சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Democracy and the debacle in Iraq

ஜனநாயகமும் ஈராக்கிய தோல்வியும்

Joseph Kishore
23 June 2014

Use this version to printSend feedback

கடந்த இரண்டு வாரங்களில் ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க வெளியுறவு கொள்கை அமைப்பும் மத்திய கிழக்கு முழுவதிலும் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவற்காக ஈராக்கிய நெருக்கடியைச் சுரண்டுவதில் வேகமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்க ஆளும் வர்க்கம் சிரியாவிற்கு எதிராக வான்வழி தாக்குதல்களை நடத்தவும் மற்றும் ஈரானின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் சூழ்ச்சிகளையும் திட்டமிட்டு வருகின்ற நிலையில், நூற்றுக் கணக்கான அமெரிக்க இராணுவ "ஆலோசகர்கள்" மீண்டும் ஈராக்கிற்குத் திரும்பி வருகின்றனர்.

அரசியல் ஆளும்தட்டிடம் இருந்து வெளிவரும் வெறுப்பார்ந்த பாசாங்குத்தனம் நிரம்பி பிரச்சாரங்கள் ஊடகங்களினால் விமர்சனமின்றி பிரதிபலிக்கப்படுகின்ற நிலையில், அவை அருவருப்பூட்டபவகையாக உள்ளன. உலகளாவிய அதிகாரத்தைப் பின்தொடர்வதன் மீதான தந்திரோபாயங்களில் பிளவுபட்டிருந்தாலும் கூட, அரசு மற்றும் இராணுவ அமைப்புகளின் வெவ்வேறு கன்னைகள், குறைந்தபட்சம், எதற்கும் அவை பொறுப்பில்லை என்ற ஒரு விடயத்தில் ஒன்றுபட்டு உள்ளன.

அமெரிக்க கூட்டாளிகளோடு சதி ஆலோசனை செய்யவும், விரோதிகளை அச்சுறுத்தவும் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்ட ஒபாமாவின் வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, “லிபியாவில் என்ன நடந்து வருகிறதோ அதற்கு அமெரிக்கா பொறுப்பல்ல, அல்லது இன்று ஈராக்கில் என்ன நடந்த வருகிறதோ அதற்கும் அது பொறுப்பாகாது,” என்று கெய்ரோவில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்து பொதுவாக நிலவும் உணர்வை தொகுத்தளித்தார்இங்கே அவர் அமெரிக்க ஆதரவிலான எகிப்திய சர்வாதிகாரி அப்தெல் பதாஹ் அல்-சிசியையும் சந்தித்தார்

கெர்ரியின் வரலாற்று பொருள் விளக்கத்தின்படி, ஈராக்கியர்கள் அவர்களின் சொந்த அரசாங்கத்தைக் கொண்டிருக்க" அமெரிக்க இராணுவம் "ஈராக்கியர்களுக்காக பல ஆண்டுகள் இரத்தம் சிந்தியுள்ளதோடு கடுமையாக உழைத்திருக்கிறதாம். அமெரிக்கா சுயநலமின்றி ஜனநாயகத்தை ஊக்குவித்த அதேவேளையில், ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசு "சிரியாவிலிருந்து எல்லை தாண்டி இருக்கிறது, என்றார்.

கெர்ரி தொடர்ந்து கூறுகையில், ISIS சமூகங்களைத் தாக்கி உள்ளதோடு, அவர்கள் அது விரும்பும் அரசாங்கத்தைக் கொண்டிருக்க ஈராக்கின் சக்தியைச் சிதைப்பதன் மூலமாக முன்னேறி வருகிறார்கள், என்றார்.

எப்போதும் போல அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் யாருக்கும் எதுவும் தெரியாததைப் போல மற்றும் விளைவுகளே இல்லாமல் அப்பட்டமான பொய்களைச் சுற்றி திரிக்க முடியும் என்பதைப் போல பேசுகிறார்கள். ஆனால் சம்பவங்களைக் குறித்த ஊடக செய்திகளிலே கூட உண்மைகள் அவற்றின் வழியைக் கண்டுள்ளதோடு, கெர்ரியின் சொல்லாடல்களோடு அவை முரண்படுகின்றன.

முதலாவதாக, கடந்த சில வாரங்களாக ஈராக்கிய அரசு எதனால் சிதைந்து போயிருக்கிறதோ அந்த வேகத்தைக் கண்டு அமெரிக்கா அதிர்ச்சி அடைந்திருக்கின்ற நிலையில், அது எவ்விதத்திலும் ISISக்கு பரிச்சயமற்ற ஒன்றல்ல. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான ஏகாதிபத்திய-ஆதரவு கிளர்ச்சியின் பாகமாக அமெரிக்கா மற்றும் அதன் ஏதேச்சதிகார வளைகுடா பங்காளிகளிடம் இருந்து அந்த இஸ்லாமிய அடிப்படைவாத குழு நிதியுதவிகளைப் பெற்றுள்ளது. மீண்டுமொருமுறை, அமெரிக்கா அது எதை விதைத்ததோ அதேயே அது அறுவடை செய்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, ஈராக் அரசாங்கத்தின் மீதும் அதன் தற்போதைய பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கி மீதும் ஈரான் செலுத்தும் செல்வாக்கை குறைக்கும் என்றளவிற்கு ஈராக்கில் ISISஇன் முன்னேற்றம் நிச்சயமாக அமெரிக்க (மற்றும் இஸ்ரேலிய) ஆளும் வர்க்கங்களின் பிரிவுகளால் ஒரு நேர்மறையான அபிவிருத்தியாக பார்க்கப்படுகிறது.

கெர்ரியின் மறுப்புகளுக்கு இடையேயும், அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஒரு பொதுவான உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தும் பேரழிவுக்கு அமெரிக்காவே முதன்மையாக பொறுப்பாகிறது என்பது உலகம் முழுவதும் புரிந்து கொள்ளப்பட்டதாகும்.

புஷ் நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கைக்குப் பின்னால் இருந்த குற்றத்தன்மை மிக்க சூத்திரதாரியான முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷென்னியின் அரசியல் மீளெழுச்சியானது, அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்கள் மீது எந்தவொரு கணக்குவழக்கும் முற்றிலுமாக இல்லாமல் இருப்பதைக் கடந்த வாரத்தில் மிகத்தெளிவாக காட்சிக்கு கொண்டு வந்துள்ளது.

ஈராக் மீதான மறுபடையெடுப்புக்கு தூண்டுதல் அளிக்க ஷென்னி ஞாயிறன்று ABCஇன் ஜோர்ஜ் ஸ்டீபனோபவுலஸ் உடன் இந்த வாரம்" எனும் நிகழ்ச்சியில் தோன்றினார். ஒபாமா நிர்வாகம் போதியளவிற்கு வேகமாக நகர்வதாக இல்லையென்று விமர்சித்து, ஷென்னி கூறுகையில், வேலையைச் சரியாக செய்து முடிக்க 20,000 பேர் தேவைப்படுகின்ற போது நாம் 300 ஆலோசகர்களுக்காக வாதிடுகிறோம் என்றால், நாம் உண்மையிலேயே பிரச்சினையை சரியாக கண்டு கொண்டிருக்கிறோமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது, என்றார்.

சிரியாவின் கொல்லைப்புறத்தில்[ஈராக்-சிரியாவின் இஸ்லாமிய அரசின்], பயிற்சி மற்றும் ஆயுதங்கள் மற்றும் இன்னும் இதர பிறவற்றோடு, சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவது மற்றும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இராணுவ தாக்குதலை தீவிரப்படுத்துவது உட்பட ஒரு "பரந்த மூலோபாயம்" அவசியப்படுவதாக ஷென்னி தெரிவித்தார். இப்போதைய நெருக்கடிக்கும் அவருக்கும் ஒன்றுமே சம்பந்தமில்லை என்பது போல கருத்துக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த 11 அல்லது 12 ஆண்டுகளில் என்ன நடந்தது என்று விவாதித்துக் கொண்டு நம்முடைய நேரத்தை நாம் செலவிட்டுக் கொண்டிருந்தால், நாம் வளர்ந்து கொண்டிருக்கும் அச்சுறுத்தலைத் தவறுவிட்டு விடுவோம், என்றுரைத்தார்.

வெளியுறவு கொள்கைக்கு ஒரு புகழ்பெற்ற அதிகாரியாக ஷென்னி இன்னமும் பொதுமக்கள் முன்னால் வரமுடிகிறதென்ற உண்மையை விட வேறெதுவும் அமெரிக்க ஜனநாயகத்தின் சீரழிந்த நிலையை இந்தளவிற்கு தெளிவாக எடுத்துக் காட்ட முடியாது. ஆளும் செல்வந்த மேற்தட்டால் நடத்தப்பட்ட குற்றங்களுக்கு எந்தவொரு நிஜமான சட்டரீதியிலான மற்றும் அரசியல்ரீதியிலான கணக்கெடுப்பும் இல்லை என்பதற்கு அவர் முன்னுதாரணமாக நிற்கிறார். ஒரு மிகப்பெரிய வெளியுறவு கொள்கை பேரிடருக்கு இடையிலும் கூட, ஈராக் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்றழைக்கப்படுவதில் செய்யப்பட்ட அமெரிக்க தலையீட்டு வரலாற்றின் மீது ஒரு சம்பிரதாயமான காங்கிரஸ் விசாரணைக்கான அழைப்பு கூட அங்கே இல்லை.

வியட்நாம் யுத்தத்திற்கு மத்தியில், அமெரிக்க செனட் வெளியுறவு குழு 1966 மற்றும் 1971க்கு இடையே இஃபுல்பிரைட் விசாரணை (Fulbright hearings) என்று ஒட்டுமொத்தமாக குறிப்பிடப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளை நடத்தியத்தை நினைவுகூர வேண்டியிருக்கிறது. முக்கிய யுத்த எதிர்ப்பாளர்கள் உட்பட பல்வேறு தரப்பட்ட முக்கிய சாட்சிகளிடமிருந்து இந்த விசாரணைகள் சாட்சியங்களைப் பெற்றது. அந்த யுத்தத்தை முடிக்க கோரிக்கைவிடுத்த ஒரு முன்னாள் படையினராக கெர்ரியே கூட அதில் பங்கு வகித்தார். அமெரிக்க வரலாற்றில் அந்த காலக்கட்டத்தில், வெளியுறவு கொள்கை எவ்வாறு தீர்மானிக்கப்பபடுகிறது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு என்ற ஒரு குறிப்பிட்ட கருத்துரு அப்போது நிலவியது.

அதுபோன்று எதுவும் இப்போது இல்லை. வெளியுறவு கொள்கை பிரத்யேகமாக மக்களின் முதுகுக்குப் பின்னால் நடத்தப்படுகிறது. அதன் நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சம் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாவதுஎந்தவொரு பின்விளைவுகளும் இருக்காது என்ற முழு புரிதலோடு செயல்படும் ஒரு குற்றத்தன்மையான சதிக்கூட்டத்தால் அது தீர்மானிக்கப்படுகிறது. இவை கட்டுபாடில்லாத இராணுவவாதம் மற்றும் உச்சக்கட்ட சமூக சமத்துவமின்மையால் முற்றிலுமாக சீரழிந்து போயுள்ள ஒரு அரசியல் அமைப்புமுறையின் அம்சங்களாகும்.

ஏகாதிபத்தியம் மற்றும் யுத்தத்திற்கு எதிரான ஒரு புதிய பாரிய இயக்கத்தை அவசரமாக உருவாக்குவது அவசியமாகும். அதுபோன்றவொரு இயக்கத்தைத் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் ஐக்கியத்தின் அடித்தளத்தில் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும். ஆளும் வர்க்கம் திட்டமிட்டு வருகின்ற புதிய பேரழிவுகளுக்கு எதிரான போராட்டமானது ஒபாமா நிர்வாகம், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள், மற்றும் முதலாளித்துவ அரசின் அரசியல் முகமைகள் மற்றும் அமைப்புகளுக்கு வெளியே மற்றும் அவற்றிற்கு எதிராக அபிவிருத்தி செய்தாக வேண்டும்

ஒரு புத்துயிர்ப்பிக்கப்பட்ட யுத்த-எதிர்ப்பு இயக்கமானது, விரல்விட்டு எண்ணக்கூடிய நிதியியல் செல்வந்த தட்டு மற்றும் அதன் அரசியல் சதிகாரர்களின் கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கும் நோக்கத்தோடு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தோடு ஆயுதபாணியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களில் எந்தளவிற்கு வேரூன்றி இருக்கிறதோ அந்தளவிற்கு மட்டும் தான் அதனால் வெற்றி அடைய முடியும்.