World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Union imposes bank bailout on Cyprus

ஐரோப்பிய ஒன்றியம் சைப்ரஸ் மீது வங்கிப் பிணை எடுப்பைச் சுமத்துகிறது

By Jordan Shilton and Chris Marsden
26 March 2013

Back to screen version

சைப்ரஸ் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) நேற்று அதிகாலை உடன்பாடு ஒன்றைக் கண்டன; இதன்படி சைப்ரஸில் இருக்கும் வங்கிகளுக்கு பிணையெடுப்பு செய்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோடு சைப்ரஸில் அரச திவால்நிலையும் தவிர்க்கப்படுகிறது.

பிணை எடுப்புத்தொகை தீவு நாட்டின் பொருளாதார பேரழிவிற்கும் ஐரோப்பிய நிதிய உயரடுக்கின் நலன்களுக்கும் விதிகளை நிர்ணயிக்கிறது. நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பாதியைக் கொண்டுள்ள சைப்பரஸின் நிதித்துறை, உடனடியாக பாதிப் பகுதியாகக் குறைக்கப்படும். இரண்டாவது பெரிய வங்கியான லைக்கி வங்கி மூடப்படும், அதன் ஐரோப்பிய மத்திய வங்கிக்குக் கொடுக்க வேண்டிய கடன்கள் சைப்ரஸ் மத்திய வங்கியால் கொடுக்கப்படும். மேலதிக இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை ஆகும்; ஏனெனில் சைப்ரஸில் வங்கி அமைப்புமுறை பிற யூரோப் பகுதி நாடுகளின் வங்கிகளுக்கு மாற்றப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகளும் சைப்ரசின் ஆளும் உயரடுக்கின் நிதிய வழக்கங்களும் இணைந்து உழைக்கும் மக்களின் மீது பெரும் தாக்குதல்களுக்கு பாதை அமைத்துள்ளன. வேலையின்மை 14 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கையில், தவிர்க்க முடியாமல் வங்கித்துறை ஆயிரக்கணக்கான வேலைகள் இழப்பிற்கு உட்படும்; இத்துறைதான் சைப்ரசில் முக்கிய வேலை கொடுக்கும் அமைப்பாக இருந்தது; இதைத் தவிர மறுகட்டமைக்குட்பட்ட நிறுவனங்களும் தனியார் பணி நிறுவனங்களும் இருந்தன.

சைப்ரஸ் மக்களால் பெரிதும் எதிர்க்கப்படும் இப்பிணை எடுப்பு, சைப்ரஸ் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி சுமத்தப்படும். இந்த இலக்கை அடைவதற்கு, வங்கிச் சேமிப்புக்கள் மீது ஒரு தீர்வு சுமத்தும் முதல் திட்டம் சைப்ரஸின் பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது; இறுதி உடன்பாட்டில் இருந்தும் அகற்றப்பட்டது. புதிய திட்டம் 100,000  யூரோக்களுக்கும் மேல் இருக்கும் அனைத்துச் சேமிப்புக்களும் முடக்கப்படும், இது பிணை எடுப்பு நிதிக்கு உதவ என்று கூறுகிறது. சேமிப்பாளர்களும் லைக்கி வங்கியின் பங்குதாரர்களும் தங்கள் சொத்துக்கள் “ஒரு மோசமான வங்கிக்கு” மாற்றப்படுவதைக் காண்பார்கள்; அநேகமாக அனைத்தையும் இழப்பார்கள். 

இந்த நடவடிக்கைகளும், தனியார்மயத் திட்டம் ஒன்றும், வரி அதிகரிப்புக்களும் 7 பில்லியன் யூரோக்களை திரட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 17 பில்லியன் யூரோக்களை பிணை எடுப்புக்கு பங்களிக்க சைப்ரஸ் கேட்டு வருகிறது.

ஞாயிறன்று இறுதிச் சுற்று பேச்சுக்களுக்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சைப்ரஸின் பொருளாதாரத்தின் மீது பொருளாதார சர்வாதிகாரம் ஒன்றை நிறுவுதல் தேவை என வலியுறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகளில், பெரிய அளவு மூலதன வெளியேற்றத்தைத் தடுத்தல், வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் தடைகள், ATM இயந்திரங்களில் இருந்து எடுக்கக்கூடிய பணத்தின் அளவைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். பாராளுமன்றம், வெள்ளி இரவு கடைசிப் பகுதியில் இயற்றிய ஜனநாயக விரோதக் கட்டுப்பாடுகளில் மத்திய வங்கி தேவையான நடவடிக்கைகளை “பொது ஒழுங்கு, பாதுகாப்பு” ஆகியவற்றிற்காக எடுக்கும் விதியும் அடங்கியுள்ளது.

முக்கிய கோரிக்கையானது லைக்கி வங்கி மூடப்பட வேண்டும் என்பதாகும். இதைத்தவிர, ஜேர்மனி மற்றும் IMF அதிகாரிகள் அதிக தீர்வை பெரிய, முக்கியமாக ரஷ்ய சேமிப்பாளர்கள் வைத்திருப்பதின் மூலம் எடுக்க வேண்டும் என்று கோரினர். இத்திட்டத்தை சைப்பரஸ் ஏற்க வேண்டும், இல்லாவிடின், நாணய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் எனக்கூறப்பட்டது. ஞாயிறு பிற்பகுதியில் வெளிவந்த அறிக்கைகள் ஜனாதிபதி நிகோஸ் அனஸ்டாசியடெஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிடிவாதமான கோரிக்கைகளை எதிர்கொண்ட நிலையில் இராஜிநாமா செய்யத் தயார் என்றார்.

முக்கூட்டுடன் --ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம்-- உடன்பாட்டைத் தொடர்ந்த முந்தைய தகவல்கள் கலவையான தகவல்களைத்தான் கொடுத்தன.

100,000 யூரோக்களுக்கு மேல் சேமித்துள்ள முதலீட்டாளர்களை இலக்கு வைக்கும் நடவடிக்கை, ஐரோப்பிய முதலாளித்தவத்திற்கு உகந்தது; ஏனெனில் இது நடுத்தர அளவுடைய சேமிப்பாளர்களை தங்கள் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்ற அனுமதிக்காது, தீவின் மீது ரஷ்ய செல்வாக்கை வலுவிழக்கச் செய்து விடும்.

மற்ற வரிச்சலுகை சொர்க்க இடங்களான ஆண்டோரா போன்றவற்றில் இருக்கும் வங்கியாளர்கள், சைப்ரஸை விட்டு செல்லும் ரஷ்ய வணிகர்களை வரவேற்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பிணை எடுப்பின் உடனடி இலக்கு சைப்ரஸ் என்றாலும், நிதிய நெருக்கடியை முகங்கொடுக்கும் வேறு எந்த நாடும் முக்கூட்டின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், யூரோப் பகுதிக்குள் உறுப்பினராக இருக்க அனுமதிக்கப்படமாட்டாது என்ற தெளிவான தகவலை ஆளும் உயரடுக்கு கொடுக்கிறது.

யூரோக் குழுவின் தலைவர் Jeron Dijsselbloem, சைப்ரஸ் பிணை எடுப்பிற்கு, மீதமுள்ள வங்கிச் சேமிப்பாளர்கள் மீது தீர்வு ஒன்றை அறிவித்துள்ளது, யூரோப் பகுதியில் பிற நாடுகளுக்கும் ஒரு மாதிரியாக இருக்கும் என்றபோதும் கண்டத்தின் சந்தைகள் சரியத் தொடங்கின. யூரோப் பகுதி நெடுகிலும் வங்கி அமைப்புமுறை, ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி, கிரேக்கம் உட்பட, திவால் விளிம்பில் நிற்கையில், அவசரக்கால பிணை எடுப்பில் நிலைத்திருக்கையில் வந்துள்ளது.

Dijsselbloem உடைய கருத்துக்கள் ஒரு வினாவை எழுப்புகின்றன: இந்நாட்டு வங்கிகளில் இருக்கும் சேமிப்பாளர்களுடைய சேமிப்பும் இந்நாடுகளின் வங்கிகளின் குற்றத்தன்மைக்காக கொள்ளை அடிக்கப்படுமா?

அவ்வாறு நடக்கலாம் என்று Djsselbloem குறிப்புக் காட்டினார். வங்கியில் ஆபத்து இருந்தால், நமது முதல் கேள்வி, சரி, வங்கியின் அதிகாரிகளாகிய நீங்கள் அது பற்றி என்ன செய்யப்போகிறீர்கள்? உங்களுக்கு மறுமூலதனம் பெற என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றார் அவர்.

வங்கி அதைச் செய்யவில்லை என்றால், நாம் பங்குதாரர்கள், பத்திரக்காரர்களிடம் கேட்போம், வங்கிக்கு மறுமூலதனத்திற்கு பங்களிப்புக் கொடுங்கள் என, தேவையானால் காப்பீட்டிற்கு உட்படாத சேமிப்பு வைத்திருப்போரிடமும்.”

“இதன் விளைவுகள் அது வங்கியின் முடிவாகப் போகலாம், அத்தகைய அணுகுமுறையைத்தான் நெருக்கடியின் சூட்டில் இருந்து தப்பியுள்ள நாம் எடுக்க வேண்டும்” என்று அவர் எச்சரித்தார்.

இது ஐரோப்பிய நிதியப் பிரபுத்துவத்திற்கு தொழிலாளர்கள், சிறு சேமிப்பாளர்களின் சேமிப்புக்களைக் கொள்ளையடிக்கும் உரிமை போல் ஆகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்திற்குள் எவருடைய சேமிப்புக்கள் கொள்ளையடிக்கப்படலாம் என்ற கடுமையான போட்டிகளுக்கு அரங்கையும் அமைக்கும்.

பைனான்சியல் டைம்ஸில் தன்னுடைய கருத்துக்களை “ஐரோப்பிய பகுதி உடைவு இன்னும் நெருக்கத்திற்கு சென்றுள்ளது” என்னும் தலைப்பில் வொல்ப்காங் முன்சௌ எழுதியுள்ளார்.

சந்தையை எதிர்கொண்டவிதம், ஸ்பெயின், இத்தாலியில் கிட்டத்தட்ட 2.5% சரிவு என்பது ஐரோப்பாவில் பொருளாதார நிலைமை எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதுவும் சரிவுகளின் வெளிப்படையான தூண்டுதல் சைப்ரஸ் என இருக்கையில்; இந்நாட்டின் பொருளாதாரம் மிகச் சிறியது, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே குறைவான விகிதத்தில் இருப்பது.

ஐந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஸ்பெயின் அரசாங்கமும் முதலீடு செய்தவர்கள் மீது பெரும் இழப்புக்களை சுமத்த உள்ளது என்னும் தகவல்கள் வந்துள்ள நிலையில், பாங்கியாவின் பங்குதாரர்கள் கிட்டத்தட்ட அழிவிற்கு உட்படுவர், மற்றவர்கள் 60% இழப்புக்களை முகங்கொடுப்பர், யூரோ மற்றும் ஐரோப்பியப் பங்குகள் இரண்டும் சரிந்தன. பல இத்தாலிய வங்கிகள் 5% சரிவிற்குப் பின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தின.

ஐரோப்பிய நிறுவனங்களுக்கு எதிராக கிரெம்ளின் பதிலடி நடவடிக்கைகளை எடுக்குமா என்பது பற்றி ஊகங்கள் வந்துள்ளன. முன்னாள் கிரெம்ளின் ஆலோசகரான அலெக்சாந்தர் நெக்ரசோவ் “பின் மாஸ்கோவும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தண்டிக்க முயலும். பல பெரிய ஜேர்மனிய நிறுவனங்கள் ரஷ்யாவில் செயல்படுகின்றன.”

“என்னுடைய கருத்தில், ஏற்கனவே திருடப்பட்டதைத் திருடுவது என்பது தொடர்கிறது” என்று ரஷ்ய பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வெடேவ் அறிவித்தார். தீவின் மீது செல்வாக்கைத் தொடர்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அப்படியும்கூட தன் அரசாங்கத்தை சைப்ரசிற்கு 2011ல் அளித்த பிணை எடுப்பை மறுகட்டமைக்க பேச்சுக்கள் நடத்த உத்தரவிட்டார்.”

இரண்டு புவி-மூலோபாயப் பிரச்சினைகள் இம்மோதலில் பணயத்தில் உள்ளன.

இதுவரை பரிசோதிக்கப்படாத எரிவாயு விநியோகங்கள், சைப்ரஸ் கடலோரப் பகுதியில் இருந்து, 2018-2019 ஐ ஒட்டித்தான் எடுக்கப்படும். ஆனால் அவற்றை பெறுவதற்கான மோதல்கள் இப்பொழுது பெரிய ஆய்வில் உள்ளன. சைப்ரஸை முக்கூட்டு பிணை எடுத்தது, இந்த இருப்புக்கள் மீது அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் இயக்கக் கருவியாகப் பயன்படுத்தப்படும். இது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐரோப்பியச் சந்தையில் எரிவாயு விநியோக அளிப்பிற்கு ஒரு மாற்றீட்டைத் தோற்றுவிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த மூலோபாயம் ஆபத்தானது, ஏனெனில் அது மாஸ்கோவுடன் மோதல்களைத் தூண்டும். எரிவாயு வயல்கள் மோதல்களுக்கு உட்பட்ட நீர்நிலைகளில் உள்ளன; அவை துருக்கியாலும் உரிமை கொண்டாடப்படுகின்றன. “துருக்கிய” நீர்நிலைகளில் எரிசக்தி இருப்புக்களை பயன்படுத்தும் எந்த முயற்சியும் போர் நடவடிக்கைக்கு ஒப்பாகும் என்று அங்காரா எச்சரித்துள்ளது.

இரண்டாவதாக ரஷ்யாவிற்கு சைப்ரஸின் துறைமுகமான லிமசோலை ஒரு கடற்படைத் தளமாக அணுகும் வாய்ப்பு மறுக்கப்படுவது ஒரு அரசியல் கட்டாயமாகும். ரஷ்யா இப்பொழுது சிரியாவில் டார்டஸைத் தளமாக மத்தியதரைக்கடலை அணுகுவதை நம்பியுள்ள நிலையில், ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஆட்சியை அகற்றும் நடவடிக்கைகள், பின் ஈரானைத் தாக்குதல் என்பவை மத்திய கிழக்கின் எண்ணெய் செழிப்பின் மீது மோதலுக்கு இடமில்லாத மேலாதிக்கத்தை அமெரிக்க தலைமையில் நிறுவும் முயற்சி ஆகும்; இதற்கு மாஸ்கோவில் இருந்து எந்தவித எதிர்த்தாக்குதலும் ஒதுக்கப்பட வேண்டும்.