|
தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German trade unions march in step with German army ஜேர்மனியத் தொழிற்சங்கங்கள் ஜேர்மனிய இராணுவத்துடன் இணைந்து செயல்படுகின்றன
By Sven Heymanns
and Johannes Stern use this version to print | Send feedback ஜேர்மன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (DGB) பகிரங்கமாக ஜேர்மன் இராணுவத்தின் (புன்டேஸ்வேர்) ஆக்கிரோஷப் பங்கிற்கு பெருகிய முறையில் ஆதரவு கொடுக்கிறது. இது, DGB தலைவர் மைக்கேல் சொம்மர் மற்றும் DGB உடன் இணைந்துள்ள எட்டு தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கும் ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி தோமஸ் டு மஸியருக்கும் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் CDU) இடையே பெப்ருவரி தொடக்கத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தெளிவாயிற்று. ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில், சொம்மரும் டு மஸியரும் இக்கூட்டம் DGB மற்றும் புன்டஸ்வேருக்கும் இடையே இன்னும் ஆழமான உரையாடல் நடக்க இருப்பதற்கு ஒரு முன்னோடிதான் என்றனர். மேலும் பல விவாதங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இருவருமே "பிரதான சமூக பிரச்சனைகளை கையாள்வதில்" கூட்டு அறிக்கை ஒன்றை தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் டு மஸியர் அறிவித்தார். கூட்டத்திற்கான முன்முயற்சி DGB யினால் வெளியிடப்பட்டது. பதவியில் இருக்கும் பாதுகாப்பு மந்திரி, தொழிற்சங்கத் தலைமை அலுவலக்திற்கு கடைசியாக விஜயம் செய்தது முழு 30 ஆண்டுகளுக்கு முன்னரே நடைபெற்றது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஆளும் உயரடுக்கின் நலன்களை மேம்படுத்த தொழிற்சங்கங்களின் மத்திய பங்கை இக்கூட்டம் தெளிவுபடுத்தியது. தொழிற்சங்கங்கள், ஜேர்மன் வணிகத்தின் போட்டித்தன்மையை தக்க வைக்க, தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் நிறுவனங்களின் இணை மேலாண்மை அமைப்புக்கள் போல் மட்டும் செயல்படவில்லை. பெருகிய முறையில் அவை ஜேர்மனிய வெளியுறவு, இராணுவக் கொள்கையின் நீட்டிக்கப்பட்ட அங்கமாகவும் செயல்படுகின்றன. ஜேர்மன் ஏகாதிபத்தியம் பெருகிய முறையில் ஆக்கிரோஷப் போக்கில் ஈடுபட்டிருக்கையில் ஜேர்மன் இராணுவத்தின் தளபதியுடன் இணைந்து செயல்பட DGB முற்பட்டுள்ளது, ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. சொம்மர் செய்தியாளர் கூட்டத்தின் ஆரம்பத்தில், புன்டஸ்வேருக்கும் தொழிற்சங்கங்களின் நலன்களுக்கும் இடையே அடிப்படையான வேறுபாடுகள் ஏதும் இல்லை என்று வலியுறுத்தினார். “ஆயுதப் படைகளுக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் இடையே உள்ள உறவு எளிமையான பிரச்சினை அல்ல, ஏனெனில் இதில் “வரலாற்றுத் தன்மை வாய்ந்த சுமை உள்ளது” என்றார். அதன் பின் சொம்மர் கூறினார்: “ஆனால் இப்பொழுது அது போல் இல்லை.” இத்தகைய ஒப்புதல் “உண்மையிலேயே மிக பயமுறுத்தும் பேட்டி” இன் தன்மையை வகைப்படுகிறது. தொழிற்சங்கவாதிகளும் இராணுவ அதிகாரிகளும் விவாதிக்கும் பிரச்சினைகளில் “மிகவும் பொதுவானவை” உள்ளன. உண்மையில் பாதுகாப்புத்துறைக்கும் ஆயுதப்படைகளுக்கும் தன் பங்கிற்கு DGB கொடுக்கும் கிட்டத்தட்ட முழு ஆதரவைத்தான் “மிகவும் பொதுவானவை” என்று சொம்மர் விவரிக்கிறார். DGB, புன்டஸ்வேர் எடுத்துள்ள பலதரப்பட்ட பெருகிய இராணுவ நடவடிக்கைகள் அதேபோல் புன்டஸ்வேர் ஓர் உலகச் செயற்பாட்டை கொண்டுள்ள இராணுவமாக நிலைமாற்றம் கொண்டு தலையீடு மற்றும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதற்கும் ஆதரவை கொடுக்க தயாராக உள்ளது என சொம்மர் தெளிவுபடுத்தியுள்ளார். “பாராளுமன்றம் இராணுவ நிலைப்பாடுகளுக்கு ஒப்புக் கொண்டுவிட்டால்.... நாமும் நம்மால் இயன்றது அனைத்தையும் வீரர்களைக் காப்பாற்ற, கருவிகள் அளிக்க முழுவதும் செயல்பட வேண்டும்; வீரர்கள் “நம் மதிப்பை” பெற முற்றிலும் தகுதி உடையவர்கள் என்றும் சேர்த்துக் கொண்டார். ஏற்கனவே மார்ச் 2011ல் சொம்மர் “தொழிற்சங்கங்களும் ஆயுதப் படைகளுடனான அவற்றின் உறவுகளும்” என்ற தலைப்பில் ஓர் உரையை ஹம்பேர்க்கில் உள்ள புன்டஸ்வேர் பல்கலைக் கழகத்தில் கொடுத்துள்ளார்; அதில் அவர் “இராணுவம் வெளிநாடுகளில் நடத்தும் பணிகள் தொழிற்சங்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்த அதிகம் உதவியுள்ளன” என்று அறிவித்திருந்தார். அதே உரையில், சொம்மர் “மூலப் பொருட்களை பாதுகாப்பாக பெறுதல்” என்னும் பிரச்சினையையும் எழுப்பி, புன்டஸ்வேருக்கு DGB கொடுக்கும் ஆதரவின் பின்னணியில் இருக்கும் நடைமுறைப் பொருள்சார் நலன்கள் குறித்த உட்பார்வையையும் அளித்திருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்தான் Handelsblatt செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கட்டுரை, ஜேர்மனி மீண்டும் எப்படி அதன் ஏற்றுமதித் தொழில்களுக்கு மூலவளங்களை பெற போர்களை நடத்தத் தயாரிப்புக்களை கொண்டுள்ளது என எழுதியிருந்தது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், சொம்மர், டு மஸியருக்கு அடுத்தாற்போல் நின்று, DGB எப்படி இராணுவத்துடன் அது கொண்டுள்ள ஒத்துழைப்பை மற்ற துறைகளிலும் வலுப்படுத்த முற்படுகிறது என்பது பற்றிய பொதுப்பார்வையை கொடுத்தார். பாதுகாப்பு மந்திரியுடன் அவர் நடத்திய பேச்சுக்களில், “புன்டஸ்வேரின் பணிகள் மற்றும் கட்டுமானக் கொள்கைகள்”, “மனிதவள வளர்ச்சி—குடிமைத்துறை உட்பட”, “ஜேர்மனி பாதுகாப்பு தொழிற்துறைக்கு ஏற்ற இடம்”, “பாதுகாப்புத் தொழில்துறையின் வளர்ச்சி” ஆகியவை அடங்கியிருந்தன. “நெறிமுறை சிக்கல்களும்” விவாதிக்கப்பட்டன—அதில் ஆளில்லா விமானப் பயன்பாடும் அடங்கியிருந்தது. மந்திரி இது குறித்து மிக வெளிப்படையாக இருந்தார் என்று சொம்மர் ஒப்புக் கொண்டார்; எனவேதான் சொம்மர் என்ன விவாதிக்கப்பட்டது என்பது பற்றி அதிகம் கூற தயாரிப்பு செய்யவேண்டி இருக்கவில்லை. “இடத் தர்க்கத்தின்” ஒரு பாகமாக DGB, ஜேர்மனிய ஆயுதங்கள் தொழிற்துறையை ஆதரிப்பது மட்டும் இல்லாமல், அரசாங்கத்தின் டிரோன் திட்டங்களையும் ஆதரிக்கிறது. கூட்டாட்சி அரசாங்கம் 2010ல் இராணுவ வரவு-செலவுத் திட்டம் குறைக்கப்படும் என அறிவித்தபோது, IG Metall இன் பொறியியல் சங்கம் பாதுகாப்பு அமைச்சரகத்திடம் ஏயர்பஸ் இராணுவப் போக்குவரத்து விமானம், டொரனாடோ போர் விமானங்கள், “டாலரியன்” டிரோன் திட்டம் ஆகியவற்றின் உற்பத்திகளைக் குறைக்க வேண்டாம் என்று முறையிட்டது. IG Metall இன் அதிகாரி பேர்ன்ஹார்ட் ஸ்டைடெல் தொழிற்சங்கங்களின் நிலைமையை சுருக்கமாக கூறினார். “வெளிநாட்டு இராணுவக் கருவிகளை பொதுப்பணத்தில் வாங்குவதை நாம் எதிர்க்கிறோம். ஜேர்மனியிலேயே உற்பத்தியை கொள்வதை நாம் கூடுதலாக விரும்புகிறோம்.” தொழிற்சங்கங்கள் சாத்தியமானவரை வேலைகளை வெட்ட முயற்சிக்கையில், அவர்கள் ஜேர்மன் இராணுவவாதத்தை உயர்த்தும் பொருட்டு பாதுகாப்புத் துறையில் வேலைகளை தோற்றுவித்தல் மற்றும் பாதுகாவலர்கள் எனக்காட்டிக் கொள்ள முற்படுகின்றன. அவர்களுடைய முயற்சிகள் பாதுகாப்புத் துறையுடன் நின்றுவிடவில்லை, இராணுவத்திற்கு இளைஞர்களை சேர்த்தலிலும் அடங்கியுள்ளது. DGB உடன் இணைந்துள்ள தொழிற்சங்கமான வேர்டியின் தலைவர் Frank Bsirske இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூறினார்: “வேர்டி தொடர்ந்தும் தொடர்ச்சியாகவும் சிப்பாய்கள் மற்றும் ஆயுத படைகளின் சாதாரண ஊழியர்களின் தேவைகளில் ஈடுபாடு கொடுள்ளது.... இது வேர்டி மேலும் ஆயுதப் படைகளுக்கு ஆட்சேர்ப்புக்கும் ஆதரவளிக்கிறது என்பதும் தெளிவானது." இராணுவத்துடனான கூட்டணியின்போது, DGB ஒரு முக்கியமான கருத்தியல் செயல்பாட்டையும் மேற்கொள்கிறது. கடந்த நூற்றாண்டில் உலகை இருமுறை பேரழிவில் தள்ளிய ஜேர்மன் இராணுவத்தின் வெளிநாட்டு நோக்கங்கள் மக்களில் பெரும்பாலானவர்களால் நிராகரிக்கப்படுகின்றன, ஜேர்மனிய இராணுவ வாதத்திற்கு ஆழ்ந்த விரோதப் போக்கு உள்ளது. ஒரு முக்கியமான பிரச்சினை “புன்டஸ்வேரை ஜனநாயகத்தில் நன்கு இழைத்து வைத்திருப்பதாகும்” என்று சொம்மர் வலியுறுத்தினார். இதற்குத் தேவை “ஒரு சமூக-அரசியல் விவாதம், அதில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.” பாதுகாப்பு அமைச்சரகத்தால் முன்னெடுக்கப்படும் பரந்த பிரச்சாரமான ஆயுதப் படைகளின் தோற்றத்திற்கு ஏற்றம் கொடுத்தல், பொதுமக்கள் கருத்தை இன்னும் ஆக்கிரோஷ இராணுவ வாதத்திற்குத் திரட்டுதல் என்பதில் DGB ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். DGB தலைமையுடனான தன் பேச்சுக்கள் பற்றி டு மஸியர் அது ஒரு “அரசியல் விவாதத்தின்” பகுதி என்றும், தான் “ஆயுதப்படைகளுக்கும் அப்பால் விஞ்ஞான சமூகம், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், திருச்சபைகள், பள்ளிகள் இன்னும் அக்கறை உடைய மற்ற அமைப்புக்களுடனும்” செயல்பட இருப்பதாகக் கூறினார். DGB யிடம் இருந்து அழைப்பு பெற்றதில் “தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும்”, பேச்சுக்கள் குறித்து “மிகவும் திருப்தி அடைந்துள்ளதாகவும்” தெரிவித்தார். புதிய இராணுவ வாதத்தின் சிடுமூஞ்சித்தனமான முறைக்கு ஏற்ப, அவர் DGB மற்றும் இராணுவத்திற்கும் இடையேயான கூட்டு உடன்பாடு என்பது ஒரு “சமாதான இயக்கம்” என்றார். தொழிற்சங்கம் அத்தகைய இயக்கத்தின் ஒரு பகுதி மட்டுமன்றி, “இராணுவமும் அமைதி இயக்கத்தின் ஒரு பகுதி என்று தன்னைக் காணவேண்டும்” என்று அவர் அறிவித்தார். ஜேர்மன் இராணுவம் இப்பொழுது உலகெங்கிலும் 13 வெவ்வேறு போர்க்களங்களில் ஆயிரக்கணக்கான சிப்பாய்களை நிலைப்படுத்தியுள்ளது. டு மஸியர் இத்தகைய கொடுமையான அறிக்கையைக் கூறமுடிகிறது என்றால், சமாதான இயக்கம் என அழைக்கப்படுபவை DGB இன் பாதையைத்தான் மேற்கொண்டுள்ளதோடு, ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் வெளிப்படையான ஆதரவு அமைப்பாகிவிட்டது. ஜேர்மனிய தொழிற் சங்கங்களுக்கும் டு மஸியருக்கும் இடையிலான பேச்சுக்களின் முக்கியத்துவத்தை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்களும் பல ஜேர்மனிய போலி இடது அமைப்புக்களும், இடது கட்சி, மார்க்ஸ் 21, SAV, MLPD போன்றவை அனைத்தும் DGB க்கு ஆதரவு கொடுப்பதோடு அப்படிச் செய்கையில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் பின்னே அணிவகுத்துள்ளன. தொழிற்சங்கங்களுக்கும் புன்டஸ்வேருக்கும் இடையேயான கூட்டு என்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும். தொழிற்சங்கங்கள் ஆலைகளில் தொழிலாளர்களை கண்காணிக்கவும், போலீஸ் வேலைசெய்யவும் மட்டும் தாங்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. அவை தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்கு இராணுவ வலிமையை பயன்படுத்தவும் தயாராகிவிட்டன. |
|
|
|