|
WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
சிரியாவில் இரத்தக்
களரியை வாஷிங்டன் அதிகரிக்கிறது
Bill Van Auken
1 March 2013
use this version to print | Send
feedback
சக நேட்டோ சக்திகள்
மற்றும் பிற்போக்குத்தன வளைகுடா அரசுகளான சுன்னி முடியாட்சிகளைக் கொண்ட சிரியாவின்
நண்பர்கள் என அழைக்கப்படுபவற்றின் ரோமில் நடந்த ஒரு கூட்டத்தில்,
வாஷிங்டனின் புதிய வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி திங்களன்று முதல் தடையாக
அமெரிக்கா “அதிக ஆபத்தற்ற” உதவியை ஜனாதிபதி பஷிர் அல் அசாத் ஆட்சியை தூக்கியெறிய
முற்படும் ஆயுதமேந்திய குடிப்படைகளுக்கு நேரடியாக அளிக்கும் என்று அறிவித்தார்.
சாதாரணமாக பார்த்தால்
புதிய உதவி அதிக முக்கியத்துவம் இல்லாதது போல் தோன்றும். சுதந்திர சிரிய இராணுவம்
என அழைக்கப்படுவதற்கு மருத்துவ வசதிகள், மற்றும் அமெரிக்க இராணுவத்தின்
MREs
எனப்படும்
உண்பதற்கு தயாராக தயாரித்த உணவுகளை கொடுப்பது என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள்
பேசினார்கள். இதைத்தவிர கூடுதலாக 60 மில்லியன் டாலர்களை “மனிதாபிமான உதவிகளாக”
மேற்கத்தைய ஆதரவுடைய எழுச்சியாளர்கள் கட்டுபாட்டில் வைத்துள்ள பகுதிகளில்
கொடுக்கும் என்றும் வாஷிங்டன் அறிவித்துள்ளது.
ஆனால் இந்தப் பொது
நடவடிக்கைகளானது ஆட்சிக்கு எதிரான குடிப்படைகளுக்கு உதவ வழங்கப்படுபவை ஒரு சிறு
துளிதான் என்று கெர்ரி குறிப்புக் காட்டினார். “இதை நாம் செய்கிறோம், ஆனால் மற்றய
நாடுகள் பிறவற்றைச் செய்கின்றன” என்று கெர்ரி விளக்கினார்
முழு விபரங்களையும்
அளிக்கவில்லை என்றாலும்,
சிரியாவில் உள்நாட்டுப் போரை தொடர்பவர்களுக்கு இதன் பொருள் தெளிவாகத் தெரியும்.
சமீபத்திய மாதங்களில் மிக நவீன ஆயுதங்கள் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து
வந்து குவிகின்றன;
இவற்றிற்கு வாஷிங்டனின் முக்கிய அரபு நட்பு நாடுகளான சௌதி அரேபியா,
கட்டார்
மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் இருக்கும் முடியாட்சி சர்வாதிகார ஆட்சிகள்
இதற்குப் பணம் கொடுக்கின்றன;
இரகசியமாக இவைகளனைத்தும்
CIA
யினால் ஒழுங்குப்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையில் ஐரோப்பிய
சக்திகள்
“ஆபத்தில்லாத”
உதவி
என்பதின் வரையறையை இராணுவக் கருவிகளான உடல் கவசத்திலிருந்து இரவு நேரத்தில்
பார்க்கும் கருவிகள்,
கவச
வாகனங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கத் திட்டமிட்டு விவாதிக்கின்றன;
இவைகள்
அனைத்தும் சிரிய மோதலில் ஆபத்தை விரிவாக்கத்தான் தீவிரமாகப் பயன்படுத்தப்படும்.
ரோமில் நடைபெற்ற
கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையானது சிரியத் தேசிய கூட்டணியை—கடந்த
நவம்பர் மாதம் டோஹாவில் ஓர் ஆடம்பர ஹோட்டலில் அமெரிக்க வெளிவிவகார அலுவலகம் ஒன்றாக
இதை இணைத்தது—“சிரிய
மக்களுடைய ஒரே சட்டரீதியான பிரதிநிதித்துவ அமைப்பு”
என்று
இதை விவரித்துள்ளது.
முஸ்லிம்
சகோதரத்துவத்தின் நண்பரும் சுன்னி பாதிரியாருமான மௌவஸ் அல்-கதிப்புடன்
ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் கெர்ரி தோன்றினார்.
ஆப்கானிஸ்தானின் ஹமித் கர்சாய் போல் அல்லது ஈராக்கிய அகமட் சலாபி போல் சிரியாவில்
இவரை கொண்டுவர வாஷிங்டன் முயல்கிறது.
அமெரிக்க ஆதரவுடைய
கூட்டணியானது சனிக்கிழமையன்று இஸ்தான்பூலில் ஒரு கூட்டத்தை நடத்தி
“இடைமருவுகால
அரசாங்கம்”
ஒன்றை
அமைப்பது குறித்து அறிவிப்பதாக இருந்தது.
ஆனால்
வியாழனன்று இக்கூட்டம் ஒத்திப்போடப்பட்டுவிட்டது,
பதவிகள்,
நலன்களை
பகிர்ந்து கொள்வதில் பிரிவினைகள் இருந்ததால் அப்படி நடந்திருக்கலாம்.
மொத்தத்தில்,
இந்த
நடவடிக்கைகள் இன்னும் நேரடியாக சிரியாவில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடு
செய்வதற்கான மூலோபாயத்தை விரிவாக்குவது என்பதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
இத்தகைய
நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் பெருகிய முறையில் செய்தி ஊடகத்தில் உரத்த குரலில்
வருவதுடன்,
ஆளும்
ஸ்தாபனப் பிரிவுகளிடமிருந்தும் வருகிறது.
உதாரணமாக,
“வாஷிங்டன்
இன்னும் உறுதியாக சிரியாவின் இரத்தம் கொட்டும் தேக்க நிலையை முறிக்க வேண்டும்
அல்லது திரு அசாத்திற்கு சவால் விடும் நிதானமான சக்திகளுடன் பங்கு பெற்று
மேற்கத்தைய ஆதரவு கொடுக்கும் வகையில் ஒரு புதிய ஆட்சியை அந்நாட்டில் அமைக்கக்கூடிய
கடைசி வாய்ப்பை இழந்துவிடக்கூடும்”
என்று
வியாழனன்று ஒரு தலையங்கத்தில்
வாஷிங்டன் போஸ்ட்
எழுதியுள்ளது.
இத்தலையங்கமானது
“முழு
அளவில் சிரியப் பகுதிக்கு மாற்றீட்டு அரசாங்கம் அமைப்பதற்கு ஒபாமா நிர்வாகம் முயல
வேண்டும்.....
அது
சிரியாவின் சட்டபூர்வ அரசாங்கமாக அங்கீகரிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
அதுதான்
அமெரிக்க இராணுவம் சிரிய மக்களை காப்பாற்றுவதற்காக வழங்கும் ஆயுதங்களை
நெறிப்படுத்தும்,
வான்தாக்குதல்கள் நடத்த,
பட்ரியாட் ஏவுகணைத் தாக்குதல் தேவையானால் நடத்துவதற்கும் உதவும்....”
என்றும்
எழுதியுள்ளது.
பெருகிய முறையில் ஆளும்
வட்டங்களுள் முன்வைக்கப்படும் வாதமானது அமெரிக்க ஆக்கிரோஷமாக தலையிட வேண்டும்
என்பதாகும்;
ஏனெனில்
அல் கெய்டா தொடர்புடைய சக்திகள் அசாத் விரோதப் படைகளில் மேலாதிக்கம் செலுத்தி,
ஆட்சி
சரிந்தால் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலை அளிக்கக்கூடும்.
இது அமெரிக்க
ஏகாதிபத்தியம் இன்னும் பெரிய கொடுமையை நியாயப்படுத்தத் தன்னுடைய சொந்த குற்றத்தைச்
செய்யவேண்டும் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
எப்படியும்,
அல்
கெய்டா தொடர்புடைய ஜபத் அல்-நுஸ்ரா
மற்றும் பிற வெளிநாட்டு போராட்டக்காரர்களின் கூறுகள் இப்பொழுது சிரிய உள்நாட்டுப்
போரை நடத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
வியாழனன்று
Wall
Street Journal
குறிப்பிட்டுள்ளதுபோல்,
அல்-நுஸ்ரா
முன்னணியானது
“இப்பொழுது
மிகச்சக்தி வாய்ந்த அமைப்பாக
....
துருக்கிய,
ஈராக்கிய
எல்லைகளை ஒட்டிய எழுச்சிப் பகுதிகளில் காணப்படுகிறது.”
அண்மைய
கிழக்கிற்கான வாஷிங்டன் அமைப்பின்
(Washington Institute for Near East Policy)
ஆரோன் ஜேலின்
“சிரிய
மோதல்
1980
களில் நடைபெற்ற ஆப்கானிய போர் போல் பெரிதாகும்,
இல்லாவிடின் இன்னும் கூடுதலாகப் பெரிதாகும்,
ஜிஹாத்திய போராட்டக்காரர்களை அணிதிரட்டும் வகையில்”
என்று
கூறியதாகவும்
Journal
மேற்கோளிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடந்த
அணிதிரள்வானது
CIA
தலைமையில்,
அப்பொழுது ஒசாமா பின் லாடனுடன் கூட்டுக் கொண்டிருந்த நிலையில் நடைபெற்றது.
அந்த
அமைப்புத்தான் அல் கெய்டாவாக உருவானது.
அல்
கெய்டாவிற்கு எதிரான முடிவில்லாத உலகப் போரில் ஈடுபாடு கொண்டுள்ளதாக பகிரங்கமாகக்
கூறினாலும்,
சிரியாவில் இப்பிற்போக்குதன இஸ்லாமியவாத சக்திகளை மதச் சார்பற்ற ஆட்சியை
அகற்றுவதற்கு வாஷிங்டன் பயன்படுத்துகிறது:
காரணம்,
இந்த
ஆட்சி மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒரு தடைக்கல்
எனக் காணப்படுவதுதான்.
இக்கொள்கையின்
விளைவுகள் பேரழிவுத் தன்மை உடையவையாகும்.
ஆப்கானிஸ்தான்,
ஈராக்
மற்றும் லிபியாவை அடுத்து,
சிரியாவில் அதன் முழுச் சமுதாயத்தையும் துண்டு துண்டாக்கப்படுவதை அமெரிக்கா
ஆதரவுடைய ஆட்சி மாற்றப் போரையொட்டிக் காண்கிறது;
பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்,
காயமுற்றுள்ளனர்;
நாட்டின்
பொருளாதாரம் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது;
மக்கள்
பெரும் சோகம் ததும்பிய விதத்தில் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
சிரிய கொள்கை ஆராய்ச்சி
மையம்
(SCPR)
தயாரித்த ஒரு சமீபத்திய அறிக்கையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு
கடந்த
22
மாதங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு
48.4
பில்லியன் டாலர்களாக மதிப்பிட்டுள்ளது
—இது
2010ல்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
81.7
சதவீதற்கு சமம் ஆகும்.
மொத்த
உள்நாட்டு உற்பத்தி
2012ல்
18.8%
சரிந்துவிட்டது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதுவும்
இது போர் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட
35%
சரிவைத் தவிர ஆகும்.
இவற்றைத்
தவிர மேற்கத்தைய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் பாதிப்பும் உண்டு.
அறிக்கையின்படி,
நாட்டின்
மூலதனச் சேமிப்பு
42
பில்லியன் டாலர்களாக உள்ளது;
ஆலைகள்,
கருவிகள்,
கட்டிடங்கள் இவற்றை அழித்துள்ளதால் ஏற்பட்டுள்ள இழப்பு
20.8
பில்லியன் டாலர்களாகும்.
அமெரிக்க ஆதரவுடைய
“எழுச்சியாளர்கள்”
பொருளாதாரத் தொழில்துறை தலைநகரான அலெப்போவை கொள்ளை அடித்துள்ளனர்;
அப்பகுதி
இவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது;
தொழிற்சாலைகள் பொருட்களையும் இயந்திரங்களையும் இழந்துவிட்டன;
துருக்கிக்கு அவைகள் கடத்தப்பட்டுவிட்டன.
இப்போர் கிட்டத்தட்ட
ஒரு மில்லியன் அகதிகளை சிரிய எல்லைக்கு அப்பால் போரிலிருந்து தப்பிக்க
துரத்திவிட்டது.
மற்றும்
ஒரு இரண்டு மில்லியன் எனக் கூறப்படுவோர் சிரியாவிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐக்கிய
நாடுகள் சபையின் கருத்துப்படி அகதிகளில் முக்கால் பகுதியினர் பெண்களும்
குழந்தைகளும் ஆகும்.
அமெரிக்க ஆதரவுடைய
போரானது இப்பிராந்தியம் முழுவதிலும் உறுதிக் குலைப்பை ஏற்படுத்திவிட்டது;
ஏனெனில்
வாஷிங்டன் சிரியாவில் ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி மத்திய கிழக்கின் வரைபடம்
முழுவதையும்,
தன்னுடைய
நலன்களுக்காகவும்,
இன்னும்
ஆபத்தான போரை ஈரானுக்கு எதிராக ஆரம்பிப்பதற்கான தயாரிப்புக்களுக்காகவும் வேறுவிதமாக
வரைய விரும்புகிறது.
இப்பொழுது தான் இன்னும்
நேரடியான இராணுவத் தலையீட்டை நோக்கி நகரலாம் என்று ஒபாமா நிர்வாகம் உணர்ந்தால்,
உத்தியோகபூர்வ
“போர்
எதிர்ப்பு”
இயக்கம்
ஜனநாயகக் கட்சியுடன் முற்றிலும் ஒருங்கிணைந்துவிட்டதுதான் அதற்கு முக்கிய காரணம்.
போலி
இடது அமைப்புக்கள்,
CIA இன்
இணைப்புக் கருவிகள் போல் செயல்பட்டு “மனிதாபிமானத்” தலையீடுகளை அபிவிருத்தி செய்து,
குறுங்குழுவாத இரத்தக் களரிப் போரை “சமூகப் புரட்சி” என்று சித்தரிக்கின்றன.
ஆயினும்கூட,
வெளிநாட்டில் இராணுவ ஆக்கிரமிப்புக் கொள்கை,
உள்நாட்டு சிக்கனக் கொள்கையைப் போல் பெரும்பாலான உழைக்கும் மக்களிடம் மிகவும்
செல்வாக்கற்று உள்ளது.
அமெரிக்க
இராணுவவாதத்தின் பேரழிவு தரும் மற்றொரு வெடிப்பைத் தவிர்ப்பது என்பது தொழிலாள
வர்க்கம் போரின் மூல காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அரசியல்ரீதியாக
அணிதிரள்வதில்தான் தங்கியுள்ளது. |