|
WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
ஆபிரிக்கா
:
எகிப்து
போர்ட் சையத் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து எகிப்து முழுவதும் தீவிர மோதல்கள்
வெளிப்படுகிறது
By
Johannes Stern
11 March 2013
use this version to print | Send
feedback
சையத் துறைமுகக் கால்பந்தாட்ட
வழக்கின் விவாதத்திற்குரிய தீர்ப்பு வெளிவந்தவுடன், கெய்ரோ, சூயஸ் கால்வாய் துறைமுக
சையத் நகரம் இன்னும் பல தொழில்துறை நகரங்களில் எகிப்திய ஜனாதிபதி மகம்மத் முர்சி
மற்றும் ஆளும் முஸ்லிம் சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக எதிர்ப்புக்கள்
வெடித்தன.
ஆட்சிக்கு எதிரான சீற்றம்
7
பொலிஸ் அதிகாரங்களை விடுதலை செய்து,
அதே நேரத்தில் 21 EL Mastry
ஆதரவாளர்களுடைய மரண தண்டனை
உறுதிப்படுத்தப்பட்ட போது எரியூட்டப்பட்டது;
முதலில் ஜனவரி
26 அன்று அவர்களுக்குத் தண்டனை
விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்
கெய்ரோவின் அல் அஹ்லி விளையாட்டுக் குழுவின் ஆதரவாளர்கள் மீது போர்ட் சையத்தின் எல்
மஸ்ரி குழு விளையாட்டு முடிவின்போது நடத்திய அரசே ஏற்பாடு செய்த தாக்குதலில் பங்கு
பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்; இதில் 73 அஹ்லி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்.
(பார்க்க:
“இராணுவ
ஆட்சிக்குழு சார்பான கால்பந்து மைதான கலவரத்திற்கு எதிராக எகிப்தில் பாரிய
ஆர்ப்பாட்டம்”).
இரண்டு பொலிசார் மட்டுமே
தண்டனைக்கு உட்பட்டனர். முன்னாள் போர்ட் சையத் பாதுகாப்பு இயக்குனர்
Essam Samak
போர்ட் சையத்,
நீர்நிலைப் பாதுகாப்பதுறைத்
தலைவர் Mohamed Saad.
அவர்கள் இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பிற்கு எதிரான வெகுஜன
எதிர்ப்புக்கள் பெருகியுள்ள நிலையில், பல பொலிசாரும் எதிர்ப்புக்களில்
சேர்கின்றனர்; வெள்ளியன்று எகிப்து நெடுகிலும் நடைபெற்ற வேலைநிறுத்தங்களில்
குறைந்தப்பட்சம் 60 பொலிஸ் முகாம்கள் இருந்தன. இந்த வேலை நிறுத்தம், எகிப்திய
மாநிலங்களில் மூன்றில் ஒரு பகுதியைப் பாதிப்பதாகக் கூறப்படுவது, செவ்வாயன்று
தொடங்கியது; அப்பொழுது இஸ்மைலியாவின் பாதுபாப்புப் படைகள் எதிர்ப்பாளர்களை
அடக்குவதற்கு போர்ட் சையத்திற்குச் செல்ல மறுத்தனர்.
அஹ்ரம் ஆன்லைனிடம் பேசிய போர்ட்
சையத் பொலிஸ் அதிகாரி ரஹித் மகம்மத் அடெப் எல் மஸ்ரி விசிறிகளுக்கு எதிரான
தீர்ப்பில் சட்டபூர்வ ஆதாரம் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்தார். “யாரைக் கைது
செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை—எனவே முன்பு சிறையில் இருந்தவர்களைக் கைது
செய்தோம், இதற்குப் பின்னணியில் அவர்கள் இருந்திருப்பர் என்பதில் நாங்கள் உறுதியாக
இருந்தோம். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டர்; எனவே விசாரணையில் பல பேர்
நிரபராதியாக இருந்திருக்கலாம்.”
கெய்ரோவில் அல் அஹ்லி விசிறிகள்
அமைப்பான அல்ட்ராஸ் அஹ்லவி ஒரு பொலிஸ் நிலையத்தை தீக்கிரையாக்கி ஜமேலெக்
மாநிலத்தில் உள்ள எகிப்திய கால்பந்தாட்ட சங்கம்
EFA
உடைய அலுவலகத்தையும் தீக்கிரையாக்கியது.
பெப்ருவரி 2011ல் சர்வாதிகாரி
ஹொஸ்னி முபாரக்கை அகற்றிய ஆரம்ப நாட்களில் இருந்து எதிர்ப்புக்களின் உறைவிடமாகத்
திகழும் க்வசர் அல்-நில் பாலத்தில் எதிர்ப்பாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே
கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன. கொல்லப்பட்ட மூவரில் ஒரு எட்டுவயதுச் சிறுவனும்
இருந்தான். பொலிசார் எதிர்ப்பாளர் கலீட் முஸ்தபாவையும் பின்புறம் இருந்து தலையில்
சுட்டதாகக் கூறப்படுகிறது; அவர் மற்றொரு காயமுற்ற எதிர்ப்பாளரை மீட்கச் சென்றபோது
இது நடைபெற்றது.
பேஸ்புக் பக்கத்தில் அல்ட்ராஸ்
அஹ்லவி எதிர்ப்புக்கள் தீவிரப்படுத்தப்படும் என்று உறுதியளித்துளனர். “இன்று
கெய்ரோவி நடைபெற்றது எங்கள் சீற்றத்தின் தொடக்கம்தான். படுகொலையில் தொடர்புடைய
அனைத்து அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படாவிட்டால் இன்னும் அதிக
எதிர்ப்புக்கள் வெளிவரும். இரண்டு பொலிஸ் ‘நாய்கள்” மீது சிறை தண்டனை
விதித்துவிட்டதால் நாங்கள் சமாதானம் அடைந்துவிடமாட்டோம்.”
போர்ட் சையத்தி, அல்ட்ராஸ் க்ரீன்
ஈகிள்ஸ் குழுவின் எதிர்ப்பாளர்கள் சூயஸ் கால்வாயை தடைக்கு உட்படுத்த முற்பட்டனர்,
இது எகிப்திய இராணுவத்தின்
கடுமையான கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நீர்ப்பாதை ஆகும்; எதிர்ப்பாளர்கள்
போக்குவரத்தைச் சிதைக்க படகுகளை கட்டவிழித்துவிட்டனர். மூன்று வாரங்களுக்கு முன்பு
போர்ட் சையத்தில் ஒரு பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. அப்பொழுது முதல், நகரம்
எதிர்ப்புக்களால் முடக்கம் அடைகிறது. இஸ்லாமிய வாதிகள் நகரத்தில் இருந்து
வெளியேற்றப்பட்டனர் என்று கூறப்படுகிறது; பொலிசார் நகரத்தை விட்டு நீங்கினர்,
அல்லது வேலை செய்ய மறுக்கின்றனர். முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமையகம்
கைவிடப்பட்டுவிட்டது; இஸ்லாமியவாத எதிர்ப்புச் சுவரொட்டிகள் கிழிக்கப்படுகின்றன.
மாறாக நகரத்தில் ஒரு பதாகையில் “நீங்கள் [முர்சி] சிறைக்கு மீண்டும் செல்ல
இருக்கிறீர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
“சகோதரத்துவம் மறைந்துவிட்டது”
என்று போர்ட் சையத்தில் வசிக்கும் மஹ்மூத் கலில்
AFP
இடம் கூறினார்.
மற்றொரு எதிர்ப்பாளர் முஸ்தபா
அல்-ஷான்
விளக்கினார்:
“இவர்கள்
முபாரக்கைவிட வேறுபட்டு இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் அவரைவிட மோசமாக
உள்ளனர். இப்பூசலின் போது எங்கள் நகரத்தில் இருந்து தப்பிய நிலையில், அவர்கள்
எங்கள் பார்வையில் இல்லாமலே தப்பி ஓடிவிட்டனர்.”
தீர்ப்பிற்கு முன், நகரம்
இராணுவத்தின் பாதுகாப்பில் முழுமையாக வந்தது. எகிப்திய கடற்படைக் கப்பல்கள் சூயஸ்
கால்வாயில் சென்ற வண்ணம் இருந்தன. அஹ்ரம் ஆன்லைன் கருத்துப்படி,
ஒரு இராணுவ அதிகாரி போர்ட்
சையத்திற்கு வெளியே ஆறாம் கடற்படை நிறுத்தப்பட்டுள்ளது, எதிர்ப்பாளர்களுக்கும்
இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் வெடித்தால் அது உள்ளே புயலென நுழைந்துவிடும் என்று
எதிர்ப்பாளர்களை எச்சரித்தார்.
சீற்ற வெடிப்பின்போது, எல் மஸ்ரி
ஆதரவாளர்கள் நகரத்தில் இருந்த தங்கள் விளையாட்டு அரங்கையே தாக்கினர். முர்சி
அவர்களை அரசியல் பலிகடாக்களாகப் பயன்படுத்துகிறார் என்றும் தங்கள் தோழர்கள்
விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறினர். கிரீன் ஈகிள்ஸ் அல்ட்ராஸ் “போர்ட் சையத்
நெடுகிலும் ஒத்துழையாமை இயக்கச் செயல்களை நடத்துவோம், எங்கள் கோரிக்கைகள்
தீர்க்கப்படும் வரை.... முபாரக்கின் கீழ் மூன்று தசாப்தங்கள்
கொடுமைப்படுத்தப்பட்டுவிட்டோம், முர்சி இதைத்தான் தொடர்கின்றார்” என்று கூறியது.
பொலிஸ் படையின் துணைத்தலைவர் எல்
காடி,
முஸ்லிம் சகோதரத்துவம் நடத்தும்
உள்துறை அமைச்சரகத்தை “முபாரக் காலத்தைவிட மோசமானது” என்று குறை கூறினார்.
“தற்போதைய அமைச்சரகம் நாங்கள் வன்முறையைக் கையாள வேண்டும் என்று கூறுகிறது.
அவர்களுடைய நடவடிக்கைகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி அவர்கள்
அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
ஒத்துழையாமை இயக்கத்திற்கான
நடவடிக்கைகள் அனைத்தும் எகிப்து முழுவதும் எகிப்தியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு
நிறைவு வெகுஜன எதிர்ப்புக் காலத்தில் இருந்து சூடுபிடித்துவிட்டன. இவை சூயஸ்
மற்றும் இஸ்மைலியா என்னும் கால்வாய் நகரங்களுக்கும் பரவிவிட்டன; தவிரி மன்சௌரா,
டான்டா மற்றும் மகல்லா என்றும் நைல் டெல்டா போன்ற முக்கிய தொழில்துறை நகரங்களிலும்
பரவியுள்ளன.
மகல்லாவின் முக்கிய சதுக்கமான
El Shoan
இல் மோதல்கள் போர்ட் சையத் தீர்ப்பு
அறிவிக்கப்பட்டபின் வெடித்தன; எதிர்ப்பாளர்கள் மோலோடோவ் குண்டுகளை மகல்லாவின்
இரண்டாம் பொலிஸ் நிலையத்தின்மீது எறிந்தனர்.
அரசாங்கத்திற்கு எதிரான இந்த
ஆர்ப்பாட்டங்கள்,
முர்சி ஆட்சிக்கு எதிரான பேரழிவு
வெளிப்பாடு என்பதோடு மட்டுமன்றி, உத்தியோபூர்வ எதிர் சக்திகள் பற்றிய அம்பலமும்
ஆகும்--தேசிய பாதுகாப்பு முன்னணியில் இருந்து போலி இடது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள்
வரை. இச் சக்திகள்,
புரட்சியின் அபிலாஷைகள் சகோதரத்துவத்தை
அதிகாரத்திற்குக் கொண்டு வந்த தேர்தல்கள் மூலம் தீர்க்கப்படும் என்று கூறியிருந்தன.
உண்மையில் சகோதரத்துவம் ஆழ்ந்த சமூக வெட்டுக்களை சுமத்த முற்படுகிறது; அதே
நேரத்தில் அது இராணுவம் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுடன் உறவுகளை வளர்க்க
முற்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கம் மீண்டும் முழு அரசியல் நடைமுறைக்கும் எதிராக
புரட்சி செய்யத் தள்ளப்படுகிறது.
முர்சியின் அதிகாரமும் முஸ்லிம்
சகோதரத்துவத்தின் அதிகாரமும் பெருகிய முறையில் சிதையும் அளவில், ஆட்சி பாதுகாப்புப்
படைகளை உறுதியாக நிலைப்பாடு செய்ய முற்படுகிறது; அதே நேரத்தில் தீவிர வலதை
திரட்டவும், வன்முறையைக் கையாளும் இஸ்லாமியக் கூறுபாடுகளை வேலை நிறுத்தங்கள்,
எதிர்ப்புக்களை நசுக்கவும் அணிதிரட்டுகிறது.
ஞாயிறன்று எகிப்தின் தலைமை
அரசாங்க வக்கீல் பொலிஸும் இராணுவமும்
“பொது,
தனிச் சொத்துக்களை அழிக்கும் குற்றங்கள், சாலைகள், போக்குவரத்தைத் தடுக்கும்
செயல்கள் புரிவோர், பணியாளர்களை வேலைக்கு செல்வதில் இருந்து தடுப்பவர் அனைவரையும்
கைது செய்யும்”
என்றார். இந்த அறிக்கை
“அனைத்துக் குடிமக்களும்” பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு உதவ வேண்டும் என்று ஊக்கம்
கொடுக்கிறது; “எகிப்தின் குற்றவியல் சட்டத்தின் 37வது விதி,
குற்றம் செய்யும் எவரையும் கைது
செய்யும் உரிமையை,
அவர்களை உத்தியோகபூர்வ அதிகாரிகளிடம்
ஒப்படைக்கும் உரிமையை செயல்படுத்த வேண்டும்” என்றும் ஊக்கம் கொடுக்கிறது.
இது எகிப்திய ஆளும் உயரடுக்கு,
ஒரு வன்முறையான செயற்பாட்டிற்கு
பொலிசுக்கு உதவ ஆயுதங்கள் கொண்ட போராளிகள் குழுவைத் தோற்றுவிக்கிறது.
Saber Abul Fotouh,
முஸ்லிம் சகோதரத்துவத்தின் அரசியல் பிரிவான சுதந்திர, நீதிக் கட்சி உடைய தொழிலாளர்
குழுவின் தலைவர், “நாட்டில் இப்போதுள்ள பொலிஸ் வேலைநிறுத்தம் என்னும் அலையை ஒட்டி
பாதுகாப்பிற்காக மாற்றீட்டு வழிவகைகள் தேவை” என்று அழைப்பு விடுத்துள்ளது.
Egypt Independent,
கருத்துப்படி, “அபுல் போடோவின்
கூறப்பட்டுள்ள வழிவகைகளுள் ஒரு வரைவுச் சட்டம் உள்ளது; இது தனியார் பாதுகாப்புப்
பிரிவினரை குடிமக்களைக் கைது செய்து அரசாங்கத் தலைமை வக்கீலிடம் ஒப்படைக்க
அனுமதிக்கும். laxer
சட்டங்கள் ஆயுதமேந்திய போராளிக்
குழுக்களுக்கு பசுமையான தளங்களைக் கொடுக்கும் என்ற அச்சங்களை எழுப்பியுள்ளது.
வார இறுதியில் அதி-பிற்போக்குத்தன
இஸ்லாமியவாத அல் கமா அல்-இஸ்லாமியா மற்றும் சலாபியி நூர் கட்சி ஆகியவை
“பாதுகாப்புப் போராளிகள் பிரிவுகளை” தோற்றுவிக்கவும் “மக்கள் குழுக்களை”
வேலைநிறுத்தம் செய்யும் பொலிஸ் சக்திகளுக்கு பதிலாக ஈடுபடுத்தும் திட்டங்களையும்
அறிவித்துள்ளது.
இத்தகைய போக்குகள் தொழிலாள
வர்க்கத்திற்கு அப்பட்டமான எச்சரிக்கை ஆகும். முர்சியும் முஸ்லிம் சகோதரத்துவமும்
அதி-வலது
சக்திகள் தொழிலாள வர்க்கத்தை குருதி கொட்ட வைத்து அடக்க அணிதிரட்டுகின்றன. |