சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Washington boasts of military buildup against China

சீனாவிற்கு எதிரான இராணுவ ஆயுதமயமாக்கலை வாஷிங்டன் ஊக்குவிக்கிறது

Bill Van Auken
3 June 2014

Use this version to printSend feedback

டந்த வாரம் West Point இல் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உரையை "மிதவாதம்" மற்றும் "கட்டுப்பாட்டை" நோக்கிய ஒரு திருப்பமாக சித்தரிக்கும் ஊடகங்களின் பகுப்பாய்வுகளால் யாரும் முட்டாளாக்கப்பட்டு இருந்தால், அல்லது அந்த உரையை உலக சோசலிச வலைத்தளம் "அமெரிக்க நிதியியல் மேற்தட்டின் நலன்களைப் பின்தொடர்வதற்கு நிரந்தரமான மற்றும் உலகளாவிய யுத்தத்திற்கான" ஒரு மூலப்படிவமாக வர்ணித்து மிகைப்படுத்துவதாக சிந்திக்க ஆர்வப்பட்டால், அவர்கள், சனியன்று சிங்கப்பூரில் அவரது பாதுகாப்பு செயலர் சக் ஹாகெலால் வழங்கப்பட்ட போர்விழைவுள்ள கண்டன உரையைப் படிப்பது மட்டும் அவசியமாகும்.

படைத்துறைசாராத மற்றும் உயர் இராணுவ தலைமையோடு, ஆசிய-பசிபிக் பாதுகாப்பு மந்திரிகளின் ஆண்டு கூட்டமான ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தை தான், ஹாகெலின் ஆத்திரமூட்டும் உரைக்கான இடமாக அமைந்திருந்தது. வெளிவேடத்திற்கு அந்த மாநாடு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவை மேம்படுத்தும் நோக்கில் "பேச்சுவார்த்தை" மற்றும் "நம்பிக்கை வளர்ப்பதற்கான" ஒரு விவாத கூட்டமாகும்.

ஆனால் அதற்கு மாறாக, அந்த பெண்டகன் தலைவர் சீனாவைச் சுற்றி வளைக்கும் நோக்கில், அதேவேளையில் அப்பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் வகையில், ஆசிய பசிபிக்கில் வாஷிங்டன் அதன் இராணுவ வலிமையை கட்டியமைக்க முன்னெடுத்து வரும் முறைமைகளை விவரித்த ஒரு உரையை வழங்கினார்.

அதன் சாரத்தில், ஹாகெலின் உரை West Point இல் ஒபாமாவால் வழங்கப்பட்ட மே 28 தொடக்க உரையின் ஒரு பின்விளைவாக உள்ளது. ஒபாமா நிர்வாகம் அதன் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" அமெரிக்க வெளியுறவு கொள்கையின் மூலோபாய அச்சாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவ பயிலகத்தில் வழங்கப்பட்ட ஒபாமாவின் உரையை விமர்சித்தவர்கள், ஒரு பிரதான வெளியுறவு கொள்கைக்குரிய உரையாக கருதப்படுவதில் அந்த திருப்பத்தைக் குறித்து ஒபாமா ஒன்றுமே குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உண்மையை எடுத்துப் பார்த்தால், ஒபாமா சீனா தொடர்பாக ஒரு தொடர்ச்சியான அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்டும், மற்றும் வளர்ந்துவரும் அதன் பூகோள எதிரிக்கு வாஷிங்டன் ஓர் இராணுவ பிரதிபலிப்பைக் காட்ட தயாராக வேண்டியுள்ளது என்று அறிவுறுத்தியும், அவரது உரையில் "முன்னெடுப்பு" என்றழைக்கப்படுவதன் உள்ளடக்கத்தை தொட்டிருந்தார்.

அவர் ரஷ்யாவைப் போலவே சீனாவையும் அதே வகைப்பாட்டில் நிறுத்தியதோடு, அவ்விரு நாடுகளையும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எடுத்துக்காட்டுகிறார். “சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், இராணுவ பரவலும் அதன் அண்டைநாடுகளைக் கவலைக்கு உள்ளாக்குவதாக,” ஒபாமா அறிவித்தார்.

வாஷிங்டனால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட மற்றும் பூகோள வெடிப்பு புள்ளிகளாக மாறியுள்ள தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல்களின் எல்லை பிரச்சினைகளை விவரிக்க சென்ற அவர், "பிராந்திய ஆக்கிரமிப்புக்காக" சீனாவைக் குற்றஞ்சாட்டியதோடு, அது "இறுதியில் நம்முடைய கூட்டாளிகளைப் பாதிக்கும், மற்றும் நமது இராணுவத்தை உள்ளே இழுக்கும்" என்றார். பின்னர் தென் சீனக் கடலில் சீனா உடனான கடல்வழி பிரச்சினைகளில் உள்ள தென்கிழக்கு ஆசிய அரசாங்கங்களுக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்.

இருந்தபோதினும் இதில் "முன்னெடுப்பு" குறித்து எதுவும் குறிப்பிடவில்லை, ஆசிய-பசிபிக் அரங்கில் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவின் மற்றும் அதன் பாரிய இராணுவ எந்திரத்தின் ஒரு புதிய நீண்டு-வளைந்த மூலோபாய திருப்பம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, அமெரிக்கா முகங்கொடுத்து வரும் முதன்மையான அச்சுறுத்தல்பயங்கரவாதமாகும்" என்று ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு தெரிவித்தார். இதே பூச்சாண்டித்தனம் தான் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து வெளிநாடுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு முக்கிய ஜனாதிபதி உரையில் அமெரிக்க மூலோபாயம் குறித்த ஒரு வெளிப்படையான செய்தி இல்லாமல் இருப்பது, ஐயத்திற்கிடமின்றி, திட்டமிட்டு செய்யப்பட்டதாகும்.

பாதுகாப்பு செயலரும், ஏனைய அமெரிக்க அதிகாரிகளும் எந்தளவிற்கு பலத்தோடு "முன்னெடுப்பை" ஆசியாவில் ஊக்குவிக்கிறார்களோ அதே பலத்தோடு ஒபாமா ஏன் அமெரிக்க மக்களுக்கு அதை விவரிக்கவில்லை என்று சிங்கப்பூர் மாநாட்டில் பங்கெடுத்தவர்களில் ஒருவர் நேரடியாகவே ஹாகெலை வினவினார். அதற்கான விடை தெளிவாக உள்ளது. ஓர் ஆணுஆயுதமேந்திய சீனாவிற்கு எதிராக இராணுவரீதியில் தூண்டிவிடும் மற்றும் வலிந்து தாக்கும் ஒரு கொள்கைக்கு ஆதரவு கோரும் ஒரு பொது பிரச்சாரத்திற்கு, மக்களின் எதிர்வினை பயங்கரமானதாக இருக்கும் மற்றும் வீரியமிக்க எதிர்ப்பாக இருக்கும். ஆகவே சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு அரசியல் எதிர்ப்பு-புயலின் ஆபத்தை ஏற்பதை விட மக்களைத் அவர்களுக்குத் தெரியாமலேயே ஓர் உலகளாவிய மோதலின் விளிம்பிற்கு கொண்டு செல்வது மேலானது என்று ஆளும் வட்டாரங்கள் சிந்திக்கின்றன.

ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையின் ஓரளவிற்கு மிகவும் விவேகமான சூழலில் கூட, ஹாகெல் அதுபோன்ற மன உறுத்தலை உணரவில்லை. அவர் அப்பிராந்தியத்தின் அமெரிக்க இராணுவ ஆயுதமயமாக்கலை சாதகமான முறையில் ஊக்குவித்தார்.

ஆசியாவில் "முன்னெடுப்பு" அல்லது "மறுசமன் செய்தல்" என்பது "ஒரு இலக்கு அல்ல, ஒரு வாக்குறுதி அல்ல, அல்லது ஒரு நோக்கமல்ல அதுவொரு யதார்த்தம், என்று அவர் அறிவித்தார்.

அவர் வாஷிங்டனுக்கும் பிலிப்பைன்ஸின் அக்கினோ ஊழல் அராங்கத்திற்கும் இடையில் அடையப்பட்ட பத்தாண்டு கால விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு கூட்டுறவு உடன்படிக்கையைக் (EDCA) குறிப்பிட்டு காட்டினார், அது அந்நாட்டில் அமெரிக்க இராணுவ படைகளை நிறுத்த உண்மையில் தடையில்லா உரிமைகளை வழங்குகிறது.

அதே போல யுத்தத்திற்குப் பிந்தைய வரலாற்றில் மிகவும் வலதுசாரி ஜப்பானிய அரசாங்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தி வரும் பிரதம மந்திரி ஷின்ஜோ அபேக்கும், ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையில் ஸ்தாபிக்கப்பட்ட நெருக்கமான கூட்டுறவை அவர் பெருமையோடு விவரித்தார்.

ஹாகெல் கூறினார், “வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நினைத்து பாருங்கள், ஒகினாவாவில் அமெரிக்காவின் எதிர்கால இருப்பின் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜப்பான் உடனான எங்களின் கூட்டுறவின் பலம் பாதிக்கப்பட்டிருந்தது,” “இன்று [வாஷிங்டனால் அழுத்தம் தரப்பட்ட ஓர் அரசாங்க மாற்றத்திற்குப் பின்னர்], நாங்கள் முழுவதும் உடன்பட்டு படைகளின் மறுசீரமைப்பு திட்டத்தைக் கொண்டிருக்கிறோம் ... மிசாவாவில் இரண்டு குளோபல் ஹாக்ஸ் (Global Hawks) விமானங்கள், கடெனாவில் F-22 ரக போர் விமானம், மற்றும் ஒகினாவாவில் MV-22 Ospreys உட்பட நாங்கள் எங்களின் மிக அதிநவீன திறன்களை ஜப்பானில் நிலைநிறுத்தி உள்ளோம்,” என்றார்.

ஜப்பானிய இராணுவவாதத்தைப் புதுப்பிப்பதற்குத் தடையாக கருதப்படும் யுத்தத்திற்குப் பிந்தைய அரசியலமைப்பை ஜப்பானிய பிரதம மந்திரி தூக்கியெறிய முனைந்துள்ள நிலையில், ஜப்பானின் இராணுவத்தைப் பயன்பாட்டில் இன்னும் "ஆக்கப்பூர்வமாக" ஈடுபடுத்த வேண்டுமென்ற அபேயின் பரிந்துரைக்கு அவரது முழு ஆதரவையும் ஹாகெல் அறிவித்தார். அமெரிக்காவின் ஆதரவு, சீனா உடனான ஜப்பானின் அதிகளவிலான ஆத்திரமூட்டும் மோதல்களுக்கு உறுதியளிக்க சேவை செய்கிறது.

பதட்டமான கொரிய தீபகற்பம் குறித்து கூறுகையில், பெண்டகன் "அமெரிக்க இராணுவ படையின் தோற்றப்பாங்கை விஸ்தரித்துள்ளதோடு, இன்னும் கூடுதலாக உளவுவேலைகளுக்கான, கண்காணிப்பு மற்றும் ஒற்றுக்கேட்டல் வேலைகளுக்கான அதிநவீன திறன்களை நிறுவியுள்ளதாகவும்" ஹாகெல் சேர்த்துக் கொண்டார். மேற்கு ஆஸ்திரேலியாவில் 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை சிப்பாய்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

இந்தியாவுடன் அதிகரிக்கப்பட்டிருக்கும் வாஷிங்டனின் இராணுவ கூட்டுறவை வலியுறுத்தும் ஒரு புள்ளியைக் குறிப்பிட்ட ஹாகெல், “அதிகரிக்கப்பட்டு வரும் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் மற்றும் இந்திய பெருங்கடலில் சுதந்திர கடல்வழி போக்குவரத்திற்கான அதன் கடமைப்பாட்டை" அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்தார்.

வரவிருக்கும் ஆண்டுகளில், குறிப்பாக ஆப்கானிஸ்தானிலிருந்து எங்களின் படைகளை நாங்கள் திரும்ப பெறுவதால், இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் முன்னணியில்-நிலைநிறுத்தப்பட்ட மற்றும் முன்னணியில் பயன்படுத்தப்பட்ட அதன் அதிநவீன திறன்களை அமெரிக்கா அதிகரிக்கும்,” என்று அறிவித்த ஹாகெல், “நிலைகுலைக்கும் புதிய இராணுவ தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளும் வகையில் எங்களின் சுதந்திர நடவடிக்கையைத் தாங்கிப்பிடிப்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்,” என்றார். எந்த நாடு இத்தகைய "நிலைகுலைக்கும்" ஆயுத அமைப்புமுறையை நிறுவ கூடுமென்பதை என்பதை யாரும் கேட்க வேண்டியதே இல்லை.  

புதிய ஒருங்கிணைந்த உயர் வேக கப்பல் (Joint High Speed Vessel), குவாமில் நிலைநிறுத்தப்பட்ட மற்றொரு அணுஆயுதமேந்திய நீர்மூழ்கி கப்பல், நான்கு கடலோர போர் கப்பல்கள் மற்றும் ஜும்வால்ட்-ரக (Zumwalt-class) தாக்கி-அழிக்கும் கப்பல் உட்பட அடுத்த நான்கு ஆண்டுகளில் அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட உள்ள ஒரு புதிய யுத்தக்கப்பல்களின் தொகுப்பைப் பாதுகாப்பு செயலர் விவரித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், புதிய F-35 தாக்குதல் போர் விமானம் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு விற்கப்படும் என்றார். 2020 அளவில், அமெரிக்காவின் கடற்படை மற்றும் விமானப்படைகளின் 60 சதவீத பிரிவுகள் அப்பிராந்தியத்தில் இருக்குமென ஹாகெல் தெரிவிக்கிறார். இராணுவ செலவின வெட்டுக்கள் ஆசிய-பசிபிக் கட்டமைப்பில் இருக்காதென்று ஒபாமா நிர்வாகம் வாக்குறுதி அளித்திருப்பதாக அவர் சேர்த்துக் கொண்டார்.

இந்த ஆயுத கட்டமைப்பு எந்த நாட்டிற்கு எதிராக செய்யப்படுகிறது என்பதற்கு அந்த உரை எந்தவொரு சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை. சீனா "தென் சீனக் கடலில் உரிமை கோரல்களை வலியுறுத்தி ஸ்திரப்பாட்டைக் குலைக்கும், ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக" ஹாகெல் குற்றஞ்சாட்டினார். “அத்தகைய உரிமை கோரல்களை வலியுறுத்த "அச்சுறுத்தல், நிர்ப்பந்தித்தல் அல்லது ஆயுதபலத்தைக்  கொண்டு பயமூட்டலை" அது பயன்படுத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அத்தோடுசர்வதேச ஒழுங்கமைப்பின் அடிப்படை கோட்பாடுகளைச் சவாலுக்கு உட்படுத்தும் போது வாஷிங்டன் வேறு பாதையைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்றும் அவர் இடித்துரைத்தார்.

ஒன்று ஒரு நிலையான பிராந்திய ஒழுங்கமைப்போடு ஐக்கியப்படுவது மற்றும் மறு-பொறுப்பேற்பது, அல்லது ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை ஆபத்திற்குட்படுத்துவது" என ஏதாவதொரு வாய்ப்பைச் சீனா தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்து, ஹாகெல் பெய்ஜிங்கிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

இதன் அர்த்தம் போதுமான அளவிற்கு தெளிவாக உள்ளது. ஒன்று ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய ஒழுங்கமைப்பிற்கு சீனா அதனை சமர்பிக்க வேண்டும், அல்லது அது அமெரிக்காவுடன் நேரடியான யுத்த அச்சுறுத்தலை முகங்கொடுக்கும் என்பதாகும்.

சீன இராணுவ தலைவர் வாங் கோன்ஜ்ஹாங் (Wang Guanzhong), ஹாகெல் வழங்கிய உரைக்கும், அதற்கு முந்தைய ஜப்பானிய பிரதம மந்திரி அபேயின் உரைக்கும் கோபமாக விடையிறுப்பு காட்டியதோடு, அவற்றை "ஏற்க முடியாதென" அறிவித்து, அவர்கள் இருவரும் ஒரே குரலில் "ஒருசேர" பாடுகிறார்கள் என்றார். ஹாகெலின் பேச்சு "ஸ்திரமின்மையைத் தூண்டும் விதத்தில் ... சண்டையைத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் மற்றும், பிரச்சினைகள் மற்றும் மோதல்களைத் தூண்டிவிடும் விதத்தில்" இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்க முனைந்துள்ளது. ஆசியாவிலும், சீனப் பொருளாதார வளர்ச்சியால் உலகளவிலும் எழும்பியிருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை ஒடுக்க அதன் மிதமிஞ்சிய இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்துவதே அதன் நோக்கமாக உள்ளது. பகுப்பாய்வின் இறுதியாக, உள்நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதலை அதிகரித்து வரும் அதேவேளையில், 2008-2009இல் வெடித்த முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை அதன் போட்டியாளர்கள் மீது சுமத்துவதே அதன் நோக்கமாகும்.

உலக அரங்கில் எப்போதும் அமெரிக்கா தலைமை ஏற்றிருக்க வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், வேறொருவரும் விரும்பமாட்டார்கள்,” என்ற வெஸ்ட் பாயிண்ட்டில் ஒபாமா உரையின் கருத்துக்களை ஹாகெல் மீண்டும் சிங்கப்பூரில் கூறியிருக்கிறார்.

ஞாயிறன்று நடந்த மாநாட்டு விவாதத்தில், ரஷ்ய பாதுகாப்புத்துறை துணை மந்திரி அனடோலி அன்டோநோவ் (Anatoly Antonov) ஒரு கேள்வியை எழுப்பினார்: “அமெரிக்கா ஏன் தலைமை வகிக்க வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.” “எதற்கு தலைமை ஏற்பது? எங்கே தலைமை ஏற்பது?” என்றார்.

யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு அணுஆயுத மூன்றாம் உலக யுத்தத்தின் படுபயங்கரமான அச்சுறுத்தலோடு ஒரு புதிய இராணுவவாத வெடிப்பிற்கு மனிதயினத்தை இட்டு செல்கிறது.