|
WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Steven Soderbergh to retire after Side Effects?: Problems of independent
filmmaking
Side Effects
திரைப்படத்திற்கு பின்னர் ஸ்டீவன் சோடர்பேர்க் ஓய்வு பெறவுள்ளாரா?:
சுயாதீன
திரைப்பட உருவாக்கத்தின் பிரச்சினைகள்
By Joanne Laurier
15 February 2013
use this version to print | Send
feedback
Side
Effects -
ஸ்காட்
Z
. பேர்ன்ஸ்
திரைக்கதையில் ஸ்டீவன் சோடர்பேர்க் இயக்கியது.
Hyde
Park on Hudson
- ரிச்சார்ட்
நெல்சன் திரைக்கதையில் ரோஜர் மிச்செல் இயக்கியது.

Side Effects
ஸ்டீவன்
சோடர்பேர்க்கின் புதிய திரைப்படமான
Side
Effects,
”பெரும்
மருந்து
நிறுவனங்கள்” மற்றும் அமெரிக்காவில் பரிந்துரை செய்யப்படுகின்ற மருந்துகள்
கலாச்சாரத்தின் பரவலைப் பற்றி அடிவரை தொட்டுச்செல்லும் ஒரு திகில் திரைப்படம்.
ஆயினும்,
இதுவே தனது
கடைசி திரைப்படம் என்றும் தான் திரைப்படத் தயாரிப்பிலிருந்து ஓய்வுபெறத்
திட்டமிடுவதாகவும் கூறியிருக்கும் சோடர்பேர்க்கின்
அறிவிப்பே
இத்திரைப்படத்துடன் தொடர்புட்ட மிகச்சுவாரஸ்யமான விடயமாக இருக்கலாம்.
நியூயோர்க் நகரின்
ஒரு அடுக்குமாடி வீட்டில் நிகழும் ஒரு குற்ற சம்பவக் காட்சியுடன்
Side
Effects
திரைப்படம்
ஆரம்பிக்கின்றது. பின்,
அது மூன்று
மாதங்களுக்கு பின்னோக்கி செல்கிறது. சட்டத்துக்கு புறம்பான வர்த்தகத்தில்
ஈடுபட்டதற்காக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றிருக்கும் தன் கணவர் மார்ட்டினின் (Channing
Tatum)
வருகைக்காக,
கிராஃபிக்
டிசைனரான எமிலி டெய்லர் (Rooney
Mara)
என்பவர் நான்கு வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறாள்.
சொகுசு மாளிகைகள்
மற்றும் உல்லாசப்படகுகளில் கவர்ச்சிகரமான வாழ்க்கைப் போக்கை நாம் மீண்டும்
அனுபவிப்போம் என்று மார்ட்டின் உறுதியளித்த போதிலும்,
எமிலி மன
உளைச்சலில் இருப்பதுடன் கிட்டத்தட்ட “தான் ஒரு விஷப் பனிமூட்டதினால் சூழப்பட்டது
போல்” உணர்கிறாள். ஒரு சிமெண்ட் சுவரின் மீது தனது காரை மோத முயற்சித்த பின்பு,
மனநல
மருத்துவரான
ஜோனாத்தன்
பேங்க்ஸ் (Jude
Law)
வரவழைக்கப்படுகிறார்.
சாதாரண மருந்துகள்
எமிலியின் மனஅழுத்த நிலைமையைத் தணிப்பதில் பயனற்றுபோகவே,
சக ஊழியரான
டாக்டர். விக்டோரியா சீபேர்ட்டால் (Catherine
Zeta-Jones)
சிபாரிசு செய்யப்படும் ஒரு புது மருந்தை பேங்க்ஸ் பரிந்துரைக்கிறார். மருந்துகளை
வழங்குவதற்காக புதிய நோயாளிகளை திரட்டுவதற்காக மருந்து தயாரிப்பாளர்களால்
பேங்க்ஸுக்கு 50,000
டாலர்கள் உதவித்தொகை வழங்கப்படுவதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்.
ஆனால் அந்த மருந்து
மோசமான மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகள் கொண்டது. பேங்க்ஸ்,
அவரது
குடும்பம் மற்றும் சிகிச்சை நிலையம் அனைத்தும் திடீரென பிரபல்யமான கொலை வழக்கில்
சிக்கிவிடுகிறது.
பொதுவான மங்கலான
ஒளிப்பதிவும் (சோடர்பேர்க்கால் எடுக்கப்பட்ட) அதிக-எதிர்பார்ப்புள்ள கதைத்
திருப்பங்களும் இருந்தபோதிலும்
Side
Effects
சற்று அக்கறையுடன்
எடுக்கப்பட்டிருக்கிறது. மாரா சற்று தாக்கம்மிக்க,
விட்டுவிட்டு பேசுவது போல் நடித்தாலும்,
லா திறம்பட
நடித்துள்ளார். குறிப்பாக,
ஒரு சிறந்த
நகைச்சுவை நடிகையான சீட்டா-ஜோன்ஸ்,
இறுக்கமான
முகபாவனைகொண்ட மன நல மருத்துவராக நம்பும்படியாக இல்லை.
நகைச்சுவையில்லாமல்
அதே நேரம் ஆபத்திலிருக்கும் மக்களைப் பற்றிய - வாடிக்கையாளர்களுடனான அதன் நேரடி-
வர்த்தகம்
குறித்து,
மருந்து
நிறுவனங்கள் மீதான கோமாளித்தனத்தோடு
கூடிய கூர்மையான வர்ணனையுடன் இத்திரைப்படம் ஆரம்பிக்கிறது. அது
வோல்
ஸ்ட்ரீட்,
சட்டபூர்வ
மனநல ஸ்தாபனம் மற்றும் நீதி அமைப்புகளை சாடுவது போலவும் இருக்கிறது. வேறு
வார்த்தைகளில் சொல்வதென்றால்,
இத்திரைப்படம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் ஆத்திரமூட்டும் வகையைச் சேர்ந்ததாக
அறிவித்துக் கொள்கிறது.
துரதிர்ஷ்டவசமாக,
அதுவும் மிக
வழமையான இயக்கத்திற்குள் சிக்கி,
இக்கேள்விகளை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. சமுதாயக் குறைபாடுகள் மற்றும் அக்கறைகளை
புத்திசாலித்தனமாக சித்தரிக்க முடியுமென்பதை சோடர்பேர்க் ஒரு கட்டத்தில்
நிரூபிக்கும் போது,
அவர் ஒரு
பாதுகாப்பான பகுதிக்கு சென்றுவிடுகிறார். ஆயினும்,
இதனடிப்படையில்,
சோடர்பேர்க்
தன் தொழிலை மட்டுமல்லாமல்,
மொத்தத்தில்
குறிப்பாக தற்போதைய சினிமாவிலும் அதன் “சுயாதீன” பிரிவிலும்
Side
Effects
பெரும்
சிக்கல்களை சித்தரிக்கிறது.
கருதத்தக்க வகையில்
26 வயது மட்டுமே நிரம்பியிருந்த வேளையில்,
சோடர்பேர்க்
தனது முதல் திரைப்படமான
sex,
lies, and videotape-ஐ
இயக்கினார்.
King
of the Hill (1989)
மற்றும்
Kafka (1991)
போன்ற பல
சுவாரஸ்யமான திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்கினார். 1990களின் நடுவில்
இவர்
நெருக்கடியில் சிக்கினார்,
அப்போது மிக
சவாலான படைப்புகளுள் ஒன்றான
Schizopolis (1996)-ஐ
இயக்கினார். பிந்தையதின் பொதுவான விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியிலான தோல்வி இவரை
George Clooney, Brad Pitt,
Matt Damon
ஆகியோர்
நடிப்பில்
பெரும்
பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட
Ocean’s Eleven (2001),
Ocean’s Twelve (2004)
மற்றும்
Ocean’s Thirteen (2007)
உள்ளிட்ட
வழமையான சாகச திரைப்படங்களை நோக்கி பின்னுக்கு தள்ளியது.
சோடர்பேர்க் ஒரு
திறமையான மற்றும் விஷயமறிந்த தனிநபர். காலப்போக்கில். கூட்டுஸ்தாபனங்களின்
தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற
(2000 இல்
Erin
Brockovich
மற்றும்
2009 இல்
The
Informant)
மேற்சொன்ன போதைமருந்துகள் மீதான போர் பற்றிய (Traffic,
2000இல்),
விலையுயர்ந்த விபச்சாரம் பற்றிய
(The
Girlfriend Experience, 2009இல்),
சிறு நகர
அழிவு மற்றும் கொலை பற்றிய
(Bubble, 2005இல்)
மற்றும்
போருக்கு-பிந்தைய ஜேர்மனி பற்றிய
(The
Good German, 2006இல்)
போன்ற
படங்களை இவர் சிறப்பாக இயக்கியுள்ளார்.
முக்கிய விஷயங்களை
சித்தரிப்பதற்கு சோடர்பேர்க் தேவையான விவரமறிந்தவராக இருந்தபோதிலும்,
ஆனால் இவரது
சமீபத்திய படைப்பான
Side
Effects
திரைப்படம்
அவற்றை முற்றிலுமாக ஆராயவில்லை அல்லது நம்பிக்கையூட்டுவதாக இருக்கவில்லை. உதாரணமாக,
2008ல்
ஆர்ஜென்டேனிய-கியூபா
கெரில்லா தலைவரான சே குவேராவின் வாழ்க்கை, அதில்
CIA
மற்றும்
அமெரிக்க இராணுவத்தின் கொடூர பங்கை சித்தரிக்கும் நான்கரை மணிநேர திரைப்படத்தை
இயக்கிய பின்,
அமெரிக்க
புலனாய்வு அதிகாரிகள் மற்றும் படுகொலையாளர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட-நாயகர்களாக
காட்டும்
Haywire இனை
2011இல்
இயக்கினார்.
அட்லாண்ட்டிக்
இதழுடனான சமீபத்திய ஒரு பேட்டியில்,
சோடர்பேர்க்
தன் ஓய்விற்கான சில காரணங்களைக் கூறினார்: “தனிப்பட்ட முறையில் ஒரு மாற்றத்தை
விரும்புவதும் மற்றும் எனது வளர்ச்சியில் ஒரு சுவருடன் மோதியுள்ளது போல்
உணருவதாகவும் அதை எவ்வாறு உடைத்துக்கொண்டு செல்வது என்று தெரியாதுள்ளதாகவும் ஆகிய
இரண்டும் சேர்ந்த உணர்வு போல் இருக்கிறது. விவரிப்பதின்,
அல்லது
குறைந்தபட்சம் தற்போது நாம் அதை வரையறுப்பது போன்ற அதன் கொடுமை,
எனக்கு எரிச்சலூட்ட
ஆரம்பித்திருக்கிறது.
புதிய
விதிமுறைகள் எங்கோ இருக்கிறது என்பதை நான் நம்புகின்றேன். ஆனால் அது எனது
வடிவத்திலான கடவுள்நம்பிக்கையாக மட்டுமேயும் இருக்கலாம்” என்றார்.
இந்த இயக்குனர்
ஸ்டூடியோக்களை மட்டும் சட்டபூர்வமாக குற்றஞ்சாட்டவில்லை,
ஆனால் ”பணம்
படைத்தவர்கள் தங்கள் சமையலறையிலேயே அசுத்தம் செய்ய முடிவெடுக்கும் முற்றிலும்
பயங்கரமான வழிமுறையையும் ”குற்றம்சாட்டுகிறார். ஆயினும்,
அவர் மேலும்
ஆதாரமில்லாத கணிப்பினை வெளிப்படுத்தும் வகையில்,
”திரைப்பட
தயாரிப்புக்கு பணமளிப்பவர்களுக்கும் அவற்றைப் பார்க்கும் ரசிகர்களுக்க்குமிடையில்
உண்மையில் அதிக ஒப்புமை இருப்பதாகக் கருதுகிறார்.
சோடர்பேர்க்
திரைத்துறையிலிருந்து ஓய்வு பெறுவதாக சொல்வது இது முதல் தடவையல்ல. 1996
செப்டம்பரில்
International Workers Bulletin
இற்கு
(WSWS
இன் ஒரு
முன்னோடி)
அளித்த
பேட்டி ஒன்றில்,
இவர் தன்
குழப்பத்தில் தெளிவாக இருந்தார். ”நான்
The
Underneath [1995]
திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது,
நான்
இயக்கிக் கொண்டிக்கும் படத்தை நானே விரும்பாதது போன்ற உணர்வு ஏற்பட்டது,
மேலும்
வேலையை நான் ரசிக்காததால்,
இனியும்
நான் திரைப்படம் இயக்க வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்” என்றும்
கூறினார்.
”உண்மையில்
என்னையும் நம்மையும் சுற்றி நடக்கும் விஷயங்களை நான் திரைப்படமாக எடுத்துக்
கொண்டிருப்பதாக உணரவில்லை. அமெரிக்க கலாச்சாரத்தின் வழியாக நாம் அனைவரும்
உணர்வுரீதியாக உணர்ந்ததைதான்,
நானும்
உணர்ந்தேன். மேலும் அதற்காக நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினேன்,
அது பற்றிய
விஷயங்கள் என் படங்களில் சிறிதளவு இருந்தன” என்றார்.
The
Underneath
ஐ
இயக்கியதில் தாங்க முடியாதது அல்லது மிகவும் கடினமானதாக எது இருந்தது என்று
கேட்டபொழுது,
”அது
குறிக்கோளுடன் கூடியதல்ல,
கருத்து
அடிப்படையில் சோம்பேறித்தனமானது,
நான்
திரைப்படங்கள் எடுப்பதில் ஈடுபடப் போகிறேன் என்பது போல்,
அது
குறிக்கோளுடையதாக இருந்தால்,
அது ஒரு
வகையை சேர்ந்த திரைப்படங்களிலிருந்து அடிப்படையில் சிறு வேறுபாட்டினை
ஏற்படுத்துவதற்காக
என்று
மட்டுமே நினைத்தேன்,
பிறகு நான்
அதை விட்டுவிட வேண்டியிருந்தது அல்லது எனது திரைப்படத் தயாரிப்பில் வேறு ஏதாவது
செய்ய வேண்டியிருந்தது”
என்று
சோடன்பெர்க் பதிலளித்தார்.
பின்பு
IWB
ற்கு அறித்த
நேர்காணலில்,
”பரிசோதிப்பதற்கும் தோல்வியடைவதற்குமான சுதந்திரம் அகற்றப்படுகிறது. நாம் அவர்
திரைப்படம் எடுத்துள்ளார் என அறிவதற்கு முன்பாக
ஜோன்
ஃபோர்ட் 20 திரைப்படங்களை எடுத்தார். இது ஓர் அவமானம்,
ஏனெனில்
அங்கே இது போன்று நம்பமுடியாத அளவுக்கு நாடகம் நடக்கிறது” என்று அவர்
குறிப்பிட்டார்.
ஹாலிவுட் மற்றும்
சுயாதீன திரைப்பட இயக்கத்தின் மீதும் சோடர்பேர்க் கொண்டிருக்கும் முக்கிய
அதிருப்தியும் அவர் அடைந்திருக்கும் முட்டுச்சந்தி நிலையும் அவரது தனிப்பட்ட
குழப்பநிலை இல்லை. கலையை உருவாக்குவது எளிதாக இருந்ததில்லை. சிறிது முக்கிய நிலையை
எட்டுவது எப்போதும் கடினம். ஆனால்,
முன்னோக்கினையும் நிலைநோக்கையும் இழப்பது சமீபத்திய வருடங்களில் இலாப-நோக்குள்ள
திரைத்துறையில் பணியாற்றுவதன் தவிர்க்க இயலாத பிரச்சினைகளுடன் சேர்ந்து கொள்கிறது.
தற்போதைய நிலைகள் கலைஞர்களை உத்வேகப்படுத்தவில்லை,
ஆனால்
மாற்றீட்டிற்கான சாத்தியக்கூறுகளில் இருக்கும் நம்பிக்கை கடுமையான தாக்குதலை
சந்தித்திருக்கிறது. பெரும்பாலான திரைப்படங்களில் நோக்கமும் உத்வேகமும் இல்லை. பல
எழுத்தாளர்களும்
இயக்குனர்களும்
இயக்கங்களினூடாக
செல்வதை
தொடர்கின்றனர்.
அப்படிச்
செய்யாமல்
இருக்குமளவிற்கு
சோடர்பேர்க்
புத்திசாலியாகவும்
தன்னுள்
நேர்மையாகவும்
இருக்கிறார்.
இவரது
தொழில்
வாழ்க்கை
ஒரு நச்சுத்தனமான சுற்றுவட்டங்களைக்
காட்டுகிறது.
இவர்
20
வருடங்களுக்கு
முன்பு
திரைப்படங்கள்
இயக்க
ஆரம்பித்தபோது தொடக்கத்தில் மட்டும் அது
ஒரு
தடத்தை
ஏற்படுத்தியது. இது இவரது படைப்புகளில்
தூண்டுதலை
மட்டுப்படுத்தி இறுதியில் அதுவே வற்றியது.
1990களின்
பிற்பகுதியில்
சோடர்பேர்க்
தன்னை
ஒரு
வியாபாரப்பட
இயக்குனராக
“மீளக்கண்டு”
கொண்டார்.
ஆனால்
அந்த
வெற்றி
தனது
அதிருப்தியைப்
போக்கவில்லை
என்றும்
கண்டுகொண்டார்.
“வர்த்தக
ரீதியில்
வெற்றிப்படம்”
மற்றும்
“தனிநபர்”
திரைப்படங்கள்”
என்ற
இரு
வகையிலும்
படங்களை
தயாரிக்க
முயற்சித்தார்,
ஆனால்,
பிந்தையவை
வெற்றி
பெறாததோடு,
ஆழ்ந்த
தாக்கங்களையும்
ஏற்படுத்தவில்லை.
பொதுமக்களுடன்
குறைந்த
தாக்கங்களையே
ஏற்படுத்தியதால்,
அவர்
அடுத்தடுத்த
திரைப்படங்களில்
குறைவாகவே
முயற்சித்தார்.
மேலும்,
உண்மையில்
தகுதியான
வகையில்,
அந்த
படைப்புகள்
குறைந்த
தாக்கம்
கொண்டவை.
தற்போது
அவர்
தன்
கரங்களை
மேலே
காண்பிக்கிறார்.
ஒருவர் பரிதாபத்தை
உணரலாம்,
ஆனால்
துரதிர்ஷ்டவசமாக,
அர்த்தமுள்ள
கலை
மற்றும்
புத்திஜீவித
பிரச்சினைக்கு சோடர்பேர்க்
ஒரு சாதாரண
அல்லது
அமைப்புரீதியான தீர்வுகளைத்
தொடர்ந்து
தேடுகிறார்.
அவரது
சிக்கல்
“வர்ணனையின்
கொடுமையில் இல்லை... வெளிப்படையாக சொல்வதென்றால்,
வழமையான
அல்லது
பிறவகையிலான
வர்ணனை,
அது
உண்மையில் நம்மைச் சுற்றி நடப்பவற்றை பிரதிபலிக்கும் வரையிலும் மற்றும்
அதிலிருக்கும் நம்பமுடியாத விஷயங்களை சித்தரிக்கும் வரையிலும் திரைப்பட
இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் திருப்திகரமான அனுபவம் இருக்கும்.”
அதாவது,
விஷயங்களின்
அடிப்படைவரை செல்லும் போது.
Lincoln
போன்ற ஒரு
திரைப்படம்,
இதுவரை 20
மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.
Hyde Park
on Hudson

Hyde Park on Hudson
ரோஜர் மிச்செலின்
Hyde
Park on the Hudson
இல்,
1939 ஜூன்
மாதம்,
நியூயோர்க்கின் மேல்நகரத்தில் இருக்கும் ரூஸ்வெல்ட் எஸ்டேட்டில் ஜனாதிபதி
ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட்டும் (Bill
Murray)
அவரது மனைவி எலினாரும் (Olivia
Williams)
ஆறாம் ஜார்ஜ் அரசன் மற்றும் அவனது மனைவி எலிசபத்தை (Samuel
West and Olivia Colman)
உபசரிக்கின்றனர். பிரிட்டன் ஜேர்மனியுடனான போருக்கு தயாராவதால்,
அரசகுடும்பத்தினர் வாஷிங்டனின் ஆதரவைப் பெற முயற்சித்து வருகின்றனர். ஃப்ராங்க்லின்
ரூஸ்வெல்ட்டின் தூரத்து உறவினருடன் உறவு வைத்துக் கொள்கின்ற
டெய்சி சக்லியின் (Laura
Linney)
வர்ணனையில்,
வீட்டில்
தனிப்பட்ட உறவுகளில் சிறு மாற்றங்கள் பற்றி இத்திரைப்படம் கவனம் செலுத்துகின்றது.
Hyde
Park on Hudson
மோசமாக
உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். இது ஒரு சாதாரண நகைச்சுவையாகவோ அல்லது வரலாற்று
நிகழ்வுகளை சித்தரித்ததில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ இல்லை. ரூஸ்வெல்ட்,
ஏகாதிபத்தியம் மற்றும் திக்கிப் பேசுகிற இரண்டாம் உலகப்போரின் அரசர்கள் மற்றும்
ஊன்றுகோல் வைத்திருக்கும் ஜனாதிபதிகள் ஆகியோரை குண்டு மழை பொழிவதற்கு முன்பு
தங்களின் உணவினை ருசித்து சாப்பிடும் சாமானியர்களாக பார்வையாளர்கள்
எண்ணிக்கொள்வார்கள் என்ற நினைப்பில் இருப்பதை காட்டுகிறது.
ஆசிரியர் மேலும்
பரிந்துரைப்பவை:
Haywire
இல்
ஸ்டீவன் சோடன்பெர்க் முட்டுச்சந்தியில்
(பிப்ரவரி
21,
2012),
ஸ்டீவன்
சோடன்பெர்க்கின் சமீபத்திய படைப்பான
Contagion
(26
செப்டம்பர்,
2011). |