|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France-Qatar tensions rise over Mali war, Tunisia
பிரான்ஸ்-கட்டார்
அழுத்தங்கள் மாலிப் போர்,
துனிசியா
பற்றி வந்துள்ளன
By Jean
Shaoul
28 February 2013
Back to screen version
பிரான்சிற்கும்
கட்டாருக்கும்
இடையே
அழுத்தங்கள்
அதிகரித்து
வருகின்றன,
பெட்ரோ
முடியாட்சி
மாலியின்
அல்குவேடாவுடன்
பிணைப்புடைய
ஆயுதம்
தாங்கிய
பிரிவினைவாதிகள்
மற்றும்
இஸ்லாமியவாதப்
போராளிகளுக்கு
நிதியும்
ஆயுதமும்
கொடுக்கிறது
என்ற
குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன;
இன்னும்
பரந்த
அளவில்
ஆபிரிக்காவில்
இஸ்லாமிய
அடிப்படைவாதத்தை
பரப்புகிறது
என்ற
குற்றச்சாட்டும்
உள்ளது.
லிபியாவில்
முயம்மர்
கடாபியை
அகற்றுவதில்
பிரான்ஸ்,
கட்டாருடன்
நெருக்கமாக
உழைத்தது.
தற்பொழுது
இது
டோகாவுடனும்,
ரியாத்
மற்றும்
அங்காராவுடனும்
ஒத்துழைத்து
சிரியாவின்
ஜனாதிபதி
பஷர்
அல்
அசாத்தை
அகற்றும்
குறுங்குழுவாத
போரை
நடத்துவதோடு
ஈரானை
தனிமைப்படுத்துகிறது.
ஆனால்
இப்பொழுது
மனக்கசப்புக்கள்
வளர்ந்துள்ளன,
பிரான்ஸ்
தனது
முன்னாள்
வடக்கு,
மேற்கு
ஆபிரிக்க
பேரரசில்
மறு
காலனித்துவத்தை
நிறுவும்
திட்டங்களைக்
கொண்டுள்ளதால்
கட்டாரின்
கொள்கைகள்,
பிரான்சின்
புவி
அரசியல்
மற்றும்
வணிக
நலன்கள்
என்று
மாலி,
துனிசியாவில்
இருப்பவற்றுடன்
மோதுகின்றன.
கட்டார்
பிரதம
மந்திரி
ஷேக்
ஹமத்
பின்
ஜசீம்
அல்-தனி,
மாலியில்
பிரெஞ்சுத்
தலையீட்டை
எதிர்த்து,
அதற்கு
பதிலாக
உரையாடல்
தேவை
என
அழைப்பு
விடுத்துள்ளார்.
பிரான்சின்
ஆளும்
சோசலிஸ்ட்
கட்சியின்
தலைவர்
Harlem Désir
கட்டார்
“வடக்கு மாலியை ஆக்கிரமித்துள்ள
பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவைக் கொடுக்கிறது” என்று கண்டித்துள்ளார். இவருடைய
கருத்துக்களை தொடர்ந்து பாதுகாப்பு மந்திரி
Jean-Yves Le Drian
டோகாவிற்கு
அல்
தனியுடன்
மாலி
பற்றி
விவாதிக்கச்
சென்றுள்ளார்.
பாதுகாப்பு
அமைச்சரகத்தின்
அறிக்கை
ஒன்று
குறிப்பாக
கட்டார்
“பிரான்சின்
சிறப்புரிமை
பெற்ற
வாடிக்கை
நாடு”
என்று
கூறியுள்ளது,
இந்நாடு
“வாங்கியுள்ள
ஆயுதங்களின்
மதிப்பு
450 மில்லியன்
யூரோக்கள்,
2007ல்
இவை
200 மில்லியன்தான்
இருந்தன.”
அமைச்சரகம்
பெப்ருவரி
16 ல்
இருந்து
மார்ச்
7 வரை
கட்டாரில்
ஒரு
கூட்டு
இராணுவப்
பயிற்சி
நடத்தப்படும்
—Falcon Gulf 2013—
இதில்
1,300
பிரெஞ்சு துருப்புகளும் அதே எண்ணிக்கையில் கட்டார் துருப்புகளும் இருப்பர் என்றும்
தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு
செய்தி
ஊடகம்,
வடக்கு
மாலி
தனியாகப்
பிரிந்து
செல்ல
வேண்டும்
என
கட்டார்
விரும்புவதாகக்
குற்றம்
சாட்டியுள்ளது;
அது
எப்படிச்
சூடானில்
இருந்து
தெற்கு
சூடான்
பிரிந்து
செல்ல
ஆதரவு
கொடுத்ததோ
அப்படித்தான்
இதுவும்.
இது
கட்டாரை
புதிய
நாட்டுடன்
நெருக்கமான
உறவுகளை
வைத்துக்
கொள்ள
அனுமதிக்கும்—அங்கு
எண்ணெய்,
எரிவாயு
மிகவும்
செழிப்பாக
இருப்பதாகக்
கூறப்படுகிறது;
இதையொட்டி
தான்
மேற்கிலும்
துணை
சகாரா
ஆபிரிக்காவிலும்
தன்
செல்வாக்கை
விரிவுபடுத்தலாம்
என்று
கருதுகிறது.
கடந்த
ஜூன்
மாதம்
வாராந்திர
ஏடான
Le Canard Enchaîné,
“நம் நட்பு நாடு கட்டார்
மாலியில் இஸ்லாமியவாதிகளுக்கு நிதியளிக்கிறது” என்ற தலைப்பில் கட்டுரை
ஒன்றை வெளியிட்டது. பிரெஞ்சு
இராணுவ உளவுத்துறை ஆதாரங்களை அது மேற்கோளிட்டு கட்டார் நிதிய அளவில் பல
குழுக்களுக்கு ஆதரவு தருகிறது என்றும் கூறியது—MNLA
எனப்படும்
அஜவாஸ் விடுதலைத் தேசிய இயக்கத்தின் துவாரெக் எழுச்சியாளர்கள், அன்சர் எல் டைன்,
AQIM
எனப்படும்
இஸ்லாமிய
மெகராப்பில்
உள்ள
அல்குவேடா
மற்றும்
அதில்
இருந்து
பிரிந்த
MUJAO, மேற்கு
ஆபிரிக்காவில்
ஒற்றுமை
மற்றும்
ஜிகாத்திற்கான
இயக்கம்
போன்றவற்றிற்கு
சிவப்புப்
பிறைநிலை
சங்கத்தின்
ஊடாக
உதவுகிறது.
துணை
சகாராப்
பகுதி
குறித்து
ஒரு
வல்லுனரான
ரோலண்ட்
மார்ஷல்
கட்டாரி
சிறப்புப்
படைகள்
வடக்கு
மாலியில்
நுழைந்து
அன்சர்
எல்
டைன்
என்னும்
அல்குவேடா
பிரிவு
ஒன்றின்
உறுப்பினர்களுக்கு
பயிற்சி
அளிப்பதாகத்
தெரிவித்துள்ளது;
இக்குற்றச்சாட்டு
லிபியாவில்
இதே
போன்ற
மூலோபாயம்
தொடரப்பட்டபோதும்
L’Express
ஆல்
முன்வைக்கப்பட்டது.
துனிசியாவிலும்
எகிப்திலும்,
அல்
தனி
முடியரசு,
முஸ்லிம்
சகோதரத்துவ
அரசியல்
கட்சிகளுக்கு
2011 மற்றும்
2012ல்
நிதியளித்தது;
இது
அதன்
பரந்த
மூலோபாயமான
சுன்னித்
தளமுடைய
இஸ்லாமிய
அரசாங்கங்களை
ஒன்றாகக்
கொண்டுவந்து
அரபுத்
தொழிலாள
வர்க்கத்தின்
எதிர்ப்பை
நசுக்குவதற்காகும்;
மேலும்
ஈரானில்
இருக்கும்
ஷியைட்
ஆட்சியை
இலக்கு
கொள்ளவும்,
சௌதி
அரேபியாவிற்கு
எதிராகத்
தன்
நிலையை
உயர்த்திக்
கொள்ளவும்
முயல்கிறது.
பிரான்சின்
நீண்ட
நாள்
வாடிக்கையாளரான
ஜைன்
அலி
அபிடைன்
பென்
அலி
ஆட்சிக்குப்
பதிலாக
வந்த
துனிசியாவின்
இஸ்லாமிய
வாதத்
தலைமையிலான
அரசாங்கம்,
இப்பொழுது
அதை
இழிவுபடுத்தும்
பாரிசின்
நடவடிக்கை
குறித்து
பெரும்
கோபத்தை
கொண்டுள்ளது.
ஒரு
தேசிய
ஒற்றுமை
அரசாங்கத்திற்கான
திட்டத்தையும்
எதிர்க்கிறது.
துனிசியா,
பிரான்ஸ்
மாலியில்
தலையிட்டிருப்பதற்கு
ஆதரவைக்
கொடுக்க
மறுத்துள்ளதற்கு
பிரான்ஸ்
கோபம்
கொண்டுள்ளது.
அதேபோல்
பிரெஞ்சு
இராணுவ
விமானங்கள்
அதன்
வான்வழியில்
செல்லக்கூடாது
என்றும்
மறுத்துள்ளது.
ஜனாதிபதியின்
செய்தித்தொடர்பாளர்
அட்னன்
மன்சர்
இப்பூசல்
துனிசியா
உட்பட
அண்டை
நாடுகளை
அச்சுறுத்தும்
என்ற
கவலையை
தெரிவித்துள்ளார்.
தெற்கு
அல்ஜீரியாவில்
எரிவாயு
ஆலையின்மீது
தாக்குதல்
நடத்திய
பயங்கரவாதிகள்
பற்றிய
தகவல்களுக்குப்
பின்
அழுத்தங்கள்
அதிகமாயின;
ஏனெனில்
இது
மாலியில்
பிரெஞ்சுப்
போருக்குப்
பதிலடி
எனக்
கருதப்பட்டது;
அவர்கள்
துனிசியாவைக்
கடந்து
இதை
நடத்தியுள்ளனர்;
ஏனெனில்
துனிசியா,
லிபியா
மற்றும்
அல்ஜீரியாவுடன்
எல்லைகளைக்
கொண்டுள்ளது.
ஏராளமான
ஆயுதத்
தொகுப்புக்கள்
துனிசியாவில்
கண்டறியபட்டுள்ளன
—RPG
க்கள், குண்டுகள்,
கலாஷ்நிகோவ்கள் என மெடெனைனில் கண்டுபிடிக்கப்பட்டன.
மதச்சார்பற்ற
எதிர்க்கட்சி
மக்கள்
முன்னணிக்
கட்சியின்
தலைவர்
சோக்ரி
பிலெய்ட்
இந்த
மாதம்
முன்னதாக
படுகொலை
செய்யப்பட்டது,
இஸ்லாமியவாத
என்னஹ்டா
கட்சியின்
பிரதம
மந்திரி
ஐமதி
ஜெபலியை,
அல்குவேடா
பிணைப்புடைய
போராளிகள்தான்
படுகொலையை
நடத்தி,
இஸ்லாமிய
அரசை
நிறுவுவதற்காக
ஆயுதங்களை
திரட்டுகின்றனர்
என்னும்
குற்றச்சாட்டையும்
கூறவைத்துள்ளது.
பிரான்சின்
உள்துறை
மந்திரி
மானுவல்
வால்ஸ்,
கொலையை
“துனிசியாவின்
மல்லிகை
புரட்சி
மதிப்புக்கள்
மீதான
தாக்குதல்”
என்று
கண்டித்தார்.
“எல்லா
இடங்களிலும்
இஸ்லாமிய
பாசிசம்
எழுச்சி
பெற்று
வருகிறது;
இது
லிபிய,
துனிசிய,
எகிப்து
மக்கள்
போராடிய
ஜனநாயகத்தை
மறுப்பதால்
கண்டிக்கத்தக்கது,
பிற்போக்குத்தன்மை
உடையது”
என்றும்
சேர்த்துக்
கொண்டார்.
பிரான்ஸ், துனிசியாவில் உறுதிநிலையை ஏற்படுத்தி, தொழிலாள வர்க்க
எதிர்ப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர
போலி-இடது
எதிர்
கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க
வேண்டும்
என்றும் வால்ஸ் அழைப்பு விடுத்தார்.
இவருடைய
கருத்துக்கள்
என்னஹடா
ஆதரவாளர்களை
ஆர்ப்பாட்டம்
நடத்த
தூண்டின;
அவர்கள்
கோஷங்களை
முழக்கி
“பிரான்சே
வெளியேறு”,
“செய்தது
போதும்,
பிரான்சே
துனிசியா
மீண்டும்
பிரெஞ்சுக்
காலனி
ஆகாது”
என்ற
பதைகைகளையும்
ஏந்தினர்.
வால்ஸின்
தலையீடு
அப்பட்டமாக
இருந்த
தன்மை,
போலி
இடது
துனிசிய
மக்கள்
முன்னணித்
தலைவரின்
செய்தித்
தொடர்பாளர்,
துனிசியத்
தொழிலாளர்களின்
கம்யூனிஸ்ட்
கட்சித்
தலைவர்
ஹம்மா
ஹம்மியைக்
கட்டாயமாக
அறிவிக்க
வைத்தது:
“மக்கள்
முன்னணியினராகிய
நாங்கள்
பிரான்ஸ்,
அமெரிக்கா
அல்லது
எந்த
அரபு
நாடும்
எங்கள்
உள்விவகாரங்களில்
தலையிடுவதை
எதிர்க்கிறோம்.”
பிரான்ஸ்,
வட
ஆபிரிக்கா
மற்றும்
சகேலில்
அதன்
முன்னாள்
காலனித்துவப்
பகுதிகளில்
கொண்டுள்ள
அக்கறை
குறிப்பாக எண்ணெய், எரிவாயு,
யுரேனியம், தங்கம் இன்னும் பிற விலைமதிப்பற்ற தாதுப்பொருட்களால்
அவற்றின்
செழிப்பான
இயற்கை
வளங்களால்
எரியூட்டப்படுகிறது.
மேலும்
அமெரிக்காவும் சீனாவும் தன்னுடைய கொல்லைப் பகுதி என பிரான்ஸ் கருதும் இடத்தில்
எழுச்சி பெற்றுள்ளன.
அப்பொழுது
ஜனாதிபதியாக
இருந்த
ஜாக்
சிராக்
முதலில்
வாஷிங்டனின்
சகேல்
தழுவிய
முன்முயற்சி
(Pan-Sahel Initiative), என்று
2001ல் அறிவிக்கப்பட்டதை
எதிர்க்க முற்பட்டார். வாஷிங்டனின் அறிவிப்புப்படி,
அமெரிக்க இராணுவப் படைகள் மாலி,
சாட், மொரிட்டேனியா, நைஜர் ஆகியவற்றின் துருப்புக்களுக்கு பயிற்சி அளிக்கும்; இது
“பயங்கரவாதத்தின்
மீதான போர்” என்று செப்டம்பர் 11
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின் அறிவிக்கப்பட்ட போலிக்காரணத்தை
பயன்படுத்தினர். இப்போர்
பின்னர் அல்ஜீரியா,
மொரிட்டேனியா, மொரோக்கோ, செனேகல்,
நைஜீரியா மற்றும் துனிசியாவிற்கு
TSCTI
எனப்பட்ட
சகாராவிற்கு
அப்பால்
பயங்கரவாத
எதிர்ப்பு
நடவடிக்கை
என்னும்
பெயரில்
விரிவாக்கப்பட்டது. லிபியா, சூடான் மற்றும் சோமாலியா ஆகியவை ஏற்கனவே இலக்குத்
திறன்கள் உடையவை என அடையாளம் காணப்பட்டுவிட்டன.
PSI, TSCTI
இரண்டையும்
தொடர்ந்து
2007ல்
AFRICOM என்பது
EUCOM உடைய
தளமாக
ஸ்ருட்கர்ட்டில்
நிறுவப்பட்டது;
ஏனெனில்
ஆபிரிக்க
நாடு
ஏதும்
அதை
ஆரம்பிக்க
தயாராக
இல்லை.
இது
TSCTI மீதான
கட்டுப்பாட்டைக்
கொண்டது.
சிராக்
ஜேர்மனியின்
ஆதரவைப்
பெற
விரும்பி,
ஜேர்மனியை
பிரான்ஸ்-ஆபிரிக்க
உச்சிமாநாட்டிற்கு
2007ல்
அழைத்தார்;
ஆனால்
அங்கேலா
மேர்க்கெல்
வாஷிங்டனைப்
பகைத்துக்
கொள்ள
விரும்பவில்லை.
2009ல்
பிரான்சின்
ஜனாதிபதி
நிக்கோலோ
சார்க்கோசி
நேட்டோவில்
மீண்டும்
இணைந்து,
ஒருங்கிணைந்த
இராணுவக்
கட்டுப்பாட்டு
அமைப்பில்
சேர்வதற்கும்
அதேபோல்
பிரித்தானியாவுடன்
2010ல்
இரு
நாடுகளின்
இராணுவப்
படைகளையும்
ஒருங்கிணைக்க
கையெழுத்திட்டதற்கும்
சீனா
ஒரு
முக்கிய
காரணி
ஆகும்.
பிரான்சின்
பங்கு,
பிராந்தியத்தில்
அமெரிக்க
திட்டமான
மறுகட்டமைப்பிற்கு
உதவுதல்,
கிடைக்கும்
துறைகளில்
பங்கு
பெறுவது,
வட
ஆபிரிக்காவிலும்
சாகேலிலும்
வாஷிங்டனின்
துணை
ஆள்
போல்
செயல்படுவது
என்று
இருந்தது.
பிரான்சின்
சரியும்
பொருளாதார
நிலைமையை
உயர்த்துவதற்கு
கட்டாரி
எமிர்
உடன்
நல்ல
உறவுகளை
சார்க்கோசி
காணமுற்பட்டு,
டோகாவிற்கு
80 ஏயர்பஸ்களை
அதன்
கட்டார்
விமான
நிறுவனத்திற்கு
விற்றதோடு,
அதற்கு
80% ஆயுதங்களையும்
அளித்தது.
மேலும்
பிரெஞ்சு
சொத்துக்களை
அந்நாட்டின்
இறைமை
நிதிக்கு
ஊக்கம்
அளிக்கும்
வகையில்
70 பில்லியன்
அமெரிக்க
டாலர்கள்
மதிப்பிற்கும்
வாங்கியது.
எமிர்
இன்னும்
பிற
கட்டாரி
முதலீட்டாளர்கள்,
முக்கிய
பிரெஞ்சு
நிலங்களை
வாங்க
விரும்பியவர்களுக்கு
வரி
விலக்கை
அளிக்கும்
வகையில்
பிரான்ஸ்
சிறப்புச்
சட்டத்தை
இயற்றியது.
OIF எனப்படும்
பிரான்சின்
சர்வதேச
பிரிவில்
டோகாவிற்கு
உறுப்புத்தன்மையும்
கொடுக்கப்பட்டது;
வளைகுடாவிலும்,
மெக்ராப்
மற்றும்
ஆபிரிக்காவில்
கட்டாரி
நிர்வாக்திற்கு
கீழ்ப்பட்ட
பகுதிகளில்
பிரெஞ்சு
மொழி
பள்ளிகளுக்கும்
அனுமதி
கொடுத்தது.
கட்டுரையாளர்
கீழ்க்கண்டதையும்
பரிந்துரைக்கிறார் |