சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Dying US army veteran denounces “illegal” Iraq War

மரணத் தறுவாயில் இருக்கும் அமெரிக்க மூத்த இராணுவ சிப்பாய் “சட்ட விரோத” ஈராக்கிய போரைக் கண்டிக்கிறார்

By David Walsh
22 March 2013

use this version to print | Send feedback

ஈராக்கிய போரின் மூத்த இராணுவ சிப்பாய் தோமஸ் யங், தற்பொழுது ஒரு குறைவான வாழ்நாள் நோயாளிக்கான பாதுகாப்பை (Hospice care) தன் மிசௌரி கன்சாஸ் நகர வீட்டிலேயே பெற்றுவருவபவர், ஒரு கடுமையான “கடைசிக் கடிதத்தை” ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் ஷேனேக்கு எழுதியுள்ளார்; அது Truthdig.com ல் வெளியிடப்பட்டுள்ளது.

2007 Body of War என்னும் ஆவணப்படத்தின் பொருளுரையாக இருப்பவர் இக்கடிதத்தை ஈராக்கிய போர் 10 ஆண்டு நிறைவு தினத்தில் என்னுடைய சக ஈராக்கிய போர் மூத்த சிப்பாய்கள் சார்பில் எழுதுகிறேன். ஈராக்கில் இறந்துவிட்ட 4,488 சிப்பாய்கள், மரைன்கள் சார்பிலும் காயமுற்ற நூறாயிரக்கணக்கான மூத்த சிப்பாய்கள் சார்பிலும் எழுதுகிறேன். அவர்கள் வாழ்வை அழித்துவிட்ட, உளரீதியான, உடல்ரீதியான அக்காயங்களின் சார்பில் எழுதுகிறேன். நானும் தீவிர காயமுற்றவர்களில் ஒருவன். சதர் நகரம் அருகே 2004ல் எழுச்சித் தாக்குதலில் செயலிழந்தேன். என் வாழ்வு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது”. என விளக்கியுள்ளார்.

யங் மேலும் எழுதுவதாவது: “பெரும் அதிர்ச்சியையும், பார்த்ததையும் ஒட்டி தங்களையே இகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மூத்த போர் சிப்பாய்கள் சார்பில் எழுதுகிறேன். அவர்கள் ஈராக்கில் கண்டது, செய்தது ஆகியவை அவர்களை தற்கொலைக்கு வகை செய்துள்ளது, சராசரியாக நாளொன்றிற்கு ஒரு சிப்பாய் வீதம் தீவிர பணிபுரிவோர் மற்றும் மரைன்களில் தற்கொலை செய்து கொள்பவர் சார்பில் எழுதுகிறேன். இறந்து விட்ட 1 மில்லியன் ஈராக்கியர்கள் சார்பிலும், கணக்கிலடங்கா காயமுற்ற ஈராக்கியர் சார்பிலும் எழுதுகிறேன். எங்கள் அனைவர் சார்பிலும் இதை எழுதுகிறேன்—உங்கள் போர் விட்டுச் சென்றுள்ள சிதைந்தவர்கள் சார்பில் எழுதுகிறேன்; முடிவிலா வேதனை, துயரத்தில் தங்கள் வாழ்வைக் கழிக்க இருப்பவர்கள் சார்பில் எழுதுகிறேன்.”


Body of War (2007) தோமஸ் யங் தலமையகத்திற்கு செல்கிறார்

புஷ்ஷையும், ஷேனையையும் விளித்து, யங் எழுதுகிறார்: “உங்கள் பொய்கள், திரித்தல்கள், செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் இருக்கும் தாகம் இவற்றின் கொடூரமான, அறநெறி விளைவுகளை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டீர்கள் என நினைத்து இதை நான் எழுதவில்லை. இதை நான் எழுதுவதற்குக் காரணம், நான் இறப்பதற்கு முன் நானும் என்னுடைய சக மூத்த சிப்பாய்கள் நூறாயிரக்கணக்கானவர்களும், என்னுடைய சக குடிமக்கள் மில்லியன் கணக்கானோர்களும், இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் ஈராக்கிலும் மத்திய கிழக்கிலும், நீங்கள் யார், என்ன செய்துள்ளீர்கள் என்பதை நன்கு அறிவார்கள் என்பதை தெளிவுபடுத்ததான் முயல்கிறேன்.” Body of War, Phil Donahue, Ellen Spiro இன் இணை இயக்கத்தில், யங்கின் கதையை அவருடைய கொடூரமான மருத்துவ நிலையை, ஈராக் போருக்கு அவருடைய தொடர்ச்சியான எதிர்ப்பை விவரிக்கிறது. செப்டம்பர் 2011 தாக்குதல்களுக்குப் பின்னர்தான் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்துள்ளார், ஏனெனில் அவருடைய சமீபத்திய கடிதத்தில் எழுதியுள்ளபடி, “எமது நாடு தாக்கப்பட்டுள்ளது.”


Body of War (2007): ஈராக் போரில் பிள்ளைகளை இழந்துவிட்ட தாய்மார்கள் தோமஸ் யங்கை வாஷிங்டன் டிசி. சமாதான அணிவகுப்பில் தொடுகின்றனர்;

ஏப்ரல் 2004ல் ஈராக்கில் போரில் ஈடுபடத் தொடங்கிய ஐந்தே நாட்களுள், பாக்தாத் சதர் நகரத்தில் ஒரு ஹும்வீயி (Humvee) வண்டியில் செல்கையில், மேலிருந்து ஒரு எழுச்சியாளரால் இளம் சிப்பாய் சுடப்படுகிறார். அத் தோட்டா யங்கின் முதுகெலும்பை துண்டித்து விடுகிறது. Body of War தயாரிக்கப்பட்டபோது, “அவர் ஒரு சக்கர நாற்காலியில் கூட இருக்க முடியாத நிலையும் அதையொட்டிய இடர்களை அனுபவிக்கவும் நேர்ந்தது. அவருடைய உடல் வெப்பத்தை தக்க வைக்க முடியவில்லை. மயக்கம் பல நேரங்களில் வந்தது, சிறுநீர்ப்பாதை தொற்றுக்கள் மற்றும் பாலியல் செயலற்ற தன்மை ஆகியவையும் இருந்தன.” என உலக சோசலிச வலைத் தளம் தெரிவித்திருந்தது.

2008ல் உயிரைத்தாக்கும் மூளைக் காயத்திற்குப்பின், இப்பொழுது 33 வயதில் இருக்கும் யங், Truthdig உடைய Chris Hedges இடம் கூறினார்: “என் உடலின் மேற்பகுதியில் சிறப்புச் செயல்களையும் வலிமையையும் நான் இழந்துவிட்டேன். எனவே என்னால் என்னையே சுடவும் முடியாது, அல்லது கூடுதலாக உட்கொள்ள மாத்திரை பாட்டிலையும் திறக்க முடியாது.” ஹெட்ஜெஸிடமும் அவர் கூறினார்: “இறுதியில் நான் உணர்ந்தேன்.... உணவருந்துவதை நிறுத்தி, மங்கிப் போய்விடவாவதுஒரு குறைவான வாழ்நாள் நோயாளிக்கான  பாதுகாப்பு (Hospice care) தேவை என்ற முடிவை எடுத்தேன்”.

Donahue-Spiro ஆவணப் படத்தில், யங் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் பல காட்சிகள் உள்ளன; மற்ற திறனிழந்த மூத்த சிப்பாய்களை அவர் அவற்றில் சந்திக்கிறார்; ஈராக்கில் இறந்து விட்ட சிப்பாய்களின் குடும்ப உறுப்பினர்களையும் சந்திக்கிறார். ஆகஸ்ட்  2005ல் யங் அப்பொழுதிருந்த அவருடைய மனைவியுடன், டெக்ஸாஸில் கிராபோர்டில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் பண்ணைக்கு வெளியே இருந்த சிண்டி ஷீஹன் உடைய எதிர்ப்பு முகாமான Camp Casey க்கு பயணித்தார்.

துரதிருஷ்டவசமாக திரைப்படத்தை தயாரிப்பதில் இயக்குனர்களுடைய உந்துதல்கள் தூய்மையாக இல்லை. Body of War ஜனநாயகக் கட்சிக்கும் அதன் போர் எதிர்ப்பு கருத்துக்கள் எனக் கூறப்படுவதற்கும் இழிந்த தளமாக முடிவடைகிறது. திரைப்படத்தின் உட்குறிப்பான நாயகன் மேற்கு வேர்ஜீனியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் முன்னாள் செனட்டர் ராபர்ட் பைர்ட் ஆவார், இவர் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் தோன்றுகிறார்.

Body of War தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நேரத்தில் உத்தியோகபூர்வ போர் எதிர்ப்பு இயக்கம், முன்னாள் தொலைக்காட்சி உரையாடல்களை நடத்தும் டோனஹ்யூ போன்றோரை அடக்கியிருந்தது, அது தன்னையே கலைத்துக் கொள்ளும் வழிவகையில் இருந்தது. நவம்பர் 2006ல் ஜனநாயகக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதுடன் கட்சியின் பல முக்கிய நபர்களிடம் இருந்து புஷ் மீது பெரிய குற்றவிசாரணை இராது என்ற உத்தரவாதங்களை வெளிப்படுத்தியது; ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்கான நிதியங்கள் தொடரும், என்பதும் இவ்வழிவகையில் தீவிரமாயிற்று. பாரக் ஒபாமா அதிகாரத்திற்கு வந்தது அவற்றை முழுமைப்படுத்தியது.

ஈராக் போர் “அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய மூலோபாயத் தவறு ஆகும்” என்னும் கருத்திற்கு யங் உடன்படுகிறார். தன்னுடைய கடிதத்தில், தான் ஆப்கானிஸ்தானில் “9/11 தாக்குதல்களை நடத்திய சக்திகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போரிடும்போது” காயப்பட்டிருந்தால் இதே விரக்தியை உணரமாட்டேன் என்று கூறினார்.

எப்படி இருப்பினும், இரத்தக்களரியில் களிக்கும் ஏகாதிபத்திய கட்சியான ஜனநாயகக் கட்சியில் இருந்து எவரும், இதயத்தில் இருந்து வரும் கீழ்க்கண்டவற்றைப் போன்ற உண்மையான சொற்களைக் கூறமாட்டார்கள். “ஈராக்கியர்களை விடுவிக்க நான் இராணுவத்தில் சேரவில்லை; அல்லது கற்பனையான பேரழிவு ஆயுத நிலையங்களை மூடுவதற்கும் அல்ல; அல்லது நீங்கள் இழிந்த முறையில் அழைக்கும் பாக்தாத்திலும் மத்திய கிழக்கிலும் “ஜனநாயகத்தை” மலரச் செய்வதற்கும் அல்ல. ஈராக்கை மறுகட்டமைக்க நான் இராணுவத்தில் சேரவில்லை; அந்த நேரத்தில் நீங்கள் ஈராக்கின் எண்ணெய் வருமானங்களில் இருந்து அதற்குப் பணம் கிடைக்கும் என்றீர்கள். மாறாக, இப்போர் அமெரிக்காவிற்கு 3 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் செலவு கொடுத்துள்ளது. தவிர்க்க முடியாத போரை நடத்த உறுதியாக இராணுவத்தில் சேரவில்லை. தவிர்க்க முடியாத போர் என்பது சர்வதேச சட்டத்தின்கீழ் சட்டவிரோதப் போர். ஈராக்கில் ஒரு சிப்பாயாக இருந்த வகையில், இப்பொழுது எனக்கு உங்கள் முட்டாள்தனம் மற்றும் குற்றங்களில் நான் உடந்தையாக இருந்தது தெரிகிறது.”

யங் தன்னுடைய உடல் “வலி கொல்லிகளால் நிறைந்துள்ளது, என்னுடைய வாழ்வு  நழுவிக் கொண்டிருக்கிறது” என்று விளக்குகிறார், “நான் உட்பட நூறாயிரக்கணக்கான மனிதர்கள், குழந்தைகள், உங்களால் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பேராசைக்காக, சௌதி அரேபியாவிலுள்ள எண்ணெய் ஷேக்குகளுடன் உங்கள் நட்பிற்காக, உங்கள் பேரரசு என்னும் பைத்தியக்காரத்தன விழைவுளுக்காக தியாகம் செய்யப்பட்டுள்ளனர்.”

தன்னுடைய கடிதத்தின் முடிவில் யங் எழுதுகிறார்: “பல இயலாத மூத்த சிப்பாய்களை போல், நானும் மூத்தோருக்கான நிர்வாகம் அளிக்கும் போதுமானதற்ற, பல நேரமும் முறையற்ற பாதுகாப்பினால் இடர் உறுகிறேன். பல மூத்த சிப்பாய்களைப்போல், நானும் எமது மனக்காயங்கள் உங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல, ஒருவேளை எந்த அரசியல்வாதிக்கும் பொருட்டு அல்ல என்பதை உணர்கிறேன். நாங்கள் பயன்படுத்தப்பட்டோம். நாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டோம். நாங்கள் இப்பொழுது கைவிடப்பட்டுவிட்டோம். ... என்னுடைய தீர்ப்பு நாள் இப்பொழுது வந்துள்ளது. உங்களுடையதும் வரும். நீங்களும் விசாரணைக்கு உட்படுவீர்கள் என நம்புகிறேன்.”

யங்கின் கடிதமும் நிலமையும் ஈராக் ஆப்கானிஸ்தான் போர்களின் இழிவான பெருந்துயரம் குறித்துக் கூறுகின்றன; நூறாயிரக்கணக்கான, ஒருவேளை மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கைகள் வீணடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன; உலகின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக தியாகம் செய்யப்பட்டுவிட்டன. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் “இறுதித் தீர்ப்பு நாள்” உண்மையில் வந்துகொண்டிருக்கிறது.

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்.

Body of War: a wounded veteran and, disgracefully, a defense of the Democrats

A remarkable film about the Iraq war