World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Struggle against closure of Goodyear plant in Amiens, France at a crossroads

பிரான்சின் அமியனில் குட்இயர் ஆலை மூடலுக்கு எதிரான போராட்டம் முட்டுச்சந்தில்

By Antoine Lerougetel
7 March 2013

Back to screen version

அமியன் நோர்த் குட்இயர் டயர் ஆலையில் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆலை மூடல் மற்றும் ஏராளமான வேலை நீக்கங்களுக்கு எதிராக ஆறு ஆண்டுகளாக நடத்தி வரும் போராட்டம் இப்பொழுது முட்டுச்சந்தில் நிற்கிறது.

குட்இயர் அமியான் மற்றும் பிரான்ஸ், ஐரோப்பா முழுவதும் ஆலை மூடல்களை எதிர்நோக்கும் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினை எப்படித் தொழிலாள வர்க்கத்தை பரந்த எதிர்ப்பிற்கு அணிதிரட்டுவது, அத்தோடு வேலை நீக்கத்தை எதிர்கொள்ளும் ஏராளமான கார்த் தயாரிப்பு தொழிலாளர்களுக்கு பரந்த மக்கள் பிரிவின் ஆதரவு உணர்வை எப்படிப் பெறுவது என்பதாகும். நிர்வாகத்தின் மிரட்டலுக்கு தொழிலாளர்கள் பணிய மறுப்பதை WSWS ஆதரித்து பெப்ருவரி 14 அன்று அது எழுதியதாவது: குட்இயர் தொழிலாளர்கள் ஐந்து ஆண்டு காலமாக சட்டபூர்வ போராட்டத்தை ஆலையை திறந்து வைத்திருப்பதற்காக நடத்தி வருகின்றனர்; இது நிர்வாகத்தின் கோரிக்கையான தொழிலாளர்கள் மனிதத்தன்மை அற்ற நான்கு நேரமுறை வேலையை ஏற்க வேண்டும் இல்லாவிடின் வேலை நீக்கத்தை எதிர்நோக்க வேண்டும் என்பதை நிராகரித்தபின் வந்துள்ளது.

ஸ்ராலினிச தலைமையிலான CGT (தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு) தொழிற் சங்கத்தின் துரோகத்தன கொள்கையையும் அதன் குட்டி முதலாளித்துவ ஆதரவு போலி இடது அமைப்பான சுதந்திர தொழிலாளர் கட்சியினுடைய (POI) கொள்கையையும் WSWS தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது; இவைகள் போராட்டத்தை நீதிமன்றப் போராட்டத்துடன் வரம்பு கட்ட முற்படுகின்ன. இது வேலைகள், ஊதிய வெட்டுக்கள் என பிரான்ஸ் முழுவதும் மற்றும் ஐரோப்பாவிலும் கார்த் தொழிலில் சுமத்தப்படுவதை எதிர்க்க தொழிலாள வர்க்கத்தை ஒரு பொதுப் போராட்டத்தில் அணிதிரட்டும் முயற்சிக்கு தடையாகும்.

CGT இன் தேசியத் தலைமை முன்னாள் கன்சர்வேட்டிவ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் ஒத்துழைத்தது, உள்ளூர் CGT அதிகாரிகள் குட்இயர் போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டதை ஏற்றனர். இந்த ஒத்துழைப்பு இப்பொழுதும் முதலாளித்துவ இடது சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரான்சுவா ஹாலண்ட் அரசாங்கத்துடனும் தொடர்கிறது; இவருடைய தேர்தலுக்கு CGT ஆதரவு அளித்தது.

ஓர் ஆலை மூடலை எப்படித் தவிர்ப்பது என்பது பற்றிய தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் சரிந்த நிலையில், ஒரே முன்னேற்றப்பாதை தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான குழுக்களை கட்டமைப்பதுதான்; இது ஒரு பரந்த போராட்டத்தை தொழிலாளர் விரோதக் கொள்கைகள் மற்றும் CGT இன் வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகளுக்கு எதிராக நடத்தப் போராட வேண்டும்.

பெப்ருவரி 12ம் திகதி அமெரிக்க விவசாயத்துறை டயர் தயாரிப்பாளர் டைடன் ஆலையின் பண்ணை டயர்கள் பிரிவை வாங்க முன்வந்ததைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அது 500 வேலைகளைத் தக்க வைத்திருக்கும். இப்பொழுது நடைபெறுவது குட்இயருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் எத்தகைய வேலை நீக்கப் பொதி ஆலையின் முழு எண்ணிக்கையான 1,273 தொழிலாளர்கள் மீதும் கொடுக்கப்படலாம்—அல்லது சுமத்தப்படலாம் என்பதுதான்.

இப்பேச்சுக்கள் பெப்ருவரி 12 அன்று பாரிசிற்கு அருகே உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தொடங்கின. ஆலையின் CGT தலைவர் மைக்கேல் வாமன் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் கூறினார்: நாம் நீதிமன்றங்களுக்குக் கனரக பீரங்கிகளைக் கொண்டு செல்வோம். நம்முடைய சட்டபூர்வக் கிடங்கில் இருந்து 10% கூடப் பயன்படுத்தவில்லை... அரசாங்கம் இப்பொழுது நடுங்குகிறது என்றால், அது தொடர்ந்து அவ்வாறுதான் செய்யும்.”

இடைப்பட்ட காலத்தில், மார்ச் 7 அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கு முன் ஆலை மூடலை தொழிலாளர்கள் எதிர்க்க முற்படுகையில், வாமனும் பிற CGT சட்டப்பிரிவு ஆலோசகர் பியோடர் ரிலோவும் தொழிலாளர்கள் தங்கள் வேலை நீக்கப் பணத்தை SCOP இல் (கூட்டுறவு) ஆலையை வாங்கப் போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். பல தொழிலாளர்கள் நியாயமான இயலாமையை வெளிப்படுத்தினர்; ஏனெனில் இது ஆலை மூடலை ஏற்றல் என்பதற்கு ஒப்பாகும். பெப்ருவரி 26ம் திகதி வாமன் கன்சர்வேடிவ் UMP யின் ஐரோப்பிய பாராளுமன்றப் பிரதிநிதி Philippe Bouland ஐ சந்தித்தார்; பிந்தையவர் தான் SCOP க்கு நிதி உதவி பெற முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர் வாமன் கிட்டத்தட்ட SCOP உடைய திட்டமானது, CGT உடைய கைகளை வேலை நீக்க விதிகள் பற்றிய சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு வலுப்படுத்தும் தந்திர உத்தி என்பதை ஒப்புக்கொண்டார். Courrier Picard இடம் வாமன் இவ்வாறு கூறினார்: எப்படி நிர்வாகம் விடையிறுக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் அதை விரும்பவில்லை என்றால், பின் நமக்கு மீண்டும் நீதிமன்றங்கள் செல்ல உதவும், எப்படி குட்இயர் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க விரும்பாமல் ஆலையை மூட விரும்புகிறது என்பதைக் காட்ட முடியும்.”

இந்தத் தந்திர உத்திகள் குட்இயர் தொழிலாளர்கள் வேலை நீக்கப் பணத்தை ஏற்கத் தள்ளப்படுவதற்காக அவர்களின் மனத்திடத்தை முறிக்கும் வடிவைமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது அவர்களுடைய வேலை இழப்புக்களானது 6 ஆண்டு காலமாக நிர்வாகம் ஆலையை மூடும் முயற்சி, உற்பத்தியை அதன் திறனில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக வெட்டுவதற்கு காட்டும் எதிர்ப்புக்களை மீறி.

மற்றொரு வேலை கிடைப்பது அரிது என்று இப்பொழுதுள்ள நிலையில், எத்தகைய வேலை நீக்கப் பணமும் குட்இயர் தொழிலாளர்களுடைய வேலை இழப்புக்களுக்கு ஈடு செய்ய முடியாது. 1930களுக்குப் பின் உலகின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பிரான்சில் வேலையின்மை, 21 தொடர்ச்சியான மாதங்களில் 3.5 மில்லியன் வேலையற்றோர் என உயர்ந்துள்ளது. குறிப்பாக கார்த் தயாரிப்புத்துறை மற்றும் பல உற்பத்தித் துறைகளில் இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் இன்னும் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம், குட்இயரில் வேலைகளை பணத்திற்காக விற்பதை எப்பொழுதுமே எதிர்ப்பதோடு, ஆலைகள் மூடல், வேலை நீக்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் அனைத்தினதும் பரந்த தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரள்வு கொள்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்ச்சியாக CGT இன் முயற்சிகளான தற்போதைய ஆலை மூடல்களை, வேலை நீக்கப் பொதிகளை சுட்டிக்காட்டி வெற்றி எனக் காட்டுபவற்றையும் எதிர்த்துள்ளது.

அத்தகைய நன்கு அறியப்பட்டுள்ள விவகாரம் ஒன்றிற்குப் பின், அதாவது 2009 கான்டினென்டல் Clairoix ஆலை மூடலுக்குப் பின், WSWS எழுதியதாவது: அமியான் குட்இயர் ஆலைத் தொழிற்சங்கங்களானது Clairoix தொழிலாளர்கள் விற்கப்பட்டதை உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தன் பங்கிற்கு குட்இயர் ஆலையிலுள்ள CGT தலைவரான மைக்கேல் வாமன் கோன்டி தொழிலாளர்கள் போராடி வெற்றி பெற்ற மிக கௌரவமான உடன்பாட்டிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அதன் நோக்கமான வேலை வெட்டுக்களை திரும்பப் பெறுதல் என்பதாகும், அது தோல்வியடைந்தால், 50,000 யூரோக்கள் இழப்பீடு என்பது குறைந்தப்பட்ச தொகையாக இருக்கும். குட்இயரிடம் பணம் உள்ளது. அக்குழுமம் பணப்பையைத் திறக்க வேண்டும்.

உண்மையில் கான்டினென்டல் Clairoix ஆலை மூடல் உடன்பாடு ஓர் இழிந்த காட்டிக் கொடுப்பாகும். வேலை நீக்கம் செய்யப்பட்ட Clairoix தொழிலாளர்களுக்கு இன்னமும் வேலைகள் கிடைத்தபாடில்லை. கான்டினென்டலுக்கும், CGT உடைய சேவியர் மத்யேயு தலைமையிலான தொழிற்சங்கம் மற்றும் அரசாங்கம் ஆகியவைகளுக்கும் இடையே பேச்சுக்கள் நடத்திக் கொண்டுவரப்பட்ட உடன்பாடுஅதாவது, பிற கான்டினென்டல் ஆலைகள் மூடலுக்கு இலக்கு கொள்ளப்பட்டுள்ளவற்றில் Clairoix தொழிலாளர்கள் தலையிடமாட்டார்கள் என்பதை தொழிற்சங்கத்திடமிருந்து ஓர் உறுதியை பெற்றிருந்தது.