சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The New York Times and freedom of the press

நியூயோர்க் டைம்ஸூம், பத்திரிகை சுதந்திரமும்

Patrick Martin
31 May 2014

Use this version to printSend feedback

அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் குறித்து கசிந்த தகவல்களை பத்திரிகைகளில் வெளியிடலாமா என்பதைக் குறித்து அமெரிக்க அரசாங்கம் தான் இறுதி முடிவெடுக்க வேண்டுமென்று வலியுறுத்திய ஒரு அசாதாரண கருத்துரை, இணைய பதிப்பில் மே 22இல் நியூ யோர்க் டைம்ஸ் நூல் திறனாய்வு பகுதியில் பிரசுரிக்கப்பட்டது. இது ஜூன் 8இன் அச்சு பதிப்பில் வெளியிட நாள்குறிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பொலிஸ் அரசிற்கும் பொருத்தமான இந்த நீண்ட ஜனநாயக விரோத உரை, பாண்டித்தியம் பெற்றோரின் துறையின் நீண்டகால நிரந்தர அங்கமாக விளங்கும் ஒருவரும், CNNஇன் "கிராஸ்பயர்" நிகழ்ச்சியின் முன்னாள் இணை-தொகுப்பாளருமான மைக்கேல் கின்ஸ்லேயினால் எழுதப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) பாரிய சட்டவிரோத உளவுவேலை குறித்து வெளியான எட்வர்டு ஸ்னோவ்டனின் வெளியீடுகள் மீது எழுதப்பட்டிருந்த கிளென் கிரீன்வால்டின் (Glenn Greenwald) ஒளிவதற்கு இடமில்லை என்ற ஒரு புதிய புத்தகத்தைத் திறனாய்வு செய்யும் வடிவத்தில் அவரது கருத்துரை அமைந்திருந்தது.

மின்னணு தொலைதொடர்புகள் மீதான NSAஇன் அப்பட்டமான உளவுவேலை அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஓர் அச்சுறுத்தலாகும் என்றும், (அமெரிக்க) கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்டில் பகிரங்கமாக வெளியிடுவதற்காக கிரீன்வால்டிற்கும் ஏனைய இதழாளர்களுக்கும் ஆவணங்களைக் கசியவிட்டு அரசாங்கத்தின் குற்றத்தன்மையை ஸ்னோவ்டன் அம்பலப்படுத்தியமை நியாயமானதே என்றும் கிரீன்வால்ட் வழங்கிய வாதங்களை கின்ஸ்லே ஏளனம் செய்கிறார்.

அவர் பின்வருமாறு தொகுத்தளிக்கிறார்: “யார் அதை முடிவு செய்வது என்பது தான் கேள்வி. அது தெளிவாக உள்ளது, குறைந்தபட்சம் என்னைப் பொறுத்த வரையில், அதாவது தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான செய்தியிதழ்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் அரசாங்க இரகசியங்களை வெளியிடுவது குறித்து இறுதி முடிவு எடுப்பதாக இருக்கக் கூடாது, மேலும் எந்தவித சட்ட விளைவுகளும் இல்லாமல் அவற்றை பகிரங்கப்படுத்த அவர்களுக்கு ஒரு இலவச அனுமதி வழங்கப்படக்கூடாது. ஒரு ஜனநாயகத்தில், (அது, கிரீன்வால்டிற்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்காமல், நாம் இன்னமும் செய்வதுபோல்) இறுதி முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டும் ... யாரோ ஒருவர் முடிவெடுக்கிறார், அந்த யாரோ ஒருவர் கிளென் கிரீன்வால்டாக இருக்கிறார்.” (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

ஊடகங்கள் அரசிலிருந்து சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்ற கருத்தை கின்ஸ்லே நேரடியாக புறக்கணிக்கிறார். உத்தியோகபூர்வ இரகசியங்கள் மற்றும் பொய்களை அம்பலப்படுத்துவதே இதழாளர்களின் அடிப்படை பாத்திரம் என்ற கருத்துரு முற்றிலுமாக அவருக்கு அந்நியப்பட்டு உள்ளது. அவரது கருத்துரு ஆழ்ந்த சர்வாதிபத்தியமாக உள்ளது.

அது என்னவென்றால் மக்களுக்கு என்ன தெரிய வேண்டும், என்ன தெரியக்கூடாது என்பதை அரசு தான் தீர்மானிக்க வேண்டும்; மக்களின் நலன்களுக்குரியது என்ன என்பதை அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்பதாகும். இந்த நிலைப்பாட்டின் தர்க்கரீதியலான மற்றும் தவிர்க்கமுடியாத தர்க்கம் கட்டுப்பாடில்லாத அதிகாரங்களை மக்களை விட அரசிற்கு வழங்குவதாக உள்ளது.

டானியல் எல்ஸ்பெர்க் பெண்டகன் ஆவணங்களைக் கசியவிட்ட சமயத்தில் கின்ஸ்லேயின் இந்த வரையறைகள் நடைமுறையில் இருந்திருந்தால், வியட்நாம் யுத்தத்திற்கான நீண்டகால தயாரிப்புகளின்போதான தமது பொறுப்புகளையும், அவற்றை மூடிமறைக்க அரசாங்கத்தால் கூறப்பட்ட பொய்களையும் பிரசுரிப்பதில் இருந்து டைம்ஸ் இதழும், வாஷிங்டன் போஸ்டும் தடுக்கப்பட்டிருக்கும். “அரசாங்கம் தான் இறுதியாக தீர்மானிக்க வேண்டும்" என்ற அடித்தளத்தில், ஜனநாயக உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான எண்ணற்ற குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கும்.

இந்த கருத்து ஒரு புத்தக திறனாய்வில் காணப்படுகிறது என்ற போதினும், அது வெறுமனே தனிப்பட்ட திறனாய்வாளரின் கருத்தல்ல, மாறாக "சாதனை பத்திரிகை" என்றழைக்கப்படும் டைம்ஸின் அரசியல் உடன்பாட்டை அது எடுத்துச் செல்கிறது, அது தொலைக்காட்சி வலையமைப்புகளுக்கும், பரந்த அமெரிக்க ஊடகங்களுக்கும் நிகழ்ச்சி நிரலை அமைத்துக் கொடுக்கிறது.

வெளிப்படையாக அந்த திறனாய்வின் தோற்றம், ஓர் உயர்-மட்ட ஆசிரியர் குழு தீர்மானத்தின் தயாரிப்பாக உள்ளது. கின்ஸ்லேயின் கருத்துரை இணையத்தில் வெளியாவதற்கு வெறும் பத்து நாட்களுக்கு முன்னர் தான், டைம்ஸ் அதன் வழக்கமான புத்தக திறனாய்வாளர்களில் ஒருவரான மிசியோ காகூதானியால் (Michio Kakutani) ஒளிவதற்கு இடமில்லை நூலின் ஒரு திறனாய்வை பிரசுரித்திருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் "நமது அன்றாட வாழ்க்கையை உளவு பார்க்க NSAஇன் திறன் ஓர்வெல்லியனுக்கு சமமான விகிதத்தில் வளர்ந்திருப்பதாக" குறிப்பிட்டு, உளவு பார்க்கும் அரசு மீதான கிரீன்வால்டின் விமர்சனத்திற்கு அப்பெண்மணி கணிசமான அனுதாபத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே நேரத்தில், இராணுவம் மற்றும் உளவுவேலை முகமைகளுக்கு ஊடகங்கள் அடிபணிந்திருப்பதைக் குறித்து அவர் அம்பலப்படுத்தி இருந்தவற்றை "முற்றிலும் பொதுப்படையாக இருப்பதாகவும்" அவை "மோசமாக தீங்கிழைப்பதாகவும்" வர்ணித்து, அப்பெண்மணி பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்களைக் குறித்த கிரீன்வால்டின் விமர்சனங்களை அடியோடு உதறித் தள்ளி இருந்தார்.

தெளிவாக டைம்ஸில் கணிசமான செல்வாக்கில் இருக்கும் யாரோ ஒருவர், கிரீன்வால்ட் மற்றும் ஸ்னோவ்டன் மீது இன்னும் பலமாக, இன்னும் நேரடியான தாக்குதலை விரும்பி இருந்தார்கள் என்பதோடு, அந்த புத்தகத்தில் எதை கையாள வேண்டும் என்பதை அறிந்து, முற்றிலும் தேவைக்கு அப்பாற்பட்டு, இரண்டாவது திறனாய்வை எழுத கின்ஸ்லேயை அமர்த்தி இருந்தார்கள். ஜனநாயக கட்சியின் வலது சாரி குரலாக இருந்த New Republicஇல் 20 ஆண்டுகள் முன்னாள் பதிப்பாசிரியராக இருந்த பின்னர், அரசாங்கம் ஆதரவிலான அவரது கண்ணோட்டங்களில் மறைப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை.

மிகவும் அடிப்படையாக, கின்ஸ்லேயால் வெளிப்படுத்தப்பட்ட கண்ணோட்டங்கள் கடந்த தசாப்தத்தின் போக்கில் டைம்ஸின் இதழாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டவைகளோடு முற்றிலும் பொருந்தி இருந்தது, அந்த பத்திரிகையோ முன்னொரு போதும் இல்லாதளவிற்கு மிக ஆழமாக இராணுவ-உளவுத்துறை அமைப்பினுள்  ஒருங்கிணைந்து உள்ளது.

கிரீன்வால்ட் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட சம்பவங்களில் டைம்ஸ் ஒரு நடுநிலையான பாத்திரம் வகிக்கவில்லை. NSAஇன் உள்நாட்டு உளவுவேலை திட்டங்களில் ஒன்றைக் குறித்து முதன்முறையாக 2004இல் செய்தியாளர்களால் டைம்ஸிற்கு தெரிவிக்கப்பட்ட போது, அச்செய்தியைப் பிரசுரிப்பதை அதன் பதிப்பாசிரியர்கள் தடுத்துவிட்டார்கள். இது 2004 ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னர் நடந்தது, புஷ் நிர்வாகம் சட்ட விரோதமாக அமெரிக்க மக்களை உளவு பார்க்கிறது என்ற செய்தி அப்போது தேர்தல் முடிவை பாதித்திருக்கக்கூடும் என்பதால், நிர்வாக பதிப்பாசிரியர் பில் கெல்லர், புஷ் மற்றும் NSA அதிகாரிகளைச் சந்தித்த பின்னர், அந்த செய்தியை மறைத்துவிட்டார்.

இறுதியாக அந்த பத்திரிகை அச்செய்தியை 2005இன் இறுதியில் பிரசுரித்தது, அதுவும் அதன் எழுத்தாளர் ஜேம்ஸ் ரைசென் அவரது தகவலை ஒரு புத்தக பதிப்பாளரிடம் கொண்டு செல்ல இருப்பதாக அச்சுறுத்திய பின்னர் தான் அது வெளியிடப்பட்டது.

சட்டவிரோத NSA உளவுவேலை குறித்து மக்கள் அறிந்து கொள்வதை தடுக்க அவர் எடுத்த முடிவை குறித்து பின்னர் கெல்லர், பின்வரும் நினைவுகூரத்தக்க வார்த்தைகளோடு நியாயப்படுத்தினார்: “வெளிப்படையாக இருப்பது முற்றிலும் நல்லதல்ல என்பதில் நாங்கள் முழு மனதோடு உடன்படுகிறோம். பத்திரிகை சுதந்திரம் என்பதில் பிரசுரிக்காமல் இருப்பதற்கான சுதந்திரமும் உள்ளடங்குகிறது, அந்த சுதந்திரத்தை நாங்கள் சில ஒழுங்குமுறையோடு பயன்படுத்துகிறோம்,” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “பத்திரிகை சுதந்திரம்" என்பது பெருநிறுவனத்திற்கு சொந்தமான ஊடகங்கள் உழைக்கும் மக்களுக்கு எதிரான பொலிஸ் அரசு ஒடுக்குமுறையைக் கட்டி எழுப்புவதில் மற்றும் உலகெங்கிலும் ஏகாதிபத்திய யுத்த தயாரிப்புகளில் அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக பங்குபற்றுவதற்கான சுதந்திரம் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

டைம்ஸ் இதழ், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை இழிபடுத்தியும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட அமெரிக்க அட்டூழியங்கள் மீது செல்சியா (பிரட்லி) மேனிங்கால் கசியவிடப்பட்ட ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்தும், மற்றும் இப்போது ஸ்னோவ்டன் மற்றும் கிரீன்வால்ட் இருவரையும் தாக்கியும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியவர்கள் மீது அது ஓர் உள்ளார்ந்த வெறுப்பை தொடர்ச்சியாக எடுத்துக்காட்டி உள்ளது.

பத்திரிகை சுதந்திரம் மீதான கின்ஸ்லேயின் கண்ணோட்டங்கள் ஒரு சமயம் அமெரிக்காவில் "நான்காம் ஸ்தாபகம்" (Fourth Estate) என்று குறிப்பிடப்பட்ட பத்திரிகைதுறை சீரழிந்திருப்பதன் வெளிப்பாடாக உள்ளன. அவர் நிதியியல் பிரபுத்துவத்தின் அடியொற்றி நன்கு ஒருங்கிணைந்துள்ள பண்டிதர்களின் ஓர் ஒட்டுமொத்த சமூக அடுக்கிற்காக பேசுகிறார். (நீண்டகால மைக்ரோசாப்ட் நிர்வாகியும், பில் மற்றும் மிலெண்டா கேட்ஸ் அமைப்பின் ஸ்தாபக தலைமை செயலதிகாரியான பட்டி ஸ்டோனெஸ்பெரை அவர் மணந்துள்ளார்.)

ஊடகங்களின் சீரழிவு ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொறிவின் ஒரு வெளிப்பாடாகும். ஊடகங்களின் பாத்திரம் சம்பந்தமாக கின்ஸ்லே மற்றும் டைம்ஸின் சர்வாதிபத்திய கருத்துருக்கள், முற்றிலுமாக இரகசிய திட்டங்களின் சர்வாதிபத்திய சாரத்தின் போக்கில் உள்ளது, அவற்றை அவர்கள், ஒபாமா நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துடன் சேர்ந்து, அமெரிக்க மக்களிடம் இருந்து மூடிமறைக்க முனைந்துள்ளனர். ஒழுங்கான வழக்குவிசாரணையின்றி பிரஜைகளைப் படுகொலை செய்யும் உரிமையை வலியுறுத்தக் கூடிய மற்றும் எந்தவொரு சட்டரீதியான கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்களை உளவு பார்க்கும் ஒரு அரசாங்கம், மக்கள் என்ன அறிந்து கொள்ள முடியும், என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையையும் கூட அதுவே தக்க வைத்துக் கொள்கிறது.

அமெரிக்காவில் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வியாபித்துள்ள சமூக சமத்துவமின்மையின் பாரிய வளர்ச்சிக்குள், அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயகம் உயிர்பிழைக்க முடியாது.

அமெரிக்க புரட்சியால் வென்றெடுக்கப்பட்ட அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளான பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தினை பாதுகாப்பது இப்போது தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் ஒரு சக்தி வாய்ந்த சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமே ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கு ஒரு முன்னோக்கிய பாதையை வழங்கக்கூடும்.