|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri Lanka:
Government prevented people from north participating in a demonstration over
disappeared persons
இலங்கை அரசாங்கம் காணாமல்
போனவர்கள் பற்றிய பிரச்சாரத்தில் வடக்கு மக்கள் பங்கேற்காமல் தடுத்தது
By our
correspondent
11
March 2013
use this version to print | Send
feedback
ஜனநாயக உரிமைகள்
மீது மற்றுமோர் தாக்குதலை தொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம்,
புதன் அன்று
கொழும்பில் நடைபெறவிருந்த,
காணாமல்
போனவர்களின் உறவினர்களின் எதிர்ப்பு பிரசார்த்தில் கலந்து கொள்வதற்காக,
வடக்கில்
இருந்து வருகை தந்த மக்களை தடுத்து நிறுத்தியது.
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு,
காணாமல்
போனவர்களின் உறவினர்களின் அமைப்பு மற்றும் ஜனநயாக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ
கனேசன் தலைமையிலான சிவில் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு உட்பட பல குழுக்கள் இந்த
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த
600க்கு
மேற்பட்ட மக்கள்,
வவுனியா
நகரசபை விளையாட்டுத் திடலில் செவ்வாய்கிழமை மாலை,
பஸ்களில்
பிரயாணம் செய்வதற்காக கூடியிருந்தனர்.
சிவில் உடை
மற்றும் சீருடை தரித்திருந்த பொலிசார் அங்கு வந்து,
மிரட்டல்
பாணியில் நடந்துகொண்ட பின்னர்,
கொழும்பு
செல்ல அனுமதிக்க
“உடன்பட்டனர்”.
எனினும்,
பஸ்கள்
கொழும்பு நோக்கி புறப்பட்ட போது,
பிரயாணிகள்
தாக்குலுக்கு உள்ளாகக் கூடும் என்பதால்,
அவர்களுக்கு
பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியாமையால்,
கொழும்பு
செல்ல அனுமதிக்க முடியாது என பொலிசார் தெரிவித்தனர்.
முன்னர்
பயணித்த பிரயாணிகள் பஸ் தாக்கப்பட்டுள்ளது என்றும் பொலிசார் பொய் கூறினர்.
இராணுவமும்
பொலிசுக்கு உதவுவதற்காக அழைக்கப்பட்டிருந்தது.
மக்களின்
எதிர்ப்பின் மத்தியில்,
அவர்களை
மைதானத்துக்கு திருப்பி அனுப்பிய பொலிசார்,
மறுநாள்
காலைவரை தடுத்து வைத்திருந்ததோடு பஸ் சாரதிகளை அனுமதி பத்திரத்தினை அபகரிப்பதாக
மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால்,
மறுநாள்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொழும்பு செல்ல முடியாமல்,
வவுனியாவிலேயே ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு திரும்பிச் செல்லத் தள்ளப்பட்டனர்.
செவ்வாய்,
புதன் ஆகிய
இரு தினங்களிலும் யாழ்ப்பாண பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லவிருந்த
பிரயாணிகளை,
எதற்காக
அங்கு செல்கின்றீர்கள் என கேள்வி கேட்டு,
அச்சுறுத்துவதற்காக இராணுவமும் பொலிசும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.
எதிர்ப்பு
ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள்,
பொலிஸ் மா
அதிபர் இலங்கக்கோணிடம் தமக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தைப் பற்றி விசாரித்தபோது,
காணமால்
போனவர்களின் உறவினர்களின் பிரயாணம் தடை செய்யப்பட்டது பற்றி தனக்கு ஒன்றும்
தெரியாது என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும்,
ராஜபக்ஷ
அரசாங்கத்தினதும் பாதுகாப்பு அமைச்சினதும் உயர் மட்ட உத்தரவின்றி,
பொலிஸ்
மற்றும் இராணுவத்தினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு வருவதை தடுப்பது என்பது
இயலாத காரியமே.
முன்னாள்
இராணுவத் தளபதி ஒருவரே வடக்கின் ஆளுநராக செயற்படுகின்றார்.
வடபிரதேசத்தின் பாதுகாப்பு இராணுவத் தளபதி ஒருவரின் அதிகாரத்தின் கீழேயே உள்ளது.
ஜனாதிபதி
ராஜபக்க்ஷவும் அவரது அரசாங்க அமைச்சர்களும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய
ராஜபக்க்ஷவும் மற்றும் இராணுவத் தளபதிகளும்,
பிரிவினைவாத
விடுதலைப் புலிகளை தோற்கடித்து பெற்ற யுத்த வெற்றியின் பின்னர்,
முழு
நாட்டிலும்
“சாமாதானம்
ஜனநாயகமும்”
நிலை
நாட்டப்பட்டுள்ளது என்றும்,
வடக்கில்
இருந்து தெற்கு வரையும் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் மக்களுக்கு
அச்சமின்றி பிரயாணம் செய்ய முடியும் என மீண்டும் மீண்டும் கூறித் திரிகின்றனர்.
எனினும்
வடக்கில் இருந்து தெற்கிற்கு காணாமல் போனோரின் உறவினர்கள் வருவதற்கு இடமளிக்காமை
மற்றும் அவர்களை அச்சுறுத்தியமை இந்தப் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது.
தெற்கில் இருந்து
வடக்கிற்கு செல்லும் அமைப்புகளுக்கு மட்டுமன்றி,
வடக்கில்
உள்ள அமைப்புகளுக்கும் அரசாங்கத்துக்கு எதிராக தமது கூட்டங்களை மறியல் போராட்டங்களை
நடத்துவதற்கு முட்டுக்கட்டை இடப்படுகின்றது.
சோசலிச
சமத்துவக் கட்சியின் கூட்டங்களும் இராணுவ ஆட்சியின் மூலம் பல முறை தடை
செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் அதன்
அனுமதியுடன் காணாமல் போனவர்கள் பற்றிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடத்தியதன்
மூலம், இந்த தாக்குதலின் கொடூரத் தன்மை மேலும் வெளிப்படுகிறது. புலிகளினால் காணமல்
ஆக்கப்பட்டவர்களை பற்றி விசாரணை செய்யுமாறு கோரி பிரச்சாரம் செய்வதற்காக, கிழக்கு
மாகாணத்தில் இருந்து நூற்றுக் கணக்கான மக்களை
–பெரும்பாலும்
பலாத்காரமாக- கூட்டி வந்து,
கொழும்பில்
உள்ள ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து, மனு ஒன்றினை
புதன் அன்றே கையளிப்பதற்கு அரசாங்கத்தின் முகவர்கள் செயற்பட்டிருந்தனர்.
அரசாங்கத்தின்
செய்தி மிகவும் தெளிவானது- அரசாங்கத்துக்கு சார்பாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட
முடியும். அரசாங்கத்துக்கு எதிராகவெனில், எந்தவொரு நடவடிக்கையும் துச்சமாகவும்
கொடூரமாகவும் நசுக்கப்படும்.
26
வருடகால யுத்தத்தின் போதும் அதன் பின்னரும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட
தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் ஆயிரக்கணவர்கள். டசின் கணக்கான சிங்கள
மற்றும் முஸ்லீம்களும் இந்த தலைவிதிக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச
செஞ்சிலுவைச் சங்க புள்ளிவிபரப்படி,
2011
டிசம்பர்
31 வரையிலான
காலப்பகுதியில், இலங்கையில்
15,780
பேர்
காணாமல் போயுள்ளனர்.
அவர்களில்
அனேகர் ஆண்களாவர்.
செஞ்சிலுவைச் சங்கம்,
1494
சிறுவர்கள்
754 பெண்கள்
உட்பட, காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை செய்த போதும்,
136
பேர் பற்றிய
விபரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
காணாமல் போனோர்
எண்ணிக்கை இதைவிட அதிகம்.
அரசாங்கம்
புள்ளிவிபரம் எடுப்பதற்கு முன்வந்தமை சர்வதேச ரீதியில் எழுந்த பிரச்சாரமே
காரணமாகும்.
யுத்தத்தின்
இறுதி வாரங்களில் இராணுவத் தாக்குதால்களில் கொலையுண்ட சிவிலியன்களின் எண்ணிக்கை
குறைந்த பட்சம்
40,000
வரையாகும் என ஐ.நா. நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இராணுவம்,
பொலிஸ்,
மற்றும்
இராணுவ உளவாளிகள் மற்றும் அவர்களுடன் செயற்படும் துணைப்படைகள், எத்தகைய தடையுமின்றி
நபர்களை கடத்திச் சென்றுள்ளன. மக்களை பீதிக்குள்ளாக்க, கொழும்பை அண்டிய
பிரதேசங்களிலும் வடக்கு கிழக்கிலும் கடத்தல்களுக்காக
“வெள்ளை
வான்”
பெருமளவில்
பயன்படுத்தப்பட்டது.
நபர்களை இத்தைகைய
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இரையாக்குவதற்காக, அவர்கள் மீது புலிப் பயங்கரவாதி என்ற
முத்திரை குத்தப்பட்டது. புலிகளுடன் எந்தவிதமான தொடர்புமற்ற நபர்களும் இவ்வாறு
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின்
எழுதப்படாத அனுமதியுடன் நடத்தப்படும் இத்தகைய கடத்தல்கள் பற்றி, இலங்கையில்
இராணுவம் மற்றும் பொலிஸ் உளவுப் படைகளுக்கும் துணைப்படைக் கும்பல்களுக்கும் இரத்தம்
தோய்ந்த பதிவுகள் உள்ளன.
60,000
பேர் வரை கொலையுண்ட
1988--1990
காலகட்டத்தில், தென் பிரதேசத்தில் நடந்த பயங்கரத்தின் போது, இலங்கையின்
தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்த அனுபவத்தினை கண்டனர்.
சோசலிச சமத்துவக்
கட்சி, புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க அரசாசங்கமும் பாதுகாப்பு பிரிவும்
எடுத்த நடவடிக்கையை கடுமையாக கண்டனம் செய்கின்றது. தொழிலாள வர்க்கம் இந்த தாக்குதலை
எதிர்க்க வேண்டும்.
இது
தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான மோசமான தாக்குதலின் ஒரு
பாகமாகும்.
புதன் கிழமை
ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்த அமைப்புகள், கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில்,
வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி, போலி இடதுசாரி நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய
சோசலிசக் கட்சியையும் சேர்த்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தன. வடபிரதேச மக்கள்
கலந்து கொள்வது தடுத்து நிறுத்தப்பட்ட நிலமையின் கீழ், கொழும்பை அண்மித்த
பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களும் மற்றும் அந்தக் கட்சிகளின்
உறுப்பினர்களும் அதில் பங்கு பற்றினர்.
இந்த நாட்களில்
நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டங்களுக்கு, காணாமல் போனவர்கள் பற்றிய
ஒரு மனுவைக் கொடுத்து, தீர்வு பெற்றுத் தருமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே
அவர்களின் நோக்கமாகும்.
இந்த அமைப்புகள்
பாதிக்கப்பட்டுள்ள மக்களது சீற்றம் மற்றும் எதிர்ப்பையும்,
ஏகாதிபத்திய
சக்திகளுடனான தமது உறவை பலப்படுத்திக்கொள்வதன் பேரில் சுரண்டிக்கொள்கின்றன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஏகாதிபத்தியத்திடம் வேண்டுகோள் விடுப்பதன்
மூலமோ, அல்லது அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ தீர்வு பெற்றுக்கொடுக்க
முடியாது.
மனித உரிமைகள்
பற்றி அனுவளவும் அக்கறையற்ற பெரும் வல்லரசுகள், தமது மூலோபாய தேவைகளை தக்க
வைத்துக்கொள்ளும் வேலைத் திட்டத்தின் பாகாமாக, கொழும்பு அரசாங்கத்தை தம் பக்கம்
சாய்த்துக்கொள்ளவே முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. ராஜபக்ஷ அரசாங்கம், மனித உரிமைகள்
சம்பந்தமாக அக்கறை காட்டும் அராசாங்கம் அல்ல. அது பெரும் வல்லரசுகளது ஆதரவுடன்,
பொலிஸ்-அரசை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கின்றது. |