சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Ireland’s governing parties punished in local and European elections

அயர்லாந்தின் ஆளும் கட்சிகள் உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் தோல்வி அடைந்தன

By Jordan Shilton
31 May 2014

Use this version to printSend feedback

கடந்த வாரயிறுதியில் நடந்த ஐரோப்பிய மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், அத்துடன் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும், அயர்லாந்தின் வாக்காளர்கள் டப்ளிலினில் உள்ள ஆளும் பைன் கேல் (Fine Gael) மற்றும் தொழிற்கட்சி கூட்டணிக்கும், அதன் சிக்கன கொள்கைகளுக்கும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இடது கட்சியின் தலைவரும், துணை பிரதமருமான ஈமான் கில்மோரே (Eamon Gilmore) தாமதமின்றி இராஜினாமா செய்யும் அளவிற்கு, அக்கட்சி ஆதரவு பொறிந்து போனது தேர்தல் முடிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. உள்ளாட்சி தேர்தல்களில், 2009 உடன் ஒப்பிடுகையில் அக்கட்சி அதன் ஆதரவில் பாதிக்கும் மேல் இழந்துவிட்டதோடு, அதன் உள்ளாட்சி கவுன்சிலர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினரை இழந்துள்ளது. அதன் வாக்குகள் 14.5 சதவீதத்திலிருந்து வெறும் 7.2 சதவீதமாக பொறிந்து போன நிலையில், கோர்க் நகரில் அது அதன் அனைத்து பிரதிநிதிகளையும் இழந்தது மற்றும் டப்ளிலினின் பல தொழிலாள வர்க்க பகுதிகளிலும் அதற்கு எந்த பிரதிநிதிகளும் இல்லை.

தொழிற்கட்சி, ஐரோப்பிய தேர்தல்களில், மொத்தமாக அதன் மூன்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழந்தது.

பிரதம மந்திரி எண்டா கென்னியின் (Enda Kenny) கட்சியான பைன் கேல், 2011 பொது தேர்தலோடு ஒப்பிட்டால் அதன் வாக்குகளில் மூன்று பங்கிற்கும் அதிகமான வாக்குகளை இழந்தது, அதேபோல கடந்த 2009 உள்ளாட்சி தேர்தல்களோடு ஒப்பிடுகையில், கால் பங்கு வாக்குகளை இழந்தது. டப்ளிலினின் அது வெறும் 14 சதவீத வாக்காளர்களிடமிருந்து மட்டுமே வாக்குகளைப் பெற்றிருந்தது, தேசியளவில் 22.3 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.

ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், ஆளும் கூட்டணி அரசாங்கம் வாக்காளர்களிடமிருந்து 30 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவைப் பெற்றிருந்தது.

இந்த முடிவுகள், பில்லியன் கணக்கான பேரழிவுகர வெட்டுகளை நடைமுறைப்படுத்தி உள்ள ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் மீதும், உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் பரந்த விரோதத்தை எடுத்துக் காட்டுகின்றன. இந்த வெட்டுக்கள் பொது சேவைகளுக்குக் குழிபறித்தும், உயர்ந்த வேலைவாய்ப்பின்மை விகிதங்களை உருவாக்கியும், ஐரோப்பா முழுவதிலும் சராசரி ஊதியங்களின் பெரும் வீழ்ச்சிகளில் ஒன்றை உருவாக்கி உள்ளன. தற்போதைய கூட்டணியால் மற்றும் இதற்கு முந்தைய பியன்னா ஃபெயில்-பசுமை கட்சி (Fianna Fail-Green Party) நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முறைமைகள் உட்பட, 2008இல் இருந்து பொருளாதார வெளியீட்டில் 20 சதவீதத்திற்கு அதிகமான அளவிற்கு சமமான சிக்கன முறைமைகள் திணிக்கப்பட்டு இருக்கின்றன.

கில்மோர் இந்த எண்ணிக்கைகளைக் குறித்து எவ்வித வருத்தமுமின்றி, அவரது இராஜினாமாவை அறிவித்த பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், 2011இல் தொழிற்கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தமை ஒரு கௌரவமும், தனிச்சிறப்புமாகும் என்று வலியுறுத்தினார். “அதுவொரு சரியான முடிவென்பதை நான் இன்னமும் நம்புகிறேன், அந்த நோக்கங்களை எட்டுவதற்காக நாங்கள் முன்னோக்கி எடுத்த நடவடிக்கைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன்,” என்றார்.

அரசாங்க-விரோத அலையினால் Sinn Fein இயக்கமும் மற்றும் "சுயேட்சை" வேட்பாளர்களும் முதன்மையாக ஆதாயமடைந்திருந்தனர், இந்த "சுயேட்சை" வேட்பாளர்கள் அனைவரும் தங்களைத்தாங்களே ஒரு இடது மாற்றீடு என்று சித்தரிக்க முனைந்திருந்தனர்.

டப்ளின் மற்றும் கோர்க் நகர கவுன்சில்களில் Sinn Fein இயக்கமும், சுயேட்சைகளும் மிகப் பெரிய குழுக்களாக இருந்தனர், அதுமட்டுமின்றி Sinn Fein இயக்கம் டப்ளிலினில் ஒரு ஐரோப்பிய நாடாளுமன்ற இடத்தையும் கூட வென்றது. அயர்லாந்தின் மொத்தம் 11 இடங்களில் அந்த கட்சி மூன்று இடங்களை கைப்பற்றியது, இரண்டு இடங்களை சுயேட்சைகள் கைப்பற்றினர்.

ஐரோப்பிய தேர்தல்களில், 19.8 சதவீதத்தினர் "சுயேட்சைகளுக்கு" வாக்களித்தனர். இந்த குழுக்கள், பிரதான கட்சிகளில் இருந்து வந்த முன்னாள்-அரசியல்வாதிகள் உட்பட, வெவ்வேறு அரசியல் பின்புலத்தில் இருந்த தனிநபர்களைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் தற்போது நிலவும் அமைப்பிற்கு ஒரு மாற்றீடாக பிரச்சாரம் செய்தனர். தலைமையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்குப் பின்னர் கடந்த ஆண்டு கட்சியிலிருந்து வெளியேறிய ஒரு முன்னாள்-தொழிற்கட்சி அங்கத்தவர் நெஸ்சா சில்டெர்ஸ் டப்ளிலினில் ஒரு இடம் வென்றார்.

அந்நாட்டின் நாடாளுமன்ற அங்கத்தவர் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்ட டப்ளிலினின் மேற்கு தொகுதியில், போலி-இடது சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ரூத் கோப்பின்ஜெர் (Ruth Coppinger) வெற்றி பெற்றார். இருந்த போதினும், சோசலிஸ்ட் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் முர்பி அவரது இடத்தைத் தக்க வைக்க முடியாமல் தோல்வியுற்றார்.

ஸ்தாபகத்திற்கு விரோதமான ஒரு சக்தியாக அதனை சித்தரித்து கொண்டதற்கு இடையே, Sinn Fein இயக்கம், வடக்கு அயர்லாந்தில் அதிகார-பகிர்வுடன் அரசாங்கத்தில் பங்கு பெற்றிருந்தபோது இலண்டனின் பழமைவாத-தாராளவாத ஜனநாயக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட செலவின வெட்டு திட்டத்தைப் போன்று அமைந்திருந்த சிக்கன முறைமைகளை நடைமுறைப்படுத்துவதில் ஒத்துழைக்க அது முழு விருப்பத்தோடு இருந்ததை நிரூபித்துள்ளது.

தெற்கில், குடியரசுக் கட்சியினரின் 12.5 சதவீதம் என்ற மிகக் குறைந்த பெருநிறுவன வரி விகிதங்களை அது பாதுகாப்பதோடு, நெருக்கடியைச் சமாளிக்க குறைந்தபட்ச தேசிய சீர்திருத்தங்களின் ஒரு திட்டத்தையும் முன்னெடுக்கிறது. இதுபோன்றதொரு கட்சி தன்னைத்தானே ஒரு இடது மாற்றீடு என்று சித்தரித்துக் கொள்ள முடிகிறது என்பது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் எவ்வாறு வலதுசாரியாக மற்றும் மதிப்பிழந்தும் போயுள்ளது என்பதற்கு ஒரு அறிகுறியாகும்.

Sinn Fein அமைப்பு ஸ்தாபகத்திற்கு விரோதமாக காட்டிக் கொண்டதன் மூலமாக வடக்கில் பெற்ற அதன் வாக்குகளிலும் ஆதாயமடைந்திருந்தது மற்றும் மக்கள்தொகை சார்ந்து அக்கட்சியின் கத்தோலிக்க ஆதரவு அடித்தளம் உயர்த்திருந்ததாலும் அது அங்கே ஆதாயமடைந்திருந்தது. இந்த விடயம் செப்டம்பரில் நடைபெற உள்ள ஸ்காட்லாந்து சுதந்திரம் மீதான வெகுஜன வாக்கெடுப்பில் எதிர்கால பிரிட்டிஷ் அரசின் அரசியலமைப்பு மீது பகிரங்கமாக பிரச்சினையாக எழும் போது ஆளும் மேற்தட்டிற்கு கவலைக்குரிய கூடுதல் ஆதாரமாக இருக்கக்கூடும்.

கில்மோர் அவரது இராஜினாமாவிற்குப் பின்னர், அவர் வெளியேறினாலும் கூட டப்ளிலினின் அரசாங்கம் நீடிக்குமென்று கூறி நிலைமைகளைத் தைரியமாக முகங்கொடுப்பதாக காட்ட முயன்ற போதினும், கூட்டணி ஒரு ஆழ்ந்த நெருக்கடியை முகங்கொடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள அடுத்த தேர்தல் வரையில் அது நீடிக்க முடியாதிருப்பதற்கு அங்கே பெரும் வாய்ப்புகள் உள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்ற இடங்களில் தொழிற்கட்சி தோல்வியைச் சந்திக்கும் என்பது ஏற்கனவே தெளிவாக இருந்த போதே, கில்மோர் தாம் தொடர்ந்து தலைவராக நீடிக்க இருப்பதாக, அவரது இராஜினாமாவை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தான் தெரிவித்திருந்தார். அவர் தலைமை மீது எட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைக் கொண்டு வர அச்சுறுத்தியதும், அவர் இராஜினாமா அளிக்க நிர்பந்திக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த தலைமையையும் நீக்கி விட்டு, ஒரு புதிய தலைமுறையைக் கொண்டு அதை பிரதியீடு செய்ய வேண்டுமென ஒரு தொழிற்கட்சி பிரதிநிதி அழைப்புவிடுத்தார், அதேவேளையில் ஏனையவர்கள் அடுத்த பொது தேர்தலில் முற்றிலுமாக தோற்கடிக்கப்படலாம் என்ற அச்சங்களை வெளிப்படுத்தினர். அதன் தற்போதைய வாக்குகளின் பங்கு பசுமை கட்சியை விட வெகு குறைந்தளவே அதிகமாக உள்ளது, பசுமை கட்சியோ வங்கி பிணையெடுப்பை நடைமுறைப்படுத்திய பியன்னா ஃபெயில் தலைமையிலான முந்தைய அரசாங்கத்தில் அது வகித்த பாத்திரத்தை அடுத்து தொடர்ந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

அரசாங்கம் அதன் வழியில் நிலைத்து நிற்குமென வலியுறுத்தி கென்னி விடையிறுப்பு காட்டினார். அது அக்டோபரில் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற வரவு-செலவு திட்டத்தில் கூடுதலாக 2 பில்லியன் யூரோ செலவின வெட்டுக்களை செய்ய திட்டமிடுகிறது. அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார், “நாங்கள் இலக்குகளை மற்றும் நோக்கங்களை வரையறை செய்துவிட்டோம், அவற்றை அடைந்தே தீர வேண்டும்,” என்றார்.

கென்னியின் கூட்டணி சமீபத்திய மாதங்களில் பொலிஸ் உளவுவேலை மோசடி ஒன்றில் சிக்கி இருந்தது, அந்த மோசடியால் நீதித்துறை மந்திரி ஆலன் ஷெட்டர் மே 8இல் பதவி விலகினார். அரசாங்கத்திலிருந்து அவர் வெளியேறியமை மோசடியை மூடிமறைக்க செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட முயற்சியாகும், அந்த மோசடி, கென்னி உட்பட ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் சுற்றி வளைக்க அச்சுறுத்தி வருகிறது.

1980களின் ஆரம்பத்தில் இருந்து நாடு முழுவதிலும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் அங்கிருந்து செல்லும் அழைப்புகளை கார்டாயால் (Gardai – அயர்லாந்தின் அரசு பொலிஸ் படை) திட்டமிட்டு உளவுபார்க்க செய்யப்பட்டிருந்தமை, மார்ச் இறுதியில் பொலிஸ்துறை தலைவர் மார்டீன் கலினனை இராஜினாமா செய்ய தூண்டியது. அதே நேரத்தில், கலினனின் இராஜினாமாவிற்கு ஒரு நாள் முன்னர், தான் தமக்கு அந்த உளவுவேலை திட்டம் செயல்பட்டு வந்தது குறித்து தெரியும் என ஷெட்டர் அர்த்தமற்ற விதத்தில் வாதிட்டார்.

தகவல் கோரும் சுதந்திரத்தின் மூலமாக பெறப்பட்ட கென்னியின் நாளேட்டின்படி, Taoiseach (பிரதம மந்திரி) மார்ச் 23 அன்று அதிகாலை ஷெட்டரைச் சந்தித்து இருந்தார், அந்த நாள் மோசடி குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் நாளுக்கு ஒரு நாள் முந்தைய நாளாகும். அதற்கடுத்த நாள், தொலைபேசி ஒட்டுகேட்பு மோசடி குறித்து கென்னி அட்டார்னி ஜெனரல் உடன் பேசி இருந்தார், அதற்கடுத்த இரண்டு நாட்களுக்கும் குறைந்த நேரத்தில் தான், கலினன் அவரது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

ஆண்டுக்கு 200 யூரோவிற்கும் கூடுதலாக குடிநீர் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதென்ற பைன் கேல் கட்சிக்கும் தொழிற்கட்சிக்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கை, அரசாங்கம் செல்வாக்கு இழந்திருப்பதற்கான மற்றொரு முக்கிய காரணமாக இருந்தது. 2011 தேர்தலில் அதுபோன்ற கட்டணங்களுக்கு எதிராக தொழிற்கட்சி பிரச்சாரம் செய்திருந்தது. சொத்து வரி மற்றும் பொதுவான சமூக கட்டணத்திற்கு மேலாக, ஏற்கனவே அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடி கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களை அது பேரழிவுக்குள் இழுத்துச் செல்லும்.

சமூக சேவைகளைச் சூறையாடுவதில் அவை வகித்த பாத்திரத்திற்காக அனைத்து பிரதான கட்சிகளும் மதிப்பிழந்து போயிருக்கும் நிலைமைகளின் கீழ் மற்றும் தொழிலாள வர்க்கம் இடத்திற்கு மாறி வருகின்ற நிலைமைகளின் கீழ், தேர்தல் முடிவுகளில் காட்டப்பட்டதைப் போல, அயர்லாந்து முதலாளித்துவத்தின் பாதுகாப்பிற்கு வர வேண்டியது Sinn Feinஇன் பணியாக ஆகிவிடும்.

அரசாங்கத்திற்குள் செல்ல அதற்கு "தீர்ப்பு" அளிக்கப்பட்டால் அது அவ்வாறு செய்யுமென்று கூறி, அவசியமானால் அவரது கட்சி அரசாங்கத்திற்குள் நுழைய தயாராக இருப்பதாக Sinn Feinஇன் தலைவர் கெர்ரி ஆடம்ஸ் எந்தவித இரகசியமும் இல்லாமல் தெளிவுபடுத்திவிட்டார். “வெளியேறுவதற்கு அவர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. அடுத்த தேர்தலில் அது போட்டியிடுமா என்பது குறித்து ஊகிப்பதை விட, இப்போதே தேர்தலை வைத்துவிடலாம். மக்களை பேச விடுவோம்என்று அறிவித்து, பொது தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர் அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார்.