சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president seeks improved relations with India

இலங்கை ஜனாதிபதி இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த முனைகின்றார்

By S. Jayanth
4 June 2014

Use this version to printSend feedback

இந்தியாவின் தேசிய தேர்தலில் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) வெற்றி பெற்றதற்குப் பின்னர், இந்தியாவுடனான உறவுகளை தாம் மேம்படுத்த ஆர்வமாக இருப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷ

தெரிவித்துள்ளார். மே 26இல் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவும், மற்றும் அவருடன் ஒரு சிறிய கலந்துரையாடலுக்கான வாய்ப்பைப் பெறவும் ஏனைய தெற்காசிய தலைவர்களோடு இராஜபக்க்ஷவும் புது டெல்லி விஜயம் செய்திருந்தார்.

இலங்கையில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) இராணுவ தோல்விக்குப் பின்னர் ஐந்தாண்டுகளில், புது டெல்லியின் முந்தைய காங்கிரஸ்-தலைமை அரசாங்கத்துடனான உறவுகள் சுமுகமாக இருக்கவில்லை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மேற்தட்டுக்களோடு ஒரு அதிகார-பகிர்வு ஏற்பாடுகளின் வடிவத்தில், யுத்தத்திற்கு ஒரு "அரசியல் தீர்வை" ஏற்படுத்துவதற்கான இந்தியாவின் அழைப்பை இராஜபக்க்ஷ தொடர்ந்து தட்டிக் கழித்திருந்தார். அதன் ஒரு பிராந்திய எதிரியாக கருதப்படும் பெய்ஜிங்குடன் கொழும்பு அரசாங்கத்தின் அதிகரித்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ உறவுகளுக்கும் புது டெல்லி விரோதமாக உள்ளது.

புதிய மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு தான், கொழும்பில் கணிசமான ஊடக ஊகங்களின் விடயமாகி உள்ளன. ஆளும் வட்டாரங்களில் நிலவும் குறிப்பிடத்தக்க பதட்டங்களை வெளிக்காட்டும் வகையில், மே 25இல் வெளியான சன்டே டைம்ஸ் தலையங்கம், ஸ்ரீலங்காவை நோக்கிய இந்தியாவின் கொள்கையில் எந்த "குறிப்பிடத்தக்க மாற்றமும்" எதிர்பார்க்க முடியாது என்ற போதினும், அங்கே "பெரியளவில் வற்புறுத்தும்தன்மையும், ஒரு முடிவுக்குவரவேண்டும் என்ற நிலைநோக்கும்" இருக்கக்கூடும் என்று எழுதிய ஒரு பகுப்பாய்வாளரின் கருத்துக்களை மேற்கோளிட்டுக் காட்டியது.

புது டெல்லிக்குப் புறப்படுவதற்கு சற்று முன்னர் "நட்புறவுக்கு" ஒரு அறிகுறியாக, இராஜபக்க்ஷ தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தார், அவர்கள் எல்லைக் கடந்து "இலங்கை கடலுக்குள்" வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். சமீபத்திய ஆண்டுகளில், இரண்டு நாடுகளின் கடற்படைகளுமே அதனதன் கடல் எல்லைகளுக்குள் நுழைந்ததாக மீனவர்களை கைது செய்துள்ளன. விரிசலுக்குட்பட்ட உறவுகளுக்கு அதுவும் மற்றொரு சைகையாக உள்ளது.

அவரது அரசாங்கம் தமிழ் மேற்தட்டுக்களோடு நல்லுறவைப் பேணுகிறது என்று காட்ட நோக்கம் கொண்ட ஒரு பாவனையில், இராஜபக்க்ஷ இந்திய விஜயத்தின் போது வடக்கு மாகாண சபையின் முதல் மந்திரி சி. வி. விக்னேஷ்வரனை உடன் சேர்த்து அழைத்து வர முயன்றார். தமிழ் தேசிய கூட்டணியைச் (TNA) சேர்ந்த விக்னேஷ்வரன் அந்த வாய்ப்பை உதறித் தள்ளியதோடு, வடக்கு மாகாண சபைக்கு நில மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையையும் வலியுறுத்தினார்.

மோடி உடனான பேச்சுவார்த்தைகளில், இராஜபக்க்ஷ இந்தியா உடனான சம்பூர் அனல்மின் நிலைய திட்டத்தை வேகப்படுத்தவும், பொருளாதார மற்றும் வர்த்தக கூட்டுறவை விரிவாக்கவும் வாக்குறுதி அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பூர் திட்டத்திற்கான ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்தானது, ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் வேலைகள் பேரினவாத இந்திய-விரோத எதிர்ப்பால் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, அது புது டெல்லியின் அதிருப்தியையும் தூண்டிவிட்டுள்ளது. கொழும்பிற்குத் திரும்பியதும், அந்த மின்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு இராஜபக்க்ஷ சட்டமா அதிபருக்கு  உத்தரவிட்டார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதம மந்திரி அழைப்பு விடுத்தார், அதை மோடி ஏற்று கொண்டார்.

எவ்வாறாயினும் இந்த இராஜாங்க சிநேகிதபூர்வங்களுக்குப் பின்னால், கூர்மையான பதட்டங்கள் நிலவுகின்றன. இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், “ஐக்கியப்பட்ட இலங்கைக்குள்  சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்கான தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை" உறுதிப்படுத்த "தேசிய நல்லிணக்க வழிமுறைகளை" மோடி அப்பட்டமாக வலியுறுத்தியதாக குறிப்பிட்டு, இந்திய வெளியுறவு விவகாரத்துறை செயலர் சுஜாதா சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின்படி, “13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும், அதற்கு அப்பால் செல்வதும் இந்த நிகழ்முறைக்கு பங்களிப்பு அளிக்கும்" என்று மோடி அறிவித்தார்.

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம், 1987இல் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனேவுக்கும், இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்திக்கும் இடையே கையெழுத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தந்தின் பாகமாகும். அது தமிழீழ விடுதலைப்புலிகளை நிராயுதபாணிக்குவதில் இந்தியாவின் உதவிக்கு பிரதியீடாக தமிழ் மேற்தட்டுக்களுக்கு ஒரு மாகாண அளவிலான மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சிக்கு உறுதி அளித்தது. அதற்கு பின்னர் வந்த கொழும்பு அரசாங்கங்கள் சிங்கள பேரினவாத சக்திகளிடம் இருந்து வந்த கடுமையான எதிர்ப்பால் அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மறுத்து வந்தன.

இலங்கையில் அதிகார-பகிர்வு உடன்படிக்கைக்கு மோடியின் அழுத்தம், சாமானிய தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதோடு எந்த சம்பந்தமும் கொண்டிருக்கவில்லை. கொழும்பு மீது மேலதிக செல்வாக்கைப் பெற இராஜபக்க்ஷ  அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்கவும், அத்தோடு தமிழ்நாட்டில் மாநில அரசாங்கங்களைச் சாந்தப்படுத்தவும் மோடி "தமிழ் மக்களின் உரிமைகள்" பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீதான அமெரிக்க அழுத்தத்தைச் சமாளிக்க இராஜபக்க்ஷவிற்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்படுகிறது என்பதை புது டெல்லி நன்கு அறியும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி மாதங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டதை ஆராயும் ஒரு விசாரணையைத் தொடங்க அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அழைப்பு விடுக்கும் ஒரு தீர்மானம், மார்ச்சில், ஐநா மனித உரிமைகள் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்த யுத்தத்தின் இறுதி கட்டத்தில் குறைந்தபட்சம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக, அதுவும் குறிப்பாக இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான குண்டுவீச்சு மற்றும் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஏற்கனவே ஐநா வல்லுனர் குழு மதிப்பீடு செய்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டுமே இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரித்தன. இருந்த போதினும், வாஷிங்டன் இப்போது சீனா உடனான கொழும்பு அரசாங்கத்தின் உறவுகளைத் துண்டிக்க அதற்கு அழுத்தம் அளிக்கும் வகையில் இந்த யுத்த குற்றங்களைப் பயன்படுத்தி வருகிறது. இது, அப்பிராந்தியம் முழுவதிலும் சீனாவின் செல்வாக்கிற்குக் குழிபறிக்கும் மற்றும் அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் நோக்கில் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாகும்.

இந்தியா UNHRC தீர்மானத்தில் வாக்களிக்காது தவிர்த்தது, ஏனென்றால் அது இராஜபக்க்ஷ அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக அல்ல, மாறாக எதிர்காலத்தில் அதே போன்றவொரு தலையீட்டை அது முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் என்ற கவலையால் ஆகும். எவ்வாறாயினும் அதன் ஆதரவிற்கான பிரதிபலனாக, இந்தியாவிற்கு ஒரு வெகுமதி தேவையாக உள்ளது. அதாவது அது பெய்ஜிங்கிடமிருந்து கொழும்பு விலகியிருக்க விரும்புகிறது. மோடியும் ஏனைய பிஜேபி தலைவர்களும் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் சீனா நோக்கி மிகவும் மென்மையாக இருந்ததாக குற்றஞ்சாட்டியதோடு, அவர்கள் மிகவும் ஆக்ரோஷமான கொள்கையைப் பின்பற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டுக் காட்டி இருந்தார்கள்.

1999-2004இல் முந்தைய பிஜேபி-தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இந்தியா அமெரிக்காவுடன் மிக நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்திருந்தது, அது காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மேலும் முன்னடி நோக்கி வைத்தது. முன்னெடுப்பின்" பாகமாக, ஒபாமா நிர்வாகம் மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியா உடனான மூலோபாய உறவுகளை முன்பை விட நெருக்கமாக அபிவிருத்தி செய்ய விருப்பமாக உள்ளது.

13வது திருத்தத்தை அமுலாக்க வேண்டுமென்ற மோடியின் வலியுறுத்தலை வெளியிட்ட இந்தியாவின் வெளியுறவு விவகாரத்துறை செயலர், சிங்கினது அறிக்கை இராஜபக்க்ஷ அரசாங்கத்தைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அமைச்சரவை மந்திரியும், தலைமை அரசு கொறடாவுமான நிமல் சிறிபலா டி செல்வா ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், எங்களுக்கு யாரும் கட்டளை இட முடியாது. எங்களின் சொந்த பிரச்சினைகளுக்கு எங்களின் சொந்த வழியில் தீர்வு காண வேண்டியது எங்களின் கடமையாகும், என்றார்.

டி சில்வாவின் கருத்துக்கள் மிக தெளிவாக, அரசாங்கத்திற்குள்ளே பதவிகளில் இருப்பவர்கள் உட்பட சிங்கள பேரினவாதிகளைச் சாந்தப்படுத்த நோக்கம் கொண்டதாகும். அதேவேளையில், அரசாங்கம் இந்தியாவுடன் ஒரு இராஜாங்க "மோதலைத்" தொடங்குவதாக இல்லை என்பதையும் அவர் உடனடியாக சேர்த்துக் கொண்டார்.

மனித உரிமைகள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பாக  வாஷிங்டனிடம் இருந்து கொழும்பு அதிகரித்து வரும் அழுத்தத்தை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மோடி அரசாங்கம் அதன் கோரிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்று இராஜபக்க்ஷவும், அவரது அரசாங்கமும் தெளிவாக கவலை கொண்டுள்ளனர்.