|
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய
கிழக்கு :
சிரியா
அமெரிக்கா, நேட்டோ, சிரியாவில் தலையிடத் தயாராகின்றன
By Bill
Van Auken
20 March 2013
use this version to print | Send
feedback
ஐரோப்பாவில் உள்ள
உயர்மட்ட அமெரிக்கத் தளபதி,
செவ்வாயன்று செனட் குழுக் கூட்டத்தில் அமெரிக்க இராணுவமும் நேட்டோவும் சிரியாவில்
ஒரு நேரடி இராணுவ தலையீட்டிற்கான திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன என்று
கூறினார்.
பென்டகனின் ஐரோப்பிய
கட்டுப்பாட்டின் தலைவரான அட்மைரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ், செனட்டின் ஆயுத பணிக்குழு
விசாரணையில் பேசுகையில், அமெரிக்க இராணுவம் “பல வகை விருப்பத்தேர்வுகளை ஆராய்கிறது”
மற்றும்
“ஈடுபட
வேண்டும் என்றால் அதற்கான தயாரிப்புக்களையும் கொண்டுள்ளது” என்றார்.
“ஒரு
நச்சுத்தனமான உள்நாட்டுப் போர் முடிவதாகத் தெரியவில்லை” என அறிவித்த ஸ்டாவ்ரிடிஸ்,
“சிரியாவில் உள்ள எதிர்த்தரப்பு சக்திகளுக்கு உதவும் விருப்புரிமை,
அங்கு
நிலவும் முட்டுச்சந்தை தகர்க்க நேட்டோ உறுப்பினர்களால் தீவிரமாக
பரிசீலிக்கப்படுகிறது” என்று குழுவினரிடம் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் தகவல்
கொடுத்துள்ளது.
அமெரிக்காவும்
நேட்டோவும் விவாதங்கள் நடத்துகின்றன என்றும் அவற்றில் அரசாங்க-எதிப்பு
போராளிகளுக்கு “கடுமையான ஆயுதங்களை வழங்கி ஆதரவு” கொடுப்பதும், நேரடி இராணுவத்
தலையீட்டை செய்து “சிரியாவில் பறக்கக் கூடாது பகுதிகளை” நிறுவுதலும், “ஜனாதிபதி
பஷர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக ஆயுதத் தடைகளை சுமத்துவதும் அடங்கும்” என்றார்
அட்மைரல்.
குழுவின் தலைவர்
செனட்டர் கார்ல் லெவின் (மிச்சிகன்-ஜனநாயகக் கட்சி) இந்த விவாதங்களில்
சிரியாவின் வான்வழிப்
பாதுகாப்புக்களை அழிப்பது அடங்கியுள்ளதா எனக் கேட்டபோது, ஸ்டார்வ்ரிடிஸ், “ஆம்”
என்றார்; அதற்கு லெவின் “நல்லது” என விடையிறுத்தார்.
காப்பிடோல் ஹில்
(Capitol Hill) இல் இத்தகைய
கருத்துப் பறிமாற்றம்,
ஒரு
கடுமையான குறுங்குழுவாத உள்நாட்டுப் போரை சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு
பயன்படுத்த உபயோகிப்பது பற்றி மேற்கத்தைய சக்திகளின் தலையீடு பெருகுவதற்கான
அடையாளங்களை காட்டுகிறது.
பிரித்தானியாவும்,
பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகளின் அவசர கூட்டத்திற்கு இந்த வாரம்
அழைப்பு விடுத்துள்ளன; இது உறுப்பு நாடுகள் நேரடியாக மேற்கத்தைய ஆதரவுடைய
“எழுச்சியாளர்களுக்கு” ஆயுதங்களை அனுப்புவதற்கு இருக்கும் தடைகளை நீக்குவதற்கான
கோரிக்கைகளை ஆராயும்.
பிரதம மந்திரி டேவிட்
காமெரோன் லண்டனிலும், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் பாரிசிலும், ஐரோப்பிய ஒன்றியம்
தங்கள் கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றால் தாங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படத் தயார்
என்ற குறிப்பைக் காட்டியுள்ளனர். ஜேர்மனி,
சிரியாவில் தன் சொந்த தலையீட்டைச் செயல்படுத்துகையில், அது தடையை நீக்குவதற்கு
எதிர்ப்பைக் கொடுத்து, அது இரத்தக்களரியைப் பெருக்கும், அல்குவேடா பிணைப்புடைய
சக்திகளுக்கு ஆயுதம் கொடுக்கும் இடரை ஏற்படுத்தும் மற்றும் பிராந்தியம் முழுவதும்
வன்முறையைப் பரப்பும் என்று எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் வாஷிங்டன்,
அசாத்
எதிர்ப்புச் சக்திகளுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்க முயலும் பிரித்தானிய, பிரெஞ்சு
நடவடிக்கைகளுக்கு தன் ஆதரவை அடையாளம் காட்டியுள்ளது. திங்களன்று அமெரிக்க
வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி “அமெரிக்கா ஆயுதங்கள் அளிக்கும் மற்ற நாடுகளின்
முடிவிற்கு குறுக்கே நிற்கவில்லை, அது பிரான்ஸ் ஆயினும், பிரித்தானியா ஆயினும்
மற்றவையாயினும்” என்றார்.
உண்மையில் ஒபாமா
நிர்வாகம்,
சிரியாவின் ஆட்சி எதிர்ப்பு
போராளிகளுக்கு ஆயுதங்ளை கப்பல்களில் அனுப்பும் செயல்களில் நெருக்கமாக ஈடுபட்டு,
சிரிய துருக்கிய எல்லைக்கு அருகே
CIA
நிலையம் ஒன்றை கட்டார்,
ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள்,
துருக்கி,
சௌதி அரேபியா ஆகியவற்றில்
இருந்து வெள்ளமென வரும் ஆயுதங்கள்,
உதவிகளை ஒருங்கிணைக்க
நிறுவியுள்ளது.
இம்மாத முற்பகுதியில்
வாஷிங்டன்,
தான்
சொந்த “அதிக ஆபத்தற்ற” உதவியை இச் சக்திகளுக்கு அளிப்பதாக அறிவித்தது; அவற்றுள்
இராணுவ உணவுத் தேவைகள், மருத்துவ உதவிப் பொருட்கள் போன்றவையும் இன்னும் பிறவும்
அடங்கும். அதே நேரத்தில் அமெரிக்க சிறப்புப் படைகளின் துருப்புக்கள் அசாத்
எதிர்ப்புப் போராளிகளுக்கு ஜோர்டானில் பயிற்சி கொடுக்கின்றன. சிரிய அரசாங்கம் இந்த
வாரம் கிட்டத்தட்ட 300 அமெரிக்கப் பயிற்சி பெற்ற போராளிகள் சிரியாவிற்குள் ஜோர்டான்
எல்லை வழியாக நுழைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
சிரிய அரசாங்க
சக்திகளுக்கு எதிரான மோதல்களில் பெரும்பாலனவை இஸ்லாமியப் போராளிகளால்
நடத்தப்படுகின்றன; அவற்றுள் மிக முக்கியமானது ஜபாத் அல்-நுஸ்ரா அமைப்பு ஆகும். இது,
வாஷிங்டன் உத்தியோகபூர்வமாக வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று குறித்துள்ள அல்
குவேடாவுடன் பிணைப்பை கொண்டுள்ளது.
சிரிய அரசாங்கம்
செவ்வாய் காலை,
மேற்கத்தைய ஆதரவுடைய
எழுச்சியாளர்கள் இரசாயன ஆயுதம் கொண்ட ராக்கெட் ஒன்றை வடக்கு நகரான அலெப்போவிற்கு
அருகிலுள்ள கான் அல்-அசல்
கிராமத்திற்குள் செலுத்தி 25 பேரைக் கொன்று, 110 பேரைக் காயப்படுத்தியுள்ளது என்று
கூறியுள்ளது. சிரிய வெளியுறவு அமைச்சரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு “ஆபத்தான
விரிவாக்கத்தை” தாக்கி, இத்தகைய ஆயுதங்கள் ஆட்சிவிரோத சக்திகளுக்கு அவற்றின்
பயன்பாட்டை சிரிய அரசாங்கத்தின்மீது சுமத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது என்ற தன்
முந்தைய எச்சரிக்கைகளை நினைவுபடுத்தியது. இது மேற்கத்தைய தலையீட்டிற்கு ஒரு
போலிக்காரணத்தை அளிக்கும்.
அமெரிக்க ஜனாதிபதி
பாரக் ஒபாமா பலமுறை இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது அல்லது பயங்கரவாதிகளின்
கரங்களுக்கு அவை சென்றடைவது என்பது “உண்மையான ஆபத்துக் கோடு” என்று கூறியுள்ளார்;
இது சிரியாவில் அமெரிக்கா நேரடியாக தலையிட வகை செய்யும் என்றும் கூறியுள்ளார்.
அசாத் எதிர்ப்பு
சக்திகளின் செய்தித் தொடர்பாளர்,
இத்தாக்குதலுக்கு சிரிய
இராணுவத்தை குறைகூறினார். எனினும் ராக்கெட் முற்றிலும் அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கு பகுதிக்குள் இயக்கப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை;
இது சிரிய இராணுவ நிலை ஒன்றின் அருகே இறங்கியது. எதிர்ப்பு சக்திகளுடன் இணைந்து
செயற்படும் மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று, இறந்தவர்
எண்ணிக்கை 26 என்று கூறியது,
இதில் 16
பேர் இராணுவத்தினர் என்றும் கூறியுள்ளது. மூச்சுத் திணறல் பாதிப்பில் இருந்த
தாக்குதலில் காயமுற்றவர்கள் அலெப்போவிலுள்ள அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்த
ராய்ட்டர்ஸ் புகைப்படக்காரர் மக்கள் “தெருக்களில் மூச்சுத் திணறியவண்ணம் இருந்தனர்,
காற்றில் குளோரின் வாசனை அதிகமாக இருந்தது” என்றார்.
இந்நிகழ்வை ஒபாமா
நிர்வாகம் ஒதுக்கிவிட்டது; வெள்ளை மாளிகை நடைபெற்றதற்கு “சான்றுகள்” ஏதும் இல்லை
என்று கூறி விட்டது. வெளிவிவகார செயலக செய்தித் தொடர்பாளர்,
“நெறியான எதிர்ப்பு சக்திகளை இழிவுபடுத்தும் ஆட்சியின் தொடர்ச்சியான முயற்சிகளில்
ஒன்றுதான் இது என்றும் இது சிரிய மக்களுக்கு எதிராக அது நடத்தும் கொடுமைகளில்
இருந்து திசை திருப்பும் முயற்சியாகும்” என்றார்.
வேறுவிதமாகக் கூறினால்,
மேற்கத்தைய ஆதரவுடைய சிரிய சக்திகள் கொடுமைகளை நடத்தினால் அவை ஒதுக்கப்பட்டுவிடும்.
செவ்வாய் தாக்குதலைப்
பற்றிக் குறிப்பிட்ட சிரிய தகவல் மந்திரி ஒம்ரன் அல் ஜோபி இது “இஸ்தான்புல் இன்
அரசாங்கம் அறிவித்த முதல் செயலாகும்” என்று விவரித்தார்.
சிரிய தேசியக் கூட்டணி
என்னும் முஸ்லிம் சகோதரத்துவ ஆதிக்கம் கொண்ட முன்னணி, கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க
வெளிவிவகார செயலகத்தின் ஆதரவின்கீழ் ஒன்று திரட்டப்பட்ட அமைப்பு குறித்து, அது
திங்களன்று நடத்திய கூட்டம் பற்றி அவர் குறிப்பிட்டார். அக்கூட்டத்தில் மொத்தம் 63
பேர் இருந்தனர்; அவர்கள்,
சிரியாவை விட்டு 30
ஆண்டுகளுக்கு முன் நீங்கி அமெரிக்கக் குடியுரிமை பெற்று, தகவல் தொழில்நுட்பத்
துறையில் வணிக நிர்வாகியாக டெக்சாஸில் இருக்கும் காசன் ஹிட்டோ
(Ghassan Hitto)
என்பவரை “பிரதம மந்திரி”
என்று தேர்ந்தெடுத்துள்ளது, இப்பொழுது அந்த அணி “இடைக்கால
அரசாங்கம்” எனப்படுகிறது.
லிபியாவில் ஆட்சி
மாற்றத்திற்காக அமெரிக்க நேட்டோ போரைத் தொடர்ந்து லிபியாவின் பிரதம மந்திரியாக
அப்துர்ரஹீம் எல்-கீப்
(Abdurraheem el-Keib)
இருத்தப்பட்டதின் அடிச்சுவடிகளை ஹிட்டோ பின்பற்றுகிறார். ஹிட்டோவைப் போலவே கீப்பும்
அமெரிக்கக் குடிமகன், எண்ணெய்த் தொழிலுடன் நெருக்கமாக பிணைப்புக்களை உடையவர்,
லிபியாவை விட்டு 35 ஆண்டுகளுக்கு முன் வெளியேறியவர்.
இத்தகைய தன்னத்தானே
அரசாங்கம் என அறிவித்துக் கொண்ட அமைப்பு சிரியாவிற்குள் ஏதேனும் செல்வாக்கு
கொண்டிருக்கிறதா என்பது கணிசமான சந்தேகத்திற்குரிய விடயமாகும். நிலப்பகுதியில்
கட்டுப்பாட்டை கொண்டுள்ள பல இஸ்லாமியவாத போராளிக்குழுக்கள்,
சிரிய தேசியக் கூட்டணியில் உள்ள
வெளிநாட்டிற்கு சென்றுவிட்டவர்களுக்கு தலைவணங்கும் நோக்கத்தை அதிகம்
கொண்டிருக்கவில்லை. எனினும் இது,
வாஷிங்டனின் மேற்கத்திய தலையீட்டிற்கு நன்கு உதவும், உள்நாட்டுப் போரை நிறுத்த
விரும்பும் எத்தகைய பேச்சுக்களையும் தடைக்கு உட்படுத்தும், சிரிய மண்ணில் தான்
இருத்தப்படுவதற்கு நேரடி இராணுவ, நிதிய ஆதரவைப் பெறும் திறனையும் கொள்ளும்.
அமெரிக்க வெளிவிவகாரச்
செயலகத்தின் தலைமையால் நேரடியாக உருவாக்கப்படும் “சிரியப் புரட்சியின்”
உண்மையான தன்மையை இதைவிட வேறு எதுவும் தெளிவாக அம்பலப்படுத்தாது.
பிரான்சில் புதிய
முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியில் இருந்து பிரித்தானியாவில் சோசலிச தொழிலாளர்
கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு
வரை உள்ள போலி இடது குழுக்கள் என்னும் பிரிவுகளின் பிற்போக்குத்தன பங்கையும் இது
அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. இவை அனைத்தும் இந்த இழிந்த தந்திரப்
போக்குகளையும், இரத்தம் கொட்டும் குறுங்குழுவாத போர் ஆட்சி மாற்றத்திற்காக
நடப்பதையும் சமூகப் புரட்சி என்று சித்தரிக்க முயல்கின்றன.
ஏகாதிபத்திய தலையீட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்த மேலும்
சேவை செய்யயும் என்றும் கூறுகின்றன. |