|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
விஸ்கான்சன் எதிர்ப்புக்கள் தொடர்கையில்,
ஆசிரியர்கள் சங்கம் வெளிநடப்புக்களை நிறுத்துகிறது
By Tom Eley
22 February 2011
Use this version to print | Send
feedback
திங்களன்றும் மாடிசனில் முக்கிய
ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.
விஸ்கான்சன் தலைநகரில் கடுமையான குளிர்காலக் காலநிலையையும்
பொருட்படுத்தாமல்
5,000
த்தில்
இருந்து
20,000
வரையிலான மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பொதுத்துறை ஊழியர்களுக்கு பெரும் ஊதியக் குறைப்புக்களைக்
கட்டாயப்படுத்தி அவர்களுடைய அடிப்படை பணிநிலை உரிமைகளையும்
அகற்றும் கவர்னர் ஸ்காட் வால்க்கரின் சட்டத்திற்கு எதிரான
பெரும் எதிர்ப்புக்கள் எட்டாவது நாளாக நடைபெற்றன.
ஆனால் மாநிலத்தில் மிகப் பெரிய ஒற்றை
பொதுத்துறை ஊழியர் சங்கமான விஸ்கான்சன் கல்விச் சங்க சபையானது
அனைத்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்களையும் அது நிறுத்திக்
கொள்வதாகக் கூறி,
அதன்
98,000
உறுப்பினர்களையும் பணிக்குத் திரும்புமாறு
அழைப்புவிடுத்துள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
WEAC
வலைத்
தளம் சங்கத்தின் தலைவர் மேரி பெல் விடுத்த அறிக்கை ஒன்றை
ஞாயிறன்று முக்கியமாகப் பிரசுரித்தது.
“ஜனாதிபதிகள்
தினத்தை
[திங்கள்]
அங்கீகரிக்காத ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள கல்வியாளர்களை நாம்
வேலைக்குத் திரும்புமாறு அழைப்புவிடுகிறோம்,
பணிநாள் முடிந்தபின் தங்கள் குறைகளைக் கூறலாம்,
வேறுவிதங்களில் வெளிப்படுத்த வழி காணலாம்.”

தொழிலாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும்
பதாகை
மாடிசன் ஆசிரியர்கள் முன்னணியில் நிற்க
ஆசிரியர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கில் வேலையில் இருந்து
வெளிநடப்புச் செய்தனர்.
மில்வாக்கி,
ராசைன்,
யூ
கிளேர்,
லா
கிரோசி,
ஜேன்ஸ்வில்லே ஆகிய பள்ளி மாநிலங்கள் மற்றும் டஜன் கணக்கான சிறு
நகரங்கள்,
நகரங்களிலுள்ள பள்ளிகள் மூடப்பட்டன.
எத்தனை
ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத்
தெரியவில்லை,
ஆனால்
அது
10,000க்கும்
மேல் உறுதியாக இருக்கலாம்.
பல்லாயிரக்கணக்கான பணிநாட்கள் இழக்கப்பட்டுவிட்டன.
மில்வாக்கி மற்றும் மாடிசன் பள்ளி மாவட்டங்கள்,
மாநிலத்தில் மிகப் பெரிய பிரிவுகள் திங்களன்று மூடப்பட்டன.
ஆனால்
முழு ஆசிரியர்கள் பணிக்கு வருவதுடன் செவ்வாயன்று திறக்கப்படும்
என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர்.
மற்ற தொழிற்சங்கங்களும் இயக்கத்திலிருந்து
விலகுவது போல் தோன்றுகின்றன.
மாநிலம் முழுவதும் உழைக்கும் மக்களின் பொது ஆதரவு மிகப் பெரிய
அளவில் இருந்தும்கூட இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில
AFL-CIO, AFSCME
ஆகியவை
இரண்டும் திறமையுடன் இந்த வாரம் சட்டவரைவு இயற்றப்பட
உழைக்கவும் என்றும் இயக்கத்தை தொடர்ச்சியான
தனிமைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களாக தேர்ந்தெடுக்கப்படும்
குடியரசு மாநில செனட்டர்கள் பதவியில் இருந்து விலக்கப்பட
வேண்டும் என்னும் இயக்கமாகத் திசைதிருப்பவும் முற்படுகின்றன.(அடுத்த
ஆண்டு வரை கவர்னர் வால்கர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை
முன்வைக்கப்பட முடியாது.)
சட்டவரைவிற்கான எதிர்ப்பு விஸ்கான்சன்
பல்கலைக்கழக வளாகங்களில் வலுவாக உள்ளது.
அங்கு
மாணவர்கள்,
பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும்
எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலரும்
நீண்ட தூரம் பயணித்து மாடிசனுக்கு வந்து மாநில காபிடோலுக்கு
வெளியே அணிவகுப்புக்களில் சேர்கின்றனர்.
விஸ்கான்சன் மாடிசன் பல்கலைக்கழக
பட்டப்படிப்பைக் கற்பிக்கும் உதவியாளர்கள் செவ்வாயன்று
தொழிலாளர் எதிர்ப்புச் சட்டவரைவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க
“வெளியே
கற்பித்தல்”
என்னும் முறைக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
இது
வேலைநிறுத்தம் இல்லாமல் பிரச்சாரத்தைத் தொடரும் ஒரு
வழிவகையாகும்.
UW Madison Teaching Assistants
சங்கம்
வெளிநடப்பிற்குப் பதிலாக
“வெளியே
கற்பித்தல்”
என்பதற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.
“பயிற்சியாளர்கள்
தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்தி வகுப்புக்களை நடத்தாமல்
இருக்கலாம்,
ஆனால்
வளாகத்திற்கு வெளியே நடக்கும் வகையில் செயல்படலாம்.”
300க்கும்
மேற்பட்ட
UW Madison
ஆசிரியர் உறுப்பினர்கள்,
தொழிற்சங்கத்தில் சேராதவர்கள்,
மாநிலத் தொழிலாளர்களின் கூட்டுப் பேச்சுவார்த்தை உரிமைகள்
இழப்பது பற்றிக் கவலை தெரிவித்து ஒரு கடிதத்தில்
கையெழுத்திட்டுள்ளனர்.
இதில்
TAA
யில்
இப்பொழுதுள்ள பட்டதாரி மாணவர் உதவியாளர்களும் அடங்குவர்.
பல
ஆசிரிய உறுப்பினர்களும் செவ்வாயன்று வகுப்பை
“வெளியே
நடத்துதலுக்கு”
ஆதாரவாக
உள்ளே
இரத்து செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வால்க்கர் முன்வைத்துள்ள வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களைப் பற்றிக் குறிப்பிட்டு இக்கடிதம்,
“இத்தகைய
வெட்டுக்கள் நல்ல தரமுடைய ஆசிரியர்கள்,
பட்டதாரி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதைக் கடினமாக்கும்.
அவர்கள்
UW Madison
ஐ ஒரு
முக்கிய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாக அமெரிக்காவிலும் சர்வதேச
அளவிலும் செய்துள்ளனர்”
என்று
எழுதியுள்ளது.
TAA
ஒப்பந்தம் முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலத்திற்குப்
பின்னும் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்துடனான தொடர்புகள் விரிவாக்கத்தில் உள்ளன.
பேச்சுவார்த்தைகளும் அதே நேரத்தில் தொடர்கின்றன.
இந்த
விரிவாக்கங்கள் மார்ச்
13
உடன்
நிறுத்தப்பட வேண்டும் என்று கவர்னர் வால்க்கர் கட்டாய
உத்தரவைப் போட்டுள்ளார்.
இதன்
பொருள் கற்பிக்கும் உதவியாளர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து
பாதிப்பிற்கு எதிரான பாதுகாப்பை பெற மாட்டார்கள்.
அதேபோல் பல்கலைக்கழகம் கட்டணப் பயிற்சியைத் தள்ளுபடி செய்தல்
குறைத்தல் இவற்றிற்கு எதிராகவும் ஒன்றும் செய்யமுடியாது.
கற்பிக்கும் உதவியாளர்கள் வால்க்கரின் சட்டத்தை
எதிர்த்து பகிரங்கமாகப் போராடிய தொழிலாளர்கள் குழுவில் முதல்
குழுவினர் ஆவர்.
பெப்ருவரி
14,
திங்களன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அப்பொழுது
1,200
மாணவர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்கள் என்று மதிப்பிடப்பட்ட
கூட்டம் வளாகத்திலிருந்து காபிடோல் கட்டிடத்திற்கு மாநில
அரசாங்கத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் தேசியப்
பாதுகாப்புப் படையை கொண்டுவருதல் என்னும் வால்க்கரின்
அச்சுறுத்தலுக்கு எதிராக அணிவகுத்து ஆர்ப்பரித்தது.
மாநிலத்தில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு
பெரும் ஆதரவு இருக்கும்.
ஆசிரியர்கள் உட்பட உள்ளூர் தொழிலாளர்கள் பங்கு ஏற்பர்.
ஆனால்
தொழிற்சங்க அதிகாரத்துவம் அத்தகைய நடவடிக்கையை முற்றிலும்
எதிர்க்கிறது.
ஏனெனில் இது மாநிலச் சட்டத்தை மீறுவது என்று மட்டும் இல்லாமல்,
பொதுத்துறைத் தொழிலாளர்கள் மற்றும் முழுத் தொழிலாள
வர்க்கத்தின் அடிப்படை சமூகக் குறைகளை பகிரங்கமாகக்
கொண்டுவரும்.
அது
தவிர்க்கமுடியாமல் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நோக்கத்துடன்
முரண்பட்டுவிடும்.
ஊதிய வெட்டுக்கள் மற்றும் சமூகநலச் செலவுகள்
பற்றிய வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று
தொழிலாளர்களும் இளைஞர்களும் கோருகையில்,
தொழிற்சங்கங்கள் பலமுறையும் அவை பல சலுகைகளைவிட்டுக் கொடுக்கத்
தயார் என்று வலியுறுத்தியுள்ளனர்.
குடியரசுக் கட்சியினர் தொழிற்சங்கங்களே கூடாது என்ற
நோக்கத்தைக் கொண்டு முன்வைத்த சில கருத்தைக்களை,
அதுவும் உறுப்பினர் கட்டணம் பற்றியவற்றை,
மட்டும்தான் அவை ஒப்புக்கொள்ளவில்லை.
வால்க்கரின் திட்டம் பொதுத்துறைத் தொழிலாளர்கள்
மீது தொலைநோக்குடைய தாக்குதல் ஆகும்.
சுகாதாரப் பாதுகாப்பு,
ஓய்வூதியத் திட்டங்களில் ஊழியர்கள் பங்கை அதிகரிப்பதின் மூலம்
இது ஊதியக் குறைப்புக்களை
8
முதல்
20
சதவிகிதம் வரை கட்டாயமாகக் குறைத்துவிடும் என்று தொழிலாளர்கள்
கூறுகின்றனர்.
மேலும்
ஆளுனருக்கு இது ஒருதலைப்பட்சமாக அவர் நெருக்கடிச் சட்டத்தை
அறிவிக்கும்போது தொழிலாளர்களை தாக்குவதற்குப் புதிய
அதிகாரங்களைக் கொடுக்கிறது.
அதற்காக தேசிய பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்தும் அதிகாரம்
வரும் என்ற அச்சுறுத்தலும் உள்ளது.
Wisconsin State Journal
திங்களன்று குறைந்தபட்சம் ஆறு தேசியப் பாதுகாப்புப் படை
அதிகாரிகள் சாதாரண உடையில் ஒரு மாநிலச் சிறையை கடந்த வாரம்
பார்வையிட்டனர் என்று தெரிவித்துள்ளது.
மாநில
ஊழியர்களுடைய பெரும் வெளிநடப்பில் சிறைக்காவலர்களும் சேர்ந்து
கொண்டால்,
துருப்புக்கள் சிறைக்கு சிறைக் காவலர்களுக்குப் பதிலாக
அனுப்பப்படுவர் என்று வால்க்கர் கூறியுள்ளார்.
தொழிற்சங்க அதிகாரிகளுக்குக் கூடுதலான கவலை
கொடுப்பது,
பலமுறையும் அவர்கள் வலியுறுத்துவது,
சட்டவரைவின் நடவடிக்கைகள்
“கூட்டுப்
பேச்சுக்களை”
தகர்க்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதுதான்.
இதையொட்டி தொழிற்சங்க உரிமங்கள் பெற ஆண்டுத் தேர்தல்கள்
கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
மேலும்
குறிப்பிட்ட தொழிலாளர் பிரிவுகளின் உரிமைகளையும் இது
பாதிக்கும்.
அதில்
கற்பிக்கும் உதவியாளர்கள்,
பேராசிரியர்கள் ஆகியோர் சட்டபூர்வ தொழிற்சங்கம் அமைப்பதில்
தடைபெறுவர் என்பது அடங்கும்.
கட்டாயமாக உறுப்பினர் கட்டணம் வசூல் முறை நிறுத்தப்படுவது
என்னும் நோக்கமுடைய இச்சட்ட வரைவு அதிகாரத்துவத்திற்கு
தன்னார்வ அளிப்புக்களை மட்டும் நம்பியிருக்கும் நிலையை
ஏற்படுத்திவிடும்.
அது
ஜனநாயகக் கட்சிக்கு போதிய இருப்புக்களை அவர்கள் கொடுக்கும்
திறனை அரித்துவிடும்.
தொழிற்சங்க அதிகாரத்துவம் ஜனநாயகக் கட்சியின்
முக்கியமான கூறுபாடு ஆகும்.
ஆனால்
விஸ்கான்சனின் ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின்
பேச்சுக்கள்,
செயல்களுக்கு ஊக்கம் கொடுப்பது,
ஜனாதிபதி ஒபாமாவிற்கும் கொடுப்பது,
தொழிற்சங்கங்கள் ஊதிய மற்றும் வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களை செயல்படுத்துவதற்கு தவிர்க்க முடியாத
கருவிகள்,
நாடுமுழுவதும் வெட்டுக்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன
எக்கட்சி ஆட்சி புரிந்தாலும் சரி என்ற நிலையில்,
என்பதாகும்.
ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் செவ்வாயன்று
காபிடோலை விட்டு வெளியேறினர்.
இது
தற்காலிகமாக சட்டவரைவு இயற்றப்படுவதை குடியரசுக்கட்சியின்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செனட்டில் போதுமான குறைந்த பட்ச
எண்ணிக்கை இல்லாமல் செய்வதற்கு ஆகும்.
பொலிஸ்
பெரும் தேடும் முயற்சியைத் தவிர்த்து அண்டை மாநிலமான
இல்லிநோய்ஸில் மறைந்துள்ளனர்.
இத்தந்திரோபாயம் சட்டம் இயற்றப்பட்டால் ஏற்படக்கூடிய ஒரு
பெரும் சமூக வெடிப்பைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது.
ஏனெனில் பல்லாயிரக்கணக்கான சீற்றமுடைய தொழிலாளர்களும்
இளைஞர்களும் காபிடோலின் நுழைவாயிலில் உள்ளனர்.
அவர்கள் சட்டவரைவு பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,
சில
சலுகைகள் தொழிற்சங்கத்தினருக்கு தரப்பட வேண்டும்,
அதே
நேரத்தில் ஊதியங்கள் மற்றும் வேலைநிறுத்த உரிமைகள் மீதான
சட்டத்தின் தாக்குதல்கள் வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்றும்
விரும்புகின்றனர்.
குடியரசுக் கட்சியினர் தாங்கள் சட்டவரைவை மாற்ற
முடியாது என்று வலியுறுத்துகின்றனர்.
திங்களன்று மாநிலக் குடியரசுக் கட்சியினர் தாங்கள் ஜனநாயகக்
கட்சியினர் வராததைப் பயன்படுத்தி மற்ற சட்டங்களை இயற்ற
இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதில்
தேர்தல்களில் வாக்குப் பதிவு செய்யுமுன் வாக்காளர்கள் புகைப்பட
அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்று கூறும் சட்டமும் உள்ளது.
மற்றொரு குடியரசுக் கட்சி செனட்டர் சமரசமுறையில் ஒரு முடிவு
விதியைச் சேர்க்க இருப்பதாகவும் அதன்படி தொழிலாளர்கள்
ஊதியத்தில் குறைப்புக்களைத் தக்க வைக்கையில் கட்டாய உறுப்பினர்
கட்டணம் மீட்பதற்கு வகை இருக்கும் என்று சேர்க்கப்படும் என்று
கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் விரைவில் தங்கள்
எதிர்ப்பை விலக்கிக் கொண்டுவிடுவர்.
ஆனால்
விஸ்கான்சனில் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் உறுதியான
எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
அவர்களுடைய போராட்டம் மக்களுடைய ஆதரவை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
அதேபோன்ற நடவடிக்கைகள் அமெரிக்கா முழுவதும் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா முழுவதும் விஸ்கான்சன்
தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துத் திங்களன்று டஜன்கணக்கான
ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இவை
மேரிலாந்து,
நெவடா,
மேற்கு
வர்ஜீனியா மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் போன்ற தொலைவான
மாநிலங்களிலும் நடைபெற்றன.
தலைநகர் வாஷிங்டன் மாநிலத்தில்,
ஒலிம்பியாவில் கிட்டத்தட்ட
2,000
எதிர்ப்பாளர்கள் காபிடோல் கட்டிடத்தில் குழுமி விஸ்கான்சன்
தொழிலாளர்களுக்கான தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தி தங்கள்
மாநிலத்திலும் நடக்கும் வரவு-செலவுத்
திட்டக் குறைப்புக்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். |