சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Japanese PM prepares for war

ஜப்பானிய பிரதம மந்திரி போருக்குத் தயாரிப்புக்களை நடத்துகிறார்

Peter Symonds
5 March 2013

use this version to print | Send feedback

ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்சோ அபே, கடந்த வாரம் சீனாவுடனான தீவிப் பூசலில் அவருடைய கடுமையான நிலைப்பாட்டை நியாயப்படுத்த பாக்லாந்துப் போரை உதாரணம் காட்டி முறையீடு செய்தது, ஒரு புதிய மற்றும் பயங்கரமான உலக மோதலில் ஆசியா இழுக்கப்படும் தவறான வரிகள் வரையப்பட்டு விட்டன என்பதை சில்லென உணர்த்தும் எச்சரிக்கை ஆகும்.

முன்னாள் பிரித்தானிய பிரதம மந்திரி மார்கரெட் தாட்சரின் இழிந்த காரணமான 1982 ஆர்ஜென்டினா போர் அறிவிப்புக் குறித்து “சர்வதேச சட்டத்தின் ஆட்சியை படையின் திறமையால் வெல்ல வேண்டும்” என்பதை அபே மேற்கோளிட்டார். தாட்சர் அதைத்தொடர்ந்து, தெற்கு அட்லான்டிக்கில் பிரித்தானியப் பேரரசின் ஒரு மிகச் சிறிய எஞ்சிய பகுதியை பெறுவதற்காக பிரித்தானிய இராணுவத்தை குருதி கொட்டியபோருக்கு அனுப்பி வைத்தார்; அது நூற்றுக்கணக்கான உயிர்களை இருபுறங்களிலும் குடித்தது.

தன்னுடைய அரசாங்கம் அதன் மக்கள் வசிக்காத, மலைப்பயிர்கள் நிறைந்த கிழக்கு சீனக்கடல் பாறைத்தீவில், சென்காக்கு என ஜப்பானிலும் டையாவோயு என்று சீனாவிலும் அறியப்படும் சிறு தீவின்மீது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள சீனாவுடன் போரிடத் தயார் என்பதை பிழைக்கு இடமின்றி அபே கூறியுள்ளார்.

இதில் இருக்கும் மகத்தான ஆபத்துக்கள் வெளிப்படையானது. ஆர்ஜென்டினா போலன்றி, சீனா ஒரு கணிசமான, அணு ஆயுதம் உடைய, பெருகிய முறையில் நவீனமான இராணுவத்தைக் கொண்டுள்ள சக்தியாகும். ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே இத்தகைய ஆயுதப் போர்கள் என்பது கட்டுப்பாட்டையும் மீறி மற்றைய சக்திகளையும் இழுத்துவிடும்; குறிப்பாக அமெரிக்காவை – இது ஏற்கனவே தீவுகள் குறித்த போர் ஏதேனும் நடத்தால் தான் டோக்கியோ பக்கம் இருக்கும் என்று கூறியுள்ளது.

இந்த அழுத்தங்களை தூண்டுவிட்டுள்ளதற்கான முக்கிய பொறுப்பு ஒபாமா நிர்வாகத்திடம் உள்ளது. இது 2009ல் இருந்து இராஜதந்திர, மூலோபாய தாக்குதலை ஆசியா முழுவதும் நடத்திவருகிறது; அது சீனாவை பொருளாதார, இராணுவப் போட்டி நாடு என்னும் திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கம் கொண்டது. ஒபாமாவின் “ஆசியாவில் முன்னிலை” என்பது அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் மூலோபாயப் பங்காளி நாடுகளையும் சீனாவிற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்க ஊக்கம் கொடுத்துள்ளது; இதையொட்டி அப்பிராந்தியத்தில் பல வெடிப்புத்தன்மை பகுதிகள் ஏற்பட்டுவிட்டன—இதில் கொரிய தீபகற்பம், தென்சீனக்கடலில் கடற்பகுதிக்கான பூசல்கள் மற்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் குறித்துத் தீர்க்கப்படாத மோதல் ஆகியவை அடங்கும்.

முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய மோசமான முறிவு இத்தகைய இராணுவ வாதத்தின் வெடிப்பிற்கு உந்துதல் கொடுக்கிறது. இரண்டு தசாப்தங்களாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ வலிமையை பயன்படுத்தி அதன் வீழ்ச்சியை ஈடுசெய்ய ஒரு பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆசியாவிற்கு குவிப்பை மாற்றுகையில், ஒபாமா பணயங்களை மிக அதிகமாக உயர்த்தி, அணுவாயுத சக்கதிகளிடையே மோதல் ஏற்படும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு வலதுசாரி தேசியவாதியான அபே, இதே போன்ற மூலோபாயத்தை தொடர்ந்து ஜப்பான் இரு தசாப்தங்களாக கொண்டுள்ள பொருளாதார தேக்கத்திற்கு முற்றுப்புள்ளி காண விரும்புகிறார். இக்காலகட்டத்தில் ஜப்பான் உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரம் என்பதை சீனாவிற்கு இழந்துவிட்டது. “ஒரு வலுவான ஜப்பானை” கட்டமைக்க அவர் உறுதியாக உள்ளார்; அது பொருளாதார, இராணுவ வழிவகைகள் இரண்டின் மூலமும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை உறுதிப்படுத்தும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபேயின் அரசாங்கம், விரைவில் நாட்டின் போருக்கு பிந்தைய “சமாதான” அரசியலமைப்பின் தளைகளுக்கு உட்படாமல் கட்டமைக்கும் திட்டத்தை கொண்டுள்ளது. அதே நேரத்தில் இது ஆக்கிரோஷமான நிதியக் கொள்கைகளையும் ஏற்றுள்ளது; அமெரிக்க மத்திய வங்கியின் “தாராள பணப்புழக்க” கொள்கை போல், யென்னின் மதிப்பைக் குறைத்து ஜப்பானின் போட்டி நாடுகளின் இழப்பில் அதன் ஏற்றுமதிகளுக்கு ஏற்றம் கொடுக்க விரும்புகிறது.

பாக்லாந்துப் போர் குறித்த அபேயின் கருத்து மற்றொரு அச்சுறுத்தும் எச்சரிக்கையாகும். தெற்கு அட்லான்டிக்கில் போரைத் தொடங்கும் தாட்சரின் முடிவு உலக அரங்கில் பிரித்தானிய சக்தியை நிரூபிக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. அது பின்னர் அது விளக்கியதுபோல் “உள்ளே இருக்கும் விரோதிக்கும்” எதிராக இயக்கப்பட்டதாகும்—அதாவது பிரித்தானிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக. முன்னதாக அவருடைய சந்தைச் சார்பு திட்டத்திற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை முறிப்பதில் தோல்வியுற்றிருந்த தாட்சர் பாக்லாந்துப் போரைப் பயன்படுத்தி, தேசியவாதம், நாட்டு மக்களைப் பற்றிய தீவிர உணர்வை தட்டி எழுப்பி, தொழிற் கட்சியின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தின் மீது நேரடித் தாக்குதலுக்கு தயாரித்தார்; இது 1984-85 பிரித்தானிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தோல்வி அடைந்ததில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

இதே போல் “ஒரு வலுவான பொருளாதாரத்திற்கான” அபேயின் விழைவுகள் ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது முழுத் தாக்குதல் தேவை என்பதை கூறுகிறது. உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கத்தைப் போலவே, ஜப்பானிய ஆளும் வர்க்கமும் மோசமாகிவரும் உலகப்பொருளாதார முறிவின் சுமையை வெளிநாட்டுப் போட்டியாளர்கள் மீதும் உள்நாட்டுத் தொழிலாளர்கள் மீதும் சுமத்த முற்படுகிறது. ஜப்பானிய தேசப்பற்று, இராணுவ வாதம் ஆகியவை வளர்க்கப்படுதல், முழு அரசியல் நடைமுறையும் அதற்காக இயங்க தயாராக இருத்தல், என்பது ஜப்பானின் முறையான “வாழ்நாள் முழுவதும் வேலை” நாட்டின் குறைந்தப்பட்ச பொதுநல அரசாங்கம் ஆகியவற்றில் எஞ்சியிருக்கும் நலன்கள் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பும் அடங்கும்.

ஜப்பானிய இராணுவ வாதத்தின் புத்துயிர்ப்பு, 1930களுக்கு முந்தைய போர்க்கால வரலாற்று உணர்வுகளின் ஆழ்ந்த தன்மையை எதிரொலிக்கிறது. ஜப்பானிய முதலாளித்துவம் பெருமந்த நிலைக்குப்பின் ஏற்பட்ட உலக வணிக சரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புதிய சந்தைகள், மூலப் பொருட்களை பெறும் முயற்சியில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் 1931ல் மஞ்சூரியாவைக் கைப்பற்ற ஒரு போரை நடத்தியது; பின் சீனா முழுவதிலும் 1937ல் படையெடுப்பை மேற்கொண்டது. உள்நாட்டில் இராணுவாத ஆட்சி பொலிஸ் அரச முறை என்ற முழுத்தன்மையில் நிறுவப்பட்டு சமூக நிலைமை பொறுத்துக் கொள்ள முடியாமல் போவதற்கு தொழிலாள வர்க்கத்தின் எத்தகைய எதிர்ப்பையும் நசுக்கத் தயார் என்று இருந்தது.

ஜப்பானிய இராணுவ வாதத்திற்கு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆழ்ந்த விரோதப் போக்கின் வரலாற்று வேர்களும் உள்ளன; இவை ஜப்பானின் அரசியல் கட்சிகள் எதிலும் வெளிப்பாட்டைக் காணவில்லை. தேர்தலின்போது, முழு அரசியல் நடைமுறையும்—ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட—ஒருவிதத்தில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் சென்காக்கு தீவுகள் மீது கொண்ட உரிமைகளின் பின் ஆதரவைக் கொடுத்தன; இது அபேயிற்கும் வலதுசாரி தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கும் பதவிக்கு வருவதற்கு கதவைத் திறந்தது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும்  தேசியவாதம் என்னும் நச்சைத் தூண்டி பொருளாதார நெருக்கடி மற்றும் பெருகும் உள்நாட்டு சமூக அழுத்தங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் இதே வழிவகைகளைத்தான் பின்பற்றுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் டோக்கியோ சென்காக்கு/டயோயு தீவுகளைத் தேசியமயமாக்கும் டோக்கியோவின் முடிவை எதிர்கொள்ளும் வகையில், பெய்ஜிங் ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட பச்சை விளக்கைக் காட்டியது: அவை ஜப்பானிய குடிமக்களையும் வணிகங்களையும் தாக்கின. சீனச் செய்தி ஊடகப்பிரிவுகள் பெருகிய முறையில் சீனாவின் இராணுவத் திறன் குறித்து கருத்துத் தெரிவித்த பகுப்பாய்வாளர்களின் கட்டுரைகளை அதிகம் வெளியிட்டன; அவற்றில் ஜப்பானுடன் ஒரு முழுப்போர் நடத்தினால் அதன் விளைவு பற்றிய ஊகமும் இருந்தது.

பல அரசியல் வர்ணனையாளர்கள் இப்பொழுது கிழக்கு ஆசியாவில் உள்ள அழுத்தங்களுக்கும் முதல் உலகப் போருக்கு வழிவகுத்த பால்கன் மோதல்களுக்கும் இடையே இணையான தன்மைகளை குறிப்பிடுகின்றனர். ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கிச் செல்லும் தன்மை, ஆசியாவிலோ உலகில் வேறு எங்கோ தூண்டிவிடப்படுவது, முதலாளித்துவத்தின் தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளின் விளைவுகளாகும்— அதாவது ஒருபுறம் உலகப் பொருளாதாரத்திற்கும் காலம் கடந்துவிட்ட தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையேயும், மறுபுறம் தனியார் சொத்துடமைக்கும் மற்றும் சமூக உற்பத்தி முறைக்கும் இடையேயும் உள்ள முரண்பாடுகளாகும்.

போர் என்னும் பெருங் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாளர் வர்க்கம் மட்டுமே, இது வரலாற்று ரீதியாக திவாலாகிவிட்ட இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே முற்றுப் புள்ளி வைக்க முடியும். ஜப்பான், சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு கிழக்கு சீனக்கடலில் தனித்து விடப்பட்டுள்ள மலைப்பயிர்களை ஓரளவு கொண்ட பாறைத்தீவு பற்றிய பூசலில் அக்கறை கிடையாது. அவர்களுடைய வருங்காலம், ஒரு சிறிய செல்வக் கொழிப்புடைய உயரடுக்கின் இலாபங்களப் பூர்த்தி செய்வதில் இல்லாமல், ஒரு திட்டமிட்ட உலக சோசலிசப் பொராளாதாரத்தை நிறுவப் போராடுவதில், மனிதகுலத்தின் பெரும்பான்மையின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதில் உள்ளது.