சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Thai junta puts off elections for at least 15 months

தாய் இராணுவம் குறைந்தபட்சம் 15 மாதங்களுக்கு தேர்தல்களைத் ஒத்தி வைக்கிறது

By Ben McGrath
3 June 2014

Use this version to printSend feedback

மே 22 ஆட்சிகவிழ்ப்பு சதியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தாய் இராணுவம், இங்கும் அங்குமாக தொடர்ச்சியின்றி நடக்கும் போராட்டங்களை நசுக்கியும், எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்களை கைது செய்தும், மற்றும் குறைந்தபட்சம் 15 மாதங்களுக்கு எந்தவொரு தேர்தலையும் நிராகரித்தும் அதன் ஆட்சியைப் பலப்படுத்தி வருகிறது.

கடந்த வெள்ளியன்று பொதுமக்களுக்கு வழங்கிய அவரது முதல் உரையில் ஆட்சி கவிழ்ப்பு தலைவர் தளபதி பிரயுத் சான்-ஓச்சா ஆட்சி கவிழ்ப்பை நியாயப்படுத்தியதோடு, பல மாதகால அரசியல் கிளர்ச்சிக்குப் பின்னர் சட்டத்தை மீண்டும் நிலைநிறுத்த இராணுவ நடவடிக்கைகள் அவசியப்பட்டதாக வாதிட்டார். யதார்த்தத்தில், பிரதம மந்திரி இன்ங்க் ஷின்வத்ராவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஹியு தாய் கட்சியின்-Pheu Thai- அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பல மாதங்களாக நடைபெற்று வந்த இரகசிய சதிகள் மற்றும் போராட்டங்களை இராணுவம் மறைமுகமாக ஆதரித்திருந்தது.

தேர்தல்களை நோக்கி நகர ஓராண்டு மற்றும் மூன்று மாதங்களின் கால வரம்புடன்" ஒரு மூன்று கட்ட நிகழ்முறையை பிரயுத் விவரித்தார். இந்த நிகழ்ச்சிநிரலின்படி, பிரயுத்தின் வார்த்தைகளில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியுடன் "ஒத்துழைக்க ஒரு வழியைக் காண" பிஹியு தாய் கட்சிக்கு அழுத்தம் அளிக்க இராணுவம் மூன்று மாதங்களைச் செலவிடும். அதற்கடுத்து ஓராண்டு, ஒரு தற்காலிக அரசியலமைப்பை வரையவும் மற்றும் ஒரு இடைக்கால பிரதம மந்திரியை மற்றும் மந்திரிசபையைத் தேர்ந்தெடுக்கவும் செலவிடப்படும். அந்த நிகழ்முறைகள் முடிந்த பின்னர், காலவரையறையற்ற எதிர்காலத்திற்கு தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யதார்த்தத்தில், பிஹியு தாய் கட்சி ஒரு தேர்தலில் ஜெயிக்காது என்பதை உறுதிப்படுத்தும் வரையில், இராணுவத்திற்கு அதிகாரத்தைக் கைவிட எந்த விருப்பமும் இல்லை. 2006இல் பிரதம மந்திரியாக இருந்த இன்ங்லக்கின் சகோதரர் தாக்சின் ஷின்வத்ராவை இராணுவம் பதவியிலிருந்து தூக்கி எறிந்து, ஆளும் மேற்தட்டில் இருந்த தாக்சின்-ஆதரவு கன்னையை ஓரங்கட்ட அரசியலமைப்பைத் திருத்தி எழுதியது. இருந்த போதினும் தாக்சின்-சார்பிலான கட்சி 2007 தேர்தலை வென்ற போது, அது உள்கட்சி கன்னை மோதல்களைப் புதுப்பிக்க, மற்றும் அரசியல் கிளர்ச்சிகள் மீளத்திரும்புவதற்கும் இட்டுச் சென்றது.

முடியாட்சி, இராணுவம் மற்றும் அரசு அதிகாரத்துவம் என பாரம்பரிய ஆளும் மேற்தட்டுக்கள் ஆரம்பத்தில் 2001இல் தொலைதொடர்பு பில்லினியரான தாக்சினைத் தேர்ந்தெடுக்க ஆதரவளித்தன. ஆனால் தாய்லாந்தை மேற்கொண்டு அன்னிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டதன் மூலமாக அவற்றின் பொருளாதார நலன்களை அவர் வெட்டிய போது அவை அவருக்கு எதிராக திரும்பின. அவர் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் எதைக் கொண்டு ஒரு தேர்தல் ஆதரவைக் கட்டியமைத்தாரோ, அந்த மலிவு மருத்துவ வசதி மற்றும் கடன்கள் உட்பட அவரது வெகுஜனவாத நடவடிக்கைகளுக்கு அவை ஆழ்ந்த விரோதம் காட்டின.

ஜனநாயகம் குறித்த ஒரு உண்மையான புரிதல் இல்லாமல் அங்கே போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தால்" மக்களாட்சிக்கு திரும்ப இயலாது என்று பிரயுத் கடந்த வெள்ளியன்று அறிவித்தார். 250க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் மற்றும் ஏனைய முக்கிய எதிர்ப்பாளர்களை இராணுவ முகாம்களில் ஆஜராகுமாறு இராணுவக்குழு தேசிய அமைதி மற்றும் ஒழுங்கு நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. இராணுவம் அரசாங்கத்தை மட்டும் கலைக்கவில்லை, மாறாக மாகாண ஆளுநர்களையும் பதவிவிலக்கி உள்ளது.

ஊடகங்கள் பலமாக தணிக்கை செய்யப்படுகின்றன. அமெரிக்காவை மையமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தாய்லாந்து வலைப்பக்கம் மற்றும், கடந்த புதன்கிழமை சிறிது நேரத்திற்கு, பேஸ்புக் உட்பட ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு காட்டக்கூடியதாக கருதப்படும் சுமார் 200 வலைத்தளங்களை அணுக முடியாதபடிக்கு இராணுவக்குழு முடக்கி வைத்துள்ளது.

ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டக்காரர்களை ஒடுக்க, ஞாயிறன்று இராணுவம் அதிரடி படைபிரிவுகள் உட்பட 6,000 கனரக ஆயுதமேந்திய துருப்புகளை பாங்காங் முழுவதிலும் நிலைநிறுத்தியது. போராட்டக்காரர்களின் ஒரு குழு, "ஜனநாயகம்" மற்றும் "இராணுவமே, வெளியேறு" என்று எழுதிய பதாகைகளோடு வந்ததும், இராணுவ அதிகாரிகள் டெர்மினல் 21 வணிக வளாகத்தை மூட உத்தரவிட்டனர். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அந்த மையத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டனர். போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள்.

அதே நாளில், ராய்டர்ஸ் செய்தியின்படி, போராட்டக்காரர்களின் ஒரு குழு பாங்காங் கலை மற்றும் கலாச்சார மையத்திற்குச் செல்லும் நடைபாதையில் ஒன்று கூடினர். கலகம் ஒடுக்கும் நூற்றுக்கணக்கான துருப்புகள் அங்கே வந்ததோடு, திடீரென அந்த நடைபாதையை முற்றுகையிட்டு தாக்கியதால், அங்கே இருந்த பல போராட்டக்காரர்களும், பார்த்து கொண்டிருந்தவர்களும் தப்பி ஓடினார்கள், என்று குறிப்பிட்டது.

கைது செய்யப்பட்டவர்கள், வழமையான விசாரணையில்லாமலும், பிரதிவாதிக்கான சட்ட உதவியின்றியும் அல்லது மேல்முறையீட்டு உரிமையோ இல்லாமல் இராணுவ நீதிமன்றங்களால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அங்கே பரந்தளவிலான போராட்டங்கள் எதுவும் இல்லை. பிஹியு தாய் கட்சியும், அதனோடு இணைந்த சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான ஐக்கிய முன்னணி (UDD) அல்லது "சிவப்புச் சட்டை" இயக்கமும் அவற்றின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்தி இராணுவ முறையீடுகளுக்கு அடிபணிந்துள்ளனர். தாக்சின்-ஆதரவு பிரிவின் சரணடைவானது, போராட்டங்கள் தொழிலாளர் வர்க்க மற்றும் கிராமப்புற மக்களின் ஒரு எழுச்சிக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற தாய் ஆளும் வர்க்கம் முழுவதிலும் நிலவும் அச்சத்தை பிரதிபலிக்கிறது.

சிவப்பு சட்டை இயக்கத்தின் ஒரு ஒருங்கிணைப்பாளர் அம்னோய் பூண்டே கடந்த வாரம் கூறுகையில், சிவப்பு சட்டையினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ... இராணுவம் என்ன செய்கிறது, ஏனைய மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள நமது தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், என்றார். ஆட்சி கவிழ்ப்புக்கு முன்னர், UDD தலைவர்கள் திட்டமிட்டு போராட்டங்களை மட்டுப்படுத்தினார்கள், குறிப்பாக பாங்காக்கில், அதேவேளையில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை "எதிர்ப்பதாக" வெற்று வாக்குறுதிகளை அளித்தார்கள்.

ஞாயிறன்று மாலை, விமானப்படை தலைமை தளபதி பிரஜின் ஜுன்டாங் (Prajin Juntong) அந்நாட்டின் பொருளாதார அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளோடு ஒரு சந்திப்பை நடத்தியதோடு, பல பொருளாதார பரிந்துரைகளையும் விவரித்திருந்தார். இன்ங்லக் அரசாங்கத்தின் விவசாயிகளுக்கான அரிசி மானிய திட்டத்தை விலை உத்தரவாதத்திற்கான அதன் சொந்த வடிவத்திற்கு மாற்றவும், மற்றும் குறைந்த-தவணை வீட்டு கடன்களை வழங்கவும் இராணுவம் திட்டமிடுகிறது.

இந்த பரிந்துரைகள் பெரு வணிகங்களால் கோரப்படும் சிக்கன திட்டங்களை மூடிமறைப்பதற்காகும். பெரு வணிகங்களோ பிஹியு தாய் கட்சியின் உணவு மானியங்கள் மற்றும் அதிகளவிலான குறைந்தபட்ச ஊதியங்களை ஊதாரித்தனமானதாக கருதியதோடு அவற்றை எதிர்த்து வந்தன. ஆட்சி கவிழ்ப்பு சம்பவங்களினால் தாய் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. 2014இன் முதல் காலாண்டில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.1 சதவீதம் சரிந்தது. 2015இல் அதனால் 6.3 சதவீத வளர்ச்சியை எட்ட முடியுமென இராணுவம் வாதிடுகிறது.

சனியன்று, இராணுவம் தாய்லாந்து அரசு நிறுவனங்களின் தலைவர்களிடம் அவர்களின் தொழில்களை மீளாய்வு செய்து இரண்டு நாட்களுக்குள் ஓர் அறிக்கை வழங்குமாறு கோரியது. அந்த நிறுவன தலைவர்களில் பலர் வெளியேற்றப்பட்ட அரசாங்கத்தோடு இணைந்தவர்கள் ஆவர். அதேநேரத்தில் அவர்களை இராஜினாமா செய்யுமாறும் அது அறிவுறுத்தியது. அரசு நிறுவனங்களில் செய்யப்படும் எந்தவொரு மறுசீரமைப்பும் பரந்த வேலை இழப்புகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

ஆட்சிக் கவிழ்ப்பு மீது மிதமான விமர்சனங்களை வைத்ததோடு, உடனடியாக தேர்தல்களை நடத்த அழைப்பு விடுத்த அதேவேளையில், ஒபாமா நிர்வாகம்  உண்மையில்   இராணுவத்தின் கைப்பற்றலை ஆதரித்துள்ளது. அமெரிக்கா தாய் இராணுவத்துடன் நீண்டகால தொடர்புகளைக் கொண்டுள்ளது, சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்க நோக்கம் கொண்ட ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக அதை பலப்படுத்தி வருகிறது.

ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தையில் சனியன்று பேசுகையில், அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல் கைதிகளை விடுவிக்கவும், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் மூலம், உடனடியாக அதிகாரத்தை மீண்டும் தாய்லாந்து மக்களிடம் சேர்ப்பிக்குமாறும்" அழைப்புவிடுத்தார். அமெரிக்க சட்டம் அவசியப்படுத்துவதால் அவற்றை பூர்த்தி செய்ய, வாஷிங்டன் கண்துடைப்புகாக தடைகளைச் சுமத்தி உள்ளது, அது இராணுவ உதவியிலிருந்து சிறியளவில் 3.5 மில்லியன் டாலர் வெட்டி உள்ளதோடு, கூட்டு இராணுவ ஒத்திகையைப் இடையில் நிறுத்தி உள்ளது.

இப்போதைய அமெரிக்க பதிலளிப்பு 2006 ஆட்சி சதிக்கு அது காட்டிய பிரதிபலிப்பிற்கு சமாந்தரமாக உள்ளது. பெயரளவிற்கு உறவுகளைக் குறைத்து கொண்ட அதேவேளையில், அமெரிக்க இராணுவம் ஆசியாவின் மிகப் பெரிய யுத்த ஒத்திகையான 2007 கோப்ரா கோல்ட் இராணுவ ஒத்திகையைத் தொடர்ந்து நடத்தியது.

அமெரிக்க முன்னெடுப்பின் ஒரு முக்கிய ஆதரவாளரான ஆஸ்திரேலிய அரசாங்கமும் அதே நிலைப்பாட்டை பின்தொடர்கிறது. சிங்கப்பூரில் இருந்து கடந்த வாரம் வெளியிடப்பட்ட வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷ்ஷாப் மற்றும் பாதுகாப்பு மந்திரி டேவிட் ஜோன்ஸ்டோனின் ஒரு கூட்டு அறிக்கை, தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அழைப்பு விடுத்தது. பயங்கரவாத-எதிர்ப்பு கூட்டு ஒத்துகையைத் திட்டமிடுவதற்கான சுற்றுபயணங்களை இரத்து செய்தமை மற்றும் "தாய் இராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சட்ட பயிற்சி வகுப்பை" முடிவுக்குக் கொண்டு வந்தமை ஆகியவை அதன் தடைகளில் உள்ளடங்கும்.