World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US troops to Niger: A new stage in the scramble for Africa

நைஜருக்கு அமெரிக்கத் துருப்புக்கள்: ஆபிரிக்காவிற்கான போட்டியில் ஒரு புதிய கட்டம்

Bill Van Auken
26 February 2013

Back to screen version

கடந்த வாரம், அமெரிக்கத் துருப்புக்கள் வடமேற்கு ஆபிரிக்க நாடான நைஜருக்கு நிலைகொள்ள அனுப்பப்படுகின்றன என்ற ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் காங்கிரஸிற்கான சுருக்கமான குறிப்பு, ஆபிரிக்காவில் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கம் ஒரு முழு அளவிலான புதிய மட்டத்திற்கு வந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த மாதம் வாஷிங்டனுக்கும் நைஜர் அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்பாட்டின்படி முதல் 100 துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளதுஇன்னும் நூற்றுக்கணக்கில் தொடர்வர் என்று கூறப்படுகிறதுஇது, அமெரிக்க இராணுவத்தை அந்நாட்டின் எல்லைக்குள் டிரோன் தளத்தை நிறுவ அனுமதிப்பதோடு ஒபாமா நிர்வாகத்தின் தொலைக் கட்டுப்பாட்டின் மூலம் கொல்லும் முறையை பிராந்தியம் முழுவதும் விஸ்தரிப்பதற்கான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பது உறுதியாகிறது.

கடந்த மாதம், முக்கிய அமெரிக்க தளவாட மற்றும் உளவுத்துறை ஆதரவுடன் அண்டை நாடான மாலியில் பிரான்சின் தலையீட்டை உடனடியாகத் தொடர்ந்து, நைஜரில் அமெரிக்க படைகள் கட்டமைக்கப்படுவது என்பது, பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி Jean-Yves Le Drian  உடைய வார்த்தைகளில் முன்னாள் காலனிகளை மீண்டும் வெற்றி கொள்ளும்நோக்கத்தை கொண்டதாகும்.

பாரிஸும் வாஷிங்டனும் தம் ஆபிரிக்கக் கண்டத்தினுள்ளான ஊடுருவலை, ஆபிரிக்காவில் இருக்கும் அல் குவேடா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புக்களை தோற்கடித்தல் என்பதை காட்டி நியாயப்படுத்தியுள்ளன. பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமெரோனும் கடந்த மாதம் ஆபிரிக்காவில் இப்பொழுது நடைபெறும் போர் பலதசாப்தங்கள்நீடிக்கக்கூடும் என்று ஒத்து ஊதினார்.

ஆபிரிக்காவின் சகேல் பிராந்தியத்தில் போருக்கான இப்போலிக்காரணத்திற்கும், அசாத் ஆட்சியை சிரியாவில் போரில் அகற்றும் நோக்கமுடைய ஏகாதிபத்திய சக்திகள் குறுங்குழுவாத தளம் கொண்ட அல்குவேடா தொடர்புடைய கிளர்ச்சியாளர்களுக்கு பின்னே அணிவகுத்து நிற்பதற்கும் இடையே உள்ள அப்பட்டமான முரண்பாடு பற்றி இம்மூன்று நாடுகளிலும் செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நடைமுறைகள் மௌனமாகக் கடந்து செல்கின்றன.

உதாரணமாக, அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் எவரும், அமெரிக்கத் துருப்புக்களை அல்குவேடாவிற்கு எதிராக ஆபிரிக்காவில் நடப்பதாகக் கூறும் போரில் ஈடுபடச் செய்தல் என்பது ஒரு ஐ.நா.பாதுகாப்புக்குழுத் தீர்மானத்தில் டமாஸ்கஸில் நூற்றுக்கணக்கான குடிமக்களைக் கொண்ட அல் குவேடா பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலை கண்டித்த தீர்மானத்தை வாஷிங்டன் தடுத்து நிறுத்திய தினத்தன்றே வந்துள்ளது என்பதை எவரும் குறிப்பிடவில்லை.

ஏகாதிபத்திய தலையீட்டிற்கான போலிக்காரணத்தின் ஒத்திசைவற்ற தன்மையின் பின்னணியில், அதன் உண்மையான உந்துசக்திகள்  தெளிவாகத் தெரிகின்றன. ஆபிரிக்காவில் பொருளாதாரரீதியாக  சீனாவால் தான் நிழலுக்குள் தள்ளப்படும் நிலையை வாஷிங்டன் தெளிவாக உணர்கிறது. சீனா கண்டத்தின் முக்கிய வணிகப் பங்காளியாக வெளிப்பட்டுள்ளது. மூலோபாய வளங்கள் பற்றிய பெருகிய போட்டிமேற்கு ஆபிரிக்கா விரைவில் அமெரிக்க பெட்ரோலிய இறக்குமதியில் 25 வீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுஅமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் எஞ்சியுள்ள இராணுவ மேன்மையைத்தான் இப்பொருளாதாரச் சவாலை சந்திக்க நம்பியுள்ளது.

இந்தக் கொள்ளைமுறை மூலோபாயத்தை தொடர்வதில், அல் குவேடா அமெரிக்க மேலாதிக்கத்திற்கு தடைகள் என கருதப்படும் ஆட்சிகளை கவிழ்ப்பதற்கு அதிர்ச்சித் துருப்புக்களை வழங்குவதற்கும், “பயங்கரவாதம்”, “தீவிர வாதம்என்ற பெயரில் நடத்தப்படும் பிற தலையீடுகளுக்கு போலிக்காரணமாகவும் இரட்டைக் காரணங்களுக்கு உதவுகிறது.

நைஜரில் ஒரு புதிய தளத்தை நிறுவுதல், சமீபகாலம் வரை அமெரிக்க வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதிகளில் 10% விநியோகித்த நைஜீரிய எல்லைக்குச் சற்றே தொலைவில் அமெரிக்க டிரோன்களை இருத்துகின்றது. இங்கு பென்டகன், இஸ்லாமிய குழுவான போகோ ஹரம் தொடர்புடைய உட்பூசலில் பெருகிய முறையில் ஈடுபாடு கொள்கின்றது. இந்த உள்நாட்டுப்பிரிவு அல்குவேடாவுடன் பிணைப்புக்கள் எதையும் கொண்டிருப்பதாக தெரியாததுடன் மற்றும் நைஜீரியாவிற்கு வெளியே எவ்வித நோக்கங்களையும் கொண்டிருக்கவில்லை.

இந்த நிகழ்வுகளின் பின்னணியில், 2011ல் லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட அமெரிக்க-நேட்டோ தலையீட்டின் முக்கியத்துவம் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட 80,000 லிபியர்களின் உயிர்களைக் குடித்து, ஒரு முழுச் சமுதாயத்தையும் அழிவுகளுக்குள் தள்ளிய இப்போருக்கு முதலில் AFRICOM தலைமை தாங்கியது. அது புஷ் நிர்வாகத்தால் 2007ல் பிராந்திய கட்டளையகமாக நிறுவப்பட்டது. அது இன்னும் புதியதும் அதிக தொலைதூர விளைவுகளைக் கொண்டதுமான இராணுவத் தலையீடுகளுக்கு பாதை அமைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

சகேல் பிராந்தியத்தில் ஒரு மேலெழுந்தவாரியான உறுதிப்பாட்டை தக்க வைத்தல், பாதுகாப்பு, பொருளாதார உறவுகளுக்கான ஒரு முக்கிய புள்ளியாக கடாபி ஆட்சி இருந்தது. உதாரணமாக பொருளாதார உதவிகள் மூலம் துவாரக் மக்களுக்கும் மாலி, நைஜர் ஆட்சிகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த மோதல்களுக்கு வசதியளித்து வந்தது.

கடாபியைக் கவிழ்த்து கொலை செய்தது, அப்பிராந்தியத்தின் உறுதியைக் குறைத்த எதிர்பார்த்த விளைவுதான். இதனால் துவாரக்குகள் லிபியாவில் இருந்து மாலிக்கு ஓடினர். அதன்பின் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக போரில் அமெரிக்கா ஆதரித்த அதே இஸ்லாமியக் கூறுபாடுகளும் தொடர்ந்துசென்றன. இதனால் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு பிராந்தியத்தில் களத்தில் துருப்புக்களை நிறுத்தவும், மீண்டும் தலையிட போலிக் காரணம் கிடைத்துள்ளது.

இத்தலையீடுகளுக்கான திட்டங்கள் திரிப்போலியின் முதல் குண்டு விழுமுன்னரே தயாரிக்கப்பட்டிருந்தன. இப்பிராந்தியம் கடந்த தசாப்தத்தில் அமெரிக்க மூலோபாயக் கணக்கீடுகளில் குவிப்பைக் கொண்டிருந்தது. 2003ம் ஆண்டு வாஷிங்டனின் பான் சகேல் முன்முயற்சியில் -Pan Sahel Initiative- தொடங்கி, 2005ல் அதன் சகாரா முழுவதற்குமான பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு வரை படர்ந்திருந்தது.

இப்பின்னணியில் போலி இடதுகளின் ஒரு முழு அடுக்கும் சர்வதேச அளவில் லிபியாவிற்கு எதிரான போரை முன்னெடுத்து, நியாயப்படுத்துவதில் இருந்த பங்கு, இதை ஒரு மனிதாபிமானத் தலையீடு, ஜனநாயகத்திற்கான பெரும் போர், ஏன் ஒருபுரட்சிஎன்று கூடக் கூறியதின் காரணம் முன்னைவிடத் தெளிவாகத்தான் உள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உயர்கல்விக்கூட அயோக்கியர் Juan Cole, ஈராக்கிய போரை விமர்சித்ததற்காக தனக்கு கிடைத்த பெரிய புகழை, லிபியாவில் போர் நடத்த ஆதரவிற்குக் கொடுத்தார். சர்வதேச பப்லோவாத ஐக்கிய செயற்குழுவின் உறுப்பினரான ஜில்பேர்ட் ஆஷ்க்கார், லண்டனில் கீழை நாடுகள் மற்றும் ஆபிரிக்க ஆய்வுகள்கூடத்தில் பேராசிரியராகவும் இருப்பவர், நேட்டோவை லிபியாவின் மீது அதிக குண்டுகள் போடாதற்குக் கண்டித்தார். ஜேர்மனியில் இடது கட்சியில் இருந்து பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, பிரித்தானியாவில் சோசலிசத் தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு வரை அனைத்தும் ஒரு கொள்ளைமுறை ஏகாதிபத்தியப் போரை அரசியலளவில் நெறிப்படுத்தும் அழுக்குப் படிந்த வேலையில் ஈடுபட்டன.

இந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் லிபியாவிலும், சிரியாவிலும்  போருக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது, மத்தியதர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளின் ஒரு முழு சமூக அரசியல் தட்டில் ஏற்பட்டுள்ள பரிணாமத்தை பிரதிபலிக்கிறது. அரசியல் கணிப்பீட்டினதும், உதாசீனத்தினதும் பல்வேறுவகையான கூட்டிணைப்புகளுடன் இவை தங்கள் பொருளாதாய நலன்கள்தங்கள்சொந்த ஏகாதிபத்திய சக்திகளுடன் உள்ளன என்று அடையாளம் கண்டுவிட்டன.

ஆபிரிக்காவின் வரைபடத்தை மறுபடியும் வரையும் ஏகாதிபத்திய உந்துதல் பெருகியுள்ள பின்னணியில், இக்கூறுபாடுகள் CIA மற்றும் பென்டகனுடைய  அறிவு சார்ந்த மற்றும் அரசியல்  “சொத்துக்கள்என்று முற்றும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அடுக்குகள் மேலும் வலதிற்கு நகர்ந்துள்ள நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டும்தான் யுத்தத்திற்கு எதிரான மார்க்சிச முன்னோக்கிற்கு ஆதரவு கொடுத்து அபிவிருத்திசெய்துள்ளது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைக்கப்பட்டதில் இருந்து, அமெரிக்க இராணுவ வாதத்தின் வெடிப்புத்தன்மையை பகுப்பாய்வு செய்து, இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று நெருக்கடிச் சரிவை ஈடுசெய்யும் வகையில் இராணுவ மேலாதிக்கத்தை தொடரும் முயற்சியைப் பிரதிபலிக்கிறது என்று கூறியது. ICFI, வெளிநாட்டில் ஏகாதிபத்தியத்தின் அதிகரித்த வன்முறை என்பது, தவிர்க்க முடியாமல் உள்நாட்டில் நிதியத் தன்னலக்குழுவிற்கும் பரந்த உழைக்கும் மக்களுக்கும் இடையே பெருகிவரும் சமூகப் பிளவுடன் பிணைந்துள்ளது என்பதையும் விளக்கியது.

போர் மற்றும் காலனித்துவத்திற்கு எதிரான உண்மை இயக்கம் என்பது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் திரள்வுக்கூடாகவும் மற்றும் போருக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்க்கும் போராடத்தில் சர்வதேச ரீதியாக ஐக்கியப்படுவதன் மூலம்தான் வளர்க்கப்படமுடியும். ஆபிரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை காணும்போது இம்முன்னோக்கு முற்றிலும் சரியென வெளிப்பட்டுள்ளது.