சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament approves military operations in Mali

மாலி இராணுவ நடவடிக்கைகளுக்கு ஜேர்மன் பாராளுமன்றம் ஒப்புதல்

By Johannes Stern
4 March 2013

use this version to print | Send feedback

பெப்ருவரி 27ம் திகதி ஜேர்மனிய பாராளுமன்றம் மாலியின் காலனித்துவ போருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மிகப் பெரும்பான்மையாக பாராளுமன்றத்தில் வாக்களித்தது. ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 330 ஜேர்மனிய இராணுவச் சிப்பாய்கள் அந்நாட்டில் நிலைகொள்வார்கள்.

பாராளுமன்றத் தீர்மானத்தில் இரண்டு ஆணைகள் அடங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயிற்சிப் பணித்திட்டத்திற்கு (EUTM) தலைமை தாங்கும் ஒரு பகுதியாக 180 சிப்பாய்கள் மாலி இராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க பயன்படுத்தப்படுவார்கள். ஜேர்மனிய இராணுவமானது (Bundeswehr)  40 சாரணர்களையும் (தகவல் சேகரிப்பிற்காக) 40 இராணுவ மருத்துவப் பிரிவினர்கள் மற்றும் மருத்துவர்களையும் தலைநகரான பமகோவிலிருந்து 65 கி.மீ. வடகிழக்கே இருக்கும் கௌலிகோரோவிற்கு அனுப்பி வைக்கும். மற்றொரு 100 சிப்பாய்கள் ஜேர்மனிய சிப்பாய்களைக் காப்பாற்ற தேவையானால் தலையிடுவதற்குத் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

EUTM பணித்திட்டத்தின் தளபதி ஜெனரல் பிரான்சுவா லுகுவான்டர் கருத்துப்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவப் பயிற்சியாளர்கள் ஏப்ரல் 2ல் இருந்து 2,500க்கும் மேற்பட்ட மாலிச் சிப்பாய்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிப்பார்கள்.

இப்பணித்திட்டத்தின் நோக்கம் நலிந்துள்ள மாலி இராணுவத்தை உறுதியாக்குதல் மற்றும் நாட்டின் வடக்கே இருக்கும் பிரெஞ்சுத் துருப்புக்கள் நடத்தும் போர் நடவடிக்கைக்கு அவர்களை உதவ வைத்தல் என்பதாகும். ஓராண்டிற்கு முன், பிரெஞ்சுப் படையெடுப்பிற்கு முன், மாலியின் இராணுவம் அப்பிராந்தியத்தில் இருந்து இஸ்லாமிய எழுச்சியாளர்கள் மற்றும் துவாரெக் வீரர்களின் கூட்டணியால் விரட்டியடிக்கப்பட்டது.

150 சிப்பாய்கள் விநியோக உதவி வேலையில் பிரான்சின் விமானப் படைப் போர்ப் பிரிவு நடவடிக்கைக்கு உதவியளித்தல் இரண்டாவது ஆணையாக உள்ளது. இத்திட்டப்படி ஏயர்பஸ் ஒன்று பிரெஞ்சு Rafale மற்றும் மிராஜ் போர் ஜெட்டுக்களுக்கு வானிலேயே எரிபொருள் கொடுக்கப் பயன்படுத்தப்படும். இதைத்தவிர, 63 சிப்பாய்களும் மூன்று டிரான்ஸால் விமானங்களும் பிரெஞ்சுப் போர்த் துருப்புக்கள், மற்றும் மேற்கு ஆபிரிக்க சமூக அரசுகளின் அமைப்பின் (ECOWAS) துருப்புக்களைத் தொடர்ந்து கொண்டு செல்லப் பயன்படுத்தும்.

ஜனவரி மாதம், போர் ஆரம்பித்த சில நாட்களில், ஜேர்மனிய பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, ஜேர்மனிய இராணுவமானது பிரெஞ்சு மற்றும் ஆபிரிக்கப் போர்த் துருப்புக்களுக்கு விநியோக உதவி ஆதரவை ஆரம்பித்தது. அப்பொழுது முதல் Transall விமானங்கள் கிட்டத்தட்ட 570 சிப்பாய்கள் மற்றும் நடவடிக்கைப் பகுதியில் 290 டன் தளவாடப் பொருட்களை 117 தடைவைகளாக பறப்புச் செய்து செயற்பட்டது.

உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, ஜேர்மனிய இராணுவ நடவடிக்கை குறைந்தப்பட்சம் 55.5 மில்லியன் யூரோக்கள் செலவாக இருக்கும். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP), ஆளும் கட்சிகளை தவிர, எதிர்க் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளும் ஆதரித்து வாக்களித்தன. மொத்தமுள்ள 567 உறுப்பினர்களில் 469 பேர் பயிற்சி பற்றிய ஆணைக்கு ஆதரவளித்து வாக்களித்தனர்; 492 பேர் விநியோக உதவி ஆதரவிற்கு வாக்களித்தனர்.

இவ் ஆணை ஆரம்பத்தில் 12 மாதங்களுக்கு இருக்கும், ஆனால் பின்னர் விரிவாக்கப்படும். பாதுகாப்பு மந்திரி Thomas de Maiziere (CDU) ஏற்கனவே பாராளுமன்றத்தில் முதல் விவாதத்தின்போது ஒரு நீடித்த இராணுவ நடவடிக்கைக்குத் தயார் செய்யும் வகையில், “எந்த இராணுவத் தரையிறக்கமும் பூங்காவில் நடைபயில்வது போல் அல்லஎன்று அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற வாக்கு மாலியில் கீழ்த்தரமான ஏகாதிபத்திய காலனித்துவ போரின் மேலதிக விரிவாக்கம் ஆகும். கூட்டாட்சிப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத் தளம் கூறுவதாவது: “ஜேர்மனி அதனுடைய நடவடிக்கைகள் மூலம், பயங்கரவாத, தீவிரவாத, ஆயுதக் குழுக்களின் செல்வாக்கில் மாலியின் வடபகுதியில் இருக்கும் பிராந்தியங்களை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பங்களிப்புக்கள் செய்யும்.”

உத்தியோகபூர்வமாக, மாலியிலும் ஆப்கானிஸ்தானிலும் ஜேர்மனிய இராணுவத்தின் நடவடிக்கைகள் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்கள்” எனக் கூறப்பட்டு நியாயப்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத்தில், FDP இன் பாராளுமன்றக் குழுவின் வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளர், மாலியில் நிலைமையானது நம் ஜேர்மனிய நலன்களில் நீண்ட கால செல்வாக்கைக் கொண்டுள்ளது” என்றும், “பயங்கரவாத சக்திகள் அல்லது கெடுதல் செய்யும் நோக்கம் உடைய சக்திகள் உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளது” என்று அறிவித்தார்.

“பயங்கரவாதம்” குறித்த ஏகாதிபத்திய சக்திகளின் குறிப்பானது தங்களுடைய காலனித்துவ போர்களை நியாயப்படுத்த பயன்படுத்தும் ஒரு பாசாங்குத்தனம் ஆகும். வடக்கு மாலியில் செயற்படும் இதே இஸ்லாமியவாதிகள்தான் மேற்கத்தையச் சக்திகளின் முயம்மர் கடாபியின் லிபியா ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கிய நட்பு அமைப்புக்களாக இருந்தன. இப்பொழுது இதே சக்திகளும் அவற்றின் பிராந்திய நட்புச் சக்திகளும் இதேபோன்ற பிற்போக்குத்தனச் சக்திகளை சிரியாவில் ஆதரவு கொடுத்து பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை அகற்றி, ஒரு மேற்கத்தைய சார்புடைய கைப்பாவை ஆட்சியை நிறுவ முற்படுகின்றன.

உண்மையில் மாலியிலும் ஆப்கானிஸ்தானிலும் நடக்கும் போர்கள் “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களுடன்” எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை”; மாறாக, அவைகள் உறுதியான புவி-மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களில்தான் வேர்களைக் கொண்டுள்ளன.

மாலியில் நடக்கும் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளானது ஆபிரிக்காவை காலனியின் மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஒரு ஏகாதிபத்திய நடவடிக்கையில் ஒரு பகுதி ஆகும்; இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவிற்கு எதிரான நேட்டோப் போர்களுடன் ஆரம்பித்தது. முக்கிய ஏகாதிபத்தியச் சக்திகள் இப்பொழுது இந்த ஆதார வளங்களை பெருகிய முறையில் சீனாவுடன் ஆக்கிரோஷப் போட்டிப் பந்தயத்தில் வெற்றி பெற முற்பட்டுள்ளன; சீனாவோ மாலி மற்றுப் இன்னும் பிராந்தியத்தில் இருக்கும் மற்றய நாடுகளுடன் நெருக்கமான பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

லிபிய நடவடிக்கையில் பங்கு பெறத் தயங்கிய பின், ஜேர்மனிய முதலாளித்துவம் மாலியில் பெற இருக்கும் கொள்ளையில் ஒரு பங்கைக் பெற உறுதி கொண்டுள்ளது. ஜேர்மனிய நிறுவனங்களானது ஆபிரிக்காவின் மூலப் பொருட்களுக்கான போட்டியில் இணைந்து கொள்ள விருப்பத்தைத் தெளிவாக்கியுள்ளன.

ஜேர்மனிய வணிக மற்றும் அரசியல் உயரடுக்கானது போர்களை நடத்தி ஜேர்மனிய ஏற்றுமதித் தொழிலுக்கு தேவையான ஆதார வளங்களைப் பெற தங்களுடைய போர் நடத்தும் தமது திறனை அதிகரிக்கத் தயார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன என்று கடந்த வாரம் ஜேர்மனிய வணிக செய்தித் தாளான Handelsblat ஒரு விரிவான தகவல்களுடன் தெரிவிக்கிறது. அக்கட்டுரையானது ஜேர்மனியின் இப்போட்டியின் மிகப் பெரிய போட்டி நாடுகளுள் ஒன்று சீனா எனக்கூறுகிறது; மேலும் வட ஆபிரிக்காவை இவ்வகையில் மிக முக்கியமான மூலோபாயப் பிராந்தியங்களில் ஒன்று என்றும் வெளிப்படையாக அடையாளம் கண்டுள்ளது.

“வட ஆபிரிக்கா  மற்றும் மத்திய கிழக்கு பற்றிய மறு மதிப்பீடு செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளது, இது பிராந்திய நட்பு நாடுகளுடன் செய்யப்பட வேண்டும், மேற்கத்தைய மற்றும் ஜேர்மனியப் பாதுகாப்பு நலன்களுக்குக் குறிப்பிடும் வகையில் முக்கியத்துவம் உடைய நாடுகள் வரையறுக்கப்பட வேண்டும்” என்று நேட்டோவிற்கான ஜேர்மனியத் தூதர் கூறியதாக இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஜேர்மனிய ஏகாதிபத்தியம் மாலிக்கு எதிரான போரை இப்பிராந்தியத்தில் இன்னும் வரவிருக்கும் போர்களுக்கு ஒரு முன்னோடி என்றுதான் கருதுகிறது. இது பசுமைவாதிகளின் வெளியுறவு விவகாரங்கள் பற்றிய செய்தித் தொடர்பாளர் Kerstin Muller  கூறிய கருத்துக்களில் குறிப்பிடப்படுகிறது; அதாவது அவர் ஜேர்மனிய நடவடிக்கையானது இன்னும் மோசமான நிலையைத் தடுக்கச் செய்யப்படும் அவசரக்கால அறுவை சிகிச்சைஎன்றார்; அதன் பின் அவர் மேலும் கூறினார்: “நைஜர், புர்கினா பசோவில் வருங்காலத்தில் தலையீட்டைத் தவிர்க்க நாம் விரும்பினால், முழு சகேலுக்கும் ஒரு மூலோபாயம் நமக்குத் தேவை.”

குறிப்பிடத்தக்க வகையில் இழிந்த பங்கு ஜேர்மனிய ஏகாதிபத்தியம் திரும்புவதில் இருப்பது இடது கட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய பெரும்பான்மையால் தீர்மானம் இயற்றப்படும் என்பதை நன்கு அறிந்து இக்கட்சி அதற்கு எதிராகத் தந்திரோபாயக் காரணங்களுக்காக வாக்களித்தது.

வாக்கெடுப்பிற்கு முன் பேசிய இடது கட்சியின் “சமாதானச் செய்தித் தொடர்பாளரான” Christine Buchholz, மற்றய கட்சிகளுக்கு இடது கட்சி எதிர்காலத்தில் ஜேர்மனிய நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கும் விருப்பம் உடையது என்பதற்குத் தெளிவான அடையாளம் காட்டினார். “கூட்டாட்சியின் போர்க் கொள்கை குறித்த பொது விவாதத்திற்கு” எதிராக வாதிட்ட அவர், “நாம் எப்படி பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும், உலகில் ஆயுத வர்த்தகம் ஏற்படுத்தும் தீவிரப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்னும் பொது விவாதம்” தேவை என்று அழைப்பு விடுத்தார்.

இடது கட்சியானது இராணுவத் தலையீட்டிற்கு ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக ஆதரவு கொடுப்பதற்குத் தயராக இருப்பது ஏற்கனவே சிரியாவிற்கு எதிரான மேற்கத்தைய ஆக்கிரமிப்பின்போது அது கொண்ட நிலைப்பாட்டிலேயே தெளிவுபடுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கட்சியின் தலைவர்கள் சிரியாவில் தலையீடு பற்றிய முறையீட்டிற்கு ஆதரவு கொடுத்தனர். இந்த அறிக்கையானது CDU, SPD மற்றும் Greens தலைவர்களாலும் ஆதரவு கொடுக்கப்பட்டது.