|
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஐரோப்பிய ஒன்றியம்
மேலதிக மந்தநிலையையும் வேலையின்மையையும் முன்கணித்து, ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல்
சிக்கன நடவடிக்கைகளைக் கோருகிறது
By Chris Marsden
23 February 2013
use this version to print | Send
feedback
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
நிர்வாக கருவியான ஐரோப்பிய
ஆணைக்குழு
(EC)
வெள்ளியன்று
கடுமையான
பொருளாதார
அறிக்கை
ஒன்றை
வெளியிட்டது.
அதன்
குளிர்கால
கணிப்புக்கள்
17 நாடுகள்
அடங்கிய
யூரோப்பகுதியில்
2013
இரண்டாம்
தொடர்ச்சியான
எதிர்மறையான வளர்ச்சியுள்ள
ஆண்டாக
இருக்கும்
என்றும்,
முழு
27 நாடுகள்
அடங்கிய
ஐரோப்பிய
ஒன்றியத்தில்
மொத்த
உள்நாட்டு
உற்பத்தியில்
வெறும்
0.1% வளர்ச்சிதான்
இருக்கும்
என்றும்
கூறியுள்ளது.
ஐரோப்பிய
ஒன்றியத்தில்
வேலையின்மை
2012ல்
இருந்த
10.3% உடன்
ஒப்பிடுகையில்,
2013ல்
புதிய
உயர்மட்டமான
10.7% இனை அடையும்
என்றும்,
ஆனால் இது
2014ல்
இன்னும்
அதிகமாக
11.0% என
உயரும்
என்றும்
ஐரோப்பிய
ஆணைக்குழு
கூறியுள்ளது.
யூரோ
நாணயத்தைப்
பயன்படுத்தும்
நாடுகளில்
வேலையின்மை
இந்த
ஆண்டு
12.2% என
இருக்கும்
என்றும்
ஸ்பெயினில்
வேலையின்மை
26.9% உயரும்
என்றும்
கூறப்பட்டுள்ளது.
நவம்பர்
மாதம்
வெளியிடப்பட்ட
அறிக்கை
ஒன்றில்
இருந்த
பொருளாதார
வளர்ச்சிக்
கணிப்புக்கள்
அனைத்தும்
கீழ்நோக்கிய
வகையில்
திருத்தப்பட்டதுடன்,
வேலையின்மை
பற்றிய
புள்ளிவிவரங்கள்
மேல்நோக்கி
உயர்த்தப்பட்டன.
இந்த எண்ணிக்கைகள்
1930களுக்குப்
பின்
காணப்படாத
அளவிலான சமூக
துயரநிலை மற்றும் வறுமை
பற்றிய
மங்கலான பிரதிபலிப்பைத்தான்
கொடுப்பதுடன்,
இவை இன்னும்
அதிகரிக்கவுள்ளன.
கடுமையான
சிக்கன
நடவடிக்கைகளில்
இருந்து
விளையும்
குறைந்துவிட்ட
நுகர்வினால்
வீழ்ச்சி ஆழமடைவது முக்கியமாக
ஏற்படுத்தப்பட்டுள்ளது
என்பதையும்,
பிரான்ஸ்
போன்ற
நாடுகள்
இதனால் வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறை
இலக்குகளை
அடைவது
இயலாமற்
போய்விட்டது
என்பதையும்
ஒப்புக்கொண்ட,
ஐரோப்பிய
பொருளாதார,
நிதிய
விவகாரங்களுக்கான
ஆணையர்
ஒலி
ரெஹ்ன்
ஐரோப்பிய
அங்கத்துவநாடுகள்
“சீர்திருத்தப்
போக்கை தொடரவேண்டும்,
அதன்
தாக்கத்தின் இழப்பைத்
தவிர்க்க
வேண்டும்”
என்றார்.
வங்கிகள்
மற்றும்
நிதிய
நலன்களின் சார்பாக பேசும் தன்
பங்கை ரெஹ்ன்
மறைக்க
முற்படவில்லை. சமூக
நலச்சேவைகளை அகற்றுதல்,
வேலைகள்,
ஊதியங்கள்
மற்றும்
ஓய்வூதியங்கள்
குறைக்கப்படுவது
ஆகியவற்றை தளர்த்துவது
“இப்பொழுது
ஏற்பட்டுள்ள
நம்பிக்கையைக்
குறைமதிப்பிற்கு
உட்படுத்திவிடக்கூடும்”
என்றார்.
ஐரோப்பிய
ஆணையத்தின்
குளிர்கால
கணிப்புக்கள்,
முதலீட்டாளர்களின்
நம்பிக்கையை
பெறுவதற்கான
“அடிப்படை கற்கள்”
என்றார்.
ஐரோப்பிய
ஆணைக்குழு,
யூரோப்பகுதியின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி
(GDP)
2013ல்
0.3% சுருக்கம்
அடையும்
என்றும்
இது
முன்பு
எதிர்பார்த்த
0.1% க்கு எதிரானது என்றும்
கணித்துள்ளது.
யூரோப்
பகுதியின்
மொத்த
உள்நாட்டு
உற்பத்தி
2012இல்
0.6% சுருக்கம்
அடைந்தது. அது
ஐரோப்பிய
ஆணைக்குழு கணித்திருந்த
0.2% என்ற
விரிவாக்கத்தை தவறாக்கியுள்ளது.
இப்புதிய
கணிப்பு
2014ல் ஐரோப்பிய
ஒன்றியம்
முழுவதும்
பொருளாதார
வளர்ச்சி
1.6% என
ஊர்ந்துவரும்
என்றும்
யூரோப்பகுதிக்கு
மட்டும்
1.4% என
இருக்கும்
என்றும்
உள்ளது.
தன்னுடைய
அறிக்கையில்
ஸ்பெயின்,
போர்த்துக்கல்
மற்றும்
பிரான்ஸ்
நாடுகளை
ஒப்புக்
கொள்ளப்பட்ட
இலக்குகளுக்கு
குறைப்பதில்
தோல்வி
அடைந்துள்ளவை
என்று
ரெஹ்ன்
குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சின்
சரியும்
பொருளாதாரம்
நாட்டின்
வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறையை
2012ல்
இருந்த
4.6%ல்
குறைந்து,
2013ல்
மொத்த
உள்நாட்டு
உற்பத்தியில்
3.7%
இனை ஏற்படுத்தும்
என்றும்,
ஆனால்
இது
உத்தியோகபூர்வ
இலக்கான
3.0 என்பதை
விட
அதிகம்தான்
என்றும்
ஐரோப்பிய
ஆணைக்குழு
கூறியுள்ளது.
அதன்
வரவு-செலவுத்
திட்ட
பற்றாக்குறையை
ஒப்புக்கொண்ட
அளவிற்கு
கொண்டுவரத்
தேவையான
வெட்டுக்களை
செய்வதற்கு
பிரான்சிற்கு
இன்னும்
ஓராண்டு
ஒதுக்கப்படும்.
ஆனால்
இந்த
ஆண்டு
மொத்த
உள்நாட்டு
உற்பத்தியில்
வெறும்
0.1% அதிகரிப்புத்தான்
அதனால்
முடியும்,
முன்னர்
கணிக்கப்பட்ட
0.4% அல்ல
என்று
ஐரோப்பிய
ஆணைக்குழு
கணித்துள்ளது.
ஐரோப்பிய
ஆணைக்குழு,
ஸ்பெயின்
இந்த
ஆண்டு அதன் இலக்குகளான
4.5% என்பதைவிட
மிக அதிகமாக
6.7%
ஆகும்,
மற்றும்
2014ல்
2.8% எனக்கணிக்கப்பட்டதைவிட
7.2% என்ற
இலக்கை அதிகளவில்
எட்டும்
என்று
கணித்துள்ளது.
போர்த்துக்கல்லின்
பொருளாதாரம்
2012ல்
3.2% இனால் சுருக்கம்
அடையும்.
இது
இந்த
ஆண்டு
1.9% சுருங்கும்
என்று
கணிக்கப்பட்டதற்கு மாறாக
உள்ளதுடன் மேலும்
இன்னும்
ஓராண்டு
சிக்கன
நடவடிக்கைகளில்
ஈடுபட்டால்தான்
ஐரோப்பிய
ஆணைக்குழுவின்
கோரிக்கைகளைப்
பூர்த்தி
செய்ய
முடியும்.
இத்தாலியின்
பொருளாதாரம்
2013ல்
1% சுருக்கம்
அடையும். இது
முன்பு
எதிர்பார்க்கப்பட்ட
0.5% என்பதைவிட இருமடங்காகும்
என்று
ஐரோப்பிய
ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
சைப்ரஸ்
முந்தைய
மதிப்பீட்டை
விட
இரு
மடங்கான மொத்த
உள்நாட்டு
உற்பத்தியில்
3.5% சுருக்கத்தை
ஒட்டி
ஒரு
பேரழிவையும்
ஒருவேளை
பிணையெடுப்பையும்
முகம்
கொடுக்கக்
கூடும்.
ஐரோப்பிய
பொருளாதார சக்திவாய்ந்த மையமான
ஜேர்மனி
இந்த
ஆண்டு
வெறும்
0.5% வளர்ச்சியை
மட்டுமே
அடையும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
யூரோப்
பகுதியில்
இல்லாத
பிரித்தானியா,
இன்னும்
சிக்கன
நடவடக்கைகளை
சுமத்த
வேண்டும். ஏனெனில்
அது
வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறை இலக்கை
எய்தவில்லை
என்று
கூறப்பட்டது.
பிரான்ஸ்
யூரோப்பகுதியின்
“நோயாளி”
என்று
விவரிக்கப்பட்டாலும்,
மிருகத்தன
வெட்டுக்கள்
இருந்தபோதிலும்கூட பிரித்தானியா
கூடுதலாகச்
செலவழிப்பது
ஐரோப்பாவிலேயே
மிக
மோசமானதாக உள்ளது.
2012ல்
மொத்த
உள்நாட்டு
உற்பத்தியில்
6.3%
ஆக இருந்த பற்றாக்குறையில் செலவு
செய்தல்
என்பது,
2013
இல்
7.4%
என உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில்
ஏழு
யூரோப்பகுதிப் நாடுகள்
2013ல்
சுருக்கம்
அடையும்
என
எதிர்பார்க்கப்படுகிறது. இதில்
இத்தாலி,
ஸ்பெயின்,
கிரேக்கம்,
போர்த்துக்கள்,
சைப்ரஸ்
மற்றும்
ஸ்லோவேனியாவுடன்
நெதர்லாந்து
சேர்கிறது.
டச்சுப்
பொருளாதாரம்
இந்த
ஆண்டு
0.6% சுருங்கும்
எனவும்,
கிரேக்கம்
4.4 சதவிகிதம்
சுருங்கும்
என்றும்
கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில்
வேலையின்மை
நெருக்கடி
பெருந்திகைப்பு
கொடுக்கும்
மோசமான
பிரச்சினையாகும்
என்று
ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
ஆனால்
நிலைமையை
மோசமாக
ஆக்கக்கூடிய
கூடுதல்
சிக்கன
நடவடிக்கைகளுக்கான
வழிவகைகளைத்தான்
கூறியுள்ளது.
“யூரோப்பகுதி
தொடர்ந்து
சரிவைக்
கொண்டிருப்பது
உலக அளவில் ஒரு
ஆபத்தை தொடர்ந்து
கொடுக்கிறது...
குறிப்பாக
நீடித்த
தேக்க
நிலை
யூரோப்பகுதி
முழுவதும்
இருக்கும் ஆபத்து சீர்திருத்த
வேகம்
தக்கவைக்கப்படவில்லை
என்றால்
தொடர்ந்து மோசமடையும்”
என்று கடந்த
மாதம்
சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
அத்தகவல்
இப்பொழுது
ரெஹ்ன்
மற்றும்
ஐரோப்பிய
ஆணையத்தால்
உரத்துக்கூறப்படுகின்றது.
இதனைத்தான் ஐரோப்பாவின்
ஆளும்
கட்சிகள்
அதிகம்
செவிமடுக்க
தயாராக இருக்கின்றன.
பற்றாக்குறையை
வெட்டுதல்,
அதையொட்டி
வங்கிகள்
மற்றும்
பெருநிறுவனங்களின்
கருவூலத்தை
நிரப்புதல்
என்பது
எவ்வகையான அரசாங்கங்கள்
பதவியிலிருந்தாலும் எல்லோராலும் பகிர்ந்துகொள்ளப்படும் உலகத்
தேவையாக உள்ளது. உண்மையில்
ரெஹ்ன்
உடைய
முந்தைய
நாள்
அறிவிப்பான
நீண்டக்கால
மீட்பிற்கு
இன்னும்
அதிக
கவனம்
தேவைப்படுகிறது
என்பதும், சர்வதேச நாணய
நிதியத்தின் பரிந்துரைகளுடன்
இணைந்த
அவருடைய முன்மொழிவான திருப்பிக்
கொடுக்கும்
திட்டங்கள்
சில
நாடுகளுக்கு ஓராண்டு
நீடிக்கக்கப்பட வேண்டும்
என்பதும்
ஐரோப்பிய
மத்திய
வங்கி,
ஜேர்மனி,
ஆஸ்திரியா
ஆகியவற்றில்
இருந்து
கடும்
குறைகூறலை
எதிர்கொண்டுள்ளது.
ஐரோப்பிய
மத்திய
வங்கியின்
நிர்வாகக்
குழுவில்
உள்ள ஜேர்மன் சமூக
ஜனநாயக கட்சியின் ஜோர்க்
அஸ்முசீன்,
பிரான்சை
பிடியில்
இருந்து
விட்டுவிடக்கூடாது
என்று
வலியுறுத்தினார்:
ஏனெனில்
அது
ஸ்பெயின்
இன்னும்
பிற
இடங்களில்
சுமத்தப்பட்டிருப்பது
போன்றவற்றை
செயல்படுத்தவில்லை.
ஜேர்மனியின்
சான்ஸ்லர்
அங்கேலா
மேர்க்கெலின்
கிறிஸ்துவ
ஜனநாயக
ஒன்றியத்தின்
மைக்கேல்
புஷ்ஸால்
பிரான்ஸ்
“பிரச்சினைக்குரிய
குழந்தை”
என்று
விளிக்கப்பட்டுள்ளது.
அவர்
Deutschlandfunk
வானொலியில்
“பிரெஞ்சு
தங்கள்
வீட்டுவேலையை செய்யவேண்டும்.
மற்ற
நாடுகளைவிட
மிக,
மிக
பின்னால்
உள்ளனர். ஐரோப்பாவின்
இரண்டாம்
மிகப்
பெரிய
பொருளாதாரமாக பிரான்ஸ்
இருப்பதால் இது
எச்சரிக்கையை
கொடுக்கிறது.”
என்றார்.
வெட்டுக்களைச்
சுமத்துவதில்
எவ்வித தாமதத்தையும்
எதிர்க்கும்
ஆஸ்திரிய
நிதியமைச்சரகத்தின்
பொருளாதார கொள்கை இயக்குனர்
குழுவை சேர்ந்த
ஹரால்ட்
வைக்லைன்,
“பெரிய
பொருளாதார
(macroeconomic) வகை
வாதங்கள்
நல்ல
முறையில்
இருக்கலாம்,
ஆனால்
அது
நம்
நம்பகத்
தன்மையை
சேதத்திற்கு
உட்படுத்திவிடும்.
மீண்டும்
சோம்பேறித்தனத்தில்
நாம்
உள்ளோம்
என்ற
ஆபத்தை அது
ஏற்படுத்திவிடும்”
என்றார்.
சிக்கனம்
தீவிரமடைதல்
என்பது
ஏற்கனவே
கண்டம்
முழுவதும்
வெடிப்புத்
தன்மை
உடைய
சமூக
அழுத்தங்களை
ஏற்படுத்தியுள்ளது.
இதில்
கிரேக்கம்,
ஸ்பெயின்,
போர்த்துக்கல்
ஆகியவற்றில்
மில்லியன்
கணக்கானவர்கள்
பரந்துபட்ட
எதிர்ப்பை
நடத்துவது,
அரசாங்க
வீழ்ச்சிகளுடன் இணைந்த
விழித்திருக்கும்போதே
பெரும்
தீயகனாவான
வறுமை,
பரந்த
வேலையின்மை
இவற்றில்
தொழிலாள
வர்க்கத்தை
ஆழ்த்துவது
என்பவற்றுடன்
தொடர்புடையனவாக
உள்ளன.
ஐரோப்பாவின்
ஆட்சியாளர்கள்
வெட்டுக்கள்,
வேலை
இழப்புக்கள்
மற்றும்
சமூகநலசேவைகள்
அழிக்கப்படுதல்
ஆகியவற்றிற்கு
எதிரான
சமூக,
அரசியல்
எதிர்ப்பைச்
சிதைக்க தொழிற்கட்சி மற்றும்
தொழிற்சங்க
அதிகாரத்துவம்
மற்றும்
கிரேக்கத்தின்
சிரிசா போன்ற போலி
இடது
அமைப்புக்களைத்தான்
நம்பியுள்ளனர்.
ரெஹ்னே
இதை
ஒப்புக்
கொண்டு,
ஐரோப்பிய
தொழிற்சங்க
கூட்டமைப்பின்
கூட்டம்
ஒன்றில்
கடந்த
மாதம்
பேசுகையில்,
“தொழிற்சங்கங்கள்
ஐரோப்பியப்
பொருளாதார
மீட்பில்
அடிப்படையான
பங்கைக்
கொண்டுள்ளன”
என்றார்.
ஐரோப்பாவிற்கு
“நீடித்த
வளர்ச்சி,
வேலைகளை
தோற்றுவித்தல்
ஆகியவற்றிற்கு
சீர்திருத்தம் தேவை.
இச்சீர்திருத்தம்
ஐரோப்பிய
தொழில்துறையின்
போட்டித்தன்மையை
வலியுறுத்த
வேண்டும்”
என்றார்
ரெஹ்ன்.
இது
சமூகநலத்
திட்டங்கள்
அழிப்பைப்
பற்றி
மட்டும்
குறிப்பிடாமல்,
பணிநீக்கங்கள்,
வேலையை விரைவாக்குதல்
ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப்பு
விதிகளை
அகற்றும்
தொழிலாளர்
சந்தை
“சீர்திருத்தங்களையும்”
குறிக்கிறது.
முதலாளிகளுக்கும்
தொழிற்சங்கங்களுக்கும்
இடையில்
“ஆக்கபூர்வ
சமூக
உரையாடல்”
என்பது
“பொருளாதார
நெருக்கடி
மற்றும்
கட்டுமான
மாற்றத்தினை
வெற்றிகரமாக நிர்வாகிப்பதில்
முக்கிய
பங்கைக்
கொண்டுள்ளது”
என்று
அவர்
தொடர்ந்து கூறினார்.
மேலும்
அரசாங்கங்கள்,
பெருநிறுவனங்கள்
மற்றும்
தொழிற்சங்க
அமைப்புக்கள்
ஆகியவை
அடங்கிய ஐரோப்பிய
ஒன்றிய
முத்தரப்பு
ஒன்றும்
தோற்றுவிக்கப்பட
வேண்டும்
என
அழைப்பு
விடுத்தார்.
ஆனால்
தொழிற்சங்கங்களும்
அவற்றின்
போலி
இடது
அரசியல்
நட்பு
அமைப்புக்களும்
இன்னும்
அதிகமாக
சிக்கனத்துடன்
தொடர்பு
கொண்டிருக்கையில்,
நிலைமையின்
வெடிப்புத்தன்மை
அரசியல்
அளவில்
இன்னும்
அதிகமாகிறது.
இந்த
வாரம்
பல்கேரியாவில்
பிரதம
மந்திரி
பொய்க்கோ
போரிசோவின்
வலதுசாரி
அரசாங்கம்
வீழ்ச்சியடையும்
வாழ்க்கைத்தரங்களுக்கு
எதிரான
வெகுஜன
எதிர்ப்புக்களை
முகங்கொடுத்து
இராஜிநாமா
செய்தது. இதனால் புதிய
தேர்தல்கள்
முன்கூட்டி
வரும்.
இதை
பைனான்சியல்
டைம்ஸ்
“இந்த சமூக அமைதியின்மை
நெருக்கடியால்
நேரில்
பாதிக்கப்படாத
நாடுகளில்
கூட
போதுமான
ஆற்றலுடன்
வெடித்து
அரசாங்கங்களை
கவிழ்க்க
முடியும்
என்பதற்கான
எச்சரிக்கை
இது”
என்று
குறிப்பிட்டுள்ளது.
மேலும்,
“தீவிரமயமான கட்சிகள்
சிதைவுற்ற
பாராளுமன்றத்தில்
அதிக
நலன்களைப்
பெறும்
ஆபத்தும்
உள்ளது”
என்றும்
அது
எச்சரித்துள்ளது.
இதுவரை,
“இடது”
எனக்
கூறப்படுபவை
ஐரோப்பிய
ஒன்றியத்திற்கும்,
அதற்குத்
தேவையான
வெட்டுக்களுக்கும்”
ஆதரவை
கொடுத்ததால்
வலதுசாரிகள்தான்
இலாபமடைந்துள்ளனர்.
ஆனால்
இப்பொழுது
மில்லியன்
கணக்கானோர்
பரந்த
அரசியல்
வெளிப்பாட்டைக்
காண
ஆரம்பிப்பதற்கான
முதலாளித்துவ
எதிர்ப்பு
உணர்வு
கொண்ட,
இடது
புறம்
நகருவதற்கான
நிலைமைகள்
இருக்கின்றன. |