக பிணைந்துக்கொண்டு, மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விதத்தில் (பொதுவாக நன்கு வாழ்பவர்கள்) சமூகத்தின் இழப்பில், அதற்கு எதையும் பதிலுக்குக் கொடுக்காமல் இருப்பவர்கள்....ஆனால் முழுக் குழுவும் (மாறாக கணக்கிலடங்கா, எப்பொழுதும் விரிந்து பெருகுபவர்) அப்படியும் தங்களுக்கு அறிவார்ந்த வகையில் மேலாக நின்று "தைரியமுடன்" செய்யும் உரிமையைக் கேட்பர். அது தன்னுடைய உயர் வழிகாட்டிக்காகக் காத்திருந்தது, நீட்ஷேயிடம் அது கண்டது.

தன்னுடைய கட்டுரையை Nietzscheanism வெளிப்பட்ட சமூக மண் "இழிந்து, தீமை நிறைந்து, நோயுற்றுவிட்டதாகப் போய்விட்டது..." என்று முடிக்கிறார் [17]

அப்படியானல் நீட்ஷே பற்றி ட்ரொட்ஸ்கி" பெரு மதிப்பு கொண்டுள்ளார்" என்று தோன்றுகிறதா? அல்லது சேர்வீஸ் ட்ரொட்ஸ்கியின் கட்டுரையைப் படிக்கக் கூட அக்கறை காட்டவில்லை, அல்லது தான் என்ன கூறுகிறோம் என்பதை அறியாமல் பேசுகிறார் என்று தோன்றுகிறதா.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்த நூலில் உள்ள பிழைகள், தவறான கருத்துக்களைப் பற்றி பரந்த பரிசீலனை வேண்டும் என்றால் அதுவே "ஒரு முழுநீள" தேவையைக் கொடுக்கும் குறைந்தபட்சம் சேர்வீஸ் எழுதியுள்ள வாழ்க்கை நூலின் அளவிற்கு. ஒரு அறிவார்ந்த வாசகர் அடிப்படை வரலாற்றுத் தன்மையில் நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்கத்தக்கவை என்று கருதக்கூடிய பத்திகள் இல்லாத பக்கம் இந்நூலில் இல்லை என்றால் அது மிகையாகாது. நேரடி விசாரணை இன்றி ஆசிரியரின் குறிப்புக்கள், மேற்கோள்கள் ஆகியவற்றை ஏற்கக்கூட முடியாது. மீண்டும் மீண்டும் சேர்வீஸ் மேற்கோளிடம் ஆதாரக் குறிப்புக்கள் அவர் கூற்றிற்கு ஆதரவு தருவதில்லை என்பதுதான் வெளிப்படுகிறது.

இந்த ஆய்வை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு முன், ட்ரொட்ஸ்கி மற்றும் அலெக்சாந்த்ரா சொகொலொவ்ஸ்காயா உறவு பற்றி சேர்வீஸ் எழுதியிருப்பதற்கு மீண்டும் வருவது பொருத்தமே ஆகும். அவர்கள் பிரிந்த சூழ்நிலையைச் சிதைப்பது ட்ரொட்ஸ்கியை இழிவுபடுத்தும் சேர்வீஸின் முயற்சியில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது --ஒரு கணவர், தந்தை, ஒரு மனிதன் ஆகிய விதங்களில். வலதுசாரி பிரிட்டிஷ் ஊடகத்தின் மதிப்புரை எழுதுபவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இதைக் கையாண்டுள்ளனர்.

1902 ல் சைபீரியாவில் இருந்து முதலில் தான் தப்பிய சூழ்நிலையை விவரிக்கும்போது, ட்ரொட்ஸ்கி எனது வாழ்க்கையில் பின்வருமாறு எழுதினார்.

அந்த நேரத்தில் ஏற்கனவே எங்களுக்கு இரு பெண்கள் இருந்தனர். சிறிய குழந்தைக்கு நான்கு மாதங்கள் வயதாகும். சைபீரியச் சூழலில் வாழ்க்கை எளிதல்ல, நான் தப்பித்துச் சென்றால் அலெக்சாந்த்ரா எல்வனோவாவின் தோள்களில் இரட்டைச் சுமை ஏறிவிடும். ஆனல் இந்த எதிர்ப்பை அவள் இரு சொற்களில் மறுத்தாள்: "நீங்கள் செல்லவேண்டும்." புரட்சியின் கடமை அவளைப் பொறுத்தவரை மற்றதையெல்லாம் நிழலில் தள்ளிவிட்டது, குறிப்பாக தனிநபரின் நிலைப்பாடுகள். பெரும் புதுப்பணிகள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்தபோது, நான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் கொடுத்ததே அவள்தான். என்னுடைய சந்தேகங்களை அவள் உதறித்தள்ளினார்.

நான் தப்பி ஓடிவிட்ட பல நாட்களுக்கு அவள் அதை போலீசாரிடம் இருந்து மறைத்தாள். வெளிநாட்டில் இருந்து நான் கடிதத் தொடர்பும் கொள்ள முடியாது. அதன் பின் அவள் இரண்டாம் முறை நாடுகடத்தப்பட்டாள்; அதன் பின் நாங்கள் எப்பொழுதாவதுதான் சந்தித்தோம். வாழ்க்கை எங்களைப் பிரித்துவிட்டது; ஆனால் எங்கள் நட்பு, அறிவார்ந்த உறவு இரண்டையும் எதுவும் அழிக்க முடியாது. [18]

ட்ரொட்ஸ்கியின் வாசகத்தை அப்படியே மேற்கோளிடாத சேர்வீஸ் எழுதுகிறார்:

அவர் [ட்ரொட்ஸ்கி] அலெக்சாந்த்ரா முழு மனத்துடன் அவர் செல்லுவதற்கு வாழ்த்தினார் என்று கூறினார். அதை அப்படியே எடுத்துக் கொள்ளுவது கடினமாகும். [p.67]

எந்த அடிப்படையில் இக்கருத்து கூறப்பட்டுள்ளது? ஆவணங்கள், கடிதங்கள், தனிச் சாட்சி என்று எதையும் ட்ரொட்ஸ்கி கூறுவதற்கு எதிராக சேர்வீஸ் காட்டவில்லை. இது 1929ல் அலெக்சாந்த்ரா இன்னும் உயிரோடு இருந்தபோது எழுதப்பட்டது என்பது வலியுறுத்தப்பட வேண்டும். அலெக்சாந்த்ரா அதை மறுக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தில் இருந்து ட்ரொட்ஸ்கி நாடு கடத்தப்பட்டுவிட்டு, ஸ்ராலினிச ஆட்சி தன் முன்னாள் கணவரை தனிப்பட்ட முறையில் அவ்வம்மையார் கண்டித்திருந்தால் வரவேற்றிருக்கும் என்ற நிலையில் பகிரங்கமாக சோவியத் மக்களின் மிகப்பெரிய விரோதி என்று தூற்றப்பட்டார் என்றாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை.

ட்ரொட்ஸ்கியின் செயல்களை மோசமாகக் காட்டும் விதத்தில் சேர்வீஸ் பொருள்பொதிந்த சொற்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார். "சைபீரிய வனப்பகுதிகளில் அவரைக் கைவிட்டுவிட ப்ரான்ஸ்ரைன் திட்டமிட்டிருந்தார்....இரு குழந்தைகளுக்கு தகப்பனாரான பிறகு அவர் ஓடிவிட முடிவெடுத்தார்." [p.67] ஆனால் தன்னுடைய ஆதாரமற்ற கூற்றையே மறுக்கும் விதத்தில் "ட்ரொட்ஸ்கி ஒரு புரட்சியாளரின் நெறித்முறைக்கு உட்பட்டுத்தான் நடந்து கொண்டார்" என்பதை சேர்வீஸ் ஒப்புக்கொள்ளுகிறார். "புரட்சியாளர்களுக்கு "இலக்குதான்" அனைத்தும். திருமண, பெற்றோர் பொறுப்புக்கள் முக்கியம் என்றாலும் இளம் போராளிகளுக்கு தங்கள் அரசியல் மனச்சாட்சி என்ன கூறுகிறதோ அதை தடுக்கும் அளவிற்கு முக்கியம் அல்ல." [p.67]. சேர்வீஸ் ஒப்புக் கொண்ட விதத்தில் அதுதான் நிலைப்பாடு என்றால், சேர்வீஸ் எப்படி ட்ரொட்ஸ்கியின் அறிவிப்பான அவர் நாடு கடந்து இருப்பதில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்கு அலெக்சாந்த்ரா ஆதரவு கொடுத்து, ஏன் முதலிலேயே முன்வைத்த கருத்தை" அப்படியே "ஏற்றுக் கொள்ளுவது கடினம் என்று கூறவேண்டும்?"

இதில் உண்மை என்னவென்றால் ட்ரொட்ஸ்கியின் செயல் பற்றிய சேர்வீஸின் கண்டனம் இரு இளம் புரட்சியாளர்கள் வாழ்ந்த வரலாற்றுப் பின்னணியைப் பற்றி நேர்மையான மதிப்பீட்டைத் தளமாகக் கொண்டிருக்கவில்லை. அலெக்சாந்த்ரா "கைவிடப்பட்டார்" என்று சேர்வீஸ் கூறுவது, தீமை பயக்கும் விதத்தில் உந்ததுல் பெற்ற சொந்தக் கருத்து ஆகும். வரலாற்று உண்மை ரீதியாக, அலெக்சாந்த்ரா மற்றும் குழந்தைகளுக்கு உதவி அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என நம்புவதற்கு இடமுண்டு. உண்மையில் ஒரு பிந்தைய அத்தியாயத்தில் ப்ரான்ஸ்ரைன் குடும்பம் ட்ரொட்ஸ்கியின் குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது எனக் குறிப்பிடும் வகையில் சேர்வீஸ் சிலவற்றை எழுதியுள்ளார். 1907ல் ட்ரொட்ஸ்கியைச் சந்திக்க மேற்கு ஐரோப்பாவிற்குப் பயணித்திருந்தபோது, ட்ரொட்ஸ்கியின் பெற்றோர்கள் அவருடைய மகள் ஜினாவையும் அழைத்துச் சென்றிருந்தார்கள். ட்ரொட்ஸ்கியின் குடும்பம் "சிக்கல் வாய்ந்த வாழ்க்கையை நடத்தியது. அந்த நேரத்தில் ஜினா ட்ரொட்ஸ்கியின் சகோதரி Elizasveta அவருடைய கணவருடன் குடும்ப வீட்டில் Kherson ல் உள்ள Gryaznaya தெருவில் வசித்தார். அலெக்சாந்தாரா வாடிக்கையாக அவர்களுக்குக் கடிதம் எழுதிவந்தார்." [p.108]

எனவே ட்ரொட்ஸ்கி ஒன்றுமே தன்னுடைய குடும்பத்தை "கைவிட்டார்" என்று தோன்றவில்லை. புரட்சியாளர்கள் என்ற முறையில் லெவ் டேவிடோவிச்சும் அலெக்சாந்த்ரா எல்வோனா இருவரும் பெரும் கடின சூழ்நிலையை இயன்ற அளவிற்குச் சமாளித்தனர். வருங்காலத்தில் ஒரு கட்டத்தில், இன்னும் அதிக ஆவணங்கள் கண்டெடுக்கப்படும்போது, அவர்களுடைய சிக்கல் நிறைந்த தனி செயற்பாடுகளின் விவரங்களைத் துல்லியமாகக் கட்டமைக்க இயலக்கூடும். ஆனால் ரொபேர்ட் சேர்வீஸ் அத்தகைய வேலையை மேற்கொள்ளும் நபராக இருக்க மாட்டார்.

இறுதியாக ட்ரொட்ஸ்கிக்கும் அலெக்சாந்த்ராவிற்கும் இடையே உள்ள தனிப்பட்ட உறவு பற்றி, அவர்களுடைய ஆழ்ந்த, நீடித்த தோழமை, நடப்புறவுக்கு சான்று கொடுக்கும் வகையில் ஒரு ஆவணம் உள்ளது. ஆகஸ்ட் 8, 1935 ல் ட்ரொட்ஸ்கிக்கு அலெக்சாந்த்ரா எழுதிய கடிதமாகும் அது. பெரும் மனித சோகத்தின் இறுதி செயல் தொடங்க உள்ளது. அலெக்சாந்த்ரா தன்னுடைய கடிதத்தை "அன்புள்ள லயோவா" என்று தொடங்குகிறார். தங்கள் குடும்பத்தின் பல உறுப்பினர்களையும் எதிர்கொண்டுள்ள கடின சூழ்நிலை பற்றி ட்ரொட்ஸ்கியிடம் அவர் கூறுகிறார். தனக்கு பொருள் உதவி அளிக்கும் ட்ரொட்ஸ்கியின் முயற்சிகள் பற்றியும் அலெக்சாந்த்ரா அதில் குறிப்பு காட்டுகிறார், "எப்பொழுதும் போல் உங்களுடைய சிந்தனை மிகுந்த என்பாலுள்ள அணுகுமுறை பற்றி பெரிதும் உணர்ச்சிவசப்படுகிறேன்." பின் கடிதத்தை முடிக்கையில், "அன்பும், தழுவல்களும், உங்கள், அலெக்சாந்த்ரா." [19]

லெவ் டேவிடோவிட்ச் ட்ரொட்ஸ்கி மற்றும் அலெக்சாந்த்ரா எல்வோவ்னா சொகொலொவ்ஸ்காயாவும் அசாதாரண மானுடர்கள். மனித குலத்தின் மேம்பாட்டு நலன்களுக்காக சுய தியாகம் செய்தும் திறனை வரம்பில்லாமல் கொண்டிருந்த ஒரு புரட்சிகரத் தலைமுறையின் பிரதிநிதிகள் ஆவர். பேராசிரியர் சேர்வீஸ் மற்றும் அவரைப் போன்றோர் அவமதிப்புக்கள், தவறுகள், அவதூறுகள் ஆகியவற்றின் மூலம் இந்த மாபெரும் மனிதர்களை தன்னுடைய இழிந்த தரத்திற்கு இழுத்துவிட முடியும் என்று நம்புவது எத்தனை பரிதாபகரமானது.

Footnotes

1. Quoted in James T. Farrell: The Revolutionary Socialist Years, by Alan M. Wald (New York University Press, 1978), p. 87.

2. Ibid, p. 413.

3. Ibid, p. 502.

4. Writings of Leon Trotsky 1936-37 (New York, Pathfinder, 1978), p. 179.

5. The Case of Leon Trotsky, Report of Hearings on the Charges Made Against Him in the Moscow Trials, by the Preliminary Commission of Inquiry (Merit Publishers, New York, 1968) p. 585.

6. The Transitional Program for Socialist Revolution, (New York, Pathfinder, 1977) p. 137.

7. Writings of Leon Trotsky 1938-39, (New York, Pathfinder, 1974) pp. 93-94.

8. In Defense of Marxism, (London, New Park, 1971) p. 15.

9. Writings of Leon Trotsky 1939-40, (New York, Pathfinder, 1973) p. 299.

10. Foreign Affairs, Volume 19, No. 2 (January 1941, p. 332).

11. The American Historical Review, Vol. 54, No. 4 (July 1960), p. 904.

12. My Life With G.V. Plekhanov, p. 188.

13. "In the Service of Historical Falsification: A Review of Robert Service's Trotsky: A Biography," Mehring Books (Oak Park, 2009), p. 15.

14. My Life, (New York, Pathfinder, 1970) p. 3.

15. Stalin: The Glasnost Revelations (New York: Charles Scribner's Sons, 1990), pp. 59-60.

16. Cited in Stalin, by Hiroaki Kuromiya (London: Longman, 2005), p. 12.

17. L. Trotskii, Works, Series 6, Volume 20, Culture of the Old World, M.-L., State Publishing House, 1926. 147-162. (New translation from the original Russian text)

18. My Life, p. 132-133.

19. Trotsky's Diary in Exile 1935, (New York, Atheneum, 1963) pp. 159-160.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved