சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Unemployment hits new record in euro zone, personal income plummets in US

யூரோப் பகுதியில் வேலையின்மை புதிய உயர்மட்டத்தை அடைகிறது, அமெரிக்காவில் தனியார் வருமானம்வீழ்ச்சியடைகின்றது

By Barry Grey
2 March 2013

use this version to print | Send feedback

இந்த வாரம் வெளியிடப்பட்ட பொருளாதாரப் புள்ளி விவரங்கள் உலகப் பொருளாதாரம் மேலும் பலவீனமடைந்து வருவதையும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தில் மேலும் ஒரு வீழ்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றன.

வேலையின்மை, ஐரோப்பா, சீனா, அமெரிக்காவில் உற்பத்தித்துறை நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் தனியார் வருமானம் பற்றிய தகவல்கள் மொத்தத்தில் பொருளாதாரம் சரிந்து வருவதையும் வேலையின்மை மற்றும் வறுமையின் ஏற்றத்தையும்தான் சுட்டிக்காட்டுகின்றன. இவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் சமூகநலச் செலவுகள், பொதுத்துறை வேலைகள் மற்றும் ஊதியங்களைக் குறைக்கும் புதிய நடவடிக்கைகளில் ஈடுபடும் அதே நேரத்தில் வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் பொருளாதாரச் சரிவிற்கு எரியூட்டியுள்ள வர்க்கப் போர்க் கொள்கைகளின் விரிவாக்கத்தை காட்டுவதுடன், இவை ஏற்கனவே வார்த்தைகளில் கூறமுடியாத துன்பங்களை மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் கொடுத்துள்ளன.

வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவரங்கள் நிறுவனமான யூரோஸ்டாட் 17 நாடுகள் கொண்ட யூரோப்பகுதியில் வேலையின்மை டிசம்பரில் இருந்த 11.8% விட உயர்ந்து ஜனவரி மாதம் 11.9% என்ற புதிய உயர்மட்டத்தை அடைந்துவிட்டது என்று அறிவித்துள்ளது. 27 நாடுகள் அடங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உத்தியோகபூர்வ எண்ணிக்கை முந்தைய மாத 10.7%ஐ விட அதிகமாகி ஜனவரி மாதம் 10.8% ஆக இருந்தது.

யூரோப் பகுதியில் கிட்டத்தட்ட 19 மில்லியன் வேலையற்றோர் இருந்தனர். உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி இது ஜனவரி மாதத்தில் இருந்து 200,000 அதிகமாகும். ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் 26.2 மில்லியன் வேலையற்ற தொழிலாளர்கள் இருந்தனர். இது டிசம்பர் மாதத்தைவிட 222,000 அதிகம் ஆகும். இந்த அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களைவிட உண்மை நிலை இன்னும் மோசம், ஏனெனில் இவை தொழிற்சந்தையில் இருந்து விலக்கிவிடப்பட்ட மில்லியன் கணக்கான மக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

மிக அதிக விகிதம் கிரேக்கத்தில் 27% என இருந்தது. ஸ்பெயினும் அதற்கு மிக நெருக்கமாக அதற்குப் பின் 26.2% என உள்ளது. இத்தாலியில் வேலையின்மை விகிதம் ஜனவரி மாதம் 11.7% என்று அதிகரித்து, 1992க்குப் பின் நாட்டின் மோசமான வேலையின்மை அளவு எனப் போயிற்று.

ஐரோப்பாவில் இளைஞர் வேலையின்மை மந்தநிலைக்கால அளவுகளில் உள்ளது. யூரோப்பகுதி முழுவதும் அது ஜனவரி 2012ன் 21.9% விட உயர்ந்து இந்த ஜனவரி மாதம் 24.2% என காணப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் 25 வயதிற்கு உட்பட்டோரின் வேலையின்மை விகிதம் 22.4 சதவிகிதத்தில் இருந்து 23.6% என உயர்ந்துவிட்டது.

கிரேக்கத்தில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் பாரியளவான  59.4% என இருந்தது. ஸ்பெயினில் அது 55.5% என்றும் இத்தாலியில் 38.7% என்றும் உள்ளது.

பெரும் பேரழிவைத் தரும் நாடுகளில் வேலையின்மை விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திவங்கி ஆகியவை எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளின் குவிப்புத்தான் எனலாம். இந்த அமைப்புக்கள் உலக வங்கியியல்  பெருநிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்களில் முகவர்களாக செயல்படுகின்றன.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட தனி அறிக்கைகள் பெப்ருவரி மாதம் ஐரோப்பாவில் பெரும்பகுதியில் உற்பத்தித் துறை நடவடிக்கையில் சரிவு என்பதைக் காட்டுகின்றன. யூரோப்பகுதி முழுவதிலும், தொழிற்சாலை  செயற்பாடுகள் பற்றிய அளவை முந்தைய மாதத்தின் 47.9 என்பதில் இருந்து மாறாமல் இருந்தது. (50க் கீழே எந்த எண்ணிக்கையும் சுருக்கம் என்பதைக் குறிக்கும்). இது 19வது தொடர்ச்சியான மாதமாக உற்பத்தியில் சுருக்கம் உள்ளது என்பதைக் குறிக்கிறது.

ஜேர்மனிக்குப் புள்ளிவிவரம் சற்றே அதிகம் ஆகும். ஆனால் இத்தாலியினது 47.8 ல் இருந்து 45.8 என்று குறைந்துவிட்டது. ஆனால் மிக அதிர்ச்சி தரும் சரிவு ஐக்கிய இராச்சியத்தில் இருந்தது. அங்கு ஜனவரியில் இருந்த 50.5 என்பதில் இருந்து தொழிற்சாலைச் செயற்பாடுகள் 47.9 எனக் குறைந்துவிட்டன. இது அதிகரிக்கும் என்று கணித்த பொருளாதார வல்லுனர்களைக் குழப்பியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் வேலையிலிருப்போரின் தொகை  மூன்று ஆண்டுகளில் மிக  அதிக வேகத்தில் சரிந்துவிட்டன.

ஐரோப்பா முழுவதும் பெருகியுள்ள சரிவு குறித்த மற்றொரு அடையாளம் புதன் அன்று ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிகிறது. அது யூரோப் பகுதிக்கடன்கள் தனியார்துறைக்கு ஜனவரி வரை ஒன்பது மாதம் கொடுத்த கடன்களைக் காட்டுகிறது. இவை 2012 இதே மாதத்தில் இருந்த அளவிலிருந்து 0.9 சதவிகிதம் சரிந்துவிட்டன.

அமெரிக்காவில் வியாழன் அன்று வணிகத்துறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2012ன் நான்காம் காலாண்டிற்கு -0.1% என்பதில் இருந்து +0.1% என அதன் மதிப்பீட்டை அதிகமாகத் திருத்தியுள்ளது. இதன் பொருள் அமெரிக்கப் பொருளாதாரம் அதன் முந்தைய இரத்தச்சோகை நிலையில் இருந்து தப்புகிறது என்பதாகும். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012ல் 2.2%தான் வளர்ச்சியுற்றது. இந்த வேகம் வேலையின்மை விகிதத்தைக் கணிசமாகக் குறைக்க தேவையானதைவிட மிகவும் குறைவு ஆகும்.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை முந்தைய காலாண்டில் பொருளாதார வளர்ச்சியைக் குறைப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. ஏனெனில் மத்திய அரசின் செலவினங்கள் வருடாந்தவிகிதத்தில் 14.8% குறைந்தன.

வெள்ளியன்று வெளிவந்த அமெரிக்க வணிகத் துறை அறிக்கை ஒன்று சமூக நெருக்கடியின் ஆழ்ந்த தன்மை பற்றி அதிரச்சிதரும் குறிப்பைக் காட்டுகிறது. இதில் தனியார் வருமானம் ஜனவரி மாதம் 3.6% குறைந்துவிட்டது என்பதைக் கூறுகிறது. இது 1993 ஜனவரிக்குப் பின் மிகப்பெரிய மாதாந்த குறைவு ஆகும். வரிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தனியார் வருமானம் மிக அதிகளவான 4.0 விடக் குறைந்தது. இந்த அறிக்கை உற்பத்தித் துறை, பொருட்கள் தயாரிக்கும் துறை, சேவைகளை வழங்கும் தொழில்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் வழங்கும் ஊதியங்கள் அனைத்தும் முந்தைய மாதத்தைவிட ஜனவரி மாதம் சரிந்து விட்டதைக் காட்டுகிறது.

தொழிலாளர் துறை அலுவலகத்தால் செவ்வாயன்று வெளியிடப்பட்ட, மற்றொரு அறிக்கை, அமெரிக்க உற்பத்தியாளர்கள் நிகழ்த்திய பணிநீக்கங்கள் கடந்த மாதம் அதிகரித்துவிட்டன என்பதைக் காட்டுகிறது. அம்மாதம் 357 பரந்த பணிநீக்க நிகழ்வுகள், 43,068 பேரை ஆரம்ப வேலையற்றோருக்கான உதவிகளை விண்ணப்பிக்க இட்டுச்சென்றது. இது டிசம்பர் மாதத்தில் இருந்து 22% அதிகம் ஆகும்.

உலக வீழ்ச்சி உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரமான சீனாவையும் தாக்கியுள்ளது. வெள்ளியன்று வெளிவந்த சீன உற்பத்திச் செயற்பாடுகளை பற்றிய இரு தனி அறிக்கைகள், வளர்ச்சி விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டுகின்றன. உத்தியோகபூர்வ வாங்கும் மேலாளர் குறியீடு (Purchasing Managers Index) 50.1 என்று பெப்ருவரியில் உள்ளது. இது ஐந்து மாதங்களில் வலுவற்ற நிலையையும், ஜனவரி  குறியீடான 50.4 என்பதையும்விடக் குறைவாகும்.

HSBC Holdings, Markit Economics ஆகியவை வெளியிட்டுள்ள தனி மதிப்பீடுகள் ஜனவரியில் இருந்த 52.3 என்பதில் இருந்து 50.4 என நான்கு மாதத்தில் மோசமான சரிவிற்கு விழுந்துள்ளதைக் காட்டுகின்றன.