World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : போர்த்துக்கல்

Mass opposition to austerity in Portugal

போர்த்துக்கல்லில் சிக்கன நடவடிக்கைக்கு பாரிய எதிர்ப்பு

By Paul Mitchell
13 March 2013

Back to screen version

ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய முக்கூட்டின் €78 பில்லியன் (அமெரிக்க$102 பில்லியன்) பிணையெடுப்பு நிதியை போர்த்துக்கல் திருப்ப கொடுப்பதற்கு ஓராண்டு கூடுதலாக வழங்கப்படலாம் என்ற அறிவிப்பு பொருளாதாரக் கரைப்பு மற்றும் பொது எதிர்ப்பின் தீவிரத்தன்மை இவற்றின் அச்சங்களுக்கு நடுவே வந்துள்ளது.

போர்த்துக்கல்லின் புள்ளிவிவர நிறுவனம் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.2% சுருக்கம் அடைந்தது என்றும் இது 37 ஆண்டுகளில் மிகப் பெரிய சரிவு என்றும் தகவல் கொடுத்துள்ளது. வேலையின்மை  17,6%ஆக ஐரோப்பிய ஒன்றியத்திலேயே கிரேக்கத்திற்கும் ஸ்பெயினுக்கும் அடுத்தாற்போல் இருக்கையில் பரந்தளவிலான அணிதிரளல்களும்  வேலைநிறுத்தங்களும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டன.

மார்ச் 2ம் திகதி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் 40 நகரங்களில் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி/மக்கள் கட்சி கூட்டணி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். 1974 கார்நேஷன் புரட்சி மற்றும் சலாசரின் பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிரானதைவிட மிகப்பெரியதாக இருந்த கடந்த ஆண்டு செப்டம்பர் 15ல் காணப்பட்ட ஆர்ப்பாட்டங்களைவிட இவற்றில் அதிக மக்கள் பங்கு கொண்டனர்.

முன்னோடியில்லாத வகையில் 400,000 மக்கள் நாட்டின் இரண்டாம் பெரிய நகரும் மரபார்ந்த வகையில் சற்றே பழைமைவாத பகுதியான ஓபௌர்ட்டோவில் கலந்து கொண்டனர்.

இரயில்வேக்கள், மெட்ரோக்கள், TAP விமான நிறுவனம் இன்னும் பலவற்றில் தனியார்மயம், ஊதிய வெட்டுக்கள், வேலை இழப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிராக வேலைநிறுத்தங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் சமூகச் செய்தி ஊடக வலைப்பின்னல்கள் மூலம் அமைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று முக்கூட்டை அழிக்கவும்! நமக்கு நம் உயிர்கள் முக்கியம்என்ற பெயரைக் கொண்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களின் முடிவில் வாசிக்கப்பட்ட ஒரு பரந்த கண்டிக்கும் தீர்மானத்தில், “இந்த அரசாங்கம் சட்டபூர்வத்தன்மையற்றது.... தொழிலாளர்களிடம் இருந்தும் ஓய்வூதியம் பெறுவோரிடம் இருந்து இது திருடாத நாளில்லை. அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதில்லை, வேலையின்மையை அதிகரிப்பதில்லை என்று அது உறுதியளித்தது, ஆனால் ஒவ்வொரு மணி நேரமும் அதிக மக்கள் வேலை இழந்துதான் நிற்கின்றனர்.” என அறிவித்துள்ளது.

இத்தீர்மானம் அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும், சிக்கன நடவடிக்கையும், இறைமையுள்ள மக்கள் மீது முக்கூட்டு ஆதிக்கம் செலுத்தப்படுவதும் முடிவிற்கு வரவேண்டும்.என்று அழைப்பு விடுத்துள்ளது.

பிரதம மந்திரி பெட்ரோ பாசோஸ் கோஹிலோ கோரிக்கையை நிராகரித்து, கடன் சந்தைகளுக்கு திரும்புதல் என்பது” “இருக்கும் பிணையெடுப்புத் திட்டத்தை நம்பகத்தன்மையுடன் செயல்படுத்தினால்தான் வெற்றிகரமாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.

உண்மையில், போர்த்துக்கீசிய, ஐரோப்பிய, சர்வதேச அமைப்புக்கள் கணித்தவற்றைவிட மந்தநிலை தீவிரமாக உள்ளது. இது இன்னும் மோசமடைந்து மதிப்பீடுகளைப் போல் இரு மடங்காகி 2013ல் 1.9% சுருக்கம் அடையும். தனியார்மயமாக்கப்பட்ட அரச சொத்துக்களில் இருந்து கூடுதல் வருவாய் வந்தும் கூட அரசகடன்கள் 7% அதிகம் உயர்ந்துவிட்டது. அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தங்க விதியான அரச கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% விடக் குறைவாக இருக்க வேண்டும் என்பதைப் பூர்த்தி செய்ய 2040வரை இயலாது. அதுகூட ஆண்டு வளர்ச்சி விகிதம் 3.3% என்றாவது இருந்தால்தான்.

பாசோஸ் கோஹிலோ போர்த்துக்கல் முற்றிலும் பத்திரச் சந்தைக் கடன்களை இந்த ஆண்டு பிற்பகுதியில் திருப்பிக் கொடுத்துவிட முடியும் என்றும் தனியாரிடமிருந்து நிதியினை கடனாகப் பெறக்கூடியதாக இருந்தால் முக்கூட்டிடம் இருந்து இன்னும் உதவி கேட்க வேண்டிய தேவை இராது என்ற கணிப்புக்களைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் நாளேடான Jomal de Negocios இப்பணி இயலாத ஒன்றாகும்என்று கூறியுள்ளது; சொத்துக்கள் நிர்வாக நிறுவனமான BlackRock யின் மைக்கேல் கிரவுட்ஸ்பேர்கர்மீண்டும் சந்தையை அவர்கள் அணுகினால் எனக்கு வியப்பு இராது, ஆனால் போர்த்துக்கல் உண்மையிலேயே அந்த திருப்புமுனையை அடைந்துவிட்டதா என இப்பொழுது கூறுவது முன்கூட்டிய செயல் ஆகும்என்று அறிவித்தார்.

கடந்த புதன் அன்று  கூட்டுநிறுவனங்களை பரிசோதிக்கும் அதிகாரிகள் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய போர்த்துக்கல் வங்கிகளையும் சோதனையிட்டு, அடைமானம் இன்னும் பிற கடன் கொடுக்கும் விகிதங்களில் முறைகேடுகள் குறித்து விசாரித்தனர். வங்கிகள் வெளிப்படையாகச் செயல்படுவை என்னும் கூற்றுக்களை இது தகர்த்தது.

சிக்கன நடவடிக்கையும் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களும் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவு ஆகும். 923,000 பதிவு செய்துள்ள வேலையற்றோரில், பாதிப்பேர் எந்த வருமான உதவிகளும் பெறவில்லை. கிட்டத்தட்ட இளைஞர்களில் 40% இனர் வேலை இல்லாமல் உள்ளனர். €485 குறைந்தப்பட்ச ஊதியம் என்பது அதன் மதிப்பில் 2011ல் இருந்து 5%க்கும் மேல் குறைந்துவிட்டது. மாதாந்த ஓய்வூதியம் $420 இன்று என்பது யூரோப்பகுதிச் சராசரியின் 43விகிதம்தான். போர்த்துக்கல்லின் குழந்தைகளில் கால்வாசிக்கும் மேலானவர்கள் இப்பொழுது வறுமையில் வாழ்கின்றனர்.

 எதிர்க்கட்சிகளும் தாராளவாதச் செய்தி ஊடகங்களும் அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகள் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. முக்கிய நாளேடான Público பின்வருமாறு  அறிவித்தது: “போர்த்துக்கல் ஒரு பின்னோக்கிசெல்லும் வட்டத்தில் நுழைந்துள்ளது: இதன் முடிவு புலப்படவில்லை. நிதிய இலக்குகள் அடையப்பட முடியாதவை. சமூக நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருக்கினறன; ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட மோசமானது, மக்கள் எதிர்காலம் சற்றே சிறப்பாக இருக்கும் என்று நம்புவதற்கு எக்காரணத்தையும் கொண்டிருக்கவில்லை.”

2011 ல் பிணையெடுப்பை போர்த்துக்கல்லுக்காக பேச்சுக்கள் நடத்திப் பெற்றுத் தந்த சோசலிஸ்ட் கட்சியின் (PS) தலைவர் அன்ரோனியோ ஜோஸே ஸெகுரோ முக்கூட்டிற்கு, “கடுமை, கட்டுப்பாடு இவற்றின் தேவை உள்ளது என்பது பற்றி எவ்விதகேள்வியும் இல்லை... ஆனால் மிக அதிகமான சிக்கன நடவடிக்கை எதிர்விளைவுகளைத்தான் கொடுத்தள்ளது மற்றும் இவையே மந்தநிலை சமூகச் சிதைவு இவற்றிற்கும் காரணிகளாக உள்ளன என்பதற்கு பல அடையாளங்கள் உள்ளன..” என்று எச்சரித்து எழுதியுள்ளார்.

ஸெகுரோ கூறும் நிவாரணம் கடனைத் திருப்பிக் கொடுக்க இன்னும் அதிக அவகாசம் தேவை மற்றும் குறைந்த வட்டிவிகிதம்  என்பவற்றிற்கு அப்பால் செல்லவில்லை.

இடது முகாம் (BE) உடைய நிறுவன உறுப்பினர் டானியல் ஒலிவேரா பரந்த கூட்டுக்கள் தேவை எனக்கூறி சமீபத்தில் கட்சியில் இருந்து இராஜிநாமா செய்தார். செல்வாக்குப் பெற்ற வார ஏடான Expresso வில் சனிக்கிழமை அணிவகுப்பிற்குப் பின், அவர் அமைதியான எழுச்சிக் காலத்தில் நாம் வாழ்கிறோம்; இது இன்னமும் இன்றுவரை நாம் அறிந்துள்ள அரசியல் அமைப்புமுறைக்குள் அடங்கியுள்ளது, ஆனால் இம்முறை அதன் இறுதி நாட்களில் உள்ளது.... நம்பகமான மாற்றீட்டை அமைக்க எதிர்கட்சி தோல்வி அடைந்தால், போர்த்துக்கல்லின் முக்கிய வலதுகள் சிதைய ஆரம்பித்தால், அக்கணத்தை முதலில் கைப்பற்றுபவர்கள் தீவிர ஈடுபாடு உடையவர்களாயினும், ஜனரஞ்சகவாதிகளாயினும், நகைச்சுவை நடிகர்களாயினும்,  ராஜதந்திரிகளாயினும், மற்றொரு அரசியல் நில அதிர்ச்சியைத்தான் தூண்டும்.”  என எச்சரித்துள்ளார்.

போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி (PCP) இதேமாதிரி முதலாளித்துவ ஒழுங்கிற்கு கீழிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல் குறித்துக் கவலை கொண்டுள்ளது. “ஏப்ரல் (1974) ஜனநாயக ஆட்சியைப் பாதுகாத்தல், குடியரசு அரசியலைமைப்பை பாதுகாத்தல் மற்றும் நாட்டுப்பற்றுடைய இடதுசாரி அரசாங்கம் அமைத்தல் ஆகியவைதேவை என்று அழைப்புக் கொடுத்துள்ளது.

முந்தைய வெகுஜன ஆர்ப்பாட்டங்களில்போல் இல்லாமல், போர்த்துக்கல்  கம்யூனிஸ்ட் கட்சி, இடது முகாம் இரண்டும் மார்ச் 2இல் அதிகம் குறிப்பிடத்தக்களவு காணப்பட்டன. நடக்கும் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அதை சோசலிஸ்ட் கட்சியின் பின்னால் திசைதிருப்புகின்றன

பழைய அதிகாரத்துவத்தினர் மீண்டும் வெளிப்படுவது என்பது அனைவரும் இணையவேண்டும்”, “தன்னாட்சியை ஆதரவளிப்போர் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கங்களான “The Scraping-By Generation” போன்றவற்றிற்குத் தலைமை தாங்கும் இதே போன்ற கருத்துக்களுக்கு ஆதரவு கொடுப்போர் மீது குற்றச்சாட்டு ஆகும். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கையை மக்கள் இறைமைக்கு அழைப்புவிடுவதன் மூலம் எதிர்க்கும் இவர்கள் உண்மையான சோசலிசக் கட்சியின் தேவை, வேலைத்திட்டங்கள் இவற்றையும் நிராகரித்து முதலாளித்துவம் சுமத்தும் சமூக எதிர்ப்புரட்சியை எதிர்கொள்ளும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும்  நிராயுதபாணியாக்குகின்றனர்.